டிஸ்கி : இது சிரிப்புப் பதிவல்ல..சீரியஸ் பதிவு
குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, தமிழ் புத்தாண்டு, ஆங்கிலப்புத்தாண்டு என சில தினங்கள் வருவதும், உடனே எங்கு பார்த்தாலும் பெயர்ச்சி பலன்களும், புத்தாண்டு பலன்களும் காணக் கிடைப்பதும் வாடிக்கையாகி விட்டது. ஜோதிடம் பற்றி ஒன்றும் தெரியாத கால கட்டத்தில், நண்பர்கள் அதை வாங்கிப் படித்து உணர்ச்சிவசப்படுவதைக் கண்டு கேலி செய்வது என் வழக்கம். அதில் இருக்கும் ஒரு லாஜிக்கல் பிழையை நான் சுட்டிக்காட்டுவதுண்டு.
ஏதாவது ஒரு குரு/சனிப்பெயர்ச்சி பலனைப் பார்த்தால் ’மேஷ ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம்’ என்று போட்டிருப்பார்கள். அடுத்து புத்தாண்டு பலன் பார்த்தால் ’ரிஷப ராசிக்காரர்களே, பலநாள் கண்டுவந்த வெளிநாட்டுக் கனவு பலிக்கும் காலம் இது’ என்று போட்டிருப்பார்கள்.
இப்படியே ஒரு வருடத்தில் குறைந்தது மூன்று ராசிக்காரர்களை ‘கிளப்பி’விடுவார்கள். இருப்பதோ மொத்தம் 12 ராசிகள். இந்திய ஜனத்தொகை 108கோடி என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் ஒரு ராசிக்கு 9 கோடிப் பேர். பலன்களின் படி 27 கோடிப்பேர் வெளிநாடு சென்றிருக்க ’வாய்ப்பு’..எனவே குறைந்தது 13 கோடிப் பேராவது வெளிநாடு போவார்கள் என் எதிர்பார்க்கலாமா? இப்படியே தொடர்ந்தால் 9 வருடங்களில் இந்தியாவே காலி ஆகியிருக்க வேண்டுமே? ஏன் ஆகவில்லை? அப்போ, ஏமாற்றுகிறார்களா? - இந்தக் கேள்விகளைக் கேட்டால் நண்பர்கள் ‘ஆரம்பிச்சுட்டான்யா’ என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொள்வார்கள்.
உண்மையில் ஏன் இந்த ‘பலன்கள்’ சொன்னபடி நடப்பதில்லை?
ஒருவனுக்கு என்னெல்லாம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதை முதலில் சொல்வது ஜாதகக் கட்டம். அதில் கிரகங்கள் 12 வீடுகளில் அமர்ந்திருக்கும் அமைப்பினை வைத்து, வெளிநாட்டு வாழ்க்கை உண்டா, இல்லையா என்பதை நல்ல ஜோதிடரால் சொல்லிவிட முடியும். அடுத்து வருவது தசா-புக்தி. ஒவ்வொரு கிரகத்தின் பிடியிலும் மொத்த கட்டமும் குறிப்பிட்ட காலம் இருக்கும். கட்டப்படி அந்த கிரகம் செய்ய வேண்டிய வேலையை, அந்த காலத்தில் செய்து முடிக்கும்.
உதாரணமாக உங்கள் ஜாதகத்தில் ஒன்பதில் குரு இருப்பதாக வைத்துக்கொள்வோம். அது வெளிநாட்டு யோகத்தை கொடுக்க வாய்ப்பு உண்டு. அது எப்போது நடந்தேறும் என்றால் குரு வின் தசா/புக்தியில் நடக்கும். அதாவது விதிக்கப்பட்டதை நடத்தி வைக்க, குறிப்பிட்ட கிரகம் உதவும். கட்டமும், தசா/புக்தியுமே அடிப்படை. உங்களுக்கு கட்டப்படியும் வெளிநாட்டு யோகம் இருந்து, அதற்கு காரணகர்த்தாவான கிரகத்தின் தசா/புத்தி நடந்ததென்றால், 75% சக்ஸஸ் தான். அப்போ மீதி? அந்த மீதியே இந்த ‘பெயர்ச்சி’ பலன்கள் சொல்வது. இன்றைய தேதியில் ஒரு கிரகம் (சனி/குரு) இருக்கும் இடத்தினை வைத்து சொல்லும் கிரகாச்சாரமே இந்த பெயர்ச்சி/புத்தாண்டு/ராசி பலன்கள்.
எனவே கட்டமும் ஆஃப் ஆகி, தசா/புக்தியும் ’ஆப்பு’ ஆகியிருந்தால், இந்த 25%-ஆல் ஒரு பிரயோஜனமும் கிடையாது. எனவே இந்த ‘பெயர்ச்சி’ பலன்களை மட்டுமே படித்துவிட்டு ஆனந்தக் கூத்தாடுவதையோ, தலையில் துண்டைப்போட்டு அழுவதையோ விட்டுத் தள்ளுங்கள். இந்தப் பெயர்ச்சிப்படி கெட்ட நேரம் என்றாலும், அதை உறுதிப்படுத்த வேண்டியது கட்டமும், தசா/புக்தி நாதனும் தான்.
இப்போது விஷயத்திற்கு வருவோம். திருக்கணிதப்படி, வருகின்ற நவம்பர் ஒன்றாம் தேதி சனி பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு நகர்கிறார். இந்த இடநகர்வே, இப்போது சனிப்பெயர்ச்சி என பரபரப்பாக பேசப்படுகிறது. பொதுவாக சனி பகவான் தான் இருக்கும் ராசியையும், அதற்கு முந்தைய, பிந்தைய ராசியையும் நன்றாக ‘கவனிப்பார்’.
எனவே இந்த பெயர்ச்சியானது கன்னி-துலாம்-விருச்சிகம் ஆகிய மூவருக்கும் ஏழரைச்சனியை கொண்டுவருகிறது. (கன்னி-துலாம் ஏற்கனவே 7 1/2ல் தான்..). அதென்ன 7 1/2? அண்ணன் சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 வருடங்கள் இருப்பார். இப்போது துலாமை எடுத்துக்கொண்டால் கன்னியில் இருக்கும்போதே அதற்கு சனியின் பாதிப்பு ஆரம்பித்துவிட்டது. இப்போது துலாமிற்கு சனி வருவதால் அடுத்த 2 1/2 வருடங்களுக்கு 7 1/2ன் பாதிப்பு தான். அடுத்து விருச்சிகத்திற்கு போகும்போதும் சனியின் பாதிப்பாக கடைசி 2 1/2 வருடங்களுக்கு இருக்கும். மொத்ததில் 7 1/2 வருடங்கள் சனியின் கருணை நமக்குண்டு!
எனவே இந்த பெயர்ச்சியைப் பற்றி எல்லோரும் பதறிப் புலம்ப வேண்டிய அவசியம் இல்லை. 71/2 சனியின் ஆதிக்கத்தில் உள்ள கன்னி-துலாம்-விருச்சிக ராசிக்காரர்களும் அஷ்டமச்சனியை எதிர்கொள்ளப்போகும் மீன ராசிக்காரர்களும், கண்ட சனியை எதிர்கொள்ளப்போகும் மேஷ ராசிக்காரர்களும் மட்டும் இதைப் பற்றி கவலைப்பட்டால், போதுமானது. மற்றவர்கள் சும்மா பார்த்து வைத்துக்கொண்டாலே போதும். (சிம்ம ராசிக்காரர்களுக்கு 7 1/2 முடிவதால், அவர்கள் தேடித் தேடி சனிப்பெயர்ச்சி பலன்களைப் படித்து சந்தோசப்படவும்!)
இந்த 5 ராசிக்காரர்களும் ’சனியா?’ என்று அலற வேண்டாம். ஏற்கனவே சொன்னபடி, உங்கள் ஜாதகக் கட்டமும், தற்போதைய தசா/புக்தியும் நன்றாக இருந்தால், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஊமை அடியாக விழலாம். எனவே பத்திரிக்கைகளில் வரும் பலன்களைப் படித்துவிட்டு டென்சன் ஆகாமல், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு நல்ல ஜோதிடரிடம் உங்கள் ஜாதகத்தைக் கொடுத்து சரியான அறிவுரையை பெற்றுக்கொள்ளுங்கள். 7 1/2 வருடங்களுக்கு ஒன்றுமே செய்யாமல் நாம் சும்மா இருந்துவிட முடியாது. எனவே சிக்கலில் மாட்டாமல், வாழ்க்கையை ஓட்ட என்ன செய்யவேண்டும் என தெளிவாகக் கேட்டுக்கொண்டு, அதைக் கடைப்பிடித்து வாருங்கள்.
பொதுவாக இக்காலத்தில் ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை பயக்கும்.
வாழ்க வளமுடன்!
இரவு வணக்கம்!
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteஇரவு வணக்கம்!//
வணக்கம் ஐயா.
ஆஹா இன்னிக்கு ஜோதிடமா ?
ReplyDeleteவணக்கம் அண்ணே
ReplyDelete!வணக்கம் ஐயா!
//
ReplyDeleteM.R said...
ஆஹா இன்னிக்கு ஜோதிடமா ?//
ஆமாம் ரமேஷ்..
//கோகுல் said...
ReplyDeleteவணக்கம் அண்ணே //
வணக்கம் கோகுல்.
நெஜமாவே சீரியஸ் பதிவுதான் போல?
ReplyDeleteஅவையோருக்கு இரவு வணக்கம்!
ReplyDeleteசோதிடத்தில் இன்று எனக்கு கண்டம் சார்!
ReplyDelete//தனிமரம் said...
ReplyDeleteஅவையோருக்கு இரவு வணக்கம்!//
வணக்கம் நேசரே.
//தனிமரம் said...
ReplyDeleteசோதிடத்தில் இன்று எனக்கு கண்டம் சார்!//
அதான் கண்டத்தில் இருந்து தப்பி விட்டீர்களே..முருகனருள் முன்னிற்கும், கவலை விடுங்கள்.
அண்ணம் இதுலயும் பெரியாளுதாம்ல....
ReplyDeleteஇப்படி பொய் சொல்லுவதிலே சிலரின் கிளியோசியம் சூப்பர் ஹிட்சில் இருக்கையா?
ReplyDelete7 1/2 க்கு இன்றுதான் அர்த்தம் தெரிந்து கொண்டேன்
ReplyDeleteபயனூட்டும் பகிர்வு.சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுப்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள்!என்னைப் பொறுத்த வரை ஜாதகமே பார்ப்பதில்லை!ஏன் ஜாதகமே என்னிடம் இல்லை!ஊரில் அப்பப்போ இடம் பெயர்ந்த சகோதரிகள் அதனை கூட எடுத்துக் கொண்டா போயிருப்பார்கள்?ஏலவே வீட்டுப் பத்திரமே காணாமல் அலைகிறார்கள்.ஜாதகமாவது?
ReplyDeleteஇரண்டு சாப்பாடு போட்டுக் கொடுத்து விட்டு பின்னால் வாரன் செங்கோவி அண்ணா!
ReplyDeleteWhy .......why.....why......
ReplyDeleteBlog mari vanthuteenaa ??????
Ithu sthish blog -aa ???
ஆஹா ஜோதிடத்தில் விழிப்புணர்வு பதிவு
ReplyDeleteவருகை தந்தவர்களுக்கும்,வருகை தந்திருப்பவர்களுக்கு,வருகை தர இருப்போருக்கும் அன்பான வணக்கங்கள்!
ReplyDelete// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteநெஜமாவே சீரியஸ் பதிவுதான் போல?//
என்னண்ணே இந்த கமெண்ட்டு ஆட்டோமெடிக்கா ஸ்பேமுக்கு போகுது?
மொத்தம் 12 ராசிகள். இந்திய ஜனத்தொகை 108கோடி என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் ஒரு ராசிக்கு 9 கோடிப் பேர். பலன்களின் படி 27 கோடிப்பேர் வெளிநாடு சென்றிருக்க ’வாய்ப்பு’..எனவே குறைந்தது 13 கோடிப் பேராவது வெளிநாடு போவார்கள் என் எதிர்பார்க்கலாமா? இப்படியே தொடர்ந்தால் 9 வருடங்களில் இந்தியாவே காலி ஆகியிருக்க வேண்டுமே? //
ReplyDelete//
ஒரு வேளை இங்கே இருக்கவங்க எல்லாரும் வெளிநாடு போய் வெளிநாட்டுல இருந்து இங்க வந்து இருப்பாங்களோ?
இன்ட்லி மூன்றாவது வாக்கு
ReplyDelete//////செங்கோவி said...
ReplyDelete// பன்னிக்குட்டி ராம்சாமி said...
நெஜமாவே சீரியஸ் பதிவுதான் போல?//
என்னண்ணே இந்த கமெண்ட்டு ஆட்டோமெடிக்கா ஸ்பேமுக்கு போகுது?////////
இங்க சீரியஸ்னு கமெண்ட்டு போட்டாவே ப்ளாகருக்கு புடிக்கல போல.........
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅண்ணம் இதுலயும் பெரியாளுதாம்ல....
அவர் எப்பவும் ,எதிலையும் பெரியவர் தான் நண்பரே ,
அவருடையது எப்பவுமே தொலைநோக்கு பார்வை தான்
//
ReplyDeleteYoga.s.FR said...
பயனூட்டும் பகிர்வு.சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுப்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள்!என்னைப் பொறுத்த வரை ஜாதகமே பார்ப்பதில்லை!//
இது ரொம்ப நல்லது ஐயா.
நாளென் செய்யும் , வினை தான் என் செய்யும், எனை நாடி வந்த கோளென் செய்யும்.........
சனி சூரியனைச் சுற்றும் காலம் 30 வருசம், அதை நான்கு பாகமாக பிரித்தால் 7.5 வருசம், அதான் அந்த ஏழரை.......
ReplyDeleteபொதுவாக சனி பகவான் தான் இருக்கும் ராசியையும், அதற்கு முந்தைய, பிந்தைய ராசியையும் நன்றாக ‘கவனிப்பார்’. ////ஓட்டல்ல தெரிஞ்ச "சர்வர்" நல்லாக் கவனிக்கிற மாதிரின்னு சொல்லுறீங்க!ஒ.கே.
ReplyDeleteYoga.s.FR said...
ReplyDeleteவருகை தந்தவர்களுக்கும்,வருகை தந்திருப்பவர்களுக்கு,வருகை தர இருப்போருக்கும் அன்பான வணக்கங்கள்!
வணக்கம் யோகா சார்
//
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
//////செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
நெஜமாவே சீரியஸ் பதிவுதான் போல?//
என்னண்ணே இந்த கமெண்ட்டு ஆட்டோமெடிக்கா ஸ்பேமுக்கு போகுது?////////
இங்க சீரியஸ்னு கமெண்ட்டு போட்டாவே ப்ளாகருக்கு புடிக்கல போல.......//
ஆனாலும் நீங்க பூந்து விளையாடக்கூடிய சீரியஸ் மேட்டர் தான் இது.
//
ReplyDeleteNAAI-NAKKS said...
Why .......why.....why......
Blog mari vanthuteenaa ??????
Ithu sthish blog -aa ???//
12 மணிவரை விழித்திருந்து பல்பு வாங்கிய நாய்-நக்ஸ் வாழ்க.
பன்னிக்குட்டி ராம்சாமி said... சனி சூரியனைச் சுற்றும் காலம் 30 வருசம், அதை நான்கு பாகமாக பிரித்தால் 7.5 வருசம், அதான் அந்த ஏழரை.......////அட!இவருக்குக் கூட விஷயம் தெரிஞ்சிருக்கு?
ReplyDelete//
ReplyDeleteM.R said...
7 1/2 க்கு இன்றுதான் அர்த்தம் தெரிந்து கொண்டேன்//
இத்தனை நாளா தெரியாதா? அப்போ 7 1/2ன்னா உள்குத்து பதிவு போடறதுன்னு நினைச்சீங்களா?
//
ReplyDeleteகோகுல் said...
மொத்தம் 12 ராசிகள். இந்திய ஜனத்தொகை 108கோடி என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் ஒரு ராசிக்கு 9 கோடிப் பேர். பலன்களின் படி 27 கோடிப்பேர் வெளிநாடு சென்றிருக்க ’வாய்ப்பு’..எனவே குறைந்தது 13 கோடிப் பேராவது வெளிநாடு போவார்கள் என் எதிர்பார்க்கலாமா? இப்படியே தொடர்ந்தால் 9 வருடங்களில் இந்தியாவே காலி ஆகியிருக்க வேண்டுமே? //
//
ஒரு வேளை இங்கே இருக்கவங்க எல்லாரும் வெளிநாடு போய் வெளிநாட்டுல இருந்து இங்க வந்து இருப்பாங்களோ?//
சூப்பர் கோகுல்...அப்படியும் இருக்குமோ?
//
ReplyDeleteM.R said...
7 1/2 க்கு இன்றுதான் அர்த்தம் தெரிந்து கொண்டேன்//
இத்தனை நாளா தெரியாதா? அப்போ 7 1/2ன்னா உள்குத்து பதிவு போடறதுன்னு நினைச்சீங்களா?
இல்ல பண்ணிக்குட்டி நண்பர் ஒரு அர்த்தம் சொல்றார் ,நீங்க ஒரு அர்த்தம் சொல்லியிருக்கீங்க ,
நீங்க சொன்ன அர்த்தம் இன்று தான் நான் அறிந்தேன் நண்பரே
ஊமை அடியாக விழலாம்.///இதால தான் நேத்து அதிரடியா "அவங்க" இடமெல்லாம் சோதனை போட்டாங்களோ?
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said... சனி சூரியனைச் சுற்றும் காலம் 30 வருசம், அதை நான்கு பாகமாக பிரித்தால் 7.5 வருசம், அதான் அந்த ஏழரை.......////அட!இவருக்குக் கூட விஷயம் தெரிஞ்சிருக்கு?//
அவரும் பெரிய்ய கை தான்..(எப்படின்னு கேட்காதீங்க)..
சனியின் மொத்த சுற்றுக்காலம் 30 வருசம் / 12 ராசி = 2.5 வருசம் * 3 = 7.5 வருசம்......
செங்கோவி said........நாளென் செய்யும் , வினை தான் என் செய்யும், எனை நாடி வந்த கோளென் செய்யும்.........///அதே!
ReplyDeleteசனியார் சூரியனுடைய தளத்தில் இருந்து 5 டிகிரி மேலும் கீழுமாக சுற்றுகிறார், அதனால் 15 வருடங்களுக்கு மேல்நோக்கியும் 15 வருடங்களுக்கு கீழ்நோக்கியும் செல்வார்......
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDelete//Yoga.s.FR said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... சனி சூரியனைச் சுற்றும் காலம் 30 வருசம், அதை நான்கு பாகமாக பிரித்தால் 7.5 வருசம், அதான் அந்த ஏழரை.......////அட!இவருக்குக் கூட விஷயம் தெரிஞ்சிருக்கு?//
அவரும் பெரிய்ய கை தான்..(எப்படின்னு கேட்காதீங்க)..
சனியின் மொத்த சுற்றுக்காலம் 30 வருசம் / 12 ராசி = 2.5 வருசம் * 3 = 7.5 வருசம்......
//
அண்ணன் அடுத்து "சனியைதேடி" அப்படின்னு ஒரு தொடர் எழுத ஆராய்ச்சி பண்ணப்போ கண்டு புடிச்சிருப்பாருன்னு நினைக்கிறேன்
//M.R said...
ReplyDelete//
M.R said...
7 1/2 க்கு இன்றுதான் அர்த்தம் தெரிந்து கொண்டேன்//
இத்தனை நாளா தெரியாதா? அப்போ 7 1/2ன்னா உள்குத்து பதிவு போடறதுன்னு நினைச்சீங்களா?
இல்ல பண்ணிக்குட்டி நண்பர் ஒரு அர்த்தம் சொல்றார் ,நீங்க ஒரு அர்த்தம் சொல்லியிருக்கீங்க ,//
என் விளக்கத்தை மேலே பாருங்க..
//
ReplyDeleteYoga.s.FR said...
ஊமை அடியாக விழலாம்.///இதால தான் நேத்து அதிரடியா "அவங்க" இடமெல்லாம் சோதனை போட்டாங்களோ?//
நானும் அதான் நினைச்சேன்..என்னமோ மாறிப்போச்சு..
செங்கோவி said...
ReplyDeleteஎன் விளக்கத்தை மேலே பாருங்க..//
பார்த்தேன் நண்பரே
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteசனியார் சூரியனுடைய தளத்தில் இருந்து 5 டிகிரி மேலும் கீழுமாக சுற்றுகிறார், அதனால் 15 வருடங்களுக்கு மேல்நோக்கியும் 15 வருடங்களுக்கு கீழ்நோக்கியும் செல்வார்......//
அண்ணன் பூமியைத் தேடி-க்கு பெரிய்ய ஆராய்ச்சியே பண்ணியிருப்பார் போல..
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteசனியார் சூரியனுடைய தளத்தில் இருந்து 5 டிகிரி மேலும் கீழுமாக சுற்றுகிறார், அதனால் 15 வருடங்களுக்கு மேல்நோக்கியும் 15 வருடங்களுக்கு கீழ்நோக்கியும் செல்வார்.....//
ஏன்ணே, சூரிய மண்டலத்துல சனி 360 டிகிரி சுத்தி வருவாரே? மீதி எங்கே?
//தனிமரம் said...
ReplyDeleteஇப்படி பொய் சொல்லுவதிலே சிலரின் கிளியோசியம் சூப்பர் ஹிட்சில் இருக்கையா?//
இவரு சும்மா போகாம, பத்த வச்சிட்டுல்ல போயிருக்காரு..
இதைப் பற்றியெல்லாம் iவிரிவா ஆராய்ந்து பாக்காமல்,சும்மா புரட்டாதி சனிக்கு சநீஸ்வரனுக்கு எள் எண்ணெய் எரித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று...................................!
ReplyDelete//
ReplyDeleteசெங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
சனியார் சூரியனுடைய தளத்தில் இருந்து 5 டிகிரி மேலும் கீழுமாக சுற்றுகிறார், அதனால் 15 வருடங்களுக்கு மேல்நோக்கியும் 15 வருடங்களுக்கு கீழ்நோக்கியும் செல்வார்.....//
ஏன்ணே, சூரிய மண்டலத்துல சனி 360 டிகிரி சுத்தி வருவாரே? மீதி எங்கே?//
அய்யய்யோ..அண்ணனை சனி என்னமோ பண்ணிட்டார்...ஆளைக் காணோம்.
//
ReplyDeleteYoga.s.FR said...
இதைப் பற்றியெல்லாம் iவிரிவா ஆராய்ந்து பாக்காமல்,சும்மா புரட்டாதி சனிக்கு சநீஸ்வரனுக்கு எள் எண்ணெய் எரித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று...................................!//
யாவாரம் நல்லா நடந்தாச் சரி தான்..
ஒரு ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் பெற்ற ஒருவன்,
ReplyDeleteஒருவன்!
// கோகுல் said...
ReplyDeleteஒரு ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் பெற்ற ஒருவன்,
ஒருவன்!//
யாருய்யா அது? அப்படி யாருமே கிடையாதே..
///////செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
சனியார் சூரியனுடைய தளத்தில் இருந்து 5 டிகிரி மேலும் கீழுமாக சுற்றுகிறார், அதனால் 15 வருடங்களுக்கு மேல்நோக்கியும் 15 வருடங்களுக்கு கீழ்நோக்கியும் செல்வார்.....//
ஏன்ணே, சூரிய மண்டலத்துல சனி 360 டிகிரி சுத்தி வருவாரே? மீதி எங்கே?/////
இந்த 5 டிகிரி எப்படின்னா, சூரியனும் பூமியும் ஒரே தளத்தில் இருப்பதாக வெச்சிக்கிட்டோம்னா சனி அதற்கு மேல் 2.5 டிகிரியும், கீழ் 2.5 டிகிரியுமாக சென்று வரும்
செங்கோவி said........யாவாரம் நல்லா நடந்தாச் சரி தான்..////கோயில் வச்சிருக்கவனெல்லாம் கோடீஸ்வரனா இருக்கான்!
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete///////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
சனியார் சூரியனுடைய தளத்தில் இருந்து 5 டிகிரி மேலும் கீழுமாக சுற்றுகிறார், அதனால் 15 வருடங்களுக்கு மேல்நோக்கியும் 15 வருடங்களுக்கு கீழ்நோக்கியும் செல்வார்.....//
ஏன்ணே, சூரிய மண்டலத்துல சனி 360 டிகிரி சுத்தி வருவாரே? மீதி எங்கே?/////
இந்த 5 டிகிரி எப்படின்னா, சூரியனும் பூமியும் ஒரே தளத்தில் இருப்பதாக வெச்சிக்கிட்டோம்னா சனி அதற்கு மேல் 2.5 டிகிரியும், கீழ் 2.5 டிகிரியுமாக சென்று வரும்//
ஓகே, செங்குத்து அச்சில் சொல்றீங்களா? கூடவே வட்டப்பாதையில் சுற்றாதா?
//Yoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி said........யாவாரம் நல்லா நடந்தாச் சரி தான்..////கோயில் வச்சிருக்கவனெல்லாம் கோடீஸ்வரனா இருக்கான்!//
ஆன்மீகம் எங்கேயும் எப்போதும் நல்ல பிசினஸ் தான்.
வட்டப்பாதையில் சுற்றும் போதுதான் இப்படி ஆகும்......
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteவட்டப்பாதையில் சுற்றும் போதுதான் இப்படி ஆகும்......//
அப்போ சரி தான்...கிடைமட்டமா 360 டிகிரி சுத்திக்கிட்டே, வெர்டிகலா 2 1/2 டிகிரி சனி சார் ஏறி இறங்குறாரு..
நல்ல ஒரு கும்மியில் கலக்க முடியாமல் வேலை தொடர்வதால் இன்னொரு பதிவில் சந்திகின்றேன் அவையோர்களுக்கு மீண்டும் இரவு வணக்கம்!
ReplyDelete/////செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வட்டப்பாதையில் சுற்றும் போதுதான் இப்படி ஆகும்......//
அப்போ சரி தான்...கிடைமட்டமா 360 டிகிரி சுத்திக்கிட்டே, வெர்டிகலா 2 1/2 டிகிரி சனி சார் ஏறி இறங்குறாரு../////
பாய்ண்ட்.........
http://speaktoshadow.blogspot.com/2011/10/blog-post.html
ReplyDeleteமுடிஞ்சா இத கொஞ்சம் பாருங்களேன்!
//தனிமரம் said...
ReplyDeleteநல்ல ஒரு கும்மியில் கலக்க முடியாமல் வேலை தொடர்வதால் இன்னொரு பதிவில் சந்திகின்றேன் அவையோர்களுக்கு மீண்டும் இரவு வணக்கம்!//
வணக்கம் நேசரே..’விவாதம்’ செய்து வேறு களைப்பாக இருப்பீர்கள். நன்றாக ஓய்வெடுங்கள்.
இலங்கையில் இரண்டு ஜோதிடர்கள் வேறு,வேறு ஜாதகக் கணிப்பீட்டை செய்வதால்,முக்கிய நாட்கள் வேறுபாடாக இருக்கின்றன.இதனால் குழப்பம் ஏற்படுகிறது.சமீப நவராத்திரி பூஜை கூட இலங்கையில் எட்டு நாட்களும்,புலம்பெயர் தேசத்தில் ஒன்பது நாட்களும் அநுஷ்டித்தார்கள்!(விஜயதசமி சேர்க்கவில்லை)இதனால் ஜோதிடத்தையே சிரிப்புக்குடமாக ஆக்கி விட்டார்கள்,ஜோதிடர்கள்!
ReplyDeleteதனிமரம் said... நல்ல ஒரு கும்மியில் கலக்க முடியாமல் வேலை தொடர்வதால் இன்னொரு பதிவில் சந்திகின்றேன் அவையோர்களுக்கு மீண்டும் இரவு வணக்கம்!/// நன்றி,இரவு வணக்கம்!மங்களம் உண்டாகட்டும்!(வாழ்த்தினேன்,அவ்வளவு தான்!)
ReplyDelete2012-க்கு
ReplyDeletehttp://www.astro.com/swisseph/ae/2000/ae_2012.pdf
//
ReplyDeleteகோகுல் said...
http://speaktoshadow.blogspot.com/2011/10/blog-post.html
முடிஞ்சா இத கொஞ்சம் பாருங்களேன்!//
நல்ல சுட்டி..அது உண்மை தானா? பன்னியார் கொஞ்சம் பார்க்க முடியுமா?
//
ReplyDeleteYoga.s.FR said...
மங்களம் உண்டாகட்டும்!//
அப்படியா..சரி, சரி..நடக்கட்டும்..நடக்கட்டும்..நல்லது தானே..
அன்பர்கள் அனைவருக்கும் "சனி"யை மட்டும் கவனிக்குமாறு வேண்டுகிறேன்!அவர் பிடித்தால்................ அவ்வளவு தான் சொல்வேன்!
ReplyDelete/////செங்கோவி said...
ReplyDelete//
கோகுல் said...
http://speaktoshadow.blogspot.com/2011/10/blog-post.html
முடிஞ்சா இத கொஞ்சம் பாருங்களேன்!//
நல்ல சுட்டி..அது உண்மை தானா? பன்னியார் கொஞ்சம் பார்க்க முடியுமா?//////
அது செவிவழிச்செய்தி மாதிரி தெரியுது, விக்கிப்பீடியாவுல அதுபத்தி எதுவும் இல்ல...
Yoga.s.FR said...
ReplyDeleteஅன்பர்கள் அனைவருக்கும் "சனி"யை மட்டும் கவனிக்குமாறு வேண்டுகிறேன்!அவர் பிடித்தால்................ அவ்வளவு தான் சொல்வேன்!//
ஆமாம் ஐயா!
//
ReplyDeleteYoga.s.FR said...
அன்பர்கள் அனைவருக்கும் "சனி"யை மட்டும் கவனிக்குமாறு வேண்டுகிறேன்!//
எச்சரிக்கைக்கு நன்றி ஐயா!!!
செங்கோவி said... // Yoga.s.FR said... மங்களம் உண்டாகட்டும்!// அப்படியா..சரி, சரி..நடக்கட்டும்..நடக்கட்டும்..நல்லது தானே..////இது தெரிந்து தான் முன் கூட்டியே சொன்னேன்!வெறும் வாழ்த்து தான் என்று.
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////செங்கோவி said...
//
கோகுல் said...
http://speaktoshadow.blogspot.com/2011/10/blog-post.html
முடிஞ்சா இத கொஞ்சம் பாருங்களேன்!//
நல்ல சுட்டி..அது உண்மை தானா? பன்னியார் கொஞ்சம் பார்க்க முடியுமா?//////
அது செவிவழிச்செய்தி மாதிரி தெரியுது, விக்கிப்பீடியாவுல அதுபத்தி எதுவும் இல்ல...
//
எனக்கும் டவுட்டாதான் இருந்துச்சு.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////செங்கோவி said...
//
கோகுல் said...
http://speaktoshadow.blogspot.com/2011/10/blog-post.html
முடிஞ்சா இத கொஞ்சம் பாருங்களேன்!//
நல்ல சுட்டி..அது உண்மை தானா? பன்னியார் கொஞ்சம் பார்க்க முடியுமா?//////
அது செவிவழிச்செய்தி மாதிரி தெரியுது, விக்கிப்பீடியாவுல அதுபத்தி எதுவும் இல்ல...//
அப்படித் தான் தெரியுது..காலையில் யாராவது சொல்கிறார்களான்னு பார்ப்போம்.
// Yoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி said... // Yoga.s.FR said... மங்களம் உண்டாகட்டும்!// அப்படியா..சரி, சரி..நடக்கட்டும்..நடக்கட்டும்..நல்லது தானே..////இது தெரிந்து தான் முன் கூட்டியே சொன்னேன்!வெறும் வாழ்த்து தான் என்று.//
ஐயாவும் சரியாகக் கணிக்கின்றீர்களே!
சீரியஸ் பதிவுக்கு 74 கமெண்ட்டா..என்னய்யா இது..
ReplyDeleteவணக்கம் மாப்பிள..
ReplyDeleteஎன்ன அண்ணனை இங்க கட்டி வைச்சிருக்கீங்க நிரூபன் இவரைத்தானே நடுவரா போட்டு கடையை திறந்து வைச்சிட்டு போட்டார் !!!
//காட்டான் said...
ReplyDeleteவணக்கம் மாப்பிள..
என்ன அண்ணனை இங்க கட்டி வைச்சிருக்கீங்க நிரூபன் இவரைத்தானே நடுவரா போட்டு கடையை திறந்து வைச்சிட்டு போட்டார் !!!//
ஹா..ஹா..நாட்டாமை இப்படிப் பண்ணலாமா? (அதுசரி, நீங்களும்தானே நாட்டாமை? )
சனி பகவான் எனக்கு தூரத்து உறவு அதனால அவரை விட்டுட்டேன்யா.. அது சரி மங்களம்"உண்டாயிருக்காங்களா " சொல்லவே இல்லை!!!? வாழ்த்துக்கள்
ReplyDeleteகோகுல் said...
ReplyDeletehttp://speaktoshadow.blogspot.com/2011/10/blog-post.html/////நானும் பார்த்தேன். நம்பக்கூடியதாகவும் இருக்கிறது, நம்ப முடியாததாகவும் இருக்கிறது!ஆனால்,கடைசியில் நவக்கிரகங்களுக்கு அணியும் ஆடை?அது பற்றிய உங்கள் பார்வை?
செங்கோவி said...
ReplyDeleteசீரியஸ் பதிவுக்கு 74 கமெண்ட்டா..என்னய்யா இது..
//
சனி பகவானின் திருவிளையாடலோ?!
நான் நாட்டாமையில்லைன்னு விலகி அண்ணனுட்டதான் பொறுப்ப கொடுத்தேன் அவர அங்கால காணல... !!ஹி ஹி
ReplyDelete//காட்டான் said...
ReplyDeleteசனி பகவான் எனக்கு தூரத்து உறவு அதனால அவரை விட்டுட்டேன்யா.. //
உங்களுக்கு உறவுன்னா அவருக்கும் தானே..அதான் இங்க வந்துட்டார்.
//அது சரி மங்களம்"உண்டாயிருக்காங்களா " சொல்லவே இல்லை!!!? வாழ்த்துக்கள்//
அடடா..தனிமரம் எஸ்கேப் ஆகிட்டாரே..
வணக்கம் பொறேஸ்ரியே(காட்டான்)சீரியஸ் பதிவு,கில்மா இல்லை!சனி பிடிச்சிடும்!
ReplyDeleteநம்ம ஆங்கிலக் கணக்குப்படி சனி 2012 அக்டோபர் 6-ம் தேதி லிப்ராவுல இருந்து ஸ்கார்ப்பியோவுக்கு போறார்.....
ReplyDeletehttp://www.astro.com/swisseph/ae/2000/ae_2012.pdf
//Yoga.s.FR said...
ReplyDeleteகோகுல் said...
http://speaktoshadow.blogspot.com/2011/10/blog-post.html/////நானும் பார்த்தேன். நம்பக்கூடியதாகவும் இருக்கிறது, நம்ப முடியாததாகவும் இருக்கிறது!ஆனால்,கடைசியில் நவக்கிரகங்களுக்கு அணியும் ஆடை?அது பற்றிய உங்கள் பார்வை?//
அது உண்மை தான்...கலர் மட்டுமல்ல, அவை சுற்றும் காலம் உட்பட பலவிஷ்யங்களில் நம் முன்னோர் க்ருத்தும் அறிவியலும் ஒத்துப்போகின்றன.
உதாரணம் பன்னியார் சொன்ன 30வருச கணக்கு..
அனைவருக்கும் இரவு வணக்கம்.
ReplyDeleteஅப்ப இந்த சமூகம் கிளம்புது!
// கோகுல் said...
ReplyDeleteசெங்கோவி said...
சீரியஸ் பதிவுக்கு 74 கமெண்ட்டா..என்னய்யா இது..
//
சனி பகவானின் திருவிளையாடலோ?!//
அப்போ அவரு இங்க தான் வாட்ச் பண்ணிக்கிட்டு இருக்காரா..அவ்வ்!
அறிவித்தலின்றி நடுவராக்கினால் நான் என்ன கண்டேன்?இதோ புறப்படுகிறேன்!எல்லோருக்கும் மங்களம் உண்டாகட்டும்!
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteநம்ம ஆங்கிலக் கணக்குப்படி சனி 2012 அக்டோபர் 6-ம் தேதி லிப்ராவுல இருந்து ஸ்கார்ப்பியோவுக்கு போறார்.....
http://www.astro.com/swisseph/ae/2000/ae_2012.pdf//
ஆமாம், ஜோதிடக் கணக்கீட்டில் இந்த கால வித்தியாசம் உண்டு..
//கோகுல் said...
ReplyDeleteஅனைவருக்கும் இரவு வணக்கம்.
அப்ப இந்த சமூகம் கிளம்புது!//
நல்லது..கடை சாத்தும் நேரம் ஆகிவிட்டது..ஐயாவும் கிளம்பிவிட்டார்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள்.
ReplyDeleteபொன் நுயி.
டஷ்போர்ட்ல அண்ணனோட பதிவ காணோம்னு தேடிக்கிட்டிருந்தேன், ஒரு வேல படம் கிடம் பாக்க போயிருப்பரோன்னு நினச்சா, இவுரு வேற டாபிக்ல பதிவு போட்டிருக்காரு, நாய்-நக்ஸ் பீலின்க்தான் நமக்கும். என்னவோ போங்கண்ணே, நமக்கும் இந்த ராரிபலனுக்கும் ராசியே இல்ல, சொல்றது எதுவுமே நடக்கிறதில்ல..
ReplyDeleteநிரூபன் பதிவுக்கு டைம் சரியில்லை என்று விளக்கம் கொடுத்து விட்டேன்.ஏதோ நம்பளால முடிஞ்சது.ஹி!ஹி!ஹி! பொன் நுயி,அ துமா!
ReplyDeleteஇது சிரிப்புப் பதிவல்ல..சீரியஸ் பதிவு//
ReplyDeleteஅப்ப இந்த விளையாட்டுக்கு நான் வரல
மாம்ஸ், நான் சிம்மம்
ReplyDeleteஎன் அம்மா போன் பண்ணி ஏற்கனவே சொல்லியிருக்கா.. இனியாவது விடிவு பிறக்குமா பார்ப்பம்
நான் முன்னர் நம்புவதில்லை சோதிடம்,ஆனால் இப்போ ஏழரை சனி நடக்கிறது..பலன்களில் இருந்து நம்புகிறேன்!
ReplyDeleteபாஸ் என் பலனையும் கொஞ்சம் பாத்து சொல்லுங்க ஒரே களோரமாக இருக்கு..
ReplyDeleteஇந்திய ஜனத்தொகை 108கோடி என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் ஒரு ராசிக்கு 9 கோடிப் பேர். பலன்களின் படி 27 கோடிப்பேர் வெளிநாடு சென்றிருக்க ’வாய்ப்பு’..எனவே குறைந்தது 13 கோடிப் பேராவது வெளிநாடு போவார்கள் என் எதிர்பார்க்கலாமா?//
ReplyDeleteஹா ஹா நண்பா.. 108 கோடி பேர்ல ராசிகள் 50 பேர் ஒரு ராசியும் 10 பேர் ஒரு ராசியும் இப்படி முன்ன பின்ன இருக்கலாம்.. கணக்குல புலி.. கொட்டை எடுத்ததா.. எடுக்காததான்னு கேட்டுடப்படாது... அவ்வ்வ்வ்வ்வ்வ்
கிரகத்துல உச்சம் பெற்ற ஒருவன்.. ஒருவன்.. பதிவை படிக்காமலும் கமேண்ட்லாம் போடலாம்..படித்தும் போடலாம் கண்டுக்காதீங்க.... :-)
ReplyDeleteபத்திரிக்கைகளில் வரும் பலன்களைப் படித்துவிட்டு டென்சன் ஆகாமல், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு நல்ல ஜோதிடரிடம் உங்கள் ஜாதகத்தைக் கொடுத்து சரியான அறிவுரையை பெற்றுக்கொள்ளுங்கள். //
ReplyDeleteமிகவும் சரியாக சொன்னீங்க நண்பா... நிறைய நாட்களில் இது போன்ற பலன்கள் பயத்தை கொடுத்துவிடுகிறது...நல்ல ஆலோசனை பகிர்வுக்கு நன்றி நண்பா
ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை பயக்கும்.//
ReplyDeleteமனதுக்கும் உடலுக்கும் பலம்கொடுக்கும் ஆஞ்சநேயரை நம்பி வழிபட்டால் வழிபிறக்கும்... ஜெய் ஆஞ்சநேயா..
அண்ணே...நீங்களும் சனிப்பெயர்ச்சி பலன் போடப்போறீங்களோன்னு பயந்துட்டேன்...
ReplyDelete///(சிம்ம ராசிக்காரர்களுக்கு 7 1/2 முடிவதால், ..... சந்தோசப்படவும்!) ///
ReplyDeleteSAME BLOOD!!!
This comment has been removed by the author.
ReplyDelete//சிம்ம ராசிக்காரர்களுக்கு 7 1/2 முடிவதால், அவர்கள் தேடித் தேடி சனிப்பெயர்ச்சி பலன்களைப் படித்து சந்தோசப்படவும்!//
ReplyDeleteஹா ஹா ஹா! இதோ கிளம்பிடுறேன்!
ரொம்ப நொந்து போயிட்டேண்ணே!
ஆமா இது எதுக்கு திடீர்னு?
ReplyDeleteஓவர் சந்தோஷமா?
ஜோதிடர் சிகாமணி ஸ்ரீ செங்கோவி ,சென்னைக்கு வரும்போது சொல்லுங்க கடையை போட்டறலாம்!!!
ReplyDelete// Dr. Butti Paul said...
ReplyDeleteஎன்னவோ போங்கண்ணே, நமக்கும் இந்த ராரிபலனுக்கும் ராசியே இல்ல, சொல்றது எதுவுமே நடக்கிறதில்ல..//
ஏன் நடக்கறதில்லைன்னு தான் சொல்லியிருக்கேன்யா..
// Yoga.s.FR said...
ReplyDeleteநிரூபன் பதிவுக்கு டைம் சரியில்லை என்று விளக்கம் கொடுத்து விட்டேன்.ஏதோ நம்பளால முடிஞ்சது.//
ரெண்டு நாட்டாமைகளும் எஸ்கேப் ஆகிட்டீங்களே.
// KANA VARO said...
ReplyDeleteமாம்ஸ், நான் சிம்மம்
என் அம்மா போன் பண்ணி ஏற்கனவே சொல்லியிருக்கா.. இனியாவது விடிவு பிறக்குமா பார்ப்பம் //
சிம்மமா...ஹா..ஹா..அடி பலமாய்யா?
// K.s.s.Rajh said...
ReplyDeleteபாஸ் என் பலனையும் கொஞ்சம் பாத்து சொல்லுங்க ஒரே களோரமாக இருக்கு..//
உமக்கு வாயில் சனி...கொஞ்சநாளைக்கு மவுன விரதம் இருந்தால் நல்லது.
// மாய உலகம் said...
ReplyDeleteஇந்திய ஜனத்தொகை 108கோடி என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் ஒரு ராசிக்கு 9 கோடிப் பேர். பலன்களின் படி 27 கோடிப்பேர் வெளிநாடு சென்றிருக்க ’வாய்ப்பு’..எனவே குறைந்தது 13 கோடிப் பேராவது வெளிநாடு போவார்கள் என் எதிர்பார்க்கலாமா?//
ஹா ஹா நண்பா.. 108 கோடி பேர்ல ராசிகள் 50 பேர் ஒரு ராசியும் 10 பேர் ஒரு ராசியும் இப்படி முன்ன பின்ன இருக்கலாம்.. கணக்குல புலி.. கொட்டை எடுத்ததா.. எடுக்காததான்னு கேட்டுடப்படாது... //
ஆமாம் இருக்கலாம்..அப்போ 1 கோடி பேராவது வருசாவருசம் வெளிநாடு போகணுமே புளியாரே?
//மனதுக்கும் உடலுக்கும் பலம்கொடுக்கும் ஆஞ்சநேயரை நம்பி வழிபட்டால் வழிபிறக்கும்... ஜெய் ஆஞ்சநேயா..//
வியாழன்/சனியில் ஆஞ்சநேய வழிபாடு செய்வது ரொம்ப நல்லது. ரொம்ப வலிக்காது...
// C.P. செந்தில்குமார் said...
ReplyDeleteஅண்ணே...நீங்களும் சனிப்பெயர்ச்சி பலன் போடப்போறீங்களோன்னு பயந்துட்டேன்...//
இதுவும் சனிப்பெயர்ச்சி பலன் தான்யா.........
// • » мσнαη « • said...
ReplyDelete///(சிம்ம ராசிக்காரர்களுக்கு 7 1/2 முடிவதால், ..... சந்தோசப்படவும்!) ///
SAME BLOOD!!! //
அடடா..நிறைய சிங்கங்கள் ரணகளமாகி திரியுது போலிருக்கே..
// ஜோதிடர் சிகாமணி ஸ்ரீ செங்கோவி ,சென்னைக்கு வரும்போது சொல்லுங்க கடையை போட்டறலாம்!!!//
அடப்பாவிகளா..நல்லது சொல்ல விட மாட்டேங்கிறாங்களே..
ஜீ... said...
ReplyDelete// ரொம்ப நொந்து போயிட்டேண்ணே! //
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ....அவ்வ்!
//ஆமா இது எதுக்கு திடீர்னு?......ஓவர் சந்தோஷமா? //
ஹி..ஹி..கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்களே..புண்பட்ட மனசை பதிவு போட்டு ஆத்துவோம்...விடும்யா...விடும்யா.
@செங்கோவி
ReplyDelete///அடடா..நிறைய சிங்கங்கள் ரணகளமாகி திரியுது போலிருக்கே..///
சிங்கத்தை புலி மாதிரி பதுங்க வுட்டுடாங்க பாஸு!!!! இனி பாய்ச்சல் தான்!!
மாப்ள...இதுக்கு அந்த ராசி பலன் சொல்றவங்களே மேலு...கொய்யால கொலையா கொன்னுட்ட!
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDelete// Dr. Butti Paul said...
என்னவோ போங்கண்ணே, நமக்கும் இந்த ராரிபலனுக்கும் ராசியே இல்ல, சொல்றது எதுவுமே நடக்கிறதில்ல..//
ஏன் நடக்கறதில்லைன்னு தான் சொல்லியிருக்கேன்யா..///
அடச்சே, நம்ம நிலைமை இம்புட்டு கேவலமா போச்சே...
பாஸ்.. எனக்கும் ராசிபலனுக்கும் எட்டாப்பொருத்தம். சோ அடுத்த பதிவில மீட் பண்ணுறன்
ReplyDeleteகாலை வணக்கம்!(b)பொன் ஜூர்!
ReplyDeleteஎன்ன இது உண்மையிலேயே ஜோதிட பதிவா.... வேற ஏதாவது காமடியா இருக்கும்னு ஆசையா வந்தேன்...ஜோதிட பதிவு என்றால் வந்திருக்கவே மாட்டேன்....
ReplyDelete71/2 முடியிறதுக்குள்ள நிறைய 71/2ஐ இழுத்து வச்சிட்டுத்தான் போகும் போலவே... நிறைய பிரச்சினைகளை சுமக்கும் சிம்ம ராசிக்காரனுங்க...
ReplyDelete// விக்கியுலகம் said...
ReplyDeleteமாப்ள...இதுக்கு அந்த ராசி பலன் சொல்றவங்களே மேலு...கொய்யால கொலையா கொன்னுட்ட! //
யோவ், பிறந்தநாளை ஃபேமிலியோட எஞ்சாய் பண்ணாம இங்க என்னய்யா பண்றீங்க? ஒழுங்கா ஓடிடுங்க..
// Dr. Butti Paul said...
ReplyDeleteசெங்கோவி said...
// Dr. Butti Paul said...
என்னவோ போங்கண்ணே, நமக்கும் இந்த ராரிபலனுக்கும் ராசியே இல்ல, சொல்றது எதுவுமே நடக்கிறதில்ல..//
ஏன் நடக்கறதில்லைன்னு தான் சொல்லியிருக்கேன்யா..///
அடச்சே, நம்ம நிலைமை இம்புட்டு கேவலமா போச்சே...//
ஏன், பதிவைப் படிக்காம கமெண்ட் போட்டது தெரிஞ்சிடுச்சுன்னா....
// மதுரன் said...
ReplyDeleteபாஸ்.. எனக்கும் ராசிபலனுக்கும் எட்டாப்பொருத்தம். சோ அடுத்த பதிவில மீட் பண்ணுறன் //
ஹா.ஹா..எனக்குமே அப்படித்தான்..அதைத் தான் சொல்லியிருக்கேன்..
// Yoga.s.FR said...
ReplyDeleteகாலை வணக்கம்!(b)பொன் ஜூர்! //
மதிய வணக்கம்..பொன் மதியம்!!
// சசிகுமார் said...
ReplyDeleteஎன்ன இது உண்மையிலேயே ஜோதிட பதிவா.... வேற ஏதாவது காமடியா இருக்கும்னு ஆசையா வந்தேன்...ஜோதிட பதிவு என்றால் வந்திருக்கவே மாட்டேன்....//
ஏன்யா அழுறீங்க..அடுத்த பதிவுக்கு வாங்க.
// சே.குமார் said...
71/2 முடியிறதுக்குள்ள நிறைய 71/2ஐ இழுத்து வச்சிட்டுத்தான் போகும் போலவே... நிறைய பிரச்சினைகளை சுமக்கும் சிம்ம ராசிக்காரனுங்க...//
அது அப்படித்தான்..நாம தான் பம்மிடணும்..
நேத்திக்கு பிரெஞ்சு சொல்லிக் குடுத்தனே,படிச்சு மனப்பாடம்?!பண்ணியாச்சா?
ReplyDeleteஜோசியத்துக்குள் குதிச்சிட்டீங்களா...
ReplyDeleteஎன்ன பதிவு மாப்ள இது..
ReplyDeleteஏலரச் சனி எனக்கு உச்சத்திலங்கோ...
ReplyDeleteசெங்கோவி அவர்களே ,அவரின் நண்பர்களே, என்னுடைய "மூணாம் கத",
பயப்படாம படிங்க, பீ(ரீ)திக்கு நான் காரன்டீ
கண்கள் இரெண்டால்,உன் கண்கள் இரெண்டால்(சவால் சிறுகதைப் போட்டி -2011)
சாதகமாய் இருந்தால்தான் ஜாதகம்..!! :)
ReplyDelete// Yoga.s.FR said...
ReplyDeleteநேத்திக்கு பிரெஞ்சு சொல்லிக் குடுத்தனே,படிச்சு மனப்பாடம்?!பண்ணியாச்சா? //
ஐயா, ஆஃபீசில் இருக்கேன்..நைட்டு படிச்சு ஒப்பிக்கிறேன்..ஏதோ லந்தா-மார்தின்னு சொன்ன ஞாபகம்..
// F.NIHAZA said...
ReplyDeleteஜோசியத்துக்குள் குதிச்சிட்டீங்களா...//
அது மட்டும் ஏன் சகோ நல்லா இருக்கணும்?
// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஎன்ன பதிவு மாப்ள இது..//
ஹி..ஹி..நானா யோசிச்சேன் மாப்ள.
// IlayaDhasan said...
ReplyDeleteஏலரச் சனி எனக்கு உச்சத்திலங்கோ...
செங்கோவி அவர்களே ,அவரின் நண்பர்களே, என்னுடைய "மூணாம் கத",
பயப்படாம படிங்க, பீ(ரீ)திக்கு நான் காரன்டீ //
ஆஹா..ஏழரை ஆரம்பிக்குது போலிருக்கே...
// சேலம் தேவா said...
ReplyDeleteசாதகமாய் இருந்தால்தான் ஜாதகம்..!! :) //
இதென்னய்யா அநியாயமா இருக்கு..பாதகமா இருந்தா, என்னது அது?
அண்ணே...
ReplyDeleteஜோதிடம் எல்லா சொல்லுறீங்க.
அண்ணே நீங்க இதில சொல்லியிருக்கிற விசயம் எல்லாம் உண்மையா அண்ணே/.
ReplyDeleteஹே...ஹே...