ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை போன்ற காதல்+ஃபேமிலி டிராமா படங்களின் இயக்குநர் ஆர்.கண்ணன் கொடுத்திருக்கும் மூன்றாவது படைப்பு வந்தான் வென்றான். கோ என்ற சூப்பர் ஹிட் படம் கொடுத்த பின் ரௌத்திரத்தில் சறுக்கிய ஜீவாவும், நீண்டநாட்களாகவே சரியான வாய்ப்பு அமையாமல் திண்டாடிய நந்தாவும் இரட்டை நாயகர்களாக நடித்து, கே.எஸ்.ஸ்ரீனிவாசன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம்.
நந்தா-ஜீவாவிற்கு அப்பா வேறுவேறு என்றாலும் அம்மா ஒன்று. முதல் கணவர் இறந்த பின் செய்துகொண்ட இரண்டாவது திருமணத்தில் பிறந்த பிள்ளை தான் ஜீவா. எனவே நந்தாவிற்கு தன்னை எல்லோரும் ஒதுக்குவதாக காம்ப்ளக்ஸ். ஒரு கட்டத்தில் தன் தம்பியை கிணற்றில் தூக்கிப் போட்டு கொலை செய்து (செய்ததாக நினைத்து) விட்டு, மும்பைக்கு ஓடிப் போகிறார் நந்தா. சினிமா வழக்கப்படி மும்பை போய் பெரிய தாதாவாகவும் ஆகிறார் நந்தா.
மும்பையை கலக்கும் தாதாவான நந்தாவிடம் ஒரு உதவி கேட்டு வருகின்றார் ஜீவா. தான் ஒரு பெண்ணை(டாப்ஸி) காதலிப்பதாகவும், அவள் தந்தையை ஒரு தாதா கொன்றுவிட்டதாகவும், அந்த தாதாவை சரணடைய வைத்தால் தன்னை அவள் திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும் சொல்லி, இதற்கு நந்தா உதவ வேண்டும் என்று கேட்கிறார் ஜீவா. விலாவரியாக ஜீவாவின் காதல்கதையை கேட்ட நந்தா, யார் அந்த தாதா என்று கேட்க ‘நீ தான்’ என்கிறார் ஜீவா. அதன்பிறகு ஜீவா தன் தம்பி என்பதும் நந்தாவிற்கு தெரியவருகிறது.
நந்தா தம்பியை ஏற்றுக்கொண்டாரா, தம்பியின் காதலுக்காக தாதா தொழிலை விட்டொழித்து போலீஸில் சரணடைந்தாரா அல்லது தம்பி அண்ணனுக்காக காதலை விட்டொழித்தாரா, டாப்ஸி தன் தந்தையின் சாவுக்கு பழி வாங்கினாரா?...................................என்பதே கதை!
ஒரு பரபரப்பான நாவலுக்கான நல்ல ஸ்டோரி லைன் தான் இது. ஆனாலும் படத்தின் முதல் பிரச்சினை திரைக்கதை தான். அடுத்தடுத்த காட்சிகளை நம்மால் எளிதாக யூகிக்க முடிகிறது. காதல் தான் இங்கே மையப் பாத்திரம். அதற்காகத் தான் இந்தப் போராட்டம் என்பதாக கதை நகர்கிறது. அப்படியிருக்கும்போது, அந்த காதல் ஜோடி சேரவேண்டுமே என்ற பதைபதைப்பு ஆடியன்ஸிற்கு வரவேண்டும். அதற்கு அந்தக் காதல்காட்சிகள் வலுவானதாக இருக்க வேண்டும்.
அந்த காதல் ஜோடி (குறிப்பாக ஹீரோயின்) கேரக்டர்ஸ் ஆடியன்ஸ் மனதை டச் செய்வதாக இருக்கவேண்டும். இங்கோ சவசவவென்று காதல் காட்சிகள். காதல் வருவதற்கான காரணமும் கொஞ்சமும் நம்பும்படி இல்லை. ஜீவா பாதிக் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே நந்தாவின் எதிர் குரூப், அவர்கள் இருக்கும் இடத்தில் நுழைந்து தாக்குதல் நடத்துகிறது. படபடவென துப்பாக்கி எடுத்துச் சண்டை போடும் நந்தா, அது முடிந்ததும் திரும்ப உட்கார்ந்துகொண்டு ‘அப்புறம் என்னாச்சு..அந்தப் பொண்ணுகிட்ட உன் லவ்வைச் சொன்னியா’ என கேட்கும்போது நமக்கே கடுப்பாக இருக்கிறது. ‘ஜீவா சொன்னதே ஒரு மொக்கை காதல்கதை..அதை இந்த ரணகளத்திலயும் வந்து கண்டினியூ பண்ணச் சொல்றாரே’ன்னு நொந்து போறோம்.
அடுத்து ஜீவா கதை சொல்லிக்கிட்டு இருக்கும்போதே போஸீஸ் கமிசனர் வேற வந்திடறாரு. அவரை அனுப்பிட்டு திரும்பவும் காதல் கதை கேட்கறார் நந்தா. முக்கால்வாசிப் படம் வரை மும்பைக் காட்சிகளாகவும், ஃப்ளாஷ்பேக்காகவும் திரைக்கதையை நல்லாத் தான் பின்னியிருக்கிறார்கள்.
ஆனால் காதல் காட்சிகள் ஸ்ட்ராங்காக இல்லாததால், நமக்கு ஆர்வம் போய்விடுகிறது. கஜினி போன்று வித்தியாசமாக காதல் காட்சிகளை அமைத்திருக்க வேண்டிய படம்..எளிதில் யூகிக்க்க்கூடிய காட்சிகளால் படம் சாதாரணமாக நகர்கிறது.
அடுத்தது பாத்திரத் தேர்வு..மும்பையின் பெரிய தாதாவாக நந்தா. ஒட்டிய கன்னமும் வெறித்த பார்வையுமாக பத்து நாள் சாப்பிடாதவர்போல் வருகிறார் நந்தா. கமல் முதல் ரஜினி வரை செய்துவிட்ட கேரக்டர் அது. மும்பையே பார்த்து பயப்படுகிறது என்று சொல்லிவிட்டு நந்தாவைக் காட்டும்போது சப்பென்றாகி விடுகிறது.
ஜீவா வழக்கம்போல் கொடுத்த வேலையை நன்றாகச் செய்திருக்கிறார். காதலில் ஆரம்பித்து ஆக்சன் வரை ஓகே. ஆனாலும் அவரை பாக்ஸர் என்று (சும்மா தான் இருந்தாலும்..) சொல்வது இன்னொரு வேடிக்கை.
ஆடுகளத்தில் நடித்து ’ஓஹோ’ன்னு பேர் வாங்கியும் ஏன் இந்தப் பெண்ணிற்கு அடுத்தடுத்து படமே அமையவில்லை என்று டாப்ஸியைப் பற்றி யோசித்த நமக்கு, இதில் விடை கிடைக்கிறது. (அப்பாவை) சுட்டுப் போட்டாலும் நடிப்பு வர மாட்டேன் என்கிறது. கோபம், தாபம், நடனம், கவர்ச்சி என எதுவும் தேறவில்லை. ரொம்பக் கஷ்டம். கதையின் மையப் பாத்திரம் இப்படி இருந்தால், என்ன ஒரு அட்டாச்மெண்ட் நமக்கு வரும்?
சந்தானம் சில நேரங்களில் சிரிக்கவைக்கிறார். பலநேரங்களில் மொக்கை தான். அவ்வப்போது வந்துவிழும் ஒன்லைனர் மட்டுமே ரசிக்க வைக்கிறது.
தமனின் இசையில் காஞ்சன மாலா, முடிவில்லா..நகருதே போன்ற பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. முடிவில்லா பாடலின் நடனமும் ஓகே. நந்தாவும் ஜீவாவும் மோதும் காட்சியில் மட்டும் பிண்ணனி இசை கவனிக்க வைக்கிறது. (ஆரண்ய காண்டத்தில் இதே போன்று யுவனும் செய்திருப்பார்). மும்பையை ஓரளவு அழகாக காட்டும் பி.ஜி.முத்தையாவின் கேமரா, முதல் கிராமத்துக் காட்சிகளில் அந்த டார்க் உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தி இருக்கின்றது.
காதல் பற்றி டாப்ஸி -ஜீவா பேசிக்கொள்ளும் வசனங்கள் கலக்கல். பட்டுக்கோட்டை பிரபாகரின் இருப்பை அது மட்டுமே காட்டுகிறது. மற்ற நேரங்களில் வழக்கமான வசனங்கள், உதாரணமாக ‘இப்போ என்கிட்ட உனக்குச் சொல்ல இருக்கிறது ரெண்டே வார்த்தைகள் தான் ---------------குட் பை!’
ஃபேமிலி சார்ந்த முடிச்சு விழுந்த கதை + காதல் என்ற ஆர்.கண்ணனின் முந்தைய படங்கள் போன்றே இதிலும். ஆனாலும் படத்தில் மிக முக்கிய ட்விஸ்ட் ஒன்று உள்ளது. அது தான் படத்தின் பலம். ஆனால் அது மட்டுமே காப்பாற்றும் என்று இயக்குநர் நம்பியது பெரும் தவறு. ஃபைட் க்ளப் போன்ற படங்களில் பார்த்த ட்விஸ்ட் தான் என்றாலும் சராசரி ரசிகனுக்கு அது ஆச்சரியமாக இருக்கலாம். படத்தின் தூணாக அது இருப்பதால், நான் இங்கே அதைச் சொல்ல விரும்பவில்லை.
ஆனால் அப்படி ஒரு ட்விஸ்ட் வைத்தால், படம் நெடுக புத்திசாலித்தனமாக க்ளூ கொடுத்துக்கொண்டே செல்ல வேண்டும். அது தான் படத்தை திரும்பப் பார்க்க வைக்கும். ஃபைட் க்ளப், இந்தி டான் போன்றவற்றை மீண்டும் பார்க்கும்போதே ‘அடடா..நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோமே’ என்று தோன்றும். அதுவே படத்திற்கு அழகூட்டும். அது தான் சரியான புத்திசாலித்தனமான திரைக்கதையும்கூட. இங்கே படத்தை திரும்ப பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல், கொஞ்சம் யோசித்துவிட்டு‘ஓ..அப்படியா’ என்ற தலையாட்டலோடு ரசனை முடிந்து போகிறது. தமிழ்ப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு டூயட் சாங் களால் ‘அந்த’ காட்சிகளை நிறைத்தது தவறு.
தமிழுக்கு அந்த ட்விஸ்ட், கொஞ்சம் புதிய நல்ல முயற்சி தான். ஆனாலும் மிஸ் ஆகிவிட்டது. (கரு.பழனியப்பனும் இதே போன்று செய்திருந்தாலும்!)
வந்தான் வென்றான் - வந்தான், ஆனால்...............................!
அருமையான விமர்சனம். அதுவும் சுடச்சுட. உங்கள் வேகம் மெய்சிலிர்க்க வைக்குது..
ReplyDeleteஎங்கடா இன்னிக்கு ஆள காணோம்ன்னு பாத்தோம், இதுதான் மேட்டரா? இருங்க படிச்சுட்டு வாரோம்
ReplyDelete//Ashwin-WIN said...
ReplyDeleteஅருமையான விமர்சனம். அதுவும் சுடச்சுட. உங்கள் வேகம் மெய்சிலிர்க்க வைக்குது.//
நன்றி அஸ்வின்....இம்மாதிரி மொக்கைப் படத்துக்கெல்லாம் ஸ்பெஷல் ஷோ கிடையாதா?
//Real Santhanam Fanz said...
ReplyDeleteஎங்கடா இன்னிக்கு ஆள காணோம்ன்னு பாத்தோம், இதுதான் மேட்டரா? இருங்க படிச்சுட்டு வாரோம்//
ஆமாம்...அறிவிப்பு ஓரமா போட்டிருந்தேனே...
//சந்தானம் சில நேரங்களில் சிரிக்கவைக்கிறார். பலநேரங்களில் மொக்கை தான். அவ்வப்போது வந்துவிழும் ஒன்லைனர் மட்டுமே ரசிக்க வைக்கிறது. //
ReplyDeleteயோவ், எங்காள எப்பிடியா நீர் மொக்கன்னு சொல்லலாம்? மொதல்ல போயி ஒரு படத்துல காமெடியனா நடிச்சு பாரும், அப்புறம் சொல்லுங்க அதோட கஷ்டம் என்னன்னு...
//செங்கோவி said...
ReplyDelete//Real Santhanam Fanz said...
எங்கடா இன்னிக்கு ஆள காணோம்ன்னு பாத்தோம், இதுதான் மேட்டரா? இருங்க படிச்சுட்டு வாரோம்//
ஆமாம்...அறிவிப்பு ஓரமா போட்டிருந்தேனே...//
கவனிக்கல சார்.
//ஆனால் அப்படி ஒரு ட்விஸ்ட் வைத்தால், படம் நெடுக புத்திசாலித்தனமாக க்ளூ கொடுத்துக்கொண்டே செல்ல வேண்டும். அது தான் படத்தை திரும்பப் பார்க்க வைக்கும். ஃபைட் க்ளப், இந்தி டான் போன்றவற்றை மீண்டும் பார்க்கும்போதே ‘அடடா..நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோமே’ என்று தோன்றும்.//
ReplyDeleteநிஜம் சார், அதுனாலதான், தமிழ், தெலுகு டான்ல (சாரி பில்லாவுல இருந்தி) இந்தி டான் தனிச்சு நிக்குது.
//Real Santhanam Fanz said...
ReplyDelete//சந்தானம் சில நேரங்களில் சிரிக்கவைக்கிறார். பலநேரங்களில் மொக்கை தான். அவ்வப்போது வந்துவிழும் ஒன்லைனர் மட்டுமே ரசிக்க வைக்கிறது. //
யோவ், எங்காள எப்பிடியா நீர் மொக்கன்னு சொல்லலாம்? மொதல்ல போயி ஒரு படத்துல காமெடியனா நடிச்சு பாரும், அப்புறம் சொல்லுங்க அதோட கஷ்டம் என்னன்னு..//
என்னய்யா அநியாயமா இருக்கு...அப்போ ஜீவாவுக்கு லவ் சீன்ல நடிக்கத் தெரியலைன்னு எழுதுனா, டாப்ஸிகூட டூயட் பாட விடுவீங்களா?
//தமிழுக்கு அந்த ட்விஸ்ட், கொஞ்சம் புதிய நல்ல முயற்சி தான். ஆனாலும் மிஸ் ஆகிவிட்டது. (கரு.பழனியப்பனும் இதே போன்று செய்திருந்தாலும்!)//
ReplyDeleteகண்ணனோட முதல் படத்துல கூட இது இருந்திச்சு, அதுலயும் திரைகதை தான் ப்ராப்ளம்...
//Real Santhanam Fanz said...
ReplyDeleteநிஜம் சார், அதுனாலதான், தமிழ், தெலுகு டான்ல (சாரி பில்லாவுல இருந்தி) இந்தி டான் தனிச்சு நிக்குது.//
The Prestige. Memento, Don, Fight Club -ன்னு எல்லாமே நுணுக்கமான வேலைப்பாடு அமைந்த படங்கள்..அது தான் திரும்பத் திரும்ப அதை பார்க்க வைக்குது..இங்கே........
வணக்கம் மாப்பிள நான் சிவலய பூட்டுற நேரத்தில பதிவ போட்டு என்னைய டென்சன் ஆக்குவீங்க இன்னைக்குதான்யா வீட்ட வந்து என்ர கொம்பீற்றர்ல உங்கட பதிவ முதல் முறையா பாக்கிறேன்யா.. அதோட எனக்கு பத்து யூரோவ மிச்சப்படுத்தீட்டீங்க இந்த படத்த நான் தியேட்டர்ல பாக்கிறதாயில்ல.. ஹி ஹி
ReplyDelete//Real Santhanam Fanz said...
ReplyDelete//தமிழுக்கு அந்த ட்விஸ்ட், கொஞ்சம் புதிய நல்ல முயற்சி தான். ஆனாலும் மிஸ் ஆகிவிட்டது. (கரு.பழனியப்பனும் இதே போன்று செய்திருந்தாலும்!)//
கண்ணனோட முதல் படத்துல கூட இது இருந்திச்சு, அதுலயும் திரைகதை தான் ப்ராப்ளம்..//
அப்படியா...நான் பார்க்கலை ஃபேன்ஸ்.
//காட்டான் said...
ReplyDeleteவணக்கம் மாப்பிள நான் சிவலய பூட்டுற நேரத்தில பதிவ போட்டு என்னைய டென்சன் ஆக்குவீங்க இன்னைக்குதான்யா வீட்ட வந்து என்ர கொம்பீற்றர்ல உங்கட பதிவ முதல் முறையா பாக்கிறேன்யா.. அதோட எனக்கு பத்து யூரோவ மிச்சப்படுத்தீட்டீங்க இந்த படத்த நான் தியேட்டர்ல பாக்கிறதாயில்ல.. ஹி ஹி
//
மாம்ஸ், உங்களுக்காக லேட்டா போடலை..டாப்ஸிக்காக லேட் ஆகிடுச்சு.
அந்த பத்து யூரோல்ல அஞ்சு யூரோவை இந்தப் பக்கம் தரலாம்ல?
கதை கேட்டா நெறைய படம் ஓடுது சார் தலைக்குள்ள, சூர்யா-ரகுவரன் படத்துல இருந்து, விஷாலோட ஒரு படம் வரைக்கும் ஞாபகம் வருது, அப்பிடின்னா இந்த படத்துக்கு திரைக்கதைதான் ரொம்ப ஸ்ட்ராங்கா தேவைனு தோணுது... அதுலயே சொதப்பிட்டாரா?
ReplyDelete//செங்கோவி said...
ReplyDeleteஎன்னய்யா அநியாயமா இருக்கு...அப்போ ஜீவாவுக்கு லவ் சீன்ல நடிக்கத் தெரியலைன்னு எழுதுனா, டாப்ஸிகூட டூயட் பாட விடுவீங்களா?//
அது உங்க சாமர்த்தியம் சார், படம் சொதப்பல்னு சொன்ன நெறையபேர் நம்மள படம் இயக்கத்தானே சொல்லறாங்க, அப்போ எங்காள குத்தம் சொன்னா நாங்க இப்புடி சொல்லகூடாதா?
//Real Santhanam Fanz said...
ReplyDeleteகதை கேட்டா நெறைய படம் ஓடுது சார் தலைக்குள்ள, சூர்யா-ரகுவரன் படத்துல இருந்து, விஷாலோட ஒரு படம் வரைக்கும் ஞாபகம் வருது, அப்பிடின்னா இந்த படத்துக்கு திரைக்கதைதான் ரொம்ப ஸ்ட்ராங்கா தேவைனு தோணுது... அதுலயே சொதப்பிட்டாரா?//
உயிரிலே கலந்தது சொல்றீங்களா..ஆனால் இங்கே நேரடி மோதல் தான்..நல்லவன் வேஷம் எல்லாம் இல்லை..திரைக்கதை தான் கவுத்திடுச்சு..
//Real Santhanam Fanz said...
ReplyDelete//செங்கோவி said...
என்னய்யா அநியாயமா இருக்கு...அப்போ ஜீவாவுக்கு லவ் சீன்ல நடிக்கத் தெரியலைன்னு எழுதுனா, டாப்ஸிகூட டூயட் பாட விடுவீங்களா?//
அது உங்க சாமர்த்தியம் சார், படம் சொதப்பல்னு சொன்ன நெறையபேர் நம்மள படம் இயக்கத்தானே சொல்லறாங்க, அப்போ எங்காள குத்தம் சொன்னா நாங்க இப்புடி சொல்லகூடாதா?//
அவங்ககிட்டயும் இதையே கேட்போம்...!
//செங்கோவி said...
ReplyDeleteஅவங்ககிட்டயும் இதையே கேட்போம்...!//
அப்புடீன்னா இனிமே உங்க எல்லா விமர்சனத்துலயும் ஹீரோக்கு ரொமான்ஸ் வரல்லன்னு நிச்சயம் இருக்கும்
மாம்ஸ், உங்களுக்காக லேட்டா போடலை..டாப்ஸிக்காக லேட் ஆகிடுச்சு.
ReplyDeleteஅந்த பத்து யூரோல்ல அஞ்சு யூரோவை இந்தப் பக்கம் தரலாம்ல?
September 16, 2011 3:11 AM
ஹா ஹா ஆமா மாப்பிள நீங்க எனக்கா லேட்டாக போடத்தேவையில்ல நான் வேலையிலேயே உங்க பதிவ பாத்திடுவேன். லேட்டா போட்டதில கும்மியடிக்கிறவங்க நித்தாவுக்கு போட்டாங்க... உங்களுக்கு தள்ளுற ஐஞ்சு யூரோவுக்கு உங்கட பேரில ஒரு சோமபாண குவலைய.....!!!!?? வாங்கி அருந்துகிறேன் ஐயா.. ஹி ஹி
//Real Santhanam Fanz said...
ReplyDelete//செங்கோவி said...
அவங்ககிட்டயும் இதையே கேட்போம்...!//
அப்புடீன்னா இனிமே உங்க எல்லா விமர்சனத்துலயும் ஹீரோக்கு ரொமான்ஸ் வரல்லன்னு நிச்சயம் இருக்கும்//
இது நல்ல ஐடியா தான்.
//காட்டான் said...
ReplyDeleteலேட்டா போட்டதில கும்மியடிக்கிறவங்க நித்தாவுக்கு போட்டாங்க... உங்களுக்கு தள்ளுற ஐஞ்சு யூரோவுக்கு உங்கட பேரில ஒரு சோமபாண குவலைய.....!!!!?? வாங்கி அருந்துகிறேன் ஐயா.. ஹி //
இன்னுமா சோம பாணம் அருந்துகிறீர்கள்? அந்தக் காசை வைத்து சிவாலயனுக்கு புண்ணாக்கு வாங்கிப்போடுங்கள். (எண்ட மருமவன் புண்ணாக்கு-ன்னு அதுகிட்ட சொல்லக்கூடாது!)
அப்பாட கமலாவில் விளம்பரம் போடும் போது பார்க்கனும் என்று அசை இருந்தது நல்ல வேளை நாம் தப்பித்தோம் இல்லை என்றாள் 190 ரூபாய் காலியாகி இருக்கும் அதைவத்து டாஸ்மார்க்கில் 2பீர் வேண்டலாம் இன்னும் சுண்டலும்தான்!
ReplyDeleteஎங்களை எல்லாம் கும்மியில் சேர்க்கமாட்டியலா ஆட்டோவில் வாரதுக்குள் கடையைப் பூட்டுவது ஏன் மாப்பூ காமேஸ் மாமி துடைப்பத்துடன் நிற்கிறதாலோ!ஹீ ஹீ!
ReplyDeleteபாவம் ஐயா நந்தா நல்ல ஓபனிங் இன்னும் கிடைக்கல !
ReplyDeleteபாஸ் இது மொக்கை படம் பாஸ், விமர்சனம் கொஞ்சம் லேட் ஆகிட்டுது என்று நினைக்குறேன்.... ஆனாலும் படம் மொக்கை என்றாலும் உங்க விமர்சனம் சூப்பரு........ இந்த ரேஞ்சுக்கு போனா விரைவில் ஆனந்த விகடனில் திரை விமர்சனம் எழுத சான்ஸ் கிடைக்க போகுது என்று நின்சிக்குறேன்.. ஹீஹீ
ReplyDeleteடாப்ஸிக்கு ( டாப் ஸீன் ) இப்படி ஒரு விளக்கமா..?? அவ்வ்வ், நீங்களாத்தான் யோசிக்குறீங்களா பாஸ்...... ஹீஹீ
ReplyDeleteபாட்டுக்கள் சூப்பர், அதுவும் டாப்சியோ சூப்பரோ சூப்பர்.
ReplyDeleteகாட்டான் மாமா கேக்காமலே தருவாரு...
ReplyDeleteகேட்டுட்டீங்க தராமலா விடுவாரு..?? ஹீஹீ.
அப்புறம் நேசன் பாஸ் என்ன நந்தாக்கு திருப்புமுனை வரவில்லை என்று சம்மந்தம் இல்லாம சொல்லூறாரு...??? அவ்வ்வ்
நித்தா வருது பாஸ், டைம் இரவு ரெண்டாகுது.... சோ பாய் பாய்
சுடச்சுட அழகு விமர்சனம்...
ReplyDeleteசுடச் சுட விமர்சனம் கொடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்
ReplyDeleteவந்தான் வென்றான் ....அப்ப 200 ரூபா மிச்சம் ரொம்ப நன்றி சார்
ReplyDeleteநல்ல ஹீரோவா வந்து இருக்கவேண்டிய நந்தா பல வில்லன் ரோல்களில் நடிக்கின்றார் சரிஅதுலதான் தேறுவாறுனா..அதிலையும் தேரமாட்டார் போல.....ஹி.ஹி.ஹி.
ReplyDeleteவந்தான் வென்றான் மொக்கையா.கோபி சொன்ன மாதிரி ..250 ரூபா மிச்சம் நன்றி பாஸ்
nice
ReplyDeleteஇனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteவழமை போலவே அசத்தலான விமர்சனம்.
டைம் கிடைக்கும் போது படம் பார்த்திடுறேன்.
உங்கள் விமர்சனம் ஓகே... ஆனா படம்?
ReplyDeleteஇன்று என் வலையில்:
ReplyDeleteகூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங்கு கொள்ளுங்கள்!
வந்தான் வென்றான் - வந்தான், ஆனால்...............................!////என்னைக் கொன்று விட்டான் என்று சொல்கிறீர்கள்,அப்படித் தானே?
ReplyDeleteபடத்தின் தூணாக அது இருப்பதால்.........////அடடே!படத்தில தூண் எல்லாம் வேற இருக்குதா?அப்புடீன்னா பாத்துட வேண்டியது தான்!?
ReplyDeleteவிமர்சனம் எழுதினா எப்புடி முடிக்கணும்னு ஒங்களுக்குத் தெரியவேயில்ல!ஆனந்த விகடன்,குமுதம்(மார்க் போடுவாங்க) அப்புறம் இன்னுமொண்ணு சொல்லுவாங்களே,பி-செண்டரில மூணு நாளு,கால் செண்டரில ஆறு மாசம்னு!அதெல்லாம் போட மாட்டீங்களா?
ReplyDeleteசெங்கோவி said...என்னய்யா அநியாயமா இருக்கு...அப்போ ஜீவாவுக்கு லவ் சீன்ல நடிக்கத் தெரியலைன்னு எழுதுனா, டாப்ஸிகூட டூயட் பாட விடுவீங்களா?/அட,அட,அட,என்ன ஒரு நப்பாசை........ஆ?
ReplyDeleteYoga.s.FR said... [Reply]
ReplyDeleteஅறிவிப்பு :
இன்று இரவு பதிவு லேட் ஆகும்.விடியற்காலையில் சந்திப்போம்!/////ஆஹா!படம் பாக்கப் போயிருக்காரு,அதான் பதிவு லேட்டாகும்னு குறிப்பு போட்டிருக்காரு!
"டாப் ஸீ" ன்னு யார்யா பேரு வச்சது?////என்ன தவறு கண்டீர்?பெற்றோர் சூட்டிய பெயரை கிண்டல் செய்யும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது?டாப் ஸீ ரசிகர் மன்றம் சார்பாக உங்கள் மேல்(என்னமோ சொல்லுவாங்களே?)அந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப் போகிறோம்!
ReplyDeleteநிரூபன் said...
ReplyDeleteஇனிய காலை வணக்கம் பாஸ்,
வழமை போலவே அசத்தலான விமர்சனம்.
டைம் கிடைக்கும் போது படம் பார்த்திடுறேன்./////
இனிய காலை வணக்கம்,நிரூபன்!விமர்சனம் அசத்தலாக இருந்தால் பார்க்கக் கூடாது என்று பொருள்!
Nesan said...
ReplyDelete//அப்பாட கமலாவில் விளம்பரம் போடும் போது பார்க்கனும் என்று அசை இருந்தது நல்ல வேளை நாம் தப்பித்தோம் இல்லை என்றாள் //
ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனால் ஃபினிஷிங் தான்...
//எங்களை எல்லாம் கும்மியில் சேர்க்கமாட்டியலா //
நம்ம டயத்துக்கு நீங்க வர மாட்டேங்கிறீங்களே..
//பாவம் ஐயா நந்தா நல்ல ஓபனிங் இன்னும் கிடைக்கல ! //
ஆமாம், நன்றாக வந்திருக்க வேண்டியவர்.
துஷ்யந்தன் said...
ReplyDelete// இந்த ரேஞ்சுக்கு போனா விரைவில் ஆனந்த விகடனில் திரை விமர்சனம் எழுத சான்ஸ் கிடைக்க போகுது என்று நின்சிக்குறேன்.. ஹீஹீ //
ஸ்கூல்ல படிக்கும்போது பத்திரிக்கைகள்ல எழுதறதை பெரிய விஷயமா நினைச்சிருக்கேன்..ஆனா இப்போ ஏனோ அப்படித் தோணலை துஷ்.
// டாப்ஸிக்கு ( டாப் ஸீன் ) இப்படி ஒரு விளக்கமா..?? அவ்வ்வ், நீங்களாத்தான் யோசிக்குறீங்களா பாஸ்...... ஹீஹீ //
நம்ம இப்படி யோசிக்கிறது புதுசு இல்லையே..
// KANA VARO said...
ReplyDeleteபாட்டுக்கள் சூப்பர், அதுவும் டாப்சியோ சூப்பரோ சூப்பர்.//
ஐயா, பாட்டு மட்டும் தான் சூப்பர்.
துஷ்யந்தன் said...
ReplyDelete// காட்டான் மாமா கேக்காமலே தருவாரு...கேட்டுட்டீங்க தராமலா விடுவாரு..?? ஹீஹீ. //
அவர் அதுக்கும் வாங்கி ஊத்திக்கப்போறேன்ல சொல்றாரு..
// அப்புறம் நேசன் பாஸ் என்ன நந்தாக்கு திருப்புமுனை வரவில்லை என்று சம்மந்தம் இல்லாம சொல்லூறாரு...??? //
நந்தாங்கிறது நடிகர் பேருய்யா, படம் இல்லை.
// ரெவெரி said...
ReplyDeleteசுடச்சுட அழகு விமர்சனம்...//
நன்றி..நன்றி.
// kobiraj said...
ReplyDeleteவந்தான் வென்றான் ....அப்ப 200 ரூபா மிச்சம் ரொம்ப நன்றி சார் //
சினிமாவை 200ரூபா வேற கொடுத்துப் பார்க்கிறிங்களா..என்னய்யா இது!
// K.s.s.Rajh said...
ReplyDeleteநல்ல ஹீரோவா வந்து இருக்கவேண்டிய நந்தா பல வில்லன் ரோல்களில் நடிக்கின்றார் சரிஅதுலதான் தேறுவாறுனா..அதிலையும் தேரமாட்டார் போல.....ஹி.ஹி.ஹி. //
முன்னாடி அழகா இருந்தாரு..இப்போ மெலிஞ்சு போய், பார்க்கவே கஷ்டமா இருக்கு.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeletenice //
நைஸ் கமெண்ட் சிப்பு.
// நிரூபன் said...
ReplyDeleteஇனிய காலை வணக்கம் பாஸ்,
வழமை போலவே அசத்தலான விமர்சனம்.
டைம் கிடைக்கும் போது படம் பார்த்திடுறேன். //
முதல்ல விமர்சனத்தை படிங்க.
// தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஉங்கள் விமர்சனம் ஓகே... ஆனா படம்? //
பப்படம் தான் தமிழ்வாசி.
Yoga.s.FR said...
ReplyDelete// வந்தான் வென்றான் - வந்தான், ஆனால்...............................!////என்னைக் கொன்று விட்டான் என்று சொல்கிறீர்கள்,அப்படித் தானே? //
வென்றான்னு சொல்ல முடியலை, அதான் புள்ளி வச்சேன்.
//படத்தின் தூணாக அது இருப்பதால்.........////அடடே!படத்தில தூண் எல்லாம் வேற இருக்குதா?அப்புடீன்னா பாத்துட வேண்டியது தான்!? //
இல்லை சார், ஷகீலா இந்தப் படத்துல நடிக்கலை.
// விமர்சனம் எழுதினா எப்புடி முடிக்கணும்னு ஒங்களுக்குத் தெரியவேயில்ல!ஆனந்த விகடன்,குமுதம்(மார்க் போடுவாங்க) அப்புறம் இன்னுமொண்ணு சொல்லுவாங்களே,பி-செண்டரில மூணு நாளு,கால் செண்டரில ஆறு மாசம்னு!அதெல்லாம் போட மாட்டீங்களா? //
சிபியை நக்கல் விடுறீங்களாக்கும்? அவர் ஸ்டைல்ல அவர் எழுதறாரு..அதில் என்ன பாஸ் தப்பிருக்கு.
//செங்கோவி said...என்னய்யா அநியாயமா இருக்கு...அப்போ ஜீவாவுக்கு லவ் சீன்ல நடிக்கத் தெரியலைன்னு எழுதுனா, டாப்ஸிகூட டூயட் பாட விடுவீங்களா?/அட,அட,அட,என்ன ஒரு நப்பாசை........ஆ? //
நியாயமான கேள்வி தானே..
//Yoga.s.FR said... [Reply]
ReplyDeleteஅறிவிப்பு :
இன்று இரவு பதிவு லேட் ஆகும்.விடியற்காலையில் சந்திப்போம்!/////ஆஹா!படம் பாக்கப் போயிருக்காரு,அதான் பதிவு லேட்டாகும்னு குறிப்பு போட்டிருக்காரு! //
ஆமாம் ஐயா, அந்த கமெண்ட்டை நைட்டு பார்த்தேன்..பதில் போட மறந்துட்டேன்.
செங்கோவி ....சிபியை நக்கல் விடுறீங்களாக்கும்? அவர் ஸ்டைல்ல அவர் எழுதறாரு..அதில் என்ன பாஸ் தப்பிருக்கு.////ஐயய்யோ,ஏங்க இப்புடிக் காலங்காத்தால கோத்து விடுறீங்க?அங்கங்க படிச்சப்போ இப்புடி எழுதியிருந்தாங்க!அந்தப் பையன் சி.பி.தெரியவே தெரியாதுங்க!
ReplyDeleteவிமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete//இங்கோ சவசவவென்று காதல் காட்சிகள்//
ReplyDeleteபின்ன டாப்சிய வச்சு என்ன பண்றது?
//ஆடுகளத்தில் நடித்து ’ஓஹோ’ன்னு பேர் வாங்கியும் ஏன் இந்தப் பெண்ணிற்கு அடுத்தடுத்து படமே அமையவில்லை//
அதற்கு முழுக்காரணம் இயக்குனர் வெற்றிமாறனே!மற்றபடி ஆடுகளத்தின் ஒரேயொரு அபத்தமே டாப்சிதான்!
//‘ஜீவா சொன்னதே ஒரு மொக்கை காதல்கதை..அதை இந்த ரணகளத்திலயும் வந்து கண்டினியூ பண்ணச் சொல்றாரே’ன்னு நொந்து போறோம்//
ஒருவேளை யதார்த்தமா காட்டுறேன்னு அப்பிடி...நாமெல்லாம் எத்தனை பிரண்ட்சோட மொக்கை காதல் கதைய கேட்டிருப்போம்! அது அவங்களுக்கு இன்ட்ரஸ்ட்டாவும், நமக்கு மரண மொக்கையாவும் இருக்கிறதில்லையா? :-)
ஆனா இன்னொருத்தன் தானே ஆர்வமா கேக்குறான்னா....இதுக்காகவே இந்தப்படம் ஓடக் கூடாது! :-)
தேர்ந்த விமர்சனம். நாகரிகம் கருதி ட்விஸ்டை சொல்லாமல் விட்டதற்க்கு நன்றி ஆனால் உங்கள் பண்பு அனைவருக்கும் இருக்க வேண்டுமே. இந்நேரம் வினவு ட்விஸ்டை அவர் ப்ளாக்கில் சொல்லியிருப்பார்.
ReplyDelete\\ஆனாலும் அவரை பாக்ஸர் என்று (சும்மா தான் இருந்தாலும்..) சொல்வது இன்னொரு வேடிக்கை. \\ சுள்ளனுக்கு இவரு பரவாயில்லை!!
ReplyDelete// Yoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி ....சிபியை நக்கல் விடுறீங்களாக்கும்? அவர் ஸ்டைல்ல அவர் எழுதறாரு..அதில் என்ன பாஸ் தப்பிருக்கு.////ஐயய்யோ,ஏங்க இப்புடிக் காலங்காத்தால கோத்து விடுறீங்க?அங்கங்க படிச்சப்போ இப்புடி எழுதியிருந்தாங்க!அந்தப் பையன் சி.பி.தெரியவே தெரியாதுங்க! //
ஓ.அப்படியா..சாரி தலைவரே..உங்களுக்கு சிபியைத் தெரியும்னு நினைச்சுச் சொல்லிட்டேன். அவர் நம்ம நண்பர் தான். தப்பா ஒன்னும் எடுத்துக்க மாட்டார். இது தான் அவர் ப்லாக்கோட லின்க் : http://adrasaka.blogspot.com/
// N.H.பிரசாத் said...
ReplyDeleteவிமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றி. //
நன்றி நண்பரே.
ஜீ... said...
ReplyDelete//அதற்கு முழுக்காரணம் இயக்குனர் வெற்றிமாறனே!மற்றபடி ஆடுகளத்தின் ஒரேயொரு அபத்தமே டாப்சிதான்! //
ஆமாம் ஜீ..ஆடுகளத்தில் டாப்ஸிக்கு முக்கியத்துவம் இல்லாததால், படம் தப்பித்தது.
// ஆனா இன்னொருத்தன் தானே ஆர்வமா கேக்குறான்னா....இதுக்காகவே இந்தப்படம் ஓடக் கூடாது! :-) //
அதுக்குக் காரணம் அவருக்கு ஏற்கனவே லவ் ஃபெய்லியராம்..என்ன கொடுமை சார் இது!
// kumar2saran said...
ReplyDeleteதேர்ந்த விமர்சனம். நாகரிகம் கருதி ட்விஸ்டை சொல்லாமல் விட்டதற்க்கு நன்றி ஆனால் உங்கள் பண்பு அனைவருக்கும் இருக்க வேண்டுமே. //
படத்தின் பலமே அது தான்..அதுவும் தெரிந்துவிட்டால், இந்தப் படத்தை உட்கார்ந்து பார்க்க முடியாது.
//Jayadev Das said...
ReplyDelete\\ஆனாலும் அவரை பாக்ஸர் என்று (சும்மா தான் இருந்தாலும்..) சொல்வது இன்னொரு வேடிக்கை. \\ சுள்ளனுக்கு இவரு பரவாயில்லை!//
வேங்கையைவா சொல்றீங்க..ரைட்டு!
விமர்சனம் அருமை நண்பா...!!!
ReplyDeleteஎன்ன பாஸ் இதுவும் ஊத்திக்கிச்சா? தாப்சி கூட காப்பாத்தலியா? ஸ்டில்லுல கூட பொண்ணு தேறாது போல இருக்கே
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteவிமர்சனம் அருமை நண்பா...!!//
நன்றிண்ணே.
//
ReplyDeleteஇரவு வானம் said...
என்ன பாஸ் இதுவும் ஊத்திக்கிச்சா? தாப்சி கூட காப்பாத்தலியா? ஸ்டில்லுல கூட பொண்ணு தேறாது போல இருக்கே//
டாப்ஸிகிட்ட ஒரு ‘திறமை’யும் இல்லைய்யா..ஆடுகளத்துல ஏமாத்தியிருக்காங்க.
நானும் நல்லா சுத்திமுத்தி பார்த்துட்டேம்..ம்ஹூம்.
<>>ஆனால் அப்படி ஒரு ட்விஸ்ட் வைத்தால், படம் நெடுக புத்திசாலித்தனமாக க்ளூ கொடுத்துக்கொண்டே செல்ல வேண்டும். அது தான் படத்தை திரும்பப் பார்க்க வைக்கும். ஃபைட் க்ளப், இந்தி டான் போன்றவற்றை மீண்டும் பார்க்கும்போதே ‘அடடா..நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோமே’ என்று தோன்றும். அதுவே படத்திற்கு அழகூட்டும். அது தான் சரியான புத்திசாலித்தனமான திரைக்கதையும்கூட. இங்கே படத்தை திரும்ப பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல், கொஞ்சம் யோசித்துவிட்டு‘ஓ..அப்படியா’ என்ற தலையாட்டலோடு ரசனை முடிந்து போகிறது. தமிழ்ப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு டூயட் சாங் களால் ‘அந்த’ காட்சிகளை நிறைத்தது தவறு.
ReplyDeleteமுந்தி விநாயகரே!!!
படம் பார்க்கலாமா /??????????
ReplyDelete// சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteமுந்தி விநாயகரே!!! //
ஹா..ஹா...
// FOOD said...
ReplyDelete//படத்தின் தூணாக அது இருப்பதால், நான் இங்கே அதைச் சொல்ல விரும்பவில்லை.//
பெருந்தன்மை! //
பாவம் சார் புரடியூசர்.
// கவி அழகன் said...
ReplyDeleteபடம் பார்க்கலாமா /? //
பார்த்தே ஆக வேண்டிய படம் இல்லை பாஸ்..வேற வேலையே இல்லைன்னா போங்க.
ஒரு வேளை, இன்னொரு படத்தில பாக்சர் நடிச்சு ,பேமஸ் ஆனதுனலையோ?
ReplyDeleteசூர்யா படத்தில் விஜய் வில்லன்
வந்தான்,சென்றான்?
ReplyDelete//IlayaDhasan said...
ReplyDeleteஒரு வேளை, இன்னொரு படத்தில பாக்சர் நடிச்சு ,பேமஸ் ஆனதுனலையோ? //
அதுகூட ஃபைட்டர் தானே..
//சென்னை பித்தன் said...
ReplyDeleteவந்தான்,சென்றான்? //
ஆமாம் ஐயா, அதே தான்..!
நந்தா தம்பியை ஏற்றுக்கொண்டாரா, தம்பியின் காதலுக்காக தாதா தொழிலை விட்டொழித்து போலீஸில் சரணடைந்தாரா அல்லது தம்பி அண்ணனுக்காக காதலை விட்டொழித்தாரா, டாப்ஸி தன் தந்தையின் சாவுக்கு பழி வாங்கினாரா?...................................என்பதே கதை!
ReplyDeleteமீதி வெள்ளித்திரையில் ....
ஹா ஹா
ஓ..அப்படியா’ என்ற தலையாட்டலோடு ரசனை முடிந்து போகிறது.
ReplyDeleteசுவாரஸ்யம் இல்லை என்று சொல்ல வரீங்களா
படம் பார்க்க வேண்டாமா !
//M.R said... [Reply]
ReplyDeleteஓ..அப்படியா’ என்ற தலையாட்டலோடு ரசனை முடிந்து போகிறது.
சுவாரஸ்யம் இல்லை என்று சொல்ல வரீங்களா
//
ஆமாம் ரமேஷ்..சுவாரஸ்யம் குறைவு தான்.
என்னண்ணே.... டாப்சீ இப்படி ஆகிபோச்சு அதுக்குள்ள?
ReplyDelete