இன்று டாப் 3 இளம் ஸ்டார்களின் அடுத்த படம் பற்றி ஒரு பார்வை பார்ப்போம்..
மங்காத்தா:
தல அஜித் நீண்ட இடைவெளிக்கு அப்புறம் நடித்து வெளி வர்ற படம் ‘மங்காத்தா’. அஜித்தின் ஐம்பதாவது படம் என்ற எதிர்பார்ப்பு வேறு. சென்னை28 பேரை வைத்தே இன்னும் வண்டி ஓட்டிக் கொண்டு இருக்கிற வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் த்ரிஷா, அர்ஜூன் மற்றும் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்கள் நடிக்கிற படமா வளர்ந்துக்கிட்டு இருக்கிறது.
படத்தோட ஸ்டில் எல்லாம் ஓசியன் லெவலை ஞாபகப்படுத்துறதா தம்பி ஜீ ஏற்கனவே இங்கே புலம்பி இருந்தார். எப்படியும் இந்தப் படம் ஏதோவொரு ஆங்கிலப்படத்தோட தழுவலாத்தான் இருக்கும்கிறதுல நமக்குச் சந்தேகம் இல்லை. அதைக் கொஞ்சம் நம்மூருக்கு ஏற்ற மாதிரி மாற்றி, ரசிக்கும்படியாத் தழுவுனாப் பிரச்சினை இல்லை.
ஃப்ரெஷ்னெஸ் இல்லாத த்ரிஷா அம்மையாரும் ஃபிட்னெஷ் இல்லாத வெங்கட் பிரபுவும் தான் படத்தோட எதிர்பார்ப்பைக் குறைக்கிற விஷயங்கள். அஞ்சலியும், லட்சுமி ராயும் இருப்பதால் ஃப்ரெஷ்னெஸ்க்குப் பிரச்சினை இல்லை.
ஏற்கனவே சுமாரான சரோஜாவும் கோவாவும் கொடுத்த வெங்கட், இதுலயாவது ஜெயிக்காரான்னு பார்ப்போம். அசல் தோல்விகளை அசராமக் கொடுக்கிற அண்ணன் அஜித்தும் இதுல ஜெயிச்சாக வேண்டிய கட்டாயம்.
வேலாயுதம்:
காவலன், நண்பன்னு நல்ல ரூட் கிடைச்சாலும், பழசை மறக்காம குருவி, சுறா ஸ்டைல்ல டாக்டர் விஜய் நடிக்கிற படம். இதுவரை ரீமேக் மட்டுமே பண்ணிக்கிட்டு இருந்த ஜெயம் ராஜா, முதல்முறையா சொந்தமாக் கதை எழுதி இயக்குற படம். பழைய ஜெனிலியா, புது ஹன்சிகா என விஜய்க்கு இரண்டு ஜோடிகள். நாட்டு மக்களுக்கு நல்லது செய்ற ஆக்சன் ஹீரோ கதைன்னு கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது. திருப்பாச்சி, கில்லி மாதிரி நல்ல ஆக்சன் படமா இருந்தா நமக்கும் நல்லது, டாகுடருக்கும் நல்லது.
எதையும் தாங்கும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தான் தயாரிப்பாளர். அதனால் ஒன்னும் பிரச்சினை இல்லை. ஓப்பனிங் சாங்குக்கே 2 கோடி செலவழிச்சாங்களாம். விஜய்யோட படங்கள்லயே பிரம்மாண்டப் படமா வரணும்னு உழைச்சுக்கிட்டு இருக்காங்க. கதையும் திரைக்கதையும் பிரம்மாண்டமா இருந்தாலே போதும்னு ஆடியன்சான நாம நினைச்சாலும் சினிமாக்காரங்க அப்படி நினைக்கத் தயாரா இல்லை.
ஏழாம் அறிவு:
மேலே சொன்ன இரண்டு படங்களை விடவும் அதிக எதிர்பார்ப்பு இந்தப் படத்துக்குத் தான். ஏன்னா, கஜினி-ங்கிற மெகா ஹிட் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸும் சூர்யாவும் மீண்டும் இணையும் படம். இந்தப் படமும் கிறிஸ்டோஃபர் நோலனின் ‘இன்செப்சன் + பிரஸ்டீஜ்’ படங்களின் கலவையா இருக்கும்போல் தெரிகிறது.அதை கஜினி மாதிரி பக்காக் கமெர்சியலா எடுத்தா, நல்லாத் தான் இருக்கும்.
படத்துல நமக்குக் குறையாத் தெரியறது ஸ்ருதி ஹாசன் ஹீரோயினா நடிக்கிறது தான். இந்தில அது நடிச்ச படத்தைப் பார்த்தப்போ நடிப்பு இன்னும் தேறணும், ஆளு இன்னும் இன்னும் தேறணும்னு தோன்றியது. இதிலாவது முருகதாஸ் புண்ணியத்தில் தேறுகிறாரான்னு பார்ப்போம்.
சினிமா ரசிகர்களுக்கு ஒரு வேட்டை இருக்குன்னு சொல்லுரிங்க
ReplyDelete@கந்தசாமி. முருகதாஸ் மீது நம்பிக்கை உள்ளது, பார்ப்போம்.
ReplyDeleteமூன்று படங்களைப் பற்றியும் அழகாக விளக்கியுள்ளீர்கள்! மங்காத்தாவுக்கு - த்ரிஷா மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்! தியேட்டரில போரடிக்காம இருந்தா சரி!
ReplyDeleteகாவலன், ஏழாம் அறிவு பாடல்கள் பட்டையைக் கிளப்பும் இருந்து பாருங்கள்! விஜய் ஆண்டனியும் ஹாரிஸ் ஜெயராஜும் வெளுத்து வாங்குனக்குவார்கள்!
ரைட்டு...படம் ஒன்னோன்னும் எப்படி இருக்குன்னு ரிலீஸ் அன்னைக்கு செங்கோவி போடுவாரு.... அப்ப பாக்கலாம் அவரு என்ன சொல்றாருன்னு?
ReplyDelete@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி //மங்காத்தாவுக்கு - த்ரிஷா மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்!// அஜித் நரைச்ச தலையோட நடிக்கிறார்..அதனான அந்த பாட்டி தான் பொருத்தமா இருக்கும்னு போட்டாங்களோ..
ReplyDelete@தமிழ்வாசி - Prakash //அப்ப பாக்கலாம் அவரு என்ன சொல்றாருன்னு?// நல்லா இருந்தா, நல்லா இருக்குன்னு சொல்வேன், அம்புட்டுதேன்.
ReplyDeleteமாப்ள விருப்பங்கள் நிறைவேறுதா பாப்போம்!
ReplyDeleteஅழகான பார்வை... வெற்றி பெருமா என்று பார்ப்போம்....
ReplyDelete>>படத்துல நமக்குக் குறையாத் தெரியறது ஸ்ருதி ஹாசன் ஹீரோயினா நடிக்கிறது தான். இந்தில அது நடிச்ச படத்தைப் பார்த்தப்போ நடிப்பு இன்னும் தேறணும், ஆளு இன்னும் இன்னும் தேறணும்னு தோன்றியது.
ReplyDeleteஉள்குத்துல அண்ணன் மன்னன்
அண்ணே ஸ்ருதிஹாசனுக்கு என்னன்னே கொறச்சலு ,கமல் மகளா இருந்தாலும் சூப்பர் பிகர் , நான நான நான்னு அந்த பாட்டு பாடுற ஸ்டைலுக்கே ,லட்டு லட்டா ( சரி வேணாம் எதுக்கு )
ReplyDeleteஅருமையான அலசல்
ReplyDeleteமங்காத்தாவுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது
இன்று என் பதிவில்
தலயா? தளபதியா? மோதிப்பாத்திரலாமா?
அஜித் டான்சை நினைச்சாத்தான் டரியலா இருக்கு.
ReplyDeleteஅசத்தலான அலசல்..
ReplyDeleteதல கலக்குவார்ன்னு நினைக்கிறேன்.
@விக்கியுலகம் //மாப்ள விருப்பங்கள் நிறைவேறுதா பாப்போம்! // நான் என்னமோ அஞ்சலி வேணும்னு விருப்பப்பட்ட மாதிரி சொல்றீங்க..
ReplyDelete@சங்கவி //அழகான பார்வை// ஆமா..ஆமா!
ReplyDelete@சி.பி.செந்தில்குமார் //உள்குத்துல அண்ணன் மன்னன் // உஷ்..பப்ளிக்..பப்ளிக்.
ReplyDelete@நா.மணிவண்ணன் //ஸ்ருதிஹாசனுக்கு என்னன்னே கொறச்சலு // தம்பி, இன்னும் கொஞ்சம் நீங்க டெவலப் ஆகணும்..சிபிகூடச் சேருங்க.
ReplyDelete@மதுரன் //மங்காத்தாவுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது// அதனால தான் பயமா இருக்கு.
ReplyDelete@! சிவகுமார் ! //அஜித் டான்சை நினைச்சாத்தான் டரியலா இருக்கு. // ஜோதிகா தொப்பைன்னா ரசிப்பீஙக..அஜித் தொப்பன்னா டரையல் ஆவீகளோ?
ReplyDelete@!* வேடந்தாங்கல் - கருன் *! //தல கலக்குவார்ன்னு நினைக்கிறேன்.// அப்போ தளபதி கலக்க மாட்டாரா?
ReplyDeleteவேலாயுதம் மறைந்த இயக்குனர் திருப்பதிசாமி தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து இயக்கிய ஆசாத் படத்தின் தழுவலாம்.ஜெயம் ராஜா இதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்.
ReplyDelete@Jagannath
ReplyDeleteவேலாயுதம் தெலுங்கு ஆசாத்தின் தழுவல் என்பதை தெரிவித்ததே ராஜாதான் ஜகன்நாத். இது எப்போதோ அவர்கள் ஒத்துக்கொண்ட விடயம் நண்பரே
@மதுரன் ஒருவேளை சொந்தக்கதையை வைத்து படம் ஆரம்பித்து விட்டு, பிடிக்காமல் ஆசாத் கதையைத் தழுவி இருக்கலாம். எனக்கு ஆசாத் மேட்டர் பற்றி எனக்கும் உறுதியாகத் தெரியவில்லை நண்பர்களே.
ReplyDelete// திருப்பாச்சி, கில்லி மாதிரி நல்ல ஆக்சன் படமா இருந்தா நமக்கும் நல்லது//
ReplyDeleteதிருப்பாச்சி மாதிரியேவா??? இதுக்கு வேலாயுதம்கிட்ட சூலாயுதம் வாங்கி உங்கள குத்தணும்...
@இரவு வானம் எனக்குப் பிடிச்சிருந்தது நைட்டு.
ReplyDeleteவரவிருக்கும் படங்களைப் பற்றிய கலக்கலான பார்வையினைத் தந்திருக்கிறீங்க.
ReplyDeleteதல, தளபதி இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவதால் இம் முறை ரசிகர்கள் பாடு கொண்டாட்டம் தான்.
@ அஞ்சலி எனக்குப் பிடிக்கும் என்பதால், பதிவு நல்லா இல்லாட்டியும் ஒரு ப்ளஸ் வோட்டு போடுறேன் ..ஹிஹி ... இதே பொழப்பாப் போச்சு இப்போ. ..
ReplyDeleteஆமாண்ணே ஸ்ருதி என்னமோ தமிழ்க்ப்படத்துக்கு ஒட்டாத மாதிரித்தான் இருக்கு!
ReplyDelete@நிரூபன் //இம் முறை ரசிகர்கள் பாடு கொண்டாட்டம் தான்.// ஆமா, படம் நல்லா இருந்தா!
ReplyDelete@இக்பால் செல்வன் //அஞ்சலி எனக்குப் பிடிக்கும் என்பதால், // பார்றா..பார்றா!
ReplyDelete@ஜீ... //ஸ்ருதி என்னமோ தமிழ்க்ப்படத்துக்கு ஒட்டாத மாதிரித்தான் இருக்கு// ஆமா ஜீ..தமிழன் எதிர்பார்க்கிறதுல ஏதோ குறையுது.
ReplyDelete\\சென்னை28 பேரை வைத்தே இன்னும் வண்டி ஓட்டிக் கொண்டு இருக்கிற வெங்கட் பிரபுவின் இயக்கத்தில்...\\ இது ஒன்னே போதும், வெங்கட் பிரபுவின் இயக்கத்தைப் பத்தி வேறோன்னுமே சொல்ல வேண்டியதில்லை. [சென்னை ௨௮ பாத்திட்டு, எதுக்குடா இந்த படம் ஓடிச்சுன்னு என்னால ஊகிக்கவே முடியல.]
ReplyDelete\\திருப்பாச்சி, கில்லி மாதிரி நல்ல ஆக்சன் படமா இருந்தா நமக்கும் நல்லது, டாகுடருக்கும் நல்லது.\\ ஓடாம புட்டுக்கும், நமக்கும் சந்தோசம், டாக்குட்டரும் ஓய்வு எடுத்து படம் நடிக்கிறதை குறைப்பார்... அதுக்கா...?? ஹா..ஹா... ஹா...
முருக தாசும் மத்தவங்கள மாதிரியே ஆங்கில கேசட்டுகளில் இருந்தே கதையை தேடும் ஆளாமே, அப்படியா செங்கோவி?
@Jayadev Das ஆமா சார், கஜினியோட ஒரிஜினல் Memento தான்..ஆனா, கான்செப்ட்டை மட்டும் எடுத்துக்கிட்டு கமர்சியலாக் கலக்கி இருப்பாரு. மெமண்டோ எனக்குப் பிடிச்ச நல்ல படங்கள்ல ஒன்னு! முடிஞ்சாப் பாருங்களேன்.
ReplyDelete