Monday, October 21, 2013

டபுள் ஆக்ட்டிங்கும் டமில் சினிமாவும்-2 (நிறைவுப்பகுதி)

இரட்டை வேடப் படங்களை மக்கள் தொடந்து ரசிக்க மற்றொரு காரணம், திரைக்கதையில் புதுமைகளும் புகுத்தப்பட்டுக்கொண்டே இருந்தது தான். அதில் இன்றளவும் எவர்-கிரீனாக தனித்து நிற்பது, ரஜினியின் பில்லா. வழக்கமான ஒரு இடம் மாறுதல்களாக இல்லாமல், ஒரு ஹீரோ இறந்து விட அங்கே செல்லும் அடுத்த ஹீரோ சந்திக்கும் சவால்கள், படத்தினை பரபரப்பானதாக ஆக்கின. ரீமேக் செய்யப்பட்ட பின்பும், ஒரிஜினல் பில்லாவின் செல்வாக்கு அப்படியே நீடிக்கிறது.

அதே போன்றே கமலஹாசனும், அபூர்வ சகோதரர்கள் மூலம் இவ்வகைப் படங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். இன்றளவும் நமக்கு வியப்பை அளிக்கும் அப்பு கேரக்டர் மூலம், வழக்கமான இரட்டை வேட, பழிவாங்கல் கதையை முற்றிலும் மாறுபட்ட வடிவில் கொடுத்தார். தமிழ்சினிமாவின் முக்கியமான கமர்சியல் படங்களுள், அபூர்வ சகோதரர்களுக்கு தனியிடம் உண்டு.
ஆனால் அபூர்வ சகோதரர்கள் படம், இந்த கான்செப்ட்டில் ஒரு உச்சமாக, மற்ற யாரும் இனி இதைத் தொட பயப்படும் அளவிற்கு அமைந்தது. அதை எப்படித் தாண்டுவது என்று சிக்கல் எழுந்தது. அதற்கு ஒரு மாதம் முன்பு தான், ரஜினி வழக்கமான முரண்பாடு+நகைச்சுவை உத்தியில் ராஜாதிராஜா கொடுத்திருந்தார். வித்தியாசமாக ஏதாவது செய்தால்தான் இந்த கான்செப்ட்டை நெருங்க முடியும் என்ற நிலையில், 1990-ல் அதிசயப்பிறவி எனும் அபத்தத்தைச் செய்தார்கள். அதில் கண்ட சூடு, எல்லாரையுமே இரட்டை வேடப் படங்களை மறக்க வைத்தது. கமலுமே தனது படத்தையே வெல்ல வேண்டிய கட்டாயத்தில் நான்கு வேடத்தில் மைக்கேல் மதன காமராஜனை எடுத்தார்.

அதையடுத்து ஜெண்டில்மேன் மூலம் தமிழ் சினிமாவின் அடையாளமும் மாறிவிட, தற்காலிகமாக இரட்டை வேட படங்கள் ஒழிந்தன. (அந்த நேரத்தில் ரீ-ரிலீஸீல் எங்க வீட்டுப்பிள்ளை-ராஜாதி ராஜா போன்ற படங்கள் பட்டையைக் கிளப்பின.) அப்படி எல்லாரும் இரட்டை வேடத்தை மறந்து விட்ட நிலையில், ஒரு தெலுங்கு டப்பிங் படம் யாரும் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றது. அது நாகர்ஜூனாவின் ஹலோ பிரதர். இரட்டை வேடப் படங்களுக்கென்று அழியாத மார்க்கெட் இருப்பதை அந்தப்படம் உறுதி செய்தது. அதையடுத்து களமிறங்கியது நாட்டாமை. சூப்பர் டூப்பர் ஹிட்டாக அது அமைந்து விட, இரட்டை வேடப் படங்களுக்கு மீண்டும் விடிவு காலம் பிறந்தது.

இன்றைய கிராபிக்ஸ் டெக்னாலஜி துணையுடன், இரட்டை வேடப்பபடங்களில் முதல் துல்லியமான படமாக ஜீன்ஸ் வந்தது. கிராமங்களில் பிரசாந்த்திற்கு உண்மையில் அவர் மாதிரியே ஒரு சகோதரர் உண்டு என்று பேசிக்கொள்ளும் அளவிற்கு, அந்தப் படம் டெக்னாலஜியில் சிறந்து நின்றது. 

இயல்பாகவே இரட்டை வேடப் படங்கள் பொழுதுபோக்குத் தன்மை கொண்டவையாக உள்ளதே அதன் வெற்றிக்குக் காரணம். இந்த இரட்டைக் குண நலன்கள் ரசிகனின் ரசனைக்கு பெரும் தீனியாக அமைந்தது. நிஜ கோழையான அவன், ஒரே நேரத்தில் வீரன் - கோழையுடன் அடையாளப்படுத்திக்கொள்ளவும் முடியும். கோழையும் ஹீரோ தான் என்று சந்தோசப்பட்டுக்கொள்ளவும் முடியும். இதுவே இந்தப் படங்களின் வெற்றிக்கு, பாதி உறுதியை அளிக்கின்றன. 

ஷாம்லி நடித்த துர்காவானாலும் சரி, இன்றைய கார்த்தி நடித்த சிறுத்தையானாலும் சரி, அவை நமக்குச் சொல்வது ஒன்றே ஒன்று தான். முரண்பட்ட கதாபாத்திரங்களின் இடம் மாறல் + நகைச்சுவை + நல்ல பாடல்கள் இருந்தால், எம்.ஜி.ஆர் காலமானாலும் இன்றைய நவீன காலமானாலும், இத்தகைய படங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

அதனால் தான் ’இனி இரட்டை வேடப் படங்கள் அவ்வளவு தான்’ என சினிமாக்காரர்களே நினைக்கும்போதும், ஃபீனிக்ஸ் பறவையாக இவ்வகைப் படங்கள் மீண்டும் மீண்டும் எழுகின்றன, இனியும் எழும்!

Facebook-ல் படிக்க: https://www.facebook.com/sengovipage
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

  1. அருமையான ஆய்வு!உங்கள் சிந்தனைக்கு ஒரு சபாஷ்!!!

    ReplyDelete
  2. @Subramaniam Yogarasa

    நன்றி ஐயா..எல்லாம் பெரியவங்க ஆசீர்வாதம்.

    ReplyDelete
  3. நல்லதொரு பகிர்வு....
    வாழ்த்துக்கள் செங்கோவி...

    ReplyDelete
  4. வித்தியாசமான ரசணைப்பகிர்வு செங்கோவியாரே:)))

    ReplyDelete
  5. // தனிமரம் said...
    வித்தியாசமான ரசணைப்பகிர்வு செங்கோவியாரே:)))//

    ஆன்மீக உலாவிலும் வருகை தந்தமைக்கு நன்றி நேசரே.

    ReplyDelete
  6. கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தை அவர் நினைத்தால் கூட நெருங்க முடியாது என்பதே உண்மை...!

    இந்த இடத்தில் சின்ன டாகுடரின் அழகிய டமில் மகன் படம் வெற்றி பெற்றதை பற்றி சொல்லாததை வன்மையாக கண்டிக்குறேன் ஆமா....

    ReplyDelete
  7. கமல் நினைத்தால் எப்படி அபூர்வ சகோதரர்கள் படம் எடுக்கப்பட்டது என்று ஒரு படம் எடுக்கலாம்.... பல நல்ல படங்களை ஞாபகம் வைத்து பதிவு செய்தது அருமை... பாராட்டுக்கள்.... நன்றி....

    ReplyDelete
  8. அபூர்வ சகோதரர்கள் என் மனதில் நீங்கா இடம் பிடித்த படம்...

    ReplyDelete
  9. சாக்லேட் படத்தில் மும்தாஜ் இரட்டைவேடத்தில் நடித்ததை ஏன் எழுதவில்லை?

    ReplyDelete
  10. அண்ணா இன்னும் நிறைய தொடரும் என எதிர்பார்த்தேன் , டப்புன்னு முடிச்சிடீங்களே .. well.. as a nutshell it was interesting..

    ReplyDelete
  11. // MANO நாஞ்சில் மனோ said...
    இந்த இடத்தில் சின்ன டாகுடரின் அழகிய டமில் மகன் படம் வெற்றி பெற்றதை பற்றி சொல்லாததை வன்மையாக கண்டிக்குறேன் ஆமா....//

    அந்த படத்தைக் கெடுத்ததே அந்த இரட்டை வேடம் தானே!

    ReplyDelete

  12. // திண்டுக்கல் தனபாலன் said...
    கமல் நினைத்தால் எப்படி அபூர்வ சகோதரர்கள் படம் எடுக்கப்பட்டது என்று ஒரு படம் எடுக்கலாம்.... //

    ஆமாம்யா..சமீபத்தில் ஸ்ரீராம் அதுபற்றிக் கொஞ்சம் சொல்லியிருந்தார்.

    ReplyDelete
  13. // ஸ்கூல் பையன் said...
    அபூர்வ சகோதரர்கள் என் மனதில் நீங்கா இடம் பிடித்த படம்... //

    நம்மை குழந்தை போல் ஆக்குவதால்..

    ReplyDelete

  14. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    சாக்லேட் படத்தில் மும்தாஜ் இரட்டைவேடத்தில் நடித்ததை ஏன் எழுதவில்லை? //

    நீரு மனுசனே இல்லைய்யா!

    ReplyDelete

  15. // Rajesh kumar said...
    அண்ணா இன்னும் நிறைய தொடரும் என எதிர்பார்த்தேன் , டப்புன்னு முடிச்சிடீங்களே .. well.. as a nutshell it was interesting..//

    ஒரு பதிவாகத் தான் எழுதினேன்..பெரிதாக இருந்ததால் பிரிக்க வேன்டியதாயிற்று. ஆக்சுவலி, நான் எழுதிக்கொன்டிருப்பது 'தமிழ்சினிமா அடித்துத் துவைத்த கதை/திரைக்கதைகள்'...அடுத்து காதல்/பழிவாங்கல் வரும்.

    ReplyDelete
  16. நான் சின்ன வயசில உண்மையிலே இரண்டு பேர் இருப்பாங்கனு நெனச்சிகிட்டு இருந்தேன்,... உழவன் மகன் படம் பார்த்துவிட்டு அதில் யார் உண்மையான விஜயகாந்த் என்று எனக்கும் என் கூட்டாளிக்கும் பயங்கர வாக்குவாதமே வந்தது. பிறகு எங்கள் ஊர் விஜயகாந்த் நற்பணி மன்றத்தில் இருந்த ஒரு அண்ணனிடம் போய் கேட்டோம். அதற்கு அவர், கண்ணு வெள்ளையாயிருக்குல அந்த ஆளு டூப்ளிகேட் னு விளக்கம் கொடுத்தாரு. இன்னமும் அந்த ஆளு அப்படித்தான் நெனைச்சிகிட்டு இருக்கார்னு நினைக்கிறேன்.... :-))

    ReplyDelete

  17. இரட்டை வேடம் என்றாலே 100 சதவித வித்தியாசப்படுத்தல் தற்போதுவரை கமலிடம் மட்டுமே சாத்தியமாகிறது என நினைக்கிறேன்... அபூர்வ சகோதரர்களுக்குப்பிறகு இந்தியன் கெட்டப் என்னை வெகுவாக கவர்ந்தது... கமல் படங்களில் இரட்டை வேடம் இல்லைஎன்றாலும் குறைத்தது இரண்டு கெட்டப் பாவாவது இருக்கும்படி பார்த்துக் கொள்வார் ,தேவர் மகன் மாதிரி...

    நல்ல தொடர் பாஸ்... இன்னும் இரண்டு மூன்று பாகம் எழுதியிருக்கலாம்.

    ReplyDelete
  18. பாய்ஸ்ல இரட்டை வேடம் போட்டது பிரசாந்த. ஆனா, நீங்க ஐஸ் படம் போட்டிருக்கீங்களே! ஏன்!?

    ReplyDelete
  19. // Manimaran said...
    நான் சின்ன வயசில உண்மையிலே இரண்டு பேர் இருப்பாங்கனு நெனச்சிகிட்டு இருந்தேன்,... //

    ஹா..ஹா..நான் எங்க ஊரில் திரையைக் கட்டி படம் போடும்போது, அந்த திரைக்குள் ஆள் இருக்கா என்று பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  20. // Manimaran said...

    நல்ல தொடர் பாஸ்... இன்னும் இரண்டு மூன்று பாகம் எழுதியிருக்கலாம்.//

    ஒவ்வொரு நடிகர் பற்றியும், அதில் யார் சிறப்பாகச் செய்தது என்றும் அலசலாம்தான்..ஆனாலும் போதும்.

    ReplyDelete
  21. //ராஜி said...
    பாய்ஸ்ல இரட்டை வேடம் போட்டது பிரசாந்த. ஆனா, நீங்க ஐஸ் படம் போட்டிருக்கீங்களே! ஏன்!?//

    ஓ..அந்தப் படத்துல பிரசாந்த் வேற நடிச்சிருக்காரா?..........(அக்காகிட்டச் சிக்காம, தப்பி ஓடிடா செங்கோவி!)

    ReplyDelete
  22. இரட்டை வேடம் - வாலி படத்த விட்டுட்டீங்களே!! செம்ம மூவி அது!!

    ReplyDelete
  23. உண்மை தான் ஆவி..வாலியும் வரலாறும் இந்த கான்செப்ட்டில் முக்கியமான படங்கள் தான்.

    ReplyDelete
  24. ஜீன்சுக்கு முதல் வந்த இந்தியனை மறந்துட்டீங்க போல. உண்மைல இந்தியனை இரட்டைவேடப்படம் என்றே சொல்லித்தான் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு. அப்படி யாரும் உணர்வதில்லை பார்க்கும்போது! :-)

    ReplyDelete
  25. @ஜீ... அது இந்த கேட்டகிரியில் வராது ஜீ..

    அதெல்லாம் இரு நாயகர்கள் நடிப்பதற்குப் பதிலாக, ஒருவரே நடிப்பது.

    முத்துகூட அப்படித்தான்!

    ReplyDelete
  26. @செங்கோவி
    ஹா ஹா ..நான்லாம் சிலோன் ரேடியோ ல பாட்டு கேட்டப்போ நடிகர்கள் எல்லாரும் சிலோன்ல தான் இருக்காங்கன்னு நெனச்சிட்டு இருந்தேன் ..

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.