டிஸ்கி : இங்கு பெயர், ஊர் மற்றும் சில அடிப்படை விவரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதனால் கவலைப்படாமல் படிங்க.
இன்று மதியம் கொஞ்சம் லேட்டாக எங்கள் கம்பெனி கேண்டீனுக்கு சாப்பிடப்போனேன். அது மதுரைக்காரர் ஒருவர் லீசுக்கு எடுத்து நடத்தும் கேண்டீன். எனவே சில தமிழர்களும் சர்வர்களாக வேலை செய்கிறார்கள். அதில் மணி அண்ணனும் ஒருவர். ரொம்ப நல்லவர். எல்லோருக்கும் சிக்கன் பீஸ் ஒன்று வைத்தால், எனக்கு ரெண்டு வைப்பார். நான் சாம்பார் ரவுண்டு முடித்த அடுத்த கணமே ரசத்துடன் ரெடியாக நிற்பார். மற்றவர்கள் கூப்பிட்டால் தான் வருவார்.
எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் கவனிப்பு உண்டு. ஒருவேளை அதற்குக் காரணம் நான் அவரை அண்ணா என்று அழைப்பதால் இருக்கலாம். எல்லோரும் அவரை பெயர் சொல்லியோ, ‘சாம்பார்’ ‘ரசம்’ என்றோ அழைக்கும்போது, நான் அண்ணன் என்றது அவருக்குப் பிடித்திருக்கலாம். இன்று கேண்டீனில் நான் தான் கடைசி என்பதால், ஃப்ரீயாக இருந்தார்கள். நானும் சாப்பிட்டுவிட்டு, அவருடன் ‘எந்த ஊருண்ணே நீங்க?” என்று கேட்டேன்.
“எனக்கு ராஜபாளையம்ங்க..” என்றார்.
“ராஜபாளையமா...அங்க பக்கத்துல கிராமமா?”
“இல்லை சார்..டவுனே தான்..$$$ நகர்”
அங்கே என் அண்ணன் ஒருவர் ‘பெரிய கை’ என்பதால் ”அவரைத் தெரியுமா” என்றேன்.
“நல்லாத் தெரியும் சார்..அவர் என் பிஸினஸ்க்கு எவ்வளவோ ஹெல்ப் பண்ணி இருக்கார். அவரை உங்களுக்குத் தெரியுமா?”
“ம்..அண்ணன் தான்.”
சர்வர் பிஸினஸ் என்று சொல்கிறாரே என்று ஆச்சரியப்பட்டு “என்ன பிஸினஸ் பண்ணீங்க?” என்றேன்.
“என்ன பண்ணலைன்னு கேளுங்க. அவர் ஹெல்ப் பண்ணது செங்கல் சூளை பிஸினஸ்க்கு. முதல்ல நான் மலேசியால இருந்தேன் சார். அங்க இருந்தே யாவாரத்துல இறங்குனேன். நல்ல காசு. அப்புறம் நம்மூருக்கு வந்துட்டேன் சார். விவசாயம், செங்கச் சூளை, ஏஜென்ஸின்னு மூணு பிசினஸ் பண்ணேன்..காசு கொட்டோகொட்டுன்னு கொட்டுச்சு. உங்க அண்ணன்லாம் அப்போ சாதாரண ஆளு..தப்பா நினைச்சுக்காதீங்க..ஆனா என்கூட ரொம்ப பழக்கம். அவருக்குத் தெரிஞ்ச எல்லா காண்ட்ராக்டர்கிட்டயும் என்னைப் பத்திச் சொல்லி, நிறைய கஸ்டமரை தேடிக்கொடுத்தார்..நல்ல மனுசன்..”
“நான் ஒன்னும் நினைக்கலை..சொல்லுங்க..நம்மூருல அப்போ கார் ரொம்ப கம்மி சார். அப்பவே நானும் ஒரு கார் வாங்கிட்டேன். சம்சாரம், 2 பொம்பளைப்பிள்ளைன்னு அவ்வளவு சந்தோசமான வாழ்க்கை சார்..திடீர்னு சொந்தக்காரன் ஒருத்தன் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புவோம், நல்ல பிசினஸ்ன்னு சொன்னான். அவனுக்கு நிறைய ஏஜெண்ட் கூட லின்க் இருந்துச்சு..
ஒரு வருசம் நல்லாத்தான் போச்சு. மொத்தமொத்தமா நிறையப்பேரை அனுப்புவோம். ஒருதடவை 60 பேரை அனுப்ப எல்லாம் ரெடி பண்ணோம். ஆளுக்கு ஒரு லட்சம் வாங்கி, ஏஜெண்ட்கிட்ட கொடுத்தோம். திடீர்னு அந்த ஏஜெண்ட் மாயமாயிட்டான். எங்க தேடியும் கிடைக்கலை.எல்லாரும் கொடுத்த காசைக் கேட்டு மிரட்டுறாங்க..என் சொந்தக்காரனும் விட்டுட்டு வெளிநாட்டுக்கு ஓடிட்டான். காசு கொடுத்தவன் எல்லாம் கூலி வேலை பார்க்கிறவங்க..கடன உடன வாங்கி கொடுத்திருந்தாங்க..ஓடறதுக்கு மனசு கேட்கலை..என் சொத்து எல்லாத்தையும் வித்து, எல்லாருக்கும் காசை கொடுத்திட்டேன் சார்..ரெண்டு வீடு, $$$மலைகிட்ட தோப்பு எல்லாம் போச்சு..”
“$$$ மலைகிட்ட தோப்பா? எந்தத் தோப்பு?” அந்த இடம் என் பூர்வீகக் கிராமத்திற்கு அருகில் என்பதால் ஆர்வத்துடன் கேட்டேன். அவர் இடத்தைச் சொன்னார்.
எனக்கு அவரை அடையாளம் தெரிந்தது..”மணி நாயக்கரா நீங்க?” என்றேன்.
அவர் கண் கலங்கிவிட்டது. “ஆமாம் சார், என்னை இப்படி இப்பக்குள்ள யாருமே கூப்பிடலை..அங்க எல்லாரும் இப்படிதான் மரியாதையா கூப்பிடுவாங்க சார் ” என்றார்.
அவர் வாங்கிய தோப்பு என் பெரியப்பாவுடையது. மூன்று பெண்ணைக் கட்டிக்கொடுத்து கடனாளி ஆன பெரியப்பா, கடனில் இருந்து மீள வழி இல்லாமல் அதை 18 வருடம் முன்பு விற்றார். அதை விற்கும் முடிவு எடுக்கும்போது, நான் அங்கு இருந்தேன். அந்த மூன்று பெண்களும் விற்க வேண்டாம் என்று அழுதார்கள். அதுவரை ’ பெரிய மனிதராக’ இருந்தவர், அதை விற்றபின் சாதாரண மனிதர் ஆனார். பொருள் இல்லாதவரை பொருளற்றவராகச் செய்தது பணம்.
அப்போது மணி நாயக்கர் பற்றி நிறையக் கேள்விப்பட்டேன். பிஸினஸ் மேன் என்ற கௌரவம் அவருக்கு இருந்தது. இப்போது அதே மணி நாயக்கரை சர்வராக பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. இப்போது நான் அவரைப் பற்றிக் கேட்டது பெரும் தவறென்று புரிந்தது. அவரைப் பற்றித் தெரிந்த என் முன் சர்வராக நிற்கும் அவலத்தை அவர் உணர்ந்தார். முகம் சுண்டிவிட்டது. ஆனாலும் தொடர்ந்து, தான் வீழ்ந்த கதையை சொல்லிக்கொண்டே சென்றார்...
எனக்கு இவரிடம் தன் தோப்பை விற்ற பெரியப்பா ஞாபகம் வந்தது. அவரும் எப்படி இருந்த மனிதர்..இவரைப் போலவே...
காலம் பலரின் வாழ்க்கையையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிறது. எங்கள் ஊரில் நான் சிறுவனாக இருந்த போது அதிகாரமிக்கவர்களாக இருந்த பல குடும்பங்கள், இப்போது ஒடுங்கிக் கிடக்கின்றன. கண்முன்னே பலரும் ஒரே நாளில் உச்சியில் இருந்து கீழே விழுந்துகொண்டே இருக்கின்றார்கள்..அதன்பின்னும் எது நம்மை ‘என்னை யாராலும் அசைக்க முடியாது..நான் பெரிய ஆள்’ என்று எண்ண வைக்கின்றது? எது அதிகாரமும் பணமும் இருப்பதாலேயே சகமனிதர்களை ஏளனமாக எண்ண வைக்கின்றது? எது நம்மை கண்மண் தெரியாமல் ஆட வைக்கின்றது?
“ரெண்டு பொட்டப்புள்ளைங்க சார்..கல்யாணத்துக்கு நிக்குது. அம்பது பவுனை என் பொண்டாட்டி அப்பவே பத்திரப்படுத்திட்டா. இப்போ கல்யாணச் செலவுக்கு காசு வேணும். அதான் இங்க வந்துட்டேன். டிரைவர் வேலைன்னு சொன்னாங்க சார். சொந்தமா கார் வச்சிருந்ததால ட்ரைவிங் தெரியும். இங்க வந்தா, சர்வரா போட்டுட்டாங்க”
“என்ன வேலையா இருந்தா என்னண்ணே..திருடுறமா, ஏமாத்துறமா?” என்றேன்.
“ஆமாம் சார்..ஆள் இல்லேன்னா எச்சித்தட்டுக்கூட கழுவுவேன் சார்..இப்போதைக்கு கொஞ்சம் காசு சேர்க்கணும் சார்..புள்ளைகளை கரையேத்தணும்” என்றார் மணி நாயக்கர்.
தன் குழந்தைகளுக்காக, அவர்களின் வாழ்க்கைக்காக இங்கே தினமும் அவமானப்பட்டு சம்பாதிக்கும் அந்த நல்ல மனிதரைப் பார்க்கும்போது எனக்கு மரியாதை அதிகம் ஆகியது. வாழ்க்கையில் கடும் தோல்வியைச் சந்தித்துவிட்டபின்னும், தன் குடும்பத்தை விட்டு ஓடாமல் அவரைக் கட்டி வைத்திருப்பது எது? இந்தப் பாசத்தின் அடிவேர் எங்குள்ளது?
”சார்..ஊருக்குப் போனா என்னைப் பார்த்தேன்னு யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் சார்” என்றார். ஏறக்குறைய அழுகின்ற நிலையில் இருந்தார். நானும் கனத்த மனதுடன் “இல்லைண்ணே..அதெல்லாம் சொல்ல மாட்டேன்” என்று சொல்லிவிட்டு யோசனையோடே என் இடத்திற்கு வந்தேன்.
’நம்ம வாழ்க்கையை நாம முழுசா வாழணும்..எஞ்சாய்’ என்ற ஆட்டத்திற்கு நடுவே, இந்த மனிதர்களை குடும்பத்திற்காக உழைக்க வைப்பது எது? ’தனிமனித வாழ்க்கையும் சுதந்திரமுமே முக்கியம்’ என்று பேசினாலும் அடிப்படையில் கண்ணுக்குத் தெரியாத ஏதோவொரு தர்மம், நம்மை இன்னும் மனிதர்களாகவே வைத்துள்ளது...நாம் இன்று வாழ்கின்ற இந்த வாழ்க்கை, இது போல் நமக்குத் தெரிந்த/தெரியாத முன்னோர்களின் தியாகத்தால் வந்ததல்லவா? காடு, கழனியில் உழன்று படிப்படியாக நம்மை இந்த நிலைக்கு கொண்டுவந்தது வம்சவம்சமாக அவர்கள் உழைத்த பலன் எதிர்பாரா உழைப்பல்லவா? அவர்கள் எதை எதிர்பார்த்து, தன்னை வருத்தி நம்மை இந்த இடத்திற்கு கொண்டு வந்தார்கள்? ‘தன் சந்தோசம் மட்டுமே முக்கியம்’ என்று எண்ணாமல் அவர்களைக் காத்தது எது?
நிலையில்லாத உலகில் நிலைத்து நிற்கும் அந்த தர்மம் தான் என்ன?............
//RK நண்பன்.. said... [Reply]
ReplyDeleteஎன்ன அண்ணன் இன்னும் பதிவ போட காணோம்??//
செங்கோவி said...
இனிமே பதிவு டைம் 12.15ன்னு வச்சிக்கோங்கப்பா.
Arumai
ReplyDeleteஅட்டகாசம். அந்த மனிதருடன் பேசிய உணர்வை எனக்கு ஏற்படுத்திவிட்டீர்கள்
ReplyDelete//வினையூக்கி said...
ReplyDeleteArumai//
நன்றி நண்பா.
கண் கலங்க வைத்த பதிவு.இப்படி எத்தனையோ?இது ஏமாந்த கதை! எங்கள் நிலை,சொல்ல வேண்டியதேயில்லை!ஒரு வகையில் நாமும் ஏமாந்தவர்கள் தானோ?
ReplyDeleteநெகிழ வைக்கும் அனுபவம் செங்கோவி, அந்த மனிதரிடம் நீங்கள் நடந்துகொண்ட விதம் ஒரு முன்மாதிரி....!
ReplyDeleteஊரில்,அரசு வேலை என்று தலை நிமிர்ந்து நடந்தவர்களைக் கூட பேரினவாதம் அடக்கி,ஒடுக்கி அகதியாக அலைய வைத்ததே?
ReplyDelete//கணேஷ் said...
ReplyDeleteஅட்டகாசம். அந்த மனிதருடன் பேசிய உணர்வை எனக்கு ஏற்படுத்திவிட்டீர்கள்//
நன்றி நண்பரே.
//Yoga.s.FR said...
ReplyDeleteகண் கலங்க வைத்த பதிவு.இப்படி எத்தனையோ?இது ஏமாந்த கதை! எங்கள் நிலை,சொல்ல வேண்டியதேயில்லை!ஒரு வகையில் நாமும் ஏமாந்தவர்கள் தானோ?//
உண்மை தான் பாஸ்.
நிலையில்லாத உலகில் நிலைத்து நிற்கும் அந்த தர்மம் தான் என்ன?////முற்பிறப்பில் செய்த வினை என்பார்கள், நம்மூரில்!படைத்தவனுக்கே வெளிச்சம்!
ReplyDelete// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteநெகிழ வைக்கும் அனுபவம் செங்கோவி, அந்த மனிதரிடம் நீங்கள் நடந்துகொண்ட விதம் ஒரு முன்மாதிரி....!//
இல்லேன்னா நாம படிச்சதுக்கே அர்த்தம் இல்லியேண்ணே..
//Yoga.s.FR said...
ReplyDeleteஊரில்,அரசு வேலை என்று தலை நிமிர்ந்து நடந்தவர்களைக் கூட பேரினவாதம் அடக்கி,ஒடுக்கி அகதியாக அலைய வைத்ததே?//
ஆம், இங்கே எது எப்போது எப்படி மாறும் என்றே தெரியவில்லை..இது இப்போது அடக்கி ஆள்வோருக்கும் தெரியவில்லையே ஐயா.
மன்னிக்கணும் நண்பா, எப்பவுமே உங்க பதிவுல வடைனு போட முன்னாடி கொஞ்சமாவது படிப்பேன், இன்னைக்கு தவறு செய்து விட்டேன்... இந்த மாதிரி ஒரு நல்ல பதிவில் திருஷ்டி போட்டு போல,
ReplyDeleteமிக அருமையான நடையில் உங்களுக்கே உரிய அந்த மனிதாபிமானத்துடன் பகிர்ந்துள்ளீர்கள்...
எது நம்மை கண்மண் தெரியாமல் ஆட வைக்கின்றது?///ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமனது கனமா இருக்கு நண்பா, காலம் தான் எத்தனை விசித்திரமானது..
ReplyDeleteஎல்லாம் வல்ல இறைவன் அவருக்கு துணை இருந்து வளிநடத்துவாராக.
//Yoga.s.FR said...
ReplyDeleteஎது நம்மை கண்மண் தெரியாமல் ஆட வைக்கின்றது?///ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா?//
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு...
//
ReplyDeleteRK நண்பன்.. said...
மன்னிக்கணும் நண்பா, எப்பவுமே உங்க பதிவுல வடைனு போட முன்னாடி கொஞ்சமாவது படிப்பேன், இன்னைக்கு தவறு செய்து விட்டேன்... இந்த மாதிரி ஒரு நல்ல பதிவில் திருஷ்டி போட்டு போல,
//
அதனால் என்ன நண்பா...விடுங்க.
செங்கோவி said...ஆம்,இங்கே எது எப்போது எப்படி மாறும் என்றே தெரியவில்லை..இது இப்போது அடக்கி ஆள்வோருக்கும் தெரியவில்லையே ஐயா.////அதைத் தான் அகங்காரம்,ஆணவம்,"நான்" என்ற அகந்தை என்று இந்துமதம் சொல்கிறது!
ReplyDelete//RK நண்பன்.. said...
ReplyDeleteமனது கனமா இருக்கு நண்பா, காலம் தான் எத்தனை விசித்திரமானது..
எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு துணை இருந்து வளிநடத்துவாராக.//
பேசும்போது ‘இன்னும் 4 வருசம் சார்..அப்புறம் நல்ல நேரம் வந்திரும்னு ஜோசியர் சொல்லி இருக்கார்’ என்றார்..நானும் அப்ப்டியே நடக்கட்டும் என்று நினைத்துக்கொண்டேன்..
“எனக்கு ராஜபாளையம்ங்க..” என்றார்.////டக்குனு,கவுண்டரு நெனைப்பில வந்துட்டாருங்க!ச்சி போங்க சார் அந்தண்டைன்னு வெரட்டி விட்டுட்டேன்!
ReplyDeleteதொட்டுட்டீங்க செங்கோவி மனச...
ReplyDelete//
ReplyDeleteரெவெரி said...
தொட்டுட்டீங்க செங்கோவி மனச...//
உண்மையில் அவர் தான் நம் நெஞ்சைத் தொட்டுவிட்டார்...அதான் நானா யோசிச்சேனை ஒதுக்கி வச்சுட்டு இதை எழுதுனேன்...
உங்க மூலமா தான் எங்களுக்கு..
ReplyDeleteவாழ்கையில் நிறைய இது மாதிரி...ஒரு நாள் டாப்ல...அடுத்த நாள்..?
ReplyDeleteஎல்லாம் சரி, வெளிய யார் கிட்டயும் சொல்லிடாதிங்கன்னு.................
ReplyDeleteவணக்கம் மாப்பிள இந்தப்பதிவு உண்மையிலேயே என்ர மனச தொட்ட பதிவு.. இஞ்சேயும் இப்பிடி எனக்கு ஒருவர் அறிமுகமானார் ஆனால் உங்கள் மணி அண்ணன் மாதிரி பணக்காரர் ஆக இருந்தவர் இல்லை.. இவரின் அப்பாவிடம்தான் எனது சிறுவயதில் முடி வெட்டுவேன்.. ஒருநாள் லாச்சப்பல் கடையில் இவரிடம் எதேச்சையாக முடிவெட்டிக்கொண்டு இருக்கும்போதும் தன்னுடைய கதையை சொன்னார்.. நான் சிறுவயதில் ஓடித்திரிந்த ஊரில் இரண்டு பிள்ளைகளையும் இராணுவதாக்குதலில் கொடுத்ததையும் இங்கு புதிய வாழ்கையை ஆரம்பித்ததையும் கேட்கும்போது கண்கலங்கி விட்டேன்..
ReplyDeleteஎவ்வளவோ தூரங்கள் தாண்டி வந்தும் எங்கள் கிராமத்துக்காரர்களை சந்திக்கும்போது மகிழ்சியாக இருக்கும்..ஆனால் இப்படிப்பட்டவர்களை சந்திக்கும்போது..!!!??(அது சரி ஏன்யா என்ர மணியண்ணைய பிடிச்சீங்க அவரின் பெயர் ஏற்கனவே காட்டானால் வாங்கப்பட்டது)
நாம் இப்போது வாழ்கின்ற வாழ்க்கைக்கு நம் முன்னோர் செய்த தியாகமே காரணம்!எங்களுக்குப் பின் வரும் சந்ததிக்காக நாமும் ஏதாவது செய்தாக வேண்டும்.
ReplyDelete//காட்டான் said...
ReplyDeleteவணக்கம் மாப்பிள இந்தப்பதிவு உண்மையிலேயே என்ர மனச தொட்ட பதிவு..//
நன்றி மாம்ஸ்.
நாம் இப்போது வாழ்கின்ற வாழ்க்கைக்கு நம் முன்னோர் செய்த தியாகமே காரணம்!எங்களுக்குப் பின் வரும் சந்ததிக்காக நாமும் ஏதாவது செய்தாக வேண்டும்.
ReplyDeleteஉண்மைதான்யா மற்றவர்களை பேர் சொல்லி அழைக்காமல் உறவுமுறை சொல்லி அழைத்தால் அவர்கள் மனதில் நாங்கள் உயர்ந்து நிற்போம்.. (பிறகென்ன கொலஸ்ரோல ஏத்திறதுக்கு பிரியாணிக்குள்ள இரண்டு முட்டை கூடுதலாய் இருக்குமய்யா.. ஹி ஹி ஹி)
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteஎல்லாம் சரி, வெளிய யார் கிட்டயும் சொல்லிடாதிங்கன்னு.................//
அவரைத் தவிர யார் படிச்சாலும்..அவர் பிள்ளைகளே படிச்சாலும், அவர்தான்னு தெரியாது!!
போதுமா?
மணி பத்து ஆகிறது,தூங்கலாம்!காட்டன் தம்பி,பொன் நுயி!(bonne nuit!)
ReplyDeleteஅவரைத் தவிர யார் படிச்சாலும்..அவர் பிள்ளைகளே படிச்சாலும், அவர்தான்னு தெரியாது!!
ReplyDeleteபோதுமா?///O.K!
// காட்டான் said...
ReplyDeleteஉண்மைதான்யா மற்றவர்களை பேர் சொல்லி அழைக்காமல் உறவுமுறை சொல்லி அழைத்தால் அவர்கள் மனதில் நாங்கள் உயர்ந்து நிற்போம்.. (பிறகென்ன கொலஸ்ரோல ஏத்திறதுக்கு பிரியாணிக்குள்ள இரண்டு முட்டை கூடுதலாய் இருக்குமய்யா.. ஹி ஹி ஹி)
//
ஹா..ஹா..அதே தான் நடக்குது மாம்ஸ்..
தியாகராஜ பாகவதரை ஊருக்குள் ஒரு நிலமும் வாங்கக்கூடாதென்று ஊர்கூடி முடிவெடுத்ததாக கேள்விப்பட்டேன்.. (அவ்வளவு நிலங்களை வாங்கிப்போட்டார் அந்தக்காலத்தில்)தங்கத்தட்டில் சாப்பிட்ட அவரின் கடைசி காலம்...!!? ஊழ்வினை என்பதை விட திட்டமிடல் இல்லைன்னலாமா..?
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteமணி பத்து ஆகிறது,தூங்கலாம்!காட்டன் தம்பி,பொன் நுயி!(bonne nuit!)//
பொண்ணு நுயி பாஸ்.
//காட்டான் said...
ReplyDeleteதியாகராஜ பாகவதரை ஊருக்குள் ஒரு நிலமும் வாங்கக்கூடாதென்று ஊர்கூடி முடிவெடுத்ததாக கேள்விப்பட்டேன்.. (அவ்வளவு நிலங்களை வாங்கிப்போட்டார் அந்தக்காலத்தில்)தங்கத்தட்டில் சாப்பிட்ட அவரின் கடைசி காலம்...!!? ஊழ்வினை என்பதை விட திட்டமிடல் இல்லைன்னலாமா..?//
தெரியலை மாம்ஸ்..ஒருவேளை நமக்காக ஆண்டவன் தொடர்ந்து நடத்தற பாடமோ? நமக்குத் தான் புரியலியோ?
//எவ்வளவோ தூரங்கள் தாண்டி வந்தும் எங்கள் கிராமத்துக்காரர்களை சந்திக்கும்போது மகிழ்சியாக இருக்கும்..ஆனால் இப்படிப்பட்டவர்களை சந்திக்கும்போது..!!!??(அது சரி ஏன்யா என்ர மணியண்ணைய பிடிச்சீங்க அவரின் பெயர் ஏற்கனவே காட்டானால் வாங்கப்பட்டது)//
ReplyDeleteஇதை முதல்ல ஐடியா மணிகிட்ட சொல்லுங்க.
//Yoga.s.FR said...
ReplyDeleteநாம் இப்போது வாழ்கின்ற வாழ்க்கைக்கு நம் முன்னோர் செய்த தியாகமே காரணம்!எங்களுக்குப் பின் வரும் சந்ததிக்காக நாமும் ஏதாவது செய்தாக வேண்டும்.//
அதுவே இங்கு தொக்கி நிற்கும் செய்தி!
மாப்பிள உங்கட டெக்கினிக்க புதிய பதிவர்களுக்கும் சொல்லிக்குடுங்கோய்யா.. இப்பிடிதான்யா அங்க ஒருத்தர் ஊர் பேர போட்டு செம்ப நெளிச்சுப்போட்டு இருக்கிறாரையா..!! ஹி ஹி.. அது சரி மாப்பிள அது என்னையா ssss நகர் நான் கேள்விப்பட்டதே இல்லையேய்யா..?? எங்க இருக்கையா அந்த இடம்.. ஹி ஹி
ReplyDelete//காட்டான் said...
ReplyDeleteமாப்பிள உங்கட டெக்கினிக்க புதிய பதிவர்களுக்கும் சொல்லிக்குடுங்கோய்யா.. இப்பிடிதான்யா அங்க ஒருத்தர் ஊர் பேர போட்டு செம்ப நெளிச்சுப்போட்டு இருக்கிறாரையா..!! ஹி ஹி.. அது சரி மாப்பிள அது என்னையா ssss நகர் நான் கேள்விப்பட்டதே இல்லையேய்யா..?? எங்க இருக்கையா அந்த இடம்.. ஹி ஹி
//
எது அந்த கிஸ் ராஜா, குஷ்பூ ராஜா ஆன கதையா?
$$$நகர் அமெரிக்கால இருக்கு மாம்ஸ்.
செங்கோவி said...
ReplyDelete//எவ்வளவோ தூரங்கள் தாண்டி வந்தும் எங்கள் கிராமத்துக்காரர்களை சந்திக்கும்போது மகிழ்சியாக இருக்கும்..ஆனால் இப்படிப்பட்டவர்களை சந்திக்கும்போது..!!!??(அது சரி ஏன்யா என்ர மணியண்ணைய பிடிச்சீங்க அவரின் பெயர் ஏற்கனவே காட்டானால் வாங்கப்பட்டது)//
இதை முதல்ல ஐடியா மணிகிட்ட சொல்லுங்க.
September 8, 2011 1:38 AM
மாப்பிள இதையெல்லாம் நான் அவரிட்ட கேக்க வெக்கமா இருக்கையா.. இப்பதான்யா என்னைய நல்லா படிச்சவர்ன்னு சாட்டிபிக்கற் தந்திருக்காரு.. பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்காருபோல .. அவற்ற பேருக்கு பின்னால ரயில் பெட்டி போல பட்டமெல்லாம் போட்டிருக்கிறாரு..!!?
//காட்டான் said...
ReplyDeleteமாப்பிள உங்கட டெக்கினிக்க புதிய பதிவர்களுக்கும் சொல்லிக்குடுங்கோய்யா.. இப்பிடிதான்யா அங்க ஒருத்தர் ஊர் பேர போட்டு செம்ப நெளிச்சுப்போட்டு இருக்கிறாரையா..!! ஹி ஹி.. அது சரி மாப்பிள அது என்னையா ssss நகர் நான் கேள்விப்பட்டதே இல்லையேய்யா..?? எங்க இருக்கையா அந்த இடம்.. ஹி ஹி
//
எது அந்த கிஸ் ராஜா, குஷ்பூ ராஜா ஆன கதையா?
$$$நகர் அமெரிக்கால இருக்கு மாம்ஸ்.
ஹி ஹி பரவாயில்ல இன்னும் கொஞ்ச நேரத்தில அவரும் வந்திடுவாரு உங்கட டெக்கினிக்க பாத்திட்டு போகட்டும்..
மாப்பிள சிவலயன வண்டியில பூட்டீட்டன் வீட்டபோய் அவனுக்கு தவுடு வைச்சிட்டு நேரமிருந்தா வாறேன்யா..
ReplyDeleteகாட்டான் குழ போட்டான்...
மனசை தொட்ட பதிவு பாஸ், அவர் கண்ணுக்கே நிக்குறார்.
ReplyDeleteவாழ்கையில் எதுவும் நிலையில்ல ;-((
ReplyDeleteஅவர் மட்டும் அல்ல நீங்களும் ஒரு வித்தியாசமான நல்ல மனிதர்தான்
ReplyDeleteரியலி கிரேட் அண்ணா
உங்கள் பதிவுகளில் சிறந்த பதிவுக்குள் முக்கியமானது அண்ணா இந்த பதிவு.
ReplyDeleteஇனிய இரவு வணக்கம் பாஸ்,
ReplyDeleteஇதை வெளிய யார்கிட்டயும் சொல்லிடாதீங்க சார்....//
ReplyDeleteநீங்க சொல்லிட்டீங்க இல்லே..
கண்டிப்பாக யார் கிட்டேயும் சொல்ல மாட்டோம் பாஸ்.
எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் கவனிப்பு உண்டு. ஒருவேளை அதற்குக் காரணம் நான் அவரை அண்ணா என்று அழைப்பதால் இருக்கலாம்//
ReplyDeleteநானும் இனிமே உங்களை அண்ணா என்றே அழைக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்...
நீங்களும் எனக்கு அன்பாக சம்திங் ஏதாச்சும் தருவீங்க இல்லே....
“என்ன வேலையா இருந்தா என்னண்ணே..திருடுறமா, ஏமாத்துறமா?” என்றேன்.//
ReplyDeleteமனதை நெகிழச் செய்யும் வரிகள் பாஸ்.
வாழ்க்கை என்பது நிலையில்லாதது என்பதனை மணி நாயக்கரின் கதையின் மூலம் உரைத்திருக்கிறீங்க.
ReplyDeleteஇப்படியும் பல மனிதர்கள் எனும் நினப்பிற்கு அப்பால் உலகில் ஏற்றத் தாழ்வுகள் எப்போதும் சமம் என்பதனை உங்களின் இப் பதிவு அனுபவ வெளிப்பாடாகச் சொல்லி நிற்கிறது.
எப்பிடி இருந்த மனுஷன் இப்பிடி ஆயிட்டார். (இதை எனக்கும் சொல்லலாம்)
ReplyDeleteஅது சரி நான் கமெண்ட் பண்ணினான் எண்டு வெளில சொல்லிடாதீங்க
மாப்ள...நெஞ்சை நெகிழ வச்சிட்டீங்க... எனக்கு பதில் சொல்றாப்போல இருக்கு நன்றி...இருந்தாலும் இந்த நிகழ்ச்சில ஒன்னை விட்டுட்டீங்க...ஏன் அவர் கீழ விழுந்தார்...பணம் நல்லா சம்பாரிச்சும் "பேராசை" என்ற ஒன்று அவரை ஆட்டு வித்ததால் அந்த வெளி நாட்டுக்கு மக்களை ஏற்றுமதி செய்யும் தொழிலில் தன் சொத்து பத்துக்களை இழந்திருக்கிறார்....இதில் நான் சொல்ல வருவது...இருக்கும் போது கிடைக்கும் சிறிய பணமாகினும் அதை குடும்பத்துடன் கழிக்க வேண்டும் என்பதே...(சேமிப்பு தனி!)....அதை விடுத்து கிடைக்கும் போது அள்ளி தெளிப்பதும்...போன பின் குமுறி அழுவதும் தற்கொலைக்கு சமம்....என்னை பொறுத்தவரை ஒரு குழந்தைக்கு பெற்றோர் கொடுக்கும் சொத்துக்கள்...நல்லஉடல் ஆரக்கியத்துடன் பிறப்பு(!)...முடிந்தவரை நல்ல கல்வி....இவை தான் பெரிய தும்பிக்கைகள்...!
ReplyDeleteஇன்னும் இவ்வுலகில் மனோதர்மம் இருக்கிறது என்பதை
ReplyDeleteகாட்டுகிறது உங்கள் பதிவு.
உண்மைதான் நண்பரே..
ReplyDeleteசிலரை 'அண்ணே' கூப்பிடும்போது நம்மகிட்டே அதிக
ஒட்டுதல் காண்பிக்கிறார்கள் அதுவும் பெரும்பாலானோர்
அவரை வேறுவிதமாக அழைக்கையில்.....
சாதாரணமாக ஒரு பேருந்தில் பயணம் செய்கையில்
நடத்துனரை பார்த்து டிக்கெட் டிக்கெட் என்றே அழைப்பார்கள்.....
யாராவது... கண்டெக்ட்டர் சார் என்று அழைத்தால் போதும்
அப்படியே வாய் முழுதும் பல்லாகி விடும்...
மரியாதை கொடுத்து அழைப்பதில் நமக்கும் ஏதும் சிரமமில்லை
அதில் அவர்கள் சந்தோசம் இருக்கிறது என்றால்...
பதிவு சூப்பர் நண்பரே.
”சார்..ஊருக்குப் போனா என்னைப் பார்த்தேன்னு யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் சார்”
ReplyDeleteWhy you have posted his name and his native... because i am from the same place.....
For writing blogs, you are placing other personal details.. take care..
@
ReplyDelete’நம்ம வாழ்க்கையை நாம முழுசா வாழணும்..எஞ்சாய்’ என்ற ஆட்டத்திற்கு நடுவே, இந்த மனிதர்களை குடும்பத்திற்காக உழைக்க வைப்பது எது? ’தனிமனித வாழ்க்கையும் சுதந்திரமுமே முக்கியம்’ என்று பேசினாலும் அடிப்படையில் கண்ணுக்குத் தெரியாத ஏதோவொரு தர்மம், நம்மை இன்னும் மனிதர்களாகவே வைத்துள்ளது...நாம் இன்று வாழ்கின்ற இந்த வாழ்க்கை, இது போல் நமக்குத் தெரிந்த/தெரியாத முன்னோர்களின் தியாகத்தால் வந்ததல்லவா? காடு, கழனியில் உழன்று படிப்படியாக நம்மை இந்த நிலைக்கு கொண்டுவந்தது வம்சவம்சமாக அவர்கள் உழைத்த பலன் எதிர்பாரா உழைப்பல்லவா? அவர்கள் எதை எதிர்பார்த்து, தன்னை வருத்தி நம்மை இந்த இடத்திற்கு கொண்டு வந்தார்கள்? ‘தன் சந்தோசம் மட்டுமே முக்கியம்’ என்று எண்ணாமல் அவர்களைக் காத்தது எது///
உண்மையில் கண்கலங்கிவிட்டது பாஸ்..எங்கல் ஊர்களில் இப்படி நிறைய மணி அண்ணைக்கள் இருக்காங்க.இப்படியான வலிகள் எனக்கு நன்றாக தெரியும்....
அப்பறம் இரவு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவை வெளியிடுறன் நீங்க மிஸ் பன்னாம வந்துடுங்க..ஹி.ஹி.ஹி.ஹி
Yaarkittayum solla koodathunnu sonnar ellathuttayum ippadi thandora poduringale nyayamaa?
ReplyDeletearumai ..
ReplyDelete@Vadivelan
ReplyDelete//”சார்..ஊருக்குப் போனா என்னைப் பார்த்தேன்னு யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் சார்”
Why you have posted his name and his native... because i am from the same place.....
For writing blogs, you are placing other personal details.. take care..//
நீங்க அதே ஊரா? அப்போ உங்களுக்கோ, உங்க சொந்தங்களுக்கோ மணி நாயக்கரை தெரியுமா?
தெரியாதுல்ல, ஏன்னா இங்க பெயர், ஊர் மட்டுமில்லை தொழில்கூட மாற்றப்பட்டுள்ளது. .இங்கே உணர்ச்சிகளும், பேசிய அடிப்படை விஷயமும் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதிவைப் படிக்கும்போதே தெரியலியா....நான் அப்படிச் செய்ய மாட்டேன்னு!.
பாவம் அந்தமனிதர்
ReplyDeleteஆசை எந்த பெரிய மனிதரையும் வீழ்த்திவிடுகிறது
nalla pathivu boss
ReplyDeleteநெஞ்சைத் தொட்ட பதிவு !
ReplyDeleteகண் கலங்க வைத்த பதிவு.இது அனைவருக்கும் பாடம்
ReplyDeleteஅருமையான பதிவு அண்ணே! இப்படியான மனிதர்களை நானும் சந்தித்திருக்கிறேன். பதிவு போடணும்னு நினைச்சேன், அதைவிட சிறுகதையா எழுதினா நல்லா இருக்கும்னு தோணிச்சு...ஆனா சோம்பேறித்தனம் காரணமா செய்யல!
ReplyDeleteசிலபேரை அண்ணான்னு அழைப்பது ஒரு தனி பிரியத்தை எம்மீது ஏற்படுத்தி விடுவதை நானும் அனுபவரீதியாக உணர்ந்திருக்கிறேன்!
எங்கள் நாட்டில் திடீரென ஓரிரவிலேயே பொருளற்றவராக (சிறிது காலமாவது) மாறிய பலரை நான் பார்த்திருக்கிறேன். அந்த வலி அவர்கள் முகத்தில் தெரிவதை சின்ன வயதிலேயே உணர்ந்துகொள்ள முடிந்திருகிறது!
மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!
//’தனிமனித வாழ்க்கையும் சுதந்திரமுமே முக்கியம்’ என்று பேசினாலும் அடிப்படையில் கண்ணுக்குத் தெரியாத ஏதோவொரு தர்மம், நம்மை இன்னும் மனிதர்களாகவே வைத்துள்ளது...நாம் இன்று வாழ்கின்ற இந்த வாழ்க்கை, இது போல் நமக்குத் தெரிந்த/தெரியாத முன்னோர்களின் தியாகத்தால் வந்ததல்லவா? //
ReplyDeleteஅற்புதம். இதுதான் வாழ்க்கையின் நிஜம். உண்மையிலேயே அருமையான பதிவு. வாழ்க்கையைப் பற்றி பெரிதொரு சிந்தனையை கிளறும் பதிவு.
அதிகமான நண்பர்கள் வரும் தங்களது வலையில் இந்தப் பதிவை பகிர்ந்து கொண்டதற்கு உங்களுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
God Bless You.
Sengovi same like this story in Tirupur and coimbatore .Peoples missed money in one stage in their life .They will get money on another stage.when money saved by people on this good stage they will escape from this tragedy
ReplyDeleteஒரு நல்ல மனிதர், பற்றிய நல்ல பதிவு!
ReplyDeleteமாம்ஸ்... பெத்த புள்ளைகளுக்காக அவர் செய்யும் வேலைக்கு தகுந்த பலன் விரைவில் கிடைக்கும்.
ReplyDeleteநல்ல ,,,அவசியமான பதிவு
ReplyDeleteகாலை வணக்கம்,எல்லோருக்கும்!படிக்காதவர்கள்(இந்தக் கதையை)படித்து விட்டு கருத்துரையுங்கள்.ஆழமான கருத்தொன்றை உரைக்கும் கதை.வேறு என்ன சொல்ல?,,,
ReplyDelete//காசு கொடுத்தவன் எல்லாம் கூலி வேலை பார்க்கிறவங்க..கடன உடன வாங்கி கொடுத்திருந்தாங்க..ஓடறதுக்கு மனசு கேட்கலை..என் சொத்து எல்லாத்தையும் வித்து, எல்லாருக்கும் காசை கொடுத்திட்டேன் சார்..ரெண்டு வீடு, $$$மலைகிட்ட தோப்பு எல்லாம் போச்சு..”//
ReplyDeleteஇவர்தான் சார் மனுஷன்...
ஹாட்ஸ் ஆப் டு தட் மேன்..
செங்கோவி said... [Reply] //Yoga.s.FR said... மணி பத்து ஆகிறது,தூங்கலாம்!காட்டான் தம்பி,பொன் நுயி!(bonne nuit!)//பொண்ணு நுயி பாஸ்./////சீச் சீ அப்புடி இல்லிங்க,"பொன்" "நுயி"! நல்லிரவு அப்புடீன்னு அர்த்தம்!
ReplyDeleteஏன் பதிவு போடும் நேரம் 15 நிமிடம் அதிகமா ஆயிடுச்சி?
ReplyDeleteஅன்புள்ள நண்பா
ReplyDeleteஅந்த மதிப்புமிக்க பெரியவர் வாழ்கையில் தாழ்வு இல்லை
பணம் போனால் வாழ்கையில் ஒன்றுமே போகவில்லை
ஆனால் தன் குடும்பத்திற்காக வாழுகிறாரே அவர் தான்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர்
ஆண்டவன் அவருக்கு நிச்சயம் வாழ்கையில் நிம்மதி தருவார்
காலையிலேயே படிச்சிட்டன், அருமையான பதிவு (சார் இது ரொம்ப சீரியஸா இருக்கு சார், இதுக்கு மேல ஒண்ணுமே வரல).
ReplyDeleteஆனா ஒன்னு மட்டும் புரியுது, யாராச்சி ஆப்பு வச்சா நாம தோப்ப விக்கணும்.
கண்கலங்க வச்சிட்டிஎய்யா காலமும் தோல்வியும் சில மனிதர்களை நல்லவனாகவே வச்சிருக்கு இல்லையா...
ReplyDeleteஅருமையான பதிவு...!!!
ReplyDeleteசிறந்த பதிவு....
ReplyDelete// துஷ்யந்தன் said...
ReplyDeleteமனசை தொட்ட பதிவு பாஸ், அவர்
கண்ணுக்கே நிக்குறார்.//
எனக்கும் தான் துஷ்.
// கந்தசாமி. said...
ReplyDeleteவாழ்கையில் எதுவும் நிலையில்ல ;-
(( //
ஆம், அதற்கான காரணம் தான்
வாழ்வின் மிகப் பெரிய மர்மம்!
// துஷ்யந்தன் said...
ReplyDeleteஅவர் மட்டும் அல்ல நீங்களும் ஒரு
வித்தியாசமான நல்ல மனிதர்தான்
ரியலி கிரேட் அண்ணா //
விடுய்யா..விடுய்யா..இன்னிக்குத்
தான் தெரிஞ்சுதா...
// நிரூபன் said...
ReplyDeleteநானும் இனிமே உங்களை அண்ணா
என்றே அழைக்கலாம் என்று முடிவு
செய்துள்ளேன்...
நீங்களும் எனக்கு அன்பாக சம்திங்
ஏதாச்சும் தருவீங்க இல்லே....//
ஆமா, எக்ஸ்ட்ரா ரெண்டு ஓட்டு
போடுவேன்.
// நிரூபன் said...
வாழ்க்கை என்பது நிலையில்லாதது
என்பதனை மணி நாயக்கரின்
கதையின் மூலம்
உரைத்திருக்கிறீங்க. //
ஆமாம், மணி நாயக்கர் நமக்கு
உரைத்திருக்கிறார்!
// KANA VARO said...
ReplyDeleteஎப்பிடி இருந்த மனுஷன் இப்பிடி
ஆயிட்டார். (இதை எனக்கும்
சொல்லலாம்)
அது சரி நான் கமெண்ட்
பண்ணினான் எண்டு வெளில
சொல்லிடாதீங்க //
ரைட்டு.
விக்கியுலகம் said...
ReplyDelete//மாப்ள...நெஞ்சை நெகிழ
வச்சிட்டீங்க... எனக்கு பதில்
சொல்றாப்போல இருக்கு
நன்றி...//
நான் நேராவே சொல்வேன்யா!
// .ஏன் அவர்
கீழ விழுந்தார்...பணம் நல்லா
சம்பாரிச்சும் "பேராசை" என்ற ஒன்று
அவரை ஆட்டு வித்ததால் அந்த
வெளி நாட்டுக்கு மக்களை ஏற்றுமதி
செய்யும் தொழிலில் தன் சொத்து
பத்துக்களை
இழந்திருக்கிறார்....//
அதற்கு அளவு இருக்கா மாப்ள..முதல்ல பத்தாயிரம் சேலரி வந்தாப் போதும்னு நினைச்சோம்..அப்புறம் 25......50ன்னு போயும் திருப்தி இல்லாம, இப்போ வெளிநாட்ல குப்பை கொட்டுறோம்..ஆனால் 5 ஆயிரத்துல வாழ்ற மக்களும் இங்கே இருக்காங்க..அவங்க பார்வைல நாமளும் பேராசைக்காரங்க தானே...
//இதில் நான்
சொல்ல வருவது...இருக்கும் போது
கிடைக்கும் சிறிய பணமாகினும்
அதை குடும்பத்துடன் கழிக்க
வேண்டும் என்பதே...//
அவர் அப்படித் தானய்யா பண்ணாரு..வீடு, தோப்புன்னு பிள்ளைகளுக்குத் தானே சேர்த்தாரு..நல்லபடியாவே வாழ்ந்தாலும், நம்மை மீறிய ஏதோ ஒன்னு தடுக்கி விட்டுடுது.
// மகேந்திரன் said...
ReplyDeleteஇன்னும் இவ்வுலகில் மனோதர்மம்
இருக்கிறது என்பதை
காட்டுகிறது உங்கள் பதிவு.//
மூளையின் பேச்சை கேட்காமல் இதயத்தின் பேச்சை நாம் கேட்கும்வரை அது வாழும்.
// K.s.s.Rajh said...
ReplyDeleteஅப்பறம் இரவு ஒரு வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த பதிவை
வெளியிடுறன் நீங்க மிஸ் பன்னாம
வந்துடுங்க..ஹி.ஹி.ஹி.ஹி //
நீங்க நேத்து போட்டதே இன்னும் படிக்கலியே...
// கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி
ReplyDeleteபுதிரி தமிழன் ) said...
Yaarkittayum solla koodathunnu
sonnar ellathuttayum ippadi
thandora poduringale
nyayamaa? //
டிஸ்கி + பின்னூட்டங்களை பாருங்க பாஸ்..டோண்ட் ஒர்ரி.
// மதுரன் said...
ReplyDeleteபாவம் அந்தமனிதர்
ஆசை எந்த பெரிய மனிதரையும்
வீழ்த்திவிடுகிறது //
ஆமாம் பாஸ்.
// ponsiva said...
ReplyDeletenalla pathivu boss //
ஆமா, நானே அதை தைரியமாச் சொல்வேன்.
// koodal bala said...
ReplyDeleteநெஞ்சைத் தொட்ட பதிவு ! //
Sahajamozhi said...
கண் கலங்க வைத்த பதிவு.இது
அனைவருக்கும் பாடம் //
// universaldumps said...
arumai ..//
//NAAI-NAKKS said...
நல்ல ,,,அவசியமான பதிவு//
//Vetri said...
சிறந்த பதிவு....//
நன்றி நண்பர்களே.
ஜீ... said...
ReplyDelete// அருமையான பதிவு அண்ணே!
இப்படியான மனிதர்களை நானும்
சந்தித்திருக்கிறேன். பதிவு
போடணும்னு நினைச்சேன்,
அதைவிட சிறுகதையா எழுதினா
நல்லா இருக்கும்னு
தோணிச்சு...ஆனா சோம்பேறித்தனம்
காரணமா செய்யல! //
என் கண்ணாடி பிம்பமே!
//சிலபேரை அண்ணான்னு அழைப்பது
ஒரு தனி பிரியத்தை எம்மீது
ஏற்படுத்தி விடுவதை நானும்
அனுபவரீதியாக உணர்ந்திருக்கிறேன்! //
தம்பின்னு அழைச்சாலும் அப்ப்டித் தான் இருக்கும் தம்பீ!
// வெட்டிப்பேச்சு said...
ReplyDeleteஅற்புதம். இதுதான் வாழ்க்கையின்
நிஜம். உண்மையிலேயே
அருமையான பதிவு. வாழ்க்கையைப்
பற்றி பெரிதொரு சிந்தனையை
கிளறும் பதிவு.//
நன்றி பாஸ்...’நான் ஒருத்தரைப் பார்த்தேன்..அவரு ரொம்ப பாவம்..உச்...உச்’-ன்னு சொல்றது இந்தப்பதிவோட நோக்கம் அல்ல..இந்தப் பதிவை உங்களை மாதிரி சிலர் புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி வேதாந்தி.
// Tirupurvalu said...
ReplyDeleteSengovi same like this story in
Tirupur and coimbatore .Peoples
missed money in one stage in
their life .They will get money on
another stage.when money
saved by people on this good
stage they will escape from this
tragedy //
சிலநேரங்களில் சேமிப்பும் காப்பாற்றுவதில்லை வாலு.
// சென்னை பித்தன் said...
ReplyDeleteஒரு நல்ல மனிதர், பற்றிய நல்ல
பதிவு! //
நல்ல மனிதரின் கமெண்ட்டிற்கு நன்றி.
// தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteமாம்ஸ்... பெத்த புள்ளைகளுக்காக
அவர் செய்யும் வேலைக்கு தகுந்த
பலன் விரைவில் கிடைக்கும்.//
சீரியஸ் கமெண்ட் போட்ட தமிழ்வாசிக்கு நன்றி.
// Yoga.s.FR said...
ReplyDeleteகாலை
வணக்கம்,எல்லோருக்கும்!படிக்காதவ
ர்கள்(இந்தக் கதையை)படித்து விட்டு
கருத்துரையுங்கள்.ஆழமான
கருத்தொன்றை உரைக்கும்
கதை.வேறு என்ன சொல்ல?,,,//
கதையா......எந்தக் கதை?
// Sen22 said...
ReplyDeleteஇவர்தான் சார் மனுஷன்...
ஹாட்ஸ் ஆப் டு தட் மேன்..//
உண்மை..மனிதம் இன்னும் வாழ்கிறதுன்னு நிரூபிச்ச மனுசன்.
// Yoga.s.FR said...
ReplyDeleteச்சீ அப்புடி இல்லிங்க,"பொன்" "நுயி"!
நல்லிரவு அப்புடீன்னு அர்த்தம்! //
இது பத்தி நைட்டு கண்டிப்பா டிஸ்கஸ் பன்ணுவோம்.
// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஏன் பதிவு போடும் நேரம் 15 நிமிடம்
அதிகமா ஆயிடுச்சி? //
இங்க நெட் ஸ்லோ ஆயிடுச்சு மச்சி..ஸ்டில் தேட லேட் ஆகுது...ஹன்சி-ன்னா நம்மகிட்ட ஸ்டாக் இருக்கும்..இது.....?
// Seenubhai said...
ReplyDeleteஅன்புள்ள நண்பா
அந்த மதிப்புமிக்க பெரியவர்
வாழ்கையில் தாழ்வு இல்லை
பணம் போனால் வாழ்கையில்
ஒன்றுமே போகவில்லை
ஆனால் தன் குடும்பத்திற்காக
வாழுகிறாரே அவர் தான்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர்
ஆண்டவன் அவருக்கு நிச்சயம்
வாழ்கையில் நிம்மதி தருவார் //
உங்கள் வாக்கு பலிக்கட்டும்.
// Real Santhanam Fanz said...
ReplyDeleteஆனா ஒன்னு மட்டும் புரியுது,
யாராச்சி ஆப்பு வச்சா நாம தோப்ப
விக்கணும்.//
நல்லவேளை, நீங்களும் சீரியஸ் ஆகிட்டீங்களோன்னு நினைச்சேன்..
// MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteகண்கலங்க வச்சிட்டிஎய்யா காலமும்
தோல்வியும் சில மனிதர்களை
நல்லவனாகவே வச்சிருக்கு
இல்லையா...//
ஆமாய்யா..இதே கான்செப்ட்ல நீங்க ’கவிதை மாதிரி’ ஒன்னு முன்னாடி எழுதி இருந்தீங்கள்ல?
@செங்கோவி
ReplyDelete/காட்டான் said...
மாப்பிள உங்கட டெக்கினிக்க புதிய பதிவர்களுக்கும் சொல்லிக்குடுங்கோய்யா.. இப்பிடிதான்யா அங்க ஒருத்தர் ஊர் பேர போட்டு செம்ப நெளிச்சுப்போட்டு இருக்கிறாரையா..!! ஹி ஹி.. அது சரி மாப்பிள அது என்னையா ssss நகர் நான் கேள்விப்பட்டதே இல்லையேய்யா..?? எங்க இருக்கையா அந்த இடம்.. ஹி ஹி
//
எது அந்த கிஸ் ராஜா, குஷ்பூ ராஜா ஆன கதையா?
$$$நகர் அமெரிக்கால இருக்கு மாம்ஸ்////
நல்லா கெளப்புறாங்கையா பீதியை.............நானும் எவ்வளவு நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.........ஹே...ஹே..
இரவு டிஸ்கஸ் பண்ணப் போறாராம்,என்ன ஆப்பு விழப் போவுதோ?புள்ளையார் தான் பாத்துக்கணும்!ஓம் கணேசா!
ReplyDeleteசெங்கோவி said... // Yoga.s.FR said... ச்சீ அப்புடி இல்லிங்க,"பொன்" "நுயி"! நல்லிரவு அப்புடீன்னு அர்த்தம்! // இது பத்தி நைட்டு கண்டிப்பா டிஸ்கஸ் பன்ணுவோம்.§§§§§அப்புடீன்னா,"குட் நைட்" பத்தித் தான் இன்னிக்கு..................?!
ReplyDeleteஉங்களை " நண்பர்கள்" தளத்தில் கலாய்த்திருக்கிறார்கள்!போய் ஒரு வழி பண்ணுங்கள்!
ReplyDeletemanasatshidan
ReplyDeleteகண் கலங்க வச்சிட்டீங்க :-(
ReplyDelete//murali said...
ReplyDeletemanasatshidan//
ம்..அதுவும் சரி தான்..அந்த மனசாட்சியை இயங்க வைப்பது?
@முத்து குமரன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமரன்.
தன்னை நம்பி இருக்கிற உயிர்களுக்காகவே உழைக்கும் அந்த அனிதர் வெற்றி பெறுவார்.நல்ல பதிவு..நன்றிங்க.
ReplyDeleteடைட்டில் என்னமா வைக்கறாரு? ஏன் டைம் சேன்ச்ஜ்?
ReplyDeleteTouching story!! இந்த காலத்தில ஒரு ஆளு கீழ போக வேறெதுவும் வேணாம், மருத்துவமனை செலவுகளே போதும்.
ReplyDelete\\‘தன் சந்தோசம் மட்டுமே முக்கியம்’ என்று எண்ணாமல் அவர்களைக் காத்தது எது?\\ இப்போ இது மாறிகிட்டே வருது. "நீ என்னை வளர்த்து ஆளாக்கியது உன் கடமை, அதுக்காக என்கிட்டே இருந்து பெரிசா எதையும் எதிர் பார்க்காதே" என்று பெற்றவர்களைப் பார்த்து பிள்ளைகளைக் கூறுவது, திருமணத்திற்கு முன்னமே கர்ப்பை இழக்கும் பெண்கள் அதிகரித்துக் கொண்டே போவது, இதெல்லாம் மேற்க்கத்திய கலாச்சாரத்தை நம்மவர்கள் தழுவிக் கொண்டதன் பலன். மற்றவர்களுக்காக தியாகம் செய்வது மறையும் காலம் தூரத்தில் இல்லை.
ReplyDelete//தாராபுரத்தான் said... [Reply]
ReplyDeleteதன்னை நம்பி இருக்கிற உயிர்களுக்காகவே உழைக்கும் அந்த மனிதர் வெற்றி பெறுவார்.//
நம்மை மாதிரி பலரின் வாழ்த்துகள் பலிக்கட்டும்..நன்றி ஐயா.
// சி.பி.செந்தில்குமார் said... [Reply]
ReplyDeleteடைட்டில் என்னமா வைக்கறாரு? ஏன் டைம் சேன்ச்ஜ்?//
சாதா டைட்டில் தான்ணே இது..
டைம் சேன்ச்ஜ் ஏன்னா, நான் ரொம்ப பிஸி!
// Jayadev Das said... [Reply]
ReplyDelete// Touching story!! இந்த காலத்தில ஒரு ஆளு கீழ போக வேறெதுவும் வேணாம், மருத்துவமனை செலவுகளே போதும்.//
அதுவும் உண்மை தான்..
//"நீ என்னை வளர்த்து ஆளாக்கியது உன் கடமை, அதுக்காக என்கிட்டே இருந்து பெரிசா எதையும் எதிர் பார்க்காதே" என்று பெற்றவர்களைப் பார்த்து பிள்ளைகளைக் கூறுவது, திருமணத்திற்கு முன்னமே கர்ப்பை இழக்கும் பெண்கள் அதிகரித்துக் கொண்டே போவது, இதெல்லாம் மேற்க்கத்திய கலாச்சாரத்தை நம்மவர்கள் தழுவிக் கொண்டதன் பலன். மற்றவர்களுக்காக தியாகம் செய்வது மறையும் காலம் தூரத்தில் இல்லை. //
ஆமாம், மாறிக்கொண்டே வரும் சூழலிலும் இத்தகைய மனிதர்கள் இருப்பது ஆறுதலாகவும் இருக்கிறது.
மனதை கனமகா வைத்து வீட்டிற்கள்
ReplyDeleteசிறந்த அனுபவ பதிவு
ReplyDeleteரொம்ப நல்ல பதிவு. மணி அண்ணன் புள்ளைகளை கரையேத்த எனது விழைவு.நாடோடிப்பையன்
ReplyDeleteசொல்ல வன்னு சொல்லிடிய்வா thala
ReplyDelete