Friday, September 2, 2011

பணக்காரர் ஆக பாபிலோன் சொன்ன 7 டிப்ஸ்!

டிஸ்கி : அது நடிகை பாபிலோனா அல்ல, பாபிலோன் நாடு..நன்றாகப் படிக்கவும்.

சிறுவயதில் பள்ளிப்பாடத்தில் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று பாபிலோனின் தொங்கும் தோட்டம் என்று படித்திருப்பீர்கள்.(மீண்டும் டிஸ்கியைப் படிக்கவும்). அப்படிப் புகழ்பெற்ற பாபிலோனின் மன்னர் சார்கன் மக்கள் மேல் அக்கறை கொண்டவர்.
தன் மக்களில் ஒரு சிலர் மட்டும் பணக்காரர் ஆகிக்கொண்டே போக பலரும் ஏழையாக இருப்பது ஏன் என்று கவலை கொண்டார் மன்னர். மந்திரியை அழைத்து ஏன் இப்படி நடக்கிறதென்று கேட்டார்.

அதற்கு மந்திரி “ஒருவேளை அந்த சிலருக்கு மட்டும் எப்படி பணக்காரர் ஆவதென்ற வித்தை தெரிந்திருக்கலாம். அப்படித் தெரிந்துகொண்டு சிலர் முன்னேறுவதைத் தவறென்று சொல்ல முடியாதே?” என்று கேட்டார்.

“நீர் சொல்வதும் சரி தான்..ஆனால் அந்த ரகசியம் தெரிந்தவர் ஏன் அதை தெரியாதோருக்கும் சொல்லக்கூடாது அமைச்சரே?..யார் இந்த பாபிலோனின் பெரும் பணக்காரர்?” என்றார் மன்னர்.

”ஆர்கட் தான்..கடும் வறுமையுடன் இளம்வயதில் கஷ்டப்பட்டவன். இப்போது நம் நாட்டிலேயே அவன் தான் பணக்காரன். அவனை நாம் கேட்கலாம் “ என்று மந்திரி சொன்னதை மன்னரும் ஆமோதித்தார்.

அரசவைக்கு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டான் ஆர்கட். மக்களும் அங்கே குழுமினர். மன்னரே விஷயத்தை எடுத்துச் சொன்னார்.

“ஆகவே ஆர்கட், ஏழையாக இருந்த நீ எப்படி பணக்காரன் ஆனாய் என்று மக்களுக்குச் சொல். அவர்களும் அவ்வாறே செய்து முன்னேறட்டும்” என்றார் மன்னர்.

ஆர்கட் பேச ஆரம்பித்தான் :

எனது இளம்பருவத்தில் நான் மிகவும் ஏழையாக இருந்தேன். காலியான பர்ஸும், பணக்காரன் ஆகவேண்டுமென்ற தீராத ஆசையுமே என்னிடம் அப்போது இருந்தது. எனது மெலிந்து நலிந்து போயிருந்த என் பர்ஸை பெருக்க வைக்க என்ன வழிகள் என்று தீவிரமாக யோசித்தேன். ஏழு ஸ்டெப்ஸைக் கண்டு பிடித்தேன். அதை இங்கே சொல்கிறேன், கேளுங்கள்.

1. பர்ஸைப் பருக்க வையுங்கள் :

’பர்ஸ் என்ன நமீதாவா..பெருக்க வைக்க?’ என்று விதண்டாவாதம் பேசினால் உருப்படவே மாட்டீர்கள், கடைசி வரை கேர் ஆஃப் ப்ளாட்ஃபார்ம் ஆகவே இருக்க நேரிடும். எனவே நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.  நீங்கள் மாதா மாதம் சம்பளம் வாங்கும்ப்போது, உங்கள் பர்ஸ் தடிமனாக இருக்கிறது. நாளாக நாளாக அனைத்துப் பணமும் காலியாகி பர்ஸ் மெலிந்து விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பர்ஸை குண்டாக்குங்கள். 


அதற்கான எளிய வழி, நீங்கள் சம்பாதிப்பதில் 10%-ஐ எக்காரணம் கொண்டும் செலவளிக்க எடுக்காதீர்கள். அது பர்ஸிலேயே இருக்கட்டும்.(சரிய்யா..பேங்குலயே இருக்கட்டும்)

நீங்கள் மாதம் பத்தாயிரம் சம்பாதிப்பவராக இருந்தால்கூட, எக்காரணம் கொண்டும் 1000 ரூபாயை வெளியே எடுத்துவிடாதீர்கள். அது உங்கள் பணம் அல்ல, உங்கள் எதிர்காலத்தின் பணம் என்று ஞாபகம் வையுங்கள். அவ்வாறு உங்கள் பேங்க் பேலன்ஸ் ஏறஏற, பணக்காரர் ஆவது பற்றி பாசிடிவ்வாக உணர ஆரம்பிப்பீர்கள்.

2. செலவைக் குறைங்கப்பா :

’சம்பாதிக்கிறதுல 10%ஆ..சான்ஸே இல்லை’ என்று நீங்கள் புலம்புவது கேட்கிறது. ’மனமிருந்தால் மார்க்கம் உண்டு..மணமானால் மாப்பிள்ளை குண்டு ‘ என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? 


உங்கள் மாதாந்திரச் செலவுகளை எக்ஸெல்லிலோ, நோட்டிலோ எழுதி வையுங்கள். ஒவ்வொரு ரூபாயும் எந்த வழியில் செலவாகிறது என்று குறித்து வாருங்கள். கொஞ்ச நாட்களில் உங்களுக்கே தெரியும், எந்தச் செலவைச் சுருக்கினால் இந்த 10% சேமிப்பை செய்ய முடியும் என்று.

சம்பாத்தியத்தில் 10% எடுத்து வைத்துவிட்டு, மீதியில் மட்டுமே குடும்பத்தை ஓட்டுவோம் என்று உறுதி கொண்டீர்கள் என்றால், பணக்காரர் ஆவதின் இரண்டாவது படியை வெற்றிகரமாகக் கடந்துவிட்டீர்கள் என்றே அர்த்தம்.

3. பணத்தைப் பெருக வையுங்கள்:

’இப்பத்தான் பர்சைப் பெருக்க வையின்னான்..அடுத்து பணத்தையுமா.பணத்தை எப்படி,,’-ன்னு நீங்கள் விவகாரமாக யோசிப்பது புரிகிறது. இப்போது உறுதியுடன் நீங்கள் 10% -ஐ சேமித்து வருவது பாராட்டத்தக்கது. ஆனால் அந்தப் பணத்தை வெறுமனே பேங்கிலோ வீட்டிலோ வைத்தால் என்ன ஆகும்? 

பண வீக்கம் என்ற அரக்கனைப் பற்றித் தெரியும் இல்லையா? செங்கோவி சொன்ன பயங்கரமான பீரோ உதாரணம் ஞாபகம் இருக்கிறது, இல்லையா?

எனவே அந்தப் பணத்தை பணவீக்கத்திற்கு எதிராக, உங்களுக்கு ஆதரவாக உழைக்க விடுங்கள். பணவீக்கம் வருடத்திற்கு 7% என்றால், உங்கள் பணம் இண்ட்ரஸ்ட்டாக சம்பாதிப்பது 7 %க்கு மேல் இருக்க வேண்டும். இல்லையென்றால், அது தன் மதிப்பை இழந்து கொண்டே போகும். எனவே 7%க்கு மேல் அதிக வருமானம் எங்கே கிடைக்கும் என்று பார்த்து முதலீடு செய்யுங்கள்.


நீங்கள் பணத்திற்காக வேலை செய்வது போலவே, பணம் உங்களுக்காக வேலை செய்யட்டும்.
4. சேமிப்பை இழப்பில் இருந்து காப்பாற்றுங்கள் :

இப்போது அடுத்த முக்கியமான ஸ்டெப்..பணவீக்கத்துக்குப் பயந்து 50% வட்டி தர்ற டுபாக்கூர் ஃபைனான்ஸ் கம்பெனிங்ககிட்ட உங்க பணத்தைக் கொடுத்தா என்ன ஆகும்? தலையில் துண்டு தான் இல்லையா? எனவே எங்கே உங்கள் முதல் பாதுகாப்பாக இருக்குமோ, அங்கே முதலீடு செய்யுங்கள்.

 எந்தச் சூழ்நிலையிலும் முதலுக்கு மோசம் வராத இடமாகப் பார்த்து முதலீடு செய்யுங்கள். அது நீங்கள் கஷ்டப்பட்டுச் சேமித்த பணம். நாம் அவ்வாறு கஷ்டப்பட்டது அவற்றை இழப்பதற்கு அல்ல. எனவே தங்கத்தில் முதலீடு செய்ய சரியான நேரம் வரும்போது, தங்கம் வாங்குங்கள். நிலத்தில், அரசுப்பத்திரங்களில், பங்குச்சந்தையில் என உங்களுக்குச் சரியான இடம் பார்த்து முதலீடு செய்யுங்கள். அறிந்தோரிடம் ஆலோசனை கேளுங்கள்.

5. பணம் சம்பாதிக்கட்டும் பணத்தை! :

இவ்வாறு உங்கள் சேமிப்பு சரியான இடத்தில் உங்களுக்காக உழைத்து சம்பாதித்துக்கொடுக்கும். இப்போது என்ன செய்வீர்கள்? உடனே பீட்ஸாவும் புடவையும் வாங்கி, எஞ்சாய் செய்தீர்கள் என்றால், கவுண்டர் செந்தில் முகத்தில் முழித்த மாதிரி ஊஊ தான்! 

உங்கள் பணம் சம்பாதித்த பணத்தை மீண்டும் முதலீட்டிலேயே போடுங்கள். வீடு வாங்கி வாடகைக்கு விட்டதால் வரும் பணம் என்றால் வாடகையைச் செலவழிக்காமல் வங்கியில்போடுங்கள். வங்கியில் இருந்து வட்டி வருகிறதென்றால், அதைத் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள். அந்தப் பணம், உங்கள் முதலீட்டு முறைகளில் ஒன்றுக்கே திரும்பச் செல்லட்டும். 

அது உழைப்பில் பிறந்த, உழைக்கப் பிறந்த பணம். அதை ஸ்வாஹா செய்யாமல் உழைக்க விடுங்கள்.

6. காப்பீடு செய்யுங்கள் :

சம்பாதிப்போர் பெரும்பாலானோர் செய்யும் தவறு இன்சூரன்ஸ் திட்டங்கள் எதிலும் சேராமல் இருப்பது. உங்களையும், உங்கள் முதலீட்டையும் காப்பீடு செய்யுங்கள். செலவுகள் அதிகரித்துக்கொண்டே போகும் இக்காலத்தில், உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காவும் மருத்துவம் உள்ளிட்ட காப்பீடுகளை இப்போதே எடுத்து வையுங்கள். எதிர்பாராத நேரத்தில் அது உதவும்.

7. உங்கள் சம்பாதிக்கும் திறனைக் கூட்டுங்கள் :

இந்த மாதிரி நம் பணம் நமக்காக உழைக்க ஆரம்பித்தவுடன், பலரும் செய்யும் தவறு சந்தோசத்தில் தனது சம்பாத்தியத்தைப் பெருக்குவதில் கோட்டை விடுவது தான். பணத்திற்குப் போட்டியாக நீங்களும் உழைக்க வேண்டிய நேரம் இது. பலநாள் போராடி, செலவுகளைக் குறைத்து செல்வந்தர் ஆக ஒரு வழியினை உருவாக்கி விட்டீர்கள்.

இன்னும் 10%-ஐ தனியே ஒதுக்கிக்கொண்டே இருக்கின்றீர்கள். உங்கள் சம்பளம் கூடக்கூட அந்த 10% தொகையும் கூடும், அதன் மூலம் முதலீடும் கூடும் ,அதன்மூலம் நம் வருங்காலத்திற்கான செல்வமும் கூடும். 

எனவே சொகுசு கண்டு, சோம்பி விடாதீர்கள். Rich Dad-Poor Dad புகழ் ராபர்ட் கியோசாகி ஒரு முறை சொன்னது போல் பணக்காரர் ஆவது நீண்ட நாள் எடுக்கும், போரடிக்கும் பயணம். 

ஆனால் அதுவே பாதுகாப்பானது.

ஆர்கட் தன் பேச்சினை முடித்துக்கொண்டு சொன்னான் : உலகில் நீங்கள் கனவு காண்பதை விடவும் அதிக செல்வம் கொட்டிக்கிடக்கிறது. இப்போதே நான் சொன்னபடி திட்டமிட்டு உழைக்க ஆரம்பியுங்கள். முன்னேறுங்கள், செல்வந்தர் ஆகுங்கள். அது உங்கள் உரிமை!

என்ன பாஸ், இந்த 7 ஸ்டெப்ஸை யூஸ் பண்ணி முன்னேற நீங்களும் ரெடியா?

டிஸ்கி : இது 1926ஆம் ஆண்டு George S. Clason என்பவரால் எழுதப்பட்ட Richest Man in Babylon புத்தகத்தில் வந்த ஒரு அத்தியாயத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. அந்தப் புத்தகம் இலவசமாக இணையத்தில் பலராலும் விநியோகிக்கப்படுவது. 

ஒரிஜினலைக் கெடுத்து, நான் செய்துள்ள டகால்ட்டி வேலைகளை அறிய விரும்புவோரும், ஆங்கிலத்தில் அதைப் படிக்க விரும்புவோரும் இங்கே இருந்து 20 பகுதிகளாக மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ளலாம். இது ஒருவேளை PDFஆக esnips.com, scripd போன்றவற்றில் கிடைக்கலாம். 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

133 comments:

  1. வந்தாச்சு பதிவு!

    ReplyDelete
  2. //Yoga.s.FR said...
    வந்தாச்சு பதிவு!//

    வந்தாச்சு எங்க யோகா பாஸ்..நிரூ எங்கே?

    ReplyDelete
  3. "மனமிருந்தால் மார்க்கம் உண்டு..மணமானால் மாப்பிள்ளை குண்டு"/////எங்க குண்டாகினேன்?இப்பவும் அதே ஐம்பத்தேழு தான்!

    ReplyDelete
  4. நல்லதொரு தகவலை ஆரம்பத்தில் நகைச்சுவையுடன் சொல்லியுள்ளீர்கள் பாஸ்..

    உழைப்பில் பத்து வீதத்தை சேமிப்பதன் மூலம் எதிர்காலம் பற்றிய கவலையை குறையுங்கள்..

    ReplyDelete
  5. //Yoga.s.FR said...
    "மனமிருந்தால் மார்க்கம் உண்டு..மணமானால் மாப்பிள்ளை குண்டு"/////எங்க குண்டாகினேன்?இப்பவும் அதே ஐம்பத்தேழு தான்!//

    அதாவது சார்....வேணாம் விடுங்க.

    ReplyDelete
  6. ஆஹா பாபிலோனா மேட்டரு.... (ஆனா அண்ணே அந்த பிகரு ரொம்ப டேமேஜ் ஆகுனதாச்சே?)

    ReplyDelete
  7. ///எந்தச் சூழ்நிலையிலும் முதலுக்கு மோசம் வராத இடமாகப் பார்த்து முதலீடு செய்யுங்கள். அது நீங்கள் கஷ்டப்பட்டுச் சேமித்த பணம். நாம் அவ்வாறு கஷ்டப்பட்டது அவற்றை இழப்பதற்கு அல்ல. // பைனான்ஸ் கம்பனிகள் தான் நினைவுக்கு வருது))

    ReplyDelete
  8. //கந்தசாமி. said...

    உழைப்பில் பத்து வீதத்தை சேமிப்பதன் மூலம் எதிர்காலம் பற்றிய கவலையை குறையுங்கள்..//

    கரெக்ட் கந்தசாமி.

    ReplyDelete
  9. ///உங்கள் குடும்பத்திற்காவும் மருத்துவம் உள்ளிட்ட காப்பீடுகளை இப்போதே எடுத்து வையுங்கள். எதிர்பாராத நேரத்தில் அது உதவும்.// உண்மை தான் பாஸ் ..

    ReplyDelete
  10. /////டிஸ்கி : அது நடிகை பாபிலோனா அல்ல, பாபிலோன் நாடு..நன்றாகப் படிக்கவும்.//////

    வெளங்கிரும், மனுசன் டிஸ்கில வெச்சாருய்யா ஆப்பு..........

    ReplyDelete
  11. செங்கோவி said...

    //Yoga.s.FR said...
    வந்தாச்சு பதிவு!//

    வந்தாச்சு எங்க யோகா பாஸ்..நிரூ எங்கே?////பதிவொன்னு போட்டிருக்காரு!கமெண்டு போட்டுட்டிருந்தேன்!பதில் சொல்லிட்டிருந்தாரு,அப்புறம் காணோம்!துங்கியிருப்பாரோ என்னமோ?

    ReplyDelete
  12. ///////சிறுவயதில் பள்ளிப்பாடத்தில் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று பாபிலோனின் தொங்கும் தோட்டம் என்று படித்திருப்பீர்கள்.(மீண்டும் டிஸ்கியைப் படிக்கவும்)./////////

    ஓஹோ இதுதான் அந்த தொங்கும் தோட்டமா....?

    ReplyDelete
  13. ///ஒரிஜினலைக் கெடுத்து, நான் செய்துள்ள டகால்ட்டி வேலைகளை அறிய விரும்புவோரும், ஆங்கிலத்தில் அதைப் படிக்க விரும்புவோரும் இங்கே இருந்து 20 பகுதிகளாக மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ளலாம்//// இங்கே நீங்கள் சுருக்கமாய் கொடுத்த தகவல்கள் நிச்சயம் பலருக்கு பயனுள்ளதாய் இருக்கும்

    ReplyDelete
  14. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஆஹா பாபிலோனா மேட்டரு...//

    ஆனாலும் பாபிலோனாவை நீங்க இப்படிச் சொல்லக்கூடாது!


    (உங்களுக்குப் பயந்து தான்யா அந்த டிஸ்கியைப் போட்டேன்..)

    ReplyDelete
  15. இனிமேயாச்சும் கொஞ்சம் இந்த அட்வைச கேட்டு(படிச்சு)முன்னுக்கு வரப் பாக்கணும்!

    ReplyDelete
  16. ///////தன் மக்களில் ஒரு சிலர் மட்டும் பணக்காரர் ஆகிக்கொண்டே போக பலரும் ஏழையாக இருப்பது ஏன் என்று கவலை கொண்டார் மன்னர். மந்திரியை அழைத்து ஏன் இப்படி நடக்கிறதென்று கேட்டார்.//////

    ஏழைகிட்ட இருந்து காசு பணக்காரன்கிட்ட போவுது...... காசு ஒரு இடத்துல இருந்து இன்னொரு எடத்துக்கு போய்த்தானே ஆகனும்....... ஹஹஹா

    ReplyDelete
  17. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////டிஸ்கி : அது நடிகை பாபிலோனா அல்ல, பாபிலோன் நாடு..நன்றாகப் படிக்கவும்.//////

    வெளங்கிரும், மனுசன் டிஸ்கில வெச்சாருய்யா ஆப்பு..........//

    டேமேஜான அயிட்டத்தைப் பத்தி ஃபீல் பண்ணாதீங்கன்னே...

    ReplyDelete
  18. டிஸ்கி : அது நடிகை பாபிலோனா அல்ல, பாபிலோன் நாடு..நன்றாகப் படிக்கவும்.!

    எத?

    ReplyDelete
  19. வணக்கம் ஸார், கும்புடுறேனுங்க!

    ReplyDelete
  20. //கந்தசாமி. said...
    ///ஒரிஜினலைக் கெடுத்து, நான் செய்துள்ள டகால்ட்டி வேலைகளை அறிய விரும்புவோரும், ஆங்கிலத்தில் அதைப் படிக்க விரும்புவோரும் இங்கே இருந்து 20 பகுதிகளாக மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ளலாம்//// இங்கே நீங்கள் சுருக்கமாய் கொடுத்த தகவல்கள் நிச்சயம் பலருக்கு பயனுள்ளதாய் இருக்கும்//

    ஆமா பாஸ்..அது தான் நோக்கம்!

    ReplyDelete
  21. // Yoga.s.FR said...
    இனிமேயாச்சும் கொஞ்சம் இந்த அட்வைச கேட்டு(படிச்சு)முன்னுக்கு வரப் பாக்கணும்!//

    இனிமேலாயா...விளங்கும்..

    ReplyDelete
  22. //
    ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
    வணக்கம் ஸார், கும்புடுறேனுங்க!//

    மணி சவுக்கியமா?

    ReplyDelete
  23. /////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
    வணக்கம் ஸார், கும்புடுறேனுங்க!
    //////

    அண்ணே எனக்கும் ரெண்டு பட்டம் வாங்கி கொடுங்கண்ணே, போரடிக்குது, பீச்சுக்கு போய் பறக்க விட்டு வெள்ளாடனும்......

    ReplyDelete
  24. அந்த நடிகை படம் போட பொன்னான வாய்ப்பை நழுவ விட்டுடீங்களே செங்கோவி....

    ReplyDelete
  25. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
    வணக்கம் ஸார், கும்புடுறேனுங்க!
    //////

    அண்ணே எனக்கும் ரெண்டு பட்டம் வாங்கி கொடுங்கண்ணே, போரடிக்குது, பீச்சுக்கு போய் பறக்க விட்டு வெள்ளாடனும்......//

    நயந்தாரா பட்டம் விட வராதுல்லண்ணே?

    ReplyDelete
  26. //
    ரெவெரி said...
    அந்த நடிகை படம் போட பொன்னான வாய்ப்பை நழுவ விட்டுடீங்களே செங்கோவி....//

    பன்னிக்குட்டி அண்ணன் சொன்னதைப் படிக்கவும்.

    ReplyDelete
  27. காலத்துக்கு ஏத்தாப்புல பணத்த எப்புடி சம்பாதிக்கணும்,எப்புடி சேமிக்கணும்,எப்புடி முதலீடு செய்யணும்னு(சுட்டதா இருந்தாலும்)பசங்களுக்கும் என்னப் போல வயசானவங்களுக்கும்?!சொல்லிக் குடுத்திருக்கீங்க! நன்றி!இன்னும் ஒங்க கிட்டேருந்து நெறைய(பணம்)எதிர் பாக்குறோம்!

    ReplyDelete
  28. /////ரெவெரி said...
    அந்த நடிகை படம் போட பொன்னான வாய்ப்பை நழுவ விட்டுடீங்களே செங்கோவி....
    ////////

    அவரு வேணும்னேதான் நழுவ விட்டிருக்காரு, அந்த நடிகை படம் போட்டாருன்னா மாங்கு மாங்குன்னு இத்தனை நாளு சேத்த வெச்ச பேரு டர்ருன்னு போய்டும்....

    ReplyDelete
  29. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

    வணக்கம் ஸார், கும்புடுறேனுங்க!///இவருக்கு இதே பொழைப்பாப் போச்சு!

    ReplyDelete
  30. Yoga.s.FR said...
    //காலத்துக்கு ஏத்தாப்புல பணத்த எப்புடி சம்பாதிக்கணும்,எப்புடி சேமிக்கணும்,எப்புடி முதலீடு செய்யணும்னு(சுட்டதா இருந்தாலும்)//

    நீங்க வேற பத்த வைக்காதீங்க..அது இலவசமாக் கிடைக்கிற மேட்டர்..சுட்டது இல்லே..ஓனரு மண்டையைப் போட்டாரு!

    //பசங்களுக்கும் என்னப் போல வயசானவங்களுக்கும்?!சொல்லிக் குடுத்திருக்கீங்க! நன்றி!இன்னும் ஒங்க கிட்டேருந்து நெறைய(பணம்)எதிர் பாக்குறோம்!//

    பதிவு எழுதுனது குத்தமாய்யா..

    ReplyDelete
  31. /
    ரெவெரி said...
    அந்த நடிகை படம் போட பொன்னான வாய்ப்பை நழுவ விட்டுடீங்களே செங்கோவி....//

    பன்னிக்குட்டி அண்ணன் சொன்னதைப் படிக்கவும்.//

    நாம சின்னபுள்ள..விளங்கர மாதிரி சொல்லுங்க...

    ReplyDelete
  32. செங்கோவி said...

    //Yoga.s.FR said...
    "மனமிருந்தால் மார்க்கம் உண்டு..மணமானால் மாப்பிள்ளை குண்டு"/////எங்க குண்டாகினேன்?இப்பவும் அதே ஐம்பத்தேழு தான்!//

    அதாவது சார்....வேணாம் விடுங்க.§§§§சரி!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  33. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////ரெவெரி said...
    அந்த நடிகை படம் போட பொன்னான வாய்ப்பை நழுவ விட்டுடீங்களே செங்கோவி....
    ////////

    அவரு வேணும்னேதான் நழுவ விட்டிருக்காரு, அந்த நடிகை படம் போட்டாருன்னா மாங்கு மாங்குன்னு இத்தனை நாளு சேத்த வெச்ச பேரு டர்ருன்னு போய்டும்....//

    நம்ம பேரு ஏற்கனவே டர்ர் ஆகித்தாண்ணே இருக்கு.

    ReplyDelete
  34. //ரெவெரி said...

    பன்னிக்குட்டி அண்ணன் சொன்னதைப் படிக்கவும்.//

    நாம சின்னபுள்ள..விளங்கர மாதிரி சொல்லுங்க...//

    இதுக்கு நீங்க அருமைக் கமெண்டே போடலாம்..அவ்வ்!

    ReplyDelete
  35. //////செங்கோவி said...
    //
    ரெவெரி said...
    அந்த நடிகை படம் போட பொன்னான வாய்ப்பை நழுவ விட்டுடீங்களே செங்கோவி....//

    பன்னிக்குட்டி அண்ணன் சொன்னதைப் படிக்கவும்.

    ////////

    பாருங்கய்யா குசும்ப, பண்றதையும் பண்ணிப்புட்டு என்னைய கோர்த்துவிடுறத......

    ReplyDelete
  36. செங்கோவி said...பதிவு எழுதுனது குத்தமாய்யா.////இப்ப என்ன,பணம் கெடையாது அம்புட்டுத் தானே,வுடுங்க!!!!பதிவு எழுதாம வுட்டுடாதீங்க!

    ReplyDelete
  37. அப்பம ..நான் கூகுல் பண்ணி விவரமா தெரிஞ்சுக்கிறேன்...

    ReplyDelete
  38. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    பாருங்கய்யா குசும்ப, பண்றதையும் பண்ணிப்புட்டு என்னைய கோர்த்துவிடுறத......//

    நீங்க தானே தெளிவா டேமேஜ் பிராபர்ட்டின்னு சொன்னது...

    ReplyDelete
  39. பதிவில இருக்கிற "கரு" பத்தி மட்டும் பேசுங்க,கண்ணுங்களா!

    ReplyDelete
  40. //////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////ரெவெரி said...
    அந்த நடிகை படம் போட பொன்னான வாய்ப்பை நழுவ விட்டுடீங்களே செங்கோவி....
    ////////

    அவரு வேணும்னேதான் நழுவ விட்டிருக்காரு, அந்த நடிகை படம் போட்டாருன்னா மாங்கு மாங்குன்னு இத்தனை நாளு சேத்த வெச்ச பேரு டர்ருன்னு போய்டும்....//

    நம்ம பேரு ஏற்கனவே டர்ர் ஆகித்தாண்ணே இருக்கு.
    /////////

    அது வேற டர்ருண்ணே, செங்கோவின்னா நல்ல வளமான படமா போடுவாரு, நல்லவரு வல்லருன்னு பேரு இருக்கே, அது பாபிலோனாவ போட்டீங்கன்னா போய்டுமே, அத சொன்னேன்.....

    ReplyDelete
  41. //ரெவெரி said...
    அப்பம ..நான் கூகுல் பண்ணி விவரமா தெரிஞ்சுக்கிறேன்..//

    கர்மம்..கர்மம்..இதை எல்லாம் ஏன்யா எங்ககிட்டச் சொல்றீங்க?

    ReplyDelete
  42. அது சரி ..இப்பதான் 1926 la வந்த புக்கை படிக்கிறீங்களா?

    ReplyDelete
  43. //Yoga.s.FR said...
    பதிவில இருக்கிற "கரு" பத்தி மட்டும் பேசுங்க,கண்ணுங்களா!//

    எல்லாருக்கும் பணத்தை விட பாபிலோனா தான் பெருசாப் போயிடுச்சு.

    ReplyDelete
  44. ////// செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    பாருங்கய்யா குசும்ப, பண்றதையும் பண்ணிப்புட்டு என்னைய கோர்த்துவிடுறத......//

    நீங்க தானே தெளிவா டேமேஜ் பிராபர்ட்டின்னு சொன்னது...
    //////

    இல்லியா பின்ன, அது ஹெவிய்யா டேமேஜ் ஆன பார்ட்டிதானே?

    ReplyDelete
  45. //ரெவெரி said...
    அப்பம ..நான் கூகுல் பண்ணி விவரமா தெரிஞ்சுக்கிறேன்..

    கர்மம்..கர்மம்..இதை எல்லாம் ஏன்யா எங்ககிட்டச் சொல்றீங்க?//

    நீங்க ரெண்டு பேரும் என்ட்ட அந்தம்மா மாதிரி எதையோ மறைக்கிறீங்க....

    ReplyDelete
  46. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அது வேற டர்ருண்ணே, செங்கோவின்னா நல்ல வளமான படமா போடுவாரு, நல்லவரு வல்லருன்னு பேரு இருக்கே, அது பாபிலோனாவ போட்டீங்கன்னா போய்டுமே, அத சொன்னேன்.....//

    அப்படீன்னா சரிண்ணே..நான்கூட நீங்களும் என்னை நல்லவன்னு திட்டுறீங்களோன்னு நினைச்சுட்டேன்..

    ReplyDelete
  47. ஒருவேளை அந்த சிலருக்கு மட்டும் எப்படி பணக்காரர் ஆவதென்ற வித்தை தெரிந்திருக்கலாம்.////இந்த மந்திரி தான் இப்பிறப்பில் "அவரா" பொறந்திருப்பாரோ?

    ReplyDelete
  48. //ரெவெரி said...
    அது சரி ..இப்பதான் 1926 la வந்த புக்கை படிக்கிறீங்களா?//

    இல்லைய்யா..1926லேயே படிச்சுட்டேன்..இப்போ இந்த ஜென்மத்துல மறந்துபோச்சா..அதான் மறுபடி படிச்சேன்.

    ReplyDelete
  49. //Yoga.s.FR said...
    ஒருவேளை அந்த சிலருக்கு மட்டும் எப்படி பணக்காரர் ஆவதென்ற வித்தை தெரிந்திருக்கலாம்.////இந்த மந்திரி தான் இப்பிறப்பில் "அவரா" பொறந்திருப்பாரோ?//

    இருக்கும்..ஆனா ‘அவருக்கு’ பல வித்தை தெரிஞ்சுருக்கே..

    ReplyDelete
  50. /////செங்கோவி said...
    //Yoga.s.FR said...
    பதிவில இருக்கிற "கரு" பத்தி மட்டும் பேசுங்க,கண்ணுங்களா!//

    எல்லாருக்கும் பணத்தை விட பாபிலோனா தான் பெருசாப் போயிடுச்சு.
    ///////

    மருந்து குடிக்கும் போது குரங்கை நினைக்காதேன்னு சொன்னது யாரு? பண்றதையும் பண்ணிப்புட்டு பேச்ச பாரு.... லொல்ல பாரு, எகத்தாளத்த பாரு.... பிச்சிபுடுவேன் பிச்சி.....

    ReplyDelete
  51. //ரெவெரி said...

    நீங்க ரெண்டு பேரும் என்ட்ட அந்தம்மா மாதிரி எதையோ மறைக்கிறீங்க....//

    அந்தம்மா என்னிக்குய்யா மறைச்சுச்சு...காண்டாக்ட் டெய்லிமோசன்!

    ReplyDelete
  52. ///செங்கோவி said...
    //Yoga.s.FR said...
    ஒருவேளை அந்த சிலருக்கு மட்டும் எப்படி பணக்காரர் ஆவதென்ற வித்தை தெரிந்திருக்கலாம்.////இந்த மந்திரி தான் இப்பிறப்பில் "அவரா" பொறந்திருப்பாரோ?//

    இருக்கும்..ஆனா ‘அவருக்கு’ பல வித்தை தெரிஞ்சுருக்கே..

    அது பழமொழி வித்தைதானே? அப்போ அது ஒண்ணு மட்டும் இல்லையா?

    ReplyDelete
  53. ”ஆர்கட் தான்..கடும் வறுமையுடன் இளம்வயதில் கஷ்டப்பட்டவன். இப்போது நம் நாட்டிலேயே அவன் தான் பணக்காரன்.////இதப் படிக்கிறப்போ ஏன் அந்த "மஞ்சப் பை" நினைப்புக்கு வருது?????

    ReplyDelete
  54. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    மருந்து குடிக்கும் போது குரங்கை நினைக்காதேன்னு சொன்னது யாரு? பண்றதையும் பண்ணிப்புட்டு பேச்ச பாரு.... லொல்ல பாரு, எகத்தாளத்த பாரு.... பிச்சிபுடுவேன் பிச்சி.....//

    சரிண்ணே..விடுங்க..விடுங்க..சும்மா நம்ம மக்களுக்கு ஒரு விழிப்பு கொடுப்போம்னு பண்ணது.

    ReplyDelete
  55. டெய்லிமோசன்...


    ப்ரோமோசன் கட் ஆயிரும்....ஆபீஸ்.....

    ReplyDelete
  56. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///செங்கோவி said...
    //Yoga.s.FR said...
    ஒருவேளை அந்த சிலருக்கு மட்டும் எப்படி பணக்காரர் ஆவதென்ற வித்தை தெரிந்திருக்கலாம்.////இந்த மந்திரி தான் இப்பிறப்பில் "அவரா" பொறந்திருப்பாரோ?//

    இருக்கும்..ஆனா ‘அவருக்கு’ பல வித்தை தெரிஞ்சுருக்கே..

    அது பழமொழி வித்தைதானே? அப்போ அது ஒண்ணு மட்டும் இல்லையா?//

    யோகா ஐயா சொல்றாருன்னா, அதுல நிச்சயம் ஆயிரம் அர்த்தம் இருக்கும்!

    ReplyDelete
  57. //////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    மருந்து குடிக்கும் போது குரங்கை நினைக்காதேன்னு சொன்னது யாரு? பண்றதையும் பண்ணிப்புட்டு பேச்ச பாரு.... லொல்ல பாரு, எகத்தாளத்த பாரு.... பிச்சிபுடுவேன் பிச்சி.....//

    சரிண்ணே..விடுங்க..விடுங்க..சும்மா நம்ம மக்களுக்கு ஒரு விழிப்பு கொடுப்போம்னு பண்ணது.
    ///////

    சரி சரி.... கண்ணத்தொடைங்க, சிரிங்க..... ம்ம்... இப்ப எப்படி இருக்கு..... இது நல்ல புள்ளைக்கு அழகு....

    ReplyDelete
  58. //ரெவெரி said...
    டெய்லிமோசன்...


    ப்ரோமோசன் கட் ஆயிரும்....ஆபீஸ்.....//

    என்ன ஆஃபீஸ்யா அது..பாபிலோனா பத்தி கமெண்ட் போடலாம்..ஆனா பாபிலோனாவை பார்க்கக்கூடாதா..

    ReplyDelete
  59. படம் பாதாளம் வரைக்கும் பாயும்....

    ReplyDelete
  60. அரசவைக்கு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டான் ஆர்கட்.///அது "திகார்" மாளிகை என்று பின்னர் தான் தெரிந்தது!

    ReplyDelete
  61. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    சரி சரி.... கண்ணத்தொடைங்க, சிரிங்க..... ம்ம்... இப்ப எப்படி இருக்கு..... இது நல்ல புள்ளைக்கு அழகு....//

    ஈஈஈஈஈஈஈஈஈ...............!

    (ஏற்கனவே ஒருத்தரு அமெரிக்கா டர்ர் பதிவுல நான் கமெண்ட்டையே படிச்சிருக்கக்கூடாதுன்னு அழுதாரு..இப்போ என்ன ஆகப்போகுதோ!)

    ReplyDelete
  62. //
    ரெவெரி said...
    படம் பாதாளம் வரைக்கும் பாயும்....//

    ஆமாமா..அந்தப் படம் அப்படித்தான்!

    ReplyDelete
  63. பன்னிக்குட்டி ராம்சாமி said...அது பழமொழி வித்தைதானே? அப்போ அது ஒண்ணு மட்டும் இல்லையா?//
    செங்கோவி said...
    யோகா ஐயா சொல்றாருன்னா, அதுல நிச்சயம் ஆயிரம் அர்த்தம் இருக்கும்!////Please contact!!!!

    ReplyDelete
  64. இதோட நிறுத்திக்குவம் கச்சேரிய...பதிவுல உள்ள மாதிரி...கொஞ்சம் பணம் சம்பாதிச்சுட்டு அப்புறம் வர்றேன்...

    ReplyDelete
  65. ஏழும் ....நம்மை செம்மையாக்கி காலம் முழுவதும் வாழும் முறையை எடுத்துரைத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்.... நமக்கு ஆங்கிலம்னா அலர்ஜி ... அதனால் இந்த ஏழு ஸ்டெப்ஸ் முதலில் ஃபாலோ பண்ணுவோம்..அவசியமான பதிவு நன்றி

    ReplyDelete
  66. அருமையான தகவல்
    நன்றி

    என்ன என்னால இது முடியாது

    ஏன்னா வேலை இல்ல

    ReplyDelete
  67. அண்ணே நிஜமா குட் பதிவு அண்ணே..
    என்னைப்போல் ஊதாரிகளுக்கு
    நல்ல சொல்லி இருக்கீங்க அட்வைஸ், ஹீ ஹீ

    ReplyDelete
  68. நமிதா மாதிரித்தான் வைத்து இருக்கணும் என்று ஆசை அண்ணே எனக்கும்,
    அட பார்ச சொன்னான்

    ReplyDelete
  69. உங்க பதிவு வழியை இனி கடைபுடிச்சு பார்ப்போம்
    ஏதும் நல்லது நடக்குதா என்று lol

    ReplyDelete
  70. ஒரிஜினலைக் கெடுத்து, நான் செய்துள்ள டகால்ட்டி வேலைகளை அறிய விரும்புவோரும், ஆங்கிலத்தில் அதைப் படிக்க விரும்புவோரும் இங்கே இருந்து 20 பகுதிகளாக மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ளலாம். இது ஒருவேளை PDFஆக esnips.com, scripd போன்றவற்றில் கிடைக்கலாம்.

    மாப்பிள ஒருவரும் ஆங்கிலத்தில இருக்கிற பதிவ பார்க்க மாட்டாங்க என்ற தைரியத்தில சொல்லுறீங்கலா...ஹி ஹி ஹி யாருக்கையா பதிவுலகத்தில நேரமிருக்கு.. அப்பிடி நேரமிருந்தாலும் காட்டானுக்கு ஆங்கிலம் தெரியோனுமே..

    ReplyDelete
  71. FOOD said...

    /////டிஸ்கி : அது நடிகை பாபிலோனா அல்ல, பாபிலோன் நாடு..நன்றாகப் படிக்கவும்.//////
    யாருக்கு இந்த ஆப்பு!


    hi hi எனக்கல்ல

    ReplyDelete
  72. //டிஸ்கி : அது நடிகை பாபிலோனா அல்ல, பாபிலோன் நாடு..நன்றாகப் படிக்கவும்.

    சிறுவயதில் பள்ளிப்பாடத்தில் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று பாபிலோனின் தொங்கும் தோட்டம் என்று படித்திருப்பீர்கள்.(மீண்டும் டிஸ்கியைப் படிக்கவும்). அப்படிப் புகழ்பெற்ற பாபிலோனின் மன்னர் சார்கன் மக்கள் மேல் அக்கறை கொண்டவர்//

    நல்ல ஒரு விடயத்தை நன்றாக சொல்லி இருக்கிறீங்க(நானும் பாபிலோன் நாட்டை பத்திதான் சொல்றன்)

    அப்பறம் நடிகை பாபிலோனா பத்தியும் ஒரு பதிவை எதிர்பார்க்கின்றோம் உங்களிடம் இருந்து.ஹி.ஹி.ஹி.ஹி

    ReplyDelete
  73. மாப்ள அழாகா சொல்லி இருக்கீங்க...இப்படி வயித்த கட்டி வாய கட்டி பணம் சம்பாதிசிட்டீங்க....இப்போ நீங்க பெரிய பணக்காரர்....இப்போ என்ன பண்ணுவீங்க சொல்லுங்க...ப்ளீஸ் எனக்கு உண்மை தெரிஞ்சாகனும் ப்ளீஸ்!

    நீங்க சொல்றதுல சேமிப்பை நான் ஒத்துக்கறேன்...யார் இப்படி கடின உழைப்பை கொடுத்து சம்பாதிக்கறான அவனை முட்டாள் என்பேன்...ஏன்னா அவன் தன் கிடைதர்க்கரிய வாழ்கையை தன் சந்ததிக்காக விட்டுக்கொடுக்கும் சித்தன்....இது தான் இந்தியர்களின் நிலை.....தனக்காக வாழாமல் தன் சந்ததிக்காக வாழ்பவர்களால் நிகழ் கால வாழ்கையை அன்பவிக்க முடியாது...

    சேமி ஆனால் உசுரை விட்டு விடாதே....அது உன்னுடைய அழகிய பாவங்களுக்காக இறைவனால் கிடைக்கப்பெற்றது = ஹிஹி இது என் தத்துவம்

    ReplyDelete
  74. நல்லவேள டிஸ்கி ல ஒரு எச்சரிக்கை கொடுத்தீங்க.

    அட்வைஸ் பண்ணா எல்லாருக்கும் போரடிக்கும்.ஆனா நீங்க பண்ற அட்வைஸ் அப்படி இல்ல.வாழைபழத்துல ஊசி ஏத்துற மாதிரி நாசூக்கா,நகைச்சுவையா சொல்றீங்க,நச்

    //அப்பாடா!இன்னிக்காவது பதிவைப்பத்தி உருப்படியா ஒரு கமாண்ட் போட்டாச்சு!

    ReplyDelete
  75. பணம் சம்பாதிக்கிறதையும் சேர்த்து வைப்பதையும் அதைப் பெருக்குவதிலும் எப்படி செயல்படவேண்டும் என்ற தங்களின் விழிப்புணர்வு பதிவு மிகவும் உபயோகமாகத்தான் இருக்கிறது.

    ஆனால் இந்த விலைவாசி என்கிற பூதம் அவ்வப்போது நம் சேமிப்பிலும் கை வைக்க வைத்து விடுகிறதே. மேலே மேலே பறக்கும் இந்த பூதத்தை என்ன செய்வதென்றுதான் தெரியல. அது நம் வாழ்க்கையில் பண்ற அட்டகாசம் தாங்கமுடியலங்க....

    ReplyDelete
  76. //Rich Dad-Poor Dad புகழ் ராபர்ட் கியோசாகி//
    அண்ணே இவரு ஜப்பான் அம்மாவுக்கும், இங்கிலாந்து அப்பாவுக்கும் பிறந்த அறிஞர்தானே? கேள்விப்பட்ட மாதிரியிருக்கு!

    ReplyDelete
  77. //’பர்ஸ் என்ன நமீதாவா..பெருக்க வைக்க?’ என்று விதண்டாவாதம் பேசினால் உருப்படவே மாட்டீர்கள், கடைசி வரை கேர் ஆஃப் ப்ளாட்ஃபார்ம் ஆகவே இருக்க நேரிடும்//
    என்னண்ணே ஆரம்பத்திலயே 'எதிர்த்துப் பேசறவன் ரத்தம் கக்கி சாவான்' மாதிரி மிரட்டுறேங்க!

    ReplyDelete
  78. நல்ல பதிவு! டைட்டில இப்பிடி வச்சிருந்தா....

    வாலிப வயோதிக அன்பர்களே! பாபிலோன் சொன்ன 7 டிப்ஸ்!

    அறியாமல் செய்த செலவுகளால் உங்கள் பர்ஸ் மெலிவதை தடுத்து மீண்டும் புஷ்டியாவதற்கு....

    ReplyDelete
  79. //இவ்வாறு உங்கள் சேமிப்பு சரியான இடத்தில் உங்களுக்காக உழைத்து சம்பாதித்துக்கொடுக்கும். இப்போது என்ன செய்வீர்கள்? உடனே பீட்ஸாவும் புடவையும் வாங்கி, எஞ்சாய் செய்தீர்கள் என்றால், கவுண்டர் செந்தில் முகத்தில் முழித்த மாதிரி ஊஊ தான்! //எம்புட்டு பெரிய மேட்டரை காமடியாக சொல்லி புரியவைசு இருக்கீங்க.....தேங்ஸ் பாஸ்

    இன்று என் கடையில்(பகுதி-7)நினைவுகள் மாறாத உண்மைக்கதை மறக்கமுடியாதபாடசாலைநாட்கள்+சரண்யா புள்ள மீதான உத்தியோக பூர்வ காதல் அறிவிப்பும் அஞ்சலியிடம் இருந்து விலகலும்
    http://cricketnanparkal.blogspot.com/2011/09/7.html

    ReplyDelete
  80. ஒரிஜினலைக் கெடுத்து, நான் செய்துள்ள டகால்ட்டி வேலைகளை அறிய விரும்புவோரும், ஆங்கிலத்தில் அதைப் படிக்க விரும்புவோரும் இங்கே இருந்து 20 பகுதிகளாக மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ளலாம். இது ஒருவேளை PDFஆக esnips.com, scripd போன்றவற்றில் கிடைக்கலாம்.

    வணக்கமுங்க ஏதோ பிரதி எடுத்துப் போட்டாலும் நமக்கு புரியிறமாதிரி
    நம்ம மொழியில தந்தீகளே அதுக்கு நன்றியுங்கோ .ஓட்டெல்லாம் போட்டாச்சு .வாழ்த்துகளுங்கோ. .............

    ReplyDelete
  81. டிஸ்கி : அது நடிகை பாபிலோனா அல்ல, பாபிலோன் நாடு..நன்றாகப் படிக்கவும்.//

    அவ்....இது தலைப்பை பார்த்து வாறவங்களுக்கு வைச்ச ஆப்பா...

    அவ்...

    ReplyDelete
  82. (மீண்டும் டிஸ்கியைப் படிக்கவும்). அப்படிப் புகழ்பெற்ற பாபிலோனின் மன்னர் சார்கன் மக்கள் மேல் அக்கறை கொண்டவர்//

    எடுங்கடா அந்த அருவாளை.....

    ReplyDelete
  83. நான் இருக்கேன், பின்னர் வந்து பின்னூட்டம் போடுறேன்.

    ReplyDelete
  84. நீங்க சொன்னதை மக்கள் ஏற்கனவே பின்பற்றிக்கிட்டுத்தான் இருக்காங்க, சும்மா இல்ல, கண்ணா பின்னான்னு சகட்டு மேனிக்கு... இது எந்த அளவுக்குப் போயிருக்குன்னா நிலம்னு கண்டா அதை எப்படியாவது வாங்கி பிளாட் போட்டு வித்துடனும் என்கிற அளவுக்கு. பணம் சேர்ப்பது முக்கியம்தான், அதே சமயம் இயற்க்கை வளங்களைப் பாதுகாப்பதும் முக்கியம். இந்த பணம் சேர்க்கும் மோகம் விலை நிலங்களை காவு வாங்குவதோடு மட்டும் நிற்கவில்லை, முக்கிய நதிகள், சுவாசிக்கும் காற்று என்று எல்லாவற்றையும் நஞ்சாக்கிக் கொண்டிருக்கிறது. கடைசியில் கத்தை கத்தியை பணம் எல்லோரிடத்திலும் இருக்கும், உண்ணுவதர்க்குத்தான் ஒன்றுமிருக்காது. அந்த நிலை வருவதற்கு முன் விழித்துக் கொள்வது நலம்.

    ReplyDelete
  85. அசத்தல் ஐடியாக்கள்..

    பணக்காரன் ஆவதற்கு
    அனைத்தும் செய்ய வேண்டிய வேலைகள்

    ReplyDelete
  86. எனக்கு இப்பத் தெரிஞ்சு என்ன பிரயோசனம்!

    ReplyDelete
  87. ஏழுமலையானுக்கு சரிக்கு சரியாக
    ஏழு பாய்ன்ட் ,அருமை கருத்து ,அருமை பதிவு ,

    கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் .

    நன்றி

    ReplyDelete
  88. பொருளாதாரம் குறித்த இதுபோன்ற சுவாரசியமான,உத்வேகமூட்டும் பதிவுகளை அடிக்கடி எதிர்பார்க்கிறோம்ண்ணே..!! அருமையான கட்டுரை..!!

    ReplyDelete
  89. // மாய உலகம் said...
    ஏழும் ....நம்மை செம்மையாக்கி காலம் முழுவதும் வாழும் முறையை எடுத்துரைத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்.... நமக்கு ஆங்கிலம்னா அலர்ஜி ... அதனால் இந்த ஏழு ஸ்டெப்ஸ் முதலில் ஃபாலோ பண்ணுவோம்..//

    பண்ணுங்க மாயா..பணக்காரர் ஆகவும் என்னை மறந்துடாதீங்க.

    ReplyDelete
  90. // Speed Master said...
    என்ன என்னால இது முடியாது //

    நோட் பண்ணி வச்சுக்குங்க மாஸ்டர்..நவம்பர் ஒன்னு - சனிப்பெயர்ச்சிக்கு அப்புறம் யூஸ் ஆகலாம்.

    ReplyDelete
  91. // துஷ்யந்தன் said...
    அண்ணே நிஜமா குட் பதிவு அண்ணே..//

    நிஜமா குட் பதிவா..அப்போ இத்தனை நாள் நீங்க நல்ல பதிவுன்னு பின்னூட்டம் போட்டது எல்லாம்....?

    ReplyDelete
  92. // காட்டான் said...
    மாப்பிள ஒருவரும் ஆங்கிலத்தில இருக்கிற பதிவ பார்க்க மாட்டாங்க என்ற தைரியத்தில சொல்லுறீங்கலா...ஹி ஹி ஹி யாருக்கையா பதிவுலகத்தில நேரமிருக்கு.. //

    பதிவர்களுக்கு அடுத்தவன் பதிவைப் படிக்கவே நேரம் இல்லியே..நான் சொன்னது பதிவரல்லாத மக்களுக்கு!

    ReplyDelete
  93. // FOOD said...
    /////டிஸ்கி : அது நடிகை பாபிலோனா அல்ல, பாபிலோன் நாடு..நன்றாகப் படிக்கவும்.//////
    யாருக்கு இந்த ஆப்பு! //

    இதுல என்ன சார் ஆப்பு?.ஒரு விளக்கம் கொடுத்தேன், அம்புட்டுதேன்.

    ReplyDelete
  94. // சி.பி.செந்தில்குமார் said...
    யாருக்கு இந்த ஆப்பு!

    hi hi எனக்கல்ல //

    அண்ணன் ஏன் இப்பிடிச் சொல்லுதாரு..பாபிலோனாவுக்கும் இவருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ...

    ReplyDelete
  95. // K.s.s.Rajh said...

    அப்பறம் நடிகை பாபிலோனா பத்தியும் ஒரு பதிவை எதிர்பார்க்கின்றோம் உங்களிடம் இருந்து.ஹி.ஹி.ஹி.ஹி //

    பின்னூட்டத்திலேயே விளக்கி இருக்கோம், பாருங்க கிஸ் ராஜா.

    ReplyDelete
  96. விக்கியுலகம் said...
    //மாப்ள அழாகா சொல்லி இருக்கீங்க...இப்படி வயித்த கட்டி வாய கட்டி பணம் சம்பாதிசிட்டீங்க....இப்போ நீங்க பெரிய பணக்காரர்....இப்போ என்ன பண்ணுவீங்க சொல்லுங்க...ப்ளீஸ் எனக்கு உண்மை தெரிஞ்சாகனும் ப்ளீஸ்! //

    மங்காத்தா தான்!

    // நீங்க சொல்றதுல சேமிப்பை நான் ஒத்துக்கறேன்...யார் இப்படி கடின உழைப்பை கொடுத்து சம்பாதிக்கறான அவனை முட்டாள் என்பேன்...ஏன்னா அவன் தன் கிடைதர்க்கரிய வாழ்கையை தன் சந்ததிக்காக விட்டுக்கொடுக்கும் சித்தன் //

    இப்போ நாம இருக்குற இந்த நிலைமையே நீங்க சொல்ற அந்த முட்டாள் முன்னோர்களின் பிச்சை தான் மாப்ள..பொருளாதார தன்னிறைவு அடையாத நாட்டில், முன்னோர்களின் தியாகம் தான் நம்மை முன்னேற்றுகிற ஒரே சக்தி..’கொண்டாடு.லைஃபை எஞ்சாய் பண்ணு’ தத்துவம் நமக்கு ஒத்து வர்ற நேரம் இன்னும் வரலை..உங்களை மாதிரி செட்டில் ஆனவங்க வேணா அதைச் செய்யலாம்..ஹி..ஹி.

    ReplyDelete
  97. //கோகுல் said...

    அப்பாடா!இன்னிக்காவது பதிவைப்பத்தி உருப்படியா ஒரு கமாண்ட் போட்டாச்சு! //

    ஏன்யா இப்படில்லாம் பண்றீங்க?

    ReplyDelete
  98. // கடம்பவன குயில் said...

    ஆனால் இந்த விலைவாசி என்கிற பூதம் அவ்வப்போது நம் சேமிப்பிலும் கை வைக்க வைத்து விடுகிறதே. மேலே மேலே பறக்கும் இந்த பூதத்தை என்ன செய்வதென்றுதான் தெரியல. அது நம் வாழ்க்கையில் பண்ற அட்டகாசம் தாங்கமுடியலங்க....//

    அதற்குத் தான் சம்பாதிக்கும் திறனையும் கூட்டியே ஆகணும்னு சொல்லியிருக்காங்க சகோ.

    ReplyDelete
  99. ஜீ... said...

    // அண்ணே இவரு ஜப்பான் அம்மாவுக்கும், இங்கிலாந்து அப்பாவுக்கும் பிறந்த அறிஞர்தானே? கேள்விப்பட்ட மாதிரியிருக்கு! //

    சாரி தம்பி..அந்த சம்பவத்தை நான் பார்க்கலை..அதனால தெரியலை.

    // வாலிப வயோதிக அன்பர்களே! பாபிலோன் சொன்ன 7 டிப்ஸ்!

    அறியாமல் செய்த செலவுகளால் உங்கள் பர்ஸ் மெலிவதை தடுத்து மீண்டும் புஷ்டியாவதற்கு....//

    யோவ், நான் நல்லா இருக்குறது பிடிக்கலியா..பழம் ஏன் உருண்டையா இருக்குன்னு கேட்டதுக்கே உருட்டி உருட்டி அடிக்காங்க..இதுலெ லேகியக்காரன் மாதிரி கூவணுமா?

    ReplyDelete
  100. // அம்பாளடியாள் said...
    வணக்கமுங்க ஏதோ பிரதி எடுத்துப் போட்டாலும் நமக்கு புரியிறமாதிரி
    நம்ம மொழியில தந்தீகளே அதுக்கு நன்றியுங்கோ .ஓட்டெல்லாம் போட்டாச்சு .வாழ்த்துகளுங்கோ. .............//

    நன்றி சகோ.

    ReplyDelete
  101. // நிரூபன் said...
    (மீண்டும் டிஸ்கியைப் படிக்கவும்). அப்படிப் புகழ்பெற்ற பாபிலோனின் மன்னர் சார்கன் மக்கள் மேல் அக்கறை கொண்டவர்//

    எடுங்கடா அந்த அருவாளை.....//

    பாவம் நிரூ..தலைப்பைப் பார்த்து ஏமாந்து வந்திருப்பாரு போல.

    ReplyDelete
  102. // Jayadev Das said...
    நீங்க சொன்னதை மக்கள் ஏற்கனவே பின்பற்றிக்கிட்டுத்தான் இருக்காங்க, சும்மா இல்ல, கண்ணா பின்னான்னு சகட்டு மேனிக்கு...//

    சகட்டுமேனிக்கு பின்பற்றினால், ஒன்னும் தேறாது சார்.

    ReplyDelete
  103. // ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    அசத்தல் ஐடியாக்கள்..

    பணக்காரன் ஆவதற்கு
    அனைத்தும் செய்ய வேண்டிய வேலைகள் //

    ஆமா பாஸ்..நல்ல மேட்டர் தான்..அதான் ஷேர் பண்ணிக்கிட்டேன்.

    ReplyDelete
  104. // M.R said...
    ஏழுமலையானுக்கு சரிக்கு சரியாக
    ஏழு பாய்ன்ட் ,அருமை கருத்து ,அருமை பதிவு ,//

    இதுக்குத் தான்யா எம்மார் வேணும்..எல்லாரும் பாபிலோனா பத்தியே பேசும்போது, ஏழுமலையானை நினைச்சீங்க பாருங்க..அதுக்கே அவரு உங்களை ஸ்பெஷலாக் கவனிப்பாரு.

    ReplyDelete
  105. //சேலம் தேவா said...
    பொருளாதாரம் குறித்த இதுபோன்ற சுவாரசியமான,உத்வேகமூட்டும் பதிவுகளை அடிக்கடி எதிர்பார்க்கிறோம்ண்ணே..!! அருமையான கட்டுரை..!!//

    நான் ஃபினான்ஸ் பெர்சன் இல்லை தேவா..நான் யூஸ் பண்ணதை/பண்றதை ஷேர் பண்ணிக்கிறேன்..அவ்வளவு தான்..தொடர்ந்தும் ஷேர் பண்றேன்..நன்றி.

    ReplyDelete
  106. செங்கோவி said..::பதிவர்களுக்கு அடுத்தவன் பதிவைப் படிக்கவே நேரம் இல்லியே..நான் சொன்னது பதிவரல்லாத மக்களுக்கு!///அது எனக்கு சொல்லுறாரு!இங்கிலீசுபிசு தெரியும், என்றாலும் பொறுமையாகப் படிக்க மனது வருவதில்லை!

    ReplyDelete
  107. செங்கோவி said..நான் ஃபினான்ஸ் பெர்சன் இல்லை தேவா..நான் யூஸ் பண்ணதை/பண்றதை ஷேர் பண்ணிக்கிறேன்..அவ்வளவு தான்..தொடர்ந்தும் ஷேர் பண்றேன்..நன்றி.////அதாகப்பட்டது,"பேப்பரில" படிச்சத,புஸ்தகத் "தாளிலே"ருந்து தெரிஞ்சுக்கிட்டத ப்ளாக் மூலமா "ஷேர்" பண்ணிக்குவோம், "நோட்ட" இல்லேன்னு சொல்லுறாரு!

    ReplyDelete
  108. @yoga.s.FR சும்மாவாச்சும் கூட சொல்ல விட மாட்டிங்க போல... :)

    ReplyDelete
  109. பணமுன்னா,பொணமும் வாய் தொறக்கும்னு சொல்லுவாங்க,பார்க்கலாம்!

    ReplyDelete
  110. அட நீங்க வேற அடுத்த வேல சோத்துக்கே வீட்ல பட்னி

    30நாள் நோம்பு வச்சப்ப கூட சாப்பாடு கிடச்சுச்சு

    ரம்ஜான் அன்னிக்கு அதுவும் இல்ல

    நீங்க நவம்பர் வர வெயிட் பன்ன சொல்றீங்க

    ReplyDelete
  111. செங்கோவி said...

    // Speed Master said...
    "என்ன" என்னால இது முடியாது //
    "எண்ண" என்னால முடியாதுங்கிறாரா,இல்ல.............?!////
    நோட் பண்ணி வச்சுக்குங்க மாஸ்டர்..நவம்பர் ஒன்னு - சனிப்பெயர்ச்சிக்கு அப்புறம் யூஸ் ஆகலாம்.////என்னங்க,சனிப் பெயர்ச்சி பலனெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க,"அவரு" கோச்சுக்க மாட்டாரா?

    ReplyDelete
  112. சேலம் தேவா said...

    @yoga.s.FR சும்மாவாச்சும் கூட சொல்ல விட மாட்டிங்க போல... :)///

    நான் நேத்திக்கே கேட்டு "வாங்கிட்டேன்"!

    ReplyDelete
  113. நீங்க நவம்பர் வர வெயிட் பன்ன சொல்றீங்க!Speed Master,மனச தளர விடாதீங்க,எல்லாத்தயும் "அல்லா" பாத்துட்டுத்தானிருக்கார்!

    ReplyDelete
  114. Yoga.s.FR said...
    செங்கோவி said..::பதிவர்களுக்கு அடுத்தவன் பதிவைப் படிக்கவே நேரம் இல்லியே..நான் சொன்னது பதிவரல்லாத மக்களுக்கு!///அது எனக்கு சொல்லுறாரு!இங்கிலீசுபிசு தெரியும், என்றாலும் பொறுமையாகப் படிக்க மனது வருவதில்லை! //

    ஐயா, நீங்க யாருன்னு எனக்குத் தெரியும்..இன்னும் உங்களை ’மூத்த’ பதிவரா, வழிகாட்டியாத்தான் நாங்க நினைக்கோம்!

    //அதாகப்பட்டது,"பேப்பரில" படிச்சத,புஸ்தகத் "தாளிலே"ருந்து தெரிஞ்சுக்கிட்டத ப்ளாக் மூலமா "ஷேர்" பண்ணிக்குவோம், "நோட்ட" இல்லேன்னு சொல்லுறாரு! //

    ப்லாக் எழுத வீட்ல பெர்மிசன் கொடுக்கிறதே பெரிய விஷயம்..இதுல நோட்ட வேற கொடுத்தா................................

    ReplyDelete
  115. // Speed Master said...
    அட நீங்க வேற அடுத்த வேல சோத்துக்கே வீட்ல பட்னி

    30நாள் நோம்பு வச்சப்ப கூட சாப்பாடு கிடச்சுச்சு

    ரம்ஜான் அன்னிக்கு அதுவும் இல்ல

    நீங்க நவம்பர் வர வெயிட் பன்ன சொல்றீங்க //

    கேட்கவே கஷ்டமா இருக்கு...ஏற்கனவே சொன்னது தான், இப்போதைக்கு வேற வேலைக்கு லோக்கல்ல மாறிப்பாருங்களேன்..

    ReplyDelete
  116. // Yoga.s.FR said...
    என்னங்க,சனிப் பெயர்ச்சி பலனெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க,"அவரு" கோச்சுக்க மாட்டாரா? //

    அவரு நம்மாளு தான்..இதுக்கெல்லாம் கோச்சுக்க மாட்டாரு..அம்மா பத்தி எழுதுனாத்தான்.........................!

    ReplyDelete
  117. செங்கோவி said...அவரு நம்மாளு தான்..இதுக்கெல்லாம் கோச்சுக்க மாட்டாரு..அம்மா பத்தி எழுதுனாத்தான்...........!////ஓகோ!அப்புடி ஒரு எண்ணம் வேற இருக்கோ?பிச்சிப்புடுவேன்,பிச்சி!!!!!!

    ReplyDelete
  118. இந்தமாதிரிச் சின்னச் சின்ன விசயங்களை செஞ்சா பெரிசாக்கிடலாமா
    அட நான் பணத்தைத்தான் கேட்கிறன். தப்பாப்புரிஞ்சிடாதையுங்கோ.

    ReplyDelete
  119. //கவி அழகன் said... [Reply]
    அருமையான பதிவு//

    அருமையான கமெண்ட்..நன்றி அழகரே.

    ReplyDelete
  120. //அம்பலத்தார் said... [Reply]
    இந்தமாதிரிச் சின்னச் சின்ன விசயங்களை செஞ்சா பெரிசாக்கிடலாமா //
    உண்மையைச் சொல்றதுன்னா.................ஆமா பாஸ்!!

    ReplyDelete
  121. தேவையான பகிர்வு நண்பா.

    வரவுக்குள் செலவு செய்பவனே பெரிய செல்வந்தன் என்ற கருத்தையே ஒவ்வொரு சிந்தனைகளும் முன்வைக்கின்றன.

    அருமை.

    ReplyDelete
  122. //முனைவர்.இரா.குணசீலன் said...

    வரவுக்குள் செலவு செய்பவனே பெரிய செல்வந்தன் என்ற கருத்தையே ஒவ்வொரு சிந்தனைகளும் முன்வைக்கின்றன.//

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  123. //சே.குமார் said... [Reply]
    நல்ல பகிர்வு.//

    யோவ், இன்னேரம் இங்க என்னய்யா பண்றீங்க?

    ReplyDelete
  124. 1. பர்ஸைப் பருக்க வையுங்கள் ://

    ஹா...ஹா..இது சூப்பரான ஐடியாவாக இருக்கே.

    பர்ஸினுள் கார்ட்போர்ட் அட்டை வைத்தாலும் பெருக்க வைக்கலாம் அல்லவா?

    ReplyDelete
  125. அதற்கான எளிய வழி, நீங்கள் சம்பாதிப்பதில் 10%-ஐ எக்காரணம் கொண்டும் செலவளிக்க எடுக்காதீர்கள். அது பர்ஸிலேயே இருக்கட்டும்.(சரிய்யா..பேங்குலயே இருக்கட்டும்)//

    அவ்....சேம்பிப்பதற்குச் சிறப்பான வழி பாஸ்.

    ReplyDelete
  126. உண்மையில் சூப்பரான ஐடியாக்கள் பாஸ்...

    நோட் பண்னி வைக்கிறேன்.
    உழைக்கும் ஊதியத்தில் பத்து வீதமாகச் சேமித்தாலே...வாழ்வில் எம் சொந்த அக்கவுண்டில் பத்து வீதம் எகிறுமில்லே...

    நன்றி பாஸ்.

    ReplyDelete
  127. @நிரூபன்

    எளிய வழி தான்..ஆனா தொடர்ச்சியா கடைப்பிடிக்கிறது தான் கஷ்டம்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.