Sunday, February 3, 2013

அரசியல் கொலைகள்: அல்லக்கைகளுக்கு ஒரு விண்ணப்பம்

எம்.ஜி.ஆர் வழில வேலை செய்ற விவசாயிகளைப் பார்த்தா, காரை நிப்பாட்டிடுவாராம். அவங்ககிட்ட இறங்கிப்போய் 'எப்படி இருக்கீங்க? தொழில் எப்படிப் போகுது? சம்பளம் என்ன?'ன்னு எல்லாம் கேட்டுட்டு, போகும்போது கை நிறைய பணத்தை அள்ளி திணிச்சுட்டுப் போவாராம். அவர்கிட்ட நேரடியா பணம் வாங்கினவங்களே சொல்லிக் கேட்டிருக்கேன்.


இந்த அரசியல் அல்லக்கைகளும் அவங்களோட 'அண்ணன்'களும், அதே மாதிரி எங்கயாவது விவசாயிகளைப் பார்த்த உடனே காரை விட்டு இறங்குவாங்க. கொடுக்கிறதுக்கு இல்லை, இருக்கிற நிலத்தையும் புடுங்கிறதுக்கு! எம்.ஜி.ஆர் கை கொடுத்துக் கொடுத்தே சிவந்துச்சுன்னா, இவங்க கை எடுத்து எடுத்தே சிவந்துச்சு, அந்த மக்களோட ரத்ததால! அதனால தான் அரசியல் கொலைன்னு செய்தி வரவும், யாருமே பரிதாபப்பட மாட்டேங்கிறாங்க.

இப்போ மறுபடியும் ஒரு அரசியல் கொலை நடந்திருக்கும் செய்தியினைக் கேட்டதும், செத்தவரின் குடும்பத்தை விடவும் யார் அதிகம் கவலைப்பட்டிருப்பார்கள் என்றால், அது நம்ம தமிழக காவல் துறை தான். ஏனென்றால்...

ஏன்னா ஒரு அரசியல் கொலை நடந்துச்சுதது. ஸ்காட்லாண்டுக்கு இணையான நமது காவல்துறையும் விசாரணையில் இறங்குச்சு. முதல்ல தொழில்போட்டியாளர்னு ஒருத்தரைப் பிடிச்சாங்க.  அவர் ‘என்னைவிட அவன் தான் அதிகம் பாதிக்கப்பட்டான்’ன்னு இன்னொரு ஆளை கைகாட்டினார். அவரோ ‘அது அந்த தெக்கத்தி ஆளு வேலையா இருக்கும்’ன்னு இன்னொருத்தரை கைகாட்டிவிட்டார். அவரு என்னடான்னா’ இலங்கைல உள்ள ஒரு குரூப் தொழில் போட்டீல பண்ணதாச் சொன்னார். அவங்களை நெருங்கினா, ‘இது இந்தோனேஷியா தொழில் மேட்டர்..அங்க போய் விசாரிங்க’ன்னு கைகாட்ட, நம்ம காவல்துறைக்கு தலைசுத்திடுச்சு.


அடுத்து போலீஸ்கார்க்கு ஒரு டவுட்டு..ஒருவேளை இது பொம்பளை மேட்டரா இருக்குமோன்னு. அதனால அந்த ஆளோட சின்ன வீடுகிட்ட விசாரிச்சாங்க. அது ‘எனக்குத் தெரியாது..ஒருவேளை சின்னசின்னவீடு சம்பந்தப்பட்டிருக்கலாம்னு சொல்லுச்சு. அதுகிட்டப் போய்க்கேட்டா, சின்னசின்னசின்னவீடுகிட்ட கேளுங்கன்னு சொல்லுச்சு.அப்புறம் சின்னசின்னசின்னவீடு, சின்னசின்னசின்னசின்னவீடு, சின்னசின்னசின்னசின்னசின்னவீடு-கிட்ட விசாரிச்சும், ஒரு பிரயோஜனமுமில்லை.

இப்போச் சொல்லுங்க, இப்படி ஏற்கனவே நொந்துநூடுல்ஸாகி இருக்கறவங்களுக்கு, மறுபடியும் ஒரு அரசியல்கொலைங்கவும் எப்படி இருக்கும்? பாவம் இல்லியா அவங்க. ஏதோ நாலஞ்சு பேருக்கு கெடுதல் பண்ணாங்கன்னா, விசாரிச்சு கொலையாளியைப் பிடிச்சுடலாம். ஆனா ஆயிரக்கணக்கான குடும்பத்தைக் கெடுக்கறவங்களைக் கொன்னவவங்களைப் பிடிக்கிறது லேசுப்பட்ட காரியமா? அந்த கேசுக்கே 2000 பேர்வரைக்கும் விசாரிச்சதா, தகவல் வந்துச்சு. மறுபடியும் இன்னொன்னுன்னா என்ன ஆகறது? அதனால அரசியல்வாதிகளுக்கு அல்லக்கைகளாத் திரியற, அரசியல் ரவுடிகளுக்கு சில வேண்டுகோள்களை வைக்கவே இந்தப் பதிவு.

அல்லக்கைகளே, இந்த கொலைகளுக்கெல்லாம் முக்கியக் காரணம் என்ன தெரியுமா? ‘இது நம்ம ஆட்சி இல்லை. இது அம்மா ஆட்சி. அதனால சட்டம் ஒழுங்கு சீரும்சிறப்பா இருக்கும்’ங்கிற உங்க தப்பான நம்பிக்கை தான் முக்கியக்காரணம்.

சமீபத்துல அம்மையார் பேட்டியை டிவில பார்த்திருப்பீங்க. ‘அந்த அமைப்புல ஏழரை லட்சம்பேரு இருக்காங்க. எங்கிட்டயோ 9226 போலீஸ் தான் எக்ஸ்ட்ராவா இருக்காங்க. வெறும் 9226 போலீஸை வச்சுக்கிட்டு, பேஃஸ்புக்ல, ட்வீட்டர்ல, ப்ளாக்ல எழுதுறவனை வேணா அரெஸ்ட் பண்ணி, படம் காட்டலாம். அந்த ஏழரை லட்சம்பேரு கலவரம் பண்ணா, என்னால எப்படி தடுக்க முடியும்?..”-ன்னு கேட்டு ஓன்னு ஒப்பாரி வச்சதை நீங்க பாத்தீங்க தானே?

இந்திய அரசியல் வரலாற்றிலேயே எந்த சி.எம்மும் இப்படி தான் ஒரு கையாலாகாத ஆளுன்னு ஒத்துக்கிட்டதில்லை. அப்படி ஒத்துக்க, நம்ம தைரியலட்சுமியால மட்டும் தான் முடியும். அதுவும் ஒரு பெருமை தானே?

அதனால தான் சொல்றேன் ,அல்லக்கைகளே முழிச்சிக்கோங்க. அம்மா ஆட்சிதானேன்னு நம்பி, ’காலையில வாக்கிங் போறது, பக்கத்து பெட்டிக்கடைக்கு பகல்ல போறது, சின்னவீட்டோட வீட்டுக்கு நைட்ல போறது’ போன்ற துடுக்குத்தனமா காரியங்களை முதல்ல நிறுத்துங்க.

 உங்களுக்கென்ன, ஒரு உசுரு..ஆனா நாங்க குறைஞ்சது ஆயிரம் போலீசாரை விசாரணைக்கு இறக்க வேண்டியிருக்கு. 9000-ல ஆயிரம் போனா 8000..இதே மாதிரி இன்னும் 8பேரு மண்டையைப் போட்டீங்கன்னா, அம்மையார் பக்கத்து ஸ்டேட்ல இருந்துதான் போலீசை கடன் வாங்க வேண்டியிருக்கும். அதனால உங்களுக்கு வைக்கிற முத கோரிக்கை, பழைய அம்மா ஆட்சி மாதிரி நினைச்சுக்கிட்டு, யாரும் கேசுவலா வெளில சுத்தாதீங்க. இது முத வேண்டுகோள்.

அடுத்து, நீங்கள்லாம் சாதாரண ஆளுங்க இல்லை..அரசியல் அல்லக்கைக..அதனால கணக்கு வழக்கு இல்லாம, கைமா பண்ணிக்கிட்டுத் திரியற ஆளுங்க. அதுல என்ன பிரச்சினைன்னா, திடீர்னு யாராவது உங்களை போட்டுட்டாங்கன்னா, முதல்ல நீங்க யார் குடும்பத்தையெல்லாம் கெடுத்தீங்கன்னு பெரிய லிஸ்ட் எடுக்கவேண்டியிருக்கு. அதுக்கே அஞ்சு வருசம் போதாதுல்ல? அதனால நீங்க ஒரு சகாயம் பண்ணனும் சாரே.

டெய்லி நைட் தூங்கறதுக்கு முன்னாடி சம்சாரத்துகிட்ட அன்னிக்கு காலைலே இருந்து எத்தனைபேரைக் கொன்னீங்க, எத்தனைபேரு கை-காலை எடுத்தீங்க, எத்தனை பேரு நிலத்தை அடிச்சுப்புடுங்கினீங்கன்னு ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருங்க. அப்போத்தான், நீங்க திடீர்னு மண்டையைப் போட்டாலும் சீக்கிரமா கொலையாளிகளைப் பிடிக்க முடியும். சம்சாரத்தை நம்ப முடியாதுன்னா, சின்னவீடுகிட்ட சொல்லுங்க.

அதுவும் வேணாம்னா, இன்னொரு ஐடியா இருக்கு. ஏதாவது அரசு வங்கில ஒரு பேங்க் லாக்கர் ஓப்பன் பண்ணுங்க. அதுல ஒரேஒரு டைரியை வாங்குங்க. வாராவாரம் பேங்க் பாஸ்புக்ல எண்ட்ரி போடற மாதிரி, உங்க டைரில பாவக்கணக்கை தப்பில்லாம எழுதி வைங்க. லாக்கர் ஓப்பன் பண்ணும்போதே, பேங்க் மேனேஜர்கிட்ட ‘என்னிக்காவது என்னை யாராவது போட்டுட்டாங்கன்னா (இதை கொலை என்று பொருள் கொள்க!), போலீஸ்கிட்ட என் லாக்கரை ஓப்பன் பண்ணிக்காட்டணும்'ன்னு கண்கலங்க சத்தியம் வாங்கிக்கோங்க.

எச்சரிக்கை: என்னிக்காவது நைட் அடிச்ச மப்பு கலையாம வாக்கிங் போயி, பாதை தெரியாம தொலைஞ்சு போயிட்டீங்கன்னா, அந்த பேங்க் மேனேஜர் அவசரப்பட்டு லாக்கரை ஓப்பன் பண்ணிடலாம். அதனால தெளிவா 'கண்டம்துண்டமா வெட்டப்பட்ட என் பொணத்தை கண்ணால பார்த்த அப்புறம் தான், போலீஸ்க்கு போகணும்னு தெளிவாச் சொல்லிடுங்க'.

இருக்கும்போது தான் இம்சை பண்றீங்கன்னா, செத்தும் தொல்லை கொடுக்காதீங்க. இது எங்களோட பணிவான வேண்டுகோள்.

கடைசிச் செய்தி: மம்மியோட பேட்டியைப் பார்த்துட்டு, கண் கலங்கி அந்த கூலிப்படையே சரணடைஞ்சிட்டதா நியூஸ் வந்திருக்கு. வெரிகுட். இதே மாதிரி ஏற்கனவே கொலை செஞ்ச கூலிப்படைங்களும், அடுத்து கொலை செய்யப்போற கூலிப்படைகளும் சரணடைவாங்கன்னு எதிர்பார்ப்போம். அந்த 9226 பேரையாவது நிம்மதியா இருக்க விடுங்கலெ!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

  1. கலக்கல் ...... இந்த மாதிரி இன்னும் நிறைய நடக்கும் ...இன்னும் 3 வருஷம் இருக்குல்ல...

    ReplyDelete
  2. சரியாச் சொன்னீங்க! அருமையான நக்கல்! நன்றி!

    ReplyDelete
  3. ’காலையில வாக்கிங் போறது, பக்கத்து பெட்டிக்கடைக்கு பகல்ல போறது, சின்னவீட்டோட வீட்டுக்கு நைட்ல போறது’ போன்ற துடுக்குத்தனமா காரியங்களை முதல்ல நிறுத்துங்க.///

    மெயின் மேட்டர்ல கை வச்சா எப்படி செங்கோவி??

    ReplyDelete
  4. அந்த 7.5 லச்சம் பேர் இந்தியா பூரா உறுப்பினர்களாம். அம்மா சொன்னதை சரியாய் கேளுங்க ..அதாவது இந்தியா மொத்தத்துக்கும் சேர்த்து,?????

    ReplyDelete
  5. வணக்கம்,செங்கோவி!////என்ன பண்ண?இன்னும் ஒரு மூணு வருஷம் தாங்கித் தான் ஆவணும்!இல்லேன்னா,மறுபடியும் 'கை' ஆட்சிக்கு வந்து...........................(உளறுறனோ?) ச்சீ,விடுங்க ஏதாச்சும் நடக்கிற காரியமா பாப்போம்!

    ReplyDelete
  6. கரெக்ட்டு கரெக்ட்டு.. மெரட்டுங்க மெரட்டுங்க..

    ReplyDelete
  7. சரியாச் சொன்னீங்க! அருமையான நக்கல்! நன்றி!

    ReplyDelete
  8. அரசியல் ஒரு தொழில்... ரவுடிகள், தொண்டர்கள், செயலாளர்கள், தலைவர்கள் எல்லாம் அதில் பணி புரியும் வேறு வெறு டீம்கள்...., மக்கள் அவர்கள் முதலீடு...!

    ReplyDelete
  9. செங்கோவி அண்ணா!

    சமகால அரசியலை - நக்கல் கலந்த தொனியில் சொன்ன விதம் அருமை! விறுவிறுப்பாகவும் இருக்கு படிக்க!

    ReplyDelete
  10. @மாத்தியோசி மணி மணி வேற என்ன செய்ய..புண் பட்ட மனசை நக்கல் விட்டு ஆத்திக்க வேண்டியது தான்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.