தாயி விருமாயி
மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும்
உன் முகமே தெரியுதம்மா
தங்கம்போல் நான் வளர்த்த
தங்கச்சி பிரியக்கண்டு
கத்தாழங் காட்டுக்குள்ளே
காளைகளும் கதறுதம்மா....
நல்ல இலக்கியம் என்பது நம் சிந்தனையைக் கிளறி நம் அனுபவத்துடன் உரையாடும் தன்மை கொண்டது. அந்த வகையில் வைரமுத்து கிழக்குச்சீமையில் எழுதிய ‘தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடந்தானே’ என்ற வரியைக் கேட்டதும் அதைப் பற்றிய சிந்தனை படர்ந்தது.
தவளையால் எப்போதும் நீரிலும் நிலத்திலும் வாழ முடியும். பெண்களின் நிலையும் அப்படித்தானா?
எனக்குத் திருமணமான நாளில் என் மனைவியின் வீட்டிற்கு மறுவீடு சென்று விட்டு, என் வீட்டிற்கு கிளம்பினோம். என் மனைவி , மாமியார், மச்சினன் அனைவரும் அழுதார்கள். அதற்கு அடுத்த நாளே திரும்ப விருந்துக்கு அங்கே வருவதாக பிளான். ‘எப்படியும் 24 மணி நேரத்தில் திரும்ப இங்கே வந்திடப்போறோம்.அப்புறம் ஏன் இப்படி அழுவுறாங்க? பொண்ணை நினைச்சு அழறாங்களா இல்லே பாவம்னு என்னை நினைச்சு அழறாங்களா’ன்னு அப்போது எனக்கு ஒரே குழப்பம்.
அந்த தருணம் தான் ஒரு பெண் முழுக்கக் தன் பிறந்த வீட்டை விட்டு, புகுந்த வீட்டிற்கு பெட்டி, பாத்திரங்களுடன் கிளம்பும் நேரம்.அதன் பிறகு பிறந்த வீடு என்பது பழைய மாதிரி இல்லை என்பதை கொஞ்ச நாளில் உணர்ந்தேன்.
கொஞ்சம் ரஃப் & டஃப் மாப்பிள்ளையாக நான் இமேஜை மெயிண்டய்ன் பண்ணியதால், என் மனைவியை ஏதேனும் சொல்லக்கூடப் பயந்தார்கள். அந்த வீட்டிற்கும் மனைவிக்குமான பந்தம் கொஞ்சம் கொஞ்சமாக அந்நியமானது.
இடையில் நான் விசா எடுத்து இங்கே அழைத்துக்கொள்ளும்வரை அம்மா வீட்டிலேயே அவர் தங்க வேண்டிய நிலை.
வேலை செய்யாமல் தூங்கினால் திட்டும் அம்மா, இப்போது திட்டுவதில்லை. தானே எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, சாப்பிட அழைக்கிறார். எதற்கெடுத்தாலும் தன்னுடன் போட்டி போடும் தம்பி, இப்போதெல்லாம் எதுவாக இருந்தாலும் அக்காவின் மனம் கோணாமல் நடந்துகொள்கிறான். அப்பாவோ மிகவும் ஜாக்ரதையாக தன்னுடைய பேச்சு, நடவடிக்கை எதுவும் மகளின் புகுந்த வீட்டில் பிரச்சினை ஏற்படுத்தக்கூடாது என்று யோசித்துச் செய்கிறார்/பேசுகிறார்.
இதுவல்ல தன் வீடு.திட்டாத அம்மாவும் சண்டை போடாத தம்பியும் நடமாடும் வீடு தன் வீடல்ல என்று புரிந்தது. வீட்டில் உள்ளோர் இப்படி என்றால் அக்கம்பக்கத்தார், சொந்தபந்தங்கள் பற்றிச் சொல்ல வேண்டாம். ‘அவளுக்கென்ன குவைத்காரி’ என்பதில் தொடங்கி ‘இன்னுமா தாயி கிளம்பலை..ஏதாவது பிரச்சினையா’ என்பது வரை பலதரப்பட்ட பேச்சுகள். தான் பல்லாங்குழியும் நொண்டியும் விளையாடிய தெருவுக்கே, தான் அந்நியமாகி விட்டது தெரிந்தது. ஓடியாடி விளையாண்ட வீடும், தெருவும் இனி தனக்குச் சொந்தமல்ல என்றானது.
இங்கு எல்லாமும் மாறிவிட்டது. இனி யாரும் தன்னை பழைய பெண்ணாக நடத்தப்போவதில்லை என்று புரிந்தது. என் மனைவி என்னிடம் ’சீக்கிரம் விசா எடுங்க, சீக்கிரம் அழைத்துக்கொள்ளுங்கள்’ என்று நச்சரித்து இங்கு வந்து சேர்ந்தார்.
வா என்று அழைக்க உறவற்ற நிலையில் சில வருடங்களுக்கு முன் என் சொந்தமண்ணில் இருந்து என் பிரிவு நிகழ்ந்தது. அதனாலேயே என்னால் என் மனைவியின் நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.
’இது தான் பெண்ணின் வாழ்க்கை முறை, இது ஒருநாள் நடந்தே தீரும் ‘என்று ஏற்கனவே தெரிந்திருந்ததால், என் மனைவி சீக்கிரமே அந்தக் கவலையில் இருந்து மீண்டார்.
போரினாலும், பொருளாதாரக் காரணங்களாலும் தன் சொந்த மண்ணை விட்டு வெளியேறும் மக்களின் துயரங்கள் நம் இலக்கியங்களில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் அதே நிகழ்வு நம் வீட்டுப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் காலங்காலமாய் நடந்துகொண்டே இருக்கிறது. அதைப் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றியே நாம் அவர்களுடன் வாழ்கிறோம்.
அவர்கள் அந்த இழப்பை சகித்துக்கொண்டே, தன் புகுந்த வீட்டில் புதிய வாழ்வை துவக்குகிறார்கள். அவ்வாறு புதிய இடத்தில் புதிய வாழ்வைத் துவங்கும் எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. சரியான கணவன் அமையாத நிலையில் பிறந்த வீட்டு உரிமையும் போய், புகுந்த வீட்டிலும் நிலைகொள்ள முடியாமல் தவிப்போர் ஏராளம். ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு வேரோடு பிடிங்கி நடப்படும் வேதனையை எதனால் ஈடுகட்ட முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...
அவர்கள் அந்த இழப்பை சகித்துக்கொண்டே, தன் புகுந்த வீட்டில் புதிய வாழ்வை துவக்குகிறார்கள். அவ்வாறு புதிய இடத்தில் புதிய வாழ்வைத் துவங்கும் எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. சரியான கணவன் அமையாத நிலையில் பிறந்த வீட்டு உரிமையும் போய், புகுந்த வீட்டிலும் நிலைகொள்ள முடியாமல் தவிப்போர் ஏராளம். ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு வேரோடு பிடிங்கி நடப்படும் வேதனையை எதனால் ஈடுகட்ட முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...
தவளைக்குக்கூட நினைத்தால் நீரிலும் நிலத்திலும் வாழும் உரிமை உண்டு. நம் பெண்களுக்கு அந்த உரிமையும் இல்லை என்பதே நிதர்சனம்.
அண்ணே போய் வரவா
அழுதே போய் வரவா
மண்ணே போய் வரவா
மாமரமே போய் வரவா
அணில்வால் மீசை கொண்ட
அண்ணன் உன்னை விட்டு
புலிவால் மீசை கொண்ட
புருசனோடு போய் வரவா?
சட்டப்படி ஆம்பிளைக்கு
ஒத்த இடந்தானே!
தவளைக்கும் பொம்பளைக்கும்
ரெட்டை இடந்தானே!
தவளைக்குக்கூட நினைத்தால் நீரிலும் நிலத்திலும் வாழும் உரிமை உண்டு. நம் பெண்களுக்கு அந்த உரிமையும் இல்லை என்பதே நிதர்சனம். //
ReplyDeleteசரிதான்.
வருகைக்கு நன்றி கோகுல்.
ReplyDeleteபுலிவால் மீசை கொண்ட
ReplyDeleteபுருசனோடு போய் வரவா?
அப்படியா?
//
ReplyDeleteகோகுல் said...
புலிவால் மீசை கொண்ட
புருசனோடு போய் வரவா?
அப்படியா? //
சிங்கம்ல!
கொஞ்சம் ரஃப் & டஃப் மாப்பிள்ளையாக நான் இமேஜை மெயிண்டய்ன் பண்ணியதால்//
ReplyDeleteரஃப் & டஃப் ஜீன்ஸ் போட்டிறுந்தீங்களா?
வணக்கம் மச்சி,
ReplyDelete// கோகுல் said...
ReplyDeleteகொஞ்சம் ரஃப் & டஃப் மாப்பிள்ளையாக நான் இமேஜை மெயிண்டய்ன் பண்ணியதால்//
ரஃப் & டஃப் ஜீன்ஸ் போட்டிறுந்தீங்களா?//
பொண்ணு பார்க்கப்போகும்போது ஜீன்ஸ் தான் போட்டிருந்தேன்..காத்தோட்டம் இல்லாம எனக்கு அது ரஃபாவும் டஃபாவும் ட தான் இருந்துச்சு..
//நிரூபன் said...
ReplyDeleteவணக்கம் மச்சி,//
வணக்கம் நிரூ..
தாயி விருமாயி
ReplyDeleteமனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும்
உன் முகமே தெரியுதம்மா//
அண்ணனுக்கு தங்கச்சிகளைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டுமெனும் பீலிங்ஸ் வந்து விட்டதோ.
அந்த தருணம் தான் ஒரு பெண் முழுக்கக் தன் பிறந்த வீட்டை விட்டு, புகுந்த வீட்டிற்கு பெட்டி, பாத்திரங்களுடன் கிளம்பும் நேரம்.அதன் பிறகு பிறந்த வீடு என்பது பழைய மாதிரி இல்லை என்பதை கொஞ்ச நாளில் உணர்ந்தேன். //
ReplyDeleteதமிழ்ச் சமூதாயத்தில் திருமணமான பின்னர்,தாம் பெற்ற பிள்ளையாக இருந்தாலும், இன்னொருவன் கையில் கொடுத்து விட்டோமே, இனிமேல் இவளினைத் தம் பிள்ளைகளோடு சரி சமமாக நடாத்தக் கூடாது, ஊரான் பிள்ளை போன்று தான் வளர்க்க வேண்டும்- நடத்த வேண்டும் எனும் பாரம்பரியம் காலாதி காலமாக இருந்தே வருகிறது.
கொஞ்சம் ரஃப் & டஃப் மாப்பிள்ளையாக நான் இமேஜை மெயிண்டய்ன் பண்ணியதால், என் மனைவியை ஏதேனும் சொல்லக்கூடப் பயந்தார்கள்//
ReplyDeleteஅண்ணன், மாமா மாமியை மிரட்டியதைப் பெரிய வீரம் என்று சொல்லுறாரு;-)))
தவளையால் எப்போதும் நீரிலும் நிலத்திலும் வாழ முடியும். பெண்களின் நிலையும் அப்படித்தானா? //
ReplyDeleteபெண்களின் மனம் மென்மை என்பதால் எப்போதுமே வளைந்து கொடுத்து வாழ முடியும் என்பது என் கருத்து.
//நிரூபன் said...
ReplyDeleteஅண்ணன், மாமா மாமியை மிரட்டியதைப் பெரிய வீரம் என்று சொல்லுறாரு;-)//
அதுக்குப்பேரு வீரம் இல்லையா..மாப்பிள்ளை முறுக்கு!.....ஹும், அது ஒரு காலம்!
//நிரூபன் said...
ReplyDeleteபெண்களின் மனம் மென்மை என்பதால் எப்போதுமே வளைந்து கொடுத்து வாழ முடியும் என்பது என் கருத்து. //
உண்மை தான் நிரூ..ஆனால் அப்படியும் நிம்மதியாக வாழ விடுகிறார்களா என்றால்........
தவளைக்குக்கூட நினைத்தால் நீரிலும் நிலத்திலும் வாழும் உரிமை உண்டு. நம் பெண்களுக்கு அந்த உரிமையும் இல்லை என்பதே நிதர்சனம்.//
ReplyDeleteஅவ்...அப்படீன்னா பெண்களிற்கு எல்லாப் பக்கத்தாலும் பிரச்சினை தானே?
கண்களைக் குளமாக்கிய மற்றுமோர் பகிர்வு!நன்றி செங்கோவி!நிரூபனுக்கு இதுவெல்லாம் புரியாது!
ReplyDeleteநல்லதோர் பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க. அனுபவப்பட்டவர்கள் மூலமாக கருத்துக்கள் நிறைய வரும் எனும் ஆவலில் தற்போது விடை பெறுகின்றேன்.
ReplyDelete@ Yoga.s.FR said...
ReplyDeleteகண்களைக் குளமாக்கிய மற்றுமோர் பகிர்வு!நன்றி செங்கோவி!நிரூபனுக்கு இதுவெல்லாம் புரியாது!//
நான் இன்னும் பக்குவப்படவில்லை, கலியாணம் கட்டவில்லை என்பதை இப்படிப் பப்ளிகுட்டி பண்ணுதல் தகுமா?
//நிரூபன் said...
ReplyDeleteநல்லதோர் பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க. அனுபவப்பட்டவர்கள் மூலமாக கருத்துக்கள் நிறைய வரும் எனும் ஆவலில் தற்போது விடை பெறுகின்றேன்.//
நன்றி நிரூ..நீங்க சொன்னமாதிரியே யோகா வந்துட்டார்.
செங்கோவி...ட்ராக் மாத்தீட்டிங்களே...ஆனாலும் தொட்டுட்டீங்க...I mean touch பண்ணீட்டீங்க...
ReplyDeleteவா என்று அழைக்க உறவற்ற நிலையில் சில வருடங்களுக்கு முன் என் சொந்தமண்ணில் இருந்து என் பிரிவு நிகழ்ந்தது. அதனாலேயே என்னால் என் மனைவியின் நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.////எத்தனை உறவுகள்?உயிருடன் இருக்கிறார்களா,இல்லையா?இன்று வரை தெரியாத நிலையில்......................................
ReplyDelete//Reverie said...
ReplyDeleteசெங்கோவி...ட்ராக் மாத்தீட்டிங்களே...//
அப்பப்போ அதிசயமா நான் நல்ல பதிவும் எழுதுவேன் ரெவரி.
//Reverie said...
ReplyDeleteசெங்கோவி...ட்ராக் மாத்தீட்டிங்களே...//
அப்பப்போ அதிசயமா நான் நல்ல பதிவும் எழுதுவேன் ரெவரி.
//
ReplyDeleteYoga.s.FR said...
வா என்று அழைக்க உறவற்ற நிலையில் சில வருடங்களுக்கு முன் என் சொந்தமண்ணில் இருந்து என் பிரிவு நிகழ்ந்தது. அதனாலேயே என்னால் என் மனைவியின் நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.////எத்தனை உறவுகள்?உயிருடன் இருக்கிறார்களா,இல்லையா?இன்று வரை தெரியாத நிலையில்.....................//
புரிகிறது சார்..சாரி.
ரொம்ப அனுபவிச்சு எழுதி இருக்கீங்கண்ணே, அத்தனையும் உண்மை...!
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDelete//Yoga.s.FR said...
கண்களைக் குளமாக்கிய மற்றுமோர் பகிர்வு!நன்றி செங்கோவி!//
நன்றி பாஸ்..அனுபவம் நமக்குத் தொடந்து பல பாடங்களைச் சொல்லிகொண்டே இருக்கிறது. அது எளிமையாக கண்முன்னே நிகழ்வதால் தெரிவதில்லை.
//
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ரொம்ப அனுபவிச்சு எழுதி இருக்கீங்கண்ணே, அத்தனையும் உண்மை...!//
ஆமாம்ணே..உண்மை தான்.
//////கொஞ்சம் ரஃப் & டஃப் மாப்பிள்ளையாக நான் இமேஜை மெயிண்டய்ன் பண்ணியதால், என் மனைவியை ஏதேனும் சொல்லக்கூடப் பயந்தார்கள்.////////
ReplyDeleteஅண்ணே பெரிய சண்டியருதேன்....
/////ஓடியாடி விளையாண்ட வீடும், தெருவும் இனி தனக்குச் சொந்தமல்ல சொந்தம் என்றானது.//////
ReplyDeleteபுதிய கோணத்துல சிந்திச்சு இருக்கீங்க....!
செங்கோவி said...
ReplyDelete//
Yoga.s.FR said...
வா என்று அழைக்க உறவற்ற நிலையில் சில வருடங்களுக்கு முன் என் சொந்தமண்ணில் இருந்து என் பிரிவு நிகழ்ந்தது. அதனாலேயே என்னால் என் மனைவியின் நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.////எத்தனை உறவுகள்?உயிருடன் இருக்கிறார்களா,இல்லையா?இன்று வரை தெரியாத நிலையில்.....................//
புரிகிறது சார்..சாரி.§§§§§அதனாலொன்றுமில்லை.விதி வலியதில்லையா?சில வேளைகளில் நினைத்தால் பற்றிக் கொண்டு வரும்!
போரினாலும், பொருளாதாரக் காரணங்களாலும் தன் சொந்த மண்ணை விட்டு வெளியேறும் மக்களின் துயரங்கள் நம் இலக்கியங்களில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் அதே நிகழ்வு நம் வீட்டுப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் காலங்காலமாய் நடந்துகொண்டே இருக்கிறது. அதைப் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றியே நாம் அவர்களுடன் வாழ்கிறோம்.
ReplyDelete...... புல்லரிக்க வைத்து விட்ட இடம்..... very touching....
பெண்ணிற்கே உள்ள தவிர்க்கமுடியாத கவலைகளை தவளையோடு ஒப்பிட்டு மலையாக மனதில் ஏற்றிவிட்டீர்கள்... வாழ வரும் பெண்ணை அன்பு மட்டும் செலுத்தி காலத்திற்கும் கவலைகளை மறக்கச்செய்யுங்கள்... அன்பு ஒன்றே இதற்கு மருந்து...
ReplyDeleteஎன்ன ஆச்சு? திடீர் என்று இப்படி ஒரு பதிவு.... உங்கள் மனைவி, மைத்துனர், மாமானார், மாமியார் எல்லோரும் உங்கள் பதிவுகள் வாசிக்க ஆரம்பிச்சிட்டாங்களா? ஹி,ஹி,ஹி,ஹி....
ReplyDeleteபெண்களுக்கு மட்டும் அல்ல
ReplyDeleteசம்பாதித்தே ஆகவேண்டும் என்றிருக்கும் நடுத்தர வர்க ஆண்களுக்கும் அதைவிட நிலமை மோசம்
பொண்ணை நினைச்சு அழறாங்களா இல்லே பாவம்னு என்னை நினைச்சு அழறாங்களா’ன்னு அப்போது எனக்கு ஒரே குழப்பம்./////நியாயமான குழப்பம் தான்!எனக்கென்றால் உங்களை நினைத்துத் தான் அழுதிருப்பார்கள் என்றே தோன்றுகிறது!
ReplyDelete//Chitra said...
ReplyDeleteஎன்ன ஆச்சு? திடீர் என்று இப்படி ஒரு பதிவு.... உங்கள் மனைவி, மைத்துனர், மாமானார், மாமியார் எல்லோரும் உங்கள் பதிவுகள் வாசிக்க ஆரம்பிச்சிட்டாங்களா? ஹி,ஹி,ஹி,ஹி..//
அக்கா, பழசை நினைச்சுப்பாருங்க..முன்னொரு காலத்துல வந்த புதுசுல நான் எப்படி அப்பாவியா இருந்தேன்னு ஞாபகம் இல்லையா..
அப்பப்போ நல்ல பதிவு போட்டு ‘பாவப்பிராயச்சித்தம்’ பண்ணிக்கணும்னு பிராபலப்பதிவர் சங்கத்துல முடிவு பண்ணியிருக்கோம்க்கா.
//மாய உலகம் said...
ReplyDeleteபெண்ணிற்கே உள்ள தவிர்க்கமுடியாத கவலைகளை தவளையோடு ஒப்பிட்டு மலையாக மனதில் ஏற்றிவிட்டீர்கள்... வாழ வரும் பெண்ணை அன்பு மட்டும் செலுத்தி காலத்திற்கும் கவலைகளை மறக்கச்செய்யுங்கள்... அன்பு ஒன்றே இதற்கு மருந்து.//
ஆமாம் மாயா..பதிவின் மறைபொருள் அதுவே.
//Speed Master said...
ReplyDeleteபெண்களுக்கு மட்டும் அல்ல
சம்பாதித்தே ஆகவேண்டும் என்றிருக்கும் நடுத்தர வர்க ஆண்களுக்கும் அதைவிட நிலமை மோசம்//
மாஸ்டரே இன்னைக்கு வாயைத் திறந்துட்டாரே..
//Yoga.s.FR said...
ReplyDeleteபொண்ணை நினைச்சு அழறாங்களா இல்லே பாவம்னு என்னை நினைச்சு அழறாங்களா’ன்னு அப்போது எனக்கு ஒரே குழப்பம்./////நியாயமான குழப்பம் தான்!எனக்கென்றால் உங்களை நினைத்துத் தான் அழுதிருப்பார்கள் என்றே தோன்றுகிறது!//
மேலோட்டமாக கிண்டல் என்று தோன்றினாலும் அதற்கான கா’ரணங்கள்’ உண்டு..இந்தச் சிறு பெண்ணால் என்னைப் பார்த்துக்கொள்ள முடியுமா என்ற கவலையும் இருந்திருக்கலாம்..
////போரினாலும், பொருளாதாரக் காரணங்களாலும் தன் சொந்த மண்ணை விட்டு வெளியேறும் மக்களின் துயரங்கள் நம் இலக்கியங்களில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் அதே நிகழ்வு நம் வீட்டுப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் காலங்காலமாய் நடந்துகொண்டே இருக்கிறது. அதைப் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றியே நாம் அவர்களுடன் வாழ்கிறோம்.///////
ReplyDeleteரொம்பச் சரியான வார்த்தைகள், திருமணமான ஆண்கள் அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று.
//Chitra said...
ReplyDelete.. புல்லரிக்க வைத்து விட்ட இடம்..... very touching.//
நன்றிக்கா..
////தவளைக்குக்கூட நினைத்தால் நீரிலும் நிலத்திலும் வாழும் உரிமை உண்டு. நம் பெண்களுக்கு அந்த உரிமையும் இல்லை என்பதே நிதர்சனம். ///
ReplyDeleteஆமாண்ணே, நாமாவது குறைந்தபட்சம் நம் வாழ்க்கையில் அந்தக் குறையை போக்க முயல்வோம்....!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteரொம்பச் சரியான வார்த்தைகள், திருமணமான ஆண்கள் அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று.//
நம்மாட்களுக்குத் தெரியும்..ஆனாலும் பெருசா உறைக்கறதில்லை.
தமிழ்மணத்தோட என்னய்யா வம்பு பண்ணினீரு, இப்பிடி கொலையா கொல்லுதே?
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteநாமாவது குறைந்தபட்சம் நம் வாழ்க்கையில் அந்தக் குறையை போக்க முயல்வோம்....! //
கரெக்டாச் சொன்னீங்கண்ணே.
/////செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ரொம்பச் சரியான வார்த்தைகள், திருமணமான ஆண்கள் அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று.//
நம்மாட்களுக்குத் தெரியும்..ஆனாலும் பெருசா உறைக்கறதில்லை./////
நாமதான் நம்ம ஈகோவை பாதிக்கும் எதையும் சீண்ட மாட்டோமே?
//
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
தமிழ்மணத்தோட என்னய்யா வம்பு பண்ணினீரு, இப்பிடி கொலையா கொல்லுதே? //
ஆமா பாஸ்..அதுவா திடீர்னு திரட்டிக்குது..என்ன நடக்குன்னே புரியலை..ஸ்டில்லு ஒன்னும் சரியில்லாததால ஏத்துக்க மாட்டேங்குதோ?
செங்கோவி,.. கலக்கல் பதிவு,.. சல்யூட்
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteநாமதான் நம்ம ஈகோவை பாதிக்கும் எதையும் சீண்ட மாட்டோமே? //
நச்!
///////செங்கோவி said...
ReplyDelete//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
தமிழ்மணத்தோட என்னய்யா வம்பு பண்ணினீரு, இப்பிடி கொலையா கொல்லுதே? //
ஆமா பாஸ்..அதுவா திடீர்னு திரட்டிக்குது..என்ன நடக்குன்னே புரியலை..ஸ்டில்லு ஒன்னும் சரியில்லாததால ஏத்துக்க மாட்டேங்குதோ?
//////
எதுக்கும் பதிவுக்கு இடைல நமீதான்னு சேத்துப் பாருங்கண்ணே.....
//jothi said...
ReplyDeleteசெங்கோவி,.. கலக்கல் பதிவு,.. சல்யூட் //
சல்யூட்டிற்கு நன்றி ஜோ.
சப்மிட் பண்ணிட்டேன்....
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteசப்மிட் பண்ணிட்டேன்...//
ரொம்ப நன்னிண்ணே..என் கண்ணுல தண்ணிண்ணே..
இன்னிக்கு கருங்காலி படவிமர்சனம் எழுதுவாருன்னு பார்த்தா, அண்ணன் இப்படி செண்டிமெண்ட்டா பொலம்ப விட்டுட்டாரே?
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஇன்னிக்கு கருங்காலி படவிமர்சனம் எழுதுவாருன்னு பார்த்தா, அண்ணன் இப்படி செண்டிமெண்ட்டா பொலம்ப விட்டுட்டாரே?//
கருங்காலி இங்க ரிலீஸ் ஆகலைண்ணே..சிடில பார்க்கிற படங்களுக்கு(!) விமர்சனம் எழுதறதில்லை..கொள்கை.கொள்கை.
/////செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
சப்மிட் பண்ணிட்டேன்...//
ரொம்ப நன்னிண்ணே..என் கண்ணுல தண்ணிண்ணே..
////////
இதுக்குப் போயி... சரி சரி கண்ண தொடைங்க, சிரிங்க.... ம்ம் இப்ப எப்படி இருக்கு....? (ஆமா தமிழ்வாசி இன்னிக்கு நைசா எஸ்கேப் ஆகிட்டாரே, கருங்காலி படத்துக்கு நைட் ஷோ போயிட்டாரா?)
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஇன்னிக்கு கருங்காலி படவிமர்சனம் எழுதுவாருன்னு பார்த்தா,//
கருங்காலியை விடுங்க..பஸ்ல அந்த கருங்கல் மோதுச்சா என்னன்னு அடுத்த பார்ட் போடுங்க.
//// செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்னிக்கு கருங்காலி படவிமர்சனம் எழுதுவாருன்னு பார்த்தா, அண்ணன் இப்படி செண்டிமெண்ட்டா பொலம்ப விட்டுட்டாரே?//
கருங்காலி இங்க ரிலீஸ் ஆகலைண்ணே..சிடில பார்க்கிற படங்களுக்கு(!) விமர்சனம் எழுதறதில்லை..கொள்கை.கொள்கை.
////////
என்னண்ணே இது.... கில்மா படத்துக்கு மட்டும் ரூல்ச கொஞ்சம் லூஸ் பண்ணிக்க கூடாதா? பாவம் தமிழ்வாசி வெயிட் பண்ணி பாத்துட்டு அவரே படத்துக்கு போய்ட்டாரு...!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//ஆமா தமிழ்வாசி இன்னிக்கு நைசா எஸ்கேப் ஆகிட்டாரே, கருங்காலி படத்துக்கு நைட் ஷோ போயிட்டாரா?//
சீரியஸ் பதிவுன்னா எஸ் ஆகிடுதாரு..
/////செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்னிக்கு கருங்காலி படவிமர்சனம் எழுதுவாருன்னு பார்த்தா,//
கருங்காலியை விடுங்க..பஸ்ல அந்த கருங்கல் மோதுச்சா என்னன்னு அடுத்த பார்ட் போடுங்க.
////////
அடுத்து ப்ளாக்லேயே போடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்..... (எழுத கொஞ்சம் மேட்டர் கலக்ட் பண்ண வேண்டி இருக்கு, அதான் லேட்டாவுது, ஹி..ஹி....)
நீங்க வேற தலைவரே நானும் அங்கேதான் வேலை தேடிகிட்டு இருக்கேன்
ReplyDeleteகூடியசீக்கிரம் நானும் இதே பதிவ காபி பன்னி போடுவேன்
@Speed Master //நீங்க வேற தலைவரே நானும் அங்கேதான் வேலை தேடிகிட்டு இருக்கேன் //..இன்னும் உட்காரலையா..அடடா.
ReplyDelete//கூடியசீக்கிரம் நானும் இதே பதிவ காபி பன்னி போடுவேன்// யார் யாரோ செய்றாங்க..நீங்களும் செஞ்சாத் தப்பில்லை..செய்ங்கய்யா..செய்ங்க.
//இன்னும் உட்காரலையா
ReplyDeleteநீங்க வேற இங்க பத்திகிட்டி எறியுது
செங்கோவி said..இந்தச் சிறு பெண்ணால் என்னைப் பார்த்துக்கொள்ள முடியுமா என்ற கவலையும் இருந்திருக்கலாம்.///இருக்கலாம்!அப்படியும் இருக்கலாம்!
ReplyDeleteகொஞ்சம் ரஃப் & டஃப் மாப்பிள்ளையாக நான் இமேஜை மெயிண்டய்ன் பண்ணியதால்..........////அப்படி இருந்த செங்கோவியா இப்படி??????
ReplyDeleteதவளையால் எப்போதும் நீரிலும் நிலத்திலும் வாழ முடியும். பெண்களின் நிலையும் அப்படித்தானா?////நிரூபன் ஒரு பதிவு போட்டிருக்கிறார்:கண்ணீர் பற்றியது.அது இப்போது ஒரு விவாதப் பொருளாகி விட்டது!இதையும் ஒரு தலைப்பாக்கி விவாதப் பொருளாக்கி விடலாமா?
ReplyDeleteஒரு கிராமிய பாடல் மூலம் ஒரு இலக்கிய சிந்தனையுடன் பதிவு ...ஆகா சபாஷ் ...பாடல் எழுதிய வைரதுக்கும் பதிவு எழுதிய முத்துக்கும் ..வாழ்த்துக்கள் நன்றி
ReplyDeleteஅது சரி நல்ல பதிவுக்கு ஒட்டு போடாம என்ன இப்படி வெட்டி பேச்சு கேக்குறேன் ...நான் போட்டுவிட்டேன் சகோ தமிழ் மனம் 3
ReplyDeleteபுலிவால் மீசையா? அவ்ளோ நீளமான மீசைக்காரரை பாத்தே ஆகணுமே..
ReplyDeleteRomba nalla padhivu. Idhu dhaan pengaloda sogamaana unmai. Pugundha veetu kashtathai vida, porandha veetula urimai pogira sogam, romba kodumayanadhu.
ReplyDeleteஇப்ப தான் வந்தேன்... விரிவான அலசல் பின்னூட்டம் பிறகு...
ReplyDeleteஇப்போ ஓட்டு மட்டும் மாமு...
அழகாய் நச்சினு சில வரிகள்.சூப்பர்
ReplyDeleteஅன்புடன்
k.s.s.Rajh
from
நண்பர்கள்
சீரியஸ்!!!!!
ReplyDeleteகண்கலங்க வச்சிட்டியே மக்கா.....!!!
ReplyDeleteநண்பரே!
ReplyDeleteஉங்களை மாதிரி நானும் முறுக்கோடு நடக்க எண்ணி எல்லை மீறி விட்டேன்.
என் தவறை பின்னால் திருத்தி நல்ல மருமகனாக நடந்து கொண்டேன்.
இந்த பதிவுக்கு ஆயிரம் ஓட்டு....!!!
ReplyDeleteஅட. அட,, என்னமா யோசிக்கிறீங்க..
ReplyDeleteஒரு பதிவு மூலம் கண்கலங்க வேக்கமுடியும்ன்னு உங்க எழுத்து நிருபிக்குது..
பாராட்டுகள்..
உங்க நல்லா மனசு புரியாதவங்க இந்த பதிவ படிச்சாவது புரிஞ்சுக்கட்டும் அண்ணன் எவ்ளோ நல்லவர்னு......
ReplyDelete@Yoga.s.FR //நிரூபன் ஒரு பதிவு போட்டிருக்கிறார்:கண்ணீர் பற்றியது.அது இப்போது ஒரு விவாதப் பொருளாகி விட்டது!இதையும் ஒரு தலைப்பாக்கி விவாதப் பொருளாக்கி விடலாமா?//
ReplyDeleteநிரூ மாதிரி என்னையும் கும்மலாம்னு ஐடியாவா..ஆளை விடுங்க சாமி.
@ரியாஸ் அஹமது //பாடல் எழுதிய வைரதுக்கும் பதிவு எழுதிய முத்துக்கும் ..வாழ்த்துக்கள் நன்றி//
ReplyDeleteஎப்படிய்யா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க..
@! சிவகுமார் ! //புலிவால் மீசையா? அவ்ளோ நீளமான மீசைக்காரரை பாத்தே ஆகணுமே..// அது சும்மா உல்லுல்லாயி.
ReplyDelete@FOOD//உங்கள் பதிவுகளில் மிகவும் கவர்ந்த பதிவு. நன்றி.// நன்றி சார்.
ReplyDelete@Maya//Pugundha veetu kashtathai vida, porandha veetula urimai pogira sogam, romba kodumayanadhu.// உண்மை தான் சகோதரி..கருத்துக்கு நன்றி.
ReplyDelete@தமிழ்வாசி - Prakash //இப்ப தான் வந்தேன்... விரிவான அலசல் பின்னூட்டம் பிறகு... // ரைட்டு.
ReplyDelete@Kss.Rajh
ReplyDelete//அழகாய் நச்சினு சில வரிகள்.சூப்பர்// நன்றி பாஸ்..
//from
நண்பர்கள்// - அப்படீன்னா என்ன அர்த்தம்?
@சி.பி.செந்தில்குமார் சீரியஸ்னா அண்ணனுக்கு பிடிக்காதே.
ReplyDelete@MANO நாஞ்சில் மனோ //இந்த பதிவுக்கு ஆயிரம் ஓட்டு....!!!// கள்ள ஓட்டு போடப் போறீங்களா? அதெல்லாம் தப்புண்ணே.
ReplyDelete@உலக சினிமா ரசிகன் //என் தவறை பின்னால் திருத்தி நல்ல மருமகனாக நடந்து கொண்டேன்.// அவங்க அருமை உணர்ந்தாலே எல்லாம் மாறிடும்..
ReplyDelete@!* வேடந்தாங்கல் - கருன் *! //ஒரு பதிவு மூலம் கண்கலங்க வேக்கமுடியும்ன்னு உங்க எழுத்து நிருபிக்குது..
ReplyDeleteபாராட்டுகள்..//
நீங்க சொல்றதைப் பார்த்தா இன்னைக்குப் பதிவை படிச்சிட்டீங்க போலிருக்கே.
@Carfire //உங்க நல்லா மனசு புரியாதவங்க இந்த பதிவ படிச்சாவது புரிஞ்சுக்கட்டும் அண்ணன் எவ்ளோ நல்லவர்னு......// உஷ்..அந்த ரகசியம் யாருக்கும் தெரிய வேணாம் ஃபயரு..அப்புறம் ‘நீல்லாம் இப்படி எழுதலாமா’ன்னு பாட்டுப்பாடி ஸ்டில்லே போட விட மாட்டாங்க..அது தேவையா?
ReplyDelete"தவளைக்குக்கூட நினைத்தால் நீரிலும் நிலத்திலும் வாழும் உரிமை உண்டு. நம் பெண்களுக்கு அந்த உரிமையும் இல்லை என்பதே நிதர்சனம்".
ReplyDeleteஉண்மையான கருத்து..
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com
எந்தக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய நல்ல பதிவு
ReplyDelete//போரினாலும், பொருளாதாரக் காரணங்களாலும் தன் சொந்த மண்ணை விட்டு வெளியேறும் மக்களின் துயரங்கள் நம் இலக்கியங்களில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் அதே நிகழ்வு நம் வீட்டுப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் காலங்காலமாய் நடந்துகொண்டே இருக்கிறது. அதைப் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றியே நாம் அவர்களுடன் வாழ்கிறோம்.//
ReplyDeleteசெம்ம டச்சிங் அண்ணே!
//கொஞ்சம் ரஃப் & டஃப் மாப்பிள்ளையாக நான் இமேஜை மெயிண்டய்ன் பண்ணியதால்//
அப்பிடியா அண்ணே! அப்புறம் அத நினச்சா அண்ணிக்கு ஒரே சிரிப்பா இருக்கும்ல! :-)
கண்களைக் குளமாக்கிய மற்றுமோர் பகிர்வு.
ReplyDeleteபொண்ணை நினைச்சு அழறாங்களா இல்லே பாவம்னு என்னை நினைச்சு அழறாங்களா’ன்னு அப்போது எனக்கு ஒரே குழப்பம். //
ReplyDeleteசேம் ப்ளட்
//Priya said...
ReplyDeleteஉண்மையான கருத்து..நன்றி,
பிரியா //
நன்றி சகோதரி.
ஜீ... said...
ReplyDelete//செம்ம டச்சிங் அண்ணே! // நன்றி தம்பி.
//கொஞ்சம் ரஃப் & டஃப் மாப்பிள்ளையாக நான் இமேஜை மெயிண்டய்ன் பண்ணியதால்//
அப்பிடியா அண்ணே! அப்புறம் அத நினச்சா அண்ணிக்கு ஒரே சிரிப்பா இருக்கும்ல! :-) //
அவ்வ்..பப்ளிக் ப்ளேஸ்ல இப்படி அண்ணனை கேவலப்படுத்தலாமா..
// 'பரிவை' சே.குமார் said...
ReplyDeleteகண்களைக் குளமாக்கிய மற்றுமோர் பகிர்வு.// நன்றி குமார்.
// ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteபொண்ணை நினைச்சு அழறாங்களா இல்லே பாவம்னு என்னை நினைச்சு அழறாங்களா’ன்னு அப்போது எனக்கு ஒரே குழப்பம். //
சேம் ப்ளட் //
ஆமாண்ணே..ஆமாம்.
>>செங்கோவி said...
ReplyDelete@FOOD//உங்கள் பதிவுகளில் மிகவும் கவர்ந்த பதிவு. நன்றி.// நன்றி சார்.
ஆஃபீசர் ஆஃபீசர். இப்படி உசுப்பேத்தி அவரை ரூட் மாத்திடாதீங்க
மனசை கனக்க வைத்த பதிவு
ReplyDeleteகடைசி பாடல் வரிகள்
அந்த படத்தை மீண்ட்டும் பாக்க ஆசையை கொடுத்து விட்டது
என்னய்யா ஆச்சி உனக்கு மாப்ள...இப்படி பாச வலையா இருக்கு...இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு!
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDelete@Yoga.s.FR //நிரூபன் ஒரு பதிவு போட்டிருக்கிறார்:கண்ணீர் பற்றியது.அது இப்போது ஒரு விவாதப் பொருளாகி விட்டது!இதையும் ஒரு தலைப்பாக்கி விவாதப் பொருளாக்கி விடலாமா?//
நிரூ மாதிரி என்னையும் கும்மலாம்னு ஐடியாவா..ஆளை விடுங்க சாமி.§§§§§இதுல என்னங்க இருக்குது?"கும்மாச்சி"ன்னு ஒருத்தர் பதிவு எழுதுறாரு!அவர கும்முறமா,இல்லியே?அவரையே கும்மாதப்போ,செங்கோவி நீங்க,உங்கள கும்முவமா?நிரூபன் கிட்ட பேசிப் பாக்கட்டுமா?
//Yoga.s.FR said...
ReplyDeleteநிரூபன் ஒரு பதிவு போட்டிருக்கிறார்:கண்ணீர் பற்றியது.அது இப்போது
ஒரு விவாதப் பொருளாகி விட்டது!இதையும் ஒரு தலைப்பாக்கி விவாதப் பொருளாக்கி
விடலாமா?... நிரூபன் கிட்ட பேசிப் பாக்கட்டுமா? //
பாஸ்..விவாதப் பொருள்னா என்ன? என்ன செய்வீங்க? அங்க நான் என்ன செய்யணும்?.....நானும் எவ்வளவு நேரம் தான் தெரிஞ்ச மாதிரியே சமாளிக்கிறது..அவ்வ்!
// விக்கியுலகம் said...
ReplyDeleteஎன்னய்யா ஆச்சி உனக்கு மாப்ள...இப்படி பாச வலையா இருக்கு...//
தெரியலை..திடீர்னு பாசம் பொங்கிடுச்சு மாப்ள..
// "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
ReplyDeleteமனசை கனக்க வைத்த பதிவு
கடைசி பாடல் வரிகள்
அந்த படத்தை மீண்ட்டும் பாக்க ஆசையை கொடுத்து விட்டது //
நல்ல படம் தான்..மீண்டும் பார்க்கலாம் துஷ்யந்தன்!
செங்கோவி said.....பாஸ்..விவாதப் பொருள்னா என்ன? என்ன செய்வீங்க? அங்க நான் என்ன செய்யணும்?.....நானும் எவ்வளவு நேரம் தான் தெரிஞ்ச மாதிரியே சமாளிக்கிறது..அவ்.....////விவாதப் பொருள்அப்பிடீன்னா.......................அது வந்து.............வீட்டில இருக்கிற "மேசை"அப்பிடீன்னு வச்சுக்குங்களேன்!நாங்க அத,அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேய்வோம்!எப்புடீன்னா,அதை செஞ்ச மரம் எப்புடி வந்திச்சு?அத யாரு வெட்டினா?(மரம் வெட்டி டாக்குட்டர் ராமதாஸ் கிடையாது!)அப்பிடீன்னு விவாதிப்போம்?!நீங்க ஒண்ணுமே பண்ண வேண்டியதில்ல!அப்புடியா?கரெக்டு!அப்புடிப் போடு அருவாள!ங்கிறமாதிரி ரிப்ளை குடுத்துகிட்டே இருக்கணும்(வேலை,வெட்டிக்கு போவலாமான்னெல்லாம் கேக்கப்பிடாது!)அம்புட்டுத்தேன்!
ReplyDeleteஇன்னிக்கு சன் டிவி ல 2 .30 க்கு இந்த படம் தான் போட்டாங்க ..உங்க பதிவும் என்னை பாதித்து விட்டது..
ReplyDeleteகொஞ்சம் ரஃப் & டஃப் மாப்பிள்ளையாக நான் இமேஜை மெயிண்டய்ன் பண்ணியதால்,>>>>
ReplyDeleteஇந்த தகவலை நாங்க நம்பனுமாக்கும்?
தவளைக்குக்கூட நினைத்தால் நீரிலும் நிலத்திலும் வாழும் உரிமை உண்டு. நம் பெண்களுக்கு அந்த உரிமையும் இல்லை என்பதே நிதர்சனம். >>>>
ReplyDeleteஉண்மை தான் மாமு... செம டச்சிங் வரிகள்
@Yoga.s.FR //நீங்க ஒண்ணுமே பண்ண வேண்டியதில்ல!அப்புடியா?கரெக்டு!அப்புடிப் போடு அருவாள!ங்கிறமாதிரி ரிப்ளை குடுத்துகிட்டே இருக்கணும்//
ReplyDeleteபாஸ்..இதைத் தானே நான் ஆஃபீஸ்ல டெய்லி பண்ணுதேன்..அப்போ ஒன்னும் பிரச்சினை இல்லை!
@கோவை நேரம் //இன்னிக்கு சன் டிவி ல 2 .30 க்கு இந்த படம் தான் போட்டாங்க/
ReplyDeleteநல்ல டைமிங்ல தான் நானும் ஃபீல் பண்ணியிருக்கேன் போல..நன்றி!
//தமிழ்வாசி - Prakash said... [Reply]
ReplyDeleteஉண்மை தான் மாமு... செம டச்சிங் வரிகள்//
இதுவரை முதல் வடை வாங்கியே பழக்கப்பட்ட தமிழ்வாசி இன்று கடைசி வடை வாங்கும் மர்மம் தான் என்ன....
தவளையால் எப்போதும் நீரிலும் நிலத்திலும் வாழ முடியும். பெண்களின் நிலையும் அப்படித்தானா? ///ஒரு பதிவு மூலம் கண்கலங்க வைக்க முடியும்னு உங்க எழுத்து நிருபிக்குது.வாத்தியாரோட(எம்.ஜி.ஆர்)படகோட்டி படப் பாட்டுக்கே(தரை மேல் பிறக்க வைத்தான்)கண் கலங்கும்!இது வேறு!
ReplyDeleteஇன்னிக்கு செவ்வாக்கிழமை.ஒருத்தரையும் காணம்.வேல அதிகம் போல????????
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteதவளையால் எப்போதும் நீரிலும் நிலத்திலும் வாழ முடியும். பெண்களின் நிலையும் அப்படித்தானா? ///ஒரு பதிவு மூலம் கண்கலங்க வைக்க முடியும்னு உங்க எழுத்து நிருபிக்குது.// நன்றி பாஸ்..
நேத்து நைட் ஃபீல் பண்ண ஆரம்பிச்சது, நானே மீண்டுட்டேன்..இன்னும் நீங்க மீளலையா..
//ஒருத்தரையும் காணம்.வேல அதிகம் போல??????//
எல்லாரும் தூங்கியிருப்பாங்க பாஸ்.
தவளைக்குக்கூட நினைத்தால் நீரிலும் நிலத்திலும் வாழும் உரிமை உண்டு. நம் பெண்களுக்கு அந்த உரிமையும் இல்லை என்பதே நிதர்சனம்
ReplyDeleteஆண் ஆதிக்கத்திற்கு சவுக்கடி ...
செங்கோவி said...
ReplyDelete@Yoga.s.FR //நீங்க ஒண்ணுமே பண்ண வேண்டியதில்ல!அப்புடியா?கரெக்டு!அப்புடிப் போடு அருவாள!ங்கிறமாதிரி ரிப்ளை குடுத்துகிட்டே இருக்கணும்//
பாஸ்..இதைத் தானே நான் ஆஃபீஸ்ல டெய்லி பண்ணுதேன்..அப்போ ஒன்னும் பிரச்சினை இல்லை!§§§§§அப்போ ஆட்டத்த ஆரம்பிச்சுடுங்க!
என்ன ஒரே செண்டிமெண்ட்...
ReplyDelete//ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு வேரோடு பிடிங்கி நடப்படும் வேதனையை எதனால் ஈடுகட்ட முடியும் //
ReplyDeleteபுதிய உறவுகள் அதை உணர்ந்து நடந்தால் வேதனை குறையும் அல்லவா?
செங்கோவி, இந்த சென்டிமென்டான விஷயமெல்லாம் பழைய காலத்துக்குத்தான் பொருந்தும். இந்த காலத்துக்கல்ல. முன்பு, பெண் பிறந்த வீட்டை விட்டு கணவன் வீட்டிற்குப் போவாள், ஒரு பக்கம் பிரிவுத் துயர், இன்னொருபக்கம் புகுந்த இடத்தில் மாமனார், மாமியார், கொளுந்தனுங்க, கணவனின் சகோதரிகள் என்று [முற்றிலும்] புது உறவுகள் . அந்தக் குடும்பத்தில் நல்லது கேட்டது என்று ஒன்றிப் போக வேண்டும், பிறந்த வீடு இன்னொரு உறவு வீடு மாதிரி, நினைக்க கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா இப்போ ஆண், பெண் இருவருமே படிக்கிறார்கள், வெளியூரில் வேலைக்குச் செல்கிறார்கள், இங்கேயே பெற்றோர்களைப் பிரிய வேண்டி வருகிறது. அப்படியே யாரவது பிடித்த பெண்/ஆணுடன் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுகிறார்கள். மேலும், தற்போது பையன்களும் திருமனதுக்கப்புரம் தனிக் குடித்தனம் போய் விடுகிறார்கள். பெற்றோர்களுடன் இருப்பதையும் காண்பதே அரிதாகி வருகிறது. ஆக ஆணோ பெண்ணோ [பறவைகள், பசுக்கள் போல] இறைக்கை முளைத்ததும் பறந்து போய் விடுகின்றன. [இது, அந்தப் பெண்ணின் குடும்பப் பிரிவை விட நெஞ்சுக்கு அதிகம் பாரமான விஷயமாகப் படுகிறதே!!]
ReplyDelete// FARHAN said...
ReplyDeleteதவளைக்குக்கூட நினைத்தால் நீரிலும் நிலத்திலும் வாழும் உரிமை உண்டு. நம் பெண்களுக்கு அந்த உரிமையும் இல்லை என்பதே நிதர்சனம்
ஆண் ஆதிக்கத்திற்கு சவுக்கடி ..//
இதுல எங்கய்யா ஆணாதிக்கம் வந்துச்சு?
//Amutha Krishna said...
ReplyDeleteஎன்ன ஒரே செண்டிமெண்ட்...//
திடீரென்று ஃபீல் ஆகிவிட்டேன்..
//
ReplyDeleteசென்னை பித்தன் said...
//ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு வேரோடு பிடிங்கி நடப்படும் வேதனையை எதனால் ஈடுகட்ட முடியும் //
புதிய உறவுகள் அதை உணர்ந்து நடந்தால் வேதனை குறையும் அல்லவா?//
ஆமாம் ஐயா..ஆமாம்!
//Jayadev Das said...
ReplyDeleteசெங்கோவி, இந்த சென்டிமென்டான விஷயமெல்லாம் பழைய காலத்துக்குத்தான் பொருந்தும்.//
இனி வரும் தலைமுறை அதை எளிதாக எடுத்துக்கொள்ளலாம்..நாங்கள் அப்படி எடுத்துக்கொள்ளவில்லை..