Tuesday, June 28, 2011

பிரபுதேவா - நம்மை ஏமாற்றிய பிரபலம்

டிஸ்கோ நடனம் என்றால் என்ன?

சுற்றிலும் கலர் கலராய் லைட்டுகள் மின்னும். அதைவிடக் கலராய் வழுக்கும் தரை. அங்கும் லைட்கள் மின்னும். அரை டவுசருடன் கலர் கலராய் பெண்கள் ஜிகினா ட்ரெஸ்ஸில் வரிசை கட்டி நிற்பார்கள். அவர்களுக்கு நடுவே ஜிகுஜிகு ட்ரஸ்ஸில் ஒரு ஆண். பாடல் ஆரம்பித்ததும் காலை விரித்து விரித்து மூடுவார்கள். பிறகு லெஃப்ட்டில் முகத்தைத் திருப்பி வா என்பது போல் ஒரு தலையசைப்பு. பிறகு ரைட்டிலும் அதே. பிறகு கராத்தே மாஸ்டர் போல் காலைத் தூக்கி முன்னால் ஒரு உதை. ’யா..ஊ’ என்ற சத்தம் மிகமிக முக்கியம். ஜிகினா அலங்காரம் இல்லாமல் இதை ரோட்டில் செய்யவே முடியாது. - இதுவே தமிழ்சினிமாவில் 1990வரை இருந்த நிலை.
பிரபுதேவா என்ற ஒரு அற்புதமான கலைஞனின் வருகை எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. அன்று அவர் ஆரம்பித்து வைத்த நடன ஸ்டைலே இன்றுவரை தொடர்கிறது. மரத்தைச் சுற்றியே ஒப்பேற்றும் தொப்பை பெருத்த நடிகர்கள்கூட உடம்பை வருத்தி ஆடியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை பிரபுதேவாவின் வருகை சினிமாத் துறையில் உண்டாக்கியது.

’லாலாக்கு டோல் டப்பிம்மா’ என்று சூரியனில் ஆடியபிறகே பிரபுதேவாவின் வேகமான நடனம் கவனிக்கப்பட்டது. அதற்கு முன்பே இதயத்தில் தனியாக ஆடியிருந்தாலும், சூரியன் படம் நல்ல பெயரைப் பெற்றித் தந்தது. தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான ஜெண்டில்மேனில் வந்த சிக்குபுக்கு பாடல் இந்திய மைக்கேல் ஜாக்சனாக அவரை அடையாளம் காட்டியது. பாடல்களுக்காகவே அந்தப் படம் பலமுறை பார்க்கப்பட்டது. சிக்குபுக்கு பாடல் முடிந்ததும் இளைஞர்கூட்டம் திரையரங்கை விட்டு வெளியேறுவது நான் பார்த்த நான்குமுறையும் நடந்தது.

அடுத்து ஹீரோவாக ‘இந்து’வில் களமிறங்கினார் பிரபுதேவா. முகம் சுளிக்கவைக்கும் படமாக அது அமைந்தபோதிலும் அடுத்து வந்த ‘காதலன்’ டாப் ஹீரோக்களில் ஒருவராக அவரை உயர்த்தியது. முக்காலா முக்காபுலா இந்தியாவையே கலக்கியது. அது ஜாக்சனின் ஸ்மூத் க்ரிமினலை ஞாபகப்படுத்தினாலும் பிரபுதேவாவின் தனிமுத்திரை அந்தப் பாடலில் இருந்தது. 
மேற்கத்திய நடனத்தில் பரதத்தைப் புகுத்துவதும், சட் சட்டென்று மேற்கத்திய நடனத்தில் இருந்து பரதம் போன்ற இந்திய நடனங்களுக்கு மாறுவதும், மீண்டும் தாளம் தப்பாமல் மேற்கத்திய நடனத்தைத் தொடருவதும் பிரபுதேவாவின் சிறப்பு. பாடலின் இடையே சிறு கான்செப்ட் வைப்பதிலும் வல்லவர் பிரபுதேவா. 

நடனத்தில் சிறந்தவராய் இருந்தும் அடுத்து வந்த ராசையா படம் சரியாகப் போகவில்லை. ’அடுத்த சூப்பர் ஸ்டார்?’ என்று குமுதம் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்ட நேரம் அது. லவ் பேர்ட்ஸ் படத்தில் நடிக்க ஒரு கோடி சம்பளம் வாங்கியதாகத் தகவல் வந்தது. சிறு பட்ஜெட் படங்களையே எடுத்து வந்த ஆர்.பி.சௌத்ரியே இவரை வைத்து பிரம்மாண்டமாக மிஸ்டர்.ரோமியோ எடுத்தார். அந்த அளவிற்கு அவர்மேல் நம்பிக்கை இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த இரு பிரம்மாண்டப் படங்களும் தோல்வியைத் தழுவின.

ஏ.வி.எம்மே பொன்விழாப் படத்தை இவரை வைத்து எடுத்தது. அதுவும் ஊத்திக்கொண்டது. ஆனாலும் அவர்து நடனம் படத்துக்குப் படம் மெருகேறிக்கொண்டே போனது. மின்சாரக் கனவின் வெண்ணிலவே பாடலின் நடன அமைப்பு பரவலாகப் பாராட்டுப் பெற்றது. தேசிய விருதையும் வாங்கித் தந்தது.

அதன்பிறகு ஆவரேஜ் ஹிட் நடிகர் லிஸ்ட்டில் சேர்ந்தவ்ர், தொடர்ந்து ஜேம்ஸ் பாண்டு, டபுள்ஸ் என வீழ்ந்து ஒரு நடிகராக தோல்வி அடைந்தார். அவரது நடனத் திறமையை ஒப்பிடும்போது, ஒரு நடிகராக பெரிய இடத்தைப் பிடிப்பார் என்றே எல்லோரும் நம்பினர். ஆனாலும் ஒரு ஹீரோவாக நடிப்பதில் அவர் எடுபடவில்லை. 
ஹி..ஹி
கடும் எதிர்ப்புக்கு நடுவே ரமலத்தைக் கைபிடித்த போது அவர் மேல் மரியாதையே வந்தது. லவ் பேர்ட்ஸ் படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம் அது. புகழின் உச்சத்தில் இருந்தபோது, தான் காதலித்த பெண்ணையே மணந்தார். ஆனால் அவரது தற்போதைய நடவடிக்கைகள், அவருக்கு இருந்த அந்தவொரு நல்ல பெயரையும் இல்லாமல் ஆக்கிவிட்டது.

ஒரு இயக்குநராக சம்திங்..சம்திங்(தெலுங்கு), போக்கிரி போன்ற படங்களில் பரிணமித்தவர், தற்போது கவனம் வேறு பக்கம் திரும்பியதாலோ என்னவோ இப்போது வில்லு, எங்கேயும் காதல் என சொதப்புகின்றார். 

மைக்கேல் ஜாக்சன் போன்றே நடனத்தில் மட்டுமல்லாது சர்ச்சையிலும் பிரபுதேவா திகழ்வது ஆச்சரியம் தான்.

நடிகைகளுடன் கிசுகிசு, தயாரிப்பளர்களைப் போண்டி ஆக்கியவர், மனைவி/குழந்தைகளை கைவிட்டவர் என்று பல குற்றச்சாடுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் தனிப்பட்டக் காரணங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால், அவரது நடனத் திறமை மேல் குறை சொல்ல யாராலும் முடியாது என்பதே உண்மை.
நீதானா அவ?
நல்ல நடன இயக்குநராக, பொழுதுபோக்குப் படங்களைத் தருவதில் வல்லவராக விளங்கும் திறமை பிரபுதேவாவிற்கு உண்டு. மனதை ஒருமுகப்படுத்தி வேலையில் கவனம் செலுத்தினார் என்றால், இழந்த பெயரை அவரால் மீட்க முடியும். எங்கேயும் காதலின் ‘நங்கை’ பாடலின் நடன அமைப்பே அவர் இன்னும் நடனத்தில் கிங் என்பதற்கு உதாரணம்.

ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் தமிழ்சினிமாவின் நடனத்தை பிரபுதேவாவிற்கு முன், பிரபுதேவாவிற்குப் பின் என்று தான் வரலாறு பிரித்து எழுதும்.


பிரபுதேவாவின் Youtube வீடியோக்களுக்கு:


1. மாஸ்டர் பீஸ் - புகார்(இந்தி)
2. முக்காலா முக்காபுலா
3. சுக்கலோ சந்த்ருடு(தெலுகு)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

41 comments:

  1. திருநெல்வேலி அல்வாடா.... மதுரை மணக்கும் மல்லிடா....

    ReplyDelete
  2. ஹா...ஹா... கருண் இன்னைக்கு வடை வாங்கிட்டேன்.

    ReplyDelete
  3. டிஸ்கோ நடனம் என்றால் என்ன?>>>>

    பரீட்சை கேள்வி மாதிரி கேட்டா எப்படி பதில் சொல்றது?

    ReplyDelete
  4. @தமிழ்வாசி - Prakash //ஹா...ஹா... கருண் இன்னைக்கு வடை வாங்கிட்டேன்.// என்னய்யா இது..’எனக்குக் கல்யாணம்..எனக்குக் கல்யாணம்’ மாதிரி ‘எனக்கு வடை’ன்னு சொல்லிக்கிட்டே ஓடுவாரு போலிருக்கே.

    ReplyDelete
  5. //பரீட்சை கேள்வி மாதிரி கேட்டா எப்படி பதில் சொல்றது?// பதில் கீழ இருக்குய்யா.

    ReplyDelete
  6. அடுத்து ஹீரோவாக ‘இந்து’வில் களமிறங்கினார் பிரபுதேவா. முகம் சுளிக்கவைக்கும் படமாக அது அமைந்தபோதிலும்>>>>

    யோவ்.... உமக்கு முகம் சுளிச்சிருகாதே.... நீ தான் லீலைகளின் மன்னனாச்சே....

    ReplyDelete
  7. எங்கயா.... தமிழ்மணத்தை காணோம்.... நைட் ஆனா படுத்துக்குது..தமிழ்மணத்துக்குக் கல்யாணம் ஆயிடுச்சோ?

    ReplyDelete
  8. @தமிழ்வாசி - Prakash //யோவ்.... உமக்கு முகம் சுளிச்சிருகாதே.... நீ தான் லீலைகளின் மன்னனாச்சே....// இப்போ இங்க இந்த டீடெய்ல் தேவையா ராசா?

    ReplyDelete
  9. @தமிழ்வாசி - Prakash//நைட் ஆனா படுத்துக்குது..தமிழ்மணத்துக்குக் கல்யாணம் ஆயிடுச்சோ?// இதுவரைக்கும் பதிவுக்குத் தான் மைனஸ் ஓட்டு வாங்கி இருக்கேன்..உங்களால முத முறையா கமெண்ட்டுக்கு மைனஸ் ஓட்டு கன்ஃபார்ம்.

    ReplyDelete
  10. நடிகைகளுடன் கிசுகிசு, தயாரிப்பளர்களைப் போண்டி ஆக்கியவர், மனைவி/குழந்தைகளை கைவிட்டவர் என்று பல குற்றச்சாடுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்>>>>
    அண்ணன் பிரபுதேவாவே கவலைப்படல... நம்ம செங்கோவி ஏன்தான் கவலைபடுறாரு? ஓஓஓ...
    எங்கேயும் காதல் படத்துல ஹன்சிகா நடிச்சதால இருக்குமோ? டவுட்?

    ReplyDelete
  11. @தமிழ்வாசி - Prakash //எங்கேயும் காதல் படத்துல ஹன்சிகா நடிச்சதால இருக்குமோ?// ஹா..ஹா.

    ReplyDelete
  12. ’லாலாக்கு டோல் டப்பிம்மா’ என்று சூரியனில் ஆடியபிறகே //

    மச்சி, உனக்குப் பிரவுதேவா மீது ஓர் ரசனை இருந்தாலும்,
    இந்தப் பாடல் மீது உனக்கு ஓர் தனித்துவமான ரசனை இருக்கு என்பதற்குச் சான்றாக அடிக்கடி,
    எல்லாப் பதிவுகளிலும் இந்தப் பாடலைச் சேர்த்து வருகிறீங்க;-))

    ReplyDelete
  13. நடனத்தில் பிரபு தேவாவை யாராலும் முந்த முடியாது என்பது மட்டும் உண்மை.

    பிரபு தேவா பற்றிய கலைத் துறைப் பார்வையினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
    அருமை பாஸ்.

    ReplyDelete
  14. பிரபு தேவா....கரெக்டு.

    ReplyDelete
  15. நான் சாதா கமெண்ட் போட்டாலே அண்ணன் ஃபோன் பண்ணி சாரி இதை பிரசுரிக்க முடியாதும்பார். தமிழ்வாசி பிரகாஷ் க்கு மட்டும் செம சலுகை.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  16. @நிரூபன் //இந்தப் பாடல் மீது உனக்கு ஓர் தனித்துவமான ரசனை இருக்கு // இருக்காதா பின்னே...எவ்வளவு ஆழ்ந்த கருத்துள்ள பாட்டு!

    ReplyDelete
  17. @சி.பி.செந்தில்குமார் //நான் சாதா கமெண்ட் போட்டாலே அண்ணன் ஃபோன் பண்ணி சாரி இதை பிரசுரிக்க முடியாதும்பார். தமிழ்வாசி பிரகாஷ் க்கு மட்டும் செம சலுகை.. // அவர் தமிழ்மணத்தைச் சொன்னாரு விட்டேன்..ஆனா நீங்க டைரக்ட் அட்டாக்குல்ல பண்ணுனீங்க..நீங்க சொல்லீட்டுப் போயிடுவீங்க..அப்புறம் வீட்ல யாரு மாத்து வாங்குறது?

    ReplyDelete
  18. உண்மைதான் ஒரு நடன கலைஞரா அவர யாரும் குறை சொல்ல முடியாது, ரோமியோ ஆட்டம் போட்டால் பாட்டெல்லாம் மறக்க முடியுமா? என்ன இந்த பொண்ணுக விசயத்துலதான் அண்ணன் தம்பி ரெண்டு பேருமே வீக்கு

    ReplyDelete
  19. பிரபு தெலுங்குல பௌர்ணமி ன்னு ஒரு படம் இயக்கினார்.. அருமையான படம்..

    ReplyDelete
  20. ஹீரோக்கள் நடனம் என்பதை பிரபு தேவாவுக்கு முன்னே கமல் செய்து விட்டார். அதற்குப் பின் ஆனந்த் பாபு வந்தார். வெற்றி பெறவில்லை. அதற்குப் பின் தான் பிரபு தேவா

    ReplyDelete
  21. பிரபு தேவா பற்றி பகிர்ந்திருக்கிங்க.
    அருமை.

    ReplyDelete
  22. @virutcham பிரபுதேவாவுக்கு முந்தைய ஹீரோக்கள் என்ன செய்தார்கள் என்பதையும் பதிவில் சொல்லி இருக்கின்றேனே..தமிழ்சினிமாவின் நடன ஸ்டைலை மாற்றியதும், பிற ஹீரோக்கள் ஆடியே ஆகவேண்டிய சூழ்நிலையை உண்டாக்கியதுமே அவரை பிறரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அவர் டான்ஸ் ஆடும்போது கராத்தே ஸ்டெப் போடாததும் முக்கிய வேறுபாடு!!!

    ReplyDelete
  23. @சங்கவி //பிரபு தேவா????? // ஆமாம்யா..ஏன் நயந்தாராவை எதிர்பார்த்து வந்தீங்களா?

    ReplyDelete
  24. @இரவு வானம் //ரோமியோ ஆட்டம் போட்டால் பாட்டெல்லாம் மறக்க முடியுமா?// ஆமாம் நைட்டு..ஃபாஸ்ட் பீட்டுக்கு மட்டுமில்லாமல் நதியே நைல்நதியே, மஞ்சக்காட்டு மைனா-வுக்கு அவர் அமைத்த நடனமும் சிம்ளி சூப்பர்.

    ReplyDelete
  25. @!* வேடந்தாங்கல் - கருன் *! //பிரபு தெலுங்குல பௌர்ணமி ன்னு ஒரு படம் இயக்கினார்.. அருமையான படம்..// தகவலுக்கு நன்றி கருண்..நான் பார்த்ததில்லை..த்ரிஷா நடித்தது தானே..

    ReplyDelete
  26. @சே.குமார்
    //பிரபு தேவா பற்றி பகிர்ந்திருக்கிங்க. அருமை. // நன்றி குமார்.

    ReplyDelete
  27. நல்ல பதிவு சார்

    ReplyDelete
  28. Good post. . He is always dance king

    ReplyDelete
  29. Personally he is waste . . But in a dancer he is brilliant

    ReplyDelete
  30. அண்னன் கடைல செம கூட்டம் போல.. சும்மா வந்தேன்.. எப்டி போகுதுன்னு பார்க்க.. ஹி ஹி

    ReplyDelete
  31. @Riyas //நல்ல பதிவு சார்// நன்றி..நன்றி..நன்றி!

    ReplyDelete
  32. @"என் ராஜபாட்டை"- ராஜா ஒரு வாக்குன்னாலும் திருவாக்கு!

    ReplyDelete
  33. @சி.பி.செந்தில்குமார் //அண்னன் கடைல செம கூட்டம் போல.. சும்மா வந்தேன்.. எப்டி போகுதுன்னு பார்க்க.. // ஹா..ஹா..ஏதோ எரியிற ஸ்மெல் வருதே?

    ReplyDelete
  34. மின்சாரக் கனவு சரியாக போகலையா? அந்த நேரத்துல சினிமா தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வேறு எந்த படமும் வராததால் கிட்டத்தட்ட
    ஆறு மாதம் ஓடிய படம் அது. சன் டி.வி மூலமா ட்ரெய்ன் விட்டு நல்லா விளம்பரப்படுத்தினாங்க.

    ReplyDelete
  35. @Jagannath ஓடுன படத்துக்கும் ஓட்டப்பட்ட படத்துக்கும் வித்தியாசம் உண்டல்லவா..அந்தவகையில் பார்த்தால் விஜய்யின் அனைத்துப் படங்களுமே ஹிட் தான்.

    ReplyDelete
  36. படத்துக்கும் வெளியே பிரபுதேவாவின் பம்பாய் நிகழ்ச்சியொன்றில் பார்த்த போது மிகவும் கூச்சத்துடன் பேசுவதற்கும் கூட கோணிய படியே இருந்தார்.

    இப்ப நினைச்சா இந்தப் பூனையும் பால் குடிக்குமா பழமொழி பிரபுதேவாவுக்கு ரொம்பவே பொருந்தும்!

    மொஙுகு மொங்குன்னு பதிவு போட்டுட்டு நயனைப் பத்தி ஒண்ணுமே சொல்லவேயில்ல:)

    ReplyDelete
  37. @ராஜ நடராஜன் நயந்தாராவும் உங்களை ஏமாத்திடுச்சா சார்..

    ReplyDelete
  38. என்ன தான் பிரபுதேவாவை பற்றி பெருமையா சொன்னாலும், சொந்த வாழ்க்கையில் அவர் ஒரு வில்லன் தான்.

    ReplyDelete
  39. @N.H.பிரசாத் அவர் சொந்த வாழ்க்கையை நானும் பாராட்டலியே சார்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.