Tuesday, July 5, 2011

எஸ்.ஜே.சூர்யா - நம்மை ஏமாற்றிய பிரபலங்கள் வரிசை

டிஸ்கி: ஒரு லட்சம் ஹிட்ஸ் - ஸ்பெஷல் பதிவு. தொடர்ந்து ஆதரவளிக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

’100 செக்யூரிட்டியை இறக்கு. மீடியாக்காரன் உட்பட எவனையும் உள்ள விடாத..படத்தோட ஒரு ஸ்டில்லு கூட வெளில போயிடக்கூடாது’என்று நிறைய டைரக்டர்ஸ் ஏகப்பட்ட பந்தா செய்வது கோடம்பாக்க வழக்கம். இதெல்லாம் எதற்காக என்றால் படத்தின் கதை வெளியே தெரிந்து விடாமல் காப்பாற்ற! (படம் ரிலீஸ் ஆன பின், இந்தக் கதைக்கா அப்படி பந்தா பண்ணாங்கன்னு நாம நொந்து போவோம்!)
அந்த மாதிரி டைரக்டர்களுக்கு மத்தியில தான் ஆர்ப்பாட்டமா நுழைந்தார் எஸ்.ஜே.சூர்யா. தன்னோட படங்களின் கதையை பூஜையன்றே வெளியில் சொல்லி விடுவது அவர் வழக்கம். ‘முடிஞ்சா அவங்க இந்தக் கதையை சுட்டுக்கட்டும்’ என்று ஒரு பேட்டியில் சொன்னார். யாரும் தன் கதையில் கை வைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அவர் எடுத்துக் கொள்ளும் சர்ச்சைக்குரிய கதை. இரண்டாவது அவரது தனித்துவமான சுவாரஸ்யமான திரைக்கதை.

’வாலி’ என்ற ரணகளமான படத்தின் மூலமே தன் கலையுலக வாழ்வைத் தொடங்கினார் சூர்யா. படத்தின் ஷூட்டிங்கின்போது தினமும் அஜித்-சிம்ரன் காம்பினேசனிலேயே காட்சிகள் எடுக்கப்பட்டன. உடன் பணியாற்றிய அனைவருக்குமே ஆச்சரியம் இது என்னடா படம் என்று. ‘அஜித் தெரியாமல் வந்து மாட்டிவிட்டார்’ என்றே பலரும் நினைத்தனர். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் அண்ணன் அஜித்-சிம்ரன் - தம்பி அஜித்தே வருவார்கள். தனது வேகமான திரைக்கதையாலும் சுவாரஸ்யமான கேரக்டர்களாலும் அது நம்மை உறுத்தாமல் மறைத்தார் சூர்யா. ஜோதிகாவின் அறிமுகக்காட்சி போன்றவற்றில் வித்தியாசங்களைப் புகுத்தினார். படம் சூப்பர் ஹிட் ஆகியது.

தொடர்ந்து தோல்விகளால் சுருண்டு கிடந்த விஜய்யை வைத்து குஷி எடுத்தார். தமிழ்சினிமாவில் முதல்முறையாக ‘இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணப்போறாங்க. கடைசில சேரப் போறாங்க’ என்ற அரதப்பழசான கதையை முதல் காட்சியிலேயே சொல்லிவிட்டு படத்தைக் கொண்டு சென்றார். கதையை கவட்டைக்குள் ஒளித்துவைத்துக்கொண்டு பலரும் திரிந்த நேரத்தில் தைரியமாக தியேட்டரில் உட்கார்ந்திருந்த ஆடியன்ஸ்க்கு ‘இதான் கதை’யென்று சொல்லி திரைக்கதையில் அடித்தார் எஸ்.ஜே.சூர்யா. 
எஸ்.ஜே.சூர்யாவிடம் இருந்த முக்கியமான திறமை ரொமாண்டிக் & செக்‌ஷூவல் காமெடி. கே.பாக்கியராஜ் தவிர்த்து வேறு யாருமே தொடத் தயங்கிய, தொட்டு ஜெயிக்கமுடியாத விஷயம் செக்‌ஷூவல் காமெடி. அங்கங்கே இரட்டை அர்த்த வசனங்களை வைத்துக்கொண்டு, காமத்தைப் பிண்ணனியாக வைத்து குடும்பக் கதை சொல்வதில் வல்லவராய் திகழ்ந்தவர் பாக்கியராஜ். அதிர்ஷ்டவசமாக எதற்கெடுத்தாலும் கோர்ட்டில் கேஸ் போடும் கெட்ட பழக்கம் அவர் காலத்தில் இல்லாததால் தொடர்ந்து ஜெயித்தார் பாக்கியராஜ். அவரை விட செக்‌ஷுவல் காமெடியில் பல அடி பாய்ந்தார் எஸ்.ஜே.சூர்யா.

உண்மையில் செக்‌ஷுவல் காமெடி என்பது கம்பி மேல் நடப்பது போன்று கடினமான விஷயம். கொஞ்சம் பிசகினாலும் அருவறுப்பாகி விடும். ஹாலிவுட்டில் செக்‌ஷுவல் காமெடி வரிசையில் பல படங்கள் வந்துள்ளன. ’அமெரிக்கன் பைஸ்’ வரிசைப் படங்கள் அதில் குறிப்பிடத் தக்கன. அதிலும் அமெரிக்கன் பைஸ்-1,2,3 மட்டுமே பார்க்கும்படி இருந்தன. அத்ன்பிறகு வந்த 4.5 ஓவர்டோஸ் ஆகி மக்களால் புறக்கணிக்கப்பட்டன.

தமிழில் அத்தகைய முயற்சியைச் செய்யக்கூடிய திறமையும் தைரியமும் சூர்யாவிடம் இருந்தது. அதற்கான நிரூபணமாக ‘நியூ’ எடுத்தார். அடஹி ஒரு சயின்ஸ் ஃபிக்சனாக எடுத்தார். முதலில் அஜித்-ஜோதிகா நடிப்பதாக இருந்து, பயந்து போய் பின்வாங்கிய படம் நியூ. அதன்பிறகு அவரே கதாநாயகனாக ஆனார். அவரது தோழியான சிம்ரன் கதாநாயகியாக நடித்து அவருக்கு கை(வாயும்) கொடுத்தார். 
’காமம் என்பது பெண்களை இழிவுபடுத்தும் விசயம். காமத்தைப் பற்றிப் பேசுபவன் பெண்ணிய விரோதி’ என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்ட காலகட்டம் இது. ஆனால் செக்‌ஷுவல் காமெடி என்பது நமக்குப் புதிய விஷயம் அல்ல. நமது பண்டைய கலைகளான கரகாட்டம், குறவன் -குறத்தி ஆட்டம் போன்றவை காமத்தை அடிப்படையாகக் கொண்டவையே. 

இரட்டை அர்த்த வசனங்களும் செக்‌ஷுவல் காமெடியும் நிறைந்த கலைகளையே எளிய மனிதர்கள் வாழும் கிராமங்கள், தங்கள் திருவிழாக்களில் கண்டு மகிழ்ந்தனர். இன்றும் அது தொடரவே செய்கின்றது. கிராமங்கள் பாலியல் கல்வி கற்றுக்கொள்வது அத்தகைய, காமத்தை எளிமைப்படுத்திய, நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலமே. ஆனால் நாகரீக மனிதர்களான நமக்கு காமத்தைக் கண்டால் வெறுப்பே வருகின்றது! நமது நாட்டுப்புறக்கலைகள், எதையுமே விமர்சனத்திற்கும் கேலிக்கும் அப்பாற்பட்ட விஷயமாகப் பார்க்கவில்லை.

எஸ்.ஜே.சூர்யா தமிழ்ச்சமுதாயத்தின் கலைகளும், ஹாலிவுட் படங்களும் சொன்ன அதே விசயத்தை தமிழ் சினிமாவில் சொல்ல முயன்றார். அதனாலேயே கடும் எதிர்ப்பையும் வெறுப்பையும் சந்தித்தார். அநேகமாக இந்திய சினிமா வரலாற்றில் சென்சார் சர்ட்டிஃபிகேட் ரத்து செய்யப்பட்ட ஒரே படம் எஸ்.ஜே.சூர்யாவின் ‘நியூ’ தான்.  ஆனால் தமிழ்சினிமாவில் வெளிவந்த முழுநீள செக்‌ஷுவல் காமெடிப் படமான நியூ, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் கெடுப்பதாக கூக்குரல் எழுந்தது. நீதிமன்றதிற்கும் வீட்டிற்கும் அலைக்கழிக்கப்பட்டார் எஸ்.ஜே.சூர்யா. 

அதனை அடுத்து அவர் எடுத்த ‘அன்பே ஆருயிரே’வில் அவரது ஃபிட்னெஸ் கொஞ்சம் குறைந்தது. அதிலும் வித்தியாசமான திரைக்கதையை எடுத்தார், வழக்கம்போல் கதையைச் சொல்லிவிட்டு. 

எஸ்.ஜே.சூர்யா என்ற சிறந்த இயக்குநர், திரைக்கதையாசிரியர் செய்த ஒரே தவறு, ஹீரோவாக தொடர்ந்து நடித்தது தான். அதனால் அற்புதமான இயக்குநரை இழந்தோம் நாம். கள்வனுன் காதலி, வியாபாரி, திருமகன், நியூட்டனின் மூன்றாம் விதி; போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தாலும், ஒரு நடிகராக அவர் பரிணமிக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக ‘புலி’ என்ற தெலுங்குத் தோல்விப்படத்தைக் கொடுத்துவிட்டு, ஒதுங்கி நிற்கின்றது இந்த திரைக்கதைப் புலி.

ஷங்கரின் ‘நண்பன்(த்ரீ இடியட்ஸ்)’ படத்தில் கெஸ்ட் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்து அவரே நடித்து ஒரு படம் இயக்கப் போவதாகச் செய்திகள் வந்தன. இடையே விஜய்யை வைத்து அடுத்த படம் செய்யப் போவதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் அதுவும் உறுதியாக, தெளிவாகத் தெரியவில்லை.
ஹீரோவாக நடிக்காமல், வெறும் இயக்குநராக மட்டும் களம் இறங்கினால் பல வித்தியாசமான படங்களைத் தர எஸ்.ஜே.சூர்யாவால் முடியும். எஸ்.ஜே.சூர்யாவின் மற்றொரு திறமை இசை பற்றிய நுண்ணறிவு.(அவருக்கு வயலின் தெரியும் என்று ஞாபகம்!). அவரது படங்களின் பாடல்களில் இது நன்றாக வெளிப்படும். ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்காக பலரும் காத்துக்கிடந்த நேரத்தில், தானே வலியப் போய் நியூ படத்தில் இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான். 

திரைப்படம் என்பது ’தாத்தா-பாட்டி-அப்பா-அம்மா-சித்தப்பா-சித்தி-பெரியப்பா-பெரியம்மா-மகன்-மகள்-அண்ணன் -தம்பி-அக்கா-தங்கச்சி-வீட்டு நாய்க்குட்டி’ என குடும்பம் சகிதம் மட்டுமே பார்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்று இன்னும் நம்பும் ஒரு முன்னேறிய சமுதாயத்தால் எஸ்.ஜே.சூர்யாவை சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் இழப்பு தமிழ்சினிமாவிற்கே.இன்னும் பல எக்ஸ்பரிமெண்ட்களை எஸ்.ஜே.சூர்யா செய்திருப்பார். அதற்கு முன் அவரது படைப்புணர்வு காயடிக்கப் பட்டது.

தமிழ் சினிமாவிற்கு எஸ்.ஜே.சூர்யாவின் பங்களிப்பு என்னவென்றால் ஒரு கமர்சியல் படத்துக்குக் கதை முக்கியம் அல்ல, திரைக்கதையே உயிர்நாடி என்று பொட்டில் அடித்தாற்போல் தன் படங்களின் மூலம் நிரூபித்ததும், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஒரு செக்‌ஷுவல் காமெடிப் படத்தை நமக்குக் கொடுத்ததுமே!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

62 comments:

  1. சூர்யா பற்றிய சரியான பார்வை...

    ReplyDelete
  2. கதையென்று என்று ஒன்று இல்லாமல் ஒரு ப்ளாக் பஸ்டர் மூவி கொடுக்கமுடியும் என்று நிரூபித்தவர்... கள்வனின் காதலி படம் கூட எனக்கு பிடித்த படம் தான்...

    ReplyDelete
  3. கேரக்டருடன் அவர்களுக்கான சில மேனரிசங்களையும் கொடுத்து ரசிக்க வைத்தவர்... (வாலி-அண்ணன் அஜித் )

    ReplyDelete
  4. அண்ணனே...சூர்யா மேல இம்புட்டு பாசமா? ஆமாண்ணே, உங்களுக்கு ஏத்த டைரக்டர் அவர் தானே....

    ReplyDelete
  5. அரதப்பழசான கதையை முதல் காட்சியிலேயே சொல்லிவிட்டு படத்தைக் ஒண்டு சென்றார்>>>>

    இந்த வரியில "ஒண்டு" அப்படின்னா என்ன அர்த்தம்.

    ReplyDelete
  6. எஸ்.ஜே. சூர்யா பற்றி பல தகவல்களை தெரிந்து கொண்டேன்.. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. //காமம் என்பது பெண்களை இழிவுபடுத்தும் விசயம். காமத்தைப் பற்றிப் பேசுபவன் பெண்ணிய விரோதி’ என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்ட காலகட்டம் இது. ஆனால் செக்‌ஷுவல் காமெடி என்பது நமக்குப் புதிய விஷயம் அல்ல. நமது பண்டைய கலைகளான கரகாட்டம், குறவன் -குறத்தி ஆட்டம் போன்றவை காமத்தை அடிப்படையாகக் கொண்டவையே. ////


    கரகாட்டம், குறவன் - குறத்தி ஆட்டம் போன்றவற்றை கலைகளாக பார்க்கும் நம் சமூகம், இப்படியான திரைப்படங்களை மாத்திரம் ஆபாசமாக பார்ப்பது கவலைக்குரிய விடயமே

    ReplyDelete
  8. மாப்ள விலாவாரியா சொல்லிகிறே நன்றி!

    ReplyDelete
  9. சீரியசான விரிவான,சிறப்பான எழுத்து பாஸ்!!!கலைஞன் சூர்யா இயக்குனராக மீண்டு வரவேண்டும்!

    ReplyDelete
  10. அவரது தோழியான சிம்ரன் கதாநாயகியாக நடித்து அவருக்கு கை(வாயும்) கொடுத்தார்.

    ReplyDelete
  11. ஐஸ் ஸ்டார் s.j.surya ரசிகர் மன்றம் இனிதே ஆரம்பம்.

    ReplyDelete
  12. @சரியில்ல....... //கேரக்டருடன் அவர்களுக்கான சில மேனரிசங்களையும் கொடுத்து ரசிக்க வைத்தவர்... // உண்மை தான்..க்ளோசப்-ஷாட் அதிகம் வைக்கும் வழக்கம் உள்ளவர் சூர்யா.

    ReplyDelete
  13. @தமிழ்வாசி - Prakash //ஆமாண்ணே, உங்களுக்கு ஏத்த டைரக்டர் அவர் தானே....// நினைச்சேன், நீங்க இப்படித் தான் கமெண்ட் போடுவீங்கன்னு.

    //இந்த வரியில "ஒண்டு" அப்படின்னா என்ன அர்த்தம்.// திருத்திவிட்டேன்...நன்றி பிரகாஷ்.

    ReplyDelete
  14. @மதுரன் //கரகாட்டம், குறவன் - குறத்தி ஆட்டம் போன்றவற்றை கலைகளாக பார்க்கும் நம் சமூகம், இப்படியான திரைப்படங்களை மாத்திரம் ஆபாசமாக பார்ப்பது கவலைக்குரிய விடயமே// சத்தமாகச் சொல்லாதீங்க..அப்புறம் அதையும் தடை செய்யணும்னு சொல்லப்போறாங்க.

    ReplyDelete
  15. @விக்கியுலகம் //மாப்ள விலாவாரியா சொல்லிகிறே நன்றி!// அப்போ பதிவைப் படிக்கலியா விக்கி?

    ReplyDelete
  16. @மைந்தன் சிவா //சீரியசான விரிவான,சிறப்பான எழுத்து பாஸ்!!!// நன்றி சிவா.

    ReplyDelete
  17. @Vadivelan அது ரொம்பப் பிடிச்சிருக்கோ?

    ReplyDelete
  18. @THOPPITHOPPI //ஐஸ் ஸ்டார் s.j.surya ரசிகர் மன்றம் இனிதே ஆரம்பம்.// ச்சே..ச்சே.ஆம்பிளைகளுக்குப் போய் யாராவது ரசிகர் மன்றம் ஆரம்பிப்பாங்களா..அதென்னங்க ஐஸ் ஸ்டார்?

    ReplyDelete
  19. @!* வேடந்தாங்கல் - கருன் *! //vaazththukkal...// எல்லாம் உங்க ஆசீர்வாதம் வாத்யாரே.

    ReplyDelete
  20. >>காமத்தைப் பிண்ணனியாக வைத்து குடும்பக் கதை சொல்வதில் வல்லவராய் திகழ்ந்தவர் பாக்கியராஜ். அதிர்ஷ்டவசமாக எதற்கெடுத்தாலும் கோர்ட்டில் கேஸ் போடும் கெட்ட பழக்கம் அவர் காலத்தில் இல்லாததால் தொடர்ந்து ஜெயித்தார் பாக்கியராஜ்.

    aahaa ஆஹா அழகிய அவதானிப்பு + நக்கல்

    ReplyDelete
  21. அண்ணனின் டாப் 10 பதிவுகள் என ஒரு லிஸ்ட் எடுத்தால் இது முக்கிய இடம் பெறும். கலக்கல்..

    ReplyDelete
  22. >>அநேகமாக இந்திய சினிமா வரலாற்றில் சென்சார் சர்ட்டிஃபிகேட் ரத்து செய்யப்பட்ட ஒரே படம் எஸ்.ஜே.சூர்யாவின் ‘நியூ’ தான். ஆனால் தமிழ்சினிமாவில் வெளிவந்த முழுநீள செக்‌ஷுவல் காமெடிப் படமான நியூ, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் கெடுப்பதாக கூக்குரல் எழுந்தது. நீதிமன்றதிற்கும் வீட்டிற்கும் அலைக்கழிக்கப்பட்டார் எஸ்.ஜே.சூர்யா.

    கரெக்ட்

    ReplyDelete
  23. @சி.பி.செந்தில்குமார் //அண்ணனின் டாப் 10 பதிவுகள் என ஒரு லிஸ்ட் எடுத்தால் இது முக்கிய இடம் பெறும். கலக்கல்// இது நல்லா வந்திருக்குன்னு எனக்கே தெரியுது.அதனால் தான் இன்னைக்கு ஸ்பெஷல் பதிவா களமிறக்கினேன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி சிபிண்ணே.

    ReplyDelete
  24. @FOOD //லட்சம், கோடியாக வாழ்த்துக்கள்// உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  25. டைரக்ட் மட்டும் செய்தால் குஷி,வாலி போல படங்களை தரமுடியும்.இவருக்கு நடிக்க யார் ஐடியா சொன்னதோ?

    ReplyDelete
  26. சூர்யா - சரியான பார்வை...

    ReplyDelete
  27. மறந்தவரை பற்றி நல்ல அலசல்

    ReplyDelete
  28. படங்களை இயக்குவதோடு நின்றிருந்தால் தொடர்ந்து நல்ல படங்களைத் தந்திருக்க முடியும்!

    ReplyDelete
  29. ஏ ஆர் ரஹ்மான் வலிய போய் நியூ படத்தில் இசையமைக்கவில்லை, அவர் விமானத்தில் பயணம் செய்யும் போது அதே விமானத்தில் பயணம் செய்த சூர்யா அவரிடம் சென்று தன்னுடைய படத்திக்கு இசையமைக்குமாறு கேட்டுக் கொண்டதாக ரஹ்மானின் ஒரு பேட்டியில் படித்ததாக ஞாபகம்

    ReplyDelete
  30. எஸ்.ஜே சூர்யாவிற்கு அடுத்து ஆழமான அலசல் செங்..!

    ReplyDelete
  31. சூர்யா பற்றி இவ்வளவு விசயமா ??? ஆமா ரகுமான் மட்டும் எப்படி இவர் கிடா சிக்கிறார் என்கிறதையும் சொல்லி இருக்கலாம்

    ReplyDelete
  32. நம் தமிழ் சினிமா உலகம் தொலைத்த மிகச் சிறந்த இயக்குனரை நினைவுபடுத்தியதற்கு நன்றி. இப்போது கூட அஜித்தை வைத்து ஒரு படம் பண்ணப்போவதாக எஸ்.ஜே. சூர்யாவை பற்றி ஒரு செய்தி வந்துள்ளது.

    ReplyDelete
  33. // அமுதா கிருஷ்ணா said...
    டைரக்ட் மட்டும் செய்தால் குஷி,வாலி போல படங்களை தரமுடியும்.இவருக்கு நடிக்க யார் ஐடியா சொன்னதோ?// அதானே..ஏத்திவிட்டே ஆளைக் காலி பண்ணிட்டாங்களே.

    ReplyDelete
  34. // சே.குமார் said...
    சூர்யா - சரியான பார்வை...// நன்றி குமார்

    ReplyDelete
  35. // கவி அழகன் said...
    மறந்தவரை பற்றி நல்ல அலசல்// பாரட்டுக்கு நன்றி அழகரே.

    ReplyDelete
  36. //சென்னை பித்தன் said...
    படங்களை இயக்குவதோடு நின்றிருந்தால் தொடர்ந்து நல்ல படங்களைத் தந்திருக்க முடியும்! // உண்மை தான் சார்..இனியாவது மீண்டு வருகிறாரா என்று பார்ப்போம்.

    ReplyDelete
  37. @இரவு வானம் /ஏ ஆர் ரஹ்மான் வலிய போய் நியூ படத்தில் இசையமைக்கவில்லை, அவர் விமானத்தில் பயணம் செய்யும் போது அதே விமானத்தில் பயணம் செய்த சூர்யா அவரிடம் சென்று தன்னுடைய படத்திக்கு இசையமைக்குமாறு கேட்டுக் கொண்டதாக ரஹ்மானின் ஒரு பேட்டியில் படித்ததாக ஞாபகம்//

    நியூ படம் தேவாவை இசையமைப்பாளராகப் போட்டு துவங்கப்பட்டது. சில பாடல்களும் பதிவு செய்யப்பட்டன. அதன்பிறகே அந்த விமானப்பயணம். ’அடுத்து என்ன படம் செய்யுறீங்க’ன்னு ரஹ்மான் கேசுவலாகக் கேட்க, நம்மாளும் ‘அதிரிபுதிரி; கதையைச் சொல்ல, ரஹ்மான் இம்ப்ரஸ் ஆனார். ‘இந்தப் படத்துக்கு நானே இசையமைக்கேன்’ன்னு முன்வாந்தார். அதன்பிறகு தேவாவிடம் விசயம் சொல்லப்பட, அவரும் பெருந்தன்மையாக ஒதுங்கினார்.ரஹ்மானுக்காக பெரும் தலைகளே காத்துக்கிடந்த நேரம் அது. ’வலிய’ என்பது வேறு வாய்ப்பு இல்லாமல் ரஹ்மான் கேட்டதாக அர்த்தம் இல்லை. அவர் போன்ற ஜாம்பவான்களே இம்ப்ரஸ் ஆன படம்/இயக்குநரையே நாம் விரட்டி அடித்தோம் என்பதைச் சுட்டினேன். ஓகேவா நைட்டு?

    ReplyDelete
  38. @A.சிவசங்கர் // ஆமா ரகுமான் மட்டும் எப்படி இவர் கிடா சிக்கிறார் என்கிறதையும் சொல்லி இருக்கலாம் // முதல் காரணம் சூர்யாவின் இசையறிவு.இரண்டாவது அவர் ஒரு தனித்துவமான இயக்குநர், அவர் படங்கள் வழக்கமானவை அல்ல என்பதே.

    ReplyDelete
  39. // N.H.பிரசாத் said...
    இப்போது கூட அஜித்தை வைத்து ஒரு படம் பண்ணப்போவதாக எஸ்.ஜே. சூர்யாவை பற்றி ஒரு செய்தி வந்துள்ளது.// சூர்யாவே நடிக்கப்போவதாகவும்..இல்லை, விஜய் என்றும்..இல்லையில்லை அஜித் என்றும் பல செய்திகள் வருகின்றன. பூஜை போடும்வரை எதுவும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

    ReplyDelete
  40. அண்ணே நியூ படத்துல இவரு விசிலு ஊதுற சீனு ,அப்பறம் அந்த கிரண் மாமி கூட கிளு கிளு குளுகுளு சீனு எல்லாம் பார்த்து அப்பவே அப்பவே அப்பவே

    ReplyDelete
  41. @நா.மணிவண்ணன் தம்பீ, அப்பவேவா..அப்போ உங்களுக்கு 8 வயசு இருக்குமா?..அப்படீன்னா நியூ படமே உங்க கதை தானா?

    ReplyDelete
  42. எல்லா இயக்குனர்களுக்கும் வரும் மண்டைகனம் இவருக்கு அதிகமாகவே வந்துவிட்டது. இவர் நடிப்பதை நிறுத்திவிட்டு, ஒழுங்காக இயக்கும் வேலையை மட்டும் செய்யலாம். தன் திறமையை தானே வீனடிக்கும் ஒரு படைப்பாளி இவர்.

    ReplyDelete
  43. ரகுமான் பயணம் செய்ய இருந்த விமானத்தில், பக்கத்துக்கு இருக்கையில் இருந்த நபரிடம் சூர்யாவே இடம் கேட்டு வாங்கி கதை சொல்லித்தான் ஒகே வாங்கியது.

    இப்பொழுதெல்லாம் ரகுமான் இரண்டு இருக்கைகள் பதிவு செய்வதும இதனைத் தவிர்க்ககூட இருக்கலாமோ


    /ஷங்கரின் ‘நண்பன்(த்ரீ இடியட்ஸ்)’/
    He is acting in Javed Jaffrey's Role

    ReplyDelete
  44. உண்மைதான்!இன்னொரு பாக்கியராஜ்ஐ வீட்டுக்கு அனுப்பிவிட்டோம்.
    அவர் செய்த தவறு அன்பே ஆருயிரேயில் தனக்கும் ஒரு அறிமுக பாடல் என்று தொடக்கி முழு நேர நடிகனாகி இப்பொழுது முழுநேரமும் விட்டில உக்காந்திருக்காரு.
    தெரிஞ்ச வேலைய விட்டவனும் கேட்டான்! தெரியாத வேலைய செய்தவனும் கேட்டான்!

    ReplyDelete
  45. @ilamurugu //இப்பொழுதெல்லாம் ரகுமான் இரண்டு இருக்கைகள் பதிவு செய்வதும இதனைத் தவிர்க்ககூட இருக்கலாமோ// ஹா..ஹா..அப்படியென்றால் அடுத்த படத்திற்கும் எதற்கு ரஹ்மான் ஒத்துக்கொண்டார்?.....பார்த்திபன் ரஹ்மானை வைத்து ‘ஏலேலோ’ என்றொரு படம் ஆரம்பித்து பாடல் வாங்க முடியாமல் நொந்து நூலாகி படத்தயாரிப்பையே கைவிட்டார். அதே நேரத்தில் தான் நியூவிற்கும் அ-ஆவிற்கும் ரஹ்மான் இசையமைத்தார். ஏன் என்று யோசித்தால் நான் சொல்வது புரியும்...ஒரு நல்ல, வித்தியாசமான முயற்சியைக் கண்டுகொள்வதும், அதற்கு முன்வந்து உதவுவதும் ரஹ்மானுக்கு மரியாதை சேர்க்கும் விசயங்களே.

    ReplyDelete
  46. @பாலா //இவர் நடிப்பதை நிறுத்திவிட்டு, ஒழுங்காக இயக்கும் வேலையை மட்டும் செய்யலாம்.// அதுவே அனைவரின் விருப்பமும் பாலா..நன்றி.

    ReplyDelete
  47. @குறுக்காலபோவான் //தெரிஞ்ச வேலைய விட்டவனும் கேட்டான்! தெரியாத வேலைய செய்தவனும் கேட்டான்!// ஹா..ஹா..சூப்பர் நண்பரே.

    ReplyDelete
  48. உண்மை! ஒரு நல்ல இயக்குனர் நடிகனாகி...அஜித்கூட ஒரு பேட்டியில் சொன்னதாக ஞாபகம் அவர் மீண்டும் இயக்குனராக மாறவேண்டுமென்று! உண்மையில் வாலி படத்தில் அஜித்தின் ஸ்டைல்,நடிப்பு வேறெங்கும் காணக் கிடைக்கவில்லை!

    ReplyDelete
  49. இப்படியொரு திறமையான ப்லாகரை கண்டுபிடிச்ச பெருமை... எனக்கே.. எனக்கே.. எனக்கே...!!! :) :)

    கலக்குறீங்க தல!!! :) ரொம்ப சந்தோசமா இருக்கு!!! :)

    இப்படிக்கு

    புள்ளிராஜா (எ)
    ..... (எ)
    சனிப்பொணம் (எ)
    ...... (எ)
    .......(எ)
    சுண்டெலி (எ)
    .
    .
    .
    ஒரு காலத்து ஹா.பா

    (புள்ளி வச்சப் பேரெல்லாம் மறந்து போச்சிங்க)

    ReplyDelete
  50. @புள்ளி ராஜா தலைவரே..நீங்களா..நலமா..தலைவரின் பாராட்டு, தனி உற்சாகத்தைக் கொடுக்குதே.

    எல்லாப் புகழும் போகட்டும் ஹாபாவுக்கே.

    ReplyDelete
  51. @ஜீ... //ஒரு நல்ல இயக்குனர் நடிகனாகி...அஜித்கூட ஒரு பேட்டியில் சொன்னதாக ஞாபகம் // ஆமாம் ஜீ..அவரே வருத்தப்பட்டு சொன்னார்!

    ReplyDelete
  52. @aravindh //we want you back sj surya.// நமக்கும் அதே ஆசை தான்.

    ReplyDelete
  53. ஒரு முன்னேறிய சமுதாயத்தால் எஸ்.ஜே.சூர்யாவை சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் இழப்பு தமிழ்சினிமாவிற்கே.இன்னும் பல எக்ஸ்பரிமெண்ட்களை எஸ்.ஜே.சூர்யா செய்திருப்பார். அதற்கு முன் அவரது படைப்புணர்வு காயடிக்கப் பட்டது.

    ReplyDelete
  54. எஸ் ஜே சூர்யா பற்றிய, வித்தியாசமான ஒரு கட்டுரைப் பகிர்வினைத் தந்திருக்கிறீங்க.

    எஸ் ஜே சூர்யாவின் அறியப்படாத பக்கங்களை உங்கள் பதிவின் மூலம் அறிந்தேன் சகோ.

    ReplyDelete
  55. \\ஆனால் நாகரீக மனிதர்களான நமக்கு காமத்தைக் கண்டால் வெறுப்பே வருகின்றது! \\இணையத்தில் அதிகம் தேடப் பட்ட வார்த்தை என்றால் அது sex ஆகவோ, அது சம்பந்தப் பட்ட வார்த்தைகளாகவோ தான் இருக்கும். எஸ்.ஜே. இந்த மேட்டரை கையாண்ட விதம் பிடிக்காமல் இருப்பவர்கள் இருக்கலாம், ஆனால் இந்த மேட்டரையே பிடிக்காது என்று சொன்னால், அது வாழைப் பழம் வேண்டாம் என்ற குரங்கு கதையாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  56. @நிரூபன் //எஸ் ஜே சூர்யாவின் அறியப்படாத பக்கங்களை உங்கள் பதிவின் மூலம் அறிந்தேன் சகோ.// மகிழ்ச்சி நிரூ.

    ReplyDelete
  57. @Jayadev Das //ஆனால் இந்த மேட்டரையே பிடிக்காது என்று சொன்னால், அது வாழைப் பழம் வேண்டாம் என்ற குரங்கு கதையாகத்தான் இருக்கும்.// அது வேண்டாம்னு பொதுவில் சொல்வது ஃபேசனாகி விட்டது, அவ்வளவே.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.