உலகத் தரத்தில் ஒரு தமிழ் சினிமா கொடுப்பேன், தொழில்நுட்பரீதியாக தமிழ்சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்துவேன், நடிப்பில் புதிய பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வேன் - என்றெல்லாம் விஜய் எப்போதாவது எங்காவது சொல்லியிருக்கிறாரா?
இரண்டாம் பாதியில் தான் அண்ணன் சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கிறார். ஆனால் அதை முழுதாக ரசிக்க விடாமல் கடைசி வரை நம்மை பயத்திலேயே வைத்திருப்பது விஜய்யின் குருவி-சுறா போன்ற முந்தைய படங்கள் தான். இந்தப் படத்தின் கதையே சூப்பர் ஹீரோ கதை என்பதால், ஒரே அடியில் தளபதி 10 பேரை அடித்தாலும் நாம் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
தீபாவளிக்காக 4 நாள் லீவில் போய்விட்டு வந்தால், வேலாயுதத்தை வைத்து நடந்திருக்கும் ரணகளத்தைப் பார்க்கவும் அப்படி ஒரு சந்தேகமே வந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் படம் வந்தாலும் சரி, அஜித் - விஜய் படங்கள் வந்தாலும் சரி, இப்படி ஒரு ஆரவாரம் எழும்புவது வழக்கமாப் போய்விட்டது.
என்னைப் பொறுத்தவரை சுப்பிரமணியபுரம், ஆரண்ய காண்டம், எங்கேயும் எப்போதும் போன்ற படங்களுக்கான அளவிகோல் வேறு, இந்த மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கான அளவுகோல் வேறு. இரண்டரை மணி நேரம் ஜாலியாக பொழுதுபோக வேண்டும், காதில் சுற்றப்படும் பூவின் அளவு முடிந்தவரை கம்மியாக இருக்க வேண்டும், அவ்வளவு தான்.
பலரும் ரஜினி-அஜித்-விஜய் படங்களுக்கு முன்முடிவுகளுடன் விமர்சனம் எழுதுவது போன்றே தெரிகின்றது. நல்லவேளையாக 4 நால் லீவில் வேலாயுதம்-ஏழாம் அறிவு இரண்டையும் இணையப் பாதிப்பு இல்லாமல் பார்த்து விட்டேன். (சில நண்பர்கள் நேர்மையாக விமர்சனம் எழுதி உள்ளதும் தெரிகிறது..)
வேலாயுதம் படத்தின் கதை என்ன, நடிகர்கள்/டெக்னிசியன்கள் யார் என்பது பற்றி இந்நேரம் உங்களுக்கு மனப்பாடமே ஆகியிருக்கும். எனவே அதை விடுத்து..
இயக்குநர் ’ரீமேக்’ ராஜா என்ற ஜெயம் ராஜாவின் ஸ்பெஷாலிட்டியே தமிழ் ரசனைக்கு ஏற்றாற்போல், படத்தை மாற்றிவிடுவது தான். இதிலும் அதையே செய்திருக்கிறார். அதுவும் முதல் பாதி காமெடிக் கலக்கல். இந்தப் படத்தைப் பார்த்து ஒரு காட்சியில்கூட நீங்கள் சிரிக்கவில்லையென்றால், உங்களுக்கு பி.வி.நரசிம்மராவ் விருது கொடுக்கலாம்.
பொதுவாக அண்ணன் தங்கை பாசம் என்றால் மனதைப் பிழியும் செண்டிமெண்ட் காட்சிகள் தான் இருக்கும். இதிலோ ஏறக்குறைய முக்கால்மணி நேரத்திற்கு ஜாலி லூட்டி தான். கில்லியில் தங்கையுடன் சண்டை போடுவதில் காமெடி செய்த விஜய், இதில் பாசத்தைப் பொழிவதில் காமெடி செய்கிறார். அதுவும் ட்ரெய்னில் பிச்சைக்காரனுக்கு சோறு போடும் காட்சியில் சிரித்துச் சிரித்து வயிறே வலித்து விட்டது.
படத்தின் காமெடியில் மீதியை சந்தானம் பார்த்துக்கொள்கிறார். எப்போதும் ஜெயம் ராஜா-சந்தானம் கூட்டணி கலக்கும். இதிலும் திருடர் ஆக முயலும் கேரக்டரில் சிரிக்க வைக்கிறார்.
’குழந்தைத் தொழிலாளர்’ சரண்யா மோகனுக்கும் படத்தில் முக்கியமான வேடம். கல்யாண நாளில் கிஃப்ட் பார்சலை எடுத்துக்கொண்டு ஓடும் சீன் செம பரபர. பொம்மரில்லுவில் ஃப்ரெஷ் ஆக இருந்த ஜெனிலியா இதில் முத்திப் போய் வருகிறார்.(உனக்கு அப்படித் தான் தெரியும்..) ஆனால் நடிப்பில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிடுவது இவர் தான்.
அடுத்து வருவது
ஹன்சிகா அவர்கள்.
தலைவி நடிப்பைத் தவிர எல்லாத்தையும் இந்தப் படத்தில் காட்டுகிறார். அந்த கிராமப் பெண் கேரக்டருக்கும் அவர் சுத்தமாகப் பொருந்தவில்லை என்பதையும் நாம் வருத்தத்தோடு ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். சிவபெருமான் (அல்லது சிவாஜி?) போல் ’நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே’ என்று தலைவியும் பாடலாம்.
படத்தில் ரசிக்கும்படி அமைந்த இன்னொரு விஷயம் அந்த ரயில் ஃபைட் சீன் அட்டகாசம். ஃபைட் சீன்களில் விஜய் இவ்வளவு ரிஸ்க் எடுப்பது இது தான் முதல் முறை என்று நினைக்கின்றேன்.
தெலுங்கு ஆசாமிகள் போன்ற வில்லன் ஆட்கள் தான் படத்தின் பெரிய குறை. அதுவும் இப்படி ஒரு உள்துறை அமைச்சரை தெலுங்குப் படத்தில் தான் பார்க்க முடியும்.
படத்தைப் பற்றி மொத்தமாகச் சொல்வதென்றால் வேல்+ஆயுதம் என்று பிரித்துக்கொள்ளலாம். முன்பாதி ’வேல்’ எப்போதும் போல் எல்லோருக்கும் நன்மையே செய்கிறது. இரண்டாம் பாதி ஆயுதம் விஜய் ரசிகர்களுக்காக செய்யப்பட்டது. ஒருவேளை உங்களுக்கும் பிடிக்கலாம்.
வடை
ReplyDeleteவணக்கம் தீபாவளி கொண்டாட்டம் ஜோரா வாத்தியாரே!
ReplyDeleteதீபாவளிப் படங்கள் பார்த்திட்டீங்களா நாமா இன்னும் போகலா.
ReplyDeleteஇந்த வாரம் கருத்து மோதலுக்கு நாமா போகல வாத்தியாரே!
ReplyDeleteஹன்சிகா வாழ்க
ReplyDeleteதீபாவளி நன்றாகக் கழிந்ததா
ReplyDeleteவணக்கம் மாப்பிள..
ReplyDeleteஐயோ நீங்களுமா..?
ReplyDeleteஹி ஹி அடுத்த பதிவில சந்திப்போம்
ஐயா பெரியவரே எல்லோரும் விமர்சனம் செய்கின்றீர்கள் நல்லது ஆனால் ஒரு படத்தில் நடிகர் நடிகைகள் மட்டும் தானா கண்ணுக்குத் தெரிகின்ற சுறாக்களா?????அந்தக் கடலில் (உள்ளே) பின்னால் இருக்கும் பாடல் ஆசிரியர்,இசையமைப்பாளர்,தொழில்நுட்பக், கலைஞர்கள், பற்றிய ஒரு சின்ன விடயத்தைக் கூட மறைக்கும் அளவுக்கு விமர்சன விளம்பரம் தூக்கி நிற்பது மட்டும் புரியவில்லை வாத்தியாரே?
ReplyDeleteஇது உள்குத்து இல்லை செங்கோவியார் மீது இருக்கும் நம்பிக்கையில் தனிமரத்தின் கேள்விகள்.
ஹிட்சும் ஓட்டும் தூக்கி எறிந்தவருடன் நிம்மதியாக நாக்கைப் புடுங்களாம் என்ற தைரியம்!
மனதில் பட்டதைக் கேட்டேன் குறை இருப்பின் மன்னித்து தூக்கவா????
அண்ணா தெளிவாத்தான் இருக்கீங்க.. இந்த தெளிவு எல்லோருக்கும் வந்தால்
ReplyDeleteஇந்த சண்டை சச்சரவு வராது.. வேலாயுதம் பார்த்துட்டு வந்து நான் பேஸ்புக்கில் பகிர்ந்த எண்ண ஓட்டம் போலவே உங்க விமர்சனம் இருக்கிறது ஹப்பியா இருக்கு.. குறிப்பா ஹன்சிகா அக்கா மேட்டர்.. ஹா ஹா..
அடுத்த பதிவில் சந்திப்போம் அண்ணாச்சி!
ReplyDeleteநேர்மையான விமர்சனம்! எனக்குப் பிடிச்சிருக்கு!
ReplyDeleteஇன்று சனிக்கிழமையையும் காணோம், ஒனறையும் காணோம், கடையில கூட்டத்தையும் காணோம், என்ன நடக்குது இங்க?
ReplyDeleteஅண்ணன் உத்தரவு குடுத்துட்டாரு, நாளைக்கே படத்த பார்த்திடணும்...
ReplyDeleteஎன்ன இங்க பிரச்சனை.......?
ReplyDelete/////உலகத் தரத்தில் ஒரு தமிழ் சினிமா கொடுப்பேன், தொழில்நுட்பரீதியாக தமிழ்சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்துவேன், நடிப்பில் புதிய பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வேன் - என்றெல்லாம் விஜய் எப்போதாவது எங்காவது சொல்லியிருக்கிறாரா?///////
ReplyDeleteஅதெல்லாம் சரிதாண்ணே...... ஆனா அதுக்காக 10 வருசமா ஒரே கதைல ச்சே..ஒரே படத்துல நடிச்சா எப்படி?
////தீபாவளிக்காக 4 நாள் லீவில் போய்விட்டு வந்தால், வேலாயுதத்தை வைத்து நடந்திருக்கும் ரணகளத்தைப் பார்க்கவும் அப்படி ஒரு சந்தேகமே வந்துவிட்டது./////
ReplyDeleteஇது எங்க?
/////காதில் சுற்றப்படும் பூவின் அளவு முடிந்தவரை கம்மியாக இருக்க வேண்டும், அவ்வளவு தான்.////
ReplyDeleteபிரச்சனையே இங்கதானே? அந்த ட்ரைன் ஜம்ப்பு ஞாபகம் இருக்குங்களா?
மத்தப்படி வேலாயுதம் போரடிக்காம நல்லாருக்குன்னுதான் நானும் கேள்விப்படுறேன்....
ReplyDelete////தலைவி நடிப்பைத் தவிர எல்லாத்தையும் இந்தப் படத்தில் காட்டுகிறார்.////
ReplyDeleteதலைவிய அதுக்குத்தானே படத்துல வெச்சிருக்காங்க.....
/////ஒரு அசைவு அசைந்தார் என்றால், இடுப்புச் சதை இரண்டு நிமிசத்திற்கு ஆடுகிறது.//////
ReplyDeleteங்கொய்யால இந்தாளு வெவகாரம் புடிச்ச ஆளுய்யா இதுக்குன்னே ஸ்டாப் வாட்ச் எடுத்துட்டு போயிருப்பாரு போல?
////// அது ஒரு பக்கம் போகுது, இது ஒரு பக்கம் போகுது..நமக்கு இருப்பதோ இரண்டு கண்கள்..என்ன செய்வேன்..என்ன செய்வேன்.. //////
ReplyDeleteயோவ் என்னய்யா இது.......?
அந்த கடைசி ஸ்டில்லுல டாகுடர் கண்ணு எங்க இருக்குன்னு பார்த்தீங்களா....?
ReplyDeleteஎன்ன அதுக்குள்ள சனிக்கெழம ஆரம்பிச்சிடுச்சா?
ReplyDeleteஉலகத் தரத்தில் ஒரு தமிழ் சினிமா கொடுப்பேன், தொழில்நுட்பரீதியாக தமிழ்சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்துவேன், நடிப்பில் புதிய பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வேன் - என்றெல்லாம் விஜய் எப்போதாவது எங்காவது சொல்லியிருக்கிறாரா?//
ReplyDeleteக.க.க.போ… இதை விளங்கிக் கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லையே!
அடுத்து வருவது
ReplyDeleteதங்கத் தலைவி-
பெரிய பேரிக்கா-
கொழு கொழு கொய்யாக்கா-
பாதி உரிச்ச ஆரஞ்சு -
குத்தாத பலாக்கா - நம்
உலக உருண்டை
ஹன்சிகா அவர்கள். //
மாம்ஸ் நானும் கொஞ்சம் வர்ணிச்சிருக்கன். கடுப்பாகாமல் வாசியுங்கோ!
ஹன்ஸிகா
இளகிய மனம் படைத்த எந்த இளைஞனும் படத்தைப் பார்க்க வேண்டாம். மூன்று நாள் தூக்கம் இல்லாமல் தவிப்பீங்க. அவ்வளவு காட்டுறார் (நடிப்பை). முகத்தில் கொஞ்சம் முற்றல் தெரிந்தாலும் கொள்ளை அழகு. அழகான பல் வரிசை. எடுப்பான தேகம். “சதைப்பிடிப்பான இடுப்பு” (மன்னிச்சிடுங்க), சிம்ரனுக்கு அப்புறமா அதிக சீன்களில் இடுப்பைக் காட்டி நடிக்கிறார். கிராமத்து பெண்ணாக பாவாடை, தாவணியுடனேயே அலைகிறாரே கொஞ்சமாவது எங்களுக்காக இரங்க கூடாதா என ஏங்கும் என் போன்றவர்களுக்காக கடைசி நேரத்தில் “மொடேன் ட்ரெஸ்ஸில்” வந்து அதிர்ச்சி வைத்தியம் அளிக்கின்றார். எல்லாம் ஓ.கே பட் நடிப்பு தான் வர மாட்டேன் என்கிறது. அவ என்ன வைச்சுக்கிட்டா வஞ்சனை பண்றா?
“சில்லாக்ஸ்…” பாடலில் அவ்வளவு நெருக்கம் - கிறக்கம். சங்கீதா மெடம், விஜயை கண்டிச்சு வையுங்க. இப்பிடியா ஒரு மனுசன் பூந்து விளையாடுறது கிரவுண்டில?
என்னது வேலாயுதம் கம்மேர்சியால் படமா? நான்கூட இந்த தில்லு , தூளு , சாமி இந்த மாதிரி படங்கள்தான் கம்மேர்சியால் படங்கள்னு தப்பா நெனச்சிகிட்டு இருந்தேன் ... என்னை தெளிய வச்சதுக்க் நன்றிங்கோ... வேலாயுதம் ஒரு கமெர்சியல் படம், வேலாயுதம் ஒரு கமெர்சியல் படம், வேலாயுதம் ஒரு கமெர்சியல் படம் ஹி ஹி சும்மா சொல்லி பாத்துகிட்டேன் மறந்திரகூடாதுள்ள ..
ReplyDeleteஏன்யா மாப்ள ஒரு வித பயத்தோட எழுதிய பதிவு போல ஹிஹி!
ReplyDeleteமாம்ஸ் நாலு நாள் லீவு போட்டு ரெண்டு படங்களையும் பார்த்து, அதுல வேலாயுதம் விமர்சனம் எழுதலாமா வேணாமான்னு யோசிச்சு இப்பிடி டப்பாவை நசுக்கிடிங்களே....
ReplyDelete//குத்தாத பலாக்கா////
ReplyDeleteவெளக்கவும்....
:-)
முதலில் இரவில் வந்த சொந்தங்களுக்கு காலை வணக்கம்...
ReplyDeleteதீபாவளிக் கொண்டாட்டம் நல்லபடியாக முடிந்தது.
இங்கு கிளைமேட் மாறுவதாலோ என்னவோ ஃபீவர் வந்துவிட்டது. எனவே தான் இரவில் உட்கார முடியவில்லை..மன்னிச்சு.............!
(வேலாயுதம் பார்த்ததால தான் ஃபீவர்னு கிளப்பிவிட்றாதீங்கய்யா.......)
இந்ததெளிவு பலரிடம் இருப்பதில்லை.ம்ம்
ReplyDeleteஎங்க நீங்களும் அதே கடி தான் கடிப்பீங்களோனு பார்த்தேன்..
நியாயமா எழுதி இருக்கீங்க!
////குழந்தைத் தொழிலாளர்’ சரண்யா மோகனுக்கும் /////
ReplyDeleteஇதை நான் வண்மையாக கண்டிக்கின்றேன்.....இது நான் காண்டாவதற்காக திட்டமிட்டு...நீங்கள் எழுதிய வசனம்.......
////தலைவி நடிப்பைத் தவிர எல்லாத்தையும் இந்தப் படத்தில் காட்டுகிறார். அந்த கிராமப் பெண் கேரக்டருக்கும் அவர் சுத்தமாகப் பொருந்தவில்லை /////
ReplyDeleteஆமா பாஸ் நானும் என் விமர்சணத்தில் இதைத்தான் குறிப்பிடுள்ளேன்
//// ஒரு அசைவு அசைந்தார் என்றால், இடுப்புச் சதை இரண்டு நிமிசத்திற்கு ஆடுகிறது.(அதோட அதிர்வெண் என்னவா இருக்கும்...) அது ஒரு பக்கம் போகுது, இது ஒரு பக்கம் போகுது..நமக்கு இருப்பதோ இரண்டு கண்கள்..என்ன செய்வேன்..என்ன செய்வேன்.. /////
ReplyDeleteஹா.ஹா.ஹா.ஹா. தலைவி உடனடியாக உடம்பை குறைக்கவேண்டும்...இல்லை என்றால் விரைவில் காணாமல் போய்விடுவார்.....இது நக்கல் இல்லை தலைவியின் ஓரு ரசிகனாக.....சொல்கின்றேன்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////உலகத் தரத்தில் ஒரு தமிழ் சினிமா கொடுப்பேன், தொழில்நுட்பரீதியாக தமிழ்சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்துவேன், நடிப்பில் புதிய பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வேன் - என்றெல்லாம் விஜய் எப்போதாவது எங்காவது சொல்லியிருக்கிறாரா?///////
அதெல்லாம் சரிதாண்ணே...... ஆனா அதுக்காக 10 வருசமா ஒரே கதைல ச்சே..ஒரே படத்துல நடிச்சா எப்படி?
>>>>
சரியான கேள்விதானே. எங்கே பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
// siva said...
ReplyDeleteவடை //
தீபாவளி வடை வாங்கிய சிவா வாழ்க.
// காட்டான் said...
ReplyDeleteவணக்கம் மாப்பிள..
ஐயோ நீங்களுமா..?
ஹி ஹி அடுத்த பதிவில சந்திப்போம் //
மாம்ஸ் டயர்ட் ஆகிட்டாரு போல..யோகா ஐயாவைப் பார்த்தால் வரச் சொல்லவும்.
// தனிமரம் said...
ReplyDeleteஐயா பெரியவரே எல்லோரும் விமர்சனம் செய்கின்றீர்கள் நல்லது ஆனால் ஒரு படத்தில் நடிகர் நடிகைகள் மட்டும் தானா கண்ணுக்குத் தெரிகின்ற சுறாக்களா?????அந்தக் கடலில் (உள்ளே) பின்னால் இருக்கும் பாடல் ஆசிரியர்,இசையமைப்பாளர்,தொழில்நுட்பக், கலைஞர்கள், பற்றிய ஒரு சின்ன விடயத்தைக் கூட மறைக்கும் அளவுக்கு விமர்சன விளம்பரம் தூக்கி நிற்பது மட்டும் புரியவில்லை வாத்தியாரே? //
வணக்கம் நேசரே..
மாஸ் நடிகரை மட்டுமே குறை சொல்ல காரணம் இருக்கிறது. தமிழ்சினிமாவில் கதையும் காட்சிகளும் வசனங்களும் நடிகராலேயே இறுதி செய்யப்படுகின்றன. அவர் தன்னைப் புகழ்ந்து நாலுவரி வைக்கச் சொன்னால், இயக்குநர்களும் வைக்கவேண்டிய நிலை..ஷங்கர், பாலா போன்ற சிலரே நடிகருக்கு அடிமையாகாமல் இருப்பது. விஜய்யின் நண்பன் படத்தைப் பற்றி எழுதும்போது, விஜய்யை பொறுப்பாக்க முடியாது.
இந்தப் பதிவில் ஏன் டெக்னிஷியன் பத்தி ஏன் எழுதலேன்னா, தலைப்பிலேயே சொன்ன மாதிரி இது திரை விமர்சனம் அல்ல..எல்லாரும் விமர்சனம் எழுதிட்டாங்க..நானும் அதையே எழுதினா உங்களுக்கு போரடிக்காதா?
படத்தின் பலமே சூப்பர் ஹிட் பாடல்கள் தான்..அதைப் பத்தியும் விஜய் ஆண்டனி பத்தியும் எழுதாதற்கும் அது தான் காரணம்..போதுமா?
// துஷ்யந்தன் said...
ReplyDeleteஅண்ணா தெளிவாத்தான் இருக்கீங்க.. இந்த தெளிவு எல்லோருக்கும் வந்தால்
இந்த சண்டை சச்சரவு வராது.. வேலாயுதம் பார்த்துட்டு வந்து நான் பேஸ்புக்கில் பகிர்ந்த எண்ண ஓட்டம் போலவே உங்க விமர்சனம் இருக்கிறது ஹப்பியா இருக்கு.. குறிப்பா ஹன்சிகா அக்கா மேட்டர்.. ஹா ஹா..//
எல்லாம் சரி தம்பி, என்னை அண்ணன்னு சொல்றீங்க...ஹன்சியை அக்கான்னு சொல்றீங்க...என்ன விளையாடுறீங்களா..எனக்கு கோவம் வராது...வராது....................
// Powder Star - Dr. ஐடியாமணி said...
ReplyDeleteநேர்மையான விமர்சனம்! எனக்குப் பிடிச்சிருக்கு! //
என்ன இது..பெரிய மனுஷங்க நடமாட்டம் நம்ம பக்கம் இன்னும் இருக்கு...முருகா..
// Dr. Butti Paul said...
ReplyDeleteஇன்று சனிக்கிழமையையும் காணோம், ஒனறையும் காணோம், கடையில கூட்டத்தையும் காணோம், என்ன நடக்குது இங்க? //
டாக்டர், மாத்திரை போட்டு பதிவு போட்டா அப்படித்தான்.
//அண்ணன் உத்தரவு குடுத்துட்டாரு, நாளைக்கே படத்த பார்த்திடணும்...//
என்னய்யா இது..என்னை சாமியாடி மாதிரி ட்ரீட் பண்றீங்க?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//
அதெல்லாம் சரிதாண்ணே...... ஆனா அதுக்காக 10 வருசமா ஒரே கதைல ச்சே..ஒரே படத்துல நடிச்சா எப்படி? //
அண்ணே வணக்கம்ணே..
சுறா-வில்லு மாதிரி ‘சூப்பர்’ படங்களை நானும் நக்கல் விடுவேன்..இந்தப் பதிவுல வேலாயுதம் பத்தி மட்டும் தான் பேசறோம்..
//மத்தப்படி வேலாயுதம் போரடிக்காம நல்லாருக்குன்னுதான் நானும் கேள்விப்படுறேன்....//
அப்போ இன்னும் பார்க்கலியா?
//ங்கொய்யால இந்தாளு வெவகாரம் புடிச்ச ஆளுய்யா இதுக்குன்னே ஸ்டாப் வாட்ச் எடுத்துட்டு போயிருப்பாரு போல?//
ஆமா, அதுகூடப் பண்ணியிருக்கலாமோ..துல்லியாமாச் சொல்ல உதவி இருக்கும்..
//யோவ் என்னய்யா இது.......?//
அதாண்ணே இது!
//அந்த கடைசி ஸ்டில்லுல டாகுடர் கண்ணு எங்க இருக்குன்னு பார்த்தீங்களா....?//
டாக்குடர் மூஞ்சில தான்!
KANA VARO said...
ReplyDelete//மாம்ஸ் நானும் கொஞ்சம் வர்ணிச்சிருக்கன். கடுப்பாகாமல் வாசியுங்கோ! //
ச்சே..ச்சே..ஹன்சியை வர்ணிச்சா யாராவது கடுப்பாவாங்களா?
//“சில்லாக்ஸ்…” பாடலில் அவ்வளவு நெருக்கம் - கிறக்கம். சங்கீதா மெடம், விஜயை கண்டிச்சு வையுங்க. இப்பிடியா ஒரு மனுசன் பூந்து விளையாடுறது கிரவுண்டில? //
ஆமாய்யா..அநியாயம்..பொறாமையா இருந்துச்சு..
// "ராஜா" said...
ReplyDeleteஎன்னது வேலாயுதம் கம்மேர்சியால் படமா? நான்கூட இந்த தில்லு , தூளு , சாமி இந்த மாதிரி படங்கள்தான் கம்மேர்சியால் படங்கள்னு தப்பா நெனச்சிகிட்டு இருந்தேன் ... என்னை தெளிய வச்சதுக்க் நன்றிங்கோ... வேலாயுதம் ஒரு கமெர்சியல் படம், வேலாயுதம் ஒரு கமெர்சியல் படம், வேலாயுதம் ஒரு கமெர்சியல் படம் ஹி ஹி சும்மா சொல்லி பாத்துகிட்டேன் மறந்திரகூடாதுள்ள ..//
எனக்கு சினிமா அறிவு கம்மி பாஸ்..அதனால ஏதாவது குத்தம் குறை இருந்தா பொறுத்துக்கோங்க.
// விக்கியுலகம் said...
ReplyDeleteஏன்யா மாப்ள ஒரு வித பயத்தோட எழுதிய பதிவு போல ஹிஹி! //
ஆமாய்யா..ஒரு படம் நல்லா இருக்குன்னு கூடச் சொல்ல முடியலை..
// தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteமாம்ஸ் நாலு நாள் லீவு போட்டு ரெண்டு படங்களையும் பார்த்து, அதுல வேலாயுதம் விமர்சனம் எழுதலாமா வேணாமான்னு யோசிச்சு இப்பிடி டப்பாவை நசுக்கிடிங்களே....//
யோவ், எழுதறதுன்னு முதல்லயே முடிவு செஞ்சாச்சு..எல்லாரும் கதையை சொல்லிட்டாங்க..அதான் அதைவிட்டுட்டு...........
// வெளங்காதவன் said...
ReplyDeleteவெளக்கவும்....:-) //
பாஸ், நீங்க ஒரு அப்பாவின்னு நான் ஒத்துக்கிறேன்..ஏற்கனவே எனக்கு உடம்புச் சரியில்லை..என்னை விட்றுங்க.
// மைந்தன் சிவா said...
ReplyDeleteஎங்க நீங்களும் அதே கடி தான் கடிப்பீங்களோனு பார்த்தேன்..நியாயமா எழுதி இருக்கீங்க! //
சிவா, நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்லப்போறோம்...அதுல நமக்கு என்ன நஷ்டம் சொல்லுங்க.
// K.s.s.Rajh said...
ReplyDeleteஇதை நான் வண்மையாக கண்டிக்கின்றேன்.....இது நான் காண்டாவதற்காக திட்டமிட்டு...நீங்கள் எழுதிய வசனம்.......//
கிஸ் ராஜா, நீங்களும் ஒரு குழந்தை தானே..............!
// FOOD said...
ReplyDeleteபடம் பார்க்கச் செல்கிறேன் என்று சென்று, பலதையும் பார்த்து வந்திருக்கீங்க போல! //
நான் என்ன பக்கத்து சீட்டயா சார் பார்த்தேன்? ஸ்க்ரீன்ல பார்த்ததைத் தானே சொல்லியிருக்கேன்..
SUPER...
ReplyDelete// ராஜி said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
/////உலகத் தரத்தில் ஒரு தமிழ் சினிமா கொடுப்பேன், தொழில்நுட்பரீதியாக தமிழ்சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்துவேன், நடிப்பில் புதிய பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வேன் - என்றெல்லாம் விஜய் எப்போதாவது எங்காவது சொல்லியிருக்கிறாரா?///////
அதெல்லாம் சரிதாண்ணே...... ஆனா அதுக்காக 10 வருசமா ஒரே கதைல ச்சே..ஒரே படத்துல நடிச்சா எப்படி?
>>>>
சரியான கேள்விதானே. எங்கே பதில் சொல்லுங்க பார்க்கலாம்.//
யெக்கா, சுறா-வில்லு பார்த்து உங்களை மாதிரியே கடுப்பானவன் தான் நானும்..தனியா டாக்குடரைப் பத்திப் பேசுனா கும்மலாம்...இங்க நான் பேசுறது வேலாயுதம் பத்தி மட்டும் தான்..டாக்குடர் நல்லவரு-வல்லவருன்னு நான் சொல்லலை..’பார்த்தவன் செத்தான்’-ங்கிற அளவுக்கு படம் மோசம் இல்லை..நல்ல காமெடி-பாடல்களோட சுறா-வை விட நல்ல படம்னு சொல்றேன்..
மங்காத்தா நல்லா இருக்குன்னு சொன்னாலும் திட்றாங்க..வேலாயுதம் நல்லா இருக்குன்னு சொன்னாலும் திட்றாங்க..இப்போ என்ன செய்ய..
//siva said...
ReplyDeleteSUPER..//
ஓகே பாஸ்..நீங்க வேற சிவா-வா?
பாக்கலாமா ...
ReplyDelete”சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல்” விமரிசனம்.
ReplyDelete//koodal bala said... [Reply]
ReplyDeleteபாக்கலாமா ...//
காமெடிக்காக பார்க்கலாம்..குருவி-சுறாவை நினைச்சுக்கிட்டே, இதுவும் மோசமாத்தான் இருக்கும்னு ஒரு முடிவோட போங்க..ரசிப்பீங்க.
//சென்னை பித்தன் said...
ReplyDelete”சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல்” விமரிசனம்.//
அய்யாஆஆஆஆஆஆ!
/////(அதோட அதிர்வெண் என்னவா இருக்கும்...)///////
ReplyDeleteபக்கத்துல ஒரு டியூனிங் ஃபோர்க்க வெச்சா தெரியும்.....
வேல்+ஆயுதம் என்று பிரித்துக்கொள்ளலாம். முன்பாதி ’வேல்’ எப்போதும் போல் எல்லோருக்கும் நன்மையே செய்கிறது. இரண்டாம் பாதி ஆயுதம் விஜய் ரசிகர்களுக்காக செய்யப்பட்டது.//
ReplyDeleteஅருமையாக ரசிக்கும்படியான விமர்சனம்... சூப்பர் நண்பரே!
எப்பொழுதெல்லாம் தமிழ் திரையுலகம் ஆரோக்யமான பாதைக்குத் திரும்புகிறதோ அப்பொழுதெல்லாம் மசாலா படங்கள்
ReplyDeleteஅதிகமாக எடுத்து அந்த போக்கைத் திசை திருப்புவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். அறுபது, எழுபதுகளில் எம்.ஜி.ஆர், எண்பதுகளில்
ஏ.வி.எம், ரஜினி, 2000 வருடத்திற்குப் பிறகு விஜய், அஜீத். இதில் அஜீத்துக்கு நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை என்று சொல்லலாம். ஆனால் விஜய் அளவிற்கு தமிழ் சினிமாவை இருபது வருடம் பின்னே கொண்டு சொல்லுவேன் எனும் அளவிற்கு டெம்ப்ளேட் படங்களாக கொடுப்பதில்லை.
இவர்களைப் போல தாங்கள் சம்பாதிப்பதற்காக சினிமாவை சீரழிப்பவர்கள் பொது வெளியில் இகழப்பட்டு, புறக்கணிக்கப் பட வேண்டியவர்கள். இதில் தயவு தாட்சண்யம் பார்ப்பதற்கு இடமேயில்லை.
ஆமா விஜய் ஏன் ஒரே மாதிரி கதையில் நடிக்கிறார்?
ReplyDelete@செங்கோவி
ReplyDelete// Powder Star - Dr. ஐடியாமணி said...
நேர்மையான விமர்சனம்! எனக்குப் பிடிச்சிருக்கு! //
என்ன இது..பெரிய மனுஷங்க நடமாட்டம் நம்ம பக்கம் இன்னும் இருக்கு...முருகா../////
ஒருத்தன்கிட்ட திறமை இருந்தா, அவன் எதிரியாக இருந்தாலும், பாராட்டி வாழ்த்துறது நம்ம தமிழ் பண்பாடு! இந்த விமர்சனம் நல்லா இருந்திச்சு! அதுனால கமெண்டு போட்டேன்!
அதுபோக, கோபத்தை மனசுக்குள்ள வைச்சு, அறுத்துக்கிட்டு இருக்கிறதுக்கு, தாங்கள் ஒன்றும் சிங்களவன் இல்லையே! எனக்கு தீராத கோபம் சிங்களவன் மீதுதான் வருமே தவிர, தமிழன் மீது கெடையாது!
அது சரி எதுக்கு முருகனைக் கூப்புடுறீங்க? அவரே ஏக கன்ஃபியூஷன்ல இருக்காரு!
Powder Star - Dr. ஐடியாமணி has left a new comment on the post "வேலாயுதம் - திரை விமர்சனம் அல்ல சாமியோவ்...":
ReplyDelete@செங்கோவி
// Powder Star - Dr. ஐடியாமணி said...
நேர்மையான விமர்சனம்! எனக்குப் பிடிச்சிருக்கு! //
என்ன இது..பெரிய மனுஷங்க நடமாட்டம் நம்ம பக்கம் இன்னும் இருக்கு...முருகா../////
ஒருத்தன்கிட்ட திறமை இருந்தா, அவன் எதிரியாக இருந்தாலும், பாராட்டி வாழ்த்துறது நம்ம தமிழ் பண்பாடு! இந்த விமர்சனம் நல்லா இருந்திச்சு! அதுனால கமெண்டு போட்டேன்!
அதுபோக, கோபத்தை மனசுக்குள்ள வைச்சு, அறுத்துக்கிட்டு இருக்கிறதுக்கு, தாங்கள் ஒன்றும் சிங்களவன் இல்லையே! எனக்கு தீராத கோபம் சிங்களவன் மீதுதான் வருமே தவிர, தமிழன் மீது கெடையாது!
அது சரி எதுக்கு முருகனைக் கூப்புடுறீங்க? அவரே ஏக கன்ஃபியூஷன்ல இருக்காரு!
@ மணிசார் எனக்கு உங்களிடம் பிடிக்காத ஒன்று இப்படி ஒட்டு மொத்த சிங்களவனையும் எதிரி என்று சாடுவது எல்லாச் சிங்களவனும் கெட்டவர்கள் யுத்தவிரும்பிகள் கிடையாது இணவாத சிந்தனையை உள்வாங்கியோர் அதிகம் என்றாலும் தமிழர் உயிர்காத்த எத்தனையோ சிங்களவர்களை நானும்ப்பார்த்தவன்.
இதற்குத்தான் நொந்து போகும் இதயத்தில் ஒரு பாத்திரமே நகர்கின்றது நேரம் இருந்தால் வாசி மச்சி நீ என் பாசக்கார நண்பேண்டா!
முருகன் கன்பீஸ் ஆகவில்லை அவரின் ஆயுதம் வாங்கியவர் தான் பதிவுலகை நார் அடிக்கிறார் மணிசார் !
ReplyDelete@தனிமரம்
ReplyDelete@ மணிசார் எனக்கு உங்களிடம் பிடிக்காத ஒன்று இப்படி ஒட்டு மொத்த சிங்களவனையும் எதிரி என்று சாடுவது எல்லாச் சிங்களவனும் கெட்டவர்கள் யுத்தவிரும்பிகள் கிடையாது இணவாத சிந்தனையை உள்வாங்கியோர் அதிகம் என்றாலும் தமிழர் உயிர்காத்த எத்தனையோ சிங்களவர்களை நானும்ப்பார்த்தவன்.
இதற்குத்தான் நொந்து போகும் இதயத்தில் ஒரு பாத்திரமே நகர்கின்றது நேரம் இருந்தால் வாசி மச்சி நீ என் பாசக்கார நண்பேண்டா!///////
ஓம் நேசன் அண்ணை! அவங்கள் எல்லோரும் கெட்டவர்கள் கிடையாது! அது எனக்கு நல்லா தெரியும்! என்ன், அந்த முள்ளிவாய்க்காலை நினைக்கும் போது சரியான விசர் வரும்! அந்தக் கடுப்புலதான் அப்படி எழுதுறனான்!
இனி கொஞ்சம் யோசிச்சு எழுதுகிறேன்! உங்களது நொந்துபோகும் இதயம் வாசிக்க வருகிறேன்! பொறுங்கள்!
@தனிமரம்
ReplyDeleteமுருகன் கன்பீஸ் ஆகவில்லை அவரின் ஆயுதம் வாங்கியவர் தான் பதிவுலகை நார் அடிக்கிறார் மணிசார் !//////
அதாரப்பா? காட்டான் அண்ணை சொன்ன ஆளோ?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////(அதோட அதிர்வெண் என்னவா இருக்கும்...)///////
பக்கத்துல ஒரு டியூனிங் ஃபோர்க்க வெச்சா தெரியும்.....//
பல இடத்துல வச்சுப் பார்த்திருப்பாரு போலிருக்கே..
//மாய உலகம் said...
ReplyDeleteஅருமையாக ரசிக்கும்படியான விமர்சனம்... சூப்பர் நண்பரே! //
நன்றி மாயா..அப்புறம், இது விமர்சனம் இல்லை..என்னை விட்றுங்கய்யா.
// Jagannath said...
ReplyDeleteஇவர்களைப் போல தாங்கள் சம்பாதிப்பதற்காக சினிமாவை சீரழிப்பவர்கள் பொது வெளியில் இகழப்பட்டு, புறக்கணிக்கப் பட வேண்டியவர்கள். இதில் தயவு தாட்சண்யம் பார்ப்பதற்கு இடமேயில்லை.//
நல்ல படங்கள் என்பவை சினிமாவிற்கு ஆன்மா போல..கமர்சியல் படம் என்பவை ஆக்ஸிஜன் போல..ஒன்றில்லாமல் இன்னொன்று வாழாது.
// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஆமா விஜய் ஏன் ஒரே மாதிரி கதையில் நடிக்கிறார்? //
ஏன்னா அவர் விஜய்..அதான்.
// Powder Star - Dr. ஐடியாமணி said...
ReplyDeleteஅதுபோக, கோபத்தை மனசுக்குள்ள வைச்சு, அறுத்துக்கிட்டு இருக்கிறதுக்கு, தாங்கள் ஒன்றும்...//
தானாகவே செய்துகொள்ளும் கற்பனையும் அதனால் விளையும் கோபமும் பொருட்படுத்தத் தக்கன அல்ல...விளக்கம் சொல்லும் அளவிற்கு நமக்கு நேரமும் இல்லை..அவரவர் வழியில் அவரவர் போவது நல்லது தானே....முருகா..
// தனிமரம் said...
ReplyDeleteமுருகன் கன்பீஸ் ஆகவில்லை அவரின் ஆயுதம் வாங்கியவர் தான் பதிவுலகை நார் அடிக்கிறார்//
இது டாக்குடர் தானே நேசரே?
/ Powder Star - Dr. ஐடியாமணி said...
ReplyDeleteஅதுபோக, கோபத்தை மனசுக்குள்ள வைச்சு, அறுத்துக்கிட்டு இருக்கிறதுக்கு, தாங்கள் ஒன்றும்...//
தானாகவே செய்துகொள்ளும் கற்பனையும் அதனால் விளையும் கோபமும் பொருட்படுத்தத் தக்கன அல்ல...விளக்கம் சொல்லும் அளவிற்கு நமக்கு நேரமும் இல்லை..அவரவர் வழியில் அவரவர் போவது நல்லது தானே....முருகா../////
ஒண்ணுமே புரியல முருகா! இப்ப என்ன சொல்ல வர்றாரு? இனிமே கமெண்டே போட வேணாம்னா?
வீட்டிற்கு வரும் விருந்தாளிகளைப் பார்த்து யாராவது அப்படிச் சொல்வார்களா...ஆனாலும் நம்ம பாதை வேறன்னு ஆனப்புறம் விலகி இருக்கிறதும் நல்லது தானே முருகா..
ReplyDelete@செங்கோவி
ReplyDeleteவீட்டிற்கு வரும் விருந்தாளிகளைப் பார்த்து யாராவது அப்படிச் சொல்வார்களா...ஆனாலும் நம்ம பாதை வேறன்னு ஆனப்புறம் விலகி இருக்கிறதும் நல்லது தானே முருகா..//////
இந்த லொல்லு தானே வேணாம்கறது முருகா! நண்பர்களுக்கிடையில் அப்படி இப்படி வர்ரது சகஜம் தானே முருகா! அதுக்காக வேற வேற பாதைல போகணுமா முருகா?
அப்படியே பிரிஞ்சு வேற பாதைல போக நம்ம விட்டுடுவோமா முருகா?
( யப்பா எத்தனை முருகா?)
இதுக்கு மேல முருகன் தான் நம்மைப் பார்த்துக்கணும்...நடக்கட்டும்..
ReplyDeleteசரி சரி நெறையப் படிக்கணும்! நான் அப்புறமா வர்ரேன் முருகா!
ReplyDeleteஏனுங்கண்ணா தீபாவளிக்கு பெரிய லீவாவே எடுத்துடீங்க போல... அப்புறம் தீபாவளி செலிப்ரேஷன்ஸ் எல்லாம் எப்புடி...
ReplyDeleteகாய்ச்சல் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்(வாழ்த்துகிறேனா இல்ல வேண்டுகிறேனா, கன்பீஸ்)
ReplyDeleteஅண்ணே நீங்க ஆயிரம் சொலுங்க, இந்த படம் ஆறரை தோல்விகளுக்கு பெறகு விஜய்க்கு உண்மைலேயே ஒரு கம் பேக் மூவிதான், காவலன் உண்மைல ஒரு வெற்றி படம் இல்ல, வெற்றி மாதிரி காட்டப்பட்ட படம்,, ஆனா இந்த படம் நிச்சய ஹிட்டு(ஏன்னா இந்த படத்துல , வேணாம் விடுங்க பாஸ் எதுக்கு பூக்கடைக்கு வெளம்பரம்...)
ReplyDeletePowder Star - Dr. ஐடியாமணி has left a new comment on the post "வேலாயுதம் - திரை விமர்சனம் அல்ல சாமியோவ்...":
ReplyDelete@தனிமரம்
@ மணிசார் எனக்கு உங்களிடம் பிடிக்காத ஒன்று இப்படி ஒட்டு மொத்த சிங்களவனையும் எதிரி என்று சாடுவது எல்லாச் சிங்களவனும் கெட்டவர்கள் யுத்தவிரும்பிகள் கிடையாது இணவாத சிந்தனையை உள்வாங்கியோர் அதிகம் என்றாலும் தமிழர் உயிர்காத்த எத்தனையோ சிங்களவர்களை நானும்ப்பார்த்தவன்.
இதற்குத்தான் நொந்து போகும் இதயத்தில் ஒரு பாத்திரமே நகர்கின்றது நேரம் இருந்தால் வாசி மச்சி நீ என் பாசக்கார நண்பேண்டா!///////
ஓம் நேசன் அண்ணை! அவங்கள் எல்லோரும் கெட்டவர்கள் கிடையாது! அது எனக்கு நல்லா தெரியும்! என்ன், அந்த முள்ளிவாய்க்காலை நினைக்கும் போது சரியான விசர் வரும்! அந்தக் கடுப்புலதான் அப்படி எழுதுறனான்!
இனி கொஞ்சம் யோசிச்சு எழுதுகிறேன்!
@மணி சார் இது தான் எப்போதும் உங்களிடம் எனக்குப் பிடித்தது எதிர்க்கின்றான் என்றாள் எதிர்க்கட்சி ஆள் என்று நினைக்காத குணம்.எனக்கும் முள்ளிவாய்க்கால் கொதிப்புத்தான் ஆனாலும் வலி சுமந்தவர்கள் நாங்களே வலியை தினிக்கக் கூடாது பிறகு சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் வித்தியாசம் தெரியாது பதிவுலகில் இது சிலருக்கு ஏற்பு இல்லைத் தான் ஆனாலும் உண்மை சுடும் சகோ!
புரிந்துணர்வான பின்னூட்டத்திற்கு தனிமரத்தின் நன்றிகள்
நிச்சயம் டாக்குத்தர் தான் வாத்தியாரே முருகன் அருள் கந்தசஸ்ரி நேரம் எல்லாருக்கும் கிடைக்கட்டும் மருதமலை மாமணியே!
ReplyDelete// மொக்கராசு மாமா said...
ReplyDeleteகாய்ச்சல் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்//
லொள்ளு கூடிப் போச்சுய்யா உமக்கு..
கவுத்திட்டீங்களே அண்ணே... படத்தோட முதல் முப்பது நிமிஷம் பார்த்தேன், முதல் பதினஞ்சு நிமிஷம், பாக்கிஸ்தான் பார்டர், குண்டு வெடிப்புன்னு கேப்டன் படம் காட்டினாங்க, தளபதி வந்ததும் தூள் பறக்கும்னு நினைச்சேன், தளபதி அறிமுகம், அறிமுக காட்சி, அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது (பரத் படம்) ல இருந்து சுட்டுட்டாங்க, சரி மன்னிப்போம்னு அடுத்த காட்சி, இவன் தொல்ல தாங்க முடியாம ஊர் சனம் சேர்ந்து அனுப்பராங்கன்னு அப்புடியே சிதர்த்தோட பாவா படம் கண்ணு முன்னாடி வந்திச்சு, வேறையும் எங்கேயோ இது இருக்கேன்னு யோசிச்சிட்டே இருந்தேன் நெக்ஸ்ட் சீன் அந்த கோழி புடிக்கறது, அப்புடியே டிவி விழுவது முதல்கொண்டு சிங் இஸ் கிங் அச்சு அசல் காப்பி... இதுக்கு மேலயும் இந்த படத்த பார்க்க பொறுமை இல்ல... கடவுள் மனசு வச்சா சந்தானம் வாற சீன்ஸ் பாக்குறேன்.
ReplyDeleteநானும்தான் உள்ள தூங்கிக்கிட்டு இருக்கற விஜய் ரசிகன தட்டி எழுப்பலாம்னு நினைக்கிறேன், விட மாட்டேங்குறாங்களே..
ReplyDeleteபடம் முழுதும் பார்த்தேன். வேட்டைக்காரன் அளவு மோசம் இல்ல, விஜயிடம் காணமல் போயிருந்த எனேர்ஜியும் துள்ளலும் மீண்டும் வந்திருக்கு. நீண்ட நாட்களுக்கு பின் ஒரு விஜய் படம் பார்த்த திருப்தி. ஆனா ராஜா ரொம்பவே சோதிக்கறாரு. ஆசாத் படத்தோட கதைக்கு இதுவரை வெளியான தமிழ், இந்தி, தெலுங்கு படங்களின் காட்ச்சிகளை ஒட்டி வைச்சு, அங்கங்கே சில நகைச்சுவைத் துணுக்குகளை பொறுக்கிபோட்டு திரைகதையை உருவாக்கியிருக்காரு. ஒரு இரு சீன்ஸ் தவிர மத்த எல்லாம் இதற்க்கு முன்னரே பாத்திருக்கிறேன் (அந்த ஒரு இரு சீன்ஸ் ஆசாத்ல சுட்டதா இருக்கும்), சந்தானம், விஜய், ஹன்சிகா இந்த மூணுபேருக்கு இருக்கற ரசிகர் கூட்டத்த மட்டுமே நம்பி படம் எடுத்திருக்காங்க, அதுல வெற்றியும் பெற்றிருக்காங்க. மத்தும்படி ஆகா ஓகோன்னு சொல்ற படம் எதுவும் இல்ல, ஒன்பது வருஷம் வாழ்ந்தேன், பல்துலக்கினேன்னு யாரும் சொல்லாததால இத ஓரளவு மன்னிச்சு விடலாம்.
ReplyDeleteவாந்தி எடுங்கடா...ஆனா விரலை விட்டு எடுக்காதீங்கடா...!
ReplyDeletehttp://veliyoorkaran.blogspot.com/2011/11/blog-post.html