Friday, September 30, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_54

ருவருடன் நட்பாய் இருக்க, நண்பனாய் ஏற்றுக்கொள்ள, அவன் மனிதனாய் இருக்க வேண்டியது அவசியம். மனிதத் தரத்தில் இருந்து கீழிறங்கிய பின் மதனிடன் நட்பு பாராட்டுவதில் அர்த்தம் இல்லை என்றானது. கோபத்தில் இருக்கும்போது, அதிகம் வார்த்தை விடக்கூடாது என்பதால், அவனுக்கு சுருக்கமாக ஒரு பதிலை அனுப்பினேன் :

மதன்,
இவ்வளவு கீழ்த்தரமான விளக்கத்தை உன்கிட்டயிருந்து எதிர்பார்க்கலை...ரொம்ப வருத்தமா இருக்கு...

நீ எழுதின எழுதின எல்லாத்திலயும் நான் கேள்வி கேட்க முடியும்...அதுக்கு நீ இன்னும் கேவலமா ஏதாவது சொல்வே...எப்போ நீ இந்த அளவுக்கு இறங்கீட்டயோ, இனிமே உன்கூட பேசுறது வேஸ்ட்.

இனிமே எதைப்பற்றியும் உன்கிட்ட பேசுறதை பெரிய தவறுன்னு நினைக்கிறேன்.

-- செங்கோவி

நல்லவேளையாக நான் அனுப்பிய மெயிலில் ஜெயபால் ஐடி இல்லாததால், மதனின் பதில் ஜெயபாலிற்கு தெரியவில்லை. அதை நினைத்து கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. இதில் என்ன செய்வது என்று யோசிக்கையில் தங்கவேல் அண்ணன் ஞாபகம் வந்தார்.

அவர் தமிழ்நாட்டின் உயர்ந்த அலுவலகத்தில், முக்கியப் பொறுப்பில் இருப்பவர். நான் சென்னையில் வேலை தேடித் திரிந்த நாட்களில், எனக்கு பல உதவிகளைப் புரிந்தவர். இந்த விஷயத்தை அவரிடம் எடுத்துச் செல்வது நல்லது என்ற முடிவுக்கு வந்தேன். அவரிடம் உள்ள ஒரே பிரச்சினை சிபாரிசு என்று போனால் விரட்டி விட்டுவிடுவார்.

“உனக்கு ஏதாவது வேணும்னா கேளு..உனக்குத் தெரிஞ்சவன்..தெரிஞ்சவனுக்குத் தெரிஞ்சவன்னு இறங்கினால் முடிவே இல்லாமப் போயிடும் “ என்பது வழக்கமாக அவர் சொல்லும் டயலாக். இருந்தாலும் வேறு வழியின்றி அவரைப் பார்ப்பது என்று முடிவு செய்தேன். பாதுகாப்பு சோதனைகள், விசாரணைகளைத் தாண்டி அவரது அலுவலகத்திற்குள் நுழைந்தேன்.

ப்யூன் புதியவராய் இருந்தார். 

“யார் தம்பி நீங்க? சாரை எதுக்காகப் பார்க்கணும்?”

“அவர் தம்பி தான் நான். செங்கோவி வந்திருக்கேன்னு சொல்லுங்க. போதும். நீங்க புதுசா?”

“ஆமா. இருங்க. அவர் ***கூட பேசிக்கிட்டு இருக்கார். அவர் வெளில வரவும் சொல்றேன்”

“ஓகே” என்றபடி உட்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் *** வெளியே வந்தார். அவர் ஒரு ஆளுங்கட்சியைச் சேர்ந்த சினிமா நடிகர். ஏதோ பஞ்சாயத்துக்காக வந்திருப்பார் போல் தெரிந்தது. நான் அண்ணனின் அறைக்குள் நுழைந்தேன்.

“வாப்பா..வாப்பா. எப்படி இருக்கே?”

“நல்லா இருக்கேண்ணே.”

“குவைத் விசா பிராசசிங் எல்லாம் எப்படிப் போகுது?”

“மூணு மாசம் ஆகும்னு சொல்லியிருக்காங்க. இடையில் ஒரு சின்ன பிரச்சினை..அதான்....”

“உனக்குப் பிரச்சினையா? சொல்லு பார்ப்போம்”

சுருக்கமாக விஷயத்தைச் சொன்னேன். அவர் யோசித்தபடியே உட்கார்ந்திருந்தார்.

“அண்ணே, இது வெறும் சிபாரிசுன்னு நினைக்க வேண்டாம். ஒரு பொண்ணோட வாழ்க்கைப் பிரச்சினை. நான் சும்மா உங்ககிட்ட வருவனா?”

“இல்லைப்பா...இதுல நான் என்ன செய்யணும்?”

“மதன் இந்தியா வரும்போது, போலீஸ்மூலமா கொஞ்சம் மிரட்டலாமா? ஒரு பொண்ணை ஏமாத்திட்டு ஓடறது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை, பதில் சொல்லியே ஆகணும்னு அவனுக்கு புரிய வைக்கலாமே..ஒருவேளை அவன் தப்பை உணர்ந்துட்டான்னா, நல்லது தானே?”

“இன்னுமா அவனை நீ நம்பறே?”

“ஏதோ வேகத்துல, கோபத்துல பண்ற மாதிரி தான் எனக்குத் தோணுது. அந்தப் பொண்ணும் பாவம் இல்லையா? அவன் இல்லாம அது என்ன செய்யும்?”

“சரி, அவன் வரும்போது மிரட்டிப் பார்க்கலாம். மதுரை தானே சொன்னே?”
“ஆமா”

“ம்..மதுரைக்கு டிஎஸ்பி நம்மாளு தான். சொல்லிக்கலாம். ஆனால் அந்தப் பொண்ணு ஒரு கம்ப்ளண்ட் தரணும்.”

“கம்ப்ளைண்ட் இல்லாம பண்ண முடியாதா?”

“கம்ப்ளைண்ட் இருந்தாத் தான் நமக்கு சேஃப்ட்டி. இது மாதிரி குடும்ப விஷயத்துல பஞ்சாயத்து பண்ணப்போனா, எந்த நிமிசமும் அவங்க சேர்ந்துப்பாங்க. அப்புறம் நம்மை வம்புல மாட்டிடுவாங்க. நிறைய பட்டிருக்கோம்ப்பா”

“சரி. நான் பேசுப் பார்க்கிறேன்”

அன்று இரவே ஜமீலாவிடம் பேசினேன். சும்மா ஒரு கம்ளைண்ட் கொடுக்கலாமா என்று கேட்டுப் பார்த்தேன்.

“என்னண்ணா, நீங்களும் இப்படியே சொல்றீங்க? இங்க மாமாவும் அதைத் தான் சொல்றாங்க. ஜெயபால் அண்ணாவும் அதையே சொல்றாரு.போலிஸ்க்கு எல்லாம் போக நான் ரெடியா இல்லைண்ணா. டெய்லி வேலைக்குப் போனாத்தான் சாப்பாடுங்கிற நிலைமைல நான் இருக்கேன்..போலீஸ், கேசுன்னு அலைய என்னால முடியாது”

“சும்மா, ஒரே ஒரு கம்ப்ளைண்ட் மட்டும் கொடுத்து வைக்கலாம். தெரிஞ்ச ஆள் இருக்கு.”

“இல்லைண்ணா..வேண்டாம். அவன் எப்படியும் திரும்பி வருவான். எனக்குத் தெரியும்.”

“நான் வேணா மதன் அப்பாகிட்டப் பேசட்டுமா? அவர் நம்பர் இருக்கா?”

“அய்யோ..வேண்டாம். ஜெயபால் அண்ணன் பேசினதுக்கே ரொம்ப அசிங்கமா கேட்டாராம். என் மகனை விட அவன் ஃப்ரெண்ட்ஸ்களுக்குத் தான் ஜமீலா மேல அக்கறை அதிகமா இருக்கு. எல்லாரையும் மயக்கி வச்சிருக்காளா அந்த சாகசக்காரின்னு இன்னும் என்னென்னவோ சொல்லியிருக்கார்.”

சொல்லும்போது ஜமீலாவின் குரல் தழுதழுத்தது. எனக்கு அந்தப் பெண்ணை நினைத்து பரிதாபமாக இருந்தது. ஃபோனை வைத்தேன்.

மீலா ஃபோனை வைத்ததும் ஜெயபால் கூப்பிட்டான்.

“சொல்லுங்கண்ணா”

“என்னம்மா, போலீஸ்க்கு போலாமான்னு கேட்டேன்..வேண்டாம்னு சொன்னே. திரும்ப யோசிச்சியா?”

“அதுல யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு..அதெல்லாம் வேண்டாம். இப்போத் தான் செங்கோவியண்ணன் பேசுனாரு. அவர்கிட்டயும் அதே தான் சொன்னேன். போலீஸ்க்கு போற அளவிற்கு எனக்குத் தைரியம் இல்லைண்ணா”

“செங்கோவியா? அவனும் பேசுவானா?”

“ஆமா”
“போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுப்போம்னு சொன்னானா?”

“ஆமா”

“பார்த்தியாம்மா..எல்லாரும் அதே தான் சொல்றோம். நீ தான் கேட்க மாட்டேங்கிறே”

“வேண்டாம்ணா..கொஞ்ச நாள் விட்டுப் பிடிப்போம்”

ஜமீலாவுடன் பேசி முடித்த உடனே, ஜெயபால் மதனுக்கு மிஸ்டு கால் கொடுத்தான்.

(நாளை......தொடரும்)

டிஸ்கி : இன்று சனிக்கிழமை!
மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_54"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

118 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

விஷாலின் வெடி - திரை விமர்சனம்

அவன் இவன் படத்திற்கு அடுத்து விஷால் நடிப்பிலும் எங்கேயும் காதல் தோல்விக்குப் பின் பிரபுதேவா இயக்கத்திலும் ஆக்சன் மசாலாவாக இன்று வெளிவந்திருக்கும் படம் ‘வெடி’. இது 2008ல் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன ’சவுரியம்’ படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரிப்பில் ரீமேக்கியிருக்கிறார்கள்.
ஒளித்து மறைக்கிற அளவிற்கு கதையில் ஒன்னுமில்லை..அதனால.....

விஷாலும் பூனம் கவுரும் அண்ணன் - தங்கை. வறுமையால் சிறுவயதிலேயே மிஷனரியில் தங்கையைச் சேர்த்துவிட்டுப் பிரிகிறார் விஷால். அது புரியாமல், விஷாலை வெறுக்கிறார் பூனம். விஷால் பெரிய ஆளாகி போலீஸ் ஐ.பி.எஸ்.ஆகிறார். தூத்துக்குடி தாதா ஷாயாஜி ஷிண்டேவுடன் மோதி, அவரை ஜெயிலுக்கு அனுப்புகிறார். 

விஷால், தங்கை கல்கத்தாவில் இருப்பதை அறிந்து லீவ் போட்டு போகிறார். ஷாயாஜியும் விஷாலைப் பழி வாங்க, பூனத்தைத் தேடி கல்கத்தா வருகிறார். அப்புறம் என்னாச்சு, அண்ணன் - தங்கை சமாதானம் ஆனாங்களா, வில்லன் பழி வாங்கினாரா என்பதே கதை.

ஏதோவொரு ஊரிலிருந்து டவுனுக்கு வரும் ஹீரோ - அங்கே காமெடியன் + ஹீரோயினுடன் கொஞ்சம் சீன்ஸ் - திடீரென ஹீரோவைத் தேடி வரும் தடித்தடியான அடியாட்கள் - திடீர் பாட்ஷா ஆகி, அவர்களை துவம்சம் செய்யும் ஹீரோ - என்ன பிரச்சினை என ஒரு ஃப்ளாஷ்பேக் (இங்கே 2...தங்கச்சிக்கு ஒன்னு- வில்லனுக்கு ஒன்னு) - முடிவில் ரணகளமாகி, சுபமாகும் கிளைமாக்ஸ்!!!

-- இப்படி ஒரு திரைக்கதையுடன் 2008ல் ஆந்திராவில் ஒருபடம் வந்து வெற்றி பெற்றது ஆச்சரியம் இல்லை. ஆனால் அதன்பின் அதே சாயலில் பல படங்கள் (அதில் விஷாலின் திமிரும் ஒன்று) வந்து, நம்மை நையப்புடைத்துவிட்ட பின், அதே டெம்ப்ளேட்டில் வெடியைப் பார்க்க ‘சவுரியமாய்’ இல்லை. 
பிரபுதேவாவின் திரைக்கதையில் அவரது டச் இருக்கும். இதில் டைட்டிலில் மட்டுமே பிரபுதேவா இருக்கிறார். வழக்கமாக ஏதாவது ஒரு பாடல் காட்சியில் தலையைக் காட்டுவார், இங்கே அதுவும் மிஸ்ஸிங். எனவே ஏதோவொரு தெலுங்குப்படம் பார்த்த ஃபீலிங் தான் வருகிறதேயொழிய, பிரபுதேவா படம் என்று சொல்ல ஏதுமில்லை. 

விஷாலிற்கு பொருத்தமான கேரக்டர் தான். அவரது பாடியும் ஆக்சன் ஹீரோ வேஷத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. நடிப்பிலும் நல்ல முன்னேற்றம். முகத்தில் முன்பெல்லாம் எக்ஸ்பிரசன்ஸ் வராது. இப்போது நன்றாகவே நடிக்கின்றார். நன்றி பாலா! ஏற்கனவே சத்யம், தோரணை, மலைக்கோட்டை என ஆப்பு வாங்கியபின்னும் விஷால் இப்படியொரு விஷப்பரிட்சையில் ஏன் இறங்கினார் என்று தெரியவில்லை.

சமீரா ரெட்டி லாங் ஷாட்டில் மட்டும் இளமையாக, அழகாக இருக்கிறார். பாடல்காட்சிகளில் தாராளமும் உண்டு. எல்லா பிரபுதேவா பட ஹீரோயின் போலவே, இவரும் ஜோதிகா ஸ்டைல் எக்ஸ்பிரசன்ஸ் கொடுக்கிறார், நன்றாகவே இருக்கிறது. ஆனால் கதைக்கும் இவருக்கும் சம்பந்தம் கிடையாது. பூனம் கவுருக்கு கதையின் முக்கியப் பாத்திரம். ஹீரோயினாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர், தங்கையாகி விட்டார். சமீரா ரெட்டியை விட பளிச்சென்று இருக்கிறார். ஆனால் ஸ்டில்லில் இருக்கும் அழகு, படத்தில் நடிக்கும்போது இல்லை.
படத்தில் கொஞ்சம் ரிலீஃப், விவேக் தான். சில காட்சிகளில் நன்றாகவே சிரிக்க வைக்கிறார். அவரும் இடைவேளைக்கு மேல் காணாமல்போய்விட, அரிவாளும் ‘ஏய்’-ம் தான் மிஞ்சுகிறது.படத்தின் முக்கிய பலம், பாடல்கள் தான். எல்லாப் பாடலுமே நன்றாக இருக்கின்றன. ஆனால் நடன அமைப்பில் கோட்டை விட்டிருக்கிறார்கள். ’இச்சுக் கொடு’ பாட்டில் மட்டுமே கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். 

படத்தில் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் டாக்டராக ஒரு சீனில் வரும் ஊர்வசி. அவரது அப்பாவித்தனமான படபட பேச்சு, இப்போதும் சிரிப்பை வரவழைக்கிறது. வில்லனுடன் அவர் ஆம்புலன்சில் ஊர் சுற்றும் காட்சி நீளம் என்றாலும், ஊர்வசி கலக்குகிறார். 

படம் வழக்கமான படமாக ஆகிவிட்ட நிலையில், ஆர்.டி.ராஜசேகரின் கேமிராவைப் பற்றியும், வி.டி.விஜயனின் எடிட்டிங் பற்றியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

படத்தில் லாஜிக் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. என்ன தோணுதோ, அதைச் சொல்கிறார்கள், செய்கிறார்கள். தூத்துக்குடி தாதா, கல்கத்தாவிற்கு வருகிறார், தன் அத்தனை அடியாட்களுடன். எப்படியும் 100 பேர் இருக்கும். அத்தனை தடியர்களையும் மெயிண்டய்ன் பண்ணதிலேயே அவர் ஆண்டி ஆகியிருக்க வேண்டும். கல்கத்தாவில் நடுரோட்டில் வெட்டுக் குத்து நடந்தாலும், போலீஸோ மீடியாவோ கண்டுக்கிட்ட மாதிரியே தெரியலை. ஒருவேளை வெளியூர்க்காரங்க அடிச்சுக்கிட்டா, அந்த ஊர்ச் சட்டப்படி அரெஸ்ட் பண்ண முடியாதோ என்னவோ..

படத்தில் நம்மை ஒன்ற விடாமல் செய்வதே தெலுங்கு மசாலா வாடை தான். ஐம்பது பேர் வந்தாலும் அசராமல் அடிக்கும் ஹீரோ, யாராலும் கட்டுப்படுத்த முடியாத, நகரில் அட்டகாசம் செய்யும் வில்லன்கள் (லேடி போலீஸையே ரேப் பண்ணினாலும், நோ ஆக்சன்), பாடல்காட்சிக்காகவே வந்து போகும் ஹீரோயின் என பக்கா தெலுங்குப் படமாகவே வந்திருக்கிறது வெடி. இன்னும் கொஞ்சம் தமிழ்ப்படுத்தியிருக்கலாம்.

வெடி - ஆந்திராப் புஸ்வாணம்
மேலும் வாசிக்க... "விஷாலின் வெடி - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

103 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, September 29, 2011

ஹன்சிகாவை காதலிக்க மறுத்த பதிவர் (நானா யோசிச்சேன்)

டிஸ்கி : 5 வயசுக்கு உட்பட்டோர் தயவுசெய்து இந்தப் பதிவைத் தவிர்க்கவும்.

நெஞ்சைத் தொட்ட வரிகள்:

மஞ்சனத்தி மரத்துக் கட்டை
மைய்ய வச்சு மயக்கிப்புட்ட

நாட்டுக்கட்டை டவுனுக் கட்டை
ரெண்டும் கலந்த செம கட்டை
கையி ரெண்டும் உருட்டுக் கட்டை..

இது வேலாயுதம் படத்துல நம்ம தங்கத்தலைவி - பிரம்மன் படைச்ச கொழுக்கட்டை ஹன்சிகாவை வர்ணிச்சு வர்ற பாட்டு. கேட்டதுமே பச்சக்குன்னு ஒட்டிக்கிச்சு. அது என்னமோ தெரியலீங்க, ’அவரு நல்லவரு..ஏழைப் பங்காளி’ன்னு ஹீரோவை வர்ணிச்சு வர்ற பாட்டுக்களைக் கேட்டா, கடுப்பா இருக்கு. ஆனா ஹன்சியை வர்ணிக்கிற பாட்டைக் கேட்டா மட்டும் ஜில்னு இருக்கு...ஏன் இப்படி....

அப்புறம் தலைப்புக்கு விளக்கம்...பன்னிக்குட்டியார் இப்படித் தலைப்பு வைத்தால் ஹிட்ஸ் கொட்டும் என்று சொன்னதால் இப்படி ஒரு தலைப்பு. (ஆனா அந்த பைசா பிரயோஜனமில்லாத ஹிட்ஸை வச்சு என்ன செய்றதுன்னு அண்ணன் சொல்லாம விட்டுட்டாரு..). 

மற்றபடி ஹன்சிகாவை காதலிக்க நான் ஒருநாளும் மறுக்க மாட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பதிவர் புலம்பல் :

போன வாரம் ஒரு பிரபலப் பதிவர் ப்லாக்கைப் படிச்சுக்கிட்டிருந்தேன். பிரபலப் பதிவரா.யாரு அவருன்னு கேட்கக்கூடாது..யாரெல்லாம் எனக்கு ஓட்டு/கமெண்ட் போடறாங்களோ அவங்கள்லாம் எனக்கு பிரபலப்பதிவர்..யாரெல்லாம் உங்களுக்கு ஓட்டு/கமெண்ட் போடறாங்களோ அவங்க உங்களுக்கு பிரபலப்பதிவர்..அய்யய்யோ, பதிவுலகச் சீக்ரெட்டை உளறிட்டனே...சரி, இருக்கட்டும்...

அந்தப் பதிவு எனக்குப் பிடிச்ச டாபிக் வேற..படிச்சா, தெளிவான கருத்து, சரளனமான நடைன்னு ரொம்ப நல்லா இருந்துச்சு. ஓட்டு/கமெண்ட் போட்டு மொய்க்கு மொய் செஞ்சுடலாம்னு முடிவுபண்ணப்போ திடீர்னு ஒரு டவுட்டு..இது காப்பி பேஸ்ட்டா இருக்குமோன்னு...

என்னமோ தெரியலை, இப்பல்லாம் நல்ல பதிவுகளைப் படிச்சா அப்படித்தான் தோணுது..அதனால அந்த நல்ல பதிவோட தலைப்பை எடுத்து கூகுள்ல போட்டா, இதே பக்கத்தைத் தான் காட்டுச்சு. ஆனாலும் நமக்கு டவுட் தீரலை. திரும்ப பதிவுக்கு உள்ள இருக்கிற ஒருவரியை எடுத்து கூகுள்ல போட்டா...

ங்கொக்கமக்கா....அப்படியே வேறொரு வெப்சைட்ல வந்ததை எடுத்துப்போட்டுட்டு, தலைப்பை மட்டும் தல மாத்தியிருக்காரு. இது வழக்கமா நடக்கிறது தான். ஆனா என்னைக் கடுப்பேத்தி புலம்ப வச்ச விஷயம் என்ன தெரியுமா?

கீழே கமெண்ட்ஸ்ல பார்த்தா ‘ஆஹா..தெளிவான அலசல்..நன்றாக எழுதியிருக்கிறீர்கள்..’-ரேஞ்சுல ஏகப்பட்ட கமெண்ட்ஸ். (நானும் அப்படித்தான் கமெண்ட் போட நினைச்சேன்). அப்பக்கூட அந்தாளு வாயைத் திறந்து ‘அய்யா..இது காப்பி பேஸ்ட்..நன்றி-ன்னு அவங்க பேர் போட மறந்துட்டேன்’னு சொல்லலை. உண்மையிலேயே அங்க கமெண்ட் போட்டிருந்தவங்களைப் பார்த்து எனக்கு பரிதாபமாப் போச்சு.

ஒரு மதிப்பும் இல்லாத ஹிட்ஸை விட ஒரு மனுசனுக்கு அடிப்படை மாரல் வேல்யூஸ் ரொம்ப முக்கியம்யா. நம்மை நம்பி கமெண்ட்/ஓட்டு போடறவங்களை முட்டாள் ஆக்காதீங்க..அது ரொம்பத் தப்பு...கூச்சப்படாம வாயைத் திறந்து உண்மையைச் சொல்லுங்கய்யா..

கொழு கொழு கொழுக்கட்டை - 1 : 
உக்ரைன் நாட்டில் கொழுக்கட்டை திங்கற போட்டி வச்சிருக்காங்க. நம்மை மாதிரி யூத்துகள்லாம் போட்டில இறங்கியிருக்காங்க. அப்போ, 77 வயசு பெருசு ஒருத்தரும் நானும் கலந்துப்பேன்னு அடம்பிடிச்சு இறங்கியிருக்காரு. அந்தக் கொழுக்கட்டை உருளைக்கிழங்கை உள்ள வச்சுப் பண்ணதாம். கடைசீல எல்லாரும் ஆச்சரியப்படும்படியா பெருசு ஜெயிச்சு, முதல் பரிசை தட்டிட்டாரு. ஆனா பாவம், பரிசை கையில வாங்குன அடுத்த நிமிசமே, மயக்கமடிச்சு கீழ விழுந்து பொட்டுனு போய்ட்டாராம்.

வயசான காலத்துல எதுக்கு இந்த வேலையெல்லாம்? வயசாயிடுச்சுன்னா உருளைக்கிழங்கு, கொழுக்கட்டை மாதிரி உருண்டை அயிட்டங்களை விட்டு, விலகியிருங்கய்யா! அநியாயமா ஆசைப்பட்டு ஆட்டம் போட்டீங்கன்னா, டிக்கெட்டு தான் (இது ஒரு விழிப்புணர்வு பதிவு)

பணக்கார இ.வா:
மத்திய திட்டக்குழுன்னு ஒன்னு இருக்காம்..அது தான் இந்தியால எவ்ளோ ஏழைங்க இருக்காங்கன்னு அரசுக்கு கணக்கெடுத்து சொல்லுமாம்...ஐ.நாக்கு கணக்கு காட்ட அது யூஸ் ஆகுமாம்.. அவங்க இப்போ என்ன சொல்லியிருக்காங்கன்னா, மாசம் சாப்பாட்டுக்கு 965க்கு மேல் செலவழிக்கிறவங்க எல்லாம் ஏழைங்க கணக்குல வர மாட்டாங்கன்னு சொல்லியிருக்காங்க. அதாவது ஒருநாளைக்கு 32 ரூவாக்கு மேல சாப்பாட்டுக்கு ஆகாதாம். மதியம் மீல்ஸே 35 ரூவாக்கு மேல ஆகுதே..அப்போ மத்த நேரம் சாப்பிடறதெல்லாம்..
அதுகூடப் பரவாயில்லை..வீட்டுவாடகை + போக்குவரத்துக்கு மாசம் 49ரூவாக்கு மேல ஒருத்தன் செலவளிக்கான்னா கன்ஃபார்மா அவன் பணக்காரன் தானாம். ஃப்ளாட்ஃபார்ம்ல தங்குனாக்கூட போலீஸ்க்கு மாமூலே 100 ரூபா ஆயிடுமே..என்னய்யா கணக்கு இது..

இப்படி நம்ம எல்லாரையும் பணக்காரன்னு சொன்னா, நாம சந்தோசப்படுவோம்னு நினைச்சுட்டாங்களோ....இவங்க நம்மளை பணக்காரன் ஆக்குறாங்களா, இல்லே இளிச்சவாயன் ஆக்குறாங்களா..

நல்ல பையன் :
போன வெள்ளிக்கிழமை வீட்ல இருந்தப்போ, தங்கமணி ‘சமையல் பண்ணப்போறேன்..பையனைப் பார்த்துக்கோங்க. சோபாவை விட்டுக் கீழ இறங்க விட்றாதீங்க’ன்னு சொல்லிட்டு, என் பக்கத்துல பையனை விட்டுட்டு, கிச்சனுக்குள்ள போயிடுச்சு. 

நான் ஷோபா மேல..அது ஷோபாவா சோபாவா..சரி, எதோ ஒன்னு..அது மேல உட்கார்ந்துக்கிட்டே இன்னொரு ‘பிரபல பதிவர்’-க்கு ஓட்டும் கமெண்ட்டும் போட்டுக்கிட்டிருந்தேன். பையன் ஒரு நிமிசம் சும்மா உட்கார்ந்திருந்தான்.

அடுத்து உடனே கீழ இறங்கப்பார்த்தான். “ஏய்..சும்மா இரு. இறங்காதே”ன்னு சொன்னேன். அவன் கேட்கறமாதிரித் தெரியலை. சரி, எஃபக்ட்டைக் கூட்டுவோம்னு விஜயகாந்த் மாதிரி கண்ணை உருட்டி முழிச்சு, நாக்கைத் துருத்தி ‘இறங்குனே, பிச்சுப்புடுவேன் பிச்சு’ன்னேன்.

ம்ஹூம், பய கண்டுக்கவேயில்லை. ’என்னடா இது..நாம கோபப்பட்டது கவுசல்யா கவர்ச்சி காட்டுன மாதிரி ஆயிடுச்சே’ன்னு நினைச்சுக்கிட்டு ’சும்மா இருடா, அம்மா வந்தா அடிக்கும்’னேன். 

பய பெட்டிப்பாம்பா அடங்கிட்டான். அப்பனை மாதிரியே வந்துட்டானேன்னு நினைச்சுக்கிட்டே அந்த பிரபலப் பதிவருக்கு கமெண்ட் போட்டா..... ஷார்ட்ஸ் ஜில்லுன்னுச்சு. என்னாச்சுன்னு திரும்பிப்பார்த்தா, பிள்ளையாண்டான் சோபாவை நனைச்சு, என்னையும் நனைச்சுட்டான்.

“அய்யய்யோ”-ன்னு கத்துனேன். தங்கமணி பூரிக்கட்டையோட வந்து நின்னுக்கிட்டு “என்னாச்சு?”ன்னு கேட்டுச்சு. 

“சோபாவை(!) நனைச்சுட்டான்”ன்னு சொன்னேன்.

“அவன் அப்படி செய்ய மாட்டானே..கீழ இறங்கிடுவானே”ன்னு பூரிக்கட்டையை உருட்டிக்கிட்டே தங்கமணி சொல்லவும் நமக்கு கதி கலங்கிப் போச்சு. 

“ஆமா, அவன் இறங்கப் பார்த்தான்...நாந்தான் விடலை”ன்னு சொல்லி முடிக்கவும்

“ஏங்க இப்படி இருக்கீங்க..அவன் சின்னப்பையன்..எவ்ளோ அறிவா(!) இருக்கான்...........”ன்னு ஆரம்பிச்சு டம்டும்டமார் ஆகிடுச்சு.

என்னய்யா இது அநியாயமா இருக்கு...அவங்க பேச்சைக் கேட்டு நடந்தாலும் திட்டறாங்க..பேச்சைக் கேட்கலேன்னாலும் திட்டறாங்க..ஒரு மனுசன் என்ன தான் செய்ய..ச்சே, அடுத்த ஜென்மத்துலயாவது பேச்சுலரா பொறக்கணும்ப்பா!

பதிவர் நன்றி:
இது நடந்து ரெண்டுமூணு நாளாச்சு..சொல்லவா வேண்டாமான்னு யோசனை..இருந்தாலும் நன்றி சொல்றது என் கடமைங்கிறதால...
இந்த வாரம் நம்ம ப்லாக் 2 லட்சம் ஹிட்ஸைத் தாண்டியிருக்கு. கொஞ்சநாளா நான் எந்தத் திரட்டிலயும் என் பதிவுகளை இணைக்காட்டியும் எனக்குத் தொடர்ந்து ஆதரவு தர்ற அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

கொழு கொழு கொழுக்கட்டை - 2 :

நாம பாட்டுக்கு மேல கொழுக்கட்டை, அது இதுன்னு என்னன்னமோ சொல்லிட்டமே, ஒருவேளை பெரியவங்க படிச்சிட்டு கொதிச்சுப் போயிருப்பாங்களோ..இப்போ அவங்க மனசை குளிர வைக்கணுமே... என்ன செய்யலாம்..ஓகே, பத்மினியை இறக்கிட வேண்டியது தான் :


மேலும் வாசிக்க... "ஹன்சிகாவை காதலிக்க மறுத்த பதிவர் (நானா யோசிச்சேன்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

227 comments:

«Oldest   ‹Older     Newer›   Newest»
«Oldest ‹Older     Newer› Newest»

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, September 28, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_53


னித மனம் செயல்படும் விதம் விசித்திரமானது. எப்போது எப்படி அது திரும்பும் என்பதே புரிவதில்லை. ஏதாவதொரு சிறு காரணம் கிடைத்தாலும் அதைப் பிடித்துகொண்டு, கீழான நிலைக்கு இறங்க, மனித மனம் தயங்குவதேயில்லை.

ஒரு சொல், ஒரே ஒரு சொல்லைப் பிடித்துக்கொண்டு, வெட்டிகொண்டு வீழ்ந்த குடும்பங்களை நான் அறிவேன். அதே சொல்லும், அதன் மீதான வெறுப்பும் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டு, சண்டை என்பது வம்சப் பகையாக தொடர்வதைக் கண்டிருக்கிறேன். ஒரே ஒரு சொல் போதும், நம்மை காட்டுமிராண்டிகளாய் மாற்றிவிட என்பதே பலரின் நிலைமை. 

சொல்லில் வாழும் மனிதர்கள், சொல்லிற்காய் சாகும் மனிதர்கள் நாம்.

நம்முடைய நடவடிக்கைகள் எதற்காவது உடனடி ரியாக்சனாய் ஆகிவிட்டாலே, அதனிடம் நாம் தோற்றுவிட்டதாகவே அர்த்தம். அதுவே நம்மை வீழ்த்திவிடும். கடுமையான எதிர்கருத்தையோ, சொல்லையோ சொல்லிவிட்டால், உடனே அதே தரத்திற்கு இறங்கி சண்டையிடுபவர்களே இங்கே அதிகம். அது நம்மை தூண்டுவதற்காகவே சொல்லப்படும் சொல் என்பதுகூட நமக்கு அப்போது புரிவதில்லை.

குடும்பப் பகையின் காரணமாக ஒருவரை வெட்டிக் கொன்று விட்டு, 10 வருடங்கள் வரை ஜெயிலில் கழித்துவிட்டு, வந்தபின்னர் ‘அவன்தான் கூறுகெட்ட தனமா ஏதோ சொல்லிட்டான். அதுக்கு நானும் இப்படிப் பண்ணிட்டனே..எனக்காவது 10 வருச வாழ்க்கை தான் போச்சு. அவனுக்கு மொத்த வாழ்க்கையும் போச்சே’ என்று புலம்பிய மனிதரை நேரில் கண்டிருக்கிறேன். 

நாமும் நமது நடவடிக்கைகளும் பிறராலேயே இங்கு பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகின்றன. எப்போதும் எதற்கேனும், யாருக்கேனும் எதிர்வினையாகவே நமது செயல்பாடுகள் அமைகின்றன. நமக்குப் பிடிக்காத ஒருவன் ஒரு விஷயத்தை ஆதரித்துவிட்டால், உடனே அதனை வெறுக்கின்றோம். கூட்டம் சேர்த்து கூக்குரலிடுகின்றோம். எங்காவது அடிபடும்வரை நிதானம் என்பதை நாம் கற்றுக்கொள்வதே இல்லை. 

நம்முடைய சிந்தனையும் செயல்பாடுகளும் நம்முடைய கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டுமேயொழிய, எதற்கும் எதிர்வினையாக ஆகிவிடக்கூடாது. அவ்வாறு செய்துகொண்டே போனால், வாழ்வது நம் வாழ்வாகவும் இருக்காது, நல்ல வாழ்வாகவும் இருக்காது.

ஜெயபால் இந்த விஷயத்தில் இறங்கியபோதே எனக்கு உறுத்தியது. திருமண பந்தத்தில் வரும் பிரச்சினையில் பெண்ணின் நிலை என்பது எப்போதும் முள்மேல் விழுந்த சேலை தான். அதைக் கையாளுவதற்கான பொறுமையோ, நிதானமோ ஜெயபாலிற்கு நிச்சயம் கிடையாது.

தடால் புடால் என்று இறங்கக்கூடிய விஷயம் அல்ல இது. சமாதானமும் சமரசமும் செய்வது சாதாரண விஷயம் அல்ல. சில நேரங்களில் கோபத்தில் இருதரப்பிலும் வார்த்தைகள் வந்துவிழும். இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வது ஒருநாளும் சமரசத்தை உண்டாக்கிவிடாது.

அவ்வாறு அப்படியே சொல்லப்படும் வார்த்தைகள், அவர்களின் கோபத்தை அதிகரிக்கவே செய்யும். அவர்கள் உடனே அதற்கு எதிர்வினையாற்றுவார்கள். பலரின் சிந்தனை/செயல் எல்லாம் எதற்காவது எதிர்வினையாகவே உருவாகின்றன. 

எப்போதும் பிறரால் பாராட்டப்பட வேண்டும், மற்றவரை விட நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் கொண்ட, அதே எண்ணத்தை அடுத்தவர் மேல் திணிப்பதில் பிரியம் கொண்ட மதனுக்கு, ஜெயபாலின் மெயில் பெருத்த மனக்காயத்தை உண்டாக்கியது. அதைத் தொடர்ந்து அவன் ஜமீலா பற்றி சொல்லிய விஷயங்களும் அவனை கோபத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

தொடர்ந்து வந்த எனது/அய்யரின் மெயில்களும் கோபத்தின் உச்சிக்கே அவனைக் கொண்டு சென்றது. ஜமீலா அவனை அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்திவிட்டதாகவே நினைத்தான். உடனே எதிர்வினையாற்றத் தொடங்கினான். ஏற்கனவே மனதை தன் பிடியில் வைத்துப் பழக்கமேயில்லாத மதன், இப்போது வார்த்தைகளின் மீதும் பிடி இழந்தான்.

நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மதனின் பதில் மெயில் வந்து சேர்ந்தது. படபடப்புடன் பிரித்து படித்தேன் :

டியர் ஃப்ரெண்ட்ஸ்,

முதலில் அனைவருக்கும் நன்றி.

உங்களுக்கு என்னைக் கேள்வி கேட்க முழு உரிமையும் இருக்கிறது. நான் பண்ண ஒரே தப்பு, உங்ககிட்ட இருந்து பல உண்மைகளை மறைச்சிட்டது தான். நான் ஏன் மறைச்சேன்னா ஜமீலா பேர் கெட்டுப்போகக்கூடாதுன்னு தான். நான் யாரையும் ஏமாத்தலை.

செங்கோவி, உனக்கு ஜெனிஃபர் மேட்டர் நல்லாவே தெரியும். அவள் மோசமான பெண்ணா இருந்தும் நான் அவளைக் கட்டிக்க ரெடியாயிருந்தேன். ஏன்? ஏன்னா அவளை நான்............ நாம யாரையும் ஏமாத்தக்கூடாதுன்னு நினைக்கிறவன் நான். அதனால தான் அவளை கழட்டிவிட நான் விரும்பலை. ஆனால் செங்கோவி, உன்னால தான் அவகிட்ட இருந்து தப்பிச்சேன். அதுக்கு நன்றி. ஆனால் துரதிர்ஷ்டவசமா நான் ஜமீலாவை கல்யாணம் பண்ணப்போ நீ என் பக்கத்துல இல்லை. 

அய்யர், அன்னைக்கு நீ மட்டும் ஷாக் ஆகலை. அவ டைவர்சின்னு எனக்கும் அப்போத் தான் தெரியும். தெரிஞ்சு நானும் ஷாக் ஆகிட்டேன். இருந்தாலும் விட்டுக்கொடுக்காம நான் பேசினேன். அதை பெரிய விஷயமா நான் எடுத்துக்கலை. நான் நினைச்சேன் அவளைக் கட்டிக்கிட்டவன் தான் தப்பான ஆள்னு. ஆனால் உண்மை தலைகீழா இருந்துச்சு.

என் அப்பா அவளை எப்படில்லாம் பார்த்துக்கிட்டாரு தெரியுமா..ஆனால் அவ எங்கப்பாவை ஒருநாளும் மதிச்சதில்லை. நான் இதுக்கு மேலயும் அவளைப் பத்தி எதுவும் சொல்ல விரும்பலை. 

செங்கோவி, அம்மா இருந்தா என்ன செய்வியோ அதைப் பண்ணுன்னு நீ சொல்றதை நான் ஒத்துக்கறேன். முதல்ல அம்மா இருந்திருந்தா, இந்த மாதிரிப் பெண்ணைக் கட்டிக்க அவங்க ஒத்துக்கிட்டிருக்கவே மாட்டாங்க.

செங்கோவி, பொறுமையா இரு. அவகூட எந்த காண்டாக்ட்டும் வச்சுக்க வேண்டாம். எல்லாரும் இந்தப் பிரச்சினையை இதோட விடுங்க.

இன்னொரு முக்கியமான விஷயம்...அந்தக் குழந்தை எனக்குப் பிறந்தது இல்லை. இதை அவளே ஒத்துக்கிட்டா. அது வேற எவனுக்கோ பிறந்த குழந்தை. என்னோட குழந்தைன்னா, நான் அதுக்கு செலவுக்கு பணம் அனுப்பறது நியாயம். ஆனால் யாருக்கோ பிறந்ததுக்கு நான் ஏன் பணம் கொடுக்கணும்?

என்றும் அன்புடன்
மதன்.

எனது வாழ்க்கையின் மோசமான தருணங்களில் ஒன்றாக அது அமைந்தது. யார் வீட்டிற்கு வந்தாலும் , முகப் சுளிக்காமல் சோறாக்கி பசியாற்றிய அந்தப் பெண்ணை, எப்போதும் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைத்திடாத அந்தப் பெண்ணை இவ்வளவு மோசமாக மதன் சொல்வான் என்று கனவிலும் நாங்கள் நினைக்கவில்லை. 

மதன் எங்களைத் தவிர்த்து வேறு சில ஆஃபீஸ் நண்பர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தான். அவர்கள் நெதர்லேண்ட் போன்ற இடங்களில் இருந்தார்கள். மதனின் எண்ண ஓட்டத்தை அறிய அவர்களிடமும் நான் தொடர்பு கொண்டிருந்தேன். அவர்கள் சொன்ன பதில் ‘அவனுக்கு இங்கே யோஹன்னா என்ற பெண்ணுடன் எங்கேஜ்மெண்ட் முடிந்துவிட்டது. அவன் ஃபாரினர் ஆகும் கனவில் இருக்கின்றான். இனி அவனுக்கு ஜமீலாவோ இந்தியாவோ ஒரு பொருட்டே அல்ல’.

எனக்கு கோபம் வந்தது. அய்யர் இன்னும் குதித்தான். “எப்படிங்க அந்தப் பொண்ணைப் போய் இப்படிச் சொல்றான்? நாம ஒன்னுமே செய்ய முடியாதா? கண்ணு முன்னாடி ஒருத்தன் ஒரு பொண்ணை ஏமாத்தி குழந்தையைவும் கொடுத்திட்டு ஓடறான். நாம வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கிறதா?” என்றான்.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_53"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

84 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, September 27, 2011

உண்ணாவிரதம் : காந்தி -அன்னா ஹசாரே - மற்றும்............

மீபகாலமாக உண்ணாவிரதம் பற்றி தீவிரமான விவாதங்கள் இணையத்தில் நடந்து வருகின்றன. இதற்கான பிள்ளையார் சுழி அன்னா ஹசாரேவால் போடப்பட்டது. தொடர்ந்து கூடங்குளம் உண்ணாவிரதமும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்றிவிட, உண்ணாவிரதம் பற்றி சில அடிப்படையான கேள்விகள் மேலெழுந்து வருகின்றன. 

எனவே உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய சில அடிப்படைப் புரிதல்கள் நமக்கு அவசியம் ஆகின்றன. உண்ணாவிரதத்தை ஒரு போராட்ட வடிவாக மாற்றியவர், நமக்குக் கற்றுக்கொடுத்தவர் காந்தியடிகள் தான். 
சத்யாக்கிரகப் போராட்டத்தில் முக்கிய ஆயுதமாக உண்ணாவிரதத்தை அவர் பயன்படுத்தினார். அவரது வாழ்வில் மொத்தம் 17 முறை அவர் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். அவர் முதன்முறையாக தென்னாப்பிரிக்க சத்யாக்கிரகத்தின்போதே, உண்ணாவிரதத்தை சோதித்துப் பார்த்தார். அவரது எல்லா வழிமுறைகளும் பலமுறை அவரால் சிறு அளவில் நடத்தப்ப்ட்டு, சோதிக்கப்பட்டு பின்னரே பெரிய அளவில் நடைமுறைப்படுத்தப்படும். அந்த வகையில் அவர் அவர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சில கட்டுப்பாடுகளை உருவாக்கினார். 

அவையாவன:

- யார் நமது அன்பிற்குரியவர்களோ, அவர்களுக்கு எதிராகவே / அவர்களை நோக்கியே உண்ணாவிரதம் நடத்தப்பட வேண்டும்.

- அந்த உண்ணாவிரதத்திற்கு வலுவான, குறிப்பிட்ட குறிக்கோள் இருக்க வேண்டும்.

- ஒருவரது சொந்த நோக்கங்களுக்காக / சுய நலத்திற்காக உண்ணாவிரதம் இருக்கக்கூடாது.

- மக்களால் முடியாத ஒன்றை செய்யும்படி, அந்த உண்ணாவிரதம் கோரக்கூடாது.

அவர் இவற்றின் அடிப்படையிலேயே உண்ணாவிரதம் இருந்தார். காந்தி தன் வாழ்நாளில் ஒருமுறைகூட ஆங்கிலேய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்ததில்லை. எப்போதெல்லாம் மக்கள் அஹிம்சாக் கொள்கையில் இருந்து திசை மாறுகிறார்களோ அப்போது இருந்தார். இந்து - முஸ்லிம்கள் மதக்கலவரத்தில் இறங்கியபோது, அதனை நிறுத்தக்கோரி உண்ணாவிரதம் இருந்தார். ஆம், அவர் மக்களை நோக்கியே உண்ணாவிரதம் இருந்தார். மக்களை ஒன்றுபடுத்தவே உண்ணாவிரதம் இருந்தார். ஏன் அவர் அரசுக்கு எதிரான ஆயுதமாக உண்ணாவிரத்தை பயன்படுத்தவில்லை?
கிறிஸ்துவத்தின் அடிப்படையிலேயே காந்தி உண்ணாவிரதத்தைக் கண்டடைந்தார். கிறிஸ்துவத்தின் தலைசிறந்த விஷயம் இயேசு கிறிஸ்துவின் தியாகம் தான். மக்களுக்காக அவர் சொன்ன நற்செய்திகள், அவர் சிலுவையில் அறையப்பட்ட பின்னரே மக்களிடம் சரியான முறையில் போய்ச்சேர்ந்தது. தன்னைப் பலியிட்டே கிறிஸ்துவத்தை நிலைநாட்டினார் இயேசு நாதர்.  ’தமக்காக பாரம் சுமந்த மனிதன் ‘ எனும் சித்திரமே பல லட்சக்கணக்கான மக்களின் மனசாட்சியுடன் பேசியது. காந்தி லண்டனில் படித்தபோது கிறிஸ்துவத்தின் மேல் ஆர்வம் கொண்டிருந்தார். 

அடிப்படையில் வைணவரான காந்திக்கு விரதம் என்பது பழக்கமான விஷயம். அது கொடுக்கும் மனவலிமையும் அவருக்கு நன்றாகவே தெரியும். இந்த இரண்டையும் இணைத்தே அவர் உண்ணாவிரதப்போராட்டத்தை வடிவமைத்தார். உண்ணாவிரதம் என்பது தனக்கு மனவலிமையூட்டும் அதே நேரத்தில் தன்னைச் சார்ந்தோரின் மனச்சாட்சியுடன் பேசும் என்பதை அவர் தீர்க்கமாக நம்பினார். 

அரசுக்கு மனசாட்சி கிடையாது. அரசு என்பது எப்போதும் இறுக்கமானது. அரசின் நடவடிக்கைகள் பொருளாதாரம், அந்நிய நாடுகளுடனான உறவு போன்ற சிக்கலான காரணிகளால் தீர்மானிக்கப்படுவது. சில நேரங்களில் மக்கள் விரோத நடவடிக்கையாகவும் அரசின் செயல்பாடுகள் அமைவதுண்டு. மொத்தத்தில் அரசு ஒரு இயந்திரத்தனமான அமைப்பு. 

அதனுடன் போராடுவதற்காக உண்ணாவிரதத்தை கையில் எடுத்தால் அது ஆபத்தாகவே முடியும். காந்தி அத்தகைய ஆபத்தை தன் தொண்டர்களுக்கு வழங்க விரும்பவில்லை. அப்படியென்றால் உண்ணாவிரதத்தால் அரசை ஒன்றுமே செய்ய முடியாதா என்றால், நேரடியாக ஒன்றுமே செய்யமுடியாது என்பதே உண்மை. அதனால் மாபெரும் பயன் ஒன்று உண்டு.

ஆம், மேலே சொன்னபடி அது மக்களின் மனசாட்சியுடன் பேசும். கோரிக்கையில் நியாயம் இருந்தால், அந்தக் கோரிக்கை சமூகத்திற்கு நன்மை பயக்கும் என்று இந்தச் சமூகம் நம்பினால் மக்களை ஓரணியில் திரட்டும் வல்லமை உண்ணாவிரதத்திற்கு உண்டு. உண்ணாவிரதத்தால் முடியும் ஆகச்சிறந்த காரியம் அது மட்டுமே.
ஐரோம் ஷர்மிளா
மக்களைத் திரட்டவும், மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்பவும் அது உதவும். ஜனநாயக அரசு எப்போதும் எண்ணிக்கைக்கு பயப்படும். மக்கள் எந்தவொரு விஷயத்திற்காய் கூடினாலும், அரசு இறங்கி வரும். சமூக ஒழுங்கு கெட்டுவிடக்கூடாதென்பதாலும், ஓட்டுக்காகவுமே ஜனநாயக அரசு இறங்கிவரும்.

இந்த அடிப்படையிலேயே நாம் நமக்குத் தெரிந்து நடந்த உண்ணாவிரதங்களை பார்க்க வேண்டும். 

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் ஊழலுக்கு எதிரானது. இந்திய மக்கள் ஊழலைக் கண்டு மனம் வெறுத்த நிலையில் இருக்கிறார்கள். ஊழலே இந்தியாவின் மிகப்பெரிய எதிரி என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. குவிக்க முடியா எதிர்ப்பு சக்தியாக ஊழலின் மீதான கோபம் இந்தியாவெங்கும் விரவிக்கிடக்கிறது. அன்னா ஹசாரே செய்தது, அந்த கோபத்தை ஒருங்கிணைத்தது தான். இந்தியத் தலைநகரில் பல்லாயிரக்கணக்கானோர் கூடுவது என்பது அரசிற்கு நிச்சயம் தலைவலியான விஷயம். 

மீடியாக்களின் ஆதரவுடன் நடந்த அந்தப் போராட்டத்தை உடனே மேலும் பரவிடாமல் தடுக்க வேண்டிய கட்டாயம் அரசிற்கு வந்தது. எனவே அரசும் இறங்கி வந்தது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய நிகழ்வாக அது அமைந்தது. அன்னா ஹசாரே போன்ற வயதான பெரியவர் நினைத்தால்கூட, இந்திய அளவில் மக்களை அரசுக்கு எதிராக திருப்பிவிட முடியும் என்று அரசுக்கு உணர்த்தியதே அந்தப் போராட்டத்தின் வெற்றி. உண்ணாவிரதப் போராட்டத்தால் அவ்வளவு தான் முடியும். 

வெற்றியடையாத போராட்டங்களாக ஐரோம் ஷர்மிளாவின் போராட்டமும், திலீபனின் போராட்டமும் பலரால்குறிப்பிடப்படுகின்றன. 

ஐரோம் ஷர்மிளா என்ற மாபெரும் போராளி 25 வருடங்களாக, மணிப்பூரில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அரசு அவருக்கு வலுக்கட்டாயமாக குளுக்கோஸ் ஏற்றிவருகிறது. மணிப்பூரில் இந்திய ராணுவக் கொடுமைகளை எதிர்த்தும், இந்திய ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் போராடுகின்றார். ஆனால் மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளவே இல்லை. அதற்கான முக்கியக் காரணம் மணிப்பூர் தாண்டி, வெளியே அந்தப் போராட்டம் மக்களுக்குத் தெரியவில்லை. அதன் நியாயங்கள் இங்கே சொல்லப்படவில்லை. அந்த நியாயங்களால் பிற மாநில மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை - என்ற சுயநலச் சிந்தனையும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம் வெற்றி பெறாமைக்கு முக்கியக் காரணம். தனக்கு பலன் இல்லாத விஷயங்களுக்கு போராட மக்கள் முன்வர மாட்டார்கள் என்பதே யதார்த்தம்.

ஈழத் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஈழ வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. உண்ணாவிரதப் போராட்டத்தினால் ஆகக்கூடிய காரியம், மக்களை அந்த நோக்கத்திற்காக ஒன்றுதிரட்டுவதே. திலீபனின் தியாகம் அந்த வகையில் வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும்.

அந்த 12 நாட்களும் நல்லூர்க் கந்தசாமிக் கோயிலில் பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்றுகூட வைத்தது அந்தப் போராட்டம். புலிகளின் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக அமைந்தது திலீபனின் தியாகம். ஈழப்போராட்டம் பயங்கரவாதப் போராட்டம் அல்ல என்பதற்கு சாட்சியாக திலீபன் ஆனார்.ஆனாலும் ஏன் அந்த உயிர்த் தியாகம் காந்தி தேசத்தால் கண்டுகொள்ளப்படவில்லை என்ற கேள்வியும் நம்மிடையே எழுகிறது. 
தேசம் என்பது மக்கள் தானேயொழிய அரசு அல்ல. எப்போதும் இந்திய அரசு காந்திய அரசாக இருந்ததில்லை. சுதந்திரம் வாங்கிய நாள்முதலே ஆட்சியாளர்களுக்கு காந்தி வேண்டாத பொருளாகிப் போனார். அவர் அரசுக்குச் சொன்ன யோசனைகள் யாவும் பெரும் இம்சைகளாகவே இந்திய ஆட்சியாளர்களுக்குத் தோன்றியது. காந்தியம் வாழ்வது மக்களிடையே தானேயொழிய அரசிடம் அல்ல. 

ஒரு அரசு தன் மக்கள் ஒன்றுகூடிப் போராடினால் மட்டுமே பயப்படும். ஈழத்தில் நடந்த போராட்டம் ஈழ மக்களை ஒன்று திரட்டியும் இந்திய அரசால் கவனிக்கப்படாமல் போனதற்குக் காரணம், ஈழ மக்கள் ஒன்றுதிரளுதல் அன்னிய அரசான இந்திய அரசிற்கு ஒரு பொருட்டல்ல என்பதால் தான்.

அன்னியரான ஆங்கிலேயருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்திருந்தால், காந்தியும் அதே நிலையையே அடைந்திருப்பார். அதனாலேயே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முதல் கட்டுப்பாடாக ‘ யார் நமது அன்பிற்குரியவர்களோ, அவர்களுக்கு எதிராகவே உண்ணாவிரதம் நடத்தப்பட வேண்டும்’ என்பதை வைத்தார்.

திலீபனின் போராட்டம், தமிழர்களின் மனசாட்சியுடன் பேசியது, இன்றும் எதிர்கொள்ள முடியாத துக்கமாக அது உள்ளது. தியாகங்களின் சிறப்பே காலம் கடந்த பின்னும், வீரியம் குறையாமல் மக்களின் நினைவில் அது எழுப்பும் உரையாடல் தான். அந்த வகையில் என்றும் திலீபன் நம் மக்களுடன் பேசிக்கொண்டே தான் இருப்பார்.

இந்திய அளவிலும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றின் நோக்கம் சக மக்களின் ஆதரவைப் பெறுவதும், அவர்களையும் தன் போராட்டத்தில் பங்கெடுக்க வைப்பதாகவுமே இருக்க வேண்டும். 

கூடங்குளத்தில் நம் மக்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, நம் பிரதமர் அதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் ஐ.நா.சபை மீட்டிங்கிற்கு கிளம்பியதை நாம் கவனத்தில் கொள்வது அவசியம். மாநில அரசு இதில் தலையிட்டதற்குக் காரணம் போராட்டத்திற்குப் பெருகும் ஆதரவு தென்மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கலாம் என்ற அச்சமே. 

நம் அன்பிற்குரியவராக மன்மோகன்சிங் இல்லாத நிலையில், மன்மோகன்சிங்கின் அன்பிற்குரியவர்களாக நாமும் இல்லாத நிலையில் அவரை நோக்கி உண்ணாவிரதம் இருப்பது நேரடியாக எவ்விதப் பலனையும் தராது என்பதே யதார்த்தம். 

முத்தாய்ப்பாக எப்போதெல்லாம் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று காந்தி சொன்னார் என்றால்.....

- நம் அன்பிற்குரியவர்கள் ஏதேனும் ஒரு காரியத்தில் நம்மை ஏமாற்றிவிட்ட நிலையில், நம் ஆழ்ந்த வருத்தத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்த. 

- தன்னைச் சார்ந்த மக்கள் / தொண்டர்கள், தவறான காரியத்தில் ஏதோவொரு வேகத்தில் இறங்கிவிடும்போது, பரிகாரம் தேட / அவர்களை நல்வழிக்குத் திருப்ப.

- மக்களின் மனசாட்சியுடன் பேசுவதற்கான கடைசி ஆயுதமாக பயன்படுத்த.

- சண்டையிட்டுக் கொள்ளும் தனது இருதரப்பு மக்களை ஒன்றுபடுத்த. 

ஆம், மக்களை நோக்கி நடத்தப்படுவதே காந்திய உண்ணாவிரதம்.

தியாக தீபம் திலீபனுக்கு எம் வீர வணக்கங்கள்!

மேலும் வாசிக்க... "உண்ணாவிரதம் : காந்தி -அன்னா ஹசாரே - மற்றும்............"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

98 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, September 24, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_52

தன் எப்படியோ ஜெயபாலின் மொபைல் நம்பரைத் தேடிப் பிடித்தான். ஜெயபாலிற்கு ஃபோன் செய்து ‘ஏண்டா இப்படி மெயில் அனுப்பினே’ என்று காதால் கேட்க முடியாத அளவிற்கு திட்டினான்.

“நான் என்னடா மாப்ள செய்ய..உன் ஒய்ஃப் தான் சொல்லிச்சு. நீ விட்டுட்டு ஓடிட்டே. ஏமாதிட்டே. கஷ்டப்படுறேன்’னு! எனக்கும் பாவமா இருந்துச்சு. அதான் உனக்கு மெயில் போட்டேன்”

“ஓ..அவ இப்படி ஒவ்வொருத்தன்கிட்டயா என்னைப் பத்திச் சொல்றாளா? “

“ஆமாம் மாப்ள..நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அதுகிட்ட பேசுறாங்க. அதுவும் சொல்லுது.”
”சரி, இனிமே அவகூடப் பேசாதே. என் பெர்சனல் மேட்டர்ல தலையிடாதே. இதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்”

சொல்லிவிட்டு மதன் கடுப்புடன் ஃபோனை வைத்தான்.

டுத்த நாள் காலையில் ஜெயபால் ரத்தக்கண்ணீர் வடித்தபடி ஒரு மெயில் போட்டிருந்தான் :

ஃப்ரெண்ட்ஸ்,
நம்ம பசங்க யாராவது கெட்டுப்போனா, நமக்கு எப்படி இருக்கும்? நமக்கு பிடிச்ச பையன்னா, நாம மனசு கஷ்டப்படுவோம் இல்லையா? அப்படித்தான் மதனுக்காக ஃபீல் பண்ணி ,அந்த மெயிலை நான் போட்டேன். அவனை திருத்தணும்னு தான் நான் அப்படி மெயில் போட்டேன். ஆனா அவன் என்னைப் பத்திக் கேவலமா மெயில் போடறான். ஆனா அவன் சொன்னதெல்லாம் உண்மை தான். எனக்கு அந்தப் பொண்ணுகளைப் பிடிச்சிருந்துச்சு. அவங்களுக்கும் என்னை பிடிச்சிருந்துச்சு. ஆனால் நான் யாரையும் ஏமாத்தலை. யாருக்கும் நான் நம்பிக்கை துரோகம் செய்யலை.

என்னோட போன மெயிலை படிச்சுட்டு, மதன் எனக்கு கால் பண்ணான். என் நம்பர் யார் கொடுத்தீங்கன்னு தெரியலை. ரொம்ப மோசமா என்னைத் திட்டினான். என் ஃபேமிலியை ரொம்ப கேவலமா பேசுனான். என்னால் சாகறவரைக்கும் அதை மறக்க முடியாது. மதன் அப்படிப் பேசுவான்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை.

மதன், நீ கடைசியா சாரி கேட்டுக்கிட்டாலும் , அது உன் கேரக்டர் என்னன்னு காட்டிடுச்சு. உன் மனசுல அந்த மாதிரி எண்ணம் இருக்கப்போய்த்தானே அப்படில்லாம் பேசுன? நீ எப்படி என் ஃபேமிலி பத்தி அப்படில்லாம் சொல்லலாம்? நீ அப்படிப் பேசுனது தப்பு. 

நான் இனிமே உன் லைஃப்ல குறுக்க வர மாட்டேன். ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான். அவனுக்கு நீ ஒருநாள் பதில் சொல்லியே ஆகணும். இனிமே உன் ஒய்ஃபுக்கு சப்போர்ட்டா நான் யார்கிட்டயும் பேச மாட்டேன்.

இப்போ இல்லாட்டியும் ஒரு நாள் என்னை நீ புரிஞ்சுப்பே.

உன் முன்னாள் நண்பன்,
ஜெயபால்.

இந்தக் கலவரத்தில் சிவாவின் மெயிலுக்கு பதில் போட மறந்துபோனேன். எனவே இரண்டு வரியில் நலம் விசாரிப்புடன், என் மொபைல் நம்பரைப் போட்டு பதில் அனுப்பினேன். ஆனால் சிவா யோஹன்னாவால் மனம் வெறுத்த நிலையில், அந்த மெயிலுக்கு எந்த பதிலும் போடவில்லை.

மதன் மேல் அப்போதும் எனக்கு நம்பிக்கை இருந்தது. அவன் ஏதோ விளையாட்டாகச் செய்துகொண்டிருப்பான், நிச்சயம் சொன்னால் திருந்திவிடுவான் என்றே நம்பினேன். கல்லூரி நாட்களில் மதன் எல்லை மீறும்போதெல்லாம் நான் சுட்டிக்காட்ட வேண்டும் என்று விரும்பினான். 


நான் சொல்வதை அவனால் ஃபாலோ பண்ண முடியாவிட்டாலும், நான் தொடர்ந்து அவனை கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைத்தான். எங்களுக்குள் எவ்வித ஒளிவுமறைவும் இல்லாத நாட்கள் அவை. அவனின் மனசாட்சியாகவே என்னை வைத்திருந்தான். எனவே இப்போதும் அதே உரிமையுடன் அவனுக்கு ஒரு மெயில் அனுப்பினேன் :

அன்பு மதன்,

என்னடா ஆச்சு?..என்ன நடக்குது?...முதல்ல ஜெயபால் மெயிலை பார்த்தப்போ நான் நம்பலை..அப்புறம் உன் reply அது உண்மைதான்னு சொல்றமாதிரி இருந்துச்சு...எதுவா இருந்தாலும் நீ பண்றது தப்புடா..

லைப்ல புருஷன் பொண்டாட்டிக்கு இடையில பிரச்சினை வர்றது சகஜம்டா...அதுக்காக பிரியறதுன்னா, உலகத்துல யாருமே சந்தோசமா இருக்க முடியாது...

நான் விசாரிச்சவரைக்கும், தங்கச்சி கொச்சின்லதான் இருக்குது...சாப்பாட்டுக்கு வழியில்லாம இப்போ ஏதோ ஆபீஸ்க்கு வேலைக்கு போகுது..அதுவரைக்கும் குழந்தையை யாரோ பார்த்துக்கிருதாங்க...இதெல்லாம் நல்லாவாடா இருக்கு?..ஜமீலாவுக்காக இல்லேன்னாலும் உன் குழந்தைக்காகவாவது நீ மனசு மாறனும்..

இதைக் கேட்கிற உரிமை எனக்கு இன்னும் இருக்குன்னு நம்புறேன்..என்னைவிட உனக்கு கல்யாணம் பண்ணிவச்ச cc-ல இருக்கிற நம்ம பிரெண்ட்சுக்கு இருக்கு...நீ arranged marriage பண்ணி, இப்படி நடந்துக்கிட்டா உன்னை சும்மா விட்டிருவாங்களா?..இப்போ அந்தப் பொண்ணுக்கு யாரும் இல்லேன்னு நினைச்சுக்கிட்டு தானே இப்படி பண்றே..சொந்தக்காரங்க யாரோ சொன்னப்பவும் உன் மேலே போலீஸ் கம்ப்ளைன்ட் வராம உன் wife தாண்டா தடுத்துக்கிட்டு இருக்கு..

நம்ம அம்மா இறந்தப்போ, அப்பா வேற கல்யாணம் பண்ணிக்கலை..எதுக்கு?..தன் குழந்தைங்க நல்ல இருக்கணும்னு தானே...அப்புறம் நீ மட்டும் ஏன் இப்படி இருக்கே?..உன் குழந்தை மத்தவங்களை விட நல்லா இருக்க வேண்டாமா?..

நீயாத்தான் அந்த பொண்ணுகிட்டே propose பண்ணே..உன்னை நம்பி அந்தப் பொண்ணும் வீட்டை விட்டும் வந்திருச்சு...குழந்தையும் ஆயிருச்சு...இனிமே இப்படி பண்றது பாவம்டா..நீ இப்போ இந்தியா வராட்டியும், கொஞ்சம் பணமாவது அதுக்கு அனுப்பு...மத்ததை நீ இங்க வரும்போது நாம பேசித் தீர்த்துக்கலாம்..

நீ காலேஜ்ல என்ன தப்பு பண்ணினாலும் உனக்கு சப்போர்ட் பண்ணியிருக்கேன்..இப்பவும் நம்ம பசங்க என்கிட்டே கேட்கிறாங்க..என்னால சப்போர்ட் பண்ண முடியலை...

நீயும் உன் குடும்பமும் ஒன்னு சேரனும்கிறதுதான் எங்க எல்லாரோட ஆசையும்..

கடைசியா ஒன்னு சொல்றேன்...நீ இந்த விசயத்தில எது பண்றதாயிருந்தாலும், அம்மா இப்போ இருந்தா உனக்கு என்ன சொல்வாங்களோ அதை மட்டும் பண்ணு..It will solve everything..அம்மா சந்தோசப் படுறமாதிரி நடந்துக்கோ...

If possible, call me or give me your no.

-- செங்கோவி

எனது மெயிலைத் தொடர்ந்து அய்யரும் ஒரு மெயில் போட்டான். 

மதன்,

இந்த விஷயத்தில் தலையிட எனக்கு எந்த உரிமையும் கிடையாது. ஆனால், நமது நட்பும் அதற்கான மரியாதையும் இன்னும் தங்களிடம் இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

எங்கள் அனைவரிலும், தங்கலுடன் நீண்டகால நட்பும், தங்கள் குடும்பத்தினருடன் பரிச்சயமும் கொண்டவர் செங்கோவி என்பதை நாங்கள் அறிவொம். இந்த கடிதத்தை வேறு யார் அனுப்பியிருந்தாலும் அதை நாங்கள் spam என்று சொல்லி delete செய்திருப்போம். ஆனால் செங்கோவியிடமிருந்து வந்துள்ளதால் இது எங்கள் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அவர் சொல்வதை நாங்கள் நம்பினாலும், தங்கள் எதிர் வாதத்தை கேட்க நாங்கள் ஆவலுடன் உள்ளோம்.

இதையெல்லாம் கேட்க நீ யார்? என்று கேட்டால், என்னிடம் பதில் இல்லை. ஆனால், தங்கள் பதிவு திருமணத்தில் கையொப்பமிட்ட சாட்சி நான் என்கிற உரிமையில் கேட்கிறேன். தயவு செய்து இதற்கு ஒரு பதில் சொல்லுங்கள்.

சில மாதங்களுக்கு முன் தங்களிடமிருந்து எனக்கு வந்த மின்னஞ்சலில் தாங்கள் Spain-ல் இருப்பதாக சொன்னீர்கள். ஆனால் அந்த மின்னஞ்சலின் originating IP address தாங்கள் நார்வேயில் இருப்பதாக காட்டியது. இதை நான் யாரிடமும் சொல்லவில்லை. கூட்டி கழித்து பார்க்கும்போது, இது எல்லாம் ஒரு premeditated plan ஆக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது.

மறுபுரம், தங்கள் மனைவி, “எல்லருமாக சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டார்கள்” என்று போலீசாரிடம் குற்றபதிவு செய்தால், கையொப்பமிட்ட நானும் (accomplice in conspiracy to commit crime) சிறைச்சாலை செல்வது உறுதி.

ஆனால் எனக்கு ஞாபகத்திற்கு வருவது ஒரு விஷயம் தான். தங்கள் பதிவு திருமணத்தின்போது, பெண்ணின் விண்ணப்பத்தில், அவர் ஒரு divorcee என்பதை கண்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். அன்றிரவு நான் அதைப்பற்றி தங்களிடம் கேட்டபோது, அந்த பெண் பாலிய விவாஹ கொடுமைக்கு உட்பட்டவள், அவளது கொடுமைக்கார கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டாள் என்றும் சொன்னீர்கள். அந்த பெண்ணுக்கு மறு வாழ்வு கொடுத்த உங்களை நினைத்து மெய் சிலிர்த்தேன். அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்ட நீங்கள் இப்படிப்பட்ட காரியத்தை செய்யமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இங்ஙணம்,
உங்க அய்யர்

மதனிடம் இருந்து நல்ல பதிலை எதிர்பார்த்து, நாங்கள் காத்திருந்தோம்.

(செவ்வாய் இரவு தொடரும்)
மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_52"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, September 23, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_51

நான் ஜெயபாலை ஒருமுறை பார்த்திருக்கிறேன். மதனுடன் மதுரைக்குள் சுற்றிய போது, அவனைப் பார்த்தோம். அலட்டலான ஆசாமி என்பது பார்த்தவுடனே தெரிந்தது. ‘நீங்கள்லாம் என்னத்த படிச்சு..என்னத்த கிழிச்சு ‘ என்பதாகவே அவன் பேச்சு இருந்தது. முதல் சந்திப்பிலேயே கடுப்பைக் கிளப்பினான். 

எனவே அவன் மெயிலை என்னால் அப்படியே நம்ப முடியவில்லை. நண்பர்கள் எனக்கு தொடர்ந்து ஃபோன் செய்து, அது உண்மையா என்று கேட்க ஆரம்பித்தார்கள். நானும் எங்களது ஆஃபீஸ் நண்பர்களிடம் பேசியபோது, ‘மதனுக்கு யாரோ ஃபாரின் ஃபிகர் செட் ஆகிடுச்சு. அங்கே போய்விட்டான்’ என்பதாகவே சொன்னார்கள். என்னால் அதை நம்பவும் முடியவில்லை. 


ஜமீலா ஃபோன் நம்பர் என்னிடம் இருந்தது. ஆனால் ஜெயபால் பேச்சை நம்பி எப்படிக் கேட்பது என்று தயக்கமாக இருந்தது. மதனின் பதில் மெயிலுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.

மதனும் அனைவருக்கும் சேர்த்தே பதில் போட்டான்:

ஹலோ ஜெயபால்,

நீ ஏன் இப்படி கேவலமான நிலைமையில இருக்கிறே, தெரியுமா? ஏன்னா நீ இன்னும் உன் கேரக்டரை மாத்திக்காததால் தான்.

உண்மை என்னன்னு தெரியாம உன் ஓட்டையை ஓப்பன் பண்ணாதே. ஸ்கூல் டேஸ்ல இருந்து இப்படியே தான் பண்ணிக்கிட்டு வர்றே..என்னோட பெர்சனல் லைஃப் பத்திப் பேச நீ யார்டா? மாமா வேலையா பார்க்கறே? என்னைப் பத்திப் பேசுறயே, உன் யோக்கியதை என்னடா?

நீ ஒரு *** பொண்ணை லவ் பண்றேன்னு சொல்லிட்டு அவளை மேட்டர் முடிக்கலே? அது தெரிஞ்சு, அந்தப் பொண்ணோட வீட்ல உன்னை ஆள் வைச்சு அடிக்கலே? அதையெல்லாம் வெளில சொல்லாம பைக்ல இருந்து கீழ விழுந்துட்டதா பொய் சொன்னவன் தானே நீ?

அதைவிடு, அந்த மெட்ராஸ் ஆன்ண்டி கதை? அவ புருசனுக்குத் தெரியாம அவ வீட்டுக்கு நீ அடிக்கடி போனவன் தானே நீ? உன் தொல்லை தாங்காம அவ புருசன் அவளைக்கூட்டிக்கிட்டு, திருச்சி போனான்ல? அப்பக்கூட விடாம அங்க போயும் ஜல்சா பண்ணவன் தானடா நீ? என்னைப் பத்திப் பேச என்ன யோக்யதைடா உனக்கு இருக்கு?

என் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடியே உன்னைப்பத்தி நிறைய சொல்லியிருக்காங்க. அதை அப்போ நம்பலை. இப்போ நம்பறேன்.

இனிமேலாவது என் பெர்சனல் லைஃப்ல குறுக்கிடாம இரு. இல்லேன்னா, அதோட பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்.

-- மதன்

ஜெயபாலின் மெயிலை விட, மதனின் மெயிலே எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு வார்த்தைகூட நான் அப்படிச் செய்யவில்லை என்றோ, அதற்குரிய விளக்கங்களோ அதில் இல்லை. ’ஆம்..அப்படித்தான்’ என்பதாகவே அந்த மெயில் இருந்தது. மதன் - ஜமீலா கல்யாணத்தில் சாட்சிக் கையெழுத்துப் போட்ட அய்யருக்கும் அந்த மெயில்கள் போயிருந்தன. அதைப் பார்த்துவிட்டு, எனக்குக்கூப்பிட்டான்.

“என்ன பாஸ் இது..என்ன நடக்குது? இதெல்லாம் உண்மையா? அந்தப் பொண்ணு எவ்வளவு நல்லவங்க? அவங்க கையால நாங்க எத்தனை தடவை சாப்பிட்டிருக்கோம்? ஒருதடவை நம்மூர்ல பந்த் அன்னிக்கு சாப்பிட ஹோட்டலே இல்லாம தவிச்சப்போ, அந்தப் பொண்ணு தான் வீட்டுக்கு வரச்சொல்லுங்கன்னு மதன்கிட்ட சொல்லி, 20 பேருக்கு மொத்தமா சமைச்சுப்போட்டுச்சு. அதைப் போய்...என்னால நம்பவே முடியலை..நீங்க என்னன்னு கேளுங்க பாஸ்..அவர் உங்ககிட்ட தான் ஒழுங்கா பேசுவார்..நானும் மெயில் அனுப்புறேன்..நீங்க முதல்ல கேளுங்க” என்றான்.

அதற்கு முன் ஜமீலாவிடம் பேசுவது நல்லது என்று தோன்றியது. ஜமீலாவிற்குக் கால் செய்தேன்.

மறுமுனையில் ஃபோன் எடுத்ததும் எனக்குக்கேட்டது குழந்தையின் அழுகை தான். “அண்ணா, பத்து நிமிசம் கழிச்சு கூப்பிடறீங்களா? கம்பெனில இருந்து இப்போத்தான் வந்தேன் “ என்றாள்.

“சரி “ என்று சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தேன். பத்து நிமிடத்தில் அவளே கூப்பிட்டாள்.

“சொல்லுங்கண்ண்ணா..”

“இல்லே, சும்மா தான் கூப்பிட்டேன்..” என்று இழுத்தேன்.

“அப்புறம் உங்க ஃப்ரெண்ட் மதன் எப்படி இருக்கார்?”

“என்ன இப்படிக் கேட்கிறீங்க? மதன் இப்போ எங்கே?”

“யாருக்குத் தெரியும்ணா?”

“இன்னிக்கு ஒரு மெயில் வேற வந்திருந்துச்சு, ஜெயபால்னு ஒருத்தர்கிட்டேயிருந்து”

“ஜெயபால் அண்ணனா..சொன்னார், மெயில் அனுப்பிக் கேட்கப்போறேன்னு”

“என்ன ஆச்சு?”

“மதன் மாதிரி ஆளை நம்பி வந்தா, என்ன ஆகும்? நான் பண்ண தப்புக்கு நான் அனுபவிக்கணும் இல்லையா?”

“என்ன இப்படில்லாம் பேசறீங்க..அவன் அப்படில்லாம் போக மாட்டான். நான் பேசறேன். வேலைக்கா போறீங்க?”

“ஆமாண்ணா. இப்போத் தான் ரெண்டு நாளா. இங்க என் மாமா தான் சப்போர்ட்டா இருந்தார். அவரும் இப்போ இங்கே வர்றதில்லை. மூணு லட்சம் காசை ஏமாதிட்டமாம்..என்னென்னவோ பேசறாங்க..நடக்கட்டும்னு இருக்கேன்”

“மூணு லட்சமா?”

“ம்..மதன் விசா செலவுக்கு வேணும்னு கேட்டான். வாங்கிக்கொடுத்தேன். ஓடிப்போய்ட்டான். இப்போ அதை நாந்தானே அடைக்கணும்”

“அவன் நம்பர் ஏதாவது இருக்கா?”

“எங்க இருக்கான்னே தெரியலையே..”

“இன்னிக்கு மெயில் போட்டிருக்கான். நான் கேட்கறேன் அவன்கிட்ட. அவன் எப்படில்லாம் உங்ககிட்ட பாசமா இருந்தான்னு எனக்குத் தெரியும். அவன் அப்படில்லாம் விட்டுட்டுப் போக மாட்டான். எங்க போனாலும் வந்திடுவான். அவன் எப்பவும் இப்படித்தான்...ஆனா நல்லவன், வந்திடுவான்”

ஜமீலா அழ ஆரம்பித்தாள். “வருவானா?”

“நிச்சயமா..நாங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஷாக் ஆகித்தான் இருக்கோம்..நாங்க பேசறோம்”

“அண்ணா, வெளில தான் நான் அப்படிப் பேசறேண்ணா..எனக்கு உண்மையில் பயம்மா இருக்குண்ணா..இங்க எல்லாரும் ஒரு மாதிரியாப் பார்க்காங்க..மதன் வந்திருவானா? எப்படியாவது அவனை என்கூட பேசச்சொல்லுங்கண்ணா. நான் சொன்னா அவன் கேட்பான். குழந்தையை விட்டுட்டு ஒரு ஆட்டோமொபைல் ஷாப்ல வேலைக்குப் போறேன். பகல்ல குழந்தையை ஹவுஸ் ஓனர் தான் பார்த்துக்கறாங்க. என்னால நிம்மதியா வேலையும் பார்க்கமுடியலை..கொஞ்சம் நல்லாப் பேசுனா, உடனே தப்பா நினைச்சுக்கிட்டு என்னென்னவோ சாடைமாடையா பேசறாங்க..நல்லாப் பேசலைன்னா ஒழுங்கா வேலை செய்யலைன்னு சொல்றாங்க. வேலைக்குப் போகலைன்னா சாப்பாட்டுக்கு வழியில்லை..காலைல குழந்தையை அமுத்திட்டுப் போனா, திரும்ப நைட்டு தான் வர்றேன். அதனால சிலநேரம்..........”

இருவரும் அழுதோம்.

(நாளை தொடரும்)
மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_51"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

36 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

எங்கேயும் எப்போதும் - சினிமா - ஒரு பார்வை

மிழ்சினிமாவில் தற்போதைய ஹாட் டாபிக்காக ஆகியிருப்பது எங்கேயும் எப்போதும் படத்தின் வெற்றி தான். ஒரு நல்ல படைப்பு கொண்டாடப்படும் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. இந்தப் படம் அடிப்படையில் விபத்து பற்றிய விழிப்புணர்வுப் படமாக இருப்பினும், தற்போது டிவிடி பார்த்து மட்டுமே ‘நல்ல’ படம் கொடுக்கும் படைப்பாளிகளுக்கும் விழிப்புணர்வு கொடுக்கும் படமாக இது வந்துள்ளது.
எங்கேயும், எப்போதும் நம்மிடையே கதைகள் இருந்துகொண்டேயிருக்கின்றன. அதைப் பார்க்கத் தேவையெல்லாம் நம் சமூகம் பற்றிய அடிப்படைப் புரிதலும், நல்ல சினிமா ரசனையுமே. இதற்கு முன் நல்ல படங்களாகக் கொண்டாடப்பட்ட சேது, பருத்துவீரன், சுப்ரமண்யபுரம் வரிசையில் இந்தப் படமும் சேர்வதற்குக் காரணம், நம்மிடம் இருந்தே நமக்கான கதையை இயக்குநர் சரவணன் உருவாக்கியிருப்பது தான்.

ஒவ்வொரு காட்சியிலும் யதார்த்தம் பளிச்சிடுகிறது. சென்னைக்கு புதிதாக வரும் பெண்ணின் சந்தேகக் கண்ணோட்டத்தில் ஆரம்பித்து மெக்கானிகல் லேத்தில் வேலை பார்ப்போரின் பேச்சுவழக்கு, கம்யூனிஸ்ட்களின் பொதுக்கூட்டம் என இந்தப் படத்தில் காட்டப்படும் அனைத்துக்காட்சிகளும் இது சினிமா அல்ல, வாழ்க்கை என்ற எண்ணத்தை நமக்குள் எளிதில் ஏற்படுத்திவிடுகின்றன.

நான்கு உலகப்பட டிவிடிக்களைப் பார்த்து காட்சிகளை சுட்டுவிட்டு, மிகச் சிறந்த படைப்பாளி என்று பெயர் எடுப்பவர்களும், திருட்டைச் சுட்டிக்காட்டினால் இன்ஸ்பிரேஷன் என்று பம்முகிறவர்களும் பார்க்க வேண்டிய படம் எங்கேயும் எப்போதும்.
பேய் வேகத்தில் பறக்கும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யாத ஆட்கள் இருந்துவிட முடியாது. அந்த ஆம்னி பஸ்கள் விபத்துக்குள்ளாவதை செய்தியாக பார்க்காதவர்களும்/படிக்காதவர்களும் இல்லை. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த, நமக்கு மிகவும் சலிப்பைத் தரக்கூடிய அட்வைஸான ‘அதி வேகம் ஆபத்து’ என்ற செய்தியை திரைப்படமாக்கவே பெரும் துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சலை சரவணனுக்குத் தந்திருப்பது நீட்டான திரைக்கதை.

சமீபத்தில் வந்தான் வென்றான் படத்தின் காதல் காட்சிகளைப் பார்த்தபோது, பெரும் சலிப்பே வந்தது. அடுத்து வரும் காதல் காட்சிகள் என்ன, வசனம் என்ன என்பதை எளிதில் யூகிக்க முடிந்தது. தமிழ்சினிமா காதலை எல்லா விதத்திலும் காட்டி ஓய்ந்துபோய்விட்டதோ, இனி வித்தியாசமாய்க் காட்ட ஏதுமில்லையா என்ற கேள்வியும் எழுந்தது. அந்தக் கேள்விக்கு ஒன்றல்ல இரண்டு பதில்களை இந்தப் படம் சொல்லியுள்ளது.

சென்னை வரும் அப்பாவிப் பெண்ணான அனன்யாவிற்கு வரும் காதல் - திருச்சியில் வாழும் அதிரடிப் பெண்ணான அஞ்சலிக்கு வரும் காதல் என இரண்டு அழகான காதல்கள், பார்ப்போர் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் காட்டப்படுகின்றன. இதில் நம்மை மிகவும் ஆச்சரியப்படுத்தும் விஷயம், வழக்கமான காதல் வசனங்கள் ஒன்றுகூட இதில் இல்லை.  ‘உனக்காக உயிரைக் கொடுப்பேன்...நீயின்றி நானில்லை...என்னைத் தேடினேன், உனக்குள் கண்டுகொண்டேன்’ போன்ற அச்சுப்பிச்சு டயலாக்களுக்கு இங்கே இடம் இல்லை. அவ்வளவு ஏன், இந்தப் படத்தில் காதல் வசனங்களே இல்லை எனலாம். ஆனால் காதல் மட்டும் வலுவாக இருக்கிறது.
இந்தப் படத்தின் பலமே அது தான். திரைப்படம் ஒரு காட்சி ஊடகம் என்பதை சரியாகப் புரிந்துகொண்டு, அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை இது. வசனங்களை நாடாமல், கேரக்டர்களின் அசைவுகளை மட்டுமே வைத்து, காதல் இங்கே சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இந்தப் படத்தை கொஞ்சமும் போரடிக்காமல் பார்த்துக்கொள்வது வசனங்கள் தான். மெல்லிய நகைச்சுவை, எதிர்பாராமல் சரக்கென்று திரும்பும் டயலாக்ஸ், அது கொடுக்கும் ஆச்சரியம் என பல நல்ல விஷயங்களை இந்தப் படம் உள்ளடக்கியுள்ளது.

அஞ்சலிக்கு அங்காடித் தெரு வரிசையில் இன்னொரு மைல்கல் இந்தப் படம். பேசும் கண்கள், தெனாவட்டான பாவனை, பட் பட்டென்று வந்து விழும் வார்த்தைகள் என கொஞ்சமும் சினிமாத்தனமில்லாத ஹீரோயின் கேரக்டர். சமீபகாலமாக கருங்காலி, மங்காத்தா என தப்பான படம்/கேரக்டரில் வீணாக்கப்பட்ட அஞ்சலியின் திறமை, இதில் முழுதும் வெளிப்படுகிறது. அங்காடித் தெரு பார்த்தபோது, ‘இந்தப் பெண்ணிற்கு இந்த ஒரு படமே போதும், அவர் பெயர் சொல்ல’ என்று தோன்றியது. மீண்டும் அதே உணர்வு இந்தப் படத்தைப் பார்க்கும்போதும் வருகிறது. இந்தப் படத்தில் சரியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறார் இந்த நல்ல நடிகை.
முதல் காட்சியிலேயே இரு பேருந்துகளும் விபத்துக்குள்ளாவதை தெளிவாகக் காட்டியதால், அடிமனதில் ஒரு பதைபதைப்பு இருந்துகொண்டாயிருக்கிறது. ஒரு விபத்தில் பலியாவது உயிர்கள் மட்டுமல்ல, பல கனவுகளும் ஆசைகளும் தான். ஒரு உயிரின் இழப்பு பல உயிர்களின் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடுகின்றது. இரு பேருந்துகளிலும் வரும் பயணிகளின் வாழ்க்கை படத்திற்குள் குறும்படமாக காட்டப்படுகிறது. 

அந்த கேரக்டரை நாம் உள்வாங்கிய நொடியில், விபத்து நடக்கும் காலத்திற்கு திரைக்கதை வந்து சிதைந்த கனவைக் காட்டுகிறது. மீண்டும் ஃப்ளாஷ்பேக் போய் அடுத்த கனவு, அடுத்த உயிர் என இயக்குநர் சரவணன், தான் ஒரு முக்கியமான படைப்பாளி என்று இந்த ஒரு படத்திலேயே நிரூபித்துள்ளார். வழக்கமாக இந்த மாதிரி விழிப்புணர்சுப் படங்களில் மெசேஜ் கடைசியிலேயே சொல்லப்படும். நாம் எழுந்து ஓடவும் அது வசதியாக இருக்கும். ஆனால் இதில் அந்த உத்தியை மாற்றி, நம் மனதில் அந்த மெசேஜ் பதியும் வண்ணம் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நல்ல கதையை படமாக்க முன்வந்த ஏ.ஆர்.முருகதாஸ் -ஃபாக்ஸ் நிறுவனத்திற்கு நிச்சயம் நாம் நன்றி சொல்ல வேண்டும். 

கந்தசாமி படத்தின் தோல்விக்கும் மிஷ்கின் ‘அவரா யோசிச்சு’ எடுத்த அபத்தமான நந்தலாலாவின் தோல்விக்கும் பதிவர்களின் விமர்சனங்கள் முக்கியக் காரணம் என்று சம்பந்தப்பட்டோரால் குற்றம் சாட்டப்பட்டது. எங்கேயும் எப்போதும் படத்திற்கு நம் சக பதிவர்கள் கொடுத்துள்ள ஆதரவையும், உருவாக்கியுள்ள நல்ல மவுத் டாக்கையும் பார்த்தாவது, பதிவுலகம் நல்ல படங்களை ஒருபோதும் விலக்காது என்பதை நம் சினிமா நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

டிஸ்கி : இந்தப் படம் குவைத்தில் ரிலீஸ் ஆகவில்லை. நெட்டில் தரவிறக்கியே பார்த்தேன். காசு கொடுத்து பார்க்காதவருக்கு ஒரு படத்தை விமர்சனம் செய்ய உரிமையில்லை என்று நான் நம்புவதால்............இது திரை விமர்சனம் அல்ல! நல்ல படத்தைப் பற்றி என் வலைப்பூ வாசகர்களுக்கான ஒரு அறிமுகமே இந்தப் பதிவு.

மேலும் வாசிக்க... "எங்கேயும் எப்போதும் - சினிமா - ஒரு பார்வை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

92 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, September 21, 2011

கோடீஸ்வரன் ஆகணுமா...அப்போ குளிங்க! (நானா யோசிச்சேன்)

டிஸ்கி : தயவுசெய்து பெண்கள் இந்தப் பதிவைத் தவிர்க்கவும். 

நெஞ்சைத் தொட்ட வரிகள் :
இச்சு இச்சு இச்சு
இச்சுக் கொடு

வச்சு வச்சு வச்சு
வச்சுக் கொடு

நச்சு நச்சு நச்சு
நச்சுக் கொடு

ரைட்டா?
ரைட்டு!

சமீபத்தில் எனக்குப் பிடிச்ச பாட்டாக வந்திருப்பது வெடி படத்தில் வரும் இந்தப் பாட்டு தான். விஜய் ஆண்டனியும் சங்கீதா ராஜேஸ்வரனும் கலக்கலாகப் பாடியிருக்காங்க. கரிகாலன் காலப் போல பாடுன பொண்ணு தான் இதையும் பாடி இருக்கு. செமயான வாய்ஸ். இந்தப் பாட்டோட சரணம் (பார்றா!), இளையராஜா பாட்டை ஞாபகப் படுத்துற மாதிரி இருக்கு. அடிக்கடி நான் முணுமுணுக்கிற பாட்டாவும் ஆயிடுச்சு. பாட்டை டவுன்லோடு செய்ய இங்கே போங்க..ரைட்டா? ரைட்டு.
பதிவர் அறிவிப்பு :
மக்கா, இனிமேல் சனி-ஞாயிறு இணையப் பக்கம் வருவதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன். ஆனா பதிவு வழக்கம்போல் வரும். புரியலியோ..அதாவதுண்ணே, வந்து பதிவைப் போட்டுட்டு ஓடிடுவேன். கமெண்ட் எதுக்கும் பதில் போட இயலாது. ரொம்ப முக்கியமான கமெண்ட்டா இருந்தா, திங்கட்கிழமை பதில் போடுவேன். 

மத்தவங்க ப்லாக்குக்கும் சனி-ஞாயிறு வர மாட்டேன். ஓட்டோ, கமெண்ட்டோ போட மாட்டேன். அதனால மொய்க்கு மொய் எதிர்பார்த்து யாரும் எனக்கு சனி-ஞாயிறு ஓட்டு/கமெண்ட் போட்டா, அது வேஸ்ட் தான். அதெல்லாம் மொய்க் கணக்குல வராது. ஜாக்ரதை! 

ஏற்கனவே தமிழ்மணம் பத்தி ஒரு அறிவிப்பு கொடுத்திட்டு இன்னிக்கு வரைக்கும் மெயில்லயும் சாட்லயும் விளக்கம் சொல்லிக்கிட்டே இருக்கேன். அதனால ஏன் இந்த முடிவுன்னு இப்பவே சொல்லிடறேன்யா..

இண்ட்லி, தமிழ்மணத்தை விட என் குடும்பத்தார் மனம் தான் பெருசுன்னு நினைக்கறதால தான் இந்த முடிவு. ரைட்டா? ரைட்டு!

அணுஉலைக்கு உலை :

கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை நிறுத்திவைக்கக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். எனவே உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது. இன்று போராட்டக்குழுவினரை நேரில் சந்தித்துப்பேசியபின், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் தீவிரம் உணர்ந்து, உடனடியாக செயலாற்றிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

எருமை மாட்டையுமா?
நம்ம ஆளுக அட்டகாசத்துக்கு அளவேயில்லாமப் போயிக்கிட்டிருக்கு. நேத்து விழுப்புரம் மாவட்டத்துல ஒரு வதந்தி பரவியிருக்கு. அங்க சின்ன சேலம் பக்கத்துல ஒரு எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்திடுச்சாம்(!). எருமை எமனோட வாகனம். அதனால ஆண் குழந்தைகளுக்கு ஆபத்துன்னு எவனோ கிளப்பிவிட, எல்லாரும் வீட்டு முன்னாடி கற்பூரம் பொருத்தி, தேங்காபழம் உடைச்சு சிறப்பு பூஜை பண்ணாங்களாம்..என்ன கொடுமைய்யா இது? 
எருமை மாட்டுக்கு எப்படிய்யா குழந்தை பிறக்கும்..அட, அப்படியே பிறந்தாலும் அந்தக் குழந்தையோட அப்பனுக்கு ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டாமா? அந்த மனுசன் எப்பேர்ப்பட்ட சாதனை பண்ணியிருக்காரு..

ஒருவேளை அவரு ஷகீலா ரசிகரா இருப்பாரோ? அப்படித் தான் இருக்கணும்..அவரை நினைச்சு நம்மளை மாதிரி ஷகீ ரசிகர்கள்லாம் பெருமைப்பட்டுக்கலாம். ஆனாலும் இனிமே யாரும் இப்படிப் பண்ணாதீங்கய்யா..என்ன இருந்தாலும் வாயில்லா ஜீவனை வதைக்கிறது பாவம் இல்லையா? 

ஹன்சி வேஷ்டி:
போனவாரம் ஒரு மெயில் வந்துச்சு. நம்ம ஹன்சி ரசிகர் மன்றக் கண்மணி ஒருத்தர் அஞ்சு வீடியோ அனுப்பியிருந்தார். கூடவே ‘அண்ணே, இதுல ஹன்சிகா ஃபிலிம்ஃபேர் ஃபன்க்சன்ல ஆடுன வீடியோஸ் இருக்கு. இதை நானா யோசிச்சேன்ல போடுங்க’ன்னு மெயில்ல எழுதியிருந்தார். நான் பொதுவா வீடியோவை பதிவுல போடறதில்லை.(ஒன்லி வாட்ச்சிங்..நோ ஷேரிங்)..இங்க வீடியோ ஓப்பன் ஆக ரொம்ப லேட் ஆகும். அதனால வேண்டாம்னு போன வாரம் போடலை.  
அதுக்கு அவர் டென்சன் ஆயிட்டாரு..”என்ன பாஸ், உங்களை எவ்வளவு நம்பினேன்..இப்படிப் பண்ணலாமா நீங்க. அப்புறம் மன்றத் தலைவரை மாத்த வேண்டியிருக்கும்”னு மிரட்டல் வேற. அப்புறம்தான் அவரு உண்மையான ஹன்சி வெறியர்னு புரிஞ்சுக்கிட்டேன். எதுக்கு வம்பு, அதுல ஒரு வீடியோவை இங்கே போடறேன். ஹன்சி வேஷ்டி சட்டையோட செம ஆட்டம் ஸ்டேஜ்ல ஆடியிருக்கு. இதுல பெரிய விஷயம் என்னன்னா..அஞ்சு நிமிசத்துக்கு மேல ஆடியும் ஹன்சி டயர்டு ஆகவேயில்லை. நல்ல எக்ஸ்பிரியன்ஸ் போல. பொதுவா ஸ்டேஜ்ல ஆட ஆரம்பிக்கிறவங்க முதல்ல நல்லாத்தான் இருப்பாங்க..ஆனா பாட்டு முடியும்போது மேல சொன்ன எருமை மாடு நிலைமைக்கு போயிடுவாங்க..ஆனா ஹன்சி..சான்ஸே இல்லை..நம்ம ஹன்சின்னா ஹன்சி தான்ணே!


மத்த வீடியோஸ் பார்க்கவும், அவர் யாருன்னு தெரிஞ்சிக்கவும் யூடியூப்புக்கு போங்க!

நான் ரெடி..நீங்க ரெடியா:
முதல்ல ஒரு கிசுகிசு : அந்த நடிகை ...அதாங்க க.கா நடிகை..அய்யய்யோ, சண்டாளங்க கக்கா நடிகைன்னுல்ல வாசிக்காங்க..புள்ளி வச்சிருக்கேன் பாருங்கய்யா..க.கா..எதுக்கு வம்பு..பேரை சொல்லிடுவோம்...அதான்யா கமலா காமேஷ் நடிகை..அதோட குளியல் வீடியோ கொஞ்ச வருசம் முன்ன ரிலீஸ் ஆனது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.நானே க.காவை பார்த்தேங்கிறப்போ, நீங்க பார்த்திருக்க மாட்டீங்களா..

அந்த வீடியோ எங்க வச்சு எடுத்தாங்கன்னா ஹைதரபாத்ல இருக்கிற ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல. அது பார்த்த நமக்குத் தெரியாட்டியும், குளிச்ச அம்மணிக்கு தெரியாமலா போயிடும்.வீடியோவைப் பார்த்த உடனே நடிகையும் நடிகையோட அம்மாவும் ஒரு பெரிய்ய்ய அரசியல்வாதி துணையோட ஹோட்டலை மிரட்டுனாங்க, கோர்ட்டுக்குப் போய் ஹோட்டலையே மூட வச்சிருவோம்னு. அவங்களும் பயந்துக்கிட்டு ‘ஏதோ எங்களால முடிஞ்சதை தாரோம் அம்மணி..இதையும் ஒரு ஷூட்டிங்கா நினைச்சு மறந்திடுங்க’ன்னு கெஞ்சினாங்க. இவங்களுக்கும் அந்த டீலிங் பிடிச்சிருந்துச்சு. ஓகேன்னு கோடிக்கணக்குல நஷ்ட ஈடு வாங்கிட்டாங்க...அடி ஆத்தி...குளிச்சதுக்கு கோடி ரூவாயா..குளிச்சா இப்படில்ல குளிக்கணும்.
இந்த கிசுகிசுவை பல வருசம் முன்ன ஒரு பத்திரிக்கைல படிச்சேன். அன்னிக்கே முடிவு பண்ணேன், நாமும் இதே மெத்தட ஃபாலோ பண்ணி கோடீஸ்வரன் ஆயிடலாம்னு. அதில இருந்து ஆஃபீஸ் விஷயமா வெளியூர்/வெளிநாடு டூர் போனா, ‘எடுத்துக்கோங்கடா’ன்னு நானும் துணி..ஞ்சு குளிக்கேன்.குளிக்கேன், குளிச்சுக்கிட்டே இருக்கேன். அஹமதாபாத், கொச்சின், சென்னை, சிஙப்பூர்னு பெரிய பெரிய ஊர்ல, பெரிய பெரிய ஹோட்டலாப் பார்த்துத் தங்கி (கம்பெனிக் காசுல தான்) குளிக்கிறேன்..ஆனா ஒரு பயலும் நம்மளை வீடியோ எடுக்க மாட்டேங்கிறானே..

நம்மளையும் எவனாவது வீடியோ எடுத்துப் போடுவான், நம்மளும் அவனை மிரட்டி நாலுகோடி வாங்கி செட்டி ஆகிடுவோம்னு பார்த்தா, யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்களே..நானும் ஒவ்வொரு கில்மா வெப்சைட்டாப் போய் நம்ம குளியல் வீடியோ ரிலீஸ் ஆகுதா, ஆகுதான்னு பார்த்துக்கிட்டெ இருக்கேன்..ம்ஹூம்...ஏன் இப்படி...ஒருவேளை கேமராக்கு ஆப்போசிட் டைரக்சன்ல நின்னு குளிச்சிட்டமோ?

சீக்கிரம் என் வீடியோவை ரிலீஸ் பண்ணுங்கப்பா..டெய்லி ஆஃபீசுக்குப் போக கஷ்டமா இருக்குல்ல....!

மேலும் வாசிக்க... "கோடீஸ்வரன் ஆகணுமா...அப்போ குளிங்க! (நானா யோசிச்சேன்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

180 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.