ஒரு கானகத்தில் காட்டாறு ஒன்று பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையினிலே ஒரு மாமரம் ஒன்று கிளைபரப்பி நின்றிருந்தது. அதில் அண்ணன், தம்பி என இரண்டு கிளைகளும் இருந்தன.
அண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும்.
தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும்.
ஒருநாள் பயங்கர மழை பொழிய ஆரம்பித்தது. கூடவே கடும்புயல் வேறு. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. அண்ணன் கிளை வழக்கம்போல், நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி, புயலில் ஆடிக்கொண்டிருந்தது. தம்பி கிளையோ ‘என்னண்ணே, இது..நாசமாப் போற காத்து..இப்படி அடிக்குது” என்று புலம்பிக்கொண்டிருந்தது.
அடுத்து காற்று கொஞ்சம் சுழித்து அடித்ததில் தம்பி கிளை, முறிந்து விழுந்தது. கூடவே அண்ணன் கிளையும் முறிந்து விழுந்தது. இருவருமே ஆற்றில் விழுந்தார்கள்.
தம்பி கிளை கத்த ஆரம்பித்தது. “என்னய்யா அநியாயம் இது..நான்பாட்டுக்கு சிவனேன்னு தானே மரத்துல இருந்தேன்..இப்படி ஆத்தோட அடிச்சுக்கிட்டுப் போறனே..அய்யய்யோ” என்று அழுதது.
அண்ணன் கிளை “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்ல” என்றது.
தம்பி கிளை கடுப்பாகி விட்டது. “ச்சீ..நீயெல்லாம் ஒரு கிளையா? இங்க உசுரே போகுதுங்கிறேன். ஜில்லுன்னு இருக்குன்னு லொள்ளு பண்றே..அய்யய்யோ..தூக்கித் தூக்கிப் போடுதே” என்றது.
அண்ணன் கிளையோ “தம்பி, இதை மனிதர்கள் கண்காட்சியில் காசு கொடுத்து அனுபவிக்கிறார்கள். நமக்கோ இலவசமாகக் கிடைச்சிருக்கு. சொய்ங்..சொய்ங்னு போறது சூப்பரா இருக்கில்ல?” என்றது.
‘இனியும் இவன்கூட பேசக்கூடாது’ என்று முடிவு செய்த தம்பி கிளை, ஆண்டவனில் ஆரம்பித்து அனைத்தையும் திட்டித் தீர்த்தது. எவ்வளவு சொகுசா மரத்துல இருந்தேன், இப்படி பாறையிலயும் கரையிலயும் முட்டி மோதும்படி ஆயிடுச்சே என்று புலம்பித் தள்ளியது. அண்ணன் ஆற்று நீரோட்டத்தில் விளையாடியபடியே போய்க்கொண்டிருந்தது.
கடைசியில் இரு கிளைகளும் கடலை நெருங்கின. தம்பி கிளை பதறியது. “அண்ணே, நம்ம கதை முடிஞ்சுச்சு. இந்த நல்லதண்ணில கரை ஒதுங்குனாக் கூட வேர் பிடிச்சு வளர வாய்ப்பிருக்கு. அங்கே கடலுக்குள்ள போனா கன்ஃபார்மா சாவு தான்” என்றது.
“ஆமாம் தம்பி. அது எனக்குத் தெரியுமே” என்றது அண்ணன் கிளை.
“தெரியுமா? அது தெரிஞ்சா சந்தோசமா வந்தே?”
“ஆமா, எல்லா ஆறுகளும் கடலையே சேருகின்றன என்று சொல்லியிருக்காங்க தம்பி. அதனால் எப்படியும் நம்ம கதை முடியப்போகுதுன்னு ஆத்துல விழுந்த உடனேயே தெரிஞ்சு போச்சு. இது நம்மால கட்டுப்படுத்த முடியாத காட்டாத்து வெள்ளம். அப்போ நமக்கிருந்தது ரெண்டே சாய்ஸ் தான். ஒன்னு அதை அமைதியா ஏத்துகிட்டு ,அந்த கஷ்டத்தையே எஞ்சாய் பண்றது. இன்னொன்னு அதை எதிர்த்துக்கிட்டு டென்சன் ஆகி சாவுறது.நான் முதல் சாய்ஸை எடுத்தேன். நீ இரண்டாவதை எடுத்தே..ரெண்டு பேருக்கும் ஒரே முடிவு. ஆனாலும் நான் சந்தோசமா சாவை நோக்கி வந்தேன். நீ அழுதுக்கிட்டே வந்தே. இங்க முடிவும், ஆரம்பமும் நம்ம கையில் இல்லை. இடைப்பட்ட பயணம்..அதுல நல்ல சாய்ஸ்-ஐ நாம தான் எடுத்துக்கணும்”
தம்பி “நீ சொல்றது சரி தான்ணே..நான் வேஸ்ட் ஆக்கிட்டேன்”ன்னு சொல்லும்போதே கடல் வந்துவிட்டது. இருகிளைகளும் கடலில் சங்கமித்தன.
இதையே காப்மேயர் ‘மழை பெய்யட்டும்’ என்றார். எங்கோ அவசரமாகக் கிளம்புகிறீர்கள். மழை பிடித்துக்கொண்டது. இப்போது உங்களுக்கு இருப்பது இரண்டே வாய்ப்புகள் தான். ஒன்று, ’என்னய்யா மழை இது’ என்று டென்சன் ஆவது. இரண்டாவது மழை பெய்யட்டும் என அமைதியாக மழையை ரசிப்பது. நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள்?
வந்துட்டோம்ல.....
ReplyDeleteஓஷோ சொன்ன குட்டிக்கதை ( இது 3+ பதிவு)///
ReplyDelete3+ உங்களுக்கே ஓவரா தெரியல?
மாம்ஸ்.... கடைசியில சிந்திக்க வச்சுட்டிங்களே....
ReplyDelete@தமிழ்வாசி - Prakash நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடை வாங்கி இருக்கும் அண்ணன் தமிழ்வாசியை வ்ருக வருக என வரவேற்கிறேன்.
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஓஷோ சொன்ன குட்டிக்கதை ( இது 3+ பதிவு)///
3+ உங்களுக்கே ஓவரா தெரியல?//
இதுல என்ன தப்பு...இது 18+ பதிவு அல்ல, நல்ல பதிவுன்னு போட கூச்சமா இருந்துச்சு. அதான் இப்படி போட்டேன்!
@செங்கோவி
ReplyDeleteநீண்ட இடைவேளைக்குப் பிறகு வடை வாங்கி இருக்கும் அண்ணன் தமிழ்வாசியை வ்ருக வருக என வரவேற்கிறேன்///
ஆகா... வரவேற்பு பலமா இருக்கே...
நான் குடை எடுத்துக் கொண்டு கிளம்புவேனே?இப்ப என்ன பண்ணுவீங்க ?ஹி!ஹி!ஹி!
ReplyDelete// தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteமாம்ஸ்.... கடைசியில சிந்திக்க வச்சுட்டிங்களே....//
சிந்தாம சிதறாம சிந்திங்க!
//Yoga.s.FR said...
ReplyDeleteநான் குடை எடுத்துக் கொண்டு கிளம்புவேனே?இப்ப என்ன பண்ணுவீங்க ?ஹி!ஹி!ஹி!//
இந்தத் தெளிவு இருக்கிறவரைக்கும் யாராலயும் உங்களை அடிச்சிக்க முடியாது.
அண்ணே கட எப்ப தொறப்பீங்க......?
ReplyDelete@செங்கோவி
ReplyDeleteஇதுல என்ன தப்பு...இது 18+ பதிவு அல்ல, நல்ல பதிவுன்னு போட கூச்சமா இருந்துச்சு. அதான் இப்படி போட்டேன்!
நல்லா போடராங்கப்பா ப்ளஸ்..
என்னது 3 ப்ளசா? எதுக்கு?
ReplyDeleteஓஷோ சொன்ன குட்டிக்கதை ( இது 3 பதிவு) ////ஓஹோ,மூணாம்புக்(மூன்றாம் வகுப்பு)கத போலருக்கு!படிச்சத இர மீட்டுறாரோ?
ReplyDelete//
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே கட எப்ப தொறப்பீங்க......?//
அண்ணே,கண்ணு முழிச்சுப் பாருங்க. ரொம்ப நேரமா கேட்டுக்கிட்டு இருந்தீங்களே..வாங்க.
////// தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஓஷோ சொன்ன குட்டிக்கதை ( இது 3+ பதிவு)///
3+ உங்களுக்கே ஓவரா தெரியல?
////////
மூணே ஓவரா? அப்போ 0+ னு போட சொல்லிடுவோமா?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஎன்னது 3 ப்ளசா? எதுக்கு?//
பிடிக்கலேன்னா சொல்லுங்க..3 மைனஸ் ஆக்கிடுவோம்.
//////தமிழ்வாசி - Prakash said...
ReplyDelete@செங்கோவி
இதுல என்ன தப்பு...இது 18+ பதிவு அல்ல, நல்ல பதிவுன்னு போட கூச்சமா இருந்துச்சு. அதான் இப்படி போட்டேன்!
நல்லா போடராங்கப்பா ப்ளஸ்..
//////
இவரு வெறும் ப்ளஸ்ச மட்டும் பாத்துட்டு குஷியா வந்திருப்பாரு போல?
மிகச் சிறந்த ஒரு தத்துவத்தை விளக்கும் கதையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅண்ணே அப்போ ஒரு அட்டு பிகரு கெடச்சாலும் கண்ண மூடீட்டு........ அதானே சொல்ல வர்ரீங்க....?
ReplyDelete@பன்னிக்குட்டி ராம்சாமி
ReplyDeleteஇவரு வெறும் ப்ளஸ்ச மட்டும் பாத்துட்டு குஷியா வந்திருப்பாரு போல?///
நீங்களும் அப்படித்தானே..
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅண்ணே அப்போ ஒரு அட்டு பிகரு கெடச்சாலும் கண்ண மூடீட்டு........ அதானே சொல்ல வர்ரீங்க....?//
அடப்பாவிகளா...கொழந்தைங்க கதையிலயும் மேட்டர் தேத்துறீங்களே?
எல்லா ஆறுகளும் கடைசியில் கடலையே சேருகின்றன. நாங்களும்?????
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteமிகச் சிறந்த ஒரு தத்துவத்தை விளக்கும் கதையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி ஐயா!
//Yoga.s.FR said...
ReplyDeleteஎல்லா ஆறுகளும் கடைசியில் கடலையே சேருகின்றன. நாங்களும்?????//
நாங்களே கடலுக்குத் தான் வரப்பொறோம்..உங்களுக்கு என்ன?
அண்ணன்; “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்ல” ?!?!?!ஹ!ஹ!ஹா!
ReplyDeleteஅண்ணன்; “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்ல” ?!?!?!ஹ!ஹ!ஹா!
ReplyDelete////// செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே அப்போ ஒரு அட்டு பிகரு கெடச்சாலும் கண்ண மூடீட்டு........ அதானே சொல்ல வர்ரீங்க....?//
அடப்பாவிகளா...கொழந்தைங்க கதையிலயும் மேட்டர் தேத்துறீங்களே?
//////
என்னது இது குழந்தைங்க கதையா? அப்போ நாமல்லாம் குழந்தையா..... அப்ப சரி.....!
//Yoga.s.FR said...
ReplyDeleteஅண்ணன்; “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்ல” ?!?!?!ஹ!ஹ!ஹா!//
ஐயா, இது ஆத்துத் தண்ணி!
செங்கோவி said... //Yoga.s.FR said... எல்லா ஆறுகளும் கடைசியில் கடலையே சேருகின்றன. நாங்களும்?????//நாங்களே கடலுக்குத் தான் வரப்பொறோம்..உங்களுக்கு என்ன?//// நானும் வரேனே?
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஎன்னது இது குழந்தைங்க கதையா? அப்போ நாமல்லாம் குழந்தையா..... அப்ப சரி.....!//
அப்படித் தானே பதிவுலகத்துல பேசிக்கிறாங்க!
//////செங்கோவி said...
ReplyDelete//Yoga.s.FR said...
அண்ணன்; “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்ல” ?!?!?!ஹ!ஹ!ஹா!//
ஐயா, இது ஆத்துத் தண்ணி!
///////
ஆத்துல போற தண்ணி யாரு குடிச்சா என்ன....?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////செங்கோவி said...
//Yoga.s.FR said...
அண்ணன்; “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்ல” ?!?!?!ஹ!ஹ!ஹா!//
ஐயா, இது ஆத்துத் தண்ணி!
///////
ஆத்துல போற தண்ணி யாரு குடிச்சா என்ன....?//
அப்போ இவரைத் தூக்கி உள்ள போட்டுற வேண்டியது தான்.
Blogger செங்கோவி said... //Yoga.s.FR said... அண்ணன்; “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்ல” ?!?!?!ஹ!ஹ!ஹா!// ஐயா, இது ஆத்துத் தண்ணி!§§§§§"ஆத்துத் தண்ணி"ன்னா ஒ.கே.!!!!
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteBlogger செங்கோவி said... //Yoga.s.FR said... அண்ணன்; “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்ல” ?!?!?!ஹ!ஹ!ஹா!// ஐயா, இது ஆத்துத் தண்ணி!§§§§§"ஆத்துத் தண்ணி"ன்னா ஒ.கே.!!!!//
அய்யய்யோ...இவரு பஞ்சாயத்தில நிப்பாட்டிடுவாரு போலிருக்கே..
/// இங்க முடிவும், ஆரம்பமும் நம்ம கையில் இல்லை.////நெசம் தாங்க!
ReplyDelete//////தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteமாம்ஸ்.... கடைசியில சிந்திக்க வச்சுட்டிங்களே....
///////
தமிழ்வாசி இன்னுமா திங் பண்றாரு?
சரி பொலம்புறாரு,"தண்ணி" மேட்டர விட்டுடலாம்!இப்போ பசி எடுக்குது,சாப்புடலாம்!
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////தமிழ்வாசி - Prakash said...
மாம்ஸ்.... கடைசியில சிந்திக்க வச்சுட்டிங்களே....
///////
தமிழ்வாசி இன்னுமா திங் பண்றாரு?//
அவரு எப்பவோ எஸ்கேப்!
//Yoga.s.FR said...
ReplyDeleteசரி பொலம்புறாரு,"தண்ணி" மேட்டர விட்டுடலாம்!இப்போ பசி எடுக்குது,சாப்புடலாம்!//
ஆமா தல, நானும் இனிமே தான் சாப்பிடணும்.
அண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும்.தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும்.////"அமைதியான நதியினிலே ஓடம்" பாட்டுக் கூட நெனைப்புக்கு வருதுங்க!
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteஅண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும்.தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும்.////"அமைதியான நதியினிலே ஓடம்" பாட்டுக் கூட நெனைப்புக்கு வருதுங்க!//
ஆமால்ல...சாவித்திரி தானே அது?
சாப்பிடப் போறேன்.
ReplyDeletetamilmanam vote#3 ebbodathu..
ReplyDeleteindly 4
Yoga.s.FR said...
ReplyDeleteசரி பொலம்புறாரு,"தண்ணி" மேட்டர விட்டுடலாம்!இப்போ பசி எடுக்குது,சாப்புடலாம்!
September 5, 2011 12:45 AM
வணக்கமுங்கோ நீங்க"தண்ணி"ய விட்டுட்டு சாப்பிட போட்டீங்கய்யா நான் உந்த "தண்ணிய" இப்பதான்யா பிடிச்சிருக்கேன்..ஓஷோ கதை நல்லாதான்யா இருக்கு.. அதுசரி இவ்வளவு பேர் கும்மியடிக்கிறீங்க ஆனா 2ஓட்டுத்தானேய்யா விழுந்திருக்கு.. ஆனா நான் ஓட்டு போட மாட்டேனே...ஹி ஹி இப்பதான்யா வீட்ட போறன்..
//Yoga.s.FR said...
ReplyDeleteஅண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும்.தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும்.////"அமைதியான நதியினிலே ஓடம்" பாட்டுக் கூட நெனைப்புக்கு வருதுங்க!//
அட இந்த கதைக்குள்ள இப்பிடி மூனாவது கிளைக் கதையும் இருக்கா!!?? அப்ப நம்ம பசங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு வாரேன் மாப்பிளைய தூங்க விடாம கும்மியடிச்சிடுவோம்...!! டோய் பசங்களா எங்கையா இருக்கீங்க!!? செங்கோவி நம்மால தப்பா சொல்லீற்றார்ய்யா..ஹி ஹி(பாரய்யா மாப்பிள சாமி கதை கூட சொல்ல விடமாட்டாங்க ஹி ஹி)
//RK நண்பன்.. said...
ReplyDeletetamilmanam vote#3 ebbodathu..
indly 4//
என்னய்யா இது..நீங்களும் இப்படி ஆரம்பிச்சுட்டீங்க..தமிழ்மணம் ஓட்டை வேஸ்ட் ஆக்கிட்டீங்களே!
//காட்டான் said...
ReplyDeleteஅட இந்த கதைக்குள்ள இப்பிடி மூனாவது கிளைக் கதையும் இருக்கா!!?? அப்ப நம்ம பசங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு வாரேன் மாப்பிளைய தூங்க விடாம கும்மியடிச்சிடுவோம்...!! //
மாம்ஸ், தலகிட்ட சாவித்திரி பத்தி ஃப்ளாஷ்பேக் கேட்டேன்..ஆளைக் காணோம்..அதையும் என்னான்னு கேளுங்க.
// காட்டான் said...
ReplyDeleteஓஷோ கதை நல்லாதான்யா இருக்கு.. அதுசரி இவ்வளவு பேர் கும்மியடிக்கிறீங்க ஆனா 2ஓட்டுத்தானேய்யா விழுந்திருக்கு.. ஆனா நான் ஓட்டு போட மாட்டேனே...ஹி ஹி இப்பதான்யா வீட்ட போறன்..//
நீங்க நினைச்சாலும் போட முடியாது..தற்காலிகமாக தமிழ்மணம் தூக்கப்பட்டுள்ளது!!
மழை பெய்யட்டும் ஆனந்த மழையில் நனைவோம் நண்பரே.... அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும்...தானானா
ReplyDeleteஎது வந்தாலும் அதை சந்தோசத்துடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து 3+ க்கு மட்டுமல்ல 33+க்கும் அவசியமானது என்பதை பதிவு உணர்த்தியுள்ளது நண்பா...நன்றியுடன் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான கருத்து பாஸ் , நல்லதோ கெட்டதோ வருவதை சந்தோசமாக ஏற்றுக்கொள்வதிலும் சந்தோசத்தை/ திருப்தியை அடைந்து கொள்ளலாம்.
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDelete//காட்டான் said...
அட இந்த கதைக்குள்ள இப்பிடி மூனாவது கிளைக் கதையும் இருக்கா!!?? அப்ப நம்ம பசங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு வாரேன் மாப்பிளைய தூங்க விடாம கும்மியடிச்சிடுவோம்...!! //
மாம்ஸ், தலகிட்ட சாவித்திரி பத்தி ஃப்ளாஷ்பேக் கேட்டேன்..ஆளைக் காணோம்..அதையும் என்னான்னு கேளுங்க.
என்ன மாப்பிள அண்ணாத்தையிட பிளாஷ் பேக்க ஞாபகபடுத்தீட்டீங்க அதுதான் அவர் ஓடிட்டார்.. கொஞ்சம் சூதனமா நடக்கக்கூடாதா..!!? ஹி ஹி(நாளைக்கு எனக்கும் இருக்கு ஆப்பு ஹி ஹி)
அடடே இத அண்ணன் தம்பி கதை சூப்பரா இருக்கே!
ReplyDeleteநாளைய பதிவு ஈசாப் குட்டி கதைகளா?
ReplyDeleteநல்ல கதை, நல்ல கருத்து....
ReplyDeleteநல்ல தத்துவ கதை நண்பரே
ReplyDeleteதுன்பம் வந்தால் அதிலிருந்து சீக்கிரம் மீண்டு இந்த சின்ன வாழ்க்கையை சந்தோசமாக வாழ பழகிடு .
துக்கத்தையே நினைத்து மீதி வாழ்க்கையும் தொலைத்து விடாதே
ஏனென்றால் life is short
என்பதை ரத்தின சுருக்கமாக உணர்த்திய தங்கள் பதிவிற்கு நன்றி நண்பரே
தமிழ் 10 - 7
ReplyDeleteமாப்ள கதை கதையாம் காரணமாம்...காரணத்தை தேட வேணாமாம்...ஹிஹி சூப்பரு!
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்புடன்
யானை குட்டி
அடடே ...நல்லா இருக்கே !
ReplyDeleteசெங்கோவி....!
ReplyDeleteஎவ்வளவு பெரிய வாழ்க்கைத்தத்துவத்தை மிக எளிய முறையில் விளக்கியிருக்கிறீர்கள். நல்லாயிருக்கு.
நான் அண்ணன் கிழையில் ஜாதியே. எதையும் ரசனையுடன் ஏற்றுக்கொண்டு வாழ்பவன். ஹிஹிஹி.
கலக்கல் பதிவு.
பதிவு அருமை பகிர்வுக்கு நன்றி நண்பரே..
ReplyDeleteகொண்ணுட்டிங்க தல
ReplyDelete// KANA VARO said...
ReplyDeleteஅடடே இத அண்ணன் தம்பி கதை சூப்பரா இருக்கே! //
ரொம்ப வருசம் முன்ன ஏதோவொரு ஓஷோ புக்ல படிச்சது..நேத்து வேற எழுத டைம் இல்லே..அதான் இதை இறக்கிட்டேன்..
// சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteநாளைய பதிவு ஈசாப் குட்டி கதைகளா? //
இல்லே, சாருவின் குட்டிக்கதைகள்..
// Heart Rider said...
ReplyDeleteநல்ல கதை, நல்ல கருத்து....//
ஆமா இதய ஓட்டி.
// M.R said...
ReplyDeleteதுன்பம் வந்தால் அதிலிருந்து சீக்கிரம் மீண்டு இந்த சின்ன வாழ்க்கையை சந்தோசமாக வாழ பழகிடு .
ஏனென்றால் life is short //
அது மேட்டர்!
// விக்கியுலகம் said...
ReplyDeleteமாப்ள கதை கதையாம் காரணமாம்...காரணத்தை தேட வேணாமாம்...ஹிஹி சூப்பரு! //
மப்புல இருக்கீரா?
// யானைகுட்டி @ ஞானேந்திரன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள்
அன்புடன்
யானை குட்டி //
மிக்க நன்றி.
// koodal bala said...
ReplyDeleteஅடடே ...நல்லா இருக்கே ! //
பின்னே, சொன்னது பெரிய கை ஆச்சே!
// மருதமூரான். said...
ReplyDeleteநான் அண்ணன் கிளையின் ஜாதியே. எதையும் ரசனையுடன் ஏற்றுக்கொண்டு வாழ்பவன். ஹிஹிஹி. //
நம்மளை மாதிரி ஒரு மார்க்கமான ஆளுங்க, அப்படித்தான் இருப்போம்.
// ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDeleteபதிவு அருமை பகிர்வுக்கு நன்றி நண்பரே..//
உங்க பதிவுகள் எப்பவுமே இப்படித் தானே அருமையா மெசேஜோட இருக்கு.
// கவி அழகன் said...
ReplyDeleteகொண்ணுட்டிங்க தல //
அழகரே, நீங்களும் தமிழைக் கொன்னுட்டீங்க..
செங்கோவி said..மாம்ஸ்,தலகிட்ட சாவித்திரி பத்தி ஃப்ளாஷ்பேக் கேட்டேன்..ஆளைக் காணோம்..அதையும் என்னான்னு கேளுங்க. //////ஃப்ளாஷ்பேக்:::::முன்னணி நடிகர்கள் சிவாஜி,எம்.ஜி.ஆர். மற்றும் பலருடன் நடித்துப் பெயர் பெற்றவர்!சிறந்த நடிகை,சொந்தக் குரலில் பேசுவார்!பாடல்கள் எதுவும் பாடியதில்லை!பாத்திரத்துடன் (சமையல் பாத்திரமல்ல)ஒன்றி விடுவார்!ஜெமினி கணேசனின் காதல் மனைவியரில் ஒருவர்!போதுமா?ஹி!ஹி!ஹி!
ReplyDeleteநாடு போற நிலைமைக்கு இப்படித்தான் தேத்திக்கணும். ஹா...ஹா...ஹா....
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteஃப்ளாஷ்பேக்:::::முன்னணி நடிகர்கள் சிவாஜி,எம்.ஜி.ஆர். மற்றும் பலருடன் நடித்துப் பெயர் பெற்றவர்!சிறந்த நடிகை,சொந்தக் குரலில் பேசுவார்!பாடல்கள் எதுவும் பாடியதில்லை!பாத்திரத்துடன் (சமையல் பாத்திரமல்ல)ஒன்றி விடுவார்!ஜெமினி கணேசனின் காதல் மனைவியரில் ஒருவர்!போதுமா?ஹி!ஹி!ஹி! //
என்ன தல, உங்க ஃப்ளாஷ்பேக் கேட்டா, ஜெமினி கணேசன் ஃப்ளாஷ்பேக்கை சொல்றீங்களே!
//Jayadev Das said...
ReplyDeleteநாடு போற நிலைமைக்கு இப்படித்தான் தேத்திக்கணும். ஹா...ஹா...ஹா....//
வேற வழி......!
நான் டென்சன் பார்ட்டிதான்!
ReplyDeleteஅருமையான பகிர்வு!
//சென்னை பித்தன் said...
ReplyDeleteநான் டென்சன் பார்ட்டிதான்!
அருமையான பகிர்வு! //
நீங்களா..நம்ப முடியவில்லை, இல்லை, இல்லை!
வணக்கம் பாஸ்,
ReplyDeleteஉங்களுக்கு ஆயுள் நூறு..
நான் உங்க ப்ளாக்கில் இருக்கேன்,
நீங்க என் ப்ளாக்கில் இருக்கீங்க,
ஆமா தமிழ் மண ஓட்டுப் பட்டை எங்கே?
ஓஷோ சொன்ன குட்டிக்கதை ( இது 3+ பதிவு)//
ReplyDeleteஎக்ஸ்கியூஸ்மி சார்,
நான் உள்ளே வரலாமா?
ஏன்னா நான் 2+
ஒரு கானகத்தில் காட்டாறு ஒன்று பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையினிலே ஒரு மாமரம் ஒன்று கிளைபரப்பி நின்றிருந்தது. அதில் அண்ணன், தம்பி என இரண்டு கிளைகளும் இருந்தன.
ReplyDeleteஅண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும்.
தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும்.//
அவ்...இதில் உள்குத்து..ஊமக் குத்து ஏதும் இல்லையே...
அண்ணன் கிளையோ “தம்பி, இதை மனிதர்கள் கண்காட்சியில் காசு கொடுத்து அனுபவிக்கிறார்கள். நமக்கோ இலவசமாகக் கிடைச்சிருக்கு. சொய்ங்..சொய்ங்னு போறது சூப்பரா இருக்கில்ல?” என்றது.//
ReplyDeleteஅவ்....சொந்தமாக பலர் உழைத்து அனுபவிக்கும் இன்பத்தை....நோகாமல் பலர் நோம்பிக் கும்பிடுறாங்களே...எனும் ஐடியா தான் எனக்கு இதில் கிளிக் ஆகிறது.
மனித மனங்களுக்கு எப்போதும் இரு வேறுபட்ட உணர்வுகள் கிடைக்கும் என்பதனை அழகாகச் சொல்லியிருக்கிறார் ஓஷோ..
ReplyDeleteநிரூபன் said...
ReplyDelete//வணக்கம் பாஸ்,
உங்களுக்கு ஆயுள் நூறு..//
எதுக்குய்யா அவ்வளவு? என் புள்ளைங்க பாவம்யா!
//ஆமா தமிழ் மண ஓட்டுப் பட்டை எங்கே?//
அதுவா, காக்கா தூக்கிட்டுப் போயிருச்சு!
//தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும்....அவ்...இதில் உள்குத்து..ஊமக் குத்து ஏதும் இல்லையே...//
அடப்பாவிகளா....எப்படிய்யா உங்க கண்ணுக்கு மட்டும் இப்படித் தெரியுது?
வாழ்க்கைத்தத்துவத்தை மிக எளிய முறையில் அழகாக
ReplyDeleteவிளக்கியிருக்கிறீர்கள்
ஓசோ வின் அழகிய தத்துவ விளக்கக் கதை.
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
எளிய முறையில் வாழ்க்கை மகத்துவம்..
ReplyDeleteபாராட்டுகள் மாம்ஸ்..
செங்கோவி said......என்ன தல, உங்க ஃப்ளாஷ்பேக் கேட்டா, ஜெமினி கணேசன் ஃப்ளாஷ்பேக்கை சொல்றீங்களே!////என் கிட்ட கேமரா மட்டும் தான் இருக்குது!
ReplyDeleteஅண்ணன் கிளையோ “தம்பி, இதை மனிதர்கள் கண்காட்சியில் காசு கொடுத்து அனுபவிக்கிறார்கள். நமக்கோ இலவசமாகக் கிடைச்சிருக்கு. "சொய்ங்".."சொய்ங்"னு போறது சூப்பரா இருக்கில்ல?” என்றது./////இந்த "சொய்ங்","சொய்ங்"குன்னு போற பாக்கியம் நமக்குக் கிடைக்கலியே?
ReplyDelete//விடுதலை கரடி said...
ReplyDelete......................//
ஏன்யா இப்படி.....வேற வழியில்லை, தூக்குறேன்.
அண்ணே சூப்பர் அண்ணே
ReplyDeleteரியலி சூப்பர்
அண்ணே நான் அண்ணன் கிளை மாதிரி இருக்கணும் என்று நினைக்குறேன், ஆனா முடியுது இல்லையே அவ்வவ்
ReplyDeleteநண்பா இந்த கதையை முழுமையாக உணர்ந்தவர்கள் எதற்குமே கவலைப்படமாட்டார்கள். இதே கதையை இரண்டு இலைகளை வைத்து கேள்வி பட்டிருக்கிறேன்.
ReplyDeleteமழை பெய்யட்டும்’
ReplyDeleteயோவ உண்மையாதான சொன்னேன்??காந்தி பத்திய பதிவில் கூட உமது "நைட்டு சாதனை" படத்தைதான போடுற?எண்ண பழக்கமா இது?ஒன்னோட படத்த போடு நாலு கொரங்கு படத்த போடு!!நீ பண்ண சாதனைய நாங்க பாக்கணும் அவ்வளவுதானே?பாத்தாச்சி எடுத்துடு!
ReplyDeleteஇவளவு லேட்டா கதை கேக்க வந்தா இப்பிடித்தான்!!
ReplyDeleteஎல்லாரும் ஓடிட்டாங்க!
@துஷ்யந்தன்
ReplyDelete//நான் அண்ணன் கிளை மாதிரி இருக்கணும் என்று நினைக்குறேன், ஆனா முடியுது இல்லையே அவ்வவ்//
அது கொஞ்சம் கஷ்டம் தான், தொடர்ந்து முயற்சி செய்ங்க.
@பாலா //இதே கதையை இரண்டு இலைகளை வைத்து கேள்வி பட்டிருக்கிறேன்.//
ReplyDeleteஅப்படியா, அதுவும் நல்லாத் தான் இருக்கும்.
@இராஜராஜேஸ்வரி
ReplyDelete//மழை பெய்யட்டும்’//
நன்றி சகோ.
ஓஷோ தந்த நல்ல கருத்துக்களையெல்லாம் விட்டிட்டு இந்த உலகம் அவருக்கு ஒரு sex முகமூடிமட்டும் மாட்டிவிட்டிருக்கிறது. முடிந்தால் அவரது புத்தகங்களப் படித்துப்பாருங்கள். ஆனால் தண்ணியில மிதக்கிற கிக்கெல்லாம் கிடைக்கும் என நினைத்துப் படித்துவிட்டு அப்புறம் என்னைத் திட்டாதையுங்கோ.கதையைப் பகிர்ந்ததற்கு நன்றிகள் செங்கோவி
ReplyDeleteநல்ல கதை. படித்து நீங்கள் சொன்ன மாதிரி என்ஜாய் பண்ணி விட்டு கடந்துவிட்டோம். நான் +2 வாக்கும்.
ReplyDeleteஅருமையான கதை பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete