அருமை அண்ணன் செல்வராகவனும் தங்கத் தம்பி தனுஷும் இணையும் மூன்றாவது(4வதும்) படம் என்பதாலும், செல்வராகவன் மீண்டும் ’பாலியல் வறட்சி’ மேட்டரை கையில் எடுத்திருப்பதாலும் ஏற்கனவே பாடல்கள் சூப்பர் ஹிட் என்பதாலும் படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால்....................அவ்வ்!
முதல்ல கதையைச் சொல்ல முயற்சி பண்றேன்..
இது தமிழ்சினிமாவுலேயே வராத கதைன்னு தைரியமாச் சொல்லலாம்..தனுஷும் அவர் தங்கச்சியும் அப்பா-அம்மா இல்லாதவங்க..ஃப்ரெண்ட்ஸ் சப்போர்ட்ல ‘வாழ்றாங்க’..பீர் தான், சிக்கன் பிரியாணி தான்..நல்ல வாழ்வு..சுந்தர்ங்கிற மாக்கான் தான் க்ளோஸ் ஃப்ரெண்டு..அவர் அப்பாவும் ஒன்னா தண்ணி அடிக்கிற அளவுக்கு நல்லா பழகுறாரு..அந்த மாக்கான் ஃப்ரெண்டு ஒரு ஃபிகரை கூட்டிக்கிட்டு வந்து ‘இது நான் லவ் பண்ற பொண்ணு..லவ்வுக்கு ஒத்துக்கலை..டேட்டிங்குக்கு மட்டும் தான் ஒத்துக்கிச்சுன்னு சொல்றாரு..ஃப்ரெண்ட்ஸும் ரொம்ப நல்ல பொண்ணு-னு அதை குரூப்ல சேர்த்துக்கறாங்க.(குரூப்ல பொண்ணுங்களும் உண்டு).
அப்புறம் பீர், விஸ்கின்னு நல்லா பழகுறாங்க..அந்தப் பொண்ணுக்கும் தனுஷுக்கும் ஒத்துக்கலை..முட்டிக்குது..மோதல் என்ன ஆகும்?..அப்புறம் தான் ஆடியன்சுக்கே தெரியுது, அது தான் ஹீரோயின்னு..ஏன்னா அதுவரைக்கும் மாக்கான் நண்பன் தான் அதை தடவுறாரு..(இதான் கலாச்சார அதிர்ச்சியோ...)
நண்பன் காதலியை லவட்டலாமா? நம்ம கலாச்சாரம் என்ன, பண்பாடு என்ன?-ன்னு தனுஷ்க்கு ஃபீலிங். கூடவே லவ் ஃபீலிங்கும். பொண்ணும் மாக்கான்கிட்ட தெளிவா மேட்டரைச் சொல்லாம அவன் காசுலேயே ஊர் ஊராச் சுத்தி தண்ணி அடிச்சுக்கிட்டே, லுக் விட்டுக்கிட்டே தனுஷை லவ் பண்ணுது..ஒரு 'அரை சீன் படம்' ரேஞ்சுக்கு இந்தக் கதை ஒரு பக்கம் போகும்போதே, மெயின் கதை(?) இன்னொரு பக்கம் ஓடுது..(கதை மட்டும் தான் அப்படி..சீனும் இல்லை!!)
அது என்னன்னா, தனுஷ் ஒரு ஃபோட்டோகிராஃபர்..புகழ்பெற்ற ஃபோட்டோகிராஃபரான ஒரு பெருசை (பேர் மறந்திடுச்சு..) ரோல் மாடலா நினைச்சு அவர் கிட்ட அசிஸ்டெண்டா சேர முயற்சி பண்றாரு..நேஷனல் ஜாக்ரஃபி, டிஸ்கவரில நம்ம ஃபோட்டோவும் வரணும்னு ஆசைப் படுறாரு..அந்த பெருசு ‘போய் பறவைகளை ஃபோட்டோ எடுத்துக் காட்டு..அதைப் பார்த்துட்டு முடிவு சொல்றேன்னு தனுஷ்கிட்டச் சொல்ல, நம்மாளும் சூப்பரா படம் எடுத்துக்கொடுத்தா, அந்தப் பெருசு அதை தன்னோட படம்னு சொல்லி ரிலீஸ் பண்ணிடுது..அந்தப் படம் என்னமோ ஒரு பெரிய பரிசையும் வாங்கிடுது..
என்னென்னமோ நடக்குதே..அப்போ கண்டிப்பா என்னமாவது நடக்கும்னு நாம நிமிர்ந்து உட்காருதோம்..கூடவே ஒரு சந்தோசம், செல்வராகவன் வக்கிரம் இல்லாம படத்தைக் கொண்டு போறாரேன்னு..அப்படில்லாம் விட்டுடுவாரா...
தனுஷும் ஹீரோயின் ரிச்சா கங்கோபாத்தியாயா (என்னா பேரு!)-வும் ஒரு சீன்ல..ச்சே..ச்சே..சீன் இல்லீங்க..ஒரு காட்சில உணர்ச்சி வசப்பட்டு டபக்குன்னு கட்டிப்பிடிக்கிறதை மாக்கான் நண்பன் பார்த்துடுறாரு...சின்ன சண்டை, நீயெல்லாம் நண்பனா டயலாக்ஸ் பேசிட்டு தனுஷ் ரிச்சாவைக் கட்டிக்கிடறாரு..மாக்கான் நண்பன், தனுஷோட தங்கச்சியை கட்டிக்கிடறாரு..(ஆமாம்யா..இதுக்கே அதிர்ச்சியானா எப்படி?)...
இப்போ தனுஷ் ஃபோட்டோவைக் காட்டி பெருசு பெரிய விருது வாங்குச்சா..அதை பேப்பர்ல பார்க்கிற தனுஷ், பால்கனில இருந்து தலைசுத்தி கீழ விழுந்து மண்டை சிதறுது..
மூன்று வருடங்களுக்குப் பிறகு...(அப்படித் தான் போட்டாங்க..)......
தனுஷ் மெண்டல் ஆகிடுதாரு..பொண்டாட்டியை (அதான்யா, ஹீரோயினை) போட்டு அடிக்காரு..(அய்யோ..) கேர்ல் ஃப்ரெண்ட் கல்யாண ரிசப்சன்ல மாப்பிளை மண்டையை உடைக்காரு..(அய்யய்யோ)..
தனுஷ் ஃப்ரெண்ட்ல ஒருத்தர் ஹீரோயினுக்கு ஆறுதல் சொல்றேன்னுட்டு அப்படியே இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்து ‘உன்னை நான் வச்சிக்கிறேன்’-ங்கிறதை டீசண்டா சொல்றாரு..(இப்போ அய்யய்யோவை வாய் விட்டே சொல்லலாம்..)..அய்யய்யோ...படம் பார்க்க வந்ததுக்கு இன்னும் என்னென்ன கண்றாவியெல்லாம் பார்க்கணுமோன்னு பதறுனோம்..
ஆனா அந்தப் பொண்ணு பத்தினி..”டேய், எவ்னோ டேட்டிங் வான்னு கூப்பிட்டதும் நடுராத்தில அவன் பின்னாடியே வந்தவ தாண்டா நான்..அவன் காசுலேயே பீர் அடிச்சு,அவன் ஃப்ரெண்ட்டையே கரெக்ட் பண்ணவ தாண்டா..அதுக்காக என் புருசனை விட்டுக்கொடுப்பேன்னு நினைச்சுடாதே..”-ன்னு (பயப்படாதீங்க..இது என் டயலாக் தான்..அது இதையே வேற மாதிரி டீசண்டா) சொல்லிடுது. அந்த நல்ல நண்பனும் ‘சாரி’ன்னு சொல்ல இதுவும் ‘ஓகே..இதை நீயும் மறந்திடு, நானும் மறந்திடுவேன்..நீ எப்பவும்போல அடிக்கடி என் வீட்டுக்கு வா(!!)’ன்னு சொல்லிடுது..
அடுத்து.....................மாசமா இருக்கிற ஹீரோயின் வயித்துல மெண்டலா திரியற தனுஷ் ஒரே மிதி..கரு ரத்தமா போகுது...தரையெல்லாம் ரத்தம்..அய்யோ, அம்மா-ன்னு ஹீரோயின்கூடச் சேர்ந்து ஆடியன்சும் கத்துறாங்க.. கதறுதாங்க..அந்தம்மா உடம்பு சரியாகி வீட்டுக்கு வருது..தனுஷ் அந்த ரத்தத்துக்குப் பக்கத்துலேயே படுத்திருக்காரு..அது வாளி நிறைய தண்ணியும், ப்ரெஷும் எடுத்து தேய் தேய்னு தேய்ச்சுக் கழுவிக்கிட்டே 10 நிமிசம் பேசி அழறாங்க..சாப்பிட்டுப் போன நமக்கு குடலைப் புரட்டிடுச்சு..உஸ்ஸ்ஸ்...
இவ்ளோ விஷயம் நடக்குன்னா செல்வராகவன் என்னமோ சொல்ல வர்றாரு...என்னவா இருக்கும்-னு யோசிக்கிட்டே கண்டினியூ பண்ணா..
அடடே..என்ன ஆச்சரியம்..தனுஷ் திடீர்னு தெளிவாகிடுதாரு..அவர் ஃபோட்டோ குமுதம் அட்டைல வந்து, அப்படியே உலகம் பூரா சுத்தி, அந்த பெருசை விட பெரிய ஃபோட்டோகிராஃபர் ஆகி ஆஸ்கார் மாதிரி பெரிய பரிசை ஜெர்மன் போய் வாங்கிடுதாரு..
அப்புறம் தான் நாங்க எதிர்பார்த்த முக்கியமான விஷயமே வந்துச்சு..ஆமாங்க..படம் முடிஞ்சுடுச்சு!
எப்பவும் நான் படத்தோட கதையை விமர்சனத்துல சொல்றதில்லை..ஆனா எவ்வளவு யோசிச்சும், இந்தப் படத்தோட கதை என்ன, என்ன தான் சொல்ல வந்தாங்கன்னு புரியாததால, பார்த்ததை அப்படியே எழுதி இருக்கேன்..உங்களுக்காவது ஏதாவது புரிஞ்சா சொல்லுங்க..
படத்துல நல்ல விஷயம்னா பாடல்கள் தான்..ஜி.வி.பிரகாஷ் அருமையா டியூன் போட்டிருக்கார்..பிண்ணனி இசையும் நல்லா இருந்துச்சு..குறிப்பா ‘வெண்ணிலவே’ பாட்டுக்கு குடிச்சுட்டு மாக்கான் - ரிச்சா - தனுஷ் ஆடி முடிக்கவும் வந்த பிண்ணனி இசை.
அடுத்து ராம்ஜியின் ஒளிப்பதிவு..படமே ஃபோட்டோகிராஃப்ர் பத்தின படம் என்பதால் கேரளா-கர்நாடகான்னு அழகான லொகேசனா தேடி எடுத்திருக்காங்க..
தனுஷ் நல்ல நடிப்பு தான்..அண்ணன் படம் என்பதால் அடக்கியே வாசிச்சிருக்காரு..
ஹீரோயின் ரிச்சா முதல்ல பார்க்கும்போது சாதாரணமா தெரிஞ்சது..போகப்போக ‘நல்ல ஃபிகரா’ தெரிய ஆரம்பிச்சுடுச்சு..நல்லா முகத்துல எக்ஸ்பிரசன்ஸ் காட்டுது..அழகான கண்கள்..அகலமான முதுகுன்னு நல்லவொரு அறிமுகம்.
‘இது அடுத்த தலைமுறைக்கான படம்’னு செல்வராகவன் சொன்னாரு..அப்பவே உஷார் ஆகியிருக்கணும்..அம்பது வருசம் கழிச்சு பார்க்கவேண்டிய படத்தை அவசரப்பட்டு, இப்பவே பார்த்துட்டேன்..
வேற என்ன சொல்ல..........?
சூப்பர் பாஸ்ட்
ReplyDelete‘இது அடுத்த தலைமுறைக்கான படம்’னு செல்வராகவன் சொன்னாரு..அப்பவே உஷார் ஆகியிருக்கணும் - y blood... same blood :(
ReplyDeleteஇது பயங்கரமான படம் போல இருக்கே..
ReplyDeleteஎல்லா பயலுகளும் நித்திரை போல
ReplyDeleteமாம்ஸ், இது கில்மா படமா? ஆக்சன் படமா? சென்டிமென்ட் படமா? தெளிவா சொல்லுங்க.. எதுக்கு வீணா எட்டு பவுனை செலவழிப்பான்
ReplyDeleteசெங்கோவி எப்பவுமே படத்தை பார்க்க வச்சிருவாரு !
ReplyDeleteஅப்படி ஒரு விமர்சனம் !
பார்த்ததை அப்படியே எழுதுவதைச் சொன்னேன்...
குட் போஸ்ட் !
அப்ப அடுத்த நடுநிசி நாய்களா? செல்வா நல்ல இயக்குனர்தான்... துள்ளுவதோ இளைமையே கத்தி மேல நடக்குற கதை.. ஆனா கரெக்ட்டா நடந்தாரு.. ஆனா சில சமயம் இயக்குனரின் அடி மன வக்கிரங்கள் எல்லாம் மக்களோட ஒன்றாம போகும்போது இப்படி பட்ட படைப்புகள்தான் வரும்! கர்ப்பிணிய எட்டி உதைச்சு ரத்தம் வழிய காமிக்கிரதெல்லாம் இன்னும் எத்தன தமிழ் படத்துல காமிக்க போறாங்களோ? ஒரு வேளை சோனியாவ பிரியாம இருந்து ஒரு குழந்தை பிறந்திருந்தா இந்த மாதிரியெல்லாம் தோனியிருக்காதோ? :-)
ReplyDeleteதனுஸ் செல்வராகவன் கூட்டணில வந்த பழய படங்களை மிக்ஸ் பண்ணி கொஞ்சம் கூட கில்மா சேர்த்து மொக்கையா படம் பண்ணியிருக்கார் போல இதுஎல்லாம் ரசிகர்களின் தலைவிதி
ReplyDeleteதனுசை உருவாக்கிய செல்வராகவனே தனுஸ் மார்கெட்டை காலிபண்ணிடுவார் போல....
அப்படின்னா,
ReplyDeleteஹீரோயின் ரிச்சாவுக்காக ஒரு வாட்டி பாக்கலாம்னு சொல்லுங்க.
(படம்-னு (ரீல்) சொன்னப்புறமும் “கதை”யை எதுக்கு தேடுறீங்க பாஸ்?
அப்போ படம் ப்ளாப்பு ங்களா
ReplyDelete>>‘இது அடுத்த தலைமுறைக்கான படம்’னு செல்வராகவன் சொன்னாரு..அப்பவே உஷார் ஆகியிருக்கணும்..அம்பது வருசம் கழிச்சு பார்க்கவேண்டிய படத்தை அவசரப்பட்டு, இப்பவே பார்த்துட்டேன்.
ReplyDeleteayyayyoo அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ரொம்ப எதிர்பார்த்து புஸ்ஸுனு ஆகிடுச்சோ?
ReplyDeleteசெல்வராகவன் திருந்த வாய்ப்பே இல்லை போல.
ReplyDeleteதிரை விமர்சனத்தில ஒரு புது பாணியையே உருவாக்கீட்டீங்க! எங்க எங்க அப்பிடி சவுண்ட் குடுக்கணும்னு...சே சான்சே இல்லண்ணே! ஒவ்வொருத்தனும் இத படிச்சிட்டுத்தான் படம் பாக்க போகணும்! :-)
ReplyDeleteஅப்போ தனுஷ் மனநிலை சரியில்லாம இருந்த காலத்தைத்தான் - 'மயக்கம் என்ன' ன்னு டைட்டில் சொல்லுதா?
செல்வராகவனுக்கு யாராவது மெண்டல் ஆக்கலேன படம் எடுத்த பீலே வர மாட்டேன்குதாம் .... படத்துலயும் மெண்டல் , படம் பார்குற நாமும் மெண்டல்..............
ReplyDelete”டேய், எவ்னோ டேட்டிங் வான்னு கூப்பிட்டதும் நடுராத்தில அவன் பின்னாடியே வந்தவ தாண்டா நான்..அவன் காசுலேயே பீர் அடிச்சு,அவன் ஃப்ரெண்ட்டையே கரெக்ட் பண்ணவ தாண்டா..அதுக்காக என் புருசனை விட்டுக்கொடுப்பேன்னு நினைச்சுடாதே.."
ReplyDeleteஎன்ன சூப்பரா வசனம் எழுதறிங்க .. பேசாம நீங்க கூட கதை திரைகதை வசனம் எழுதலாம் போல .. நீங்களே டைரக்டர் நீங்களே ஹீரோ ஹீரோயின் தயாரிப்பாளர் எல்லாம் நீங்களே
ஆனா ஒண்ணு செல்வராகவன் வரலாற்றுப் படம் எடுக்கப்போறதா படுத்தாம இப்பிடி ஏதாவது எடுத்தா பரவாயில்லை!
ReplyDelete//‘இது நான் லவ் பண்ற பொண்ணு..லவ்வுக்கு ஒத்துக்கலை..டேட்டிங்குக்கு மட்டும் தான் ஒத்துக்கிச்சுன்னு சொல்றாரு..ஃப்ரெண்ட்ஸும் ரொம்ப நல்ல பொண்ணு-னு அதை குரூப்ல சேர்த்துக்கறாங்க//
சூப்பர் மேட்டர்ணே! பொண்ணுங்கன்னா இப்பிடி இருக்கணும்...நாங்களும் தான் இருக்கோம் எப்பப்பாரு பசங்களோடயே தண்ணியடிச்சுட்டு! :-)
நல்ல வேலை என்னை காப்பாத்திட்டீங்க. இன்னிக்கு பார்க்க நினைச்சேன். இந்த கருமாந்திரம் பிடிச்ச கதை படிச்ச பிறகு ஓசியில் கூட்டிட்டு போனா கூட போக மாட்டேன்
ReplyDelete//”டேய், எவ்னோ டேட்டிங் வான்னு கூப்பிட்டதும் நடுராத்தில அவன் பின்னாடியே வந்தவ தாண்டா நான்..அவன் காசுலேயே பீர் அடிச்சு,அவன் ஃப்ரெண்ட்டையே கரெக்ட் பண்ணவ தாண்டா..அதுக்காக என் புருசனை விட்டுக்கொடுப்பேன்னு நினைச்சுடாதே..”//
ReplyDeleteஎன்னா வசனம்ணே! இத செல்வராகவன் பார்த்தா அடுத்தபடத்துக்கு நீங்கதான் வசனம்!
எது எப்பிடியோ, அண்ணே நான் எடுக்கப்போற உலக சினிமாவுக்கு நீங்கதான் வசனம் சரியா? :-)
//அந்த நல்ல நண்பனும் ‘சாரி’ன்னு சொல்ல இதுவும் ‘ஓகே..இதை நீயும் மறந்திடு, நானும் மறந்திடுவேன்..நீ எப்பவும்போல அடிக்கடி என் வீட்டுக்கு வா(!!)’ன்னு சொல்லிடுது..//
ReplyDeleteபாருங்க..இது டீலு! இதான் படிச்ச புள்ளங்கிறது!
//அழகான கண்கள்..அகலமான முதுகுன்னு நல்லவொரு அறிமுகம்//
ReplyDeleteஇங்க பார்றா!
இது புதுசால்ல இருக்கு!
அண்ணன் ஏதோ காத்திரமான கருத்து சொல்ல வர்றார்! ஆனா என்னான்னுதான் புரியல! :-)
படம் சூப்பரா இருக்கும் போலிருக்கு! :-)
ReplyDeleteநல்லா இல்லேன்னா அப்புறம் யூத் இல்லேன்னு சொல்லிடுவாய்ங்க! ஏன்னா இளைஞர்களின் நாடித்துடிப்பு அறிந்து படமெடுப்பவராம் செல்வா - சொல்றாய்ங்க!
அதுக்குள்ள படம் பார்த்தாச்சா????
ReplyDeleteரொம்ம்ம்ம்ப ஆர்வமா பார்க்க போயிருப்பீங்க போலயே..
//எப்பவும் நான் படத்தோட கதையை விமர்சனத்துல சொல்றதில்லை..ஆனா எவ்வளவு யோசிச்சும், இந்தப் படத்தோட கதை என்ன, என்ன தான் சொல்ல வந்தாங்கன்னு புரியாததால, பார்த்ததை அப்படியே எழுதி இருக்கேன்..உங்களுக்காவது ஏதாவது புரிஞ்சா சொல்லுங்க..//
ReplyDeleteவிமர்சனமே படத்தைப் பார்க்க தூண்டுது.. (!!!!!)
படம் பார்த்துட்டு (!!!!) தெரிஞ்சா சொல்றேன்.
Jokes apart..
ReplyDeleteஉங்க ஆதங்கம் புரியுது..
ரொம்ப எதிர்பார்க்கப்பட்ற படங்கள் அவ்வளவாக அதை பூர்த்தி செய்வதில்லை..
வேற என்னத்த சொல்றது???
என்ன எழவு கதைய்யா இது?
ReplyDeleteஅப்ப அவ்வ்வ்வ்வ் வா?
ReplyDelete//""இது அடுத்த தலைமுறைக்கான படம்’னு செல்வராகவன் சொன்னாரு..அப்பவே உஷார் ஆகியிருக்கணும்..அம்பது வருசம் கழிச்சு பார்க்கவேண்டிய படத்தை அவசரப்பட்டு, இப்பவே பார்த்துட்டேன்""..//தல சுத்துது தலைவா ....இப்புடி ஒரு படமா ????????http://rmy-batcha.blogspot.com
ReplyDeleteகாலை வணக்கம்,பொன் ஜூர்!அருமையான விமர்சனம்?!ஐஞ்சாப்பு(ஐந்தாம் வகுப்பு)படிக்கிற பையன் மாதிரி அப்புடியே பாத்தத?எழுதியிருக்கீங்க!என்னத்தச் சொல்லுறது,ஹும் கலிகாலம்!அடுத்த தல முறையில இப்புடி நடக்கும்னு முனிவர்(செல்வராகவன்)சொல்லுறாரு!தப்பிச்சா,சோனியா!!!!!!!
ReplyDeleteஅதுக்குள்ள பாத்தாச்சா?!
ReplyDelete//அம்பது வருசம் கழிச்சு பார்க்கவேண்டிய படத்தை அவசரப்பட்டு, இப்பவே பார்த்துட்டேன்..//
ரொம்ப அவசரம்தான்!
விமர்சனத்தையே படிக்க முடியலியே.... அப்புறம் எப்படி படத்தைப்பார்க்கறது... நீங்க தெய்வம் பாஸ்... எங்கள காப்பாத்துன தெய்வம்...
ReplyDeleteஇது கேவலமா பயங்கர படமா இருக்கும்னு நெனச்சேன், பயங்கர கேவலமான படம் போல இருக்கே. நன்றி, எங்களை எல்லாம் படம் பாக்காம வைத்ததற்கு! ரொம்ப நல்ல விமர்சனம், ஆனா கதை தான் புரியல.amas32
ReplyDeleteஇதெல்லாம் ஒரு படமா நண்பா? படிக்கும்போதே கன்றாவியா இருக்கே, பார்த்த உங்களுக்கு எப்படி இருக்கும்?
ReplyDeleteவணக்கம் மாப்பிள!
ReplyDeleteசொந்தமா வசனம் எழுதித்தான் படத்த விமர்சனம் செய்ய வேண்டிய நிலமை ஆச்சு உங்களுக்கு..!!!))
காப்பத்திட்ட அண்ணே காப்பத்திட்ட
ReplyDeleteஎக்ஸ்பிரஸ் விமர்சனம்
ReplyDeleteஎதோ புரிஞ்ச மாதிரி இருக்கு ஆனா புரியாத மாதிரியும் இருக்கு..
hahaha.. super vimarsanam..
ReplyDeleteஎன்ன பாஸ் யாருமே படத்த பற்றி நல்லவிதமா சொல்லவில்ல. அவ்வளவு சொதப்பலாவா இருக்கு
ReplyDeleteஒரு நல்ல படத்துக்கு எவ்வளவு மோசமா விமர்சனம் பண்ண முடியும்னு உங்க பதிவ பாத்து தெரிஞ்சுகிட்டேன்..
ReplyDeleteபாஸ் தனுஷ் அவர் மனைவிய ஏறி மிதிச்சாரா!! வேற கடுப்புல புடிச்சு தள்ளி தான விட்டாரு, அதுவும் அவுங்க கர்ப்பமா இருக்காங்கன்னு தெரியாம!!
உண்மையா சொல்லுங்க படம் அவ்ளோ கேவலமாவா இருந்தது!!
அப்பா இது அடுத்த குப்பையா
ReplyDeleteஉண்மையிலேயே படம் நல்லாத்தான் இருந்துச்சு... படத்தோட நெகடிவ் மட்டும் பாத்துருகீங்கனு தெரியுது... ஒரு நல்ல விஷயம் கூடவா படத்துல தெரியல? நடுநிலமையற்ற விமர்சனம்..
ReplyDeleteஇது அடுத்த தலைமுறைக்கான படம்’னு செல்வராகவன் சொன்னாரு..அப்பவே உஷார் ஆகியிருக்கணும்..அம்பது வருசம் கழிச்சு பார்க்கவேண்டிய படத்தை அவசரப்பட்டு, இப்பவே பார்த்துட்டேன்..
ReplyDeletepadama da athu karumam
ReplyDeleteஎன்னாது ஒரே மிக்ஸ்ட் ரீவிவ்ஸா வருது ? சில பேர் நல்ல என்டர்டேய்னர்ன்னு சொல்றாங்க.. நீங்க இப்புடி சொல்றீங்க!! எதுக்கும் பார்த்துட்டே முடிவு எடுப்போம் தல!!
ReplyDeleteதனுஷ் நடிப்புக்காக ஒரு வாட்டியாவது பார்க்கனும்!!!!!
விமர்சனத்த படிச்சேன்க்ரேக்கா மாறிட்டேன்ஜோக்கர் ஆயிட்டேன்எவண்டா படத்த எடுத்தவன்...அடிடா அவன உதைதா அவன விட்ரா அவன...தேவையே இல்ல
ReplyDeleteஇது என்ன கதை இப்படியிருக்கு???
ReplyDeleteமயக்கம் என்ன ஒலக சினிமான்னு விமர்சனம் எழுதல !புண்ணியமா போகும்!மெண்டல் ஒன்றை கண்ணன் செல்வா ராகவன் படம் பார்த்து செம தல வலி!அடுத்த தலைமுறை தலை வெடித்து சாகும்!
ReplyDeleteபடமா இது?ஒன்றை கண்ணு செல்வா ராகவன் படத்துல எவனாவது ஒருத்தன் மெண்டலா இருப்பான்!போங்கடா கொசு எலும்பன் தனுசு!
ReplyDeleteநடுநிலமையற்ற விமர்சனம்..///
ReplyDelete.
.
கொசு தனுசு வீட்டுல புலிக்கு **** போட ஆள் வேணுமாம் நீ போ!
கொசுப்பய தனுசுக்கும் ஒன்றை கண்ணன் செல்வா ராகவனுக்கும் ஏன்தான் மக்கள் இப்படி பித்து புடிச்சி அலையுரான்களோ!படமா எடுக்குராணுவ?
ReplyDeleteதனுசின் பொறுக்கி கதாபாத்திரங்களும் கொலைவெறி பாட்டை பிரபலமடைய வைத்த ஏமாற்று வித்தையும்
ReplyDeletehttp://gnani.net.in/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/?cat=8
"அழகான கண்கள்..அகலமான முதுகுன்னு நல்லவொரு அறிமுகம்" இங்கே நிற்கிறீர்கள் செங்கோவி.. அருமை..:)
ReplyDeleteசெங்கோவிக்கு வயசு என்ன...?
ReplyDeleteஒரு அம்பது அறுபது இருக்குமா..?
நீங்க என்ன மசாலா எதிர் பார்த்து போனிங்க படத்துக்கு,...?
எல்லாரும் உத்தமன் மாதிரியே பேசுறீங்களே ... எப்புடி ..... ஒரு வேளை ஏதும் சான்ஸ் கெடைக்காம ஏக்கத்துல பேசுரீன்களோ......
ReplyDeleteதனுசு பற்றி நான் சொன்னபோது ஆட்சேபித்தவர்கள் இதை படிக்கவும்!தனுசு படங்களும் அழுகிய சமூகமும் (நன்றி ஞானி)
ReplyDeletehttp://vadakkupatti.blogspot.com/2011/11/blog-post.html
This comment has been removed by the author.
ReplyDeleteநல்ல நக்கலான விமர்சனம் ... முதல் பாதி ஒ.கே .. இண்டர்வளுக்கு அப்புறம் தான் உக்கார முடியல ... என் மயக்கம் என்ன - அரை மயக்கம் ...விமர்சனத்தை பாத்துட்டு உங்க கறுத்த சொல்லுங்க ...http://pesalamblogalam.blogspot.com/2011/11/blog-post_26.html
ReplyDeleteஅண்ணே விமர்சனம் உங்க வயசை காட்டிக்கொடுத்துட்டுது..... ஹீ ஹீ
ReplyDeleteநான் அடுத்து இயக்குப்போகும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எனது தந்தையே தயாரிக்கிறார்.
ReplyDelete”மயக்கம் என்ன” நாலு நாள் கூட போகாதுன்னு தெரிஞ்சுதான் படம் வர்றதுக்கு முன்னரே செல்வராகவன் கையை தூக்கிட்டாரா?. ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தை சோழர்கள் கதை, ஆண்ட்ரியா-ரீமாசென் கதை என்று குழப்பினார். இரண்டாம் பாகத்தில் யாரை குழப்ப போகிறாரோ?
ஏங்க சார் உங்களுக்கு நல்ல கதையம்சத்துடன் உள்ள படமே எடுக்க தெரியாதா? உதிரிபூக்கள், முதல்மரியாதை போன்ற படங்களை தயவு செய்து 100 முறைக்கு மேல் பார்க்கவும்.
விமர்சனங்களை கோப்பி பண்ணி விமர்சனம் போடுறேயப்பா.........மாறுபட்ட, தரமான சினிமா....மயக்கம் என்ன - நிச்சயமாக உங்களை மயக்கும் ( நீங்கள் மாற்று சினிமாவை விரும்பினால் )
ReplyDeleteவிக்ரமன் படத்தில் ஹீரோ ஒரு பாடலில் பணக்காரன் ஆவது போல இந்த படத்தில் தனுஷ் பின்னணி இசையில் சர்வதேச விருதை பெறுகிறார்///
ReplyDelete.
.
ஹீய்யி!!!எல்லாரும் கைதட்டுங்க!இதான் ஒலக சினிமா!
சத்தியமா தமிழ் ரசிகர்களுக்கு இன்னும் நூறு வேலாயுதம், நூறு சிங்கம், நூறு சிறுத்தை, நூறு காஞ்சனா வந்தாலும் படம் மெகா ஹிட்-தான்.
ReplyDeleteஆனா இந்த (மயக்கம் என்ன) மாதிரி சில படமெல்லாம் எதுக்குத்தான் எடுக்குறாங்கன்னு புரியாத தமிழ் சமூகமே (pls) கொஞ்சம் தள்ளி நில்லுங்க இது எங்க மாதிரி கொஞ்சம் நல்ல படம் பாக்குறவங்களுக்கு...........
ReplyDeleteபடம் பார்க்க வரும் மாக்கான்கள் கண்டிப்பாக மயக்கதொடுதான் வெளியே வருவார்கள் என்ற தெளிவோடுதான் டைட்டில் வைத்துள்ளார் டைரக்டர்....
ReplyDeleteஇந்த படத்தை தனுஷின் மாமனார் இல்லை அவரை படைத்த ஆண்டவனே பாராட்டினாலும் தேத்த முடியாதுடோய் .........
அடடே இங்க பாருடா இன்னொரு பெருசு.....தமிழ் சினிமாவ தூக்கி நிறுத்த.... "வடக்கு பட்டி உன்னைத்தான் சொல்றேன்..."
ReplyDelete@வடக்குபட்டி ராம்சாமி அடேய் அவசரத்துக்கு ஒரு கெட்ட வார்த்த வரமாட்டுது....டோங்ரி தலையா...உன்ன....யாருயா இங்க கூப்ட்டா..?
ReplyDeleteSengovi,
ReplyDeleteI am not saw this film but i read yr command on that day.My friend took his wife to this film now they are in divorse ( summa damasuku)he cried than u his wife dried than my friend .Selva ragavan oru directoraa avarooda hero eppovum mental mathiri erupan ( avarai mathiri)