"பாலாக்குட்டிக்கு இந்த ட்ரெஸ் சூப்பரா இருக்கே. யாரு எடுத்தது இந்த ட்ரெஸை?” என்றேன்.
தங்கமணி முறைத்தார்.
சூப்பரா இருக்குன்னு தானே சொன்னோம், ஆனாலும் சுனாமிக்கான அறிகுறி தெரியுதே ஏன்ன்னு குழம்பிப்போய், “என்ன?” ன்னு கேட்டென். கிணத்துக்குள்ள இருந்து வர்ற சத்தம் மாதிரி ’என்ன’ வந்துச்சு.
“அது 3 மாசம் முன்ன உங்க பிள்ளைக்கு முதல் முதலா நீங்க எடுத்துக் கொடுத்த ட்ரெஸ்.”ன்னு சொல்லுச்சு. நமக்கு 3 நாள் முன்னே என்ன சாப்பிட்டோம்னே ஞாபகம் இருக்காதே..வழக்கம்பொல ஙேன்னு முழிச்சேன்.
இது ஒன்னும் நமக்குப் புதுசில்லை. அப்படித்தான் நாங்க டெல்லில இருக்கும்போது திடீர்னு “போன ஜுலை மாசம் என்ன சொன்னிங்க?’ன்னு கேட்டுச்சு.
ஒரு மாசத்துல ஒரு மனுசன் என்னென்னமோ சொல்லி இருப்பான், இதெல்லாம் என்ன கேள்வின்னு யோசிசுக்கிட்டே”என்ன சொன்னேன்?”ன்னு கேட்டேன்.
பதிலுக்கு “உங்க பேச்சை தண்ணில தான் எழுதி வைக்கணும்’னு சொல்லுச்சு.
நமக்குக் கோவம் வந்துடுச்சு.இருந்தாலும் இது ஆஃபீஸ் இல்லை, வீடுங்கிறதுனால பொறுத்துக்கிட்டே ‘அப்படி என்ன தான் சொன்னேன்’ன்னு கேட்டேன்.
“தாஜ்மஹாலுக்குக் கூட்டிட்டுப் போறேன்’ன்னு சொன்னீங்கள்ல”ன்னாங்க.
நான் “அப்படியா?’ன்னு கேட்டேன். கடுப்பாகிட்டாங்க. நான் எப்ப அப்பிடிச் சொன்னேன்னு எனக்கே ஞாபகம் இல்லை. ஆனா அவங்க சொன்னாங்க பாருங்க பதிலு..
“அன்னிக்கு வெள்ளிக்கிழமை, காலைல..நீங்க ஆஃபீஸ் கிளம்பிக்கிட்டு இருந்தீங்க. இட்லி அவிச்சுக்கொடுத்தேன். சாப்பிட்டுட்டு கிளம்பினீங்க. வொயிட் கலர், ப்ளூ கோடு ப்போட்ட சட்டை போட்டிருந்தீங்க. ஆஃபீஸ்ல சுட்ட பேனா நாலு நம்ம வீட்ல வச்சிருப்பீங்கள்ல..அதுல ஒன்னை எடுத்து அந்தச் சட்டைல சொருகி இருந்தீங்க. ஜீன்ஸ் பேண்ட் வேற. சேர்ல கிடந்த சிவப்புக்கலர் துண்டை எடுத்துக் கையைத் துடைச்சுக்கிட்டே..”
”ஆமா நான் சொன்னேன்..சொன்னேன்..போதும் தாயி உன் டீடெய்லு”ன்னு சரணடைஞ்ச அப்புறம் தான் விட்டாங்க.
கல்யாணம் ஆன புதுசுல ஒரு மனுசன் என்னத்தியாவது சொல்லத் தான் செய்வான். ‘தாஜ்மஹாலை வாங்கித் தாறேன்’ன்னு கூடத்தான் சொல்வான். அதுக்காக, அதை இவ்வளவு டீடெய்லாவா ஞாபகம் வச்சுக்கிறது?
அது மட்டுமில்லாம அவங்க வீட்டு ஆட்களைப் பத்தி ஏதாவது கமெண்ட் அடிச்சோம்னாத் தொலைஞ்சோம். ஜென்மத்துக்கும் மறக்காம ஞாபகம் வச்சிருக்காங்க. (ஹனிமூனில் வாங்கிய தர்மபத்தினி அடி படிச்சாச்சா?).
நான் நம்ம வீடு தான் இப்படியோன்னு பார்த்தா, என்கூட வேலை செய்யுற நண்பரும் நேத்து தர்மபத்தினி அடி வாங்கிட்டு ஆஃபீஸ் வந்தாரு. ‘எப்படிங்க இவங்க நாம எப்பவோ சொன்னதை எல்லாம் இவ்வளவு துல்லியமா ஞாபகம் வச்சிருக்காங்க’ன்னு புலம்பித் தள்ளிட்டாரு. அவர் பெருசா ஒன்னும் சொல்லிடலை.
கல்யாணம் ஆன புதுசுல ‘நான் அழகா இருக்கனா?’ன்னு கேட்டிருக்கு. ’ஆமா, உன் அக்காவை விட நீ சூப்பரா இருக்க’ன்னு நல்லாத் தான் சொல்லி இருக்காரு. அன்னைக்கு விட்டிடுச்சு. இப்போ ‘ அவளை எதுக்கு அவ்வளவு டீப்பா பாத்தீங்க?’ன்னு குத்து விழுது.
என் ஃப்ரெண்டு ஒருத்தன் சின்ன வயசுல நாலோ அஞ்சோ படிக்கும்போது குப்புற விழுந்து நாக்குல பல்லு வெட்டிடுச்சு. இப்பவும் அந்த வெட்டு, நாக்குல தெரியும். விழுந்தது மட்டும் தான் எங்களுக்க்கு ஞாபகம் இருக்கு. அப்போ எங்ககூடப் படிச்ச புள்ளை (ஃபிகருன்னு சொல்லலாமா? வேணாம்..அப்புறம் வலிக்கும், எனக்கு) கொஞ்ச மாசம் முன்ன நாங்க பார்த்தோம்.
அது அவனைப் பார்த்துமே அன்னிக்கு என்ன நடந்துச்சுன்னு அம்புட்டுத் துல்லியமா சொல்லுச்சு.”அன்னிக்கு வாயெல்லாம் ரத்தமா நாக்கை வெளில நீட்டிக்கிட்டு பத்ரகாளி மாதிரி நீ நின்னே. அப்போ செங்கோவி ’பேச்சு வருதான்னு பார்ப்போம். ஏதாவது பேசுலே’ன்னு சொன்னான். நீயும் ‘அம்மா அப்பா’ன்னு சொன்னே. ’இப்படிச் சொன்னா எப்பிடிலே தெரியும்..ஆட்டுப் புழுக்கை அரைக்கிலோ’ன்னு சொல்லுலேன்னு செங்கோவி சொன்னான். நீயும் ‘ஆத்துப் புதுக்கை அதைக்கிதோ’ன்னே..அய்யய்யோ, மொட்டை நாக்கனா ஆயிட்டமேன்னு நினைச்சு அழுதே. ஆனா கொஞ்சநாள்லே சரி ஆயிடுச்சு’ன்னு சொல்லுச்சு. எங்களுக்கு இவ்வளவு தெளிவால்லாம் ஞாபகமே இல்லை.
பொம்பளைப் பிள்ளைங்க ஸ்கூல் ஃபர்ஸ்ட் வரும்போதெல்லாம் ‘அவங்க வெளில ரொம்பச் சுத்த மாட்டாங்க. அதான் இப்படி மார்க் எடுக்காங்க’ன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனா இப்போ தான் தெரியுது. அவங்களுக்கு ஆண்டவன் ரொம்ப பவர்ஃபுல் மெமரியைக் கொடுத்திருக்கான் போல.(குமரி பெற்ற மெமரி-ன்னு தலைப்பை மாத்திடலாமா..)
’பெண் என்பவள் சக்தியின் சொரூபம்..பெண்ணே சக்தி’-ன்னு என்னென்னமோ கவிஞர்கள்லாம் சொல்வாங்களே..ஒருவேளை அவங்க சொன்ன சக்தி ‘ஞாபக சக்தி’ தானோ என்னமோ?
ஆனா அதை ஆக்கப்பூர்வமாப் பயன்படுத்தாம, இப்படி அப்பாவிக் கணவரை ஆட்டி வைக்கப் பயன்படுத்துறது எந்த விதத்துல சரின்னு தங்கமணிகள்லாம்..(ச்சே ச்சே..எனக்கு இருக்கிறது ஒரு தங்கமணி தாங்க..பொதுவாச் சொல்றேன்..) தங்கமணிகள்லாம் தயவு செஞ்சு யோசிக்கணும். நன்றி.
டிஸ்கி: ‘அய்யய்யோ..பெண்களை கேவலப்படுத்திட்டான்’ன்னு யாரும் பின்னூட்டத்துல பத்த வச்சு ’பதிவர் சந்திப்பு’ ஏற்பாடு பண்ணிடாதீங்கய்யா..அந்த ‘ஆயி மகமாயி..அங்காள பரமேஸ்வரி’ மேல சத்தியமாச் சொல்றேன். அந்தளவுக்கெல்லாம் நான் ஒர்த் இல்லைய்யா!
வடை உம் மகனுக்கு....
ReplyDeleteஅடுத்தது எனக்கு...
ReplyDeleteஆரம்பிச்சுட்டாருய்யா..
ReplyDeleteஅந்தளவுக்கெல்லாம் நான் ஒர்த் இல்லைய்யா!>>>>>
ReplyDeleteஅட அவனா நீ.... சொல்லவே இல்லையே....
உங்களைக் கும்மாம விட்டது தப்புய்யா.
ReplyDeleteஇப்போ ‘ அவளை எதுக்கு அவ்வளவு டீப்பா பாத்தீங்க?’ன்னு குத்து விழுது.>>>>
ReplyDeleteவிழும்யா....விழும்... உம்ம யாரு அக்காவை பார்த்து கம்பேர் பண்ண சொன்னது?
இனிய இரவு வணக்கங்கள்,
ReplyDeleteஅரபுக் கன்னிகளின் இளவலே!
நமக்கு 3 நாள் முன்னே என்ன சாப்பிட்டோம்னே ஞாபகம் இருக்காதே..வழக்கம்பொல ஙேன்னு முழிச்சேன்.//
ReplyDeleteநீங்க தான்யா ஆம்பிள,
உண்மையைப் பப்ளிக்கில சொல்லுறீங்க.
//அரபுக் கன்னிகளின் இளவலே!// வேணாம்யா இந்த விபரீத விளையாட்டு..கட்..கட்!
ReplyDelete’ஆமா, உன் அக்காவை விட நீ சூப்பரா இருக்க’ன்னு நல்லாத் தான் சொல்லி இருக்காரு. அன்னைக்கு விட்டிடுச்சு. இப்போ ‘ அவளை எதுக்கு அவ்வளவு டீப்பா பாத்தீங்க?’ன்னு குத்து விழுது.//
ReplyDeleteஇது தான் மொத்தமா சேர்த்து வைச்சு,
நொங்கு, நொங்குன்னு நொங்குற விளையாட்டா;-))
செங்கோவி said...
ReplyDelete//அரபுக் கன்னிகளின் இளவலே!// வேணாம்யா இந்த விபரீத விளையாட்டு..கட்..கட்!//
ஏன் ஆத்துக்காரி படிப்பாங்க என்று உள்ளூரப் பயமோ;-))
//நீங்க தான்யா ஆம்பிள,
ReplyDeleteஉண்மையைப் பப்ளிக்கில சொல்லுறீங்க.// அப்போ பொம்பளைங்க உண்மையை பப்ளிக்ல சொல்லமாட்டாங்களா? ஆணாதிக்கம் ஒழிக.(அப்பாடி, நிரூவை கோர்த்து விட்டாச்சு)
பெண்களின் மனசை நன்றாகத் தான் புரிந்து வைத்திருக்கிறீங்க பாஸ்..
ReplyDelete@நிரூபன் //இது தான் மொத்தமா சேர்த்து வைச்சு,
ReplyDeleteநொங்கு, நொங்குன்னு நொங்குற விளையாட்டா;-))// அவங்க டெய்லில்லாம் அடிக்க மாட்டாங்களாம், டிவில சீரியல் இல்லைன்னாத் தான் டைம் பாஸ்க்கு அதைச் சொல்லி அடிப்பாங்களாம்!
/// கல்யாணம் ஆன புதுசுல ‘நான் அழகா இருக்கனா?’ன்னு கேட்டிருக்கு. ’ஆமா, உன் அக்காவை விட நீ சூப்பரா இருக்க’ன்னு நல்லாத் தான் சொல்லி இருக்காரு. அன்னைக்கு விட்டிடுச்சு///ஹாஹஹா கொடும சரவணா ...
ReplyDelete@நிரூபன் //வேணாம்யா இந்த விபரீத விளையாட்டு..கட்..கட்!//
ReplyDeleteஏன் ஆத்துக்காரி படிப்பாங்க என்று உள்ளூரப் பயமோ;-))// நான் சொன்னது வேற கட்!...அரபிக் கட்!
@கந்தசாமி. //’ஆமா, உன் அக்காவை விட நீ சூப்பரா இருக்க’ன்னு நல்லாத் தான் சொல்லி இருக்காரு. அன்னைக்கு விட்டிடுச்சு///ஹாஹஹா கொடும சரவணா ...// புகழ்ந்து தானே சொன்னேன்னு பரிதாபமாக் கேட்காரு, கந்து!
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDelete//நீங்க தான்யா ஆம்பிள,
உண்மையைப் பப்ளிக்கில சொல்லுறீங்க.// அப்போ பொம்பளைங்க உண்மையை பப்ளிக்ல சொல்லமாட்டாங்களா? ஆணாதிக்கம் ஒழிக.(அப்பாடி, நிரூவை கோர்த்து விட்டாச்சு)//
அடோய், என்ன கெட்ட பழக்கம் இது?
சிவனே என்று இருக்கிற என்னையப் போய், இது உமக்கே நல்லா இருக்கா.
@நிரூபன் எங்களுக்கும் டைம் பாஸ் ஆக வேண்டாமா நிரூ?
ReplyDelete//சிவனே என்று இருக்கிற என்னையப் போய்..//
சக்தியேன்னு இருக்காம சிவனேன்னு இருந்ததும் ஆணாதிக்க வெளிப்பாடு தானே?
“தாஜ்மஹாலுக்குக் கூட்டிட்டுப் போறேன்’ன்னு சொன்னீங்கள்ல”ன்னாங்க.///
ReplyDeleteபாருங்க! இப்படியா கொடுத்த வாக்குறுதிய காப்பாத்தாம இருப்பீங்க! ஹ ஹா ஹா!!
கல்யாணம் ஆன புதுசுல ஒரு மனுசன் என்னத்தியாவது சொல்லத் தான் செய்வான். ‘தாஜ்மஹாலை வாங்கித் தாறேன்’ன்னு கூடத்தான் சொல்வான். அதுக்காக, அதை இவ்வளவு டீடெய்லாவா ஞாபகம் வச்சுக்கிறது? /////
ReplyDeleteவாஸ்தவம்தான்! அப்படியான டைம்ல எத்தனையோ பொய்களை அள்ளிவிடுவோம்! அப்புறம் அவற்றையெல்லாம் நினைச்சுப் பார்த்தா நமக்கே சிரிப்பா இருக்கும் !
அண்ணே நீங்க வேடிக்கையா சொல்லி இருந்தாலும், இது ஒரு உண்மையான பிரச்ச்னை! ந்ம்மளைவிட பெண்பிள்ளைகளுக்குத்தான் ஞாபக சக்தி அதிகமாக இருக்கிறது! காரணம் அதுகள்தான் ஒவ்வொரு செயலிலும், அக்கறையுடனும் , ஆஅர்வத்துடனும் ஈடுபடுகிறார்கள்!
ReplyDeleteநாமோ, ஏனோ தானோ போக்குத்தானே!
செய்யிறதையும் செஞ்சிட்டு டிஸ்கி போட்டு சமாளிக்கிறீங்களா ? விட மாட்டோம்..ல..
ReplyDeleteநான் சொல்லல .. பதிவர்கள் பலர் பேசிக் கொண்டார்கள்..
:)
******************************'
குற்றம் செய்த பிள்ளைகளை போலிசில் கொடுத்த பெற்றோர்கள்
ஹிஹி ரசனையான ஆக்கம்....காமெடி இழையோடுகிறது
ReplyDeleteஹிஹி ரசனையான ஆக்கம்....காமெடி இழையோடுகிறது
ReplyDelete//நான் நம்ம வீடு தான் இப்படியோன்னு பார்த்தா, என்கூட வேலை செய்யுற நண்பரும் நேத்து தர்மபத்தினி அடி வாங்கிட்டு ஆஃபீஸ் வந்தாரு. ///
ReplyDeleteஉங்கள சுத்தி எல்லாமே இப்பிடித்தானோ??
//நான் நம்ம வீடு தான் இப்படியோன்னு பார்த்தா, என்கூட வேலை செய்யுற நண்பரும் நேத்து தர்மபத்தினி அடி வாங்கிட்டு ஆஃபீஸ் வந்தாரு. ///
ReplyDeleteஉங்கள சுத்தி எல்லாமே இப்பிடித்தானோ??
"நமக்குக் கோவம் வந்துடுச்சு.இருந்தாலும் இது ஆஃபீஸ் இல்லை, வீடுங்கிறதுனால பொறுத்துக்கிட்டே"
ReplyDeletesuper!
இது ஒரு குழந்தையின் அலறல்..கண்ணு கண்ண துடசிக்கோ இங்கேயும் அதே கத தான்!
ReplyDelete@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி //அப்படியான டைம்ல எத்தனையோ பொய்களை அள்ளிவிடுவோம்! அப்புறம் அவற்றையெல்லாம் நினைச்சுப் பார்த்தா நமக்கே சிரிப்பா இருக்கும் !// நமக்குச் சிரிப்பு..அவங்களுக்கு கடுப்பு!
ReplyDelete@இக்பால் செல்வன் //செய்யிறதையும் செஞ்சிட்டு டிஸ்கி போட்டு சமாளிக்கிறீங்களா ? விட மாட்டோம்..ல..// அய்யய்யோ இக்பாலா....இன்னைக்கு நிறைய வேலை இருக்குய்யா..ஆரம்பிச்சுடாதீங்க.
ReplyDelete@மைந்தன் சிவா அதுக்கு ஏன்யா எக்கோ மாதிரி 2 தடவை சொல்றீங்க?
ReplyDelete@விக்கியுலகம் //கண்ணு கண்ண துடசிக்கோ இங்கேயும் அதே கத தான்!// ஒய் ப்ளட்...சேம் ப்ளட்.
ReplyDeleteசெங்கோவி அண்ணே விட மாட்டோம் அமெரிக்கனுட்டு இப்ப பேரிக்கனு சொன்ன எப்டி டிஸ்கினாலும் விடமாட்டோம் வர இருங்க இருங்க
ReplyDeleteஇக்பால்,எண்ணங்கள் அப்டினு ஒரு குருப்போட ஹிஹி
@செங்கோவி //இன்னைக்கு நிறைய வேலை இருக்குய்யா..ஆரம்பிச்சுடாதீங்க//
ReplyDeleteதோடா.....ஆப்புதே....
@கிருபா//டிஸ்கினாலும் விடமாட்டோம் வர இருங்க இருங்க//கிளம்பிட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்கய்யா.
ReplyDelete//நமக்குக் கோவம் வந்துடுச்சு.இருந்தாலும் இது ஆஃபீஸ் இல்லை, வீடுங்கிறதுனால பொறுத்துக்கிட்டே ‘அப்படி என்ன தான் சொன்னேன்’ன்னு கேட்டேன்//
ReplyDeleteஇந்த இடத்திலதான் அண்ணன் நிக்கிறான்! மனுஷன்ணே நீங்க!
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!
கல்யாணம் ஆன புதுசுல ஒரு மனுசன் என்னத்தியாவது சொல்லத் தான் செய்வான். ‘தாஜ்மஹாலை வாங்கித் தாறேன்’ன்னு கூடத்தான் சொல்வான். அதுக்காக, அதை இவ்வளவு டீடெய்லாவா ஞாபகம் வச்சுக்கிறது? //
ReplyDeleteஹா ஹா ஹா ஹா [[தாஜ்மகாலா அவ்வ்வ்வ்]] கலக்குங்க கலக்குங்க...!!
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஅடுத்தது எனக்கு...//
அப்போ எனக்கு வடை...???
அய்யோ பாவம் தான் இந்த ஆண்கள்..
ReplyDeleteசே எங்க பாத்தாலும் இதே புலம்பலா இருக்கு, இனி நாம எங்க போய் புலம்பறது :-(
ReplyDelete@ஜீ...//உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு! // தம்பி, மானங்கெட்ட பொழைப்புக்கும் நேர்மைக்கும் மயிரிழை தான் வித்தியாசம்னு சொல்றாங்கெளே..அப்படியா?
ReplyDelete@MANO நாஞ்சில் மனோ //[[தாஜ்மகாலா அவ்வ்வ்வ்]] கலக்குங்க கலக்குங்க...!! // பின்னே உங்களை மாதிரி வேலை பார்க்கிற ஸ்டார் ஓட்டலை வாங்கித் தர்றேன்னே சொல்ல முடியும்?
ReplyDelete@அமுதா கிருஷ்ணா //அய்யோ பாவம் தான் இந்த ஆண்கள்.. // உங்க அனுதாபத்திற்கு நன்றிக்கா.
ReplyDelete@இரவு வானம் //சே எங்க பாத்தாலும் இதே புலம்பலா இருக்கு, இனி நாம எங்க போய் புலம்பறது// ஒன்னும் தப்பில்லை, இங்கயே புலம்புங்ஜ நைட்டு.
ReplyDeleteரைட்டு....
ReplyDelete>>கல்யாணம் ஆன புதுசுல ‘நான் அழகா இருக்கனா?’ன்னு கேட்டிருக்கு. ’ஆமா, உன் அக்காவை விட நீ சூப்பரா இருக்க’ன்னு நல்லாத் தான் சொல்லி இருக்காரு. அன்னைக்கு விட்டிடுச்சு. இப்போ ‘ அவளை எதுக்கு அவ்வளவு டீப்பா பாத்தீங்க?’ன்னு குத்து விழுது.
ReplyDeletehi hi ஹி ஹி அண்ணே.. நீங்களுமா?
>>அய்யய்யோ..பெண்களை கேவலப்படுத்திட்டான்
ReplyDeleteஅய்யய்யோ..பெண்களை கேவலப்படுத்திட்டாரு.. ஹி ஹி மரியாதை
>>கல்யாணம் ஆன புதுசுல ஒரு மனுசன் என்னத்தியாவது சொல்லத் தான் செய்வான்.
ReplyDeleteசொல் மட்டுமா? ஜொள் கிடையாதா?
>>
ReplyDelete’பெண் என்பவள் சக்தியின் சொரூபம்..பெண்ணே சக்தி
ada அட விடுங்கண்ணே .. வீட்ல அண்னனை விட அண்ணீக்குத்தான் பவர் ஜாஸ்தி.. ஒத்துக்கறோம்
தமிழ்வாசி - Prakash said... [Reply]
ReplyDeleteஅந்தளவுக்கெல்லாம் நான் ஒர்த் இல்லைய்யா!>>>>>
அட அவனா நீ.... சொல்லவே இல்லையே....
// எனக்கு கூட சொல்லவே இல்லை..
//கல்யாணம் ஆன புதுசுல ஒரு மனுசன் என்னத்தியாவது சொல்லத் தான் செய்வான். ‘தாஜ்மஹாலை வாங்கித் தாறேன்’ன்னு கூடத்தான் சொல்வான். அதுக்காக, அதை இவ்வளவு டீடெய்லாவா ஞாபகம் வச்சுக்கிறது? //
ReplyDeleteஆகா!வீட்டுக்கு வீடு வாசப்படிதானா:)
எல்லோரும் ஒப்புக்க வேண்டிய விஷயம், சில நேரம் நல்லதா தெரிஞ்சாலும் நெறையா நேரம் தொல்லையா தான் இருக்கு
ReplyDeleteஅடடா என்ன அருமையா உண்மைகள புட்டு புட்டு வெச்சிருக்கீங்க?
ReplyDelete////கல்யாணம் ஆன புதுசுல ஒரு மனுசன் என்னத்தியாவது சொல்லத் தான் செய்வான். ‘தாஜ்மஹாலை வாங்கித் தாறேன்’ன்னு கூடத்தான் சொல்வான். அதுக்காக, அதை இவ்வளவு டீடெய்லாவா ஞாபகம் வச்சுக்கிறது?
ReplyDelete////////
அதானே அதுவும் நாம ஏதாச்சும் லைட்டா சின்ன மிஸ்டேக் பண்ணி இருப்போம், அதப் போயி இப்படி ஞாபகம் வெச்சிருந்தா என்னதான் பண்றது?
/////அப்போ எங்ககூடப் படிச்ச புள்ளை (ஃபிகருன்னு சொல்லலாமா? வேணாம்..அப்புறம் வலிக்கும், எனக்கு)/////////
ReplyDeleteஏன் பின்னாடி ஏதாவது ஆட்டோகிராப் இருக்கா?
////////டிஸ்கி: ‘அய்யய்யோ..பெண்களை கேவலப்படுத்திட்டான்’ன்னு யாரும் பின்னூட்டத்துல பத்த வச்சு ’பதிவர் சந்திப்பு’ ஏற்பாடு பண்ணிடாதீங்கய்யா..அந்த ‘ஆயி மகமாயி..அங்காள பரமேஸ்வரி’ மேல சத்தியமாச் சொல்றேன். அந்தளவுக்கெல்லாம் நான் ஒர்த் இல்லைய்யா!////////
ReplyDeleteஇதுல என்னமோ உள்குத்து இருக்கே?
@சங்கவி ரைட்டு....
ReplyDelete@சி.பி.செந்தில்குமார் //அய்யய்யோ..பெண்களை கேவலப்படுத்திட்டாரு.. ஹி ஹி மரியாதை// மாட்டி விடறதுல என்னய்யா மரியாதை..
ReplyDelete@!* வேடந்தாங்கல் - கருன் *! //எனக்கு கூட சொல்லவே இல்லை..// வாத்யார், நீங்களுமா?
ReplyDelete@ராஜ நடராஜன் //வீட்டுக்கு வீடு வாசப்படிதானா:)// அங்கயுமா..பேசாம ‘ஆண்கள் முன்னேற்றக் கழகம்’னு ஆரம்பிச்சுடலாமா?
ReplyDelete@ஜ.ரா.ரமேஷ் பாபு //எல்லோரும் ஒப்புக்க வேண்டிய விஷயம்,//ஆமா பாஸ்...அடங்க மறு...அத்துமீறுன்னு கிளம்புவோம் வாங்க.
ReplyDelete@பன்னிக்குட்டி ராம்சாமி //அதானே அதுவும் நாம ஏதாச்சும் லைட்டா சின்ன மிஸ்டேக் பண்ணி இருப்போம், அதப் போயி இப்படி ஞாபகம் வெச்சிருந்தா என்னதான் பண்றது? // ஆஹா, சிங்கத்தையே சாய்ச்சுப்புட்டாங்க போலிருக்கே.
ReplyDelete@பன்னிக்குட்டி ராம்சாமி //இதுல என்னமோ உள்குத்து இருக்கே? // அம்புட்டு அப்பாவியாண்ணே நீங்க?
ReplyDeleteஅப்பாவிக் கணவரை ஆட்டி வைக்கப் பயன்படுத்துறது எந்த விதத்துல சரின்னு தங்கமணிகள்லாம்.// அம்மா தங்கமணி கொஞ்சம் இங்கேயும் பாருங்கோ. சொல்லுறதையும் சொல்லிட்டு பிராக்கெட்டில் இல்லையின்னு போட்டா நம்பிடுவோமா?
ReplyDeleteஎனக்குமட்டும் தங்கமணி நம்பர் ப்ளீஸ்..
@அன்புடன் மலிக்கா //எனக்குமட்டும் தங்கமணி நம்பர் ப்ளீஸ்.. // 108க்கு ஃபோன் பண்ணுங்கக்கா.....தங்கமணிக்கு நீங்க ஃபோன் பண்ணுனா அடுத்து 108க்குத் தான் பண்ணியாகணும். எதுக்கு ரெண்டு வேலை..ஒரேயடியா 108க்கே அடிங்க.
ReplyDeleteI really enjoyed. It is true about the ladies memory.Especially they remember BirthDay, Marriage Day and that too in advance (may be for the sake of Gifts)which we normally dont remember in our busy schedule. It is also to be noted that they dont come to the point directly. "come soon from Office to day" "do you know what is the date today" or prepare our favorite dish such as Payasam etc and expect us to ask what is the special today and then she will tell after scolding and if you dont care and start eating Payasam without a word then you will have your chips.wonderful to enjoy. tamizh fonts are not comming. I dont know why.
ReplyDelete@krishna தெளிவாச் சொல்லிட்டீங்க..அதுவும் அந்த பிறந்த நாள்/திருமண நாள் பிரச்சினை இருக்கே..அப்பப்பா! அவங்க எந்த மாசம் பொறந்தாங்கன்னு இப்போ கஷ்டப்பட்டு ஞாபகம் வச்சுக்கிட்டேன்.தேதி தான் நிக்க மாட்டேங்குது..என்ன தான் செய்யவோ!!
ReplyDeleteசெங்கோவி, உங்க பாடு பரவாயில்லை, குழந்தைக்கு டிரஸ் வாங்கிக் கொடுத்ததை மறந்துட்டீங்க, நான் வருஷ வருஷம் அவ பிறந்த நாளையே மறந்திடுவேன், ஏன்னா, நாங்க வீட்டில் சிறு வயதிலிருந்தே பிறந்த நாட்களையெல்லாம் கொண்டாடியதில்லை, ஆனா, அவங்க வீட்டில் பிறந்த நாள் ரொம்ப முக்கியம், என் பாடு எப்படியிருந்திருக்கும்னு பாருங்க.. ஹா..ஹா...ஹா...
ReplyDelete@Jayadev Das //என் பாடு எப்படியிருந்திருக்கும்னு பாருங்க.. ஹா..ஹா...ஹா...// ஏன் கல்யாணம் ஆனவங்க எல்லாருமே எவ்வளவு வாங்குனாலும் வலிக்காத மாதிரியே சிரிக்கிறோம்?
ReplyDelete