வரையறை:
ஒரு குழாய் செல்லும் திசையினை மாற்ற உதகின்ற அல்லது குழாயில் இருந்து வேறொரு கிளையினை உருவாக்க அல்லது குழாயின் அளவினைக் குறைக்க உதவுபவையே இணைப்பான்கள் (Fittings) ஆகும்.
வகைகள்:
இணைப்பான்கள் என்பவை பொதுவாக ஒரு குழாயை இன்னொரு குழாயுடன் இணைக்கப் பயன்படுபவை என்பதால், சென்ற குழாய் பற்றிய பாடத்தில் சொல்லியபடி இணைக்கும் முறையினைப் பொறுத்து ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படும் :
4.1. முட்டுப் பற்றவைப்பு (Butt Welding) இணைப்பான்கள்
4.2. பொருந்து வாய் பற்றவைப்பு (Socket Welding) இணைப்பான்கள்
4.3.மரை இணைப்பு (Threaded Connection) இணைப்பான்கள்
4.4. குழாய்ப் பட்டை இணைப்பான்கள் (Flanges)
4.5. அச்சுக் கிளைகள் (O-Lets)
4.1.முட்டுப் பற்றவைப்பு (Butt Welding) இணைப்பான்கள்:
சென்ற குழாய் பற்றிய பாடத்தில் சொல்லியபடியே, இவ்வகை இணைப்பான்கள் சாய்வு முனை (Bevel End) கொண்டிருக்கும். மேலும் முட்டுப் பற்றவைப்பு முறை மூலம் இணைக்கப்படும். 2" மற்றும் அதற்கு மேற்பட்ட குழாய்களை இணைக்கப் பயன்படுபவை இவ்வகை இணைப்பான்கள் ஆகும். எனவே குழாயியலில் அதிகளவு பயன்படுவது இவ்வகை இணைபான்களே ஆகும். இனி இதன் உள்வகைகளைப் பார்ப்போம்:
1. எல்போக்கள்(Elbows)
2. டீ-க்கள்(Tee)
3. குறைப்பான்கள் (Reducers)
4. மூடிகள்(Caps)
4.2. பொருந்து வாய் பற்றவைப்பு (Socket Welding) இணைப்பான்கள்:
1 1/2”மற்றும் அதற்குக் குறைவான குழாய்களை இணைக்கப் பயன்படுபவை பொருந்து வாய் பற்றவைப்பு (Socket Welding) இணைப்பான்கள் ஆகும். இவற்றின் உள்வகைகள்:
1. எல்போக்கள்(Elbows)
2. டீ-க்கள்(Tee)
3. அச்சுக் குறைப்பான்கள் (Swages)
4. மூடிகள்(Caps)
5. இடையிணைப்பான்கள்(Couplings)
6. குழாய்ப் பொருத்திகள்(Unions)
4.3.மரை இணைப்பு (Threaded Connection) இணைப்பான்கள்:
1 1/2”மற்றும் அதற்குக் குறைவான குழாய்களை இணைக்கப் பயன்படுபவை மரை இணைப்பு இணைப்பான்கள் ஆகும். இவை காலப்போக்கில் கசிவிற்கு வழிவகுக்கும் என்பதால், இவற்றை பொதுவாக தண்ணீர்க் குழாய்களை இணைக்கவே பயன்படுத்துவர்.பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டு செல்லும் குழாய்களை இணைக்க மரை இணைப்புகலைப் பயன்படுத்துவதௌத் தவிர்ப்பது நல்லது. இவற்றின் உள்வகைகள்:
1. எல்போக்கள்(Elbows)
2. டீ-க்கள்(Tee)
3. அச்சுக் குறைப்பான்கள் (Swages)
4. மூடிகள்(Weld Caps)
5. இடையிணைப்பான்கள்(Couplings)
6. குழாய்ப் பொருத்திகள்(Unions)
இனி இணைப்பான்களின் உள்வகைகளை ஒவ்வொன்றாக அடுத்து வரும் பார்ப்போம்.
(தொடரும்)
இரவு வணக்கம்,செங்கோவி!விளக்கம் அருமை,தொடருங்கள்.தொடர்வோம்!
ReplyDeleteமிக நல்ல பதிவு.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
அருமையான எளிமையான விளக்கம்! நன்றி!
ReplyDeleteஅன்பு செங்கோவி, நல்ல விளக்கங்கள். தொடருங்கள்.
ReplyDeleteஅன்பு செங்கோவிக்கு, வணக்கங்கள் பல. தொடர் நன்றாக செல்கிறது . தொடருங்கள். அடுத்த அத்தியாயத்திற்கு காத்திருக்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeleteஅடுத்த பதிவு எப்ப சார்? காத்திருக்கிறேன்.
ReplyDelete@sekar
ReplyDeleteவருகின்ற சனிக்கிழமை.