Friday, September 30, 2011

விஷாலின் வெடி - திரை விமர்சனம்

அவன் இவன் படத்திற்கு அடுத்து விஷால் நடிப்பிலும் எங்கேயும் காதல் தோல்விக்குப் பின் பிரபுதேவா இயக்கத்திலும் ஆக்சன் மசாலாவாக இன்று வெளிவந்திருக்கும் படம் ‘வெடி’. இது 2008ல் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன ’சவுரியம்’ படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரிப்பில் ரீமேக்கியிருக்கிறார்கள்.
ஒளித்து மறைக்கிற அளவிற்கு கதையில் ஒன்னுமில்லை..அதனால.....

விஷாலும் பூனம் கவுரும் அண்ணன் - தங்கை. வறுமையால் சிறுவயதிலேயே மிஷனரியில் தங்கையைச் சேர்த்துவிட்டுப் பிரிகிறார் விஷால். அது புரியாமல், விஷாலை வெறுக்கிறார் பூனம். விஷால் பெரிய ஆளாகி போலீஸ் ஐ.பி.எஸ்.ஆகிறார். தூத்துக்குடி தாதா ஷாயாஜி ஷிண்டேவுடன் மோதி, அவரை ஜெயிலுக்கு அனுப்புகிறார். 

விஷால், தங்கை கல்கத்தாவில் இருப்பதை அறிந்து லீவ் போட்டு போகிறார். ஷாயாஜியும் விஷாலைப் பழி வாங்க, பூனத்தைத் தேடி கல்கத்தா வருகிறார். அப்புறம் என்னாச்சு, அண்ணன் - தங்கை சமாதானம் ஆனாங்களா, வில்லன் பழி வாங்கினாரா என்பதே கதை.

ஏதோவொரு ஊரிலிருந்து டவுனுக்கு வரும் ஹீரோ - அங்கே காமெடியன் + ஹீரோயினுடன் கொஞ்சம் சீன்ஸ் - திடீரென ஹீரோவைத் தேடி வரும் தடித்தடியான அடியாட்கள் - திடீர் பாட்ஷா ஆகி, அவர்களை துவம்சம் செய்யும் ஹீரோ - என்ன பிரச்சினை என ஒரு ஃப்ளாஷ்பேக் (இங்கே 2...தங்கச்சிக்கு ஒன்னு- வில்லனுக்கு ஒன்னு) - முடிவில் ரணகளமாகி, சுபமாகும் கிளைமாக்ஸ்!!!

-- இப்படி ஒரு திரைக்கதையுடன் 2008ல் ஆந்திராவில் ஒருபடம் வந்து வெற்றி பெற்றது ஆச்சரியம் இல்லை. ஆனால் அதன்பின் அதே சாயலில் பல படங்கள் (அதில் விஷாலின் திமிரும் ஒன்று) வந்து, நம்மை நையப்புடைத்துவிட்ட பின், அதே டெம்ப்ளேட்டில் வெடியைப் பார்க்க ‘சவுரியமாய்’ இல்லை. 
பிரபுதேவாவின் திரைக்கதையில் அவரது டச் இருக்கும். இதில் டைட்டிலில் மட்டுமே பிரபுதேவா இருக்கிறார். வழக்கமாக ஏதாவது ஒரு பாடல் காட்சியில் தலையைக் காட்டுவார், இங்கே அதுவும் மிஸ்ஸிங். எனவே ஏதோவொரு தெலுங்குப்படம் பார்த்த ஃபீலிங் தான் வருகிறதேயொழிய, பிரபுதேவா படம் என்று சொல்ல ஏதுமில்லை. 

விஷாலிற்கு பொருத்தமான கேரக்டர் தான். அவரது பாடியும் ஆக்சன் ஹீரோ வேஷத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. நடிப்பிலும் நல்ல முன்னேற்றம். முகத்தில் முன்பெல்லாம் எக்ஸ்பிரசன்ஸ் வராது. இப்போது நன்றாகவே நடிக்கின்றார். நன்றி பாலா! ஏற்கனவே சத்யம், தோரணை, மலைக்கோட்டை என ஆப்பு வாங்கியபின்னும் விஷால் இப்படியொரு விஷப்பரிட்சையில் ஏன் இறங்கினார் என்று தெரியவில்லை.

சமீரா ரெட்டி லாங் ஷாட்டில் மட்டும் இளமையாக, அழகாக இருக்கிறார். பாடல்காட்சிகளில் தாராளமும் உண்டு. எல்லா பிரபுதேவா பட ஹீரோயின் போலவே, இவரும் ஜோதிகா ஸ்டைல் எக்ஸ்பிரசன்ஸ் கொடுக்கிறார், நன்றாகவே இருக்கிறது. ஆனால் கதைக்கும் இவருக்கும் சம்பந்தம் கிடையாது. பூனம் கவுருக்கு கதையின் முக்கியப் பாத்திரம். ஹீரோயினாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர், தங்கையாகி விட்டார். சமீரா ரெட்டியை விட பளிச்சென்று இருக்கிறார். ஆனால் ஸ்டில்லில் இருக்கும் அழகு, படத்தில் நடிக்கும்போது இல்லை.
படத்தில் கொஞ்சம் ரிலீஃப், விவேக் தான். சில காட்சிகளில் நன்றாகவே சிரிக்க வைக்கிறார். அவரும் இடைவேளைக்கு மேல் காணாமல்போய்விட, அரிவாளும் ‘ஏய்’-ம் தான் மிஞ்சுகிறது.படத்தின் முக்கிய பலம், பாடல்கள் தான். எல்லாப் பாடலுமே நன்றாக இருக்கின்றன. ஆனால் நடன அமைப்பில் கோட்டை விட்டிருக்கிறார்கள். ’இச்சுக் கொடு’ பாட்டில் மட்டுமே கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். 

படத்தில் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் டாக்டராக ஒரு சீனில் வரும் ஊர்வசி. அவரது அப்பாவித்தனமான படபட பேச்சு, இப்போதும் சிரிப்பை வரவழைக்கிறது. வில்லனுடன் அவர் ஆம்புலன்சில் ஊர் சுற்றும் காட்சி நீளம் என்றாலும், ஊர்வசி கலக்குகிறார். 

படம் வழக்கமான படமாக ஆகிவிட்ட நிலையில், ஆர்.டி.ராஜசேகரின் கேமிராவைப் பற்றியும், வி.டி.விஜயனின் எடிட்டிங் பற்றியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

படத்தில் லாஜிக் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. என்ன தோணுதோ, அதைச் சொல்கிறார்கள், செய்கிறார்கள். தூத்துக்குடி தாதா, கல்கத்தாவிற்கு வருகிறார், தன் அத்தனை அடியாட்களுடன். எப்படியும் 100 பேர் இருக்கும். அத்தனை தடியர்களையும் மெயிண்டய்ன் பண்ணதிலேயே அவர் ஆண்டி ஆகியிருக்க வேண்டும். கல்கத்தாவில் நடுரோட்டில் வெட்டுக் குத்து நடந்தாலும், போலீஸோ மீடியாவோ கண்டுக்கிட்ட மாதிரியே தெரியலை. ஒருவேளை வெளியூர்க்காரங்க அடிச்சுக்கிட்டா, அந்த ஊர்ச் சட்டப்படி அரெஸ்ட் பண்ண முடியாதோ என்னவோ..

படத்தில் நம்மை ஒன்ற விடாமல் செய்வதே தெலுங்கு மசாலா வாடை தான். ஐம்பது பேர் வந்தாலும் அசராமல் அடிக்கும் ஹீரோ, யாராலும் கட்டுப்படுத்த முடியாத, நகரில் அட்டகாசம் செய்யும் வில்லன்கள் (லேடி போலீஸையே ரேப் பண்ணினாலும், நோ ஆக்சன்), பாடல்காட்சிக்காகவே வந்து போகும் ஹீரோயின் என பக்கா தெலுங்குப் படமாகவே வந்திருக்கிறது வெடி. இன்னும் கொஞ்சம் தமிழ்ப்படுத்தியிருக்கலாம்.

வெடி - ஆந்திராப் புஸ்வாணம்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

101 comments:

  1. SO DIWALIKU MUNNADI ORU புஸ்வாணம்

    ReplyDelete
  2. //RK நண்பன்.. said...
    VADAI ENAKKE..//

    யோவ், அர்த்த ராத்திரில என்னய்யா பண்றீங்க..

    ReplyDelete
  3. //RK நண்பன்.. said...
    SO DIWALIKU MUNNADI ORU புஸ்வாணம்//

    தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணாமல், இப்போ பண்ணதுக்குக் காரணமும் அது தான் போல..

    ReplyDelete
  4. அடடா, இங்கேயும் படம் போட்டாச்சா?

    ReplyDelete
  5. //Dr. Butti Paul said...
    அடடா, இங்கேயும் படம் போட்டாச்சா?//

    இங்கயும்னா என்ன அர்த்தம்?

    ReplyDelete
  6. ////விஷாலும் பூனம் கவுரும் அண்ணன் - தங்கை. வறுமையால் சிறுவயதிலேயே மிஷனரியில் தங்கையைச் சேர்த்துவிட்டுப் பிரிகிறார் விஷால்.////

    அண்ணன் தங்கச்சி சென்டிமென்டா இருக்கிறதால என்ன இருந்தாலும் ஒரு முறை பார்த்தே தீரணுமுங்க..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    Fashion Show ல் கவிண்டு விழுந்த அழகிகள் படங்கள்

    ReplyDelete
  7. செங்கோவி said...
    //Dr. Butti Paul said...
    அடடா, இங்கேயும் படம் போட்டாச்சா?//

    இங்கயும்னா என்ன அர்த்தம்?////

    நிரூபன் சார் தேட்டர்ல உங்க காமென்ட் பாத்திட்டு வந்தேன்னே, அதுதான், இருங்க பதிவ படிச்சிட்டு வர்றேன். (அடச்சீ, அந்தாளு பழக்கம் நமக்கும் தொத்திக்கிச்சே)

    ReplyDelete
  8. //♔ம.தி.சுதா♔ said... [Reply]

    அண்ணன் தங்கச்சி சென்டிமென்டா இருக்கிறதால என்ன இருந்தாலும் ஒரு முறை பார்த்தே தீரணுமுங்க..//

    இவரு எதுக்கும் துணிஞ்சவரா இருப்பாரு போலிருக்கே..பாருங்கய்யா, பாருங்க.

    ReplyDelete
  9. //ஏதோவொரு ஊரிலிருந்து டவுனுக்கு வரும் ஹீரோ - அங்கே காமெடியன் + ஹீரோயினுடன் கொஞ்சம் சீன்ஸ் - திடீரென ஹீரோவைத் தேடி வரும் தடித்தடியான அடியாட்கள் - திடீர் பாட்ஷா ஆகி, அவர்களை துவம்சம் செய்யும் ஹீரோ - என்ன பிரச்சினை என ஒரு ஃப்ளாஷ்பேக் (இங்கே 2...தங்கச்சிக்கு ஒன்னு- வில்லனுக்கு ஒன்னு) - முடிவில் ரணகளமாகி, சுபமாகும் கிளைமாக்ஸ்!!!//

    பத்தோட பதினொன்னு, அத்தோட இது ஒன்னு படம்தானா?

    ReplyDelete
  10. //
    Dr. Butti Paul said...

    பத்தோட பதினொன்னு, அத்தோட இது ஒன்னு படம்தானா?//

    அத்தே த்தான்!

    ReplyDelete
  11. இந்தப்படத்துல ஊர்வசி இருக்காங்களா? காமெடில பின்னி எடுக்கற நடிகை ஆச்சே, கமல் சார் தவிர யாருமே வாய்ப்பு குடுக்கறதில்ல, பிரபுதேவா வாழ்க.

    ReplyDelete
  12. // Dr. Butti Paul said...
    இந்தப்படத்துல ஊர்வசி இருக்காங்களா? காமெடில பின்னி எடுக்கற நடிகை ஆச்சே, கமல் சார் தவிர யாருமே வாய்ப்பு குடுக்கறதில்ல, பிரபுதேவா வாழ்க.//

    ஆமா, ஒரு பத்து நிமிசம் வர்றார்..அந்தக் காட்சிகள்ல அவர் நடிப்பு சூப்பர்.

    திருப்பு -திருப்புன்னு கமல் சொன்னது இப்பவும் கேட்குது!

    ReplyDelete
  13. விவேக்குக்குக்கு ஒரு நல்ல படம்னு சொல்றீங்க, அந்தாளு படங்கள்ல காமெடி பண்ணி ரொம்ப நாளாச்சு (மேடைப்பேச்சுலயும், டிவி நிகழ்ச்சிகள்ளயும்தான் அந்தாளு காமெடி பாக்க முடிஞ்சது) அதுக்காகவே இந்தப்படம் பாக்கனும்னே.. (சமீரா ரெட்டி பத்தி சொல்லியிருந்தீங்களே, சத்தியமா அதுக்காக இல்லண்ணே நம்புங்க..)

    ReplyDelete
  14. //Dr. Butti Paul said...
    விவேக்குக்குக்கு ஒரு நல்ல படம்னு சொல்றீங்க, அந்தாளு படங்கள்ல காமெடி பண்ணி ரொம்ப நாளாச்சு //

    இதுல வடிவேலை இமிடேட் பண்ணாமலும் நடிச்சிருக்காரு..இன்னும் நல்லா யூஸ் பண்ணியிருக்கலாம்..

    ReplyDelete
  15. //ஆனால் நடன அமைப்பில் கோட்டை விட்டிருக்கிறார்கள். ’இச்சுக் கொடு’ பாட்டில் மட்டுமே கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள்//

    இது பிரபு தேவா படம்தானா? அவரு ஏரியாவுலயே கோட்டையா? இப்ப யாரையுமே நம்ப முடியறதில்ல.. அந்த கமலா காமேஷ்-சித்தார்த் நடிச்ச படத்துக்கப்புறம் அந்தாளும் உருப்படியா ஒரு படமுமே இயக்கல போல.

    ReplyDelete
  16. //Dr. Butti Paul said...
    //ஆனால் நடன அமைப்பில் கோட்டை விட்டிருக்கிறார்கள். ’இச்சுக் கொடு’ பாட்டில் மட்டுமே கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள்//

    இது பிரபு தேவா படம்தானா? அவரு ஏரியாவுலயே கோட்டையா? இப்ப யாரையுமே நம்ப முடியறதில்ல.. அந்த கமலா காமேஷ்-சித்தார்த் நடிச்ச படத்துக்கப்புறம் அந்தாளும் உருப்படியா ஒரு படமுமே இயக்கல போல.//

    நானும் அவரை நம்பித்தான் போனேன்..ஆனா, பிரபுதேவா படங்கிற அறிகுறியே இல்லை.

    அவர் பட ஹீரோக்கள் அவர் மாதிரியே ஆட ட்ரை பண்ணுவாங்க. அதுகூட இதில் இல்லை.

    ReplyDelete
  17. செங்கோவி said...

    //அவர் பட ஹீரோக்கள் அவர் மாதிரியே ஆட ட்ரை பண்ணுவாங்க. அதுகூட இதில் இல்லை.//

    நீங்க இந்த போக்கிரி பொங்கல் பத்தி சொல்லலியே?

    ReplyDelete
  18. //Dr. Butti Paul said...
    செங்கோவி said...

    //அவர் பட ஹீரோக்கள் அவர் மாதிரியே ஆட ட்ரை பண்ணுவாங்க. அதுகூட இதில் இல்லை.//

    நீங்க இந்த போக்கிரி பொங்கல் பத்தி சொல்லலியே?//

    ஹா..ஹா..அதுவும் தான்.

    ஆனால், பிரபுதேவாவின் ஹீரோக்களில் ஓரளவு நன்றாக ஆடியது டாக்குடர் தானே!

    ReplyDelete
  19. செங்கோவி said...

    //ஆனால், பிரபுதேவாவின் ஹீரோக்களில் ஓரளவு நன்றாக ஆடியது டாக்குடர் தானே!//

    என்னண்ணே நீங்க, நடனப்புயல் டாகுடர் பத்தி ஓரளவுக்குன்னு சொல்லிட்டீங்க, ரசிகர்கள் கொத்திச்சுட மாட்டாங்க?

    ReplyDelete
  20. பத்தோடு இதுவும் ஒரு புஸ்வானம் சூப்பர் விமர்சனம்!

    ReplyDelete
  21. //Dr. Butti Paul said...

    என்னண்ணே நீங்க, நடனப்புயல் டாகுடர் பத்தி ஓரளவுக்குன்னு சொல்லிட்டீங்க, ரசிகர்கள் கொத்திச்சுட மாட்டாங்க?//

    பிரபுதேவாவோடு ஒப்பிட்டேன் ஐயா.

    ReplyDelete
  22. //தனிமரம் said...
    பத்தோடு இதுவும் ஒரு புஸ்வானம் சூப்பர் விமர்சனம்!//

    ஆமாம் நேசரே...

    உங்க பதிவு ஒன்னு டேஷ்போர்டுல காட்டுது..ஆனா வந்தா ஒன்னையும் காணோம்..ஏதோ பாடும் குரல்னு..என்ன ஆச்சு?

    ReplyDelete
  23. செங்கோவி said...
    //Dr. Butti Paul said...

    என்னண்ணே நீங்க, நடனப்புயல் டாகுடர் பத்தி ஓரளவுக்குன்னு சொல்லிட்டீங்க, ரசிகர்கள் கொத்திச்சுட மாட்டாங்க?//

    பிரபுதேவாவோடு ஒப்பிட்டேன் ஐயா.///

    கொளுத்திப்போடலாம்னு பார்த்தா எஸ்கேப் ஆகிட்டாரே. இதுதான் அனுபவம்குறது.

    ReplyDelete
  24. வெடி விமர்சனம் .... விளாசிதள்ளிட்டீங்க... ஏற்கனவே வெடிச்ச பட்டாசு தான்னு சொல்லிட்டீங்க... அருமையான அலசல் நண்பா

    ReplyDelete
  25. வணக்கம் மாப்பிள நல்லதொரு விமர்சனத்தை தந்திருக்கீங்க உங்களால எனக்கு மூன்று மணிநேரம் மிச்சமையா... !!!!!

    ReplyDelete
  26. வணக்கம் செங்கோவி அண்ணன்! அதற்குள் வெடி விமர்சனம் வந்துவிட்டதா? உங்க விமர்சனம் சூப்பர்!

    பாடல்கள் ஓகே தானே!

    ReplyDelete
  27. அதே டெம்ப்ளேட்டில் வெடியைப் பார்க்க ‘சவுரியமாய்’ இல்லை. //

    அட இது நல்லாயிருக்கே!

    ReplyDelete
  28. மாம்ஸ் இசை பத்தி ஒன்னும் சொல்லலையே!

    ReplyDelete
  29. வெள்ளி மதியம் 'வெடி' பாக்கப்போறேன். ஆந்திரா காரம் அதிகமா இருந்தாலும் சாப்புட்டே ஆகணும்...'விதி'.

    ReplyDelete
  30. ஏண்ணே!

    அடிச்ச பாம்பை அடிக்க மாதிரி, வெடிச்ச வெடியையுமா திரும்பத் திரும்ப வெடிப்பாங்க?

    ReplyDelete
  31. அப்ப வெடி வெடிக்கலையா?

    படிங்க நம்ம தீபாவளி பதிவு.

    நான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்

    ReplyDelete
  32. மாப்ள...என்னய்யா இது பய புள்ள இத்தன பிலாப்புக்கப்புரமும் திருந்தலியா....சரி விடுங்க...உங்க விமர்சனம் நல்ல இருக்குய்யா நன்றி!

    ReplyDelete
  33. வெடி புஸ்வானம் அப்பா இதுவும் பார்க்க தேவலையா

    ReplyDelete
  34. படம் புஸ்வானம்....விமர்சனம் சரவெடி..

    ReplyDelete
  35. பாஸ் இந்தப்படத்துக்கு விமர்சணம் எழுதினதுக்கு பேசாம நல்ல பதிவு ஒன்று போட்டு இருக்கலாம்..ஆனாலும் தான் பட்ட துன்பம் யாரும் படக்கூடாது என்று நல்ல எண்ணத்தில் விமர்சணம்போட்டு இந்தப்படத்தை பார்த்து நாங்கள் நொந்துபோகாதவாறு செய்த பாஸ்க்கு ஒரு ஜெய்..அண்ணனுக்கு ஜெய்...தலைவருக்கு ஜெய்..செங்கோவி பாஸ்க்கு ஜெய்....................

    ReplyDelete
  36. அட.. அப்போ வெடி புஸ்ஸா... தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்

    ReplyDelete
  37. செங்கோவி ஜீ..!

    அப்ப “வெடி“ பார்த்தாலும் மொக்கையாக வேண்டியதுதானா.........?!

    இவங்க நல்ல படம். வேண்டாம் ஓரளவுக்கு பார்க்கக்கூடிய படமே எடுக்கமாட்டங்களா.....?!

    ReplyDelete
  38. May i know from which country u r? Athukkulla eppadinnen paathinga.

    ReplyDelete
  39. அப்போ பேலன்ஸ் 2 இருக்கு, அதை நான் பார்க்கறேன்

    ReplyDelete
  40. அப்ப வெடி வெடிக்கலியா???

    ReplyDelete
  41. இனிய காலை வணக்கம் பாஸ்,

    நான் அப்புறமா வாரேன்.

    ReplyDelete
  42. ரொம்ப நன்றி பாஸ்...
    எங்களுக்கு நிறைய காசு மிச்சம் பண்றீங்க... :)))

    ReplyDelete
  43. இனிய காலை வணக்கம்!

    ReplyDelete
  44. ஓஹோ!"வெடி"ங்கிறது படமா? நான் என்னமோ தீவாளிக்கு பையனுக்கு வெடி வாங்கக் கடைக்குப் போயிட் டிங்கன்னு நெனைச்சேன்!

    ReplyDelete
  45. ஏற்கனவே சத்யம், தோரணை, மலைக்கோட்டை என ஆப்பு வாங்கியபின்னும் விஷால் இப்படியொரு விஷப்பரிட்சையில் ஏன் இறங்கினார் என்று தெரியவில்லை.////விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரிப்பில் ரீமேக்கியிருக்கிறார்கள்.§§§அதனால் பப்படமானாலும் கூடப் பரவாயில்லைன்னு............................!

    ReplyDelete
  46. ஹீரோயினாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர், தங்கையாகி விட்டார். சமீரா ரெட்டியை விட பளிச்சென்று இருக்கிறார். ஆனால் ஸ்டில்லில் இருக்கும் அழகு, படத்தில் நடிக்கும்போது இல்லை./////மேக்கப்பு இல்லாம பாத்தா இன்னும் சகிக்க முடியாம இருக்குமோ?

    ReplyDelete
  47. வெடி - வெறும் புகையும் புஸ்வாணம்!!?

    ReplyDelete
  48. ஆட்டம்பாம் என்று நினைத்துப் புஸ்வாணமாப் போச்சா?!

    ReplyDelete
  49. சுமாரான படம்.......
    உங்கள் விமர்சனத்துக்கு நன்றி...

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  50. //பிரபுதேவா படம் என்று சொல்ல ஏதுமில்லை

    சொயிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்.....

    ரஜினி படம் , மணிரத்னம் படம் மாதிரி பிரபு தேவா படம்னு சொல்லுற அளவுக்கு அவர் ஏதாவது படம் எடுத்திருக்காரா என்ன?

    ஒரு வேளை படம் போக்கிரி , வில்லு , எங்கேயும் காதல் அளவுக்கு மொக்கையா இல்லையோ?

    ReplyDelete
  51. // மாய உலகம் said...
    வெடி விமர்சனம் .... விளாசிதள்ளிட்டீங்க... ஏற்கனவே வெடிச்ச பட்டாசு தான்னு சொல்லிட்டீங்க... அருமையான அலசல் நண்பா //

    நன்றி மாயா.

    ReplyDelete
  52. //காட்டான் said...
    வணக்கம் மாப்பிள நல்லதொரு விமர்சனத்தை தந்திருக்கீங்க உங்களால எனக்கு மூன்று மணிநேரம் மிச்சமையா... !!!!! //

    ஆமாம் மாம்ஸ், அந்த 3 மணி நேரத்துல நீங்க 4 கமெண்ட் போட்டுடலாம்!!!

    ReplyDelete
  53. // Powder Star - Dr. ஐடியாமணி said...
    பாடல்கள் ஓகே தானே! //

    ஆமாம் மணி, பாடல்கள் எல்லாமே சூப்பர். அதுவும் நம்ம இச்சு இச்சு கலக்கல்!

    ReplyDelete
  54. // KANA VARO said...
    மாம்ஸ் இசை பத்தி ஒன்னும் சொல்லலையே! //

    யோ, சவால் விடுறாங்க, 50 பேர் அருவா, உருட்டுக்கட்டையோட ஸ்லோமோசன்ல வர்றாங்க,அடி வாங்குறாஅங்க --- இதுல என்னய்யா இசைத்திறமையைக் காட்ட?

    ReplyDelete
  55. // ! சிவகுமார் ! said...
    வெள்ளி மதியம் 'வெடி' பாக்கப்போறேன். ஆந்திரா காரம் அதிகமா இருந்தாலும் சாப்புட்டே ஆகணும்...'விதி'. //

    அந்தப் புள்ளைக்கு விஷால்னா பிடிக்குமா சிவா?

    ReplyDelete
  56. // சத்ரியன் said...
    ஏண்ணே!

    அடிச்ச பாம்பை அடிக்க மாதிரி, வெடிச்ச வெடியையுமா திரும்பத் திரும்ப வெடிப்பாங்க? //

    இவங்க செய்றாங்களே..இதுல சவுரியம் பட ரீமேக் உரிமையை பல லட்சம் கொடுத்து வாங்கினாங்களாம்..இதுக்கு திமிர் படத்தையே ரீமேக் பண்ணியிருக்கலாம், ஏறக்குறைய 2ம் ஒன்னு தான்.

    ReplyDelete
  57. // IlayaDhasan said...
    அப்ப வெடி வெடிக்கலையா? //

    வெடிச்சுச்சு, படம் பார்க்கிறவங்க சீட்டுக்கு அடில!

    ReplyDelete
  58. // விக்கிஉலகம் said...
    மாப்ள...என்னய்யா இது பய புள்ள இத்தன பிலாப்புக்கப்புரமும் திருந்தலியா....//

    நீரு மட்டும் இப்போ திருந்திடுவீராக்கும்?

    ReplyDelete
  59. // kobiraj said...
    வெடி புஸ்வானம் அப்பா இதுவும் பார்க்க தேவலையா //

    டிவில போட்டா பாருங்க..

    ReplyDelete
  60. // ரெவெரி said...
    படம் புஸ்வானம்....விமர்சனம் சரவெடி..//

    கமெண்ட் லட்சுமி வெடி.

    ReplyDelete
  61. // K.s.s.Rajh said...
    விமர்சணம்போட்டு இந்தப்படத்தை பார்த்து நாங்கள் நொந்துபோகாதவாறு செய்த பாஸ்க்கு ஒரு ஜெய்..அண்ணனுக்கு ஜெய்...தலைவருக்கு ஜெய்..செங்கோவி பாஸ்க்கு ஜெய்.............//

    எனக்கு ஜெய் வேணாம், அஞ்சலி தான் வேணும்!

    ReplyDelete
  62. // K.s.s.Rajh said...
    விமர்சணம்போட்டு இந்தப்படத்தை பார்த்து நாங்கள் நொந்துபோகாதவாறு செய்த பாஸ்க்கு ஒரு ஜெய்..அண்ணனுக்கு ஜெய்...தலைவருக்கு ஜெய்..செங்கோவி பாஸ்க்கு ஜெய்.............//

    எனக்கு ஜெய் வேணாம், அஞ்சலி தான் வேணும்!

    ReplyDelete
  63. // மதுரன் said...
    அட.. அப்போ வெடி புஸ்ஸா... தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் //

    தம்பிரான் நாந்தானே?

    ReplyDelete
  64. // FOOD said...
    படம் ப்ளாப். விமரிசனம் டாப். //

    உங்க கமெண்ட்டும் டாப் தான் சார்.

    ReplyDelete
  65. // மருதமூரான். said...

    இவங்க நல்ல படம். வேண்டாம் ஓரளவுக்கு பார்க்கக்கூடிய படமே எடுக்கமாட்டங்களா.....?! //

    அப்படி எடுத்தா, எப்பிடி அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகுறதாம்...

    ReplyDelete
  66. // கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...
    May i know from which country u r? Athukkulla eppadinnen paathinga. //

    குவைத்.

    ReplyDelete
  67. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    o o oo vaa? //

    ஆமா ஊர்ஸ், நம்ம பூனம்கூட காப்பாத்தலை.

    ReplyDelete
  68. // சி.பி.செந்தில்குமார் said...
    அப்போ பேலன்ஸ் 2 இருக்கு, அதை நான் பார்க்கறேன் //

    வாகை சூட வா நல்லாயிருக்கும்னு தோணுது. அதைப் பாருங்க.

    ReplyDelete
  69. // இரவு வானம் said...
    அப்ப வெடி வெடிக்கலியா??? //

    இன்னுமாய்யா சந்தேகம்..

    ReplyDelete
  70. // நிரூபன் said...
    இனிய காலை வணக்கம் பாஸ்,

    நான் அப்புறமா வாரேன். //

    மாலை வணக்கம் நிரூ,

    அப்புறமா வாங்க.

    ReplyDelete
  71. Yoga.s.FR said...
    // இனிய காலை வணக்கம்! //

    வணக்கம் ஐயா.

    // ஓஹோ!"வெடி"ங்கிறது படமா? நான் என்னமோ தீவாளிக்கு பையனுக்கு வெடி வாங்கக் கடைக்குப் போயிட் டிங்கன்னு நெனைச்சேன்! //

    ஹா..ஹா...பார்த்தேன்..

    ReplyDelete
  72. Yoga.s.FR said...
    // இனிய காலை வணக்கம்! //

    வணக்கம் ஐயா.

    // ஓஹோ!"வெடி"ங்கிறது படமா? நான் என்னமோ தீவாளிக்கு பையனுக்கு வெடி வாங்கக் கடைக்குப் போயிட் டிங்கன்னு நெனைச்சேன்! //

    ஹா..ஹா...பார்த்தேன்..

    ReplyDelete
  73. // Yoga.s.FR said...
    ஏற்கனவே சத்யம், தோரணை, மலைக்கோட்டை என ஆப்பு வாங்கியபின்னும் விஷால் இப்படியொரு விஷப்பரிட்சையில் ஏன் இறங்கினார் என்று தெரியவில்லை.////விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரிப்பில் ரீமேக்கியிருக்கிறார்கள்.§§§அதனால் பப்படமானாலும் கூடப் பரவாயில்லைன்னு............................! //

    2008லயே பட ரைட்ஸை வாங்கிட்டாங்க. இப்போ என்ன செய்றதுன்னு தெரியாம எடுத்திருக்காங்க.

    ReplyDelete
  74. // மேக்கப்பு இல்லாம பாத்தா இன்னும் சகிக்க முடியாம இருக்குமோ? //

    மூக்கும், வாயும் சும்மா இருந்தா நல்லா இருக்கு. பேசுனா ஒவ்வொன்னும் ஒவ்வொரு பக்கம் போகுது..அதோட ஸ்டில்லைப் பாருங்க, என்னமா இருக்கு..ஆனா பிள்ளை வாயைத் திறந்தாத் தான்.............

    ReplyDelete
  75. // சசிகுமார் said...
    அப்ப அவுட்டா...//

    புஸ்ஸ்ஸ்!

    ReplyDelete
  76. // ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    வெடி - வெறும் புகையும் புஸ்வாணம்!!? //

    டம்டும்னு அடிக்கிற சத்தமும் உண்டு.

    ReplyDelete
  77. // சென்னை பித்தன் said...
    ஆட்டம்பாம் என்று நினைத்துப் புஸ்வாணமாப் போச்சா?! //

    நீங்க அப்படி நினைக்க மாட்டீங்களே ஐயா..

    ReplyDelete
  78. // Kannan said...
    சுமாரான படம்.......
    உங்கள் விமர்சனத்துக்கு நன்றி...//

    நன்றி.

    ReplyDelete
  79. // Benivolent said...
    உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் //

    பாராட்டுக்கு நன்றி நண்பரே. இறைவன் நாடும்வரை தொடரும்!

    ReplyDelete
  80. // Benivolent said...
    உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் //

    பாராட்டுக்கு நன்றி நண்பரே. இறைவன் நாடும்வரை தொடரும்!

    ReplyDelete
  81. // "ராஜா" said...
    ரஜினி படம் , மணிரத்னம் படம் மாதிரி பிரபு தேவா படம்னு சொல்லுற அளவுக்கு அவர் ஏதாவது படம் எடுத்திருக்காரா என்ன? //

    அவர் பட ஹீரோக்கள்கிட்ட அவரோட மேனரிசம் இருக்கும், அப்புறம் கொஞ்சம் குறும்பு இருக்கும், முக்கியமா நல்ல டான்ஸ் இருக்கும். மாஸ்டர் வேற ஆளா இருந்தாலும், பிரபுதேவா ஸ்டெப்ஸையே போட்டிருப்பாங்க. இதுல அப்படி எதுவுமே இல்லை..அதைத் தான் சொன்னேன்.

    ReplyDelete
  82. செங்கோவி said... [Reply]

    // மேக்கப்பு இல்லாம பாத்தா இன்னும் சகிக்க முடியாம இருக்குமோ? //

    மூக்கும், வாயும் சும்மா இருந்தா நல்லா இருக்கு. பேசுனா ஒவ்வொன்னும் ஒவ்வொரு பக்கம் போகுது..அதோட ஸ்டில்லைப் பாருங்க, என்னமா இருக்கு..ஆனா பிள்ளை வாயைத் திறந்தாத் தான்..........///அப்புடீன்னா,சூரியா பொண்டாட்டி(அதான்,ஜோதிகா)ஒரு பேசாத படம் நடிச்சுச்சே,அது மாதிரி படத்துக்கு தான் லாயக்கோ?

    ReplyDelete
  83. மொத்தத்துல ஆந்திரா கோங்கூரா ன்னு சொல்லுங்க..

    ReplyDelete
  84. வணக்கம் அண்ணா..

    ஆஹா.. அப்போ வெடி வெடிக்கவே இல்லையா ?? அவ்வ

    பிரபுதேவாக்கு என்னாச்சு இப்போ எல்லாம் ரெம்ப சொதப்புறாரு... அவரு வாழ்க்கையை நான் சொல்லவில்லையப்பா......

    இப்போதைய நிலையில் பிரபுக்கு பணம் அதிகம் தேவை படுத்து போல் அதனால்தான் இத்தகைய படங்களை எல்லாம் உயிரோட்டம் இன்றி பணத்துக்காய் ஒப்பந்தமாகி எடுத்து தள்ளுகிறார்.

    பார்த்து பிரபு சார் உங்களுக்கு என்று இன்னும் சினிமாவில் நல்ல பெயர் ஒட்டி இருக்கு.. ஜாக்கிரதை மக்கா

    ReplyDelete
  85. தெலுங்கு சவுரியம் இப்ப தான் பார்த்தேன். தெலுங்குல பாக்கறதுக்கு நல்லாருக்கு. இதை ரீமேக் பண்ணி விசால் நடிக்கறப்ப புஸ்வானமா தான் இருக்கும். அங்கே அனுஷ்கா அழகா இருந்தாங்க. இங்க தங்கச்சி மட்டும் தான் ஒக்கேவாக இருக்கலாம்.

    ReplyDelete
  86. ////பிரபுதேவாவின் திரைக்கதையில் அவரது டச் இருக்கும்.//////

    அப்படியா? சொல்லவே இல்ல.......

    ReplyDelete
  87. //////சமீரா ரெட்டி லாங் ஷாட்டில் மட்டும் இளமையாக, அழகாக இருக்கிறார். பாடல்காட்சிகளில் தாராளமும் உண்டு.//////

    சமீராவும் இப்போ கொஞ்சம் ஓங்குதாங்காகிட்ட மாதிரி இருக்குண்ணே.....

    ReplyDelete
  88. ////// பூனம் கவுருக்கு கதையின் முக்கியப் பாத்திரம். ஹீரோயினாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர், தங்கையாகி விட்டார். சமீரா ரெட்டியை விட பளிச்சென்று இருக்கிறார்.//////

    இது நான் ஏற்கனவே பஸ்ல போட்டு யார்னு கேட்டிருந்தேனே அந்த பிகர்தான் இது...... ஞாபகம் இருக்காண்ணே?

    ReplyDelete
  89. ///// ’இச்சுக் கொடு’ பாட்டில் மட்டுமே கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். ////////

    அந்தப்பாட்ட வெச்சுத்தானே நீங்க படம் பார்க்கனும்னே முடிவு பண்ணி இருப்பீங்க?

    ReplyDelete
  90. ////// தூத்துக்குடி தாதா, கல்கத்தாவிற்கு வருகிறார், தன் அத்தனை அடியாட்களுடன். எப்படியும் 100 பேர் இருக்கும். அத்தனை தடியர்களையும் மெயிண்டய்ன் பண்ணதிலேயே அவர் ஆண்டி ஆகியிருக்க வேண்டும்.//////

    அதானே, 100 பேருக்கு ட்ரெயின் டிக்கட்டே எங்கேயோ போவுதே? அப்புறம் தங்குறதுக்கு திங்கிறதுக்கு?

    ReplyDelete
  91. ////இன்னும் கொஞ்சம் தமிழ்ப்படுத்தியிருக்கலாம்.////

    இப்படியெல்லாம் படம் தேவையா?

    ReplyDelete
  92. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அதானே, 100 பேருக்கு ட்ரெயின் டிக்கட்டே எங்கேயோ போவுதே? அப்புறம் தங்குறதுக்கு திங்கிறதுக்கு?/////

    அத புரொடியூசர் பார்த்துகிருவாறு, நீங்க ஏண்ணே கவலை படுறீங்க?

    ReplyDelete
  93. ///பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

    ////பிரபுதேவாவின் திரைக்கதையில் அவரது டச் இருக்கும்.//////

    அப்படியா? சொல்லவே இல்ல...//

    அதுதானே.. நயன்தாரா மேட்டர்ல மட்டும்தான் அவரு டச் இருந்துச்சு!!! வில்லு, எங்கேயும் காதல்ன்னு சொந்தமா எடுத்த எல்லா படமும் மொக்க திரைகதைதான்....
    போக்கிரி அச்சு அசல் தெலுகு திரைக்கதைய அப்புடியே ஹிந்திக்கும் தமிழுக்கும் கொடுத்தாரு.... அந்த சம்திங் படம் மட்டும்தான் உருப்படின்னு நம்ம Dr.Butti Paul சொல்லுவாரு!!

    ReplyDelete
  94. செங்கோவி said..........2008லயே பட ரைட்ஸை வாங்கிட்டாங்க.இப்போ என்ன செய்றதுன்னு தெரியாம எடுத்திருக்காங்க.///சூட்டோட சூடா டப்பியிருந்தா தேறியிருக்குமோ,என்னமோ?

    ReplyDelete
  95. மீண்டும் வணக்கம் பாஸ்,,

    ஆந்திர புஸ்வானம் பற்றிய வித்தியாசமான அலசலைத் தந்திருக்கிறீங்க.

    எல்லோரும் ஆகா, வெடி ஓகோ என்று எழுதும் போது நீங்கள் நடு நிலமையுடன் விமர்சித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  96. மசால படங்களுக்கு இன்னும் கடுமையான எதிர்ப்பு விமர்சணம் தேவை.,.,

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.