Tuesday, July 12, 2011

நாளை சென்னை திரும்பும் சூப்பர் ஸ்டார் (Rajini Returns)

நீண்டநாட்களாக நாம் எதிர்பார்த்திருந்த சந்தோஷச் செய்தி வந்து விட்டது. ஆம், நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை இரவு சென்னை திரும்புகிறார்.
எந்திரன் என்ற மெஹா ஹிட் கொடுத்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் ரஜினிகாந்த். இந்தியப் படவுலகம் என்றால் பாலிவுட் மட்டும் தான் என்பதை உடைத்து, மற்ற மாநிலப்படங்களும் உள்ளன என்று சர்வதேச அளவில் உணர்த்திய பெருமை சூப்பர் ஸ்டாரையே சேரும். சிவாஜி முதல் எந்திரன் வரை ரஜினி பட ரிலீஸ் என்பது சர்வதேசத் திருவிழா என்று ஆகியது. 

வெளிநாடு வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது பிற மாநிலத்தவரும் ரஜினி படம் பார்க்க ஆர்வம் காட்டுவதை நேரில் பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. அத்தகைய வரவேற்பின் மூலம் நமது தமிழ்சினிமாவும் பிறருக்கு அடையாளம் காட்டப்பட்டது.

தமிழகத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், இந்தியில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை என்ற குறை ரஜினியின் வரலாற்றில் இருந்தது. எந்திரன் மூலம் அதுவும் தீர்ந்தது. சிவாஜி ரிலீஸ் ஆனபோது ‘அமிதாப்பா-ரஜினியா’ என்று பட்டிமன்றம் நடத்திய வடநாட்டுச் சேனல்கள்கூட எந்திரனைக் கண்டு மிரண்டன. இந்திய அளவில் தன்னுடைய பெயரை எந்திரன் மூலம் நிலைநாட்டினார்.
பொதுவாகவே இரு படங்களுக்கிடையே போதிய இடைவெளி விடும் சூப்பர் ஸ்டார், இந்த முறை ராணா வேலைகளில் உடனே இறங்கினார், எந்திரன் வெற்றி கொடுத்த கண் திருஷ்டி அறியாமல். படத்துவக்க விழா அன்றே ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார்.

அதன்பிறகு தான் எத்தனை எத்தனை செய்திகள்..இனி அவ்வளவு தான்.அவருக்கு நேரம் சரியில்லை, உயிர் பிழைப்பாரா-என பல ஆராய்ச்சிகள் இங்கு நடத்தப்பட்டன. ஆண்டவனின் அருளும் ரசிகர்களின் அன்பும் இருக்கையில் அவ்வளவு சீக்கிரம் பிறரின் எதிர்பார்ப்பு நிறைவேறிவிடுமா என்ன?

கடந்த மாதமே அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாகச் செய்திகள் வந்தன. கடந்த ஒரு மாதமாக சிங்கப்பூரில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி,  உடல்நிலை சீராகிவிட்டதை உறுதிப்படுத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா தந்தையை அழைத்து வர சிங்கப்பூர் பயணமானார். இப்போது அடுத்த நல்ல செய்தியும் வந்துவிட்டது.

நாளை இரவு சென்னை திரும்புவதாக உறுதியான தகவல் இப்போது வெளியாகி உள்ளது. பலநாட்களாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் செய்து வந்த பிரார்த்தனை வீண் போகவில்லை. நாளை மீண்டும் நம் முன் தோன்றுகிறார் சூப்பர் ஸ்டார். அவரை வரவேற்க தடபுடலான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 
ரஜினி படம் ரிலீஸ் என்பதே திருவிழா எனும்போது, ரஜினியே ஒரு சிக்கலில் இருந்து ரிலீஸ் ஆகி வருவது மெகா திருவிழா தான். சென்னை திரும்பிய பின் சில நாட்களில் ராணா படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்கிறார்கள். நாம் ஏற்கனவே சொன்னது போல் நமக்கு முக்கியம் ரஜினியே, ராணா அல்ல. இனி அவர் நடித்துத் தான் சாதிக்க வேண்டும் என்று எதுவும் இல்லை. உடல்நிலை ஒத்துழைத்துத் தொடர்ந்தால் மகிழ்ச்சியே.

நாளை அவர் முகம் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர், நாமும்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

53 comments:

  1. வெளிநாட்டு மக்களிடமும் ரஜினிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். முத்து திரைப்படம் ஜப்பானில் திரையிடப்பட்டது. அங்கு அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. @தமிழ்வாசி - Prakash //ரஜினி தி பாஸ்// தமிழ்வாசிக்கு ஜூஸ்.

    ReplyDelete
  3. // தமிழ்வாசி - Prakash said...
    வெளிநாட்டு மக்களிடமும் ரஜினிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். முத்து திரைப்படம் ஜப்பானில் திரையிடப்பட்டது. // ஆக்சனிலும் காமெடியிலும் ஒருசேரக் கலக்கும் சூப்பர் ஸ்டாரை யாருக்குத் தான் பிடிக்காது.

    ReplyDelete
  4. இனி அவர் நடித்துத் தான் சாதிக்க வேண்டும் என்று எதுவும் இல்லை. உடல்நிலை ஒத்துழைத்துத் தொடர்ந்தால் மகிழ்ச்சியே.>>>>

    உடல் நிலை தேறிய தலைவர் ராணா வை வெற்றி படமாக்குவார். எந்திரன் பார்ட்2 வரும் என கேள்விப்பட்டேன். தலைவரின் அதிரடி வெற்றி தொடர காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  5. @தமிழ்வாசி - Prakash //உடல் நிலை தேறிய தலைவர் ராணா வை வெற்றி படமாக்குவார். எந்திரன் பார்ட்2 வரும் என கேள்விப்பட்டேன். தலைவரின் அதிரடி வெற்றி தொடர காத்திருக்கிறோம்.// வந்தால் கலக்கல் தான்.

    ReplyDelete
  6. வணக்கம் மன்மத தலைகளின் அரசரே,

    சூப்பஸ்டார் பற்றிய மனதிற்கு நிம்மதி தரும் செய்தியினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
    தலைவர் ஊருக்கு வந்து கொஞ்ச காலம் ஓய்வெடுத்து விட்டு, படங்களில் நடிக்கத் தொடங்குவது நல்லது என்று என் மனம் எண்ணுகிறது.

    ReplyDelete
  7. ரஜினி படம் ரிலீஸ் என்பதே திருவிழா எனும்போது, ரஜினியே ஒரு சிக்கலில் இருந்து ரிலீஸ் ஆகி வருவது மெகா திருவிழா தான்.//

    ஆமாம் பாஸ், தலைவரை வரவேற்க எயார்போர்ட் வாசலுக்கே ரசிகர்கள் படையெடுத்து நிற்பார்கள் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. ///எந்திரன் என்ற மெஹா ஹிட் கொடுத்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் ரஜினிகாந்த். இந்தியப் படவுலகம் என்றால் பாலிவுட் மட்டும் தான் என்பதை உடைத்து, ////
    இது பாஸ் பாஸ் இப்போ சிக்கலில் இருக்குது!

    ReplyDelete
  9. ஆல்ரெடி ரஜனி சென்னையில தான் அப்பிடீன்னும் ஒரு கதை அடிபடுது பாஸ்

    ReplyDelete
  10. ரஜினி ஒரு வருஷம் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்கனும்

    ReplyDelete
  11. சோதனைய கடந்தாதான் சாதனை......கடந்தாச்சி இனி சாதனைகள் மட்டுமே!

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. தலைவா ....உன்னை எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  14. @நிரூபன் //தலைவர் ஊருக்கு வந்து கொஞ்ச காலம் ஓய்வெடுத்து விட்டு, படங்களில் நடிக்கத் தொடங்குவது நல்லது என்று என் மனம் எண்ணுகிறது.// ஆமாம் நிரூ..அது தான் நல்லது.

    ReplyDelete
  15. @மைந்தன் சிவா //இது பாஸ் பாஸ் இப்போ சிக்கலில் இருக்குது!// எந்திரன் ஹிட் என்பது சிக்கல் இல்லை..ஒரு ஊரில் 6 தியேட்டர்கள்ல் ரிலீஸ் செய்யப்பட்டதும், அதைவிடவும் அதிக விலைக்கு படப்பெட்டி விற்கப்பட்டது என்பதே சிக்கல். ஆனாலும் நஷ்டம் என்பது பொய் என்கிறார்கள். பார்ப்போம்.

    ReplyDelete
  16. @சி.பி.செந்தில்குமார் //ரஜினி ஒரு வருஷம் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்கனும்// சிபி சொன்னா கரெக்ட்டு தான்.

    ReplyDelete
  17. @விக்கியுலகம் //சோதனைய கடந்தாதான் சாதனை......கடந்தாச்சி இனி சாதனைகள் மட்டுமே!// சூப்பராச் சொன்னீங்க விக்கி.

    ReplyDelete
  18. @கோவை நேரம் //தலைவா ....உன்னை எதிர்பார்க்கிறோம்// எதிர்பார்ப்பு நாளை நிறைவேறும் நண்பரே.

    ReplyDelete
  19. welcome back our super star, thanks for sharing boss

    ReplyDelete
  20. தலைவர் திரும்பி வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ராணாவை கொஞ்ச நாள் தள்ளி போட்டா தேவலை.

    ReplyDelete
  21. தங்க மகனே வருக வருக

    ReplyDelete
  22. ரஜினி ரசிகரோ நீங்கள்? அருமை!

    ReplyDelete
  23. ரஜினி ரசிகரோ நீங்கள்? அருமை!

    ReplyDelete
  24. நானும் அவர் வருகைக்காகத்தான் காத்திருக்கிறேன். அவர் முகத்தை பார்க்கணும்.

    ReplyDelete
  25. ஏர்போர்ட்டிற்கு கிளம்பியாச்சா??

    ReplyDelete
  26. நலமுடன் இருக்கட்டும்.

    ReplyDelete
  27. //!* வேடந்தாங்கல் - கருன் *! said...
    maapla mobilla irunthu comment ..// என்ன மொபைலில் இருந்து கமெண்டா..இதை ஏன்யா பெருமையா கின்னஸ் சாதனை பண்ண மாதிரி சொல்றீரு?

    ReplyDelete
  28. // இரவு வானம் said...
    welcome back our super star, thanks for sharing boss // ஓகே நைட்டு.

    ReplyDelete
  29. //FOOD said...
    ரஜினி என்னும் காந்தம் ரசிகர்கள் பலருக்கு சொந்தம்.// சூப்பர் சார்..நல்ல டைட்டில்.

    ReplyDelete
  30. // பாலா said...
    ராணாவை கொஞ்ச நாள் தள்ளி போட்டா தேவலை.// ஆமா பாஸ்..பார்ப்போம் என்ன நடக்குன்னு.

    ReplyDelete
  31. // r.v.saravanan said...
    தங்க மகனே வருக வருக // சிங்க நடை போட்டு வரட்டும் தங்க மகன்.

    ReplyDelete
  32. //J.P Josephine Baba said...
    ரஜினி ரசிகரோ நீங்கள்? அருமை! // ஆமாம் சகோதரி..முதல் கமெண்ட்டிற்கு நன்றி.

    ReplyDelete
  33. // THOPPITHOPPI said...
    நானும் அவர் வருகைக்காகத்தான் காத்திருக்கிறேன். அவர் முகத்தை பார்க்கணும்.// நீங்களுமா..சந்தோசம் தொப்பி.

    ReplyDelete
  34. // அமுதா கிருஷ்ணா said...
    ஏர்போர்ட்டிற்கு கிளம்பியாச்சா??// சென்னைல இருந்தா கிளம்பி இருப்பேன்.

    ReplyDelete
  35. // சே.குமார் said...
    நலமுடன் இருக்கட்டும்.// உங்கள் ஆசை நிறைவேறட்டும் குமார்.

    ReplyDelete
  36. நானும் அவரின் வருகையை மிக ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் செங்கோவி...

    அவன் முகத்தை பார்க்கணும் போல இருக்கு...

    ரஜினி காந்த்... நிஜமாவே காண்டம் இருக்கிறது அவரிடத்தில், இல்லைனா இதனா பேர் எதிர் பார்ப்பங்களா?

    ReplyDelete
  37. @RK நண்பன்.. //RK நண்பன்.. said... [Reply]

    ரஜினி காந்த்... நிஜமாவே காண்டம் இருக்கிறது அவரிடத்தில்,//

    யோவ், உம்ம தமிழ் டைப் ரைட்டர்ல தீயை வைக்க! அது காண்டம் இல்லையா, காந்தம்..

    ஏன்யா இப்படி தீபிகா படுகோனேவை பயமுறுத்துறீங்க?

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. பொதுவாகவே ஒரு மனிதன் துன்பத்திலிருந்து விடுதலைப் பெற்றால் கிடைக்கும் மகிழ்ச்சி எல்லையில்லாதது..!

    அதுவும் பிரபலமானவர் என்றால் சொல்லவும் வேண்டுமோ?

    ReplyDelete
  40. நமக்கு முக்கியம் ரஜினியே, ராணா அல்ல. இனி அவர் நடித்துத் தான் சாதிக்க வேண்டும் என்று எதுவும் இல்லை. உடல்நிலை ஒத்துழைத்துத் தொடர்ந்தால் மகிழ்ச்சியே.

    சரியாக சொன்னீர்கள்

    ReplyDelete
  41. ரஜினி ரசிகர்கள் அவரது கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் பண்ணாமல்,ஏழைகளுக்கு வழங்கட்டும் என்று ரஜினி அன்புக் கட்டளை இட்டால் நல்லது

    ReplyDelete
  42. /தலைவர் ஊருக்கு வந்து கொஞ்ச காலம் ஓய்வெடுத்து விட்டு, படங்களில் நடிக்கத் தொடங்குவது நல்லது என்று என் மனம் எண்ணுகிறது.// ஆமாம் நிரூ..அது தான் நல்லது.

    தங்க முட்டை இடும் வாத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அல்லவா இதை யோசிக்க வேண்டும்

    ReplyDelete
  43. ஆமா!!!அப்பநீங்களும் போறீங்களா?







    !!!அப்ப நம்ம பக்கமும் வாறீங்களா?hahahaha!!!!

    ReplyDelete
  44. @தங்கம்பழனி //பொதுவாகவே ஒரு மனிதன் துன்பத்திலிருந்து விடுதலைப் பெற்றால் கிடைக்கும் மகிழ்ச்சி எல்லையில்லாதது..!// ஆஹா..அருமை..அருமை.

    ReplyDelete
  45. @r.v.saravanan வருகைக்கு நன்றி சரவணன்.

    ReplyDelete
  46. @goma//தங்க முட்டை இடும் வாத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அல்லவா இதை யோசிக்க வேண்டும்// அதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவார்களா? முடிந்தவரை கறப்பார்கள்..பிறகு நஷ்டம் என்று அலறுவார்கள்.

    ReplyDelete
  47. @vidivelli //!!!அப்ப நம்ம பக்கமும் வாறீங்களா?hahahaha!!!!// இப்போ இல்லை விடிவெள்ளி.

    ReplyDelete
  48. சந்தோஷமான செய்தி பாஸ்,
    வரட்டும் வரட்டும் ராணாவை எதர்பார்த்து இருக்கோம் இல்ல

    ReplyDelete
  49. @செங்கோவி

    சிரிச்சி முடியல தவறாக டைப் பண்ணிட்டேன் தல.... கவணிகல..

    ஆனா நீங்க ரிப்ளை பண்ணுண அப்புறம் தான் பார்த்தேன்.. அலுவலகத்திலயே கத்தி சிரிச்சுட்டே இருந்தேன்... எல்லாவனும் என்னணு கேக்க ஆரம்பிச்சிடணுக...

    ReplyDelete
  50. @RK நண்பன்.. என் ப்ளாக்குக்கு வந்த கமெண்ட்லயே சூப்பர் கமெண்ட் அது தான்யா.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.