Thursday, June 30, 2011

அந்த அம்பிகா சிடி எனக்கு வேண்டாம் (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:

டமுக்கடிப்பா டீயாலோ
தமுக்கடிப்பான் ஹாயாலோ
டமுக்கடிப்பா டீயாலோ
தமுக்கடிப்பான் ஹாயாலோ
ஏ .. சிங்கி ............ ஏ ... சிங்கா
ஏ.. சிங்கி...............ஏ .... சிங்கா!

பதிவர் கிசுகிசு:
ஒரு பதிவர் ஃபாரின்ல இருந்து இந்தியா வந்தாரு. அவரை பதிவர் சந்திப்புல சிபி பார்த்தாரு. உடனே ‘வாய்யா’ன்னு கூட்டிட்டுப் போயி குற்றாலத்துல குளிக்க வச்சு அனுப்புனாரு. நான் அதை முதல்ல சாதாரணமாத் தான் எடுத்துகிட்டேன். அப்புறம் அதே பதிவர் நாகர்கோயில் போயி பதிவர் கே.ஆர்.விஜயன் சாரைப் பார்த்தாரு. அவரும் ‘வாங்க தம்பி’ன்னு இழுத்துக்கிட்டுப் போய் திற்பரப்பு ஃபால்ஸ்ல குளிக்க வச்சு அனுப்பி இருக்காரு..

சம்திங் ராங்..ஏன்யா இப்படி அவரைப் பார்க்கிறவங்கள்லாம் கூட்டிட்டுப் போயி குளிப்பாட்டி விடுறீங்க? ஃபாரின்ல இருந்தவரைக்கும் அந்த மனுசன் குளிக்கவே இல்லையா? நேர்ல பார்த்தவங்க யாராவது சொல்லுங்கய்யா..அவரைக் குளிப்பாட்டுற செலவுக்கும் பதிவர் சந்திப்புல நிதிவசூல் பண்ணுனீங்களா, இல்லையா?

அம்பிகா சிடி :

நேத்து பதிவர் வினையூக்கி சாட்ல மெசேஜ் அனுப்பி இருந்தாரு. ‘ரொம்ப முக்கியமான விஷயம்- அம்பிகா சிடி’ன்னு. என் கல்லூரி நண்பர்ங்கிறதால இப்படிப் போட்டாத்தான் நான் ஆன்லைன்ல வருவேன்னு அவருக்குத் தெரியும். நானும் ஆர்வமாப் போய் ‘ஹாய்’ன்னு சொன்னேன்..அவ்வளவு தான்..’நீயெல்லாம் மனுசனா’ன்னு ஆரம்பிச்சு வசவு உரிச்சுட்டாரு. என்ன மேட்டர்னா..
கண் சிமிட்டும் நேரம் அம்பிகா சிடி அவசரமாத் தேவைன்னு ஒரு பதிவு போட்டிருந்தனா..அதுல ’ஏதாவது’ இருந்தா எனக்கு அனுப்புங்கன்னு கூடச் சொல்லி இருந்தேனே...ஒரு ஆளு அதுக்கு ஒருகோடி ரூவா கூடக் கேட்டாரே..ஞாபகம் வந்துடுச்சா..அதை வினையூக்கி ஆர்வமா நெட்ல தேடி யூடியூப்லயே முழுப்படத்தையும் எடுத்துட்டாராம். 

ரெண்டே கால் மணி நேரம் பொறுமையா சீன் வரும் வரும்னு பார்த்தா, அநியாயத்துக்கு படத்துல ஒன்னுமே இல்லாம அண்ணாத்தைக்கு சினம் வந்திடுச்சு. ‘ஒரு பதிவர்னா பொறுப்புணர்ச்சி வேண்டாமா..இப்படி தீர விசாரிக்காமலா ஒரு படத்தை ரெஃபர் பண்ணுவே’-ன்னு கேட்டு கிழிகிழின்னு கிழிச்சுட்டாரு. பாவம், ரொம்ப நொந்துட்டாரு போல..

அதனால நான் இந்தியா வரும்போது கொடுப்போம்னு எனக்காக யாராவது அந்த சிடியை வாங்கி வச்சிருந்தா(!), அதை தலையைச் சுத்தி தூரப் போடுங்க. எனக்கு அந்த அம்பிகா சிடி வேணாம். அதுக்குப் பதிலா சீதாவோட ‘பொண்ணு பாக்கப் போறேன்’ படத்து சிடி கிடைச்சா...

விகடனின் குசும்பு:

ஸ்பெக்ட்ரம் ஊழல்ல கனிமொழி கைதானதுல நம்ம எல்லாருக்குமே சந்தோசம் தான். அவங்க மேல எல்லாருமே கடுப்புல தான் இருந்தோம். அதனால தானே ஐயாவுக்கு ஓய்வு கொடுத்து அனுப்பி வச்சோம்..

ஆனா விகடன் இந்த வாரம் கனிமொழியோட முதல் கணவரைத் தேடிப் பிடிச்சு பேட்டி எடுத்து வெளியிட்டிருக்கு. அந்தாளு பாவம், காவி கட்டிக்கிட்டு சிவனேன்னு இருக்காரு. அவர்கிட்டப் போய் கனிமொழியைப் பத்தி துருவித் துருவிக் கேட்டிருக்காங்க. எனக்கென்னமோ யாரையோ சந்தோசப்படுத்த விகடன், கனிமொழியின் இமேஜை டேமேஜ் பண்ணுதோன்னு தோணுது. .
விகடன் இதைப் பண்ணதுக்குப் பதிலா, ஸ்பெக்ட்ரம்ல தயாநிதியின் பங்கு என்னன்னு துருவி இருக்கலாம்..பழைய விகடனா இருந்தா செய்வாங்க..இப்போ?

மதுரன் பதிவு:
இந்த வாரம் ’மங்காத்தா - வேலாயுதம் - ஏழாவது அறிவு’ ஒரு பதிவு எழுதுனேன். அப்புறமா படிச்சா எனக்கு அந்தப் பதிவு திருப்தியா இல்லை..(அந்தப் பதிவு மட்டுமான்னு கேட்டு நோகடிக்கக் கூடாது). ஆச்சரியமா அதே கான்சப்ட்ல மதுரன்ங்கிற பதிவர் ஒருத்தர் ‘தலயா தளபதியா’ன்னு மங்காத்தா-வேலாயுதத்தைக் கம்பேர் பண்ணி ஒரு பதிவு அருமையா எழுதி இருந்தாரு. நல்ல முழுமையான தகவல்களோட இருந்துச்சு அந்தப் பதிவு. எனக்கே வெட்கமாப் போச்சு..அதனால அதைப் படிக்காதவங்க போய்ப் படிச்சிக்கோங்கன்னு கேட்டுக்கிறேன்..
இதே மாதிரி ’நானா யோசிச்சேனை’ விட பெட்டரா யாராவது எழுதுனா சொல்லுங்க மக்கா!...அதுக்காக www.அஸ்குபுஸ்குஆண்ட்டி.காம்னு லின்க் கொடுத்தீங்க பிச்சுப்புடுவேன் பிச்சு.

பயங்கரமா யோசிச்சது:

ஊர்ல இருந்து புதுச்சட்டை வந்திருந்துச்சு. நானும் ஆசையா ஆஃபீஸ்க்கு போட்டுட்டுப் போனா, சண்டாளங்க ஒருத்தன்கூட ‘சட்டை புதுசா சார்’னு கேட்கலை..அப்போ தான் எனக்கு அந்த கதை ஞாபகம் வந்துச்சு.

மாப்பு ஒருத்தன் புது மோதிரம் வாங்கிப் போட்டுட்டு, ஊர் முழுக்கச் சுத்தி வந்தான். நைட்டும் ஆயிடுச்சு. ஒரு பயகூட ‘என்னய்யா, மோதிரம் புதுசா’ன்னு கேட்கலை. மாப்புக்கு செம கடுப்பாயிடுச்சு. என்னடா இது, எவ்வளவு காசு போட்டு மோதிரம் வாங்கினோம். ஒருத்தன்கூட கவனிச்சுக் கேட்கலியேன்னு காண்டாகி, வக்கைப் படப்புக்கு(வைக்கோல் போர்) தீ வச்சுட்டான். ஊர்ல இருந்து எல்லாரும் தீயை அணைக்க தண்ணியோட ஓடி வந்தாங்க. 

நம்ம மாப்பும் நடுல நின்னுக்கிட்டு, ‘ஏ..இங்கிட்டு ஊத்துலே..நீ அங்கிட்டு ஊத்துலே’ன்னு கையை நீட்டி நீட்டி சொன்னான். தீ வெளிச்சத்துல மோதிரம் மின்னுச்சு. அப்போ அதைக் கவனிச்ச ஒருத்தன் கேட்டான்’ மாப்பு, மோதிரம் புதுசா’ன்னு. நம்மாலும் உணர்ச்சி வசப்பட்டு’ஆமாலே அறுதலி..இந்த எழவை காலைலயே கேட்டிருந்தா வக்கைப்படப்பாவது தப்பிச்சிருக்கும்ல’ன்னு சொல்லிட்டான். அப்புறம் என்ன..தர்ம அடி தான்.

நான் இப்போ என்ன யோசிக்கேன்னா, ஆஃபீஸ்ல எந்தப் பக்கம் தீயை வச்சா ‘சட்டை புதுசா’ன்னு கேட்பானுக?

மேலும் வாசிக்க... "அந்த அம்பிகா சிடி எனக்கு வேண்டாம் (நானா யோசிச்சேன்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

51 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, June 29, 2011

அன்னிய மொழிக்கு மரியாதை...தாய்மொழிக்கு?


”கான்ஸ்டிபேசன்..சொல்லு”

"கான்ஸ்டிஃபேசன்"

"அப்படி இல்லைப்பா.கொஞ்சம் ஸ்ட்ரெஸ் பண்ணு"

"கான்ஸ்டிஃபே..சார், வரமடேங்குது சார்.."

"கான்ஸ்டிபேசன்னாலே அப்படித்தான்..வராது..நல்லா ஸ்ட்ரெஸ் பண்ணாத் தான் வரும்..நல்லா..ம்..இப்போ சொல்லு"

"கான்ஸ்டிபேசன்"

”வெரி குட்!”
ன்று ஆஃபீஸ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் ஃபேன் என்று சொல்ல வந்தவர் ஸ்பேன் என்று சொல்லிவிட்டார். ஏதோ மிகக் கேவலமான ஒரு செயலைச் செய்துவிட்டது போல் அவர் கிண்டல் செய்யப்பட்டார். அவரைப் பார்க்கவே பரிதாபமாக ஆகிவிட்டது.

எனக்கு அது கடும் கோபத்தைக் கிளப்பியது. அவர்களில் பெரும்பாலோனோர் தமிழர்கள். “உங்களில் யாருக்கு ல,ழ,ள சரியாக உச்சரிக்கத் தெரியும்?”என்று கேட்டேன்.

எல்லோரும் அமைதியாக இருந்தனர். “அப்போ தாய்மொழியை சரியாக உச்சரிக்க யாருக்கும் தெரியவில்லை இல்லையா? அது பற்றிய வருத்தமோ அவமானமோ நமகு இல்லை. ஆனால் ஆங்கிலத்தில் ஒரு எழுத்தைத் தவறாகப் பேசிவிட்டலும் முட்டாள் ரேஞ்சிற்கு அவரை ட்ரீட் பண்றோம். ஏன் இப்படி? ஸ்ஃபேன் சொல்லும்போது வர்ற இளக்காரம் வாலைப்பலம்னு சொல்லும்போது ஏன் வரலை? தமிழைச் சரியாப்பேசுன்னு சொல்றதும் பேசுறதும் இண்டீஸண்ட்..இங்க்லீஸ் கரெக்டாப் பேசுடான்னு சொன்னா பெருமை, இல்லையா?’ன்னு கேட்டேன். 

ஒரே ஒரு நண்பர் மட்டும் ‘நீங்க சொல்றது சரிதான்..ஆனால் எல்லாருமே அப்படித் தானே?” என்றார்.

உண்மையில் அங்கு இருந்த யாருக்குமே நான் உட்பட, ழகர உச்சரிப்பு சரியாக வராது.பேசும் வேகத்தில் நாம் கவனிப்பதும் இல்லை.

”உண்மைதான், இங்கு தமிழைச் சரியாக உச்சரித்தல் பிரச்சினை அல்ல. அதைச் செய்யும்போது வராத அவமானம் அன்னிய மொழியைப் பேசும்போது வருவது ஏன்?” என்றேன்.

ஆங்கிலத்தை நாம் பேணிப் பாதுகாக்கும் அளவிற்கு ஆங்கிலேயர்களே செய்வதில்லை. அமெரிக்கர்களின் ஆங்கிலேயம் ஏறக்குறைய சென்னைத் தமிழுக்கு ஈடானது தான். ’எஃப் பாம்’ போடாமல் பேசவே மாட்டர்கள். வார்த்தையைக் கொத்துவதிலும் வல்லவர்கள். நான் அவர்களுடன் பேசும்போதெல்லாம் ஒரு அசமஞ்சம் ரேஞ்சுக்கு நம் ஆங்கிலம் தோன்றும். அந்த உரையாடல் இந்த மாதிரி இருக்கும்:

”ஐயா, தாங்கள் கொடுத்த வரைபடத்தை முடித்துவிட்டேன். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களா?”

”ஆத்தா..அந்தாண்ட குவாலிட்டி டிபார்ட்மெண்ட்க்காரன் குந்திக்கினு இருப்பான்..அவங்கைல சொல்லு..”

சிங்கப்பூர்க்காரர்கள் தனியாக ஒரு ஆங்கிலத்தை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். நான் பார்க்கவில்லை என்பதை ‘ஐ நோ சீ” என்பார்கள். அங்கு இருக்கும் நம் ஆட்கள் அவர்களைத் திருத்த முற்படுவது இல்லை. ஆனால் ஒரு எழுத்தை சக தமிழன் சரியாக உச்சரிக்காவிட்டால், கேலி..கிண்டல்.

நாம் இன்னும் ஆங்கிலேய அடிமை மனப்பான்மையில் இருந்து வெளிவரவில்லையோ என்று தான் தோன்றுகிறது.

மும்பைக்கு ரிக்‌ஷா ஓட்டிப் பிழைக்கச் செல்லும் ஒருவர் ஒரே மாதத்தில் ஹிந்தி பேசுகிறார். அதைக் கற்றுக்கொள்வதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. 

ஆனால் கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் இந்தி இறக்குமதி நடிகைகள், பெரும்பாலும் பேசுவது ஆங்கிலம்..அல்லது டமிங்லீஸ். படிக்காத பாமரன் பொழைப்புக்காக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும்போது, இவர்களுக்கு மட்டும் ஏன் தமிழ் வர மறுக்கிறது.

ஒரு மொழியை அறிந்து நடித்தால் இன்னும் நன்றாக உணர்ச்சியை வெளிப்படுத்தலாமே..இவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும் இயக்குநர்கள் தமிழில் பேசினால் தான் வாய்ப்பு என்று சொல்லலாமே? சீமானைத் தவிர வேறு யாரும் அதைச் செய்வதாகத் தெரியவில்லை.

நமக்குத் தெரிந்து குஷ்பூ போன்ற சிலர் மட்டுமே மார்க்கெட் இருக்கும்போதே தமிழ் பேசியது.(கோபமா இருக்கேன் மக்கா..படம் நாளைக்குப் போடுறேன்!) மற்றவர்கள் நாக்கில் அந்த சரஸ்வதிதேவியின் சூலாயுதத்தால் சூடு போட்டுத் தான் தமிழை வரவைக்கவேண்டும் போலும். 

தாய்மொழியிலும் அதற்கு ஆதரவாகவும் பொதுவில் (குறிப்பாக அலுவலம், வங்கிகளில்) பேசவே தயங்க வெண்டிய நிலை தான் உள்ளது. அப்படிப் பேசுபவர்கள் பழம்பஞ்சாங்கம் ரேஞ்சுக்கு பார்க்கப்படுகிறார்கள். ’தாய்மொழியை எப்படி வேண்டுமானாலும் ரேப் பண்ணு, ஆங்கிலத்தை மட்டும் பொத்திப் பேணு’ என்ற மனநிலைக்கு நம் தாழ்வு மனப்பான்மை தான் காரணமோ?

‘தமிழ் சோறு போடுமா? அப்புறம் ஏன் அதைப் இடித்துத் தொங்க வேண்டும்? தூக்கி எறி’என்பது இன்னும் சிலரின் மனப்பான்மை. ‘எது எல்லாம் பணம் கொடுக்குமோ அதை மட்டுமே பேண வேண்டும். வரவு இல்லையென்றால் அதைக் குப்பையில் போடு’ என்பது ஆரோக்கியமான சிந்தனை தானா? 

இவர்கள் தன் பெற்றோர் சம்பாதிப்பதை நிறுத்திய பின் என்ன செய்வார்கள்? இனி வரவு இல்லையென்று வெளியில் விரட்டி விடுவார்களா? கவனிக்காது சோற்றுக்கு வழியின்றி அலைய விட்டு விடுவார்களா? தாய்மொழியாகவே இருந்தாலும் லாபம் இருந்தால்தான் கற்றுக்கொள்வோம் என்பவர்கள், அடுத்து எந்தமாதிரித் தலைமுறையை உண்டாக்குவார்கள் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது.

தாய்ப்பாசம் போன்ற பணத்தால் எடை போட முடியாத, எடை போடக்கூடாத விஷயங்கள் இன்னும் இந்த உலகில் இருக்கவே செய்கின்றன.தாய்மொழியும் அவற்றில் ஒன்று. எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவராக இருந்தாலும் அதைப் பேணுங்கள். 

அதில் தான் மறைந்துள்ளது நம் வரலாறும் அடையாளமும்!மேலும் வாசிக்க... "அன்னிய மொழிக்கு மரியாதை...தாய்மொழிக்கு?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

47 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, June 28, 2011

பிரபுதேவா - நம்மை ஏமாற்றிய பிரபலம்

டிஸ்கோ நடனம் என்றால் என்ன?

சுற்றிலும் கலர் கலராய் லைட்டுகள் மின்னும். அதைவிடக் கலராய் வழுக்கும் தரை. அங்கும் லைட்கள் மின்னும். அரை டவுசருடன் கலர் கலராய் பெண்கள் ஜிகினா ட்ரெஸ்ஸில் வரிசை கட்டி நிற்பார்கள். அவர்களுக்கு நடுவே ஜிகுஜிகு ட்ரஸ்ஸில் ஒரு ஆண். பாடல் ஆரம்பித்ததும் காலை விரித்து விரித்து மூடுவார்கள். பிறகு லெஃப்ட்டில் முகத்தைத் திருப்பி வா என்பது போல் ஒரு தலையசைப்பு. பிறகு ரைட்டிலும் அதே. பிறகு கராத்தே மாஸ்டர் போல் காலைத் தூக்கி முன்னால் ஒரு உதை. ’யா..ஊ’ என்ற சத்தம் மிகமிக முக்கியம். ஜிகினா அலங்காரம் இல்லாமல் இதை ரோட்டில் செய்யவே முடியாது. - இதுவே தமிழ்சினிமாவில் 1990வரை இருந்த நிலை.
பிரபுதேவா என்ற ஒரு அற்புதமான கலைஞனின் வருகை எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. அன்று அவர் ஆரம்பித்து வைத்த நடன ஸ்டைலே இன்றுவரை தொடர்கிறது. மரத்தைச் சுற்றியே ஒப்பேற்றும் தொப்பை பெருத்த நடிகர்கள்கூட உடம்பை வருத்தி ஆடியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை பிரபுதேவாவின் வருகை சினிமாத் துறையில் உண்டாக்கியது.

’லாலாக்கு டோல் டப்பிம்மா’ என்று சூரியனில் ஆடியபிறகே பிரபுதேவாவின் வேகமான நடனம் கவனிக்கப்பட்டது. அதற்கு முன்பே இதயத்தில் தனியாக ஆடியிருந்தாலும், சூரியன் படம் நல்ல பெயரைப் பெற்றித் தந்தது. தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான ஜெண்டில்மேனில் வந்த சிக்குபுக்கு பாடல் இந்திய மைக்கேல் ஜாக்சனாக அவரை அடையாளம் காட்டியது. பாடல்களுக்காகவே அந்தப் படம் பலமுறை பார்க்கப்பட்டது. சிக்குபுக்கு பாடல் முடிந்ததும் இளைஞர்கூட்டம் திரையரங்கை விட்டு வெளியேறுவது நான் பார்த்த நான்குமுறையும் நடந்தது.

அடுத்து ஹீரோவாக ‘இந்து’வில் களமிறங்கினார் பிரபுதேவா. முகம் சுளிக்கவைக்கும் படமாக அது அமைந்தபோதிலும் அடுத்து வந்த ‘காதலன்’ டாப் ஹீரோக்களில் ஒருவராக அவரை உயர்த்தியது. முக்காலா முக்காபுலா இந்தியாவையே கலக்கியது. அது ஜாக்சனின் ஸ்மூத் க்ரிமினலை ஞாபகப்படுத்தினாலும் பிரபுதேவாவின் தனிமுத்திரை அந்தப் பாடலில் இருந்தது. 
மேற்கத்திய நடனத்தில் பரதத்தைப் புகுத்துவதும், சட் சட்டென்று மேற்கத்திய நடனத்தில் இருந்து பரதம் போன்ற இந்திய நடனங்களுக்கு மாறுவதும், மீண்டும் தாளம் தப்பாமல் மேற்கத்திய நடனத்தைத் தொடருவதும் பிரபுதேவாவின் சிறப்பு. பாடலின் இடையே சிறு கான்செப்ட் வைப்பதிலும் வல்லவர் பிரபுதேவா. 

நடனத்தில் சிறந்தவராய் இருந்தும் அடுத்து வந்த ராசையா படம் சரியாகப் போகவில்லை. ’அடுத்த சூப்பர் ஸ்டார்?’ என்று குமுதம் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்ட நேரம் அது. லவ் பேர்ட்ஸ் படத்தில் நடிக்க ஒரு கோடி சம்பளம் வாங்கியதாகத் தகவல் வந்தது. சிறு பட்ஜெட் படங்களையே எடுத்து வந்த ஆர்.பி.சௌத்ரியே இவரை வைத்து பிரம்மாண்டமாக மிஸ்டர்.ரோமியோ எடுத்தார். அந்த அளவிற்கு அவர்மேல் நம்பிக்கை இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த இரு பிரம்மாண்டப் படங்களும் தோல்வியைத் தழுவின.

ஏ.வி.எம்மே பொன்விழாப் படத்தை இவரை வைத்து எடுத்தது. அதுவும் ஊத்திக்கொண்டது. ஆனாலும் அவர்து நடனம் படத்துக்குப் படம் மெருகேறிக்கொண்டே போனது. மின்சாரக் கனவின் வெண்ணிலவே பாடலின் நடன அமைப்பு பரவலாகப் பாராட்டுப் பெற்றது. தேசிய விருதையும் வாங்கித் தந்தது.

அதன்பிறகு ஆவரேஜ் ஹிட் நடிகர் லிஸ்ட்டில் சேர்ந்தவ்ர், தொடர்ந்து ஜேம்ஸ் பாண்டு, டபுள்ஸ் என வீழ்ந்து ஒரு நடிகராக தோல்வி அடைந்தார். அவரது நடனத் திறமையை ஒப்பிடும்போது, ஒரு நடிகராக பெரிய இடத்தைப் பிடிப்பார் என்றே எல்லோரும் நம்பினர். ஆனாலும் ஒரு ஹீரோவாக நடிப்பதில் அவர் எடுபடவில்லை. 
ஹி..ஹி
கடும் எதிர்ப்புக்கு நடுவே ரமலத்தைக் கைபிடித்த போது அவர் மேல் மரியாதையே வந்தது. லவ் பேர்ட்ஸ் படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம் அது. புகழின் உச்சத்தில் இருந்தபோது, தான் காதலித்த பெண்ணையே மணந்தார். ஆனால் அவரது தற்போதைய நடவடிக்கைகள், அவருக்கு இருந்த அந்தவொரு நல்ல பெயரையும் இல்லாமல் ஆக்கிவிட்டது.

ஒரு இயக்குநராக சம்திங்..சம்திங்(தெலுங்கு), போக்கிரி போன்ற படங்களில் பரிணமித்தவர், தற்போது கவனம் வேறு பக்கம் திரும்பியதாலோ என்னவோ இப்போது வில்லு, எங்கேயும் காதல் என சொதப்புகின்றார். 

மைக்கேல் ஜாக்சன் போன்றே நடனத்தில் மட்டுமல்லாது சர்ச்சையிலும் பிரபுதேவா திகழ்வது ஆச்சரியம் தான்.

நடிகைகளுடன் கிசுகிசு, தயாரிப்பளர்களைப் போண்டி ஆக்கியவர், மனைவி/குழந்தைகளை கைவிட்டவர் என்று பல குற்றச்சாடுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் தனிப்பட்டக் காரணங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால், அவரது நடனத் திறமை மேல் குறை சொல்ல யாராலும் முடியாது என்பதே உண்மை.
நீதானா அவ?
நல்ல நடன இயக்குநராக, பொழுதுபோக்குப் படங்களைத் தருவதில் வல்லவராக விளங்கும் திறமை பிரபுதேவாவிற்கு உண்டு. மனதை ஒருமுகப்படுத்தி வேலையில் கவனம் செலுத்தினார் என்றால், இழந்த பெயரை அவரால் மீட்க முடியும். எங்கேயும் காதலின் ‘நங்கை’ பாடலின் நடன அமைப்பே அவர் இன்னும் நடனத்தில் கிங் என்பதற்கு உதாரணம்.

ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் தமிழ்சினிமாவின் நடனத்தை பிரபுதேவாவிற்கு முன், பிரபுதேவாவிற்குப் பின் என்று தான் வரலாறு பிரித்து எழுதும்.


பிரபுதேவாவின் Youtube வீடியோக்களுக்கு:


1. மாஸ்டர் பீஸ் - புகார்(இந்தி)
2. முக்காலா முக்காபுலா
3. சுக்கலோ சந்த்ருடு(தெலுகு)

மேலும் வாசிக்க... "பிரபுதேவா - நம்மை ஏமாற்றிய பிரபலம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

41 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, June 27, 2011

விஜயகாந்த் மகனுக்கே சீட் இல்லையா - லயோலாவில் ரணகளம்

‘அடாவடிச் செயல்களில் ஈடுபடும் முன் கடந்த காலங்களில் ஆடியவர்களின் தற்போதைய நிலைமையை விஜயகாந்தின் தேமுதிகவினர்...’-ன்னு சீரியசாத் தான் இதை எழுத நினைச்சேன். அப்புறம் நானா யோசிச்சப்போ தான் அங்க உண்மையில் என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுச்சு..சொல்றேன் கேளுங்க..

அடடா..பழக்கதோசத்துல படம் மாறிடுச்சுப்பா..இப்போப் பாருங்க..

தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதைத் தவிர வேறெதுவுமே சிந்திக்கத் தெரியாத விஜயகாந்துகிட்ட அவர் மகன் போய் நின்னாரு..

‘நைனா, என்னை சினிமால ஹீரோ ஆக்கு நைனா’ங்கவும் நைனாவே பயந்துட்டாரு. ’தம்பி, இப்போ தான் நான் கொஞ்சம் அரசியல்ல தலை எடுக்கேன்..நடிச்சு அதையும் கெடுத்து மூடிடாதப்பா’ன்னு நைனா கெஞ்சவும் மகன் கொஞ்சம் இறங்கி வந்தாரு. ’அப்போ எனக்கு நம்ம இஞ்சினியரிங் காலேஜ்ல சீட்டு குடு’-ன்னு அடுத்த குண்டைப் போட்டாரு மகன்.

‘அய்யய்யோ..அது என்ன அரசியல்ல சம்பாதிச்சுக் கெட்டுனதா..போனாப்போவுதுன்னு உனக்கு சீட் கொடுக்க. பலவருசம் நடிச்சு கஷ்டப்பட்டு கட்டுன காலேஜுப்பா..வேணும்னா இன்னும் ஒரு வருசம் பொறு..நைனா உனக்கு புதுசா ஒரு காலேஜ் கட்டித் தர்றேன்’னு சொன்னதும் மவனுக்குக் கோவம் வந்துடுச்சு. ‘யாரை நம்பி நான் பிறந்தேன்’ன்னு பாடிக்கிட்டே லயோலா காலேஜ்க்குப் போய் சீட்டு கேட்டாரு.

ஒரு புள்ளை படிக்க ஆசைப்படறது ஒரு தப்பாய்யா..அங்க இருந்த அருட்தந்தை போனிபஸ் ஜெயராஜ் அவர்கள், பட்டுக்குஞ்சத்தோட மார்க் சீட்டைப் பார்த்துட்டு “உனக்கு எப்படிப்பா சீட்டு கொடுக்குறது? 1200க்கு 585 தான் எடுத்திருக்கே?’ன்னு ஈவிரக்கமே இல்லாம கேட்டிருக்காரு. அதுக்கு புள்ளையாண்டான் ‘மீதி 615 மார்க்கையும் நானே எடுத்துக்கிட்டா, கூடப்படிச்சவங்கள்லாம் என்ன சார் செய்வாங்க?’ன்னு கேட்டிருக்காரு.

பயபுள்ளை கேட்டதும் நியாயம் தானே..ஃபாதர் தான் டரியல் ஆகிட்டாரு. ‘இந்த மார்க்குக்கு எங்க காலேஜ்ல சீட் தர முடியாது’ன்னு சொன்னதுமே பட்டுக்குஞ்சத்துக்கு கோவம் வந்திருச்சு.

“எனக்கு சீட் கிடையாதுன்னு சொல்ல நீரு யாருய்யா?”ன்னு ஆக்ரோசமாக் கேட்க,

ஃபாதரும் “நாந்தான் தம்பி ஃபாதர்”னு சொல்லி இருக்காரு. உடனே தம்பிக்கு கோவம் இறங்கிடுச்சு.

“அப்படியா..நீங்க தான் ஃபாதரா..அப்போ எங்க வீட்டுல ஒருத்தர் இருக்காரே..அவர் யாருய்யா?”ன்னு கேட்டதுமே ஃபாதர் மனசு சுக்குநூறா உடைஞ்சு போச்சு.

“என்னோட பேக்ரவுண்ட் தெரியாம விளையாடுறீங்க..போகப் போகத் தெரியும்’னு பட்டு சொல்லிட்டு, திரும்பி நடந்தாரு. அப்போ தான் தம்பி பெரிய பேக்ரவுண்ட் உள்ளவர்னு ஃபாதருக்கும் புரிஞ்சது.

வீட்டுக்கு அழுதுக்கிட்டே வர்ற புள்ளையைப் பார்த்த அல்லக்கைகள்லாம் ‘சின்ன கேப்டன், என்ன ஆச்சு?”ன்னு கேட்டிருக்காங்க. தம்பி விஷயத்தைச் சொல்லவும் இரண்டு கார் நிறைய ஆளுங்கள்லாம் லயோலாக்கு வந்தாங்க. ஒரு கார்ல இருந்து தம்பி இறங்குச்சு. இடமில்லாததால இன்னொரு கார்ல இருந்து தொண்டர்கள்லாம் இறங்கியிருக்காங்க.

உள்ளபோய் திரும்பவும் ஃபாதர் மனசைப் புண்ணாக்கி இருக்காங்க. ‘எங்க கேப்டனுக்கு ஃபோன் பண்ணி விளக்கம் சொல்லு’ன்னு மிரட்டி இருக்காங்க. ஃபாதர் ’புள்ளை பேசுனதை நைனாகிட்ட சொன்னா அவரும் நொந்து போவாரே’ன்னு யோசிச்சு, போலீஸ்க்கு ஃபோன் பண்ணிட்டாரு. அப்புறம் என்ன, பதறியடிச்சுக்கிட்டு, அல்லக்கைகளும் தம்பியும் வெளில ஓடி வந்துட்டாங்க.

லயோல கேட்டைத் தாண்டுனதும் தம்பி சோகமா காலேஜைத் திரும்பிப் பார்த்துட்டு, ‘ஏண்ணே, என் தம்பி +2 முடிக்கறதுக்கு முன்னாடியாவது நைனா சி.எம். ஆயிடுவாரா?’ன்னு கேட்டதும் கூட வந்த அல்லகைகள்லாம் ‘ஓ’ன்னு அழுதுட்டாங்க. 

வேகமா வந்த வண்டி சோகமா திரும்பிப் போச்சு.


மேலும் வாசிக்க... "விஜயகாந்த் மகனுக்கே சீட் இல்லையா - லயோலாவில் ரணகளம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

56 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, June 26, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_19


”மதன், என்ன பேசுறீங்க?” என்றாள்.

உணர்ச்சி வேகத்தில் உளறி விட்டோம் என்று மதனுக்குப் புரிந்தது. 

“இல்லே ஜமீலா, அம்மா போனப்புறம் என்மேல அன்பு காட்ட யாருமே இல்லை. உன்கூடப் பழகுனப்போ, நீ அந்தக் குறையைத் தீர்த்து வைப்பேன்னு தோணிச்சு. அதான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சேன். என் அம்மாகூட இருக்கும்போது எப்படி செக்யூரா ஃபீல் பண்ணனோ, அதே ஃபீலிங் இப்போ உன்கூடப் பழகும்போதும். என்னைக் கேர் எடுத்துப் பார்த்துப்பேன்னு தோணிச்சு.”

நீ அழகாய் இருக்கிறாய், அதனால் காதலிக்கிறேன் என்று சொல்பவர்களை ஜமீலா பார்த்திருக்கிறாள். அறிவுக்காக, பணத்துக்காக காதலிக்கும் ஆண்களையும் அவள் பார்த்ததுண்டு. ஆனால் இருபத்தைந்து வயது ஆண், குழந்தையைப் போல் அழுதுகொண்டே காதலைச் சொன்னபோது கலங்கிப் போனாள். மென்மையான ஆண்களை அவள் தன் வாழ்வில் கண்டதில்லை. ஒன்றும் சொல்லாமல் எழுந்து சென்றாள்.

தனுக்குப் பயமாய் இருந்தது. அவளது அடுத்த நகர்வு என்ன என்று புரியவில்லை. நாளை ஆஃபீஸில் கம்ப்ளைண்ட் செய்வாளோ, அண்ணனைக் கூட்டி வருவாளோ, பேச மாட்டோளோ’ என்று பலவாறு எண்ணித் தவித்தான். இரவு ஆமை வேகத்தில் நகர்ந்து, சித்ரவதை செய்தது.

மறுநாள் ஆஃபீஸில் ஜமீலாவைப் போய்ப் பார்த்தான். “சாரி, நான் ஏதும் தப்பாப் பேசிட்டனா?” என்றான்

அவள் “சாயந்திரம் மெரீனா போவோம், உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்” என்றாள்.

சென்னைக்குப் புதிதாக வருபவர் எல்லோரும் சென்று சேரும் இடம் மெரீனா தான். சென்னை வந்துவிட்டு மெரீனாவைப் பார்க்காமல் போவது மிகப்பெரிய பாவமாகவே தமிழகத்தில் பர்க்கப்படும். ஒருவேளை கேரளத்திலும் அப்படித் தானோ? உண்மையில் மெரீனாவை விட பெசண்ட் நகர் பீச் பேசுவதற்குப் பெட்டர். மகாபலிபுரம் பக்கம் ஒதுங்குவது இன்னும் பெட்டர்.

வள்ளுவர் கோட்டம் பக்கம் மழைக்குக்கூட ஒதுங்கக்கூடாது. அவளை விட்டுவிடுவார்கள். ஆண்மகனுக்குத் தான் அங்கு நாலைந்து ஆப்பு ஏத்திக்கட்டிய லுங்கியுடன் ரெடியாக இருக்கும். ஃப்ரீ தான் தம்பின்னு வேற சொல்வாங்க. மனசுல பெரிய சிஎம்-னு நினைப்பு..ச்சே, காதலி பீச்சுக்கு அழைக்கையில் ஏன் இந்த கர்மாந்திரத்தை எல்லாம் நினைக்கிறோம் என்று தன்னையே திட்டிக் கொண்டான். 

மாலையில் அவளுடனே மெரீனா சென்று சேர்ந்தான். பலியாடு போல் அவள் பின்னாலேயே சென்றான்.

பையன்கள் பெண்களுடனும் ஆண்டிகள் அங்கிள்களுடனும் வெயிலில் ‘நிலா காயுது’ரேஞ்சில் செட்டில் ஆகியிருந்தார்கள். நேரம் கிடைக்கையில் இவர்களை வைத்து ஒரு ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று மதனுக்குத் தோன்றியது. தினமும் ஒரே ஆளுடன் தான் வருகிறார்களா, அனைவருமே காதலர்கள் தானா, ஆண்ட்டிகள் கணவனுடனா இப்படி குசுகுசுவெனப் பேசுகிறார்கள், இவர்கள் கடைசியில் என்ன ஆகிறார்கள் - என்பது பற்றி ஒரு தீஸிஸ் ரெடி பண்ணினால் என்ன என்று மதனுக்குத் தோன்றியது. 

“அங்கே உட்காரலாமா?” என்றாள் . அங்கே ஒரு ஜோடி படகு மறைவிலிருந்து எழுந்து கிளம்பிக்கொண்டிருந்தது.

“சரி” என்றான்.

அங்கே சென்றவுடன் சந்தேகத்துடன் சுற்றுமுற்றும் நன்றாகப் பார்த்துவிட்டு திருப்தியாகி மதன் உட்கார்ந்தான்.

”சரி, சொல்லு” என்றாள்.

சொல்லா, இவ தானே பேசணும்னு கூட்டி வந்தாள்னு குழம்பியபடியே “என்ன சொல்ல?” என்றான்.

“ஏதோ சொன்னயே” என்றாள்.

“ம்....” என்று பம்மினான்.

“என்னைப் பத்தி என்ன தெரியும் உனக்கு?” என்றாள்.

“நீ நல்ல பொண்ணு. ரொம்ப சாஃப்ட் நேச்சர். யார்கிட்டயும் கோபப்பட்டுப் பேசவே தெரியாது. எல்லார் மேலயும் அன்பா இருப்பே”

“நான் என்னைப் புகழந்து பேசச் சொல்லலை. என்னைப் பத்தி என்ன டீடெய்ல் தெரியும் உனக்கு?”

“கேரளா. இங்க அண்ணன் வீட்ல இருந்து வர்றே. அப்புறம் பி.காம்...ம், அவ்வளவு தான்”

“அவ்வளவு தானா? இந்த நாலு விஷயம் மட்டும் போதுமா ஒரு பொண்ணு தன்னோட வாழ்க்கைத் துணைன்னு ஏத்துக்க?”

“அதுகூட எனக்கு வேண்டாம், உன்னைப் பார்த்தா உடனே..”

“போதும்..நான் சொல்லட்டா என்னைப் பத்தி?.....இந்த அண்ணன் என் சொந்த அண்ணன் இல்லை. வீட்டுக்கு ஒரே பொண்ணு. கட்டுப்பாடான இஸ்லாமியக் குடும்பம். அப்புறம்..”

“அப்புறம்?”

“நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ.”

(தொடரும்)

மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_19"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

44 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, June 25, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_18

பாகம் : மூன்று --------------------அத்தியாயம் : ஒன்று

ஒரு பெண்ணுக்காக மணிக்கணக்கில் பஸ் ஸ்டாப்பில் காத்துக் கிடப்பது, செக்யூரிடி போல் பின்னாலேயே வீடு வரை போவது, ஹோட்டல் ஹோட்டலாய் கூட்டிப் போய் திங்க வைத்து பில் கட்டுவது போன்ற வேலைகள் எல்லாம் வேஸ்ட் என்ற தெளிவுக்கு மதன் இந்த நான்கு வருடங்களில் வந்திருந்தான். 

நாம் என்னதான் சின்சியராக லவ் பண்ணினாலும், கடைசியில் கிடைப்பது பல்பு தான்’என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருந்தது மதனுக்கு. பிரவீணாவும் ஜெனிஃபரும் கொடுத்த பல்புகளை நினைவுச்சின்னமாக நெஞ்சில் சுமந்தபடி திரிந்தான்.

இனிமேலாவது ஒழுங்காய் வேலை பார்த்து லைஃபில் செட்டில் ஆவோம் என்று தீர்மானம் செய்து, ஒரு நல்ல இஞ்சினியராக உருவெடுத்தான். ஆஃபீஸில் அவனுக்கு நல்ல பெயரும் இருந்தது. அடிபட்டுத் தெளிந்தபின், யாரையும் காதலிக்கத் தோன்றவில்லை. இனிமேல் தன் வாழ்வில் காதல் கத்தரிக்காய்க்கெல்லாம் இடமே இல்லை என்று உறுதி எடுத்துக் கொண்டான்.

அந்த நேரத்தில் தான் அவனது அலுவலகத்தின் அக்கவுண்ட் செக்சனுக்கு வந்து சேர்ந்தாள் ஜமீலா. 

’காதல் வருவதற்கான காரணங்கள் பிரபஞ்ச ரகசியத்திற்கு ஈடானவை’ என்றே மதனுக்குத் தோன்றியது. ஜமீலாவைப் பார்த்ததுமே காதல் கொண்டான். ‘ஏற்கனவே பட்டது போதாதா’ என்று உள்மனது எச்சரித்தாலும் ‘இவள் எனக்கெனப் பிறந்தவள்’ என்ற எண்ணம் மேலோங்கியது. ஏற்கனவே பிரவீணாவையும் ஜெனிஃபரையும் அப்படித் தானே நினைத்தோம் என்று அவன் யோசிக்கவில்லை.

’ஜமீலா கேரளத்தைச் சேர்ந்தவள். சென்னையில் உள்ள தன் அண்ணனின் வீட்டில் தங்கியபடி வேலைக்கு வருகின்றாள். பட்டப்படிப்பை முடித்தவள். நல்ல ஆங்கில அறிவு. யாரிடமும் கடிந்து பேசாத மென்மையான சுபாவம்’ என அவளைப் பற்றிய தகவல்களை ஒவ்வொன்றாகத் திரட்டினான்.

அடிக்கடி அக்கவுண்ட் செக்சன் பக்கம் போவதும், ஜமீலா பேண்ட்ரி(Pantry) பக்கம் போனால் இவனும் ஓடிப்போய் ஒரு காஃபியை எடுத்து நின்றுகொள்வதுமாய் தன் வேலையை ஆரம்பித்தான்.

‘கேரளாவில் அரிசி பெருசு பெருசா இருக்குமாமே’ என்பதில் ஆரம்பித்து ’மலையாளப் படங்கள்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும், ரொம்ப யதார்த்தமான வாழ்வைப் பிரதிபலிக்கும் படங்கள்’ என்பது வரை பேசியே அவளைத் தாக்கினான். மலையாள பிட்டுப் படங்களைத் தவிர வேறெதும் அவன் பார்த்ததில்லை என்பது வேறு விஷயம். ஜமீலா மதனை ஒரு நண்பனாக ஏற்றுக்கொண்டாள். எங்கு பார்த்தாலும் புன்னகைப்பதும், பேசுவதும் வழக்கமானது.

ஜமீலா சகஜமாகப் பேச ஆரம்பித்து விட்டாதால், அடுத்த ஸ்டெப்புக்கு நகரலாம் என்ற தைரியம் மதனுக்கு வந்தது.

ஜாலியாகச் சிரித்துப் பேசும் பெண் என்றால் ஏதாவது எஸ் எம் எஸ் ஜோக் படித்துக்காட்டலாம். இடையிடையே ஏ ஜோக்கை அவிழ்த்து விட்டு ஆழம் பார்க்கலாம். கொஞ்சம் அறிவுஜீவித்தனமாக அட்டாக் செய்ய நினைத்தால் ஓஷோவை துணைக்கு அழைக்கலாம். ‘காமத்தில் ஆண் தேடுவது தான் என்ன?’ என்று புருவம் தூக்கிப் பேசலாம். தொடாமல், பேச்சிலேயே அவளை ஸ்பரிசிக்கலாம். ஆனால் ஜமீலா விஷயத்தில் இது எதுவும் வேலைக்காகாது என்று தெரிந்தது.

அவளுக்குள் ஒரு சிறிய பெண்ணியப் போராளி ஒளிந்திருப்பது போல் தோன்றியது. ஆண்களை நம்பாத ஒரு போக்கு அவளிடம் இருந்தது. ஆனாலும் அவளை அவன் விரும்பினான். தன்க்கு ஒரு நல்ல துணையாக, தாயாக அவள் இருப்பாள் என்று நம்பினான்.

ஒருநாள் பேசிக்கொண்டிருக்கையில் மதனின் குடும்பத்தைப் பற்றிக் கேட்டாள் ஜமீலா.

“நான், என் அப்பா அவ்வளவு தான். அவர் ஊருல இருக்காரு. நான் இங்க.” என்றான்.

“அம்மா?”

எவ்வளவு ஜாலியாகப் பேசும் நேரத்திலும் மதனிடம் நாங்கள் அம்மா பற்றிய பேச்சை எடுப்பதில்லை. அம்மா என்றதுமே உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்குவான். அது தெரியாமல், ஜமீலா கேட்டாள்.

“நான் டென்த் படிக்கும்போது, அம்மா இறந்துட்டாங்க’ என்றான். சொல்லும்போதே கண்ணில் நீர் முட்டியது. 

“ஓ..ஐ அம் சாரி” என்றாள்.

“பரவாயில்லை..அதான் இப்போ நீ வந்துட்டயே” என்றான் மதன்.

ஜமீலா திடுக்கிட்டாள்.
மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_18"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

44 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, June 24, 2011

ஆரண்ய காண்டம் - அற்புதமான படம்

பொதுவாக ஒரு படம் ரிலீஸாகி ஒரு வாரம் ஆகிவிட்டாலே, நான் விமர்சனம் எழுதுவதில்லை. ஆனாலும் இந்தப் படத்தைப் பார்த்தபின் இதை வரவேற்று எழுதுவது ஒரு சினிமா ரசிகனின் கடமை என்று தோன்றியதால்....
என்னென்னவோ பெயரில் சிறு பட்ஜெட் படங்கள் வ்ந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் பத்தோடு பதினொன்றாக வந்த ஆரண்ய காண்டத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நல்ல படம் தான் பார்ப்பேன் என அடம்பிடித்து அவன் இவன் பார்த்து நொந்தேன். சக பதிவர்களால் பாராட்டப்பட்ட படம் என்பதால் ஆரண்ய காண்டம் பார்ப்பது என்று முடிவு செய்து அசுவாரஸ்யமாய் உட்கார்ந்தால், முதல் காட்சியிலேயே இது சாதாரணப் படம் அல்ல என்று உணர்த்தி விடுகிறார்கள்.

ராமாயணத்தில் ஆட்சிப்பொறுப்பை பரதனிடம் விட்டு விட்டு, ராமன் வனவாசம் புகும்போது ஆரம்பிப்பது ஆரண்ய காண்டம், தமிழில் வன அத்தியாயம் எனச் சொல்லலாம். தொடர்ந்து சூர்ப்பனகையால் சீண்டப் படுவதும், ராம-லட்சுமணர்கள் சூர்ப்பனகையின் மூக்கு+மார்பை அறுத்து அவமானப்படுத்துவதும் நிகழ்வது ஆரண்ய காண்டத்தில் தான். அதுவரை சமூகநெறியைக் கட்டிக்காத்துச் செல்லும் கதை, ஆரண்ய காண்டத்தில் மேற்சொன்ன அதிரடி நிகழ்வுகளுடன் சீதை கடத்தப்படுவதில் முடிகிறது.

எல்லா தர்ம நெறிகளும் தூக்கி எறியப்பட்ட தாதாக் கோஷ்டிகளின் காட்டுத்தனமான வாழ்வை, உலகத் தரத்தில் சொல்கிறது இந்த ஆரண்ய காண்டம், திரைப்படம்.

வயதானதால் தொழிலில் பலவீனமான சிங்கப்பெருமாள்(ஜாக்கி செராப்) கோஷ்டியில் பசுபதியும்(சம்பத்) ஒரு அடியாள். வலுவான எதிர்க்கோஷ்டியான கஜேந்திரன்(ராம்போ ராஜ்குமார்) குரூப்பிற்கு போதை மருந்து கடத்தி வரும் ஆள், தானே அதை விற்று செட்டில் ஆக முயற்சிக்கிறான். ஜாக்கியை மீறி சம்பத் அதை வாங்க முற்பட, இரு கோஷ்டிகளின் கோபத்திற்கு ஆளாகின்றான். தொடர்ந்து சம்பத்தின் மனைவியும் ஜாக்கி கோஷ்டியால் கடத்தப்படுகிறார். சம்பத் இரு கோஷ்டிகளிடம் இருந்து தப்பித்தாரா, போதை மருந்து என்ன ஆனது, மனைவியை மீட்டாரா என்பதை விறுவிறுப்பாகச் சொல்லி இருக்கிறார்கள்.
படத்தின் ஸ்பெஷலே, ஒரு காட்சிகூட நாம் ஏற்கனவே எந்த்வொரு தமிழ்படத்திலும் பார்க்காதவை. கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அந்தப் பாத்திரத்திற்கென பிறந்தவர்கள் போன்ற தேர்வு, மிக இயல்பான வசனங்கள் என இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கலக்கி எடுத்துள்ளார். 

தான் சேர்த்து வைத்த பெண்ணிடம் முடியாத, வெளியில் தாதாவாகத் திரியும் பெரியவர் பாத்திரத்தில் ஜாக்கி செராப். மனிதர் கலக்கி இருக்கிறார். கடைசியாக அவரை ரங்கீலாவில் பார்த்தது.(அவரை எங்கே பார்த்தோம்..) ஈ என இளிப்பதும், ஒவ்வொரு மூடுக்கும் ஏற்ற மாதிரி நடையை மாற்றுவதும் பாடி லாங்வேஜும் அட்டகாசம். இந்தியில்கூட இவருக்கு இப்படி ஒரு நல்ல பாத்திரம் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை.

அடுத்து சப்பையாக வரும் ரவிகிருஷ்ணாவும் படத்தின் ஹீரோவாகவே வரும் சம்பத்தும் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தி உள்ளனர். சுப்புவாக நடித்திருக்கும் யாஷ்மின், பல அதிரடிகளை அரங்கேற்றிக் கலக்குகிறார்.

படத்தின் முக்கியமான பாத்திரம் வழ்ந்து கெட்ட ஜமீனாக வரும் சோமசுந்தரம். ஒரு கிராமத்து அப்பாவிக் கதாபாத்திரத்தை கண்முன் நிறுத்துகிறார். நகரத்து தாதாக்கள் எல்லாம் ஒருவித இறுக்கத்திலேயே வலம்வருவதும், அவர் எளிமையான அப்பாவியாக வருவதும் நம் மனதைத் தொடுகிறது. ‘நீயும் அப்படிச் சொல்லாதய்யா’ என மகனிடம் சொல்லும்போது கலங்க வைக்கிறார். ஹூம், அவன் இவனிலும் ஒரு ஜமீன் கேரக்டரைப் பார்த்தோமே என்று நொந்து கொண்டேன்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் யுவன் சங்கர் ராஜாவின் இசையும், வினோத்தின் ஒளிப்பதிவும் பி.எல்.ஸ்ரீகாந்தின் எடிட்டிங்கும். படம் நெடுக புன்னகைக்க வைக்கும் வசனங்கள், பல நேரங்களில் ப்ளாக் ஹ்யூமர். ‘உனக்கு உன் அப்பாவை ரொம்பப் பிடிக்குமா’ என்ற கேள்விக்கு ஜமீனின் மகன் ;இல்லே, ஆனா அவர் என் அப்பா’ என்பது நல்ல உதாரணம்.

வறுமையும் வாழ்க்கைச்சூழலும் துரத்தும்போது, சிறுவயதிலேயே தர்மநெறிகள் முடிக்குச் சமானமாக தூக்கி எறியப்படும் யதார்த்ததை அந்தச் சிறுவன்(மாஸ்டர் வசந்த்) கேரக்டரில் அற்புதமாகக் காட்டியுள்ளார்கள்.

கெட்ட வார்த்தைகள் படத்தில் சில இருந்தாலும், முகம் சுளிக்க வைக்கவில்லை, ஏனென்றால் அவை தவிர்க்க முடியாத யதார்த்தமாகவும்,   வலிந்து திணிக்கப்படாததாக இருப்பதால் தான்.

நல்ல தரமான உலகப் படங்களைப் பார்க்கும் சினிமா ஆர்வலர்களுக்கு, நம் ஊரிலேயே உலகத் தரத்தில் ஒரு படம் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கும். இந்த அற்புதமான படத்தைக் கொடுத்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும், தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுக்கும் ஒரு ராயல் சல்யூட்.
தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக நிற்கும் இந்த ஆரண்ய காண்டம்!
மேலும் வாசிக்க... "ஆரண்ய காண்டம் - அற்புதமான படம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

41 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, June 23, 2011

கர்ப்பமான ஐஸும் கர்ஜித்து எழுந்த ரஜினியும் (நானா யோசிச்சேன்)

டிஸ்கி: சாரி, சூப்பர் ஸ்டார் ஸ்டில்லை இங்கு போடலை. ஏன்னா
 நாளைக்கு யாரும் என்னைப் பார்த்து ‘ஆம்பளைப் படம் போட்டு ஹிட்ஸ் வாங்குன பதிவர் தானே நீ’-ன்னு நாக்கு மேல பல்லைப் போட்டு பேசிடக்கூடாது பாருங்க..நமக்கு மானம் தாண்ணே முக்கியம்!

நெஞ்சைத் தொட்ட வரிகள்:

ஏ அடக் படக் டிமிக்கடிக்கிற
டோலு பையா டப்சா
உட்டாம் பாரு கப்சா
அப்ச கல்லு மாலியா
ஆத்துப் பக்கம் வாறியா?
லாலாக்கு டோல் டப்பிம்மா.....

பதிவர் சந்திப்பு:

எனக்கு பதிவர்னாலே பயம்ணே..அதுவும் பதிவர் சந்திப்புன்னா ரொம்ப ரொம்ப பயம்ணே..வீரம் விளைஞ்ச மண்ணான திருநெல்வேலில பதிவர் சந்திப்புங்கவும் எத்தனை தலை உருளப்போகுதோ, ஆன்லைன்ல பார்ப்போம்னு ஆர்வமா இருந்தேன். பயபுள்ளைக நாம எதிர்பார்த்த அளவுக்கு ஒன்னுமே பண்ணலியே..
’மூக்கு முட்டச் சாப்பிட்டோம்’ங்கிறதுல என்னய்யா சுவாரஸ்யம் இருக்கு? ’மூக்குல குத்திட்டான்’ன்னா எப்படி சூப்பரா இருந்திருக்கும்..ரெண்டு வீச்சருவா வாங்குனோம், நாலு பேரைப் போட்டுத் தள்ளுனோம்னு இல்லாம சவசவன்னுல்லே சந்திச்சிருக்காங்க..அடி தூள் பறந்திருக்க வேண்டாமா? ‘சண்டை முடியும்வரை கொண்டை போட மாட்டேன் - பெண் பதிவர் பாஞ்சாலியின் சபதம்’னு ஒரு ’பதிவர் சந்திப்பு பதிவு’ போட்டா, எப்படி இருந்திருக்கும்? நல்ல சான்சை வேஸ்ட் ஆக்கிட்டாங்களே..

இதுக்கு சிறப்பா ஏற்பாடு பண்ண எங்க பண்ணையார் ஐயா மேல ஒரே ஒரு வருத்தம் தான்..வந்திருந்த பச்சப்புள்ளைங்க கிளம்பும்போது ஆளுக்கொரு பால்புட்டி பரிசாக் கொடுக்காம அம்போன்னு விட்டுட்டாரே...!

சிங்கம் ஒன்று..:

’சூப்பர் ஸ்டார் ஜூலை முதல் வாரம் இந்தியா திரும்புறார்’ங்கிற செய்தியைப் படிச்சதுமே நம்மோட பிரார்த்தனை எதுவும் வீண் போகலை, ஆண்டவன் தமிழகத்தை மட்டுமில்லை ரஜினியையும் காப்பாத்திட்டான், எல்லாம் அவன் செயல்னு ரொம்ப சீரியஸா யோசிச்சுக்கிட்டு இருந்தேன். 

ஆனா ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்னு தெரிஞ்ச அப்புறம் தான் எனக்கு மேட்டரே உறைச்சது.(மேட்டர் என்ன மிளகாயான்னு குதர்க்கமா பின்னூட்டாதீங்கப்பா) தலைவர் எப்போ வருவாரு, எப்படி வருவாருன்னு யாருக்குமே முதல்ல தெரியலை, அப்போ தான் இந்த ஐஸ் கர்ப்பமான நல்ல செய்தியை யாரோ புண்ணியவான் தலைவர்கிட்ட சொல்லி இருக்காங்க. உடனே ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ன்னு தலைவர் குளுக்கோஸ் ட்ரிப்ல ஆரம்பிச்சு ஜிப் வரைக்கும் எல்லாத்தையும் ஆவேசமா கழட்டி எறிஞ்சுட்டு எந்திரிச்சுட்டாரு..எதுக்கா?
அட, என்னாங்க நீங்க..ஐஸ்க்கு எப்படியும் ஐஸ் மாதிரியே அழகான பெண் குழந்தை தான் பிறக்கும். அது கூடவும் தலைவர் டூயட் பாட வேண்டாமா? தன்னோட நீண்டநாள் ஆசையான ஐஸு உடன் எந்திரன் நடிச்சப்புறம், அவரோட உள்மனசுல இனியும் நாம சாதிக்க வேண்டியது என்ன இருக்குன்னு ஒரு நினைப்பு வந்திருச்சு போல..அதான் படுத்துட்டாரு.

இப்போ ஒரு டார்கெட் கிடைச்சாச்சுல்ல..தலைவா விட்றாதே..ஐஸ் பொண்ணுகூட நீ அலுங்காம குலுங்காம ஆடணும். அதை இப்போ ஒரு வயசு ஆகிற என் மகனோட மகன் வந்து ரசிக்கணும்..அதுவரைக்கும் விடமாட்டோம் உன்னை!

தங்க டிக்கி:

எங்க ஊர்ல ஒரு ரவுசான பாட்டி இருக்கு. என் பையன் ’பின்பக்கத்துல’ உம்மா கொடுத்துக்கிட்டே ‘தங்கக்...’ன்னு கொஞ்சி செம ரகளை பண்ணும். ஆனா இப்போ திருச்சி ஏர்போர்ட்ல உண்மையிலேயே ஒரு தங்க டிக்கி மாட்டியிருக்காரு.
இலங்கையில இருந்து ஒரு ஆளு..பதிவரான்னு தெரியலை..பயங்கரமா யோசிச்சு தங்கம் கடத்திக்கிட்டு வந்திருக்காரு. எங்க வச்சுங்கிறீங்க? ஆசன வாய்ல.(எங்க ஆசானோட வாய் இல்லைய்யா..)  அந்தாளைப் பிடிச்சு பின்னால டெஸ்ட் பண்ணப்போ ஒரு கிலோ தேறும்னு தெரிஞ்சிருக்கு. என்னதா..நாசமாப் போச்சு,தங்கம் தான்யா! அப்புறம் என்ன ஐயாவுக்கு ராஜ வரவேற்பு கொடுத்து உள்ள தூக்கி வச்சுட்டாங்க.

இதுமாதிரி எத்தனை தடவை ’அங்க’ வச்சு தங்கம் கொண்டுவந்தாரோ தெரியலை..ஆமா, அதுல செஞ்ச நகையைவா நம்மூரு லேடீஸ் கழுத்துல காதுல போட்டுகிட்டுத் திரியறாங்க? கர்மம்..கர்மம்!

பதிவர் வேண்டுகோள்:

தன்னோட ப்ளாக்ல நடிகைங்க படம் போடுற வழக்கம் இல்லாத ஒரு நல்ல பதிவர், எனக்கு மெயில் அனுப்பி இருந்தாரு. என்ன மேட்டர்னு பார்த்தா, அது இதுன்னு வளவளத்துட்டு ’நானா யோசிச்சேன்ல ஹன்சிகா படம் போடுங்க..ஹி..ஹி’-ன்னு மெயிலியிருக்காரு. என்ன அநியாயம் பாருங்க..சரி, மனுசன் ஆசைப்பட்டு கேட்டுட்டாரு..அவருக்காக மீண்டும்:

மன்ற நடவடிக்கை:

பெரிசுகள்லாம் மன்னிக்கணும்..பத்மினி ரசிகர் மன்றத்தைக் கூட்டி ரொம்ப நாளாயிடுச்சு..அதனால..


மேலும் வாசிக்க... "கர்ப்பமான ஐஸும் கர்ஜித்து எழுந்த ரஜினியும் (நானா யோசிச்சேன்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

62 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, June 22, 2011

மங்காத்தா - வேலாயுதம்-ஏழாம் அறிவு : ஒரு பார்வை


இன்று டாப் 3 இளம் ஸ்டார்களின் அடுத்த படம் பற்றி ஒரு பார்வை பார்ப்போம்..

மங்காத்தா:

தல அஜித் நீண்ட இடைவெளிக்கு அப்புறம் நடித்து வெளி வர்ற படம் ‘மங்காத்தா’. அஜித்தின் ஐம்பதாவது படம் என்ற எதிர்பார்ப்பு வேறு. சென்னை28  பேரை வைத்தே இன்னும் வண்டி ஓட்டிக் கொண்டு இருக்கிற வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் த்ரிஷா, அர்ஜூன் மற்றும் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்கள் நடிக்கிற படமா வளர்ந்துக்கிட்டு இருக்கிறது. 
படத்தோட ஸ்டில் எல்லாம் ஓசியன் லெவலை ஞாபகப்படுத்துறதா தம்பி ஜீ ஏற்கனவே இங்கே புலம்பி இருந்தார். எப்படியும் இந்தப் படம் ஏதோவொரு ஆங்கிலப்படத்தோட தழுவலாத்தான் இருக்கும்கிறதுல நமக்குச் சந்தேகம் இல்லை. அதைக் கொஞ்சம் நம்மூருக்கு ஏற்ற மாதிரி மாற்றி, ரசிக்கும்படியாத் தழுவுனாப் பிரச்சினை இல்லை.

ஃப்ரெஷ்னெஸ் இல்லாத த்ரிஷா அம்மையாரும் ஃபிட்னெஷ் இல்லாத வெங்கட் பிரபுவும் தான் படத்தோட எதிர்பார்ப்பைக் குறைக்கிற விஷயங்கள்.  அஞ்சலியும், லட்சுமி ராயும் இருப்பதால் ஃப்ரெஷ்னெஸ்க்குப் பிரச்சினை இல்லை. 
ஏற்கனவே சுமாரான சரோஜாவும் கோவாவும் கொடுத்த வெங்கட், இதுலயாவது ஜெயிக்காரான்னு பார்ப்போம். அசல் தோல்விகளை அசராமக் கொடுக்கிற அண்ணன் அஜித்தும் இதுல ஜெயிச்சாக வேண்டிய கட்டாயம். 

வேலாயுதம்:

காவலன், நண்பன்னு நல்ல ரூட் கிடைச்சாலும், பழசை மறக்காம குருவி, சுறா ஸ்டைல்ல டாக்டர் விஜய் நடிக்கிற படம். இதுவரை ரீமேக் மட்டுமே பண்ணிக்கிட்டு இருந்த ஜெயம் ராஜா, முதல்முறையா சொந்தமாக் கதை எழுதி இயக்குற படம். பழைய ஜெனிலியா, புது ஹன்சிகா என விஜய்க்கு இரண்டு ஜோடிகள். நாட்டு மக்களுக்கு நல்லது செய்ற ஆக்சன் ஹீரோ கதைன்னு கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது. திருப்பாச்சி, கில்லி மாதிரி நல்ல ஆக்சன் படமா இருந்தா நமக்கும் நல்லது, டாகுடருக்கும் நல்லது.
எதையும் தாங்கும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தான் தயாரிப்பாளர். அதனால் ஒன்னும் பிரச்சினை இல்லை. ஓப்பனிங் சாங்குக்கே 2 கோடி செலவழிச்சாங்களாம். விஜய்யோட படங்கள்லயே பிரம்மாண்டப் படமா வரணும்னு உழைச்சுக்கிட்டு இருக்காங்க. கதையும் திரைக்கதையும் பிரம்மாண்டமா இருந்தாலே போதும்னு ஆடியன்சான நாம நினைச்சாலும் சினிமாக்காரங்க அப்படி நினைக்கத் தயாரா இல்லை.

ஏழாம் அறிவு:

மேலே சொன்ன இரண்டு படங்களை விடவும் அதிக எதிர்பார்ப்பு இந்தப் படத்துக்குத் தான். ஏன்னா, கஜினி-ங்கிற மெகா ஹிட் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸும் சூர்யாவும் மீண்டும் இணையும் படம். இந்தப் படமும் கிறிஸ்டோஃபர் நோலனின் ‘இன்செப்சன் + பிரஸ்டீஜ்’ படங்களின் கலவையா இருக்கும்போல் தெரிகிறது.அதை கஜினி மாதிரி பக்காக் கமெர்சியலா எடுத்தா, நல்லாத் தான் இருக்கும்.

படத்துல நமக்குக் குறையாத் தெரியறது ஸ்ருதி ஹாசன் ஹீரோயினா நடிக்கிறது தான். இந்தில அது நடிச்ச படத்தைப் பார்த்தப்போ நடிப்பு இன்னும் தேறணும், ஆளு இன்னும் இன்னும் தேறணும்னு தோன்றியது. இதிலாவது முருகதாஸ் புண்ணியத்தில் தேறுகிறாரான்னு பார்ப்போம்.


மேலும் வாசிக்க... "மங்காத்தா - வேலாயுதம்-ஏழாம் அறிவு : ஒரு பார்வை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

33 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, June 21, 2011

பொம்பளைகளுக்கு ஏன்யா இம்புட்டு ஞாபக சக்தி?

"பாலாக்குட்டிக்கு இந்த ட்ரெஸ் சூப்பரா இருக்கே. யாரு எடுத்தது இந்த ட்ரெஸை?” என்றேன்.

தங்கமணி முறைத்தார். 

சூப்பரா இருக்குன்னு தானே சொன்னோம், ஆனாலும் சுனாமிக்கான அறிகுறி தெரியுதே ஏன்ன்னு குழம்பிப்போய், “என்ன?”  ன்னு கேட்டென். கிணத்துக்குள்ள இருந்து வர்ற சத்தம் மாதிரி ’என்ன’ வந்துச்சு.

“அது 3 மாசம் முன்ன உங்க பிள்ளைக்கு முதல் முதலா நீங்க எடுத்துக் கொடுத்த ட்ரெஸ்.”ன்னு சொல்லுச்சு. நமக்கு 3 நாள் முன்னே என்ன சாப்பிட்டோம்னே ஞாபகம் இருக்காதே..வழக்கம்பொல ஙேன்னு முழிச்சேன்.

இது ஒன்னும் நமக்குப் புதுசில்லை. அப்படித்தான் நாங்க டெல்லில இருக்கும்போது திடீர்னு “போன ஜுலை மாசம் என்ன சொன்னிங்க?’ன்னு கேட்டுச்சு. 

ஒரு மாசத்துல ஒரு மனுசன் என்னென்னமோ சொல்லி இருப்பான், இதெல்லாம் என்ன கேள்வின்னு யோசிசுக்கிட்டே”என்ன சொன்னேன்?”ன்னு கேட்டேன்.

பதிலுக்கு “உங்க பேச்சை தண்ணில தான் எழுதி வைக்கணும்’னு சொல்லுச்சு.

நமக்குக் கோவம் வந்துடுச்சு.இருந்தாலும் இது ஆஃபீஸ் இல்லை, வீடுங்கிறதுனால பொறுத்துக்கிட்டே ‘அப்படி என்ன தான் சொன்னேன்’ன்னு கேட்டேன்.

“தாஜ்மஹாலுக்குக் கூட்டிட்டுப் போறேன்’ன்னு சொன்னீங்கள்ல”ன்னாங்க.

நான் “அப்படியா?’ன்னு கேட்டேன். கடுப்பாகிட்டாங்க. நான் எப்ப அப்பிடிச் சொன்னேன்னு எனக்கே ஞாபகம் இல்லை. ஆனா அவங்க சொன்னாங்க பாருங்க பதிலு..

“அன்னிக்கு வெள்ளிக்கிழமை, காலைல..நீங்க ஆஃபீஸ் கிளம்பிக்கிட்டு இருந்தீங்க. இட்லி அவிச்சுக்கொடுத்தேன். சாப்பிட்டுட்டு கிளம்பினீங்க. வொயிட் கலர், ப்ளூ கோடு ப்போட்ட சட்டை போட்டிருந்தீங்க. ஆஃபீஸ்ல சுட்ட பேனா நாலு நம்ம வீட்ல வச்சிருப்பீங்கள்ல..அதுல ஒன்னை எடுத்து அந்தச் சட்டைல சொருகி இருந்தீங்க. ஜீன்ஸ் பேண்ட் வேற. சேர்ல கிடந்த சிவப்புக்கலர் துண்டை எடுத்துக் கையைத் துடைச்சுக்கிட்டே..”

”ஆமா நான் சொன்னேன்..சொன்னேன்..போதும் தாயி உன் டீடெய்லு”ன்னு சரணடைஞ்ச அப்புறம் தான் விட்டாங்க.

கல்யாணம் ஆன புதுசுல ஒரு மனுசன் என்னத்தியாவது சொல்லத் தான் செய்வான். ‘தாஜ்மஹாலை வாங்கித் தாறேன்’ன்னு கூடத்தான் சொல்வான். அதுக்காக, அதை இவ்வளவு டீடெய்லாவா ஞாபகம் வச்சுக்கிறது? 


அது மட்டுமில்லாம அவங்க வீட்டு ஆட்களைப் பத்தி ஏதாவது கமெண்ட் அடிச்சோம்னாத் தொலைஞ்சோம். ஜென்மத்துக்கும் மறக்காம ஞாபகம் வச்சிருக்காங்க. (ஹனிமூனில் வாங்கிய தர்மபத்தினி அடி படிச்சாச்சா?). 

நான் நம்ம வீடு தான் இப்படியோன்னு பார்த்தா, என்கூட வேலை செய்யுற நண்பரும் நேத்து தர்மபத்தினி அடி வாங்கிட்டு ஆஃபீஸ் வந்தாரு. ‘எப்படிங்க இவங்க நாம எப்பவோ சொன்னதை எல்லாம் இவ்வளவு துல்லியமா ஞாபகம் வச்சிருக்காங்க’ன்னு புலம்பித் தள்ளிட்டாரு. அவர் பெருசா ஒன்னும் சொல்லிடலை. 

கல்யாணம் ஆன புதுசுல ‘நான் அழகா இருக்கனா?’ன்னு கேட்டிருக்கு. ’ஆமா, உன் அக்காவை விட நீ சூப்பரா இருக்க’ன்னு நல்லாத் தான் சொல்லி இருக்காரு. அன்னைக்கு விட்டிடுச்சு. இப்போ ‘ அவளை எதுக்கு அவ்வளவு டீப்பா பாத்தீங்க?’ன்னு குத்து விழுது.

என் ஃப்ரெண்டு ஒருத்தன் சின்ன வயசுல நாலோ அஞ்சோ படிக்கும்போது குப்புற விழுந்து நாக்குல பல்லு வெட்டிடுச்சு. இப்பவும் அந்த வெட்டு, நாக்குல தெரியும். விழுந்தது மட்டும் தான் எங்களுக்க்கு ஞாபகம் இருக்கு. அப்போ எங்ககூடப் படிச்ச புள்ளை (ஃபிகருன்னு சொல்லலாமா? வேணாம்..அப்புறம் வலிக்கும், எனக்கு) கொஞ்ச மாசம் முன்ன நாங்க பார்த்தோம். 

அது அவனைப் பார்த்துமே அன்னிக்கு என்ன நடந்துச்சுன்னு அம்புட்டுத் துல்லியமா சொல்லுச்சு.”அன்னிக்கு வாயெல்லாம் ரத்தமா நாக்கை வெளில நீட்டிக்கிட்டு பத்ரகாளி மாதிரி நீ நின்னே. அப்போ செங்கோவி ’பேச்சு வருதான்னு பார்ப்போம். ஏதாவது பேசுலே’ன்னு சொன்னான். நீயும் ‘அம்மா அப்பா’ன்னு சொன்னே. ’இப்படிச் சொன்னா எப்பிடிலே தெரியும்..ஆட்டுப் புழுக்கை அரைக்கிலோ’ன்னு சொல்லுலேன்னு செங்கோவி சொன்னான். நீயும் ‘ஆத்துப் புதுக்கை அதைக்கிதோ’ன்னே..அய்யய்யோ, மொட்டை நாக்கனா ஆயிட்டமேன்னு நினைச்சு அழுதே. ஆனா கொஞ்சநாள்லே சரி ஆயிடுச்சு’ன்னு சொல்லுச்சு. எங்களுக்கு இவ்வளவு தெளிவால்லாம் ஞாபகமே இல்லை.

பொம்பளைப் பிள்ளைங்க ஸ்கூல் ஃபர்ஸ்ட் வரும்போதெல்லாம் ‘அவங்க வெளில ரொம்பச் சுத்த மாட்டாங்க. அதான் இப்படி மார்க் எடுக்காங்க’ன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனா இப்போ தான் தெரியுது. அவங்களுக்கு ஆண்டவன் ரொம்ப பவர்ஃபுல் மெமரியைக் கொடுத்திருக்கான் போல.(குமரி பெற்ற மெமரி-ன்னு தலைப்பை மாத்திடலாமா..)

’பெண் என்பவள் சக்தியின் சொரூபம்..பெண்ணே சக்தி’-ன்னு என்னென்னமோ கவிஞர்கள்லாம் சொல்வாங்களே..ஒருவேளை அவங்க சொன்ன சக்தி ‘ஞாபக சக்தி’ தானோ என்னமோ?

ஆனா அதை ஆக்கப்பூர்வமாப் பயன்படுத்தாம, இப்படி அப்பாவிக் கணவரை ஆட்டி வைக்கப் பயன்படுத்துறது எந்த விதத்துல சரின்னு தங்கமணிகள்லாம்..(ச்சே ச்சே..எனக்கு இருக்கிறது ஒரு தங்கமணி தாங்க..பொதுவாச் சொல்றேன்..) தங்கமணிகள்லாம் தயவு செஞ்சு யோசிக்கணும். நன்றி. 

டிஸ்கி: ‘அய்யய்யோ..பெண்களை கேவலப்படுத்திட்டான்’ன்னு யாரும் பின்னூட்டத்துல பத்த வச்சு ’பதிவர் சந்திப்பு’ ஏற்பாடு பண்ணிடாதீங்கய்யா..அந்த ‘ஆயி மகமாயி..அங்காள பரமேஸ்வரி’ மேல சத்தியமாச் சொல்றேன். அந்தளவுக்கெல்லாம் நான் ஒர்த் இல்லைய்யா!

மேலும் வாசிக்க... "பொம்பளைகளுக்கு ஏன்யா இம்புட்டு ஞாபக சக்தி?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

70 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.