’அஜித்தின் ஐம்பதாவது படம். சமீபத்தில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று’ என்றெல்லாம் இருந்தாலும் பெயருக்கு ஏற்றாற்போல் கிளைவுட் நைன், ஞானவேல்ராஜ், சன், சித்தி என பலரும் இந்தப் படத்தை வைத்து மங்காத்தா ஆடி, ஒரு வழியாக தமிழகத்தில் இன்று ரிலீஸ் ஆகும் படம். (குவைத்தில் சித்தி ரிலீஸ் செய்யவில்லை!!). வழக்கம்போல் விமர்சனம் படத்தை முந்திக்கொண்டு பாய்கிறது இங்கு...
அஜித் நாற்பது வயது நிரம்பிய சஸ்பெண்ட் ஆகியிருக்கும் போலீஸ் அதிகாரி. அர்ஜூன் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலை வளைத்துப் பிடிக்க நிறுத்த நியமிக்கப்படும் ஸ்பெஷல் ப்ராஞ்ச் போலீஸ் ஆஃபீசர். கிரிக்கெட் சூதாட்டத்தின் மையமாக மும்பையும் அதன் முக்கியப் புள்ளியாக ஜெயப்ரகாஷும் இருக்கிறார்கள். ஜெயப்ரகாஷின் மகளான த்ரிஷாவும் அஜித்தும் லவ்வர்ஸ். ஐபிஎல் போட்டி நடைபெறும் நேரத்தில் 500 கோடி ரூபாய் பணம் மொத்தமாக மும்பை வந்து பிரியப்போவதை அர்ஜீன் தெரிந்து கொண்டு, மும்பையில் தன் டீமுடன் களமிறங்கிறார்.
ஜெயப்ரகாஷிடம் வேலை செய்யும் அடிப்பொடி வைபவ் தன் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அந்தப் பணத்தை பிரிக்க திட்டமிடுகின்றனர். சஸ்பெண்ட் ஆன போலீஸ் அதிகாரி அஜித்தும் த்ரிஷா மூலம் ஜெயப்ரகாசை நெருங்கி, அந்தப் பணத்தை நோட்டம் இடுகிறார். பணம் வந்து சேரும் நாளில் போலீஸ் கெடுபிடி அதிகம் ஆக, ஜெயப்ரகாஷ் குரூப் அதிகம் உஷாராகிறது. திருட ப்ளான் போட்ட 4 பேரும் அஜித்தும் ஒன்றாக கைகோர்த்து பணத்தை லவட்டுகிறார்கள். ஒரு பக்கம் அர்ஜூன் விரட்ட, மறுபக்கம் ஜெயப்ரகாஷ் விரட்ட, அது போதாதென்று திருடிய 5 பேரும் மாற்றி மாற்றி அடித்துக்கொள்கின்றனர். இறுதியில் அந்தப் பணம் யாருக்குச் சேர்ந்தது...திட்டம் போட்ட அஜித்திற்கா, வில்லன் குரூப்பிற்கா, போலீஸிற்கா..அல்லது அம்போவா என்பதை வெள்ளித்திரையில் காண்க.
கதையே இல்லாமல் படம் எடுக்கிறார்கள் என்று பலரும் சொன்னதாலோ என்னவோ வெங்கட் பிரபு இவ்வளவு சிக்கலான கதையை எடுத்துக்கொண்டு களம் இறங்கி இருக்கின்றார். அஜித் - ஜெயப்ரகாஷ்-த்ரிஷா-அர்ஜுன் - 4 பேர் - என எல்லோருமே கதையின் முக்கிய பாத்திரங்களாக இருப்பதால் எல்லோரின் கேரக்டரையும் தெளிவாக சொல்ல வேண்டிய கட்டாயம். அப்படி எல்லோரையும் சொல்லி முடிக்கவே 45 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இன்னும் எத்தனை புது கேரக்டர் வரபோகுதோ என்று பயப்படும் அளவிற்கு ஒவ்வொரு சீனிலும் ஒரு கேரக்டர் வந்துகொண்டே இருக்கிறது. அது செட்டில் ஆனவுடன் ஆரம்பிக்கிறது மங்காத்தா ஆட்டம். அதன் பிறகு செம விறுவிறுப்பு தான்..திரைக்கதைக்கு அதிகம் மெனக்கட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.
நெகடிவ் கேரக்டரில் அஜித்.....தலயின் ஐம்பதாவது படம். பொதுவாக இந்த மாதிரி முக்கியமான படத்தை எல்லோரும் சோலோ ஹீரோவாகவே செய்ய விரும்புவார்கள். அப்படி இல்லாமல் இந்தக் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டதே தைரியமான முடிவு தான். நாற்பது வயது ஆள், அதுவும் போலீஸ் என்று சொல்லிவிட்டதால் தொப்பையும் நரைத்த முடியும் நச்சென்று பொருந்திப்போகிறது. வயதிற்கேற்ற மெச்சூரிட்டியுடன் ப்ளான் செய்வதும் பணத்தின் மேல் உள்ள ஆசையால் எதற்கும் துணிவதுமாக அஜித் கலக்கி எடுக்கிறார். தொப்பை என்று கிண்டல் பண்ணுவோருக்கு பதிலடியாக ‘ஆமாய்யா பார்த்துக்கோ’ எனும்படி ஒரு பாடலில் சட்டை இல்லாமலே........செம தில் தான்! இந்தப் படத்தில் ஆடவும் செய்திருக்கிறார், நாற்பது வயதிற்கே உரிய கூச்சங்களுடன். அஜித் ரசிகர்களுக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் தல திரும்பக் கிடைத்திருக்கிறார்.
கமலா காமேஷ் (அதாங்க த்ரிஷான்னும் சொல்வாங்களே..) அஜித்திற்கு பொருத்தமான ஜோடியாக எனக்குத் தோன்றவில்லை. ஆனாலும் நல்ல ட்ரெஷிங் சென்ஸ் இருப்பதால் பார்க்கமுடிகிறது..இதற்கு மேல் சொன்னால் த்ரிஷா ரசிகர்கள் கோபித்துக்கொள்வார்கள் என்பதால்......
’வேஸ்ட் பண்ணிட்டாங்க மக்கா’ன்னு புலம்பும்படியாக வைபவ்-க்கு ஜோடி ஆக்கிட்டாங்க. தலக்கு ஒரு சீன்ல அஞ்சலி ஒரு கும்பிடு போடுகிறது. அம்புட்டுதேன். அஞ்சலிக்கும் ஒரு தனி டூயட்..அதிலேயே நாம் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டதால் மனது சற்று ஆறுதல் அடைகிறது.
அர்ஜூன் இப்போதும் தான் ஒரு ஆக்சன் கிங் என்று நிரூபிக்கிறார். சண்டைக்காட்சிகளில் அதே வேகம். அஜித்திற்கு இணையாக கதையில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர். இருவரும் மோதும் காட்சி அமர்க்களம். வைபவ் உள்ளிட்ட நான்கு பேரில் வழக்கம்போல் பிரேம், நம் கவனத்தை ஈர்க்கிறார். படத்தில் காமெடிக்கு இவர் மட்டுமே என்பதால் அடர்த்தியான திரைக்கதையில் பெரிய ரிலீஃபாக இவர் இருக்கிறார்.
படத்தில் குறையென்று பார்த்தால்........ அதிக கேரக்டர்களும், ஆரம்பத்தில் அதை ஞாபகம் வைக்க ரசிகர்கள் அவஸ்தைப்படுவதும் முக்கியக் குறை. அடுத்து காமெடி என்ற பெயரில் அந்த நான்கு பேர் குறிப்பாக பிரேம் அஜித்துடன் அடிக்கும் லூட்டி+டயலாக்குகள் நிறைய நேரம் மொக்கையாகவே உள்ளது. இவ்வளவு தூரம் கதைக்கு மெனக்கெட்டவர்கள் லாஜிக்கும் கொஞ்சம் பார்த்திருக்கலாம்.
போலீஸ்காரர் என்று தெரிந்தும் ஜெயப்ரகாஷ் அஜித்தை சந்தேகபடாதது, மும்பையில் எல்லா கேரக்டரும் தமிழ் பேசுவது, தேவையில்லாமல் வரும் மியூட் செய்யப்பட்ட ஆங்கில.தமிழ் கெட்ட வார்த்தகள், எதிர்பார்த்த கிளைமாக்ஸ், அஜித்தின் பணவெறிக்கு காரணாமாக எதுவும் சொல்லப்படாதது(நிஜத்துக்கு அது சரி தான்..சினிமாவில் நம் மக்களுக்கு காரணம்/நியாயம் தேவை) இந்த மாதிரிக் கதைக்கு இரண்டு வகையான கிளைமாக்ஸ் தான் வைக்க முடியும்..அந்த இரண்டுமே இந்தப் படத்தில் வருகிறது.
யுவன்சங்கர் ராஜா படத்தின் பெரிய பலம். பாடல்களில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார், அஜித்தே ஆடும் அளவிற்கு! சிக்கலான திரைக்கதைக்கு பிரவீண் & ஸ்ரீகாந்த் எடிட்டிங் கைகொடுக்கிறது. பிரேம் சம்பந்தப்பட்ட சில மொக்கை சீன்களை இன்னும் கொஞ்சம் ’கட்’டி இருக்கலாம். சக்தி சரவணனின் ஒளிப்பதிவு வர்ணஜாலம் காட்டுகிறது. ஓப்பனிங் மங்காத்தா சாங்கில் லட்சுமிராயில் ஆரம்பித்து முழு படத்தையே கலர்ஃபுல் திருவிழாவாக ஆக்குகிறது அவர் ஒளிப்பதிவு.
படம் நல்ல படமா, இல்லையா என்றால்..........ஏகன்/அசலை விட பலமடங்கு பெட்டர். நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு திருவிழா தான். மற்றவர்களும் ரசிக்க முடியும். வெங்கட் பிரபு வைத்திருக்கும் அந்த கிக்கிலிபிக்கிலி குரூப்பைக் கொஞ்சம் அடக்கி, இன்னும் படத்தை ஷார்ப் ஆக்கியிருக்க முடியும். இருப்பினும் சமீபத்தில் வந்த கமர்சியல் படங்களை ஒப்பிடும்போது இது பெட்டர் தான். அஜித்திற்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் ஓகே ரகத்தில் ஒரு படம்.
மங்காத்தா - ஆட்டம் மோசம் இல்லை!
தொடர்ந்து சென்னை - 28 க்ரூப்புடன் வெங்கட் படம் எடுத்தால் அலுப்பு தட்டி விடும். அர்ஜூன் நடிப்பு நன்றாக இருந்ததென நண்பர்களிடம் இருந்து முதல் ரிப்போர்ட் வந்துள்ளது எனக்கு.
ReplyDelete@! சிவகுமார் ! ஆமாம் சிவா..வெங்கட் அந்த குரூப்பை கழட்டி விடவேண்டியது அவசியம்!
ReplyDeleteAnnea ni8 arivipu veliyanathu la irunthu waiting. Vimarsanam super padam parthura veadiyathu than cella comment podurathunala tamil la aelutha mudiyalai tamil ahrvalargal manikavum, :+gopi
ReplyDelete@gopituty பாருங்க கோபிக்குட்டி...முதல்ல தூங்குங்க.
ReplyDeleteஅப்போ படம் ஹிட்டா மாப்ள...ரைட்டு சென்னைக்கு போகும்போது பாத்துடறேன் இன்னும் ஒருவாரத்துல...ஹிஹி!
ReplyDelete(thonguga) Velangirum nan ofz la irukean.
ReplyDelete@விக்கியுலகம் ஆமா, மாப்ள..என்னய்யா இந்த நேரத்துல..
ReplyDelete// gopituty said...
ReplyDelete(thonguga) Velangirum nan ofz la irukean.//
ஓ..ஃபாரின் பதிவரா...அதுசரி,ஆஃபீசும் நல்ல இடம்தானே தூங்க!
Foreign than india, chennai. Ofz la unga pathivugala padichu than poluthai pokitu irukean. Leelai la madhan uchakattathu poi jamilava nadu roadla vittu tanea. Ipadiyum oru manithanah!n poluthai pokitu irukean. Leelai la madhan uchakattathu poi jamilava nadu roadla vittu tanea. Ipadiyum oru manithanah!
ReplyDelete" செங்கோவி said...
ReplyDelete@விக்கியுலகம் ஆமா, மாப்ள..என்னய்யா இந்த நேரத்துல.."
>>>>>>>>>>>
யோவ் எனக்கு காலை6 மணி ஹிஹி!
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
ReplyDeleteமாப்பிள உன்ர மன்மத லீலைக்கு வந்திட்டு ஓடீட்டன் ஏன்னா முழு பதிவுகளும் வாசித்தால்தான் அதை புரிந்து கொள்ளலாம் நான் முன்னய பதிவுகளை வாசிக்க வில்லை வாசிக்காத எந்த பதிவுக்கும் ஓட்டு போடுவதில்லை.. மங்காத்தா படத்தை பற்றி எழுதியிருக்கிறீங்க நல்லாய் இருக்கிறது உங்கட விமர்சனம்.. நானும் இப்ப அஜித்தின் படத்தை விரும்பத்தொடங்கியுள்ளேன் நல்ல படம் தருபவர் என்பதற்காக இல்லை..!!?? இரசிகர் மன்றங்களை கலைத்தவர் என்பதற்காக... எவ்வளவு இளைஞர்களின் வாழ்க்கையை திசை திருப்பியுள்ளார்.. இவருக்கு பத்து யூரோ கொடுத்து படம் மொக்கையா இருந்தாலும் பார்க்களாம்..
ReplyDeleteகாட்டான் குழ போட்டான்..
@gopituty முதல்ல நன்றி.....அப்புறம், சென்னையா..அப்போ நல்லாவே தூங்கலாமே..ஒருவேளைகூட லேடீஸ் வேலை பார்க்காங்களோ..எனக்கும் அப்படித்தான் பாஸ்..பக்கத்துல லேடீஸ் இருந்தா தூக்கம் வராது..
ReplyDelete//விக்கியுலகம் said...
ReplyDeleteயோவ் எனக்கு காலை6 மணி ஹிஹி!//
என்ன அநியாயம்..சமச்சீர்க்கல்வி மாதிரி அடுத்து சமச்சீர்நேரம் கொண்டுவரணும்னு என் சைண்டிஸ்ட் மூளை கேட்குது!
//KANA VARO said... [Reply]
ReplyDeleteஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா//
நல்லது பாஸ்..நல்லது.
காட்டான் said... [Reply]
ReplyDelete// மாப்பிள உன்ர மன்மத லீலைக்கு வந்திட்டு ஓடீட்டன் ஏன்னா முழு பதிவுகளும் வாசித்தால்தான் அதை புரிந்து கொள்ளலாம் நான் முன்னய பதிவுகளை வாசிக்க வில்லை வாசிக்காத எந்த பதிவுக்கும் ஓட்டு போடுவதில்லை..//
மாம்ஸ்..இப்படி இருந்தா என்னைக்கு முன்னேற..நான் சொன்னா கேட்க மாட்டேங்கிறீங்களே..உங்களை ‘அங்க’ நாங்க பார்க்கவேண்டாமா?
//நானும் இப்ப அஜித்தின் படத்தை விரும்பத்தொடங்கியுள்ளேன் நல்ல படம் தருபவர் என்பதற்காக இல்லை..!!?? இரசிகர் மன்றங்களை கலைத்தவர் என்பதற்காக...//
அவரும் முதல்ல ஏகன்/அசல்னு நடிச்சு இண்டைரக்டா கலைக்க பார்த்தாரு..அப்புறமும் பயபுள்ளைக கலையலை..அதான் கடுப்பாகி ஓப்பனா சொல்லிட்டாரு..நல்ல மனுசன் தான்.
விமர்சனம் நல்லாயிருக்கு செங்கோவி...படம் ஓகேன்னு சொல்றீங்க...ஒளிஞ்சுக்குங்க...:)
ReplyDeleteஅப்பிடீன்னா தல தலதூக்கிடுவாருங்கிறீங்க... சொந்த ரசிகர்களையே (இத ரத்தத்தின் ரத்தமேன்னு சொல்றாங்க) தலைதெறிக்க ஓடவிடுற படங்களுக்கு நடுவுல ஒரு ஓகே ரகம்னாலும் அது சூப்பர் ஹிட் ஆகிடும். ஒண்ணு தப்பிச்சிரிச்சு, அடுத்த ரெண்டோட நெலம என்னவோ? ஆமா நம்ம பதிவுலக நாட்டாமைகள் எங்க, இது எந்த பாத்ததோட காப்பின்னு அவங்க இன்னும் தீர்ப்பு சொல்லலையா? ஓசியன் சீரிஸ் காப்பி இல்லன்னு புரியுது.. (நீங்க கன்னுமுளிச்சி அந்த படத்த பாத்திட்டு போட்ட பதிவ பாத்துட்டமில்ல).
ReplyDeleteஇப்பதான்னே இது (நிறை குறைகளைச் சொல்லி மெருகேற்றுங்கள்...நன்றி!) கண்ணுல பட்டிச்சி, உங்க பதிவுல கமலா காமேஷ் படம் குறையுது, உடனே ஏற்பாடு செய்யுங்க (எம்புட்டு பெரிய கொறய கண்டுபிடிச்சி மேருகேற்றியிருக்கோம் )
ReplyDeleteமங்காத்தா ஜெயிக்க வாழ்த்துக்கள் .......
ReplyDeleteஅண்ணன் சிபிக்கு போட்டியா...? அதிகாலை விமர்சனம் ..படம் பார்க்கும் ஆவலை thoondukirathu
ReplyDeleteதொப்பையும் நரைத்த முடியும் நச்சென்று பொருந்திப்போகிறது//
ReplyDeleteதல நரச்சாலும் தல தல தான்!
//பாடல்களில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார், அஜித்தே ஆடும் அளவிற்கு!//
ReplyDeleteஇதில் இருக்கும் உள்குத்தை அஜித் ரசிகர்கள் கவனிக்கவும். :)
படத்திற்கு அநேகமாக இதுதான் பதிவுலகின் முதல் விமர்சனமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
உங்க விமர்சனத்தை மாதிரி படமும் இருந்தா நல்லதுதான் ...
ReplyDeleteமொத்தத்தில் அஜித் மேக்கப்போடாமல் தன் ஒரிஜினல் கெட்டப்பில் நடித்துள்ளார் என்று சொல்லுங்க.உண்மையில் தலக்கு அதுக்காக ஒரு சலூட்.
ReplyDelete(ஏன் என்றால் தல அழகானவராக இருந்தாலும் இப்ப தொப்பை+நரைத்த முடி+நரைத்த தாடி தானே அவருக்கு)
இரண்டு ஹீரோ கதையில் அதுவும் 50 படத்தில் நடக்ததற்கு அஜித்துக்கு ஒரு சலூட்,எனக்கு அஜிதை இந்த விட்யங்களில் பிடிக்கும்.அஜித் இன்னும் ஒரு ஹீரோவுடன் சேர்ந்து நடிப்பது இது முதன் முறை இல்லைதானே.ஏற்கனவே.கார்த்திக்,சத்யராஜ்,சீயான் விக்ரம்,பிரசாத்,ஏன் நம்ம இளயதளபதி விஜய்,எல்லோறுடனும் சேர்ந்து நடித்து இருக்கின்றார் இப்ப அர்ஜுனுடன்,இதற்காக தலைக்கு மீண்டும் ஒரு சலூட்.
அஞ்சலி பற்றி நாலுவரி நான்
நானும் நினைச்சு இருந்தேன் அஞ்சலி ஏதோ ஒரு 20,22,23, வயசுப்பொண்ணு என்று,அப்பறம் தான் தெரிஞ்சது அம்மணிக்கு 29 வயசுனு.நா அப்படியே ஷாக் ஆகிட்டேன்......ம்.ம்.ம்.ம். என்ன பண்ண.
thala mangatha rocks
ReplyDeleteசெங்கோவி....!
ReplyDeleteநடுத்தர வயதுக்காரனாக அஜித் கலக்கியிருக்கிறார் என்று சொல்கிறீர்கள். நானும் பார்க்க வேண்டும். வெங்கட் பிரபுவுக்காகவும், அதிரடிய காட்டியிருந்தால் அஜித்துக்காகவும்.
அட......! அஜித்துக்கு மற்றுமொரு வெற்றிப்படமா?
அஜித்தே ஆடும் அளவிற்கு!//;-))
ReplyDeleteஅப்போ ஹிட் தானா?
ReplyDeletetamil manam 11
ReplyDeleteவழக்கம் போல தங்கள் கைத்திறனை காண்பித்து உள்ளீர்கள் ,அருமை நட்பே
ReplyDelete//அஜித்திற்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் ஓகே ரகத்தில் ஒரு படம்//
ReplyDeleteஅஜீத்தின் மிகப் பெரிய ஹிட் படங்கள் எல்லாமே ஓக்கே ரகம் தான்(இரண்டாம் முறை பார்க்கத் தூண்டுவதில்லை) என்பதால் படம் ஹிட் என்றே (உங்கள் விமர்சனத்திலிருந்து!) தோன்றுகிறது! பாத்துடுவோம்!
கமலா காமேஷ் (அதாங்க த்ரிஷான்னும் சொல்வாங்களே..)
ReplyDeleteதிரிசா ரசிகர்கள் உங்களை தேடறாங்களாம் ! எதுக்கு ?
அதிலேயே நாம் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டதால்
ReplyDeleteஎன்ன கிடைத்தது
ஹி ஹி அறியாப்பிள்ளை நானும் தெரிஞ்சுக்கலாம்னு தான் ஹி ஹி
அஜித்திற்கு ஒரு வெற்றி நிச்சயம்!
ReplyDeleteஅஜித்திற்கு ஒரு வெற்றி நிச்சயம்!
ReplyDeleteயாரையும் தாக்காமல் கேலி செய்யாமல் நடு நிலையான விமர்சனம்
ReplyDeleteஇப்படியான விமர்சனம் ஏன் மற்றவர்கள் எழுதுவதில்லை
கவுண்டமணி செந்திலுக்கு அடிக்கிறமாதிரி படத்தில் நடித்தவர்களை குதிகாட்டி கேலி செய்து எழுதுகிறார்கள்
படம் ஹிட்டுதான்..தன் சரக்கில்லாத தம்பியை பிரபலமாக்க சரக்குள்ள அண்ணன் முயற்சிக்கிறார்..இது மொக்கையாக முடிகிறது பிரேம்ஜி;வெங்கட்
ReplyDeleteவெங்கட் பிரபு உங்க விமர்சனம் படிச்சிருப்பார்..முதல் விமர்சனம் நீங்கதானோ
ReplyDeleteபார்த்திடுவோம்
ReplyDeleteஅண்ணே நீங்க ஒரு பாரீன் பதிவர்னு நிரூபிச்சிட்டீங்கன்னே, படம் பாக்கலாம்னு சொல்றீங்க, அப்போ ஹிட்டாயிடுச்சா, இல்லை சண்டிவில அப்படித்தான் சொல்றாங்க :-))))))
ReplyDeleteThala...
ReplyDeleteThalathan...
Callakkattum MANKATHA...
Good Review.
அப்போ.. இன்னைக்கே பாத்துட வேண்டியதுதான்..:)
ReplyDeleteஅவரு (அஜீத்)ரிடையர்ட் போலீசு,இவரு(அர்சுன்) போலீசோ போலீசு!படம் நல்லா வந்திருக்கு போல தெரியுது!எல்லாப் பசங்களும் அடக்கி வாசிக்கிறாங்க?முருகன் தான் "அவர"காப்பாத்தணும்!
ReplyDeleteஎப்புடிச் சொன்னாலும் புரியாதா?உங்க தளத்துக்கு வருவதை விட "அந்த" டியூப் தேவல போலிருக்கே?
ReplyDeleteபாஸ், விமர்சனம் படிக்க அப்புறமா வாரேன்,
ReplyDeleteத்ரிஷா அஜித்திற்கு பொருத்தமான ஜோடியாக எனக்குத் தோன்றவில்லை./////ஆமாமா,"அவருக்கு" பொருந்துறாப்புல இவருக்கு பொருந்தாது தான்!(எல்லாமே சப்ப தானே?)
ReplyDeleteநிரூபன்said...
ReplyDeleteபாஸ், விமர்சனம் படிக்க அப்புறமா வாரேன்.////விமர்சனம் படிக்கவே வேண்டியதில்லை,நிரூபன்!நேரா படத்த போய் பாருங்க!
ஜீ...said...
ReplyDeleteஅப்போ ஹிட் தானா?////என்ன ஹிட் தானான்னு?ஹிட் தானேன்னு மெதுவா கேக்கணும்!ஹிட் தான்!
Good!!!!!!!!!!!50!
ReplyDeleteHA...HA..HA.. LINES
ReplyDelete//கமலா காமேஷ் (அதாங்க த்ரிஷான்னும் சொல்வாங்களே..) அஜித்திற்கு பொருத்தமான ஜோடியாக எனக்குத் தோன்றவில்லை.//
//யுவன்சங்கர் ராஜா படத்தின் பெரிய பலம். பாடல்களில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார், அஜித்தே ஆடும் அளவிற்கு!//
//படம் நல்ல படமா, இல்லையா என்றால்..........ஏகன்/அசலை விட பலமடங்கு பெட்டர். //
அப்ப தல தன் ஐம்பதாவது படத்துல ஜெய்ச்சிட்டாருன்னு சொல்லுங்க.
ReplyDeleteஆஹா!! சுடச்சுட விமர்சனம்.
ReplyDeleteஅந்த கமலா காமேஷை விட்டுறுங்க பாவம்!!!
தல நீ ஜெயிச்சிட்ட...!!! படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.... மறுபடியும் கியூ வில் நிற்கிறார்கள்.... மன்றங்களை களைத்தாலும் ரசிகர்கள் உன்னுடன்தான்....
ReplyDeleteநன்றாக உள்ளது என விமர்சனம் எழுதிய உங்களுக்கு நன்றி....
விமர்சனம் அருமை.
ReplyDeleteரம்ஜான் வாழ்த்துகள்.. நண்பா..
ஆஹா .... அப்போ படம் சூப்பர்.
ReplyDeleteஅண்ணனின் மங்காத்தா முதல் விமர்சனமே சூப்பர்,
தேங்க்ஸ் பாஸ்
எங்க படம் மொக்கையா போயி
ReplyDeleteப்ளாக் ஓனர்ஸ் எல்லாம் கும்ம போறாங்களோ
என்று நினைச்சன். ஹா ஹா
தல சூப்பர்....
யோவ்... அந்த பயம் இருக்கணும்..
ReplyDeleteநம்ம திரிஷா மாமிய விமர்சித்த... தெரியும் இல்ல.......... lol
தலக்கு வாழ்த்துகள்!
ReplyDelete// Real Santhanam Fanz said...
ReplyDeleteஆமா நம்ம பதிவுலக நாட்டாமைகள் எங்க, இது எந்த பாத்ததோட காப்பின்னு அவங்க இன்னும் தீர்ப்பு சொல்லலையா? //
நானும் அதுக்காகத்தான் வெயிட்டிங்..ஆனா இதே ராபரி கான்செப்டல நிறையப் படம் வந்திருக்கு ஹாலிவுட்ல..அதுல எதைச் சொல்லன்னு யோசிச்சுக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கேன்..
//ஓசியன் சீரிஸ் காப்பி இல்லன்னு புரியுது.. (நீங்க கன்னுமுளிச்சி அந்த படத்த பாத்திட்டு போட்ட பதிவ பாத்துட்டமில்ல).//
பதிவை மட்டும் தான் படிச்சீங்களா..ஓஹோ, அதுல சீன் இல்லேங்கவும் பார்க்கலியா..ஓகே..ஓகே.
// Real Santhanam Fanz said...
இப்பதான்னே இது (நிறை குறைகளைச் சொல்லி மெருகேற்றுங்கள்...நன்றி!) கண்ணுல பட்டிச்சி, உங்க பதிவுல கமலா காமேஷ் படம் குறையுது, உடனே ஏற்பாடு செய்யுங்க (எம்புட்டு பெரிய கொறய கண்டுபிடிச்சி மேருகேற்றியிருக்கோம் )//
தம்பிகளா..நானே வேற வழியில்லாம அது ஸ்டில்லை இங்க போட்டிருக்கேன்..நீங்க வேற..
// stalin said...
ReplyDeleteமங்காத்தா ஜெயிக்க வாழ்த்துக்கள் .......//
ஜெயிச்ச மாதிரி தான்..
// கோவை நேரம் said...
ReplyDeleteஅண்ணன் சிபிக்கு போட்டியா...? அதிகாலை விமர்சனம் ..படம் பார்க்கும் ஆவலை thoondukirathu//
அவர் பெரிய ஆளுங்க..என்னைப் போய் அவர்கூட..............
// கோகுல் said...
ReplyDeleteதொப்பையும் நரைத்த முடியும் நச்சென்று பொருந்திப்போகிறது//
தல நரச்சாலும் தல தல தான்! //
கோகுல், எப்படிய்யா இப்படி?
// சேலம் தேவா said...
ReplyDelete//இதில் இருக்கும் உள்குத்தை அஜித் ரசிகர்கள் கவனிக்கவும். :) // அஜி குத்துப்பாட்டுக்கு ஆடுனார்னு சொன்னேன்..அது ஒரு உள்குத்தா!
// படத்திற்கு அநேகமாக இதுதான் பதிவுலகின் முதல் விமர்சனமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.//
இல்லை பாஸ்..அஸ்வின் முந்திக்கிட்டாரு..இங்கே:
http://ashwin-win.blogspot.com/2011/08/blog-post_31.html
// koodal bala said...
ReplyDeleteஉங்க விமர்சனத்தை மாதிரி படமும் இருந்தா நல்லதுதான் ...//
இன்னும் ஏகன் எஃபக்ட்லயே இருக்கீங்களோ?
// K.s.s.Rajh said...
ReplyDeleteஅஞ்சலி பற்றி நாலுவரி நான்
நானும் நினைச்சு இருந்தேன் அஞ்சலி ஏதோ ஒரு 20,22,23, வயசுப்பொண்ணு என்று,அப்பறம் தான் தெரிஞ்சது அம்மணிக்கு 29 வயசுனு.நா அப்படியே ஷாக் ஆகிட்டேன்......ம்.ம்.ம்.ம். என்ன பண்ண.//
யோவ், கமலா காமேசுக்குத் தான்யா 30 ஆச்சு..அஞ்சலியைப் பத்தி தவறான வதந்தியை கிளப்புறதை கண்டிக்கிறேன்..
// தமிழ்வாசி - Prakash said...
ReplyDeletethala mangatha rocks //
பார்த்துய்யா..கொண்டாடுறேன்னு பாறையில முட்டிக்காதீங்க.
// மருதமூரான். said...
ReplyDeleteஅட......! அஜித்துக்கு மற்றுமொரு வெற்றிப்படமா? //
யாருமே நம்ப மாட்டேங்கிறாங்களே..
// ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteஅஜித்தே ஆடும் அளவிற்கு!//;-)) //
ஆமா, நீங்க வேற எடுத்துக்குடுங்க.
// ஜீ... said...
ReplyDeleteஅப்போ ஹிட் தானா? //
சன் வேற கூட இருக்கு..விட்ருவாங்களா?
// M.R said...
ReplyDeleteவழக்கம் போல தங்கள் கைத்திறனை காண்பித்து உள்ளீர்கள் ,அருமை நட்பே//
இது என்னய்யா கமெண்ட்டு.......
// ஜீ... said...
ReplyDeleteஅஜீத்தின் மிகப் பெரிய ஹிட் படங்கள் எல்லாமே ஓக்கே ரகம் தான்(இரண்டாம் முறை பார்க்கத் தூண்டுவதில்லை) என்பதால் படம் ஹிட் என்றே (உங்கள் விமர்சனத்திலிருந்து!) தோன்றுகிறது! பாத்துடுவோம்! //
இதே மாதிரி யோசிச்சுப் போனா சேதாரம் இல்லை.
// ஜீ... said...
ReplyDeleteஅஜீத்தின் மிகப் பெரிய ஹிட் படங்கள் எல்லாமே ஓக்கே ரகம் தான்(இரண்டாம் முறை பார்க்கத் தூண்டுவதில்லை) என்பதால் படம் ஹிட் என்றே (உங்கள் விமர்சனத்திலிருந்து!) தோன்றுகிறது! பாத்துடுவோம்! //
இதே மாதிரி யோசிச்சுப் போனா சேதாரம் இல்லை.
// M.R said...
ReplyDeleteகமலா காமேஷ் (அதாங்க த்ரிஷான்னும் சொல்வாங்களே..)
திரிசா ரசிகர்கள் உங்களை தேடறாங்களாம் ! எதுக்கு ? //
அது வேறயா...அவ்வ்!
//என்ன கிடைத்தது......ஹி ஹி அறியாப்பிள்ளை நானும் தெரிஞ்சுக்கலாம்னு தான் ஹி ஹி//
ம்..பாப்கார்னும் மிராண்டாவும்!
// Nesan said...
ReplyDeleteஅஜித்திற்கு ஒரு வெற்றி நிச்சயம்! //
அஜித்திற்கு ஒரு வெற்றி நிச்சயம்! //
நீங்க ரெண்டு தடவை சொல்லலைன்னாலும், ஆமா தான்!
// கவி அழகன் said...
ReplyDeleteயாரையும் தாக்காமல் கேலி செய்யாமல் நடு நிலையான விமர்சனம் //
நாம படத்துக்கு மட்டும் தான் ரசிகர் - ஒரு காரணம்..அப்புறம் கேலிக்குன்னே தனியா ‘யோசிக்கோம்ல’! - அது இன்னொரு காரணம்.
// ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteவெங்கட் பிரபு உங்க விமர்சனம் படிச்சிருப்பார்..//
அவர் இன்னேரம் சந்தோசத்துல பார்ட்டில மூழ்கியிருப்பார் பாஸ்.
செங்கோவி said...ஜெயிச்ச மாதிரி தான்..////ஜெயிக்கிறது ஒங்களுக்கு இஷ்டம் இல்லப் போல?
ReplyDelete// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteபார்த்திடுவோம் //
..வோமா?..கூட யாருய்யா?
// இரவு வானம் said...
ReplyDeleteஅண்ணே நீங்க ஒரு பாரீன் பதிவர்னு நிரூபிச்சிட்டீங்கன்னே..//
அடப்பாவிகளா..இதை எழுதலேன்னா ஃபாரின்னு ஒத்துக்க மாட்டீங்களா?
// சே.குமார் said...
ReplyDeleteThala...Thalathan...//
ரெண்டு வாரம் முன்னாடி இதே கமெண்ட்டை உங்களுக்கு நான் போட்டேன்..அதை அப்படியே திரும்ப இங்க போடுறீங்களே..மொய்க்கு மொய்ங்கிறது இது தானா குமார்?
// சாமக்கோடங்கி said...
ReplyDeleteஅப்போ.. இன்னைக்கே பாத்துட வேண்டியதுதான்..:) //
ரொம்ப துடிக்காதீங்க பாஸ்.....ஓவர் பில்டப் உடம்புக்கு நல்லதில்லை-ன்னு தலயே படத்துல சொல்றார்..கேஷுவலா போங்க..நல்லாயிருக்கும்.
Yoga.s.FR said...
ReplyDelete//அவரு (அஜீத்)ரிடையர்ட் போலீசு,இவரு(அர்சுன்) போலீசோ போலீசு!படம் நல்லா வந்திருக்கு போல தெரியுது!எல்லாப் பசங்களும் அடக்கி வாசிக்கிறாங்க?முருகன் தான் "அவர"காப்பாத்தணும்!//
ஐயா, அஜித் ரிடயர்டு போலீஸ் இல்லே..சஸ்பெண்ட் ஆனவர்..உங்களை மாதிரியே எல்லாரையும் நினைக்கலாமா?
//எப்புடிச் சொன்னாலும் புரியாதா?உங்க தளத்துக்கு வருவதை விட "அந்த" டியூப் தேவல போலிருக்கே?//
டியூப் பிரச்சினை உங்களை ரொம்ப பாதிச்சிருச்சு போல..
//பாரத்... பாரதி... said...
ReplyDeleteHA...HA..HA.. LINES //
நன்றி பாஸ்.
// N.H.பிரசாத் said...
ReplyDeleteஅப்ப தல தன் ஐம்பதாவது படத்துல ஜெய்ச்சிட்டாருன்னு சொல்லுங்க.//
ஐம்பதாவது படத்துலயாவது..........
// DRபாலா said...
ReplyDeleteஅந்த கமலா காமேஷை விட்டுறுங்க பாவம்!!!//
அது தான் டாக்டர் என்னை விட மாட்டேங்குது...
// vivek kayamozhi said...
ReplyDeleteதல நீ ஜெயிச்சிட்ட...!!! படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.... மறுபடியும் கியூ வில் நிற்கிறார்கள்.... மன்றங்களை களைத்தாலும் ரசிகர்கள் உன்னுடன்தான்....//
லைவ் டெலிகாஸ்ட்டுக்கு நன்றி நண்பரே.
// vivek kayamozhi said...
ReplyDeleteதல நீ ஜெயிச்சிட்ட...!!! படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.... மறுபடியும் கியூ வில் நிற்கிறார்கள்.... மன்றங்களை களைத்தாலும் ரசிகர்கள் உன்னுடன்தான்....//
லைவ் டெலிகாஸ்ட்டுக்கு நன்றி நண்பரே.
//ராஜா MVS said...
ReplyDeleteவிமர்சனம் அருமை.
ரம்ஜான் வாழ்த்துகள்.. நண்பா..//
நன்றி..வாழ்த்துகள்.
//துஷ்யந்தன் said...
ReplyDeleteஎங்க படம் மொக்கையா போயி ப்ளாக் ஓனர்ஸ் எல்லாம் கும்ம போறாங்களோ என்று நினைச்சன்.//
படத்துல கும்முறதுக்கு நிறைய விஷயம் இருக்கு..வேணுமா?
//Yoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி said...ஜெயிச்ச மாதிரி தான்..////ஜெயிக்கிறது ஒங்களுக்கு இஷ்டம் இல்லப் போல?//
நான் எப்ப பாஸ் அப்படிச் சொன்னேன்..தல மாதிரி நல்ல மனுசங்க ஜெயிக்கணும்னு தானே சொல்றேன்..
// சென்னை பித்தன் said...
ReplyDeleteதலக்கு வாழ்த்துகள்!//
சொல்லிடறேன் சார்.
நாம படத்துக்கு மட்டும் தான் ரசிகர் - ஒரு காரணம்..அப்புறம் கேலிக்குன்னே தனியா ‘யோசிக்கோம்ல’! - அது இன்னொரு காரணம்.////கேலிக்கு வேற "தனியா" யோசிப்பளாங்கலாமில்ல?
ReplyDeleteதமிழ் மணம் 23
ReplyDeleteசெங்கோவி said...டியூப் பிரச்சினை உங்களை ரொம்ப பாதிச்சிருச்சு போல..///ஆமாமா!அப்பப்ப "புட்டுக்கிடுதுல்ல?"
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDelete//Yoga.s.FR said...
செங்கோவி said...ஜெயிச்ச மாதிரி தான்..////ஜெயிக்கிறது ஒங்களுக்கு இஷ்டம் இல்லப் போல?//
நான் எப்ப பாஸ் அப்படிச் சொன்னேன்..தல மாதிரி நல்ல மனுசங்க ஜெயிக்கணும்னு தானே சொல்றேன்..///அது..........!!!!
மங்காத்தா பற்றி அலசல் அருமை நண்பரே
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDelete// சென்னை பித்தன் said...
தலக்கு வாழ்த்துகள்!//
சொல்லிடறேன் சார்.§§§§இத்தப் பார்ரா!
@செங்கோவி
ReplyDelete// K.s.s.Rajh said...
அஞ்சலி பற்றி நாலுவரி நான்
நானும் நினைச்சு இருந்தேன் அஞ்சலி ஏதோ ஒரு 20,22,23, வயசுப்பொண்ணு என்று,அப்பறம் தான் தெரிஞ்சது அம்மணிக்கு 29 வயசுனு.நா அப்படியே ஷாக் ஆகிட்டேன்......ம்.ம்.ம்.ம். என்ன பண்ண.//
யோவ், கமலா காமேசுக்குத் தான்யா 30 ஆச்சு..அஞ்சலியைப் பத்தி தவறான வதந்தியை கிளப்புறதை கண்டிக்கிறேன்.
கோபப்படாதீங்க பாஸ்.விக்கிபீடியாவுல இந்த லிங்கில் போய் பாருங்க-http://en.wikipedia.org/wiki/Anjali_(actress)
இப்படிதான் போட்டு இருக்காங்க..எனக்கு மட்டும் என்ன அஞ்சலிக்கு வயசு கூடிவது ஆசையா என்ன?போய் பாத்து உண்மையா அம்மணி வயசை சொல்லுங்க பாஸ்..சின்னப்பையன் என் மனசு வலிக்குது...அஞ்சலிக்கு வயசு கூட என்று பார்த்தும்.
அப்புறம்,அந்த "மணி" ய ஒரு "வழி" பண்ணிட்டேன்!
ReplyDeleteநிரூபன் இன்னிக்கு காலையிலயும் ஒரு பதிவு போட்டிருக்காரு!
ReplyDeleteமீண்டும் வணக்கம் பாஸ்,
ReplyDeleteநான் தூங்கப் போன நேரத்தில் உங்களின் விமர்சனம் வந்திருக்கிறது..
அவ்வளவு ஸ்பீட்டாகப் போட்டிருக்கிறீங்க.
இருங்க படிச்சிட்டு வாரேன்.
’அஜித்தின் ஐம்பதாவது படம். சமீபத்தில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று’ என்றெல்லாம் இருந்தாலும் பெயருக்கு ஏற்றாற்போல் கிளைவுட் நைன், ஞானவேல்ராஜ், சன், சித்தி என பலரும் இந்தப் படத்தை வைத்து மங்காத்தா ஆடி, ஒரு வழியாக தமிழகத்தில் இன்று ரிலீஸ் ஆகும் படம். (குவைத்தில் சித்தி ரிலீஸ் செய்யவில்லை!!). வழக்கம்போல் விமர்சனம் படத்தை முந்திக்கொண்டு பாய்கிறது இங்கு...//
ReplyDeleteஅவ்.......எப்பூடி மாப்பு....வெளிநாட்டில் இருந்து கொண்டே உற்றுப் பார்ப்பீங்களோ?
கமலா காமேஷ் (அதாங்க த்ரிஷான்னும் சொல்வாங்களே..) அஜித்திற்கு பொருத்தமான ஜோடியாக எனக்குத் தோன்றவில்லை. ஆனாலும் நல்ல ட்ரெஷிங் சென்ஸ் இருப்பதால் அதையாவது பார்க்கமுடிகிறது..இதற்கு மேல் சொன்னால் த்ரிஷா ரசிகர்கள் கோபித்துக்கொள்வார்கள் என்பதால்......அஞ்சலிக்குட்டியைக் கவனிப்போம்.//
ReplyDeleteஅவ்...இது யாருக்கு பிரகாஷ் அவர்களுக்கா...
அவ்....................
வேஸ்ட் பண்ணிட்டாங்க மக்கா’ன்னு புலம்பும்படியாக வைபவ்-க்கு ஜோடி ஆக்கிட்டாங்க. தலக்கு ஒரு சீன்ல அஞ்சலி ஒரு கும்பிடு போடுகிறது. அம்புட்டுதேன். அஞ்சலிக்கும் ஒரு தனி டூயட்..அதிலேயே நாம் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டதால் மனது சற்று ஆறுதல் அடைகிறது.//
ReplyDeleteஅப்போ கண்டிப்பா தமிழ்வாசி சென்னையால் வந்ததும் அவருக்கு நல்ல விருந்து கிடைக்கும் என்று சொல்லுறீங்க.
லட்சுமிராஜ் ஸ்டில்...செம கலக்கல்.....
ReplyDeleteவழக்கம் போல விமர்சனம் முந்திக் கொண்டு, காத்திரமான அலசலுடன் வந்திருக்கிறது.
ReplyDeleteபடத்தின் பாடல் இசை பற்றியும்,
பின்னணிக் காட்சிகள்,
ஹாஸ்டியூம், பாடல் வரிகள்,
பின்னணி இசை பற்றியும் கொஞ்சம் சிரத்தை எடுத்து எழுதியிருக்கலாம்.
ஆனாலும் அதிரடி டைம்மிங் விமர்சனம் சூப்பர் பாஸ்.
//நிரூபன் said...
ReplyDeleteவேஸ்ட் பண்ணிட்டாங்க மக்கா’ன்னு புலம்பும்படியாக வைபவ்-க்கு ஜோடி ஆக்கிட்டாங்க. தலக்கு ஒரு சீன்ல அஞ்சலி ஒரு கும்பிடு போடுகிறது. அம்புட்டுதேன். அஞ்சலிக்கும் ஒரு தனி டூயட்..அதிலேயே நாம் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டதால் மனது சற்று ஆறுதல் அடைகிறது.//
அப்போ கண்டிப்பா தமிழ்வாசி சென்னையால் வந்ததும் அவருக்கு நல்ல விருந்து கிடைக்கும் என்று சொல்லுறீங்க.//
ஆமா, தமிழ்வாசி சொன்னது பொய்யின்னு ஆகிப்போச்சு...ஆனா ஆப்போசிட் சைடுல!
//
ReplyDeleteநிரூபன் said...
லட்சுமிராஜ் ஸ்டில்...செம கலக்கல்.....//
அது லட்சுமி ராய்...ஏன் ஸ்டில்லைப் பார்த்ததும் நாக்கு குழறுது?
//
ReplyDeleteநிரூபன் said...
வழக்கம் போல விமர்சனம் முந்திக் கொண்டு, காத்திரமான அலசலுடன் வந்திருக்கிறது.
படத்தின் பாடல் இசை பற்றியும்,
பின்னணிக் காட்சிகள்,
ஹாஸ்டியூம், பாடல் வரிகள்,
பின்னணி இசை பற்றியும் கொஞ்சம் சிரத்தை எடுத்து எழுதியிருக்கலாம்.
ஆனாலும் அதிரடி டைம்மிங் விமர்சனம் சூப்பர் பாஸ்.//
போய்யா..இதுக்கே 3 மணி ஆச்சு..மனுசன் தூங்க வேண்டாமா?..எல்லாத்தையும் நானே எழுதிட்டா, மத்தவங்க பாவம்ல?
கலக்கல் விமர்சனம்
ReplyDelete@சி.பி.செந்தில்குமார் இன்னும் நீங்க போடலியா பாஸ்?
ReplyDeleteமிகவும் ரசனையான விமர்சனம்.குறை நிறைகளை அழகாய் கூறியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇது வேற ஏதோ இங்கிலீஸ் படத்தோட காப்பின்னு முன்ன ஒரு பதிவு போட்டியே, அதை அப்படியே கமுக்கமா அமுக்கிட்டியே, ஏன் செங்கோவி!! [படம் நல்லாயிருக்கோ இல்லியோ, கடைசியா போட்டிருக்கியே ஒரு படம், ..ம்ம்ம்.... நான் செத்தேன்......]
ReplyDeleteபடம் துபைல ரிலீஸ் ஆகலே, ஆனா விமர்சனம் போட்டாச்சு! உண்மையைச் சொல்லு செங்கோவி, படத்தை எப்படி பார்த்தே?
ReplyDelete@malgudi வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மால்குடி!
ReplyDelete@Jayadev Das
ReplyDelete//இது வேற ஏதோ இங்கிலீஸ் படத்தோட காப்பின்னு முன்ன ஒரு பதிவு போட்டியே, அதை அப்படியே கமுக்கமா அமுக்கிட்டியே, ஏன் செங்கோவி!! //
அந்தப் பதிவுலயே நிச்சயம் மங்காத்தா அதோட காப்பி இல்லேன்னு தீர்ப்பு சொல்லிட்டனே..
@Jayadev Das
ReplyDelete//படம் துபைல ரிலீஸ் ஆகலே, ஆனா விமர்சனம் போட்டாச்சு! உண்மையைச் சொல்லு செங்கோவி, படத்தை எப்படி பார்த்தே?//
சும்மா மிரட்டுவோம்..இவன் ஏதாவது உளறுதானான்னு தானே பார்க்கீங்க..அதையாவது கரெக்டா மிரட்டத் தெரியுதா? குவைத்ல இருக்கிறவன்கிட்டப் போய் துபாய்ல ரிலீசாகலைங்கிறீங்க..என்ன செய்ய..
இதைப் பிடிங்க:
http://webserver2.kncc.com/advshowtimes.php?sltTheatres=30
செங்கோவி அப்புறம் ஏன், குவைத்ல ரிலீசுக்கு முன்னரே விமர்சனம்னு போட்டு கன்பியூஸ் பண்ணியிருக்கே?
ReplyDelete// Jayadev Das said...
ReplyDeleteசெங்கோவி அப்புறம் ஏன், குவைத்ல ரிலீசுக்கு முன்னரே விமர்சனம்னு போட்டு கன்பியூஸ் பண்ணியிருக்கே?//
ஓஹோ..அப்படி கன்ஃபியூஸ் ஆகிட்டீங்களா..அதாவது
//ஒரு வழியாக தமிழகத்தில் இன்று ரிலீஸ் ஆகும் படம். // - குவைத்தில் நேற்றே ரிலீஸ்னு அர்த்தம்.
/(குவைத்தில் சித்தி ரிலீஸ் செய்யவில்லை!!). //
பேராண்டிகளே ரிலிஸ் பண்ணிட்டாங்கன்னு அர்த்தம்..
@செங்கோவி
ReplyDelete/ K.s.s.Rajh said...
அஞ்சலி பற்றி நாலுவரி நான்
நானும் நினைச்சு இருந்தேன் அஞ்சலி ஏதோ ஒரு 20,22,23, வயசுப்பொண்ணு என்று,அப்பறம் தான் தெரிஞ்சது அம்மணிக்கு 29 வயசுனு.நா அப்படியே ஷாக் ஆகிட்டேன்......ம்.ம்.ம்.ம். என்ன பண்ண.//
யோவ், கமலா காமேசுக்குத் தான்யா 30 ஆச்சு..அஞ்சலியைப் பத்தி தவறான வதந்தியை கிளப்புறதை கண்டிக்கிறேன்.
கோபப்படாதீங்க பாஸ்.விக்கிபீடியாவுல இந்த லிங்கில் போய் பாருங்க-http://en.wikipedia.org/wiki/Anjali_(actress)
இப்படிதான் போட்டு இருக்காங்க..எனக்கு மட்டும் என்ன அஞ்சலிக்கு வயசு கூடிவது ஆசையா என்ன?போய் பாத்து உண்மையா அம்மணி வயசை சொல்லுங்க பாஸ்..சின்னப்பையன் என் மனசு வலிக்குது...அஞ்சலிக்கு வயசு கூட என்று பார்த்ததும்...
எனக்கு ஒரு தீர்ப்பை சொல்லுங்க அஞ்சலி வயசு எத்தனை?
29 வயசுனு விக்கிபீடியாவுல பாத்ததில் இருந்து மனசே சரி இல்லபாஸ்.
// K.s.s.Rajh said...
ReplyDeleteஎனக்கு ஒரு தீர்ப்பை சொல்லுங்க அஞ்சலி வயசு எத்தனை?
29 வயசுனு விக்கிபீடியாவுல பாத்ததில் இருந்து மனசே சரி இல்லபாஸ்.//
யோவ், மனசு சரியில்லன்னா அப்படியே அந்த ரகசியத்தை அமுக்கி இருக்க வேண்டியது தானே..ஏன்யா இங்க வந்து சொல்லி என் மனசையும் கஷ்டப்படுத்திறீங்க...ஆனா ஒன்னு,
முதமுதலா எனக்கு 33 வயசு ஆனதுக்கு சந்தோசப்படறேன்..ஹி..ஹி.
\\சின்னப்பையன் என் மனசு வலிக்குது...அஞ்சலிக்கு வயசு கூட என்று பார்த்ததும்...\\ சச்சின் டெண்டுல்கர், தனுஷ், அபிஷேக் பச்சன் இவங்க எல்லாருமே அவங்க பெண்டாட்டிகளை விட சின்ன பசங்க தான் பாஸ்!! இதுக்கு போயா மனசைத் தளரவிடுவது? உங்க கனவை நனவாக்காமல் விடுவது?
ReplyDeleteஹா ஹா ஹா ஏண்டா டேய் என்ன கமெண்டை அளிச்சுட்டியா ? டேய் நீ தப்புத்தப்பா எழுதிறத விமர்சனம் பண்றதையே உன்னால தாங்கிக்க முடியல அப்போ நீ எழுதிற கேடுகெட்ட விமர்சனத்தை எப்பிடிடா எங்களால சகிச்சுக்க முடியும் நீ வேஸ்ட் உன்னை எல்லாம் மனுஷனா மதிச்சு வந்தனே என்னை சொல்லனும்... போடா போய் பொண்டாட்டி புடவைய வாங்கி கட்டிக்கோ....
ReplyDeleteபடமே பார்பதில்லை
ReplyDeleteஆனா விமர்சனம்
நல்லா இருக்கு.
புலவர் சா இராமாநுசம்
//
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம் said...
படமே பார்பதில்லை
ஆனா விமர்சனம்
நல்லா இருக்கு.
புலவர் சா இராமாநுசம்//
நல்ல பழக்கம் ஐயா.
//நான் கடவுள் said...
ReplyDeleteஹா ஹா ஹா ஏண்டா டேய் என்ன கமெண்டை அளிச்சுட்டியா ? டேய் நீ தப்புத்தப்பா எழுதிறத விமர்சனம் பண்றதையே உன்னால தாங்கிக்க முடியல அப்போ நீ எழுதிற கேடுகெட்ட விமர்சனத்தை எப்பிடிடா எங்களால சகிச்சுக்க முடியும் நீ வேஸ்ட் உன்னை எல்லாம் மனுஷனா மதிச்சு வந்தனே என்னை சொல்லனும்... போடா போய் பொண்டாட்டி புடவைய வாங்கி கட்டிக்கோ....//
ஸ்பேமையும் செக் பண்ணிட்டேன்..அங்கயும் உங்க பேர்ல ஒரு கமெண்ட்டும் இல்லையே..ரொம்ப முக்கியமான கமெண்ட்னா திரும்ப ஒரு தடவை சிரமம் பார்க்காம போடுங்க..எனக்கு புடவை நல்லா இருக்காது பாஸ்.
@செங்கோவி
ReplyDelete@இதுக்கு முடிவு என்னன்னா....அஞ்சலியை கிஸ்ராஜாக்கே கொடுத்துடுவோம்..சச்சின் பொண்டாட்டி பேரும் அஞ்சலி தானே..வயசு அஞ்சலிகளுக்கு பிரச்சினை இல்லை!
இதுவே இறுதித் தீர்ப்பு.
எனக்கு வேண்ட்டம் செங்கோவி அண்ணா..சச்சினைவிட அவர் மனைவிக்கு 4 வயசுதான் கூட ஆனால் நம்ம அஞ்சலி ஆண்டிக்கு என்னைவிட 10 வயசுகூட சோ நான் அமலாபால் பக்கமோ இல்ல சரன்யா மோகன் பக்கமோ போறன்.
அஞ்சலிக்கான போட்டியில் இருந்து உத்தியோக பூர்வமாக விளகுகின்றேன்.
// K.s.s.Rajh said...
ReplyDelete@செங்கோவி
@இதுக்கு முடிவு என்னன்னா....அஞ்சலியை கிஸ்ராஜாக்கே கொடுத்துடுவோம்..சச்சின் பொண்டாட்டி பேரும் அஞ்சலி தானே..வயசு அஞ்சலிகளுக்கு பிரச்சினை இல்லை!
இதுவே இறுதித் தீர்ப்பு.
எனக்கு வேண்ட்டம் செங்கோவி அண்ணா..சச்சினைவிட அவர் மனைவிக்கு 4 வயசுதான் கூட ஆனால் நம்ம அஞ்சலி ஆண்டிக்கு என்னைவிட 10 வயசுகூட சோ நான் அமலாபால் பக்கமோ இல்ல சரன்யா மோகன் பக்கமோ போறன்.
அஞ்சலிக்கான போட்டியில் இருந்து உத்தியோக பூர்வமாக விளகுகின்றேன்.//
அப்போ அமலா பால்/சரண்யாவை நான் மறந்திடணுமா? இதென்ன அநியாயம்..
@செங்கோவி
ReplyDelete@அப்போ அமலா பால்/சரண்யாவை நான் மறந்திடணுமா? இதென்ன அநியாயம்..//
மறக்கத்தான் வேனும் பாஸ் சரன்யா மோகனுக்கு உங்களைவிட 11 வயசு குறைவு எனக்குத்தான் சேம் வயசு
அப்பறம்....நீங்களும் சரன்யாவும் போன..மங்காத்தா தலையும்,கமலா காமேஸ்(த்ரிஷா)போற மாதிரி இருக்கு என்று வலைப்பதிவில் கலாய்ப்பாங்க இது உங்களுக்கு தேவையா?
//K.s.s.Rajh said...
ReplyDeleteஅப்பறம்....நீங்களும் சரன்யாவும் போன..மங்காத்தா தலையும்,கமலா காமேஸ்(த்ரிஷா)போற மாதிரி இருக்கு என்று வலைப்பதிவில் கலாய்ப்பாங்க இது உங்களுக்கு தேவையா?//
அவ்வ்வ்வ்!
யோகா பாஸ்..ஒரு முக்கியமான பதிவு எழுதிகிட்டு இருக்கேன்..என் சிந்தனையை கலைக்க வேண்டாம்..
ReplyDeleteபதிவு எழுதறது சாதாரண விஷயம் கிடையாது, தவம் பண்ற மாதிரி-ன்னு உங்களுக்குத் தெரியும்ல?
ஓ.. அடுத்த பதிவா..? எழுதுங்க எழுதுங்க...
ReplyDeleteஎனது இந்தப் பதிவு வேறொரு தளத்தில் இடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நண்பர்கள் சாமக்கோடங்கி, கிஸ்.ராஜா,ஜெயதேவ் ஐயா, யோகா ஐயா ஆகியோருக்கு நன்றி!
ReplyDeleteநான் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதனை நீக்கி விட்டார்கள். இப்போது அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, இது சம்பந்தப்பட்ட கமெண்ட்ட்ஸை நீக்குகின்றேன்.
அப்போ படம் ஓடிடும்....... இத வெச்சே இனி நாலஞ்சு மொக்க படம் கொடுப்பாரே தல..........
ReplyDelete@பன்னிக்குட்டி ராம்சாமி அதுல சந்தேகம் வேறயா? பி.வாசுகூட வேற சேரப் போறாராம்.
ReplyDelete//பி.வாசுகூட வேற சேரப் போறாராம்//
ReplyDeleteதலைக்குப் போறாத காலம் திரும்பியும் வந்துடும் போல இருக்கே..
பி.வாசு எல்லாம் இன்னும் ரிடையர்மென்ட் வாங்கலியா... அய்யயோ..
கிரிக்கெட் பற்றிய படமாக இருப்பதால் படம் சற்று அலுப்பு தட்டுகிறது
ReplyDeleteevanda vimarsanm pannathu loosu irupana.ajitha pathi pasa evanukum thaguthi kidaiyathu.ennoma ajitha dance adurarunu solringadaxxxxx.yanda intha padathulabike raceum car raceum tupe podama avara nadichurukkaru.enga ulaga dancer elaam kuputu antha scceenla nadika soiuinga.
ReplyDeleteபடம் சுப்பர் மச்சி
ReplyDelete