Tuesday, July 26, 2011

Malena (2000) - திரை விமர்சனம் (கண்டிப்பாக 21+)

உப தலைப்பு : மெலீனாவின் தேகமும் தேசமும்

டிஸ்கி: இந்தப் படத்தையும் முடிந்தால் இந்தப் பதிவையும் 18,28,38,48,58,68,78,88 வயது நிரம்பாத யோக்கியர்கள் தவிர்க்கவும்.

குப்பையில் கிடைத்த மாணிக்கம் என்று இந்தப் படத்தை நான் தாராளமாகச் சொல்லலாம். பல வருடங்களுக்கு முன் நண்பர் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்த ஒரு வீடியோ பார்த்துவிட்டு மிரண்டு போனேன். அந்த ஒரு சீனுக்காகவே பல நாட்கள் இந்தப் படத்தைத் தேடி அலைந்தேன். கிடைத்த பிறகே தெரிந்தது இது உலக சினிமாக்களில் முக்கியமான படம் என்று.

இரண்டாம் உலகபோரில் கலந்து கொள்ள கணவனை அனுப்பிவிட்டு, இத்தாலியின் சிசிலி நகரில் வாழும் தனியே வாழும் பேரழகி மெலீனா.(சரியான உச்சரிப்பு மலேனா!). கணவனுக்காகவே காத்திருக்கும் அவள் ஊரில் உள்ள ஆண்களால் காமத்தாலும் பெண்களால் பொறாமையாலும் பார்க்கப்படுபவள்.  இரண்டாம் உலகப் போரில் நாடுகள் சக நாடுகள் மீதான ஆக்கிரமிப்பில் தீவிரமாக இறங்குகின்றன. அவளது காத்திருப்புக்குப் பதிலாக கணவனின் இறப்புச் செய்தி கிடைக்கிறது. 

கணவன் இருக்கும்போதே வட்டமிட்ட கழுகுகள், மேலும் முன்னேற ஒரு பொய்யான வழக்கில் சிக்க வைக்கப்படுகிறாள். ஊராரின் ஏச்சும் பேச்சும் தொடங்குகிறது. அவளைப் பற்றிய வதந்திகள் இறக்கை கட்டிப் பறக்க, மெலீனாவிற்கு ஆதரவாக இருக்கும் தந்தை மனம் உடைகிறார். தொடர்ந்து நடக்கும் போர்த் தாக்குதலில் அவரும் இறக்கிறார். 

அழகைத் தவிர ஏதுமற்ற அனாதை ஆகிறார் மெலீனா. அவளது நாடு ஜெர்மானியர்களால் ஆக்கிரமிக்கப் படுகிறது. அவள் அழகே அவளுக்கு ஆபத்தாக ஆகி, விபச்சாரியாக அவளை ஆக்குகின்றது. ஜெர்மானிய ராணுவ ஆக்கிரமிப்பாளர்களின் இச்சைக்கு ஆளாகிறாள். அவள் நன்றாக இருந்த போதே அவளை ஏசிய பெண்கள் கூட்டம், அவள் வேசி ஆனதும் கடும் வெறுப்பை உமிழ்கிறது. அதே நேரத்தில் அவளின் நாடு போரில் வென்று விடுதலை ஆகிறது.
மெலீனாவின் மேல் ஆத்திரமுற்ற பெண்கள் கூட்டம், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவளை கடுமையாகத் தாக்கி அவமானப்படுத்தி ஊரை விட்டே துரத்துகின்றனர். அதன்பிறகு போரில் இறந்ததாகச் சொல்லப்பட்ட மெலீனாவின் கணவன் திரும்பி வருகிறான். அவள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து அவளை மீண்டும் தன் ஊரிலேயே தலை நிமிர்ந்து வாழ வைக்கின்றான்.

ஒரு படைப்பு இலக்கியம் ஆவது தனக்குள் பல திறப்புகளை ரசிகனுக்காக கொண்டிருக்கும் போதே. சாதாரண கதையாகத் தோன்றும் இந்தக் கதையை உலகத் திரைப்படமாக ஆக்கியது இயக்குநர் செய்த நுணுக்கமான இரு வேலைகள்.

முதலாவது மேலோட்டமாக அழகிய பெண்ணின் கதையாகக் காட்டிக் கொண்டாலும், அடிநாதமாக ஓடுவது அந்த தேசத்தின் கதை. இரண்டாம் உலகப் போர் பிண்ணனியில், மெலீனாவிற்கு நடப்பது தேசத்திற்கும் தேசத்திற்கு நடப்பது மெலீனாவிற்கும் நிகழ வைத்து இப்படைப்பை பேரிலக்கியமாக உயர்த்துகிறார். சரியான பாதுகாப்பின்றி இருக்கின்ற பெண்ணை வைத்து, அப்பொதைய இத்தாலியை உருவகப்படுத்தியதே இயக்குநரின் தனித் திறமைக்குச் சான்று.
இரண்டாவது (முக்கியமானது), ஒரு 13 வயதுப் பையனின் பார்வையிலேயே படத்தை நகர்த்தியது. பலரும் பேசத் தயங்கும் பால்ய கால பாலியல் பிரச்சினையை தைரியமாக முன் வைத்தது. ரெனாட்டோ அதீத பாலுணர்ச்சி கொண்ட பாலகுமாரன் சொல்லும் ‘உடம்பு விழிக்கும் முன்னே புத்தி விழித்திக் கொண்ட’ பையன். டீன் ஏஜில் இருக்கும் ரெனாட்டா பேரழகி மெலீனாவை ஒரு தலையாகக் காதலிப்பவன்.

அவளை நிழல் போல் பின் தொடர்பவன். அவளின் அந்தரங்க வாழ்க்கை ரெனாட்டோவின் கண்களின் வழியே நமக்குக் காட்டப்படுகிறது. பார்வையாளனை திட்டமிட்டே ரெனாட்டோவின் மனநிலைக்குக் கொண்டு செல்கிறார் இயக்குநர். ரெனாட்டோ மெலீனாவின் மேல் வைத்திருக்கும் அதீத காமம் கலந்த காதலை நாமும் உணர்கின்றோம். மெலீனாவை பிறர் வதந்திகளால் பேசியே கொல்லும்போதும், கடுமையாக அவளைத் தாக்கி அவமானப்படுத்தும் போதும் எதுவும் செய்ய முடியாத கையாலாகாத் தனத்துடன் துடிக்கின்றான் ரெனாட்டோ. தன் தேசம் அதிகார போதை கொண்டோரால் போரில் சீரழிக்கப்படும்போது துடிக்கும் சாமானிய மக்களின் பிரதிநிதி அவன்.

ஒரு சீரியசான கதையை நகைச்சுவையாகக் கொண்டு செல்ல ரெனாட்டோவின் பாலுணர்வு காட்சிகள் உதவுகின்றன. 13 வயதுப் பையனின் கற்பனைகளும் செயல்பாடுகளும் எவ்வித ஒளிவுமறைவுமின்றி காட்சிப்படுத்தப் படுகின்றன. காம உணர்ச்சியின் உச்சத்திற்கே பார்வையாளனைக் கொண்டு செல்ல ரெனாட்டோ பாத்திரம் உதவுகின்றது. அதுவே இறுதிக்காட்சியில் காமம் கழன்று பேரன்பு மட்டுமே மிஞ்சும் ரெனாட்டோவின் நிலைக்கு நம்மையும் கொண்டு செல்கிறது. 

மெலீனாவாக மோனிகா பெல்லுசி. இத்தாலிய செக்ஸ் பாம். இயக்குநர் Giuseppe Tornatore இந்தக் கதைக் கருவுடன் பேரழகி மெலீனா பாத்திரத்திற்கு பொருத்தமான நடிகை கிடைக்காமல் பலநாட்கள் திரிந்தவர். எப்போது மோனிகாவை சந்தித்தாரோ, அந்த நிமிடமே அவர் முடிவு செய்தார் இவரே மெலீனா என. அதன்பிறகே திரைக்கதை டெவலப் செய்யப்பட்டது.

அழகு என்பது சாதாரணமானது. கம்பீரமான அழகு என்பது அவ்வளவு எளிதில் வாய்க்கப்படுவதில்லை. ஆரம்பக்காட்சிகளில் மோனிகாவைப் பார்க்கும் எவரும் கம்பீர அழகை உணர்ந்து கொள்வர். இந்தப் படத்தைப் பார்த்தபின் பலநாட்களுக்கு மோனிகா நம் மனதை விட்டு நீங்கவில்லை. உண்மையில் வேரு படங்களில் வேறு கேரக்டரில் அவரைப் பார்க்கவும் மனம் ஒப்பவில்லை.

ரெனாட்டோவாக GIUSEPPE SULFARO. முதல் படமான மெலீனாவில் நடித்த போது 14 வயது. ”மோனிகாவைப் பார்த்த கணமே அவர் மேல் காதலில் விழுந்தேன். டீன் ஏஜில் அத்தகைய பேரழகியின் மேல் காதல் வருவது ஆச்சரியம் அல்ல. ஆனாலும் எனக்குத் தெரியும் இது நிறைவேறாக் காதல் என்று!”-இது ஒரு பேட்டியில் அவர் சொன்னது. அந்தக் கெமிஸ்ட்ரியே இயல்பான நடிப்பை அவரிடம் இருந்து வெளிக்கொண்டு வந்தது. நடித்தார் என்பதை விட வாழ்ந்தார் என்றும் ‘வாழ்ந்தார்’ என்றும் சொல்லலாம்.

இயக்குநர் Giuseppe Tornatore ஏற்கனவே சினிமா பாரடைஸ் கொடுத்தவர். அதற்கு மேலும் அவரைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா என்ன? 

படத்தின் வசனங்கள் பல நம் மனதைத் தொடுபவை. மெலீனா விபச்சாரி ஆனபின் வரும் கஸ்டமரான ஆர்மி ஆஃபீசர் ‘நான் ஒவ்வொரு வியாழனும் வருவேன்’ எனும்போது மெலீனா விரக்தியுடன் சொல்லும் ‘நீ எனக்கு சாப்பாடு கொண்டுவரும் வரை தாராளமாக வரலாம்’ எனும் வசனம் வெறும் காமக்காட்சியை சட்டென்று நிறம் மாற்றும். படத்தின் இறுதியில் மெலீனாவை விட்டு எதிர்த்திசையில் விலகிச் செல்லும் ரெனாட்டோ சொல்லும் வசனம் புகழ்பெற்றது: என்னிடம் நெருங்கிப் பழகிய பெண்கள் கேட்பர் ‘என்னை எப்போதும் நினைவில் கொள்வாயா என! நானும் ‘ஆம்’ என்பேன். ஆனால் நான் எப்போதும் நினைவில் கொள்ளும், என்னிடம் அவ்வாறு ஒரு போதும் கேட்காத மெலீனா”

மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அற்புதமான கலைப்படைப்பு வெளியான நேரத்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்து. காரணம், பதின்ம வயதுப் பையனின் பாலியல் காட்சிகள் தான். அந்த எதிர்ப்பு ஓரளவு நியாயம் ஆனதே. எனவே மனமுதிர்ச்சி இல்லாதோர் இப்படத்தைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

அதே நேரத்தில் நல்ல சினிமா மேல் ஆர்வம் கொண்டோருக்கு, மெலீனா பேரழகி தான்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

67 comments:

  1. அந்த பெண்ணுக்காக பரிதாபப்படும் சிறுவன்......எப்போ பார்த்த நினைவு..

    இப்ப அந்த நகரம் சிசிலி என்பதை விட பலர்மோ என்றே அழைக்கப்படுகிறது.

    ReplyDelete
  2. @நிகழ்வுகள் தகவலுக்கு நன்றி கந்தசாமி.

    ReplyDelete
  3. நல்ல விமரிசனம்!இன்றும் வட போச்சு!இது தான் என்னிலுள்ள பலவீனம்!பழையதைக் கிழறிகொண்டிருக்கும் நேரத்தில் புதியது பதிவேறி விடுகிறது!சரி பார்க்கலாம்,காகம் ஏமாறாமலா போனது?????????

    ReplyDelete
  4. இன்னைக்கும் அதே கதை! பாட்டி வடை சுட்ட கதையை விட இது நல்லா இருக்கே..தமிழ்வாசியை வேற காணோம்!

    ReplyDelete
  5. Reverie's Ramblings to me
    show details 10:21 PM (8 minutes ago):

    தூசு தட்டி எடுத்தீங்களா..பார்த்து வருஷமானாலும்...உங்க விமர்சனம் பார்த்தபின் அதே படம் தானான்னு ஒரு சந்தேகம்...

    நம்ம கந்தசாமி ஊர் பக்கம்னு நினைக்கிறேன்...அவர் நுழையும் போது...சிசிலி ன்னு பெட்ல வரும்..கூடவே...பழைய பிசா வாடையும்...

    ReplyDelete
  6. ரெவரீ, மெயில் அனுப்பி கமெண்ட் போடும் உங்க சின்சியாரிட்டி என்னை புல்லரிக்க வைக்குது!

    //தூசு தட்டி எடுத்தீங்களா..// மெலீனாவை தூசு படிய விடுவோமா? அப்பப்போ..லைட்டா...

    ReplyDelete
  7. செங்கோவி said...

    இன்னைக்கும் அதே கதை! பாட்டி வடை சுட்ட கதையை விட இது நல்லா இருக்கே..தமிழ்வாசியை வேற காணோம்!///நக்கலு??????M.M..M...!

    ReplyDelete
  8. ஆஜராயிக்கிறன் அப்பறம் படிச்சுக்குறேன்..

    ReplyDelete
  9. சுவாரசியமான விமர்சனம்.

    ReplyDelete
  10. மெலினா உலகசினிமா பார்ப்பவர்கள் அனைவரும் பார்த்த படமாக இருக்கும்.மிக அருமையான படத்துக்கு சிறப்பாக விமர்சனம் எழுதி உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அற்புதமான கலைப்படைப்பு -- தலைவரே சொல்லிட்டார்.. பார்த்திட வேண்டியது தான்..

    ReplyDelete
  12. பின்னூட்ட பெட்டியினை சரி பண்ணுங்க செங்கோவி...

    ReplyDelete
  13. >>அழகைத் தவிர ஏதுமற்ற அனாதை ஆகிறார் மெலீனா.

    ஆஹா, அண்ணன் கண்டிப்பா லவ் மேரேஜ் தான் .. என்ன்மா வர்ணிக்கறார்?

    ReplyDelete
  14. படம் நானும் பார்த்துட்டேன், ஆனா எனகுத்தோணாது எல்லாம் உங்களுக்குத்தோணி இருகு, டேய் சி பி, நீ இன்னும் வளரணும்டா

    ReplyDelete
  15. வழக்கமா உங்க போஸ்ட் 5 மணீ டூ 6 மணீல ஹிட் ஆகும் , இந்த போஸ்ட் 4.30 மணீலயே ஹிட் ஆகிடுச்சே!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  16. மெல்லிய மன உணர்வு

    மரித்தால் அழுகிப்போகும் உடலை விட

    காலத்தால் அழியாத நினைவுகளை கொண்ட மனமே பெரிது என்று பொருள் விளங்கும் படம்

    அருமை

    ReplyDelete
  17. //சரியான பாதுகாப்பின்றி இருக்கின்ற பெண்ணை வைத்து, அப்பொதைய இத்தாலியை உருவகப்படுத்தியதே இயக்குநரின் தனித் திறமைக்குச் சான்று//
    உண்மை! ஒரு தேசத்தின் கதை! இதை விளங்கிக் கொள்ளாமல் சிலபேர்...சரி விடுங்கண்ணே! உங்க விமர்சனம் படு சூப்பர்!

    ReplyDelete
  18. //அந்த ஒரு சீனுக்காகவே பல நாட்கள் இந்தப் படத்தைத் தேடி அலைந்தேன்//
    பார்ர்ரா! ஒத்துக்கிடுறேன் அண்ணன் பெரிய...சீன் ரசிகன்தான்! :-)

    ReplyDelete
  19. நல்ல படம்! ஆனால் எத்தனை பேரால் சரியாக விளங்கிக் கொள்ளப்
    பட்டது/படும் என்பதுதான் பிரச்சினையே!

    ReplyDelete
  20. வணக்கம் மச்சி, ஏழாம் ஓட்டோடு களமிறங்கியிருக்கேன். தமிழ் 10 என்ன் பண்ணுது... இணைக்கலையா.

    ReplyDelete
  21. டிஸ்கி: இந்தப் படத்தையும் முடிந்தால் இந்தப் பதிவையும் 18,28,38,48,58,68,78,88 வயது நிரம்பாத யோக்கியர்கள் தவிர்க்கவும்.//

    என்னய்யா, இந்த்க் குத்து. இது யாருக்கு.

    ReplyDelete
  22. ஒரு படைப்பு இலக்கியம் ஆவது தனக்குள் பல திறப்புகளை ரசிகனுக்காக கொண்டிருக்கும் போதே. சாதாரண கதையாகத் தோன்றும் இந்தக் கதையை உலகத் திரைப்படமாக ஆக்கியது இயக்குநர் செய்த நுணுக்கமான இரு வேலைகள்.//

    சபாஷ் மச்சி...காத்திரமான் பார்வையினை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.

    ReplyDelete
  23. மச்சி, உங்களிடமிருந்து நீண்ட நாட்களின் பின்னர் வித்தியாசமான ஒரு விமர்சனம் வ்ந்திருக்கிறது.
    கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

    ReplyDelete
  24. சுவாரசியமான விமர்சனம்.

    ReplyDelete
  25. நிரூபன் said...

    டிஸ்கி: இந்தப் படத்தையும் முடிந்தால் இந்தப் பதிவையும் 18,28,38,48,58,68,78,88 வயது நிரம்பாத யோக்கியர்கள் தவிர்க்கவும்.//

    என்னய்யா, இந்தக் குத்து. இது யாருக்கு?///வேறு யாருக்கு?நமக்குத் தான்!நல்ல வேளை,தமிழ்ப் படம் பார்க்கவே பொழுதில்லை/பிடிப்பதில்லை!இதில் வேற்று மொழிப் படமாவது??????

    ReplyDelete
  26. @தமிழ்வாசி - Prakash

    தற்போது ஒபேறா மினி உழாவி மூலம் தமிழ் தட்டச்சு செய்ய முடியும் என்று படித்தது போல் ஞாபகம். முயற்சித்து பார்க்கவும்

    ReplyDelete
  27. ஒபேரா தமிழ் உழாவி பற்றிய தகவல்.

    http://teck.in/opera-browser-and-opera-mini-now-in-hindi-telugu-and-tamil.html

    ReplyDelete
  28. @சி.பி.செந்தில்குமார்

    சி.பி. முதலில் சீன் படம் பாகுரத்தை விட்டால் தான் கொஞ்சம் நல்ல படங்களை பார்ப்பதற்கும் அதன் கர்த்துக்ககையும் யோசிக்க நேரம் கிடைக்கும்

    ReplyDelete
  29. ஒரு நல்ல படத்துக்கான நல்ல விமரிசனம்.

    ReplyDelete
  30. அண்ணே வணக்கம்னே ஒரு உலக படத்துக்கு 'உலக திரைவிமர்சனம் எழுதிருக்கீங்க.... நல்லாருக்குனே

    அப்பறம் ஒன்னு ... உங்களுக்கு ஜெயமோகன் வரைக்கும் லிங்க் இருக்குன்னு சொல்லவே இல்ல , எனக்கு தெரியாம போச்சுனே , நானும் உங்கள அப்ப அப்ப சீண்டி பார்த்திருக்கேன் , ஏதோ அறியாபய்யன் தெரியாம பேசிட்டான்னு நெனச்சுகோங்கன்னே ,

    ReplyDelete
  31. விமர்சனம் super!

    ReplyDelete
  32. இந்தப்படம் நானும் பார்த்திருக்கிறேன் அந்த சிறுவனின் நடிப்பு அபாரம்,,

    நல்ல விமர்சனம்

    ReplyDelete
  33. நல்ல விமர்சனம்,மெலினாவின் உணர்வுகளையும்,சிறுவனின் மனப்போராட்டங்களையும் விமர்சனத்தில் சரியாக தொட்டிருக்கிறீர்கள்

    ReplyDelete
  34. // மாய உலகம் said...
    ஆஜராயிக்கிறன் அப்பறம் படிச்சுக்குறேன்..// இதென்னய்யா புதுசா இருக்கு..

    ReplyDelete
  35. //KANA VARO said...
    சுவாரசியமான விமர்சனம்.// நன்றி கண வரோ!

    ReplyDelete
  36. //தமிழ்வாசி - Prakash said...
    vimarsanam ok // ஓகேவா? யோவ், என்ன நக்கலா?

    ReplyDelete
  37. //உலக சினிமா ரசிகன் said...
    மெலினா உலகசினிமா பார்ப்பவர்கள் அனைவரும் பார்த்த படமாக இருக்கும்.மிக அருமையான படத்துக்கு சிறப்பாக விமர்சனம் எழுதி உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.// ஆமா சார்..பெரும்பாலும் உலக சினிமா ரசிகர்கள் பார்த்திருப்பர். ஆனாலும் படம் பற்றிய என் பார்வையைப் பதிய ஆசைப்பட்டேன்.

    ReplyDelete
  38. / FOOD said...
    இன்றைக்கு சினிமா விமரிசனம் சுவராரியமா போகுதே. மெலினாவின் மீதான உங்கள் பார்வை ’சற்றே’ வித்யாசமானதுதான்.// சற்றே-ன்னா?

    தமிழ்-10 தகராறு பண்ணுதே! // ஏதாவது ஒன்னு மக்கர் பண்ணிக்கிட்டே இருக்கு. என்ன செய்ய?

    ReplyDelete
  39. //!* வேடந்தாங்கல் - கருன் *! said...
    மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அற்புதமான கலைப்படைப்பு -- தலைவரே சொல்லிட்டார்.. பார்த்திட வேண்டியது தான்..//

    கருன், இன்னும் பார்த்ததில்லையா? வெட்கம்..வெட்கம்.

    ReplyDelete
  40. //Reverie said...
    பின்னூட்ட பெட்டியினை சரி பண்ணுங்க செங்கோவி...//

    எனக்குத் தெரிஞ்சதெல்லாம் பண்ணிட்டேன்..இனிமே என்ன செய்யன்னு தெரியலை!

    ReplyDelete
  41. //சி.பி.செந்தில்குமார் said...
    ஆஹா, அண்ணன் கண்டிப்பா லவ் மேரேஜ் தான் .. என்ன்மா வர்ணிக்கறார்?// ஆமா இன்னொரு குடும்பம் இருக்கு!..ஏன்யா இப்படி?

    //படம் நானும் பார்த்துட்டேன், ஆனா எனகுத்தோணாது எல்லாம் உங்களுக்குத்தோணி இருகு, டேய் சி பி, நீ இன்னும் வளரணும்டா // அண்ணே, முத 4 தடவை வேற ஒன்னுமே தோணாது. அப்புறம் சாந்தம் ஆகிட்டுப் பார்த்தா எல்லாம் புரியும்!

    //வழக்கமா உங்க போஸ்ட் 5 மணீ டூ 6 மணீல ஹிட் ஆகும் , இந்த போஸ்ட் 4.30 மணீலயே ஹிட் ஆகிடுச்சே! // எனக்கு இந்த கசமுசா மேட்டரே புரியறதில்லை பாஸ்.

    ReplyDelete
  42. //M.R said...
    மெல்லிய மன உணர்வு

    மரித்தால் அழுகிப்போகும் உடலை விட

    காலத்தால் அழியாத நினைவுகளை கொண்ட மனமே பெரிது என்று பொருள் விளங்கும் படம் //

    நம்மை உணர்வெழுச்சிக்குக் கொண்டு சென்று, தலைகீழாகப் புரட்டிப் போடும் படம். அதுவும் மெலீனா ஊராரிடம் அடி வாங்கும் சீன்..அப்பப்பா, அந்தப் பையனை விட நாம் அதிகம் பதறுவோம். அதே சீனை ‘பள்ளிக்கூடத்தில்’ தங்கர்பச்சான் கேவலமாக எடுத்திருப்பார்.

    ReplyDelete
  43. ஜீ... said...

    //பார்ர்ரா! ஒத்துக்கிடுறேன் அண்ணன் பெரிய...சீன் ரசிகன்தான்! :-) // இப்போ தான் தெரிஞ்ச மாதிரி சொல்றீங்களே!

    //நல்ல படம்! ஆனால் எத்தனை பேரால் சரியாக விளங்கிக் கொள்ளப் பட்டது/படும் என்பதுதான் பிரச்சினையே! // ஆமாம் ஜீ...அது பெரிய பிரச்சினை தான்.

    ReplyDelete
  44. நிரூபன் said...
    //மச்சி, உங்களிடமிருந்து நீண்ட நாட்களின் பின்னர் வித்தியாசமான ஒரு விமர்சனம் வ்ந்திருக்கிறது.
    கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.// சந்தோசம் நிரூ...கண்டிப்பாகப் பாருங்கள்.

    ReplyDelete
  45. //சே.குமார் said...
    சுவாரசியமான விமர்சனம்.// நன்றி குமார்.

    ReplyDelete
  46. / சென்னை பித்தன் said...
    ஒரு நல்ல படத்துக்கான நல்ல விமரிசனம்.// நன்றி ஐயா.

    ReplyDelete
  47. நா.மணிவண்ணன் said...
    //அண்ணே வணக்கம்னே ஒரு உலக படத்துக்கு 'உலக திரைவிமர்சனம் எழுதிருக்கீங்க.... நல்லாருக்குனே // நன்றி தம்பீ..படம் பாருங்க, உங்களுக்கு கண்டிப்பாப் பிடிக்கும்.

    //அப்பறம் ஒன்னு ... உங்களுக்கு ஜெயமோகன் வரைக்கும் லிங்க் இருக்குன்னு சொல்லவே இல்ல , எனக்கு தெரியாம போச்சுனே , நானும் உங்கள அப்ப அப்ப சீண்டி பார்த்திருக்கேன் , ஏதோ அறியாபய்யன் தெரியாம பேசிட்டான்னு நெனச்சுகோங்கன்னே..// இதெல்லாம் மணிக்கு சப்பை மேட்டரு இல்லையா?

    ReplyDelete
  48. // விக்கியுலகம் said...
    விமர்சனம் super! // நன்றி விக்கி.

    ReplyDelete
  49. // Rizi said...
    இந்தப்படம் நானும் பார்த்திருக்கிறேன் அந்த சிறுவனின் நடிப்பு அபாரம்,// ஆமாம் நண்பரே..மிகப் பொருத்தமான அப்பாவி முகம்..கலக்கி இருப்பார்.

    ReplyDelete
  50. // ஆர்.கே.சதீஷ்குமார் said...
    நல்ல விமர்சனம்,மெலினாவின் உணர்வுகளையும்,சிறுவனின் மனப்போராட்டங்களையும் விமர்சனத்தில் சரியாக தொட்டிருக்கிறீர்கள் // நன்றி சதீஷ்.

    ReplyDelete
  51. இன்று முடியவில்லை...அடுத்த பதிவுக்கு கட்டாயம் நாளை வருகிறேன்..தமிழ்மண ஒட்டு மட்டும் போட்டேன்...மன்னிச்சு...

    ReplyDelete
  52. எல்லாத்திலையும் இப்ப தான் ஓட்டு போட்டேன்.

    ReplyDelete
  53. //இந்தப் படத்தையும் முடிந்தால் இந்தப் பதிவையும் 18,28,38,48,58,68,78,88 வயது நிரம்பாத யோக்கியர்கள் தவிர்க்கவும்.//

    இதென்ன பாஸ் புதுசா இருக்கு

    ReplyDelete
  54. உங்களுடன் படம் கண்ட உணர்வு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  55. படம் நல்லா இருக்கும்போல இருக்கே...
    பாத்திரவேண்டியதுதான்

    ReplyDelete
  56. மிக அருமையான படம். சினிமா பாரடைசோ படத்தின் இயக்குனர் இயக்கிய படம். ஒளிப்பதிவுக்காக ஆஸ்கார் வாங்கியதாய் நினைவு. இப்படத்தை ஆளாளுக்கு பிட்டு படமாய் எடுத்து சீரழித்துவிட்டார்கள். தமிழில் ந்மீதா நடித்தார்.

    ReplyDelete
  57. @சங்கர் நாராயண் @ Cable Sankar வருகைக்கு நன்றி தல.

    மோனிகா எங்க..நமீதா எங்க..நம்மாளுங்க இருக்காங்களே..

    ReplyDelete
  58. @Srikandarajah கங்கைமகன் //உங்களுடன் படம் கண்ட உணர்வு. வாழ்த்துக்கள்!// நன்றி பாஸ்.

    ReplyDelete
  59. @மதுரன் //படம் நல்லா இருக்கும்போல இருக்கே...// இன்னுமா சந்தேகம்?

    ReplyDelete
  60. செம விமர்சனம் பாஸ்..... படத்தை லயிச்சுப்பார்த்திருக்கீங்க, நண்பர் ஜீயும் ஒரு அருமையான விமர்சனம் எழுதி இருந்தார் சில மாதங்களுக்கு முன்னால். ஆனா நான்தான் இன்னும் படம் பார்க்கல...!

    ReplyDelete
  61. @பன்னிக்குட்டி ராம்சாமி இந்த விமர்சனம் எழுதத் தூண்டியதே தம்பி ஜீ தான்.

    ReplyDelete
  62. //////// நா.மணிவண்ணன் said...
    அண்ணே வணக்கம்னே ஒரு உலக படத்துக்கு 'உலக திரைவிமர்சனம் எழுதிருக்கீங்க.... நல்லாருக்குனே

    அப்பறம் ஒன்னு ... உங்களுக்கு ஜெயமோகன் வரைக்கும் லிங்க் இருக்குன்னு சொல்லவே இல்ல , எனக்கு தெரியாம போச்சுனே , நானும் உங்கள அப்ப அப்ப சீண்டி பார்த்திருக்கேன் , ஏதோ அறியாபய்யன் தெரியாம பேசிட்டான்னு நெனச்சுகோங்கன்னே ,
    /////////

    அண்ணன் பெரிய எடம்தான் போல, நாம வேற எக்குத்தப்பா பேசி இருக்கோமே.....?

    ReplyDelete
  63. //ஆனா நான்தான் இன்னும் படம் பார்க்கல...//

    அப்போ சுத்த வேஸ்ட் பாஸ் நீங்க..உங்க கூட டூ!

    ReplyDelete
  64. //அண்ணன் பெரிய எடம்தான் போல, நாம வேற எக்குத்தப்பா பேசி இருக்கோமே.....?// ஏன்யா, இப்படி ஓட்டுறீங்க?

    ReplyDelete
  65. அறவாழி : கொடுமையிளும் கொடுமை .....இதே கதையைக் கொண்ட படம் தமிழில் வெளிவந்தது தான் ......மெலீனா வாக “ நமிதா “ ........

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.