Wednesday, October 30, 2013

தீபாவளியைக் கொண்டாடலாமா?

இந்த சுதந்திர நாட்டுல நிம்மதியா ஒரு பண்டிகை கொண்டாட முடியலை.அந்நிய எலும்புத்துண்டுக்கு குரைக்கிற நாய்கள், இந்த வருடமும் ஆரம்பித்துவிட்டது. நரகாசுரன் தமிழனாம்..அவனை ஆரிய(!) சக்திகள் கொன்னதைப் போய்க் கொண்டாடுறீங்களே பதர்களா என்று வழக்கம்போல் வாங்கியகாசுக்கு கூவ ஆரம்பித்துவிட்டார்கள்.
 
நம்ம மரமண்டைக்கும் பகுத்தறிவுக்கும் ரொம்ப தூரம் தான்..ஆனாலும் புராணத்துல சொல்லியிருக்கிற மேட்டரைப் புரிஞ்சிக்கிட்டுத்தான் இந்த பகுத்தறிவுவியாதிகள் பேசுதான்னு குழப்பமா இருக்கு.
 
விஷ்ணு தன்னோட வராக அவதாரத்துல பூமாதேவிகூட லவ்ஸ் ஆகுறாரு..அதுக்கு கைமேல பலனா நரகாசுரன் பிறக்கிறாரு..அப்பாலிக்கா இப்போதைய அஸ்ஸாம் ஏரியாவுல, அப்போதைய தமிழன் ஒரு ராஜ்ஜியத்தையே அமைக்குறாரு..பவர் கைக்கு வந்தா, நம்மாளுக பவர் ஸ்டாரைவிட ஓவரா ஆடுவாங்களே..அதனாலாவரு ஆட்டம் ஓவராப் போகுது.
 
ஆனாலும் தமிழன் நரகாசு புத்திசாலி. அதனால பிரம்மாவை குடையாக்குடைஞ்சு ஒரு வரம் வாங்கிடுதாரு, என்னன்னா மம்மியைத் தவிர வேற யாரலயும் தனக்கு சாவு வரக்கூடாதுன்னு! மம்மின்னா பூமாதேவி, 'அய்யய்யோ..கொல்றாங்களே' புகழ் மம்மி இல்லை.
 
புராணத்தோட இன்னொரு வெர்சன் என்ன சொல்லுதுன்னா, விஷ்ணுவோட இன்னொரு அவதாரத்தால தான் 'சன்'ன்னுக்குச் சாவுன்னு தெரிஞ்ச மம்மி, 'நோ..நோ..சன்னை என்னைத் தவிர எவனும் காலி பண்ணக்கூடாது'ன்னு வரம் வாங்கிக்குது. எப்படியோ, மம்மியால தான் சாவுன்னு மட்டும் கன்ஃபார்ம் ஆகுது. பூமாதேவி வேற, சோ கள்ளக்காதலால் மகனின் தலையில் கல்லைப் போட்ட தாய்-ன்னு நியூஸ் வர சான்ஸே இல்லைன்னு நம்ம நரகாசுக்கும் நிம்மதி!
 
புராணத்துல ஒரு ட்ராபிக் ராமசாமி உண்டு..யாராவது ஓவரா ஆடுனா, விஷ்ணு/சிவன்கிட்ட மனு கொடுக்கிறது அவர் வழக்கம். அவரு பேரு இந்திரன். அவரே ஒரு குஜால் பேர்வழிதான்னாலும், நரகாசு ஆட்டம் தாங்காம, விஷ்ணுகிட்டப் போய் கம்ளைண்ட் பண்ணுதாரு. 'டி.எஸ்.பியா புரமோசன் வரட்டும், பார்த்துக்கிறேங்கிறேங்கிற மாதிரி அவரும் 'கிருஷ்ண அவதாரம் எடுக்கும்போது கவனிச்சுக்கிறேன், அந்தப்பயல'ன்னு சொல்லி அனுப்புதாரு.
 
 
வின்டோஸ் புது வெர்சன் இறங்குற மாதிரி, விஷ்ணு-பூமாதேவி கப்புள்ஸ், கிருஷ்ணா-சத்யபாமாவா 'யாதவ' ஜாதில அவதரிக்கிறாங்க. இப்போ இந்திரலோக லேடீஸ்லாம் புது மம்மிகிட்ட  வந்து நரகாசு ஆட்டத்தைச் சொல்ல, மம்மி காண்டாகிடுது. வீட்டுக்காரரைக் கூப்பிட்டு, அவனைத் தூக்குய்யான்னு சொல்லிடுது. கடவுளே ஆனாலும் கணவன்னு ஆனப்புறம் எதிர்த்துப் பேச முடியுமா?
 
கிருஷ்ணர் பீகார்ல இருந்து படையெடுத்து அஸ்ஸாம் போயி, ஃபைட் பண்றாரு. விதின்னு ஒன்னு இருக்கும்போது நைனாவால என்ன செய்ய முடியும்? சோ, கிருஷ்ணரையே சாச்சுப்புடுதான் நரகாசு. அவ்வளவு தான், மம்மிக்கு வந்துச்சே கோவம்..'என் புருசனை அடிக்கிற ரைட்ஸு என்னைத் தவிர எவனுக்கும் இல்லைடா ங்கொய்யால'ன்னு ஒரே போடு, நரகாசு காலி!
 
அப்படி மண்டையைப் போடும்போது தான் நரகாசுக்கே மேட்டர் எல்லாம் புரியுது.அதனால எல்லாரும் என் ஆட்டத்தை படிப்பினையா வச்சு, இதை மறந்திடாம இருக்கும்படியா வருசாவருசம் கொண்டாடுடுங்கன்னு கேட்டுக்கிடுதாரு. ஆக்சுவலா தீபாவளிங்கிறது அஞ்சுநாள் பண்டிகைய இருந்து, மூணுநாளா ஆகி, இப்போ ஒருநாளா நிக்குது. அதுல முதநாள் மட்டும்தான் நரகாசுக்கு!
 
ஒகே..இப்போ இந்த பகுத்தறிவுக் கும்பலுக்கு ஏன் ***ல எரியுதுன்னு பார்ப்போம். அவங்க என்ன சொல்றாங்கன்னா, 'நரகாசு ஒரு தமிழ்மன்னன்..ஒரு தமிழனோட ராஜ்ஜியத்தை அழிச்சதைப் போய்க் கொண்டாடுறீங்களே, இது நியாயமா?' ன்னு.
 
முதல்லயே சொன்ன மாதிரி நமக்குப் பகுத்தறிவெல்லாம் கிடையாது. 'படிச்சிருக்கோம், உழைக்கத்தெம்பிருக்கு..நமக்கு எதுக்கு நக்கிப் பொழைக்கிற பொழப்பு'ன்னு பகுத்தறிவுப்பக்கம் நான் போறதே இல்லை. பகுத்தறிவில்லாத கூமுட்டையான நமக்குத் தோணுறது இது தான்..

1. அஸ்ஸாம் அப்போ தமிழ்நாடாத்தான் இருந்துச்சு...நரகாசுரன் தமிழந்தான்னே வச்சிக்குவோம். அப்போ அந்த தமிழனோட அப்பா-அம்மா யாரு? அவங்களும் தமிழங்க தானே? அட்லீஸ்ட் விஷ்ணுவோ அல்லது பூமாதேவியோ தமிழாத்தானே இருக்கணும்? இப்படி விஷ்ணுவைஅல்லது பூமாதேவியை தமிழராக் காட்டுன புராணத்தை, ஆக்சுவலி நாம பாரட்டத்தானே செய்யணும்? நியாயத்துக்கு தமிழனுக்காக பொங்குறவங்க, அந்த தமிழனைப் பெத்த தமிழர்களை வணங்கலாமே!
 
2. மூதாதையர் வழிபாடுங்கிறது நம்ம கலாச்சாரத்துலயே இருக்கிற விஷயம். நம்ம தாத்தா நரகாசுரர்(!), நம்மகிட்ட வேண்டி இதை ஒரு விழாவாக் கொண்டாடுங்கன்னு சொன்னப்புறம், உங்களை மாதிரி மூஞ்சைத் தொங்கப்போட்டுக்கிட்டிருந்தா, அவர் ஆவி ஃபீல் பண்ணாது? தாத்தா செத்தன்னிக்கே குத்தாட்டம் போடற இனம்யா நாங்க.

3. திராவிடம்-ஆரியம் பேசுற/ஆராய்கிற பலரும் ஒத்துக்கிட்டவிஷயம், யாதவ ஜாதிங்கிறது திராவிடத்தைச் சேர்ந்தது! அப்போ ஒரு திராவிட மன்னன் கிருஷ்ணனால, தமிழன் நரகாசுரன் கொல்லப்பட்டானா? நாம் தமிழர் இயக்கம் மாதிரி சில ப்யூர் தமிழ்வாதிங்க, பகுத்தறிவுவாதிகளின் திராவிடக்கொள்கையால தான் தமிழன் வீழ்ந்தான்னு சொல்றாங்களே..அது அப்போ நரகாசுரன் பீரியடுலேயே ஸ்டார்ட் ஆகிடுச்சா?..ஓ, அதனால தான் இந்தப் பண்டிகை பேரைக் கேட்டாலே எரியுதா பிரதர்ஸ்!

4. கிராமத்துல சில கிழவிங்க இருக்கும். பிடிக்காத பக்கத்து வீட்டுக்காரன் வீட்ல விஷேசம்னா என்னத்தையாவது புலம்பித் திட்டிக்கிட்டே திரியும்ங்க..முடிஞ்சா சண்டையும் இழுப்பாங்க..அதுகளுக்கு விவரம் அவ்வளவு தான்...பகுத்தறிவுக்குமா? பிடிக்கலைன்னா மூடிக்கிட்டு இருக்கலாமேய்யா!
 
5. எந்த ஒரு விஷயமானாலும் நாங்க நல்லதையே பார்க்கும்போது, அது எப்படிய்யா அதுல இருக்கிற/இல்லாத குறைகள் மட்டும் அவங்களுக்குத் தெரியுது..இந்த மனநோய்க்குப் பேரு என்ன?

எது எப்படியோ, நம்ம தாத்தா திவசத்தை விஷேசமாக் கொண்டாட வேண்டியது நம்ம கடமை..வெடிங்கய்யா பட்டாசை!
 

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...பரவும் தீபஒளி, எல்லார் வாழ்விலும் இருளை அகற்றட்டும்!
 
மேலும் வாசிக்க... "தீபாவளியைக் கொண்டாடலாமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

19 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, October 28, 2013

தமிழ்ஸ்ஸ்.காமில் சுப்பிரமணியபுரம்

 
அன்பு நண்பர்களே,
இந்த வாரம் முதல் தமிழ்ஸ்ஸ்.காமில் புதிய விமர்சனத்தொடர் எழுதுகின்றேன். வழக்கம்போல் உங்கள் ஆதரவை நாடி...
 
மேலும் வாசிக்க... "தமிழ்ஸ்ஸ்.காமில் சுப்பிரமணியபுரம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, October 24, 2013

எனது ஃபேஸ்புக் சிந்தனைகள்...! (Edited Version)


ஃபேஸ்புக்கில் நான் கிறுக்கி வரும் விஷயங்கள், பதிவுலக வரலாற்றில் இடம்பெறாமல் போய்விடுமோ என்ற அச்சத்திலேயே இங்கே மீள்பதிவிடப்படுகின்றன. அங்கேயே கமெண்ட்-லைக் போட்ட நண்பர்கள், டென்சன் ஆகாமல் இந்தப் பதிவைத் தவிர்க்கலாம்!


ஊருல மொபைலுக்கு வோடபோன்ல இன்டெர்நெட் போட்டா, ஒரு வாரத்துல எல்லாக் காசும் போயிந்தி.அது பற்றிய தீவிர ஆராய்ச்சியில் தங்கமணி இருக்கும்போது....

பையன்: போன் கொடும்மா..ஸ்பீக்கிங் டாம் பார்க்கணும்.

தங்கமணி: நானே போட்ட காசைக் காணோமேன்னு தேடிக்கிட்டிருக்கேன். தர மாட்டேன்.

பையன்: அப்போ உங்கூட 'கட்'டி. (அன்ஃபிரன்டு)

தங்கமணி: சரி, கட்டி!...ஓடிப் போயிடு.

பையன்: இல்லை, ஃப்ரெண்டு.

தங்கமணி: சரி, ஃப்ரெண்டு. 

பையன்: ஃப்ரெண்டு தானே? அப்போ ஃபோனைக் கொடு! 

உஸ்ஸ்..தலை சுத்துதுடா சாமீ!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
நேத்து ‘https://www.facebook.com/sengovipage' ஓப்பன் பண்ணும்போதே நினைச்சேன், என்ன ஆகப்போகுதோன்னு..

இன்னைக்கு பல நாடுகளில் கொஞ்சநேரம் ஃபேஸ்புக் ஒர்க் ஆகலையாமே..# "Please Try Again Later An error occurred. Please try again in a few minutes."
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
//என் பாட்டி, அப்பா மாதிரியே நானும் கொல்லப்படலாம் - ராகுல் காந்தி //


சப்பை, நீ வச்சிருக்கிற கொலம்பியாக்காரி உன்னைக் கொன்னாத்தான் உண்டு!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
காரில் பயணிக்கும்போது கால் மேல் கால் போட்டு ஸ்டைல் காட்டுவதைத் தவிர்க்கவும்.


*யம்மா..படுபாவி டிரைவர்..கொஞ்சம் சொல்லிட்டு ப்ரேக் போடக்கூடாதா..நசுங்கிடுத்து!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 தீவிரமா யோசிக்கிறது:
சின்ன வயசுல அழகா இருக்கிற பசங்க, பெரியவன் ஆனதும் அட்டா மாறுவதும், சின்ன வயசுல அட்டா திரிய பொண்ணுங்க, டக்குன்னு செம ஃபிகரா மாறுவதும் ஏன்?..ஏன்..ஏன்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------


Youtube-ல ஆண்ட்டி ஹாட்-ன்னு எத்தனையோ வீடியோ இருக்கு. ஆனா அங்க்கிள் ஹாட்-ன்னு ஒரு வீடியோவாவது இருக்கா? அதுக்காக என்னைக்காவது போராடியிருக்கீங்களா? அப்புறம் என்னய்யா போராளி நீங்க #ஆணியம்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


//ரஜினியுடன் டேட்டிங் செல்ல ஆசை - மல்லிகா ஷெராவத் //
ஆஹா..தலைவரு சோலியை முடிக்க ப்ளான் பண்ணிட்டாங்கடோய்!

அவரு ஷூட்டிங் போறதே பெரும்பாடா இருக்கு.இதுல டேட்டிங் வேறயா..ஏம்மா லேட்டா வந்ததும் இல்லாம வெறுப்பேத்துற? 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

//மலையாளம் தெரிந்தால் மட்டுமே இனி, கேரளாவில் அரசு வேலை: உம்மன்சாண்டி அறிவிப்பு//
பரவாயில்லை, ஷகீலா படம் பார்த்து மலையாளம் கத்துக்கிட்டது ஒருவகையில நல்லதாப் போச்சு!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் கனவு நனவாகும்: சென்னை வந்த மோடி பேச்சு! //

அப்போ நஸ்ரியா தொப்புளை பார்த்திடலாமா பாஸ்?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பு நண்பர்களே,

இனிமேல் குவைத் நேரப்படி இரவு 8.15 முதல் 8.30 வரை என் ரூமில் இருக்க மாட்டேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உடன் தங்கியிருக்கும் ஆந்திரா பக்கி, அந்த நேரத்தில் அவரது வீட்டுக்காரம்மா(???)க்கு போன் செய்து முடிக்கும் நேரம் அது. முடிக்கும்போதெல்லாம் பக்கத்தில் ஒரு மனுசன் இருக்கான் என்பதையே மறந்து அந்த பக்கி டெய்லி சொல்லும்/செய்யும் டயலாக் இது:

ஓகே..ஐ லவ் யூ..ஐ லவ் யூ..உம்மா...உம்ம்...உம்மா..ஐ லவ் யூ..ஐ லவ் யூ..உம்மா..உம்மா!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

//Please save me, my family and my COMMUNIY - நஸ்ரியா, கமிசனருக்கு அளித்த புகாரில்! //

கண்ணு, நீ ஏம்மா சினிமாக்குப் போனே...உனக்கு இருக்கிற திறமைக்கு அரசியலுக்கில்ல நீ வந்திருக்கணும்?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விகடன் டைம் பாஸில் நம் நய்யாண்டி...
நன்றி : விகடன்

மேலும் வாசிக்க... "எனது ஃபேஸ்புக் சிந்தனைகள்...! (Edited Version)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, October 21, 2013

டபுள் ஆக்ட்டிங்கும் டமில் சினிமாவும்-2 (நிறைவுப்பகுதி)

இரட்டை வேடப் படங்களை மக்கள் தொடந்து ரசிக்க மற்றொரு காரணம், திரைக்கதையில் புதுமைகளும் புகுத்தப்பட்டுக்கொண்டே இருந்தது தான். அதில் இன்றளவும் எவர்-கிரீனாக தனித்து நிற்பது, ரஜினியின் பில்லா. வழக்கமான ஒரு இடம் மாறுதல்களாக இல்லாமல், ஒரு ஹீரோ இறந்து விட அங்கே செல்லும் அடுத்த ஹீரோ சந்திக்கும் சவால்கள், படத்தினை பரபரப்பானதாக ஆக்கின. ரீமேக் செய்யப்பட்ட பின்பும், ஒரிஜினல் பில்லாவின் செல்வாக்கு அப்படியே நீடிக்கிறது.

அதே போன்றே கமலஹாசனும், அபூர்வ சகோதரர்கள் மூலம் இவ்வகைப் படங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். இன்றளவும் நமக்கு வியப்பை அளிக்கும் அப்பு கேரக்டர் மூலம், வழக்கமான இரட்டை வேட, பழிவாங்கல் கதையை முற்றிலும் மாறுபட்ட வடிவில் கொடுத்தார். தமிழ்சினிமாவின் முக்கியமான கமர்சியல் படங்களுள், அபூர்வ சகோதரர்களுக்கு தனியிடம் உண்டு.
ஆனால் அபூர்வ சகோதரர்கள் படம், இந்த கான்செப்ட்டில் ஒரு உச்சமாக, மற்ற யாரும் இனி இதைத் தொட பயப்படும் அளவிற்கு அமைந்தது. அதை எப்படித் தாண்டுவது என்று சிக்கல் எழுந்தது. அதற்கு ஒரு மாதம் முன்பு தான், ரஜினி வழக்கமான முரண்பாடு+நகைச்சுவை உத்தியில் ராஜாதிராஜா கொடுத்திருந்தார். வித்தியாசமாக ஏதாவது செய்தால்தான் இந்த கான்செப்ட்டை நெருங்க முடியும் என்ற நிலையில், 1990-ல் அதிசயப்பிறவி எனும் அபத்தத்தைச் செய்தார்கள். அதில் கண்ட சூடு, எல்லாரையுமே இரட்டை வேடப் படங்களை மறக்க வைத்தது. கமலுமே தனது படத்தையே வெல்ல வேண்டிய கட்டாயத்தில் நான்கு வேடத்தில் மைக்கேல் மதன காமராஜனை எடுத்தார்.

அதையடுத்து ஜெண்டில்மேன் மூலம் தமிழ் சினிமாவின் அடையாளமும் மாறிவிட, தற்காலிகமாக இரட்டை வேட படங்கள் ஒழிந்தன. (அந்த நேரத்தில் ரீ-ரிலீஸீல் எங்க வீட்டுப்பிள்ளை-ராஜாதி ராஜா போன்ற படங்கள் பட்டையைக் கிளப்பின.) அப்படி எல்லாரும் இரட்டை வேடத்தை மறந்து விட்ட நிலையில், ஒரு தெலுங்கு டப்பிங் படம் யாரும் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றது. அது நாகர்ஜூனாவின் ஹலோ பிரதர். இரட்டை வேடப் படங்களுக்கென்று அழியாத மார்க்கெட் இருப்பதை அந்தப்படம் உறுதி செய்தது. அதையடுத்து களமிறங்கியது நாட்டாமை. சூப்பர் டூப்பர் ஹிட்டாக அது அமைந்து விட, இரட்டை வேடப் படங்களுக்கு மீண்டும் விடிவு காலம் பிறந்தது.

இன்றைய கிராபிக்ஸ் டெக்னாலஜி துணையுடன், இரட்டை வேடப்பபடங்களில் முதல் துல்லியமான படமாக ஜீன்ஸ் வந்தது. கிராமங்களில் பிரசாந்த்திற்கு உண்மையில் அவர் மாதிரியே ஒரு சகோதரர் உண்டு என்று பேசிக்கொள்ளும் அளவிற்கு, அந்தப் படம் டெக்னாலஜியில் சிறந்து நின்றது. 

இயல்பாகவே இரட்டை வேடப் படங்கள் பொழுதுபோக்குத் தன்மை கொண்டவையாக உள்ளதே அதன் வெற்றிக்குக் காரணம். இந்த இரட்டைக் குண நலன்கள் ரசிகனின் ரசனைக்கு பெரும் தீனியாக அமைந்தது. நிஜ கோழையான அவன், ஒரே நேரத்தில் வீரன் - கோழையுடன் அடையாளப்படுத்திக்கொள்ளவும் முடியும். கோழையும் ஹீரோ தான் என்று சந்தோசப்பட்டுக்கொள்ளவும் முடியும். இதுவே இந்தப் படங்களின் வெற்றிக்கு, பாதி உறுதியை அளிக்கின்றன. 

ஷாம்லி நடித்த துர்காவானாலும் சரி, இன்றைய கார்த்தி நடித்த சிறுத்தையானாலும் சரி, அவை நமக்குச் சொல்வது ஒன்றே ஒன்று தான். முரண்பட்ட கதாபாத்திரங்களின் இடம் மாறல் + நகைச்சுவை + நல்ல பாடல்கள் இருந்தால், எம்.ஜி.ஆர் காலமானாலும் இன்றைய நவீன காலமானாலும், இத்தகைய படங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

அதனால் தான் ’இனி இரட்டை வேடப் படங்கள் அவ்வளவு தான்’ என சினிமாக்காரர்களே நினைக்கும்போதும், ஃபீனிக்ஸ் பறவையாக இவ்வகைப் படங்கள் மீண்டும் மீண்டும் எழுகின்றன, இனியும் எழும்!

Facebook-ல் படிக்க: https://www.facebook.com/sengovipage
மேலும் வாசிக்க... "டபுள் ஆக்ட்டிங்கும் டமில் சினிமாவும்-2 (நிறைவுப்பகுதி)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

டபுள் ஆக்ட்டிங்கும் டமில் சினிமாவும்-1

Facebook-ல் படிக்க: https://www.facebook.com/sengovipage

சினிமா ஊடகத்தின் வெற்றிக்கு முக்கியக்காரணம், திரையரங்க இருளும் ரசிகன் படத்தில் வரும் கேரக்டருடன் அடையாளப்படுத்திக்கொள்ளலும் தான். நிஜ வாழ்க்கையில் அட்டு ஃபிகரை கரெக்ட் பண்ண முடியாதவன்கூட, திரையரங்க இருளில் ஐஸ்வர்யா ராயுடன் பரவசத்தில் ஆழ்ந்து விட முடியும். நிஜத்தில் தன் தொகுதி கவுன்சிலரைக்கூட எதிர்த்துப் பேசாதவன், பதிவர் போல்(!) திரையரங்க இருளில் புரட்சிக்காரனாக வாழ்ந்து விட முடியும். இயல், இசை, நாடகம் என அனைத்தையும் உள்ளடக்கிய சினிமாவில் வந்த இரட்டை வேடங்களைப் பற்றிப் பேசுவோம், வாருங்கள்.

நாடகத்தையே காமிரா வைத்துப் படம்பிடித்து சினிமா என்று நம்பிய ஆரம்ப கட்ட அபத்தங்களைத் தாண்டிய பின், மக்களை வசீகரிக்க புதிய உத்திகள் களமிறங்கின. அவற்றில் ஒன்று தான் இந்த இரட்டை வேட சினிமாக்கள். பொதுவாகவே ஒரு ஹீரோவுடனே, அடையாளப்படுத்தலால் திருப்தியடையும் ரசிகனுக்கு இரட்டை கொண்டாட்டமாக அமைந்தது இந்த இரட்டை வேடப்படங்கள்.


இரட்டை வேடங்கள் கான்செப்ட்டானது மிகவும் சிம்பிளானது. கதாநாயகர்கள் இரு வேறுபட்ட குண நலன் கொண்டவர்கள், நல்லவன் -கெட்டவன், ஏழை-பணக்காரன், வீரன் - கோழை, போலீஸ்-திருடன், மந்திரா-கௌசல்யா என ஏதாவது ஒரு முரண்பாடு இருக்கும். வெவ்வேறு இடங்களில் முற்றிலும் முரண்பட்ட சூழலில் வாழ்வார்கள். 

இருவருக்குமே அல்லது குறைந்த பட்சம் ஒருவருக்கு அங்கே சில பிரச்சினைகள் இருக்கும். அதை அவர்களின் இயல்பின் காரணமாக தீர்க்க இயலாது. உருவ ஒற்றுமை காரணமாக இடம் மாறுவார்கள். பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள். முடிவில் அந்த அதிபயங்கர உண்மையை (ஆம், இருவரும் ட்வின்ஸ்!) அனைவரும் உணர, எல்லாம் சுபம்.

தமிழில் இரட்டை வேடப்படங்களின் காலகட்டம் 1940-ல் ஆரம்பிக்கிறது. பி.யு.சின்னப்பா நடித்த ‘உத்தம புத்திரன்’ தான் அது. எதிர்பார்த்தபடியே மாபெரும் வெற்றி பெற்றது. அதே படம் 18 ஆண்டுகள் கழித்து, நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் அதே பெயரில் (ஹா..யாரடி நீ மோகினி!) ரீ-மேக் செய்யப்பட்டது. முதல் படத்தில் டி.எஸ்.பாலையா செய்த வில்லன் ரோலை நம்பியார் இதில் செய்தார். இன்றளவும் ரசிக்கப்படும் படமாக உத்தம புத்திரன் நிற்கிறது. (சின்னப்பாவின் படமும், இங்கே குறிப்பிடப்படும் பல படங்களும் பிறமொழியிலிருந்து ரீமேக் செய்யப்பட்டவை தான்.)

அதே நம்பியார், ஏறக்குறைய அதே மாமன்+வில்லன் ரோலில், அதே கான்செப்ட்டில் எம்.ஜி.ஆருடன் ஒரு மெகா ஹிட் கொடுத்தார். அது தான் எம்.ஜி.ஆரை அரசியலில் உச்சத்திற்குக் கொண்டு சென்ற ‘எங்க வீட்டுப் பிள்ளை’. இரட்டை வேடப் படங்களின் உச்சம் என்று எங்க வீட்டுப் பிள்ளையைச் சொல்லலாம். தீவிர சிவாஜி ரசிகனான நானே அந்தப் படத்தை 15 தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறேன். இப்போதும் ஏதாவது டிவியில் ஓடினால், தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து விடுவேன். மிக கச்சிதமான திரைக்கதையுடன், எப்போதும் புன்முறுவலை வரவைக்கும் காட்சி+வசன அமைப்புடன் உருவாக்கப்பட்ட படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை’.

தமிழ் சினிமாவில் இரட்டை வேடம் மூலம் அதிக ஹிட் கொடுத்தவராக ஒருவேளை எம்.ஜி.ஆரே இருக்கலாம். ஏனென்றால் நீரும் நெருப்பும், குடியிருந்த கோவில், நினைத்ததை முடிப்பவன், மாட்டுக்கார வேலம் என வெவ்வேறு கேரக்டர்கள் மற்றும் சூழ்நிலையுடன் அதே கான்செப்ட்டில் இந்த படங்கள் வெளிவந்து வெற்றிவாகை சூடின.

அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக இரட்டை வேடம், மூன்று வேடங்களுக்குத் தாவியது. இதில் மூன்றாவது வேடம், அப்பா கேரக்டர் தான். ஆரம்ப கட்சியிலேயே வந்து மண்டையைப் போடுபவராக அல்லது சிக்கலில் மாட்டுபவராகவும், அதற்கு பழி வாங்கும் பிள்ளைகள் கேரக்டராகவும் உருவாக்கப்பட்டன. இத்தகைய படங்களின் உச்சம் சிவாஜியின் திரிசூலம் தான். வெள்ளி விழாக் கண்ட அந்தப் படம். ரஜினி-கமல் என இரண்டு இளம்புயல்களுக்கு ஈடு கொடுத்து, சிவாஜி கொடுத்த மசாலா ஹிட் அது. அதன்பிறகு அந்த மூன்று வேட கான்செப்ட்டும், தமிழ் சினிமாவில் சக்கைபோடு போட்டது. 


ஆனால் ஒரே மாதிரியான இரட்டை வேடங்கள் + இடம் மாறுதல் கான்செப்ட், மக்களுக்கு சலிப்பைக் கொடுத்ததா, அதை தமிழ் சினிமா எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெற்றது?.......நாளைய பதிவில் பேசுவோம்.
மேலும் வாசிக்க... "டபுள் ஆக்ட்டிங்கும் டமில் சினிமாவும்-1"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, October 11, 2013

தொப்புள்..ஸாரி..நய்யாண்டி - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
ஒரு தேசிய விருது பெற்ற இயக்குநரும், ஒரு தேசிய விருது பெற்ற நல்ல நடிகனும் இணையும் படம் என்பதால் முதல் நாளே, ஆவலாய் படம் பார்க்கப்போனேன். ஏன், குறுகுறுன்னு பார்க்கறீங்க..ஓகே, பாஸ்..அதான்..அதே தான்..அது இருக்கான்னும் பார்க்கலாமேன்னு........
ஒரு ஊர்ல.....................:
நாற்பது வயதைத் தொட்ட இரு கல்யாணமாகாத அண்ணன்களின் அன்புத்தம்பி தனுஷ்க்கு நஸ்ரியா மேல் காதல். ஒரு கட்டத்தில் வேறுவழியின்றி நஸ்ஸியை கல்யாணம் செய்துவிட, அண்ணன்கள் கல்யாணம்வரை வீட்டிலேயே வேறு காரணம்கூறி தங்கவைக்கிறார். ஏற்கனவே காய்ந்த மாடுகளான அண்ணன்கள், நஸ்ஸி மேல் கண் வைக்க, தம்பி பதற..............!
 
 உரிச்சா....:

இன்றைய தமிழ்சினிமாவின் ட்ரெண்ட் அல்லது சாபம்,காமெடிப் படங்கள் தான். பசங்க பாண்டியராஜ் போன்ற இயக்குநர்களே கில்லாடித்தனமாக காமெடியில் இறங்கும்போது, சற்குணமும் அதே வேலையில் இறங்கியிருக்கிறார். முன்பொரு முறை ஹாலிவுட் நடிகர் கமலஹாசன் சொன்னது போல, காமெடிப் படம் எடுப்பது என்பது ரொம்ப கஷ்டமான காரியம். அதற்கு உதாரணமாக ஆகிவிட்டது, இந்தப் படம்.

 'மேல பரம்பில் ஆண்வீடு’ எனும் மலையாளப்படத்தின் தழுவல் இந்தப் படம். உண்மையில் கதையைக் கேட்ட யாருமே, காமெடியில் பட்டையைக் கிளப்பும் வாய்ப்புள்ள கதை என்றே நினைப்பார்கள். 

ஆனால் ‘தனுஷ்க்கு நஸ்ரியா மேல் காதல்’ என்பதை விளக்கவே பாதிப்படம் போய்விடுகிறது. இருவரும் சந்தித்து, நண்பர்கள் உதவி, இவர்கள் லவ்வ ஆரம்பிப்பதற்குள், நம்மை தூக்கம் கவ்வி விடுகிறது. நஸ்ஸியை காதலில் விழ வைக்க, தனுஷின் ஐடியாக்கள் காமெடிக்குப் பதில் கடுப்பைக் கிளப்புகின்றன. உதாரணம், பபூன் வேஷத்தில் அவர் வீட்டு முன் பேசி, ஆடும் காட்சி!

ஒரு வழியாக லவ்வாகி, பெண் வீட்டை விட்டு ஓடி வந்து, தனுஷ் வீட்டில் செட்டிலானபிறகே இது ஒரு காமெடிப் படம் என்பதே நமக்கு உறைக்கிறது. ஆனால்,..டூ லேட்!

 நற்குணம் படைத்த சற்குணத்திற்கு, இந்த மாதிரிப் படம் எடுப்பது அழகல்ல!
தனுஷ் :
இப்போது தான் பரத்பாலாவிடம் சிக்கி வெளிவந்த தனுஷ்க்கு, இன்னொரு சோதனை. மாப்பிள்ளை படம் போல் இதுவும் இன்னொரு படம். அவ்வளவே. அடுத்து வெற்றி மாறனின் படத்திலாவது தனுஷ்க்கு நல்ல காலம் பிறக்கட்டும். நல்ல நடிகனை வேஸ்ட் பண்ணாதீங்கய்யா!

 நஸ்ரியா :

நஸ்ஸி, லஸ்ஸி போன்று ஜில்லென்று இருக்கிறார். (தப்பாயிருந்தா மன்னிச்சிருங்கோ கமிசனர் சார்..Please save me, my family, my state, my india & my Kuwait). ஆனால் காமெடிக் காட்சிகளில் வர வேண்டிய டைமிங் ரியாக்சன்ஸ் மிஸ்ஸிங். அவரும் இது ஒரு சீரியஸான படம் என்றே நடித்திருப்பார் போல!

நஸ்ஸி ஒரு கண்ணியமான பெண் என்பதால், தனுஷைக் கட்டிப் பிடிக்கிறார், முத்தம் கொடுக்கிறார், முன்னாலே பாடலில் ஒரிஜினல் தொப்புளைக் காட்டுகிறார், கொஞ்சம் கிளிவேஜ் காட்டுகிறார், முழங்காலுக்கு மேல் பாவாடை பறக்க ஆடுகிறார்....மற்றபடி குடும்ப கௌரவத்தை கெடுக்கும்விதமாக ஏதும் செய்து விடவில்லை.

ராஜா ராணி படத்தில் நஸ்ஸியை உறுத்தலின்றி ரசிக்க முடிந்தது. ஆனால் இதில் ‘இவ்ளோ பண்ணிட்டுத்தான் அந்த ஆட்டமா?’ என்று மனதில் தோன்றிக்கொண்டே இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. எதற்கு அப்படி வம்பு செய்தது, சீப் பப்ளிசிட்டி தானா என்றும் புரியவில்லை. சிம்பால ஹன்சி போச்சு, இந்த வம்பால நஸ்ஸி போச்சு..போச்சு, எல்லாம் போச்சு!
 
காமெடியன்ஸ் :

சூரி பிரதான காமெடியனாக வந்தாலும், சாரி பாஸ்! சூரியை விட இமான் அண்ணாச்சி அதிகமாக சிரிக்க வைக்கிறார். இவர்களை விட சத்யனும், சத்யனை விட சுமனும் கலக்குகிறார்கள். தொப்பையை மறைக்க மூச்சை இழுத்துப் பிடிப்பதும், பட்டன் தெரிப்பதும், தேவதை வந்துவிட்டாள் பாடலும் அருமை. கிளைமாக்ஸில் வரும் ராஜபார்ட் ரங்கதுரை பாடல், இன்னும் செம காமெடி.

நஸ்ஸி கர்ப்பமாக, அப்பா நடராஜன் அண்ணன்களை அடிக்க அவர்களோ ‘தெரியாதுப்பா..தம்பியைவும் கேளுங்க’ என்று சொல்லவும் நடராஜன் ‘அவன் ஒரு பச்சை மண்ணுடா’ என்று சொல்லுமிடத்தில் தியேட்டரில் கரகோஷம்!
 
ஒரிஜினல்!
 நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- பாதிப் படம்வரை அந்த அதையும் தாண்டிப் புனிதமான காதல், மொக்கைத்தனமாக டெவலப் ஆவது

- இன்னைக்கு காமெடிப் படம் தான் ஓடுது, அதனால நம்மளும் எடுத்துற வேண்டியது தான் என்று துணிந்து இறங்கியிருப்பது

- பாடல் காட்சிகளில் நஸ்ஸியின் காஸ்ட்யூம். (மகா மட்டம்)

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- தனுஷ்
- ஜிப்ரானின் ஹிட் பாடல்கள்
- சுமன், சத்யன் காமெடிப் போர்சன்

பார்க்கலாமா? :
கண்டிப்பாக பாருங்கள் - பக்கத்து தியேட்டரில் ஓடும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை!

மேலும் வாசிக்க... "தொப்புள்..ஸாரி..நய்யாண்டி - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

36 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, October 7, 2013

தம்பதிகள், குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடலாமா?

குழந்தையின்மை என்பது 
நவீன சமுதாயத்தைப் 
பீடித்திருக்கும் புற்றுநோய்! - Vicki Donor படத்திலிருந்து.

மீப காலமாகவே புதுமணத் தம்பதிகளிடம் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறைந்த பட்சம் இரண்டு வருடங்களுக்காவது வாழ்க்கையை எஞ்சாய் பண்ண வேண்டும், இருவரும் வேலை பார்த்து பணம் சேமித்துக்கொள்ள வேண்டும என பல நியாயமான காரணங்களின் அடிப்படையில் இந்த முடிவானது தம்பதிகளால் எடுக்கப்படுகிறது. ஆனால் இத்தகைய முடிவை எடுக்கும் முன், நாம் சில விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.

சொல்லு..கேட்போம்!
 குழந்தையற்ற ஒரு தம்பதியால் தத்தெடுத்து வளர்க்கஏப்பட்டவன் என்ற முறையில், ஒரு பெண் மலடிப்பட்டத்துடன் வாழ்வதன் கொடுமையை நான் மற்றவரை விட நன்கறிவேன். என்ன தான் சமூகம் நாகரீகம் அடைந்துவிட்டதாகக் கூறினாலும், சொந்தக்காரர்கள் மத்தியில், விஷேச தினங்களில் சமூகத்தின் உண்மைக் குணம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். யாராவது தற்செயலாக ஏதாவது கூறினால்கூட, அதுவும் சமூகத்தின் கேலியாகவே தாய்மையடையாத பெண்ணால் உணரப்படும். தவிர்க்கப்பட வேண்டிய, ஆனால் தவிர்க்க முடியாத உளச்சிக்கல் அது.

இரண்டு ஆண்டுகள் சந்தோசமாக புதுமண வாழ்வை அனுபவிப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அதற்காக குழந்தைப் பிறப்பைத் தவிர்ப்பது, பின்னாளில் உங்களுக்கு வேதனையான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதே உண்மை. ரெண்டு வருசம் தள்ளிப்போட்டால் குழந்தை பிறக்காதென்று மருத்துவம் சொல்கிறதா? என்று நீங்கள் என்மீது பாயலாம். நான் மருத்துவன் அல்ல, நான் கண்ட பலரின் அனுபவங்களின் அடிப்படையிலேயே இதைப் பேச விழைகின்றேன்.

முதலாவதாக, புதுமணத் தம்பதிகள் குறிப்பாக பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. ஆண்களைப் பொறுத்தவரை, திருமணம் ஆகும்வரை பெண் என்பவள் வெறும் சதைப்பிண்டம் தான். அவளுக்குள்ளும் ஒரு மனது உண்டு என்பதோ. அவளும் வலியும், வேதனையும், வருத்தமும், அவமானமும் அடையக்கூடிய ஒரு உயிர் என்றோ ஆண்களுக்கு உறைப்பதில்லை. ஆணைப் பொறுத்தவரை, பெண் என்பவள் செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டும் ஒரு டாய், அவ்வளவே!
அடப்பாவி!
ஆனால் திருமணத்திற்குப் பின், 24 மணி நேரமும் ஒரு பெண்ணுடன் வாழும்போதே, ஆண் அவளை செக்ஸைத் தாண்டி பார்க்கத் துவங்குகிறான். இன்னொருவகையில் சொல்வதென்றால், பார்க்க வைக்கப்படுகின்றான். அவளும் தன்னைப் போலவே கோபப்படுவாள்/வருத்தப்படுவாள், தனக்கு தன் வீட்டார் போலவே அவளுக்கும் ஒரு பின்புலமும், பாசம் காட்டும் ஜீவன்களும் உண்டு, அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் உண்டு என்று ஆண் கல்யாணத்திற்குப் பிறகே புரிந்து கொள்கிறான்.

பெரும்பாலும், ஒரு வருட காலமாவது ஆகிறது அவனுக்கு உறைக்க! இது நல்ல விஷயம் தான். அதே நேரத்தில் இது பெண்ணின் மீதான ஈர்ப்பைக் குறைத்துவிடுகிறது. இதையே பெரியவர்கள் நாகரீகமாக ‘ஆசை அறுபது நாள்..மோகம் முப்பது நாள்’ என்று சொல்லி வைத்தார்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து, அந்தப் பெண் (இப்போது பெண்மணி) மீதான ஈர்ப்பு என்பது, அவர்களுக்கிடையிலான உறவின் தன்மையைப் பொறுத்ததாக ஆகிவிடுகிறது. அன்பான உறவு நீடித்தால் ஓகே. இல்லையென்றால்.........!

அடுத்ததாக, பொருளாதாரப் பிரச்சினைகள். பணத்தேவை என்பது  இரண்டாயிரம் சம்பளத்தில் ஆரம்பித்து இரண்டு லட்சத்தைத் தாண்டினாலும் தீருவதில்லை. நாம் இது தான் இலக்கு என்று ஒரு ஸ்டேட்டஸுக்கு உயரும்போது, மற்றொரு இலக்கு வந்து நிற்கிறது. இன்று பெரும்பாலும் ஆண்-பெண் இருவரும் சம்பாதிக்கும் நிலையில், அது உண்டாக்கும் ஈகோ சார்ந்த பிரச்சினைகள் வேறு. இவை உண்டாக்கும் மன அழுத்தங்கள், பாலியல் ஈர்ப்பைக் குறைப்பது மட்டுமல்லாது விந்தணு எண்ணிக்கையையும் குறைப்பதை இன்றைய மருத்துவம் கண்டுகொண்டுள்ளது.

அடுத்ததாக, சம்பந்தி வீட்டார் தொல்லை. நமது சமூகத்தைப் பொறுத்தவரை திருமண வாழ்வு என்பது இரு மனம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமல்ல. அது இரு குடும்பங்களின் உறவு மட்டுமல்ல. அது இருவேறு வம்சங்களின் உறவு. ‘எங்க செய்முறை வேற..இப்படிச் செய்யலியா? நாங்க என்ன குறைஞ்சவங்களா?’ என்று சொந்தபந்தங்கள் கிளப்பும் பஞ்சாயத்துகளிலேயே, பாதி மனநோயாளியாக ஆக வேண்டியிருக்கும். மாமியார் பிரச்சினை போனஸ். கூடவே நாத்தனாரும் இருந்துவிட்டால், அமோகம் தான்.

குறித்துக்கொள்ளுங்கள் புதுமணத் தம்பதிகளே...ஒரு குழந்தையைப் பெற்றெடுக்காதவரை மாமியாரும் நாத்தனாரும், அந்தப் பெண்ணை இந்தக் குடும்பத்தின் அங்கத்தினராக, பையனின் மேல் உரிமையுள்ளவளாக மனதளவில் ஏற்றுக்கொள்வதே இல்லை. என்னுடைய பல நண்பர்களும், குழந்தையைப் பெற்றபிறகே தங்கள் சகோதரி(நாத்தனார்)களிடம் இருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள். (‘இவங்களுக்கு குழந்தை இல்லாட்டியும் நல்லதே’ என்று எண்ணும் நல்ல உள்ளங்களையும் நான் கண்டிருக்கிறேன்!)

இன்றைய வாழ்க்கை முறை, நம் உடலில் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விளைவுகள் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். சீக்கிரமே வயதிற்கு வருவது, கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, கருவுறாமை, கருச்சிதைவு என்று முந்தைய தலைமுறை கண்டிராத பல விஷயங்களையும், பெரும்பாலான இன்றைய தலைமுறை கண்டுகொண்டிருக்கிறது. குறிப்பாக அதிக உடல் உழைப்பற்ற, ஏ.சி.வாழ்க்கை முறையின் விளைவுகளோ இவை என்று நான் ஐயுறுகிறேன்.
ஓகே..யோசிக்கிறேன்!
எனவே தான் நவீன வாழ்க்கைமுறை உங்கள் உடலை சிதைக்கும் முன், ஆண்-பெண் ஈர்ப்பு குறையும் முன், சமூக-பொருளாதார சிந்தனைகள் உங்களை முடக்கும் முன் குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுங்கள். இந்த விஷயத்தில் எந்தவொரு தாமதத்தையும் அனுமதிக்காதீர். ‘இன்னும் விஷேசமில்லையா?’ எனும் பெரியோரின் கேள்வியை தொல்லையாக எடுத்துக்கொள்ளாதீர். அது தொல்லை அல்ல, அனுபவத்தால் விளைந்த எச்சரிக்கை.

‘ஆண்டவன் நமக்கு கொடுப்பது என்று முடிவு செய்திருந்தால், இரண்டு வருடம் கடந்தாலும் கொடுக்கத்தானே செய்வான்?’ என்று தத்துவரீதியாக நீங்கள் யோசிக்கலாம். இருந்தாலும், எளிதாக உங்களுக்குள் முடிய வேண்டிய விஷயத்தை சிக்கலாக்கி, ஆண்டவனை வேறு தொந்தரவு செய்ய வேண்டுமா என்று யோசியுங்கள்.

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட் பேறல்ல பிற.


மேலும் வாசிக்க... "தம்பதிகள், குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடலாமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

26 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, October 4, 2013

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா : திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
வழக்கமான ஹீரோயிச சினிமாக்களுக்கு மத்தியில், மாற்று முயற்சிகள் ஜெயிக்காது என்றிருந்த சூழ்நிலையில் பீட்சா, ந.கொ.ப.காணோம், சூது கவ்வும் போன்ற படங்கள் வந்து மக்களைக் கவர்ந்து ஜெயித்தன. அந்த வரிசையில் வரும் படம் என்பதால், நிறையவே எதிர்பார்ப்பு. ஆனால்....
 
ஒரு ஊர்ல.....................:
அட்டக்கத்தி நந்திதாவை லவ்வும் சுமார் மூஞ்சி குமார் விஜய் சேதுபதி, ஸ்வாதி-அஸ்வின் காதல் ஜோடி, ஒரு பிரக்னண்ட் லேடி - கணவர், ஒரு அல்லது இரு (!) கள்ளக்காதல் ஜோடி--------------இவர்கள் வாழ்வில் ஒரு நாளில் நடக்கும் சில சம்பவங்களே கதை.
 
 உரிச்சா....:
வழக்கமான மசாலாப் படங்களில் ஒரு வசதி உண்டு. அவை பார்வையாளர்களைக் குழப்புவதில்லை. ஒரே நேர்கோட்டில், பல நேரங்களில் நாம் அறிந்த பாதையிலேயே பயணம் போகும். பார்வையாளனை படத்துடன் ஒன்ற வைக்கும் வேலையில் கால்வாசியை அந்த நேர்கோட்டுப் பாணியே செய்துவிடும். 
 
திரைக்கதையை புதிய பாணியில் சொல்ல விழையும்போது, பார்வையாளனோ கதையோ தொலைந்து போகும் வாய்ப்புகள் அதிகம். அதில் ஜெயித்ததாலேயே ‘அந்த நாள் - ஆரண்ய காண்டம் - சூது கவ்வும்’ இயக்குநர்கள் கொண்டாடப்படுகிறார்கள். 
 
எத்தகைய பாணிக் கதை சொல்லலாக இருந்தாலும், ஆரம்பித்த அரைமணி நேரத்திற்குள்ளாவது ‘இன்னா மேட்டர்..எங்க போறாங்கோ’ன்னு பார்வையாளனுக்கு தெளிவாக்கி விடுவது அவசியம். படத்தில் மிஸ் ஆவதே அது தான்!
 
இண்டர்வெல் வரை படத்தின் கதை இது தான் என்றோ, படத்தின் போக்கு இதுதான் என்றோ தீர்மானிக்க முடியவில்லை. எல்லாக் கதைகளுமே பிட்டுப் பிட்டாக ஓடுகின்றன. (அந்த பிட்டும் இல்லையென்பது இன்னொரு சோகம்!).

ஒரு இயக்குநராக, ’காட்சி எழுத்தாளராக (சீன் ரைட்டர்) கோகுல், விஜய் சேதுபதி போர்சனில் மட்டும் ஜெயிக்கிறார். அஸ்வின் கதைப் பகுதி ரொம்ப ஸ்லோ. போலீஸ் ஸ்டேசன் காட்சிகளில் தெரியும் யதார்த்தத்தையும் பாராட்டலாம். ஆனாலும் சாப்பாட்டில் சில பதார்த்தங்களை மட்டும் வைத்து என்ன செய்வது? 
 
ராஜாராணி இயக்குநர் போன்றே இவரும் ஒரு நல்ல சீன் ரைட்டர். ஆனால் பூமாலையை எதிர்பார்த்துச் சென்றால் உதிரிகளாக பூக்களைக் கொடுக்கிறார்கள். காமெடி இருந்தால் போதும், முழுமை வேண்டாம் என்பதற்கு உதாரணமாக ராஜாராணியை அடுத்து இந்தப் படம்!
 
விஜய் சேதுபதி :
நடிகன்டா நீ! - என்று எல்லாருமெ பாராட்டும் அளவிற்கு பின்னி எடுக்கிறார். பீட்சாவுக்கும் சூது கவ்வும்க்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம். டைரக்டர்களின் நடிகன் என்று தைரியமாகச் சொல்லலாம். 
அவரது உடல்மொழியும், டயலாக் டெலிவரியும் அப்படியே லோ-கிளாஸ் பையனை முன்னிறுத்துகின்றன. ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை கைதட்டல்களை அள்ளுகிறார்.

நந்திதா - அஸ்வின் - ஸ்வாதி :
நந்திதா வழக்கம்போல் நல்ல நடிப்பு. புதுமுகம் அஸ்வின், செல்வராகவன் பட இரண்டாவது ஹீரோ மாதிரியே இருக்கிறார், நடிக்கிறார். ஸ்வாதிக்கு வயதானது நன்றாகவே தெரிகிறது. மாடர்ன் ட்ரெஸ் வேறு. என்னத்தச் சொல்ல!
 
அஸ்வினின் ஆபீஸ் காட்சிகளில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். படத்தைக் கெடுப்பது இவர்கள் வரும் காட்சிகள் தான்.
 
காமெடியன்ஸ் :
பசுபதி காமெடியில் கலக்குகிறார். கூடவே ரோபோ சங்கர் வேறு. அவர்கள் வரும் காட்சியில் எல்லாம் சிரிப்பு தான். இந்தப் படத்தின் (+ ராஜா ராணியின்) இன்னொரு ஆச்சரியம் நான் கடவுள் வில்லன் ராஜேந்திரனின் காமெடி தான். சில குளோஸ் அப் காட்சிகளில் பயமுறுத்தினாலும், பல நேரங்களில் சிரிக்க வைக்கிறார். அதுவும் அந்த சிம்பு பாடல், அட்டகாசம்!
 
சூரி...ம்..வடிவேலுக்கு ஃப்ரெண்ட்ஸ்/வின்னருக்குப் பிறகே ஒரு ஸ்டைல் செட் ஆனது. அதுவரை ஃபிட்னெஸ் இல்லாத உடல்மொழியுடன் சலம்பல் மட்டுமே இருந்தது. சூரிக்கும் அப்படி ஒரு பிரேக்/இயக்குநர் தேவைப்படுகிறார். அவருக்கென்று ஒரு நகைச்சுவைப்பாணி உருவாகாதவரை, நமக்கு கஷ்டம் தான். 
 
மலையாள பாஸாக வரும் பாஸ்கர், வழக்கம்போல் முதிர்ச்சியான நடிப்பைக் கொடுக்கிறார்.
 
நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- பாதிப் படம்வரை இலக்கை தெளிவாக்காமல் ஓடும் திரைக்கதை

- மிக மெதுவாகச் செல்லும் அஸ்வின், ஸ்வாதி காதல்(?) போர்சன்
 
- ஒரு கொலை நடக்கிறது. அது சிலரின் வாழ்வை எப்படிப் பாதிக்கிறது என்பது இந்தப் படத்தின் திரைக்கதை செல்லும் பாதை. ஆனால் அந்தக் கொலை, முக்கியத்துவத்துடன் காட்டப்படவில்லை. ஏதோ ஒரு சைடு சீன். இனிமேல் இதைவிடப் பெரிதாக ஏதோ நடக்கப்போகிறது என்று தோன்ற வைத்துவிட்டது. ஆனால் படத்தின் உச்ச வன்முறையே அந்தக் கொலை தான். அதை படத்தின் ஆரம்பத்திலேயே, காரணத்தோடு தெளிவாக நம் மனதில் பதிய வைத்திருக்க வேண்டும். அட்லீஸ்ட், ஒரு பிரபல நடிகரையாவது கொலை செய்யப்படுபவராக நடிக்க வைத்திருக்கலாம். கதையின் மெயின் பாயிண்ட்டில் கோட்டை விட்டு விட்டார்கள். 

- இரண்டு ஹீரோயினுமே குடும்ப குத்துவிளக்காகப் போய்விட்டது!
 
 பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- விஜய் சேதுபதி....விஜய் சேதுபதி....விஜய் சேதுபதி....விஜய் சேதுபதி....!

- நம் மனம் கவர்ந்த மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு

- வித்தியாசமான பாடல்கள். நாயே, ப்ரே பண்றேன், என் வீட்ல...சூப்பர் ஹிட் பாடல்கள்.

- என்னதான் படம் முழுக்க எல்லாருமே குடித்துக்கொண்டே இருந்தாலும், படத்தின் கருத்தாக குடியின் தீமையை கிளைமாக்ஸில் அழுத்தமாக உணர வைத்திருப்பது.

- கோகுல் + மதன் கார்க்கி வசனம். பல காட்சிகளில் புன்முறுவல் பூக்க வைக்கிறது.


- இன்றைய நிலையில், படம் எப்படி இருந்தாலும் காமெடி மட்டுமே போதும் எனும் மனோபாவம் நம் மக்களுக்கு வந்திருக்கிறது. எனவே குருட்டு லக்கில் ராஜாராணி போலவே இதுவும் ஓடித் தொலைக்கலாம்!

பார்க்கலாமா? :



விஜய் சேதுபதிக்காக வேண்டுமானால் பார்க்கலாம்!
மேலும் வாசிக்க... "இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா : திரை விமர்சனம் "
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

23 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, October 2, 2013

மானம்.....மருவாதி தான் முக்கியம்!

என் மகன் நடக்கத் தொடங்கிய புதிதில். என் மாமியார் வீட்டுக்கு கிலி பிடித்தது. பெரும்பாலான நேரங்களில் அவனது கால் விரல்கள், சுருங்கியபடியே இருந்தன. அதாவது நல்ல ஒரு பளிங்குத் தரையில், மிருதுவான பாலைவன மணல் தூசாகப் படிந்திருக்கும்போது, நடக்க நேரிட்டால், எப்படிக் கூசி கால் விரல்களைச் சுருக்குவீர்களோ, அப்படியே அவன் பெரும்பாலான நேரங்களில் வைத்திருந்தான்.

இது ஏதாவது குறைபாடோ என்று பயம் வந்துவிட்டது அவர்களுக்கு. ஆனாலும் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது வெளியூரில் இருந்த நான் ஊருக்கு அவனைப் பார்க்கப் போனேன். வீட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, மாமனார் தங்கமணியிடம் கண்ணாலேயே ஜாடை காட்டினார். உடனே தங்கமணி என் கால்களைப் பார்த்துவிட்டு முகம் மலர்ந்தார். ’என்னடா இது, கரிகாலன் கால் மாதிரி இருக்கு..இதைப் பார்த்து ஏன் சந்தோசப்படுது?’-ன்னு குழம்பிப் போய்க் கேட்டால், நானும் என் பையன் மாதிரியே கால் விரல்களை சுருக்கியபடியே உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

நமக்கு கூச்ச சுபாவம்னு தெரியும். காலுக்குமா என்று ஆச்சரியப்பட்டுப்போனேன். பிறகு மொத்தக் குடும்பமுமே பாத தரிசனம் கண்டு, முக்தி அடைந்தார்கள்!

சமீபத்தில் பையன் சின்ன மாமனார் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான். நான் மாமனார் வீட்டில் மேல் ரூமில் இருந்தேன். திடீரென மச்சினன் ஓடி வந்து ‘மாமா, காதைக் காட்டுங்க’ என்றான். ஏதாவது ரகசியம் சொல்லப் போகிறானோ என்று காதைக் காட்டினால், ”இன்னொரு காதையும் காட்டுங்க” என்றான். ‘என்னடா இது..மாமனார் வீட்டு சீதனமா கம்மல் ஏதாவது மாட்ட அளவெடுக்கானா?’-ன்னு லாபகரமா யோசிக்கும்போதே “இருக்கு..இருக்கு” என்று கத்தியபடியே சின்ன மாமனார் வீடு நோக்கி ஓடினான்.
‘ம்..இந்த காது தான் முப்பது வருசமா இருக்கே’ன்னு குழம்பிப் போய், தங்கமணியைக் கூப்பிட்டு விபரம் கேட்டேன். “அதுவாங்க..பையனுக்கு காது மடல்ல கட் ஆன மாதிரி இருந்துச்சு. அதான் ஒரு டவுட்ல ‘ஒரிஜினலை’ செக் பண்ணலாம்னு பார்த்தோம். பார்த்தா, அச்சு அசலா அதே மாதிரி கட் உங்களுக்கும். உங்களை ‘கலர்’ ஜெராக்ஸ் எடுத்த மாதிரியே இருக்கான் பாருங்க!” என்று பதில் வந்தது.

அதைக் கேட்டதும் எனக்கு செம கோபம் வந்துவிட்டது. உடனே கண்டிசனாகச் சொல்லிவிட்டேன் “இங்க பாரு புள்ளை..என்ன ஆனாலும் சரி..நம்ம பையனை ஜட்டி இல்லாம வெளிய அனுப்பிடாத! நமக்கு மானம் மருவாதி தான் முக்கியம்!”

மேலும் வாசிக்க... "மானம்.....மருவாதி தான் முக்கியம்! "
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

19 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.