இந்தியா செல்வதற்காக சென்ற மாதம் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டிருந்த பொழுது, என் பையன் என்ன நடக்கிறதென்று புரியாமல் விழித்தபடி அமர்ந்திருந்தான். ‘ஊருக்குப் போறோம்யா’ என்று சொன்னாலும் புரிந்த மாதிரித் தெரியவில்லை.
ஏர்போர்ட் கிளம்பும்போதும் வழக்கம்போல் பர்ச்சேஸ் செய்யத்தான் கிளம்புகிறோம்’ என்று நினைத்துக்கொண்டே கிளம்பினான். ஏர்போர்ட்டில் எல்லா ஃபார்மாலிட்டீஸ்களையும் முடித்துவிட்டு, ஃப்ளைட் ஏற்றியபோதும் சந்தோசமாக ‘ஏதோ பெரிய்ய கார்’ என்ற நினைப்பில் ஏறிக்கொண்டான்.
எப்போதும் என் மகனிடம் / குழந்தைகளிடம் என்னை ஆச்சரியப்படுத்தும் விஷயம், பெற்றோர் மேல் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. சைக்கிளில் ஏறணுமா?..சரி!........பைக்கிலா?..ஓகே!.......காரிலா? ஓகே...ஃப்ளைட்/கப்பல்.ட்ரெய்ன் என எதில் ஏற்றினாலும் பெற்றோரில் ஒருவர் இருந்தாலும் போதும், சந்தோசமாகக் கிளம்பி விடுகிறார்கள். வேறு யாராவது ‘வா..காரில் போவோம்’ என்றால் போவதேயில்லை.
ஃப்ளைட்டில் அவனது சந்தோசக் குதியாட்டத்தை ரசித்தபடியே, அவன் எங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ‘இவர்கள் ஒரு போதும் எவ்விதக் கெடுதலும் செய்துவிட மாட்டார்கள்’ என்ற தீவிர நம்பிக்கை குழந்தைகளுக்கு எங்கிருந்து வந்து சேர்கிறது..நானும் இப்படித் தான் நம்பி இருந்திருப்பேனா?’ என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
ஆனாலும் பையன் கொஞ்ச நேரத்தில் டல்லாகி உட்கார்ந்து தூங்கியேவிட்டான். ’ஏன்..இப்படி?’ என்று சுற்றும் முற்றும் பார்த்தால்......அடப்பாவிகளா.............ஏர்ஹோஸ்டஸாக ஒரு பெண்கூட இல்லை..எல்லாம் ஆம்பிளைங்க..ஏர் இண்டியால போனாக்கூட ரெண்டு ஆண்டிங்க+ரெண்டு பாட்டிங்க வந்திருக்குமே..என்ன கொடுமை இது..இப்படி இருந்தா, பையன் டல் ஆகாம என்ன செய்வான்? ‘என்று நினைத்துக்கொண்டே நானும் டல்லாகி தூங்கிவிட்டேன்!
நகரத்துக் குழந்தைகளின் அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை ஜெயிலுக்கு ஒப்பானது. செம்மண்ணில் உருண்டு புரளாமல், காட்டில் மாங்காய்/நுங்கு திருடாமல் என்ன வாழ்க்கை இது ‘என்றே வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் என் பையனைப் பார்க்கும்போது தோன்றும். எனவே இந்த லீவில் கிராமத்து வீட்டில் தங்குவது என்றும் நன்றாக ஒரு மாதம் விளையாட விட வேண்டும் என்றும் முடிவு செய்தோம்.
திருவனந்த புரத்தில் இறங்கி, கேரளா-தென்மலை வழியாக ராஜபாளையம் பயணமானோம். வழியெங்கும் பச்சைப் பசேல் என மலைகளும் மரங்களும். என் மகனுக்கு அதைப் பார்த்து குஷி தாங்கவில்லை. “அப்பா..உஷு..அப்பா இஷு..இங்க..அங்க...” என்று மரங்களைக் காட்டிச் சொல்லிக்கொண்டே வந்தான்.
மாமனார் ஊரில் நான்கு நாள் ரெஸ்ட் எடுத்துவிட்டு, பல உயிர்களுக்கு நிரந்தர ரெஸ்ட்டும் கொடுத்து விட்டு சொந்த ஊருக்குப் பயணமானோம். ஒரு வருடமாக பூட்டிக்கிடந்த வீட்டை க்ளீன் செய்யவே அரை நாள் எடுத்தது. ஊரில் போய் இறங்கவுமே என் மகனின் நண்பர்கள் குழு தேடி வந்துவிட்டது. அதன்பின் தெருவே வீடு ஆனது.
அதன்பின் எங்கள் வீட்டில் அவன் சாப்பிட்டது அபூர்வம். ஏதாவது ஒரு வீட்டில் நுழைவது, இருப்பதைச் சாப்பிடுவது, தெருவில் அந்தக்கடைசி முதல் இந்தக் கடைசி வரை ஓடுவது, ஊரையே சுற்றி வருவது என்று ஒரே கொண்டாட்டம் தான். இதையெல்லாம் இழந்துவிட்டு, ஏ.சி.ஜெயிலில் வாழ வேண்டியிருக்கிறதே..சீக்கிரம் ஊருக்கு வந்து செட்டில் ஆகிவிட வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டேன்.
இடையில் ராமேஸ்வரம் போய் கடலில் (குளத்தில்?) மூழ்கி, எல்லாப் பாவங்களையும் போக்கிவிட்டு, கொஞ்சம் சொறியுடன் வீடு வந்து சேர்ந்தோம். அன்று இரவில் என் மகன் குப்புறப் படுத்துக்கொண்டு “அப்பா..இட்ச்சு..இட்ச்சு” என்று பின்பக்கத்தைக் காட்ட, சின்சியராக சொறிந்து விட்டேன். அவனும் சுகமாக உறங்கிப் போனான்.
அடுத்த வாரம் திருச்செந்தூர் போனோம். பையனுக்கு மொட்டை போட்டு, காது குத்தினோம். மொட்டை போடும்போது பிடிப்பதற்கு பத்துப் பேர் சுற்றி நின்றோம். அதிசயமாக பையன் அழவேயில்லை. காது மரத்துப்போக மருந்து போட்டிருந்ததால், காது குத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மற்ற மொட்டைகளைப் பார்த்து “இஹி..இஹி” என்று சிரித்த மகனுக்கு, தன் தலையும் மொட்டை தான் என்று புரியவில்லை. வீட்டிற்கு வந்து கண்ணாடி பார்த்துவிட்டு “போச்சு..போச்சு” என்றான். “வளரும்பா..திரும்ப வளரும்” என்று சமாதானம் கூறினேன்.
எல்லாம் முடிந்து கடைசி நாள் கிளம்பும்போது, பையன் இங்கே அனுபவிக்க வேண்டியதில் ஏதோ ஒன்னு குறைவது போல் தோன்றியது. என்ன அதுவென்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, திண்ணையில் உட்கார்ந்திருந்த பையன் “அப்பா..பூச்சி..பூச்சி” என்று ஓடி வந்தான். டவுசரை அவனே இழுத்துக் கழற்றினான். பார்த்தால் சில எறும்புகள்.......பூச்சியை பூச்சி கடித்திருந்தது.
அதைப் பார்த்ததும் சந்தோசம் பீடிட்டது எனக்கு. ஒன்பதாம் வகுப்பு வரை பெரும்பாலும் ஸ்கூலில் எனக்கு மரத்தடி கிளாஸ் தான். டவுசர் போட்டு ஃப்ரீயாக உட்கார்ந்திருக்கும்போது அடிக்கடி எல்லாரையுமே எறும்பு கடித்து விடும். எறும்பு கடித்த இடத்தை சொறிவதும், கசக்குவதும் சுகமான அனுபவம் என்பது நீங்கள் அறிந்ததே. விவகாரமான இடம் என்றால், அதை டீச்சர் பார்க்காத பொழுது செய்வது நம் சாமர்த்தியம். இப்போது மகனைப் பார்த்ததும் பழைய ஞாபகங்கள் நினைவில் வந்து சென்றன.
இந்தியாவில் எல்லாவற்றையும் அனுபவித்த மகனுக்கு, இருந்த ஒரு குறையும் பூச்சி கடித்தவுடன் தீர்ந்தது, பூச்சியில் எலந்தைப் பழம் பழுத்தது.
மன நிறைவுடன் குவைத் நோக்கிக் கிளம்பினோம்.
செங்கோவி...!
ReplyDeleteகுழந்தையின் பூச்சியை பூச்சி கடித்து இந்தியப் பயணம் நிறைய வேண்டும் என்கிற உம்முடைய ஆசை பொல்லாத ஆசையய்யா?
முடி வளர்த்து பெண்பிள்ளைகளின் சட்டைகளுடன் பார்த்ததும், பையனா- பொண்ணா என்று ஒரே குழப்பம் நீடித்து வந்தது. ஆனால், இப்ப பையன் என்று நிச்சயப்படுத்திக் கொண்டேன் பையன் செம கியூட்ட இருக்கிறான்.
இந்தியப் பயணத்தின் பின் மீண்டும் பழைய சுவாரஸ்யத்துடன் பதிவுகளைக் காண முடிகிறது!
@மருதமூரான்.ஹா..ஹா..பையன் தான்..இப்போது தான் ஜீ பதிவில் உங்கள் கமெண்ட்டை வழிமொழிந்தேன்..இப்போது மீண்டும் இங்கே வழிமொழிகிறேன்..சொந்த ஊர்ப் பயணம் எப்போதும் உற்சாகம் தருவது தானே!
ReplyDeleteசெங்கோவி...!
ReplyDeleteஇந்தியாவில் நீங்கள் இருந்த காலத்தில் தொலைபேசியில் அழைக்க எண்ணியிருந்தோம். ஆனாலும், அழைக்க நினைத்த தினத்தில் நீங்கள் மீண்டும் மத்திய கிழக்கு சென்று விட்டீர்கள்.
பிறிதொரு சமயம் நிச்சயம் பேச வேண்டும்.
வணக்கம்,செங்கோவி! என்ன ஒரு சந்தோஷம்?பூச்சியை பூச்சி கடித்து.....................!
ReplyDeleteவணக்கம் செங்கோவி நலமா.?
ReplyDeleteபதிவுலகம் முழுவதுமே உங்கள் இந்திய பயணம் பற்றிய பேச்சுத்தான்.. கேட்கவே சந்தோஷம். நானும் உங்ளைப்போல்தான் பொடியங்கள் ஜெயிலில் இருப்பதை போன்றே உணர்கிறேன்..;-(
கட்டாயம் அவர்களுக்கும் நான் விளையாடித்திரிந்த ஊரை காட்டனும் என்று ஆசை இருக்கு ஆனால் இப்போதும் பாதுகாப்பு வலையத்திற்குள் இருக்கும் எனது கிராமத்தை எனது பிள்ளைகளுக்கு காட்ட எப்போது அனுமதி கிடைக்குமோ.?
வாழ்த்துக்கள் சார்!
ReplyDeleteஅருமை திரு செங்கோவி.
ReplyDeleteஅடுத்த முறை வரும் போது நிச்சயம் எங்கள் வீட்டிற்கு குடும்பத்துடன் வர வேண்டும்.
எங்கள் மனப்பூர்வ வாழ்த்துகள்.
பாஸ் பையனுக்கு காதுகுத்தும் போட்டோவில் அவனை தூக்கி வைச்சிருப்பது நீங்கதானே நீங்கள் என்றால் என்னமா ப்ளான் பண்ணி உங்கள் முகத்தை மறைச்சிருக்கீங்க என்ன ஒரு வில்லத்தனம் ஹி.ஹி.ஹி.ஹி........
ReplyDelete// விவகாரமான இடம் என்றால், அதை டீச்சர் பார்க்காத பொழுது செய்வது நம் சாமர்த்தியம். //உங்கள பார்த்தா அப்படி தெரியலையே ..வேணும்னே ........... சரி வேண்டாம் விடுங்க ..
ReplyDeleteகுழந்தையின் இனிமையான பயணத்துடன் உங்கள் பயணமும் இணைந்தது மகிழ்ச்சி தரக்கூடியது தானே....
ReplyDeleteஎன்னா ஒரு தன்னடக்கம் பதிவுல...
நினைவில் நீங்கா பயணத்தை தங்கள் மகனுக்கு அளித்து விட்ட திருப்தி பதிவில் தெரிகிறது மாம்ஸ்....
ReplyDeleteவாழ்த்துக்கள்.
பூச்சிக்கடிக்கு சொறிதலா..... யாருக்கோ?
ReplyDeleteநடத்துங்க.. நடத்துங்க...
உங்கள் பையன் ரொம்ப சுட்டி .
ReplyDeleteஅவனுக்கு இந்த பயணம் பசுமையாக ஞாபகம் இருக்கும் ,
வாழ்த்துக்கள் ,
இணையத் தமிழன் .
http://www.inaya-tamilan.blogspot.com/
K.s.s.Rajh said... பாஸ் பையனுக்கு காதுகுத்தும் போட்டோவில் அவனை தூக்கி வைச்சிருப்பது நீங்கதானே?///இல்லை ராஜ்!மாமா மடியில் உட்கார்த்தி வைத்துத் தான்,காது குத்துவார்கள்,தமிழ் நாட்டில்.அது தான் முறை.
ReplyDeleteநிறைவான பயணம்......... ஆனா பையனுக்கு ஊர் விஷயங்கள் ரொம்பவே பிடிக்க ஆரம்பிச்சிட்டா இனி நகரவாழ்க்கை கசந்துடும்........ அதையும் பாத்துக்குங்க.....! நல்ல கல்விக்கு நகர வாழ்க்கை தேவைப்படுகிறது......
ReplyDeleteஎனக்கு என்னமோ அந்த பூச்சி பூச்சி....
ReplyDeleteஅனுபவித்து ரசித்தது நீங்கதானொன்னு
படுது......
அதை பையன் பேரல போட்டுடீங்க.....
ரோம்ப நாளைக்கு அப்புறம் நல்ல சுகமா
இருந்துச்சி போல....
என்னா வில்லத்தனம்....??????!!!!!!!!!!!!
// விவகாரமான இடம் என்றால், அதை டீச்சர் பார்க்காத பொழுது செய்வது நம் சாமர்த்தியம்//
ReplyDeleteஆமா டீச்சருக்கு...சரி வேணாம் விடுங்க! :-)
அப்புறம் மறுபடியும் எப்ப வர்றீங்க? வாழ்த்துக்கள்! :-)
ReplyDeleteபூச்சி கடிக்காமல் போயிருந்தால் பெரிய குறையா கியிருக்கும் போலிருக்கிறதே!
ReplyDeleteகுழந்தையின் தந்தை,என் பள்ளி ஜூ..........னியர் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
//NAAI-NAKKS said... [Reply]
ReplyDeleteஎனக்கு என்னமோ அந்த பூச்சி பூச்சி....
அனுபவித்து ரசித்தது நீங்கதானொன்னு
படுது.....//
நக்கி மாமா..நேர்ல சிக்கனீங்க..வாய்லயே குத்துவேன்.
வாழ்த்துக்கள் sir !
ReplyDelete//Yoga.S. said... [Reply]
ReplyDeleteK.s.s.Rajh said... பாஸ் பையனுக்கு காதுகுத்தும் போட்டோவில் அவனை தூக்கி வைச்சிருப்பது நீங்கதானே?///இல்லை ராஜ்!மாமா மடியில் உட்கார்த்தி வைத்துத் தான்,காது குத்துவார்கள்,தமிழ் நாட்டில்.அது தான் முறை.//
ஆம் ஐயா, அது என் மச்சினர் தான்!
@மருதமூரான்.
ReplyDelete//பிறிதொரு சமயம் நிச்சயம் பேச வேண்டும்.//
நிச்சயம் பேசுவோம் நண்பரே..
வணக்கம் செங்கோவியாரே!
ReplyDeleteம்ம்ம் ஊரில் இருக்கும் சுதந்திரம் நகரவாசிகளுக்கு கிடைப்பது இல்லைத்தான் இந்தியாவின் பயணங்கள் உடலுக்கும் மனதிற்கும் சிலிர்ப்பைத்தரும் விடயம் அதை உங்க பதிவில் பார்க்கின்றேன்!
Sengovi,
ReplyDeleteThaai mama madiyalathan ugaravachu kathu kuthuvanga .Unga paiyanuku unga madiyala vachu kutharinga enna ppa ethu
//Tirupurvalu said...
ReplyDeleteSengovi,
Thaai mama madiyalathan ugaravachu kathu kuthuvanga .Unga paiyanuku unga madiyala vachu kutharinga enna ppa ethu//
அது தாய்மாமன் தான்யா!