’அருவா டைரக்டர்’ என்று அடைமொழி எடுத்த ஹரியும் அருவா சைஸில் இருக்கும் தனுஷ்+தமன்னாவும் இணைந்து நடித்திருக்கும் மசாலாப் படம். சன்டிவி வாங்கிவிட்டு, பிறகு பின்வாங்கிய படம் இந்த வேங்கை. வேங்கை பாய்ந்ததா ஓய்ந்ததா?
’சிவகங்கைச் சீமையில் வாழும் பெரிய மனிதர் ராஜ்கிரண் ஆதரவை கெஞ்சி வாங்கி எம்.எல்.ஏ ஆகிறார் பிரகாஷ்ராஜ். அதன்பிறகும் தன் இஷ்டப்படி சம்பாதிக்க விடாமல் ராஜ்கிரண் முட்டுக்கட்டை போட்டு அவமானப்படுத்த, பகை வளார்கிறது. அதே நேரத்தில் அவர் மந்திரி ஆகிவிட, ராஜ்கிரணை கொல்ல முடிவு செய்கிறார். அதை ராஜ்கிரணின் மகன் தனுஷ் முறியடிக்கிறார்’ - இவ்வளவு தான் கதை. எப்போதும்போல் இதிலும் கதைக்காக மெனக்கெடவில்லை ஹரி. சிம்பிளான ஒரு தாட்டை வைத்துக்கொண்டு, விறுவிறுவென திரைக்கதையில் சின்ன சின்ன ட்விஸ்ட் வைத்து அசத்துவது ஹரி ஸ்டைல். இதிலும் கரகர காரைக்குடி மசாலாவோடு களமிறங்கி, ஜெயித்திருக்கிறார்.
தனுஷ் ’செல்வம்’ கேரக்டருக்கு அப்படியே பொருந்திப்போகிறார். உடம்பு ஒல்லியாக இருந்தாலும் சண்டைக்காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் வேகமே ‘வேங்கையை’ காப்பாற்றுகிறது. அப்பா மேல் காட்டும் அன்பாகட்டும், தமன்னாவின் காட்டும் காதலாகட்டும் தனுஷ் பின்னியிருக்கிறார். ஹரியின் ஹீரோக்கள் மட்டும் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. காதலை விட அப்பா-அம்மாவே முக்கியம் என்று காதலைத் தூக்கிப் போடும்போதும், தமன்னா தன் காதலை வைத்து, தன் குடும்பத்தை ஏமாற்றியதை நினைத்துக் கலங்கும்போதும் தனுஷ்க்கு இன்னும் பழைய நடிப்பு ஞாபகம் இருக்கிறது என்று தெரிகிறது. நீண்டநாட்களாக கமர்சியல் ஹிட்டுக்காக காத்துக்கிடந்த தனுஷ்க்கு இந்தப் படம் சரியான வாய்ப்பு.
ராஜ்கிரண் கதையின் நாயகனாக வருகிறார். முழுப் படமும் இவரைச் சுற்றியே வருகிறது. இவரது நடிப்பு அந்தக் கேரக்டருக்கு மெருகேற்றுகிறது. படத்தில் ஏமாற்றம் பிரகாஷ்ராஜ் தான். வழக்கமான வில்லன் பாத்திரம், வழக்கமான அங்க சேஷ்டைகள் என்று கொஞ்சம் சலிப்பூட்டினாலும், காமெடி கலந்தே அவரது காட்சிகள் நகர்வதால் படம் தப்பிக்கிறது.
காமெடியனாக கஞ்சா கருப்பு. யாராவது நல்ல காமெடி ரைட்டர் இவருக்கு உடனடித் தேவை. இல்லையென்றால் தேறுவது ரொம்பக்கஷ்டம். சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், ஹாண்ட்பார் காமெடி எரிச்சல் மூட்டுகிறது. தெரு மாறி வந்து சைக்கிளை விடும் காட்சியில் மட்டும் தியேட்டரே சிரிப்பில் அதிர்ந்தது.
தமன்னா........கதைக்குத் தேவைப்படாத ஹீரோயின் கேரக்டர். ஆனாலும் படத்தை சுவாரஸ்யமாய் நகர்த்துவது தமன்னா வரும் காதல் காட்சிகளும், பின்பகுதி செண்டிமெண்ட்டும் தான். தனுஷை விடவும் ஒல்லியாக இருக்கிறார். பாவம், என்ன கவலையோ. ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், படவாய்ப்புகள் குறையக் குறைய தமன்னாவின் ட்ரெஸ் அளவும் குறைந்துகொண்டே போவது தான். பாடல் காட்சிகளில் தாராளம்..மற்ற படக்காட்சிகளில் குடும்பக்குத்துவிளக்காக கலக்குகிறார்.
மசாலாப் படத்துக்கு இசையமைக்க தேவிஸ்ரீபிரசாத்-ஐ விட்டால் பொருத்தமான ஆள் வேறு யார்..படத்திற்கு பெரிய பலம் சூப்பர் ஹிட் பாடல்கள். ’என்ன சொல்லப் போறே, புடிக்கலை, ஒரே ஒரு வார்த்தைக்காக’ என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் மனதைக் கவர்கின்றன. வெற்றியின் கேமராவும், வி.டி.விஜயனின் எடிட்டிங்கும் படத்தின் வேகத்திற்கு பக்கபலம்.
இந்தப் படத்தில் நம்மை ஆச்சரியப்படுத்தும் விசயம் ஹரியின் உழைப்பு. கதை நடக்கும் இடம் சிவகங்கை என்று சொல்ல மட்டும் செய்யாமல் ஒவ்வொரு காட்சியிலும் அவர்களது கலாச்சாரம், ஊர்ப் பெயர்கள், ஆளைத் தூக்க சரியான இடங்கள், வன்முறையை வாழ்க்கையின் அங்கமாக எடுத்துக்கொள்ளும் ஒரு சமூகம் என பிண்ணனியில் நிறையவே ஃபீல்டு ஒர்க் பண்ணியிருக்கிறார். அதுவும் கிளைமாக்ஸில் பூஜை அரையில் இருக்கும் கருப்பசாமியின் படையல் அருவாளை எடுத்து தனுஷிடம் ராஜ்கிரண் கொடுக்கும் காட்சி, அந்த சமூகத்தின் வரலாற்றை தொட்டுச் சொல்கிறது. சிவகங்கைக்காரர்களுக்குத் தெரியும் அவற்றின் அருமையும், முக்கியத்துவமும்.
தன்னை ஒரு கமர்சியல் டைரக்டர் என்று அறிவித்துக்கொண்ட ஹரியிடம் உலகச் சினிமா எதிர்பார்ப்பது நம் தவறு. சொன்னபடி கமர்சியல் படம் கொடுத்திருக்கிறாரா என்று பார்த்தால், சொல்லி அடித்திருக்கிறார். வழக்கமான ஹரியின் க்ளிஷேக்கள் இருந்தாலும், நல்ல பொழுதுபோக்குப் படம் பார்க்க விரும்புவோர்க்கு செம மசாலா விருந்து.
வேங்கை - பாயும் மசாலாப் புலி
படிச்சிட்டு வர்றேன் ;-)
ReplyDelete@பாரதசாரி வாங்க பாஸ்..
ReplyDeleteok. ok. aruvaa vettumaa
ReplyDelete@தமிழ்வாசி - Prakash ம்..வெட்டுது.
ReplyDeleteநல்ல விமர்சனம் ...இன்னுமொரு அருவாப் படம் தான் போலத் தெரியுதே பாஸ்? வர்றட்டும் ஆன் லைன்ல தான் பாக்கனும்
ReplyDelete@பாரதசாரி //இன்னுமொரு அருவாப் படம் தான்// அருவாப் படம் தான்...அதில் என்ன சந்தேகம்?
ReplyDeletevimarsanam theruthu. but padam theruma?
ReplyDelete@தமிழ்வாசி - Prakash பொழுதுபோக்க நல்ல படம் தான்.
ReplyDeletepadam paarththu viduvom.. nalla poluthu pokku venumilla... vimarsanam.. super...vaalththukkal
ReplyDelete@மதுரை சரவணன் நன்றி பாஸ்..ரொம்ப நாள் கழிச்சு நம்ம கடைப்பக்கம் வந்ததுக்கு!!
ReplyDelete///ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், படவாய்ப்புகள் குறையக் குறைய தமன்னாவின் ட்ரெஸ் அளவும் குறைந்துகொண்டே போவது தான்.// ஹிஹிஹி ,சரியாக சொன்னீங்க இது பெரும்பாலும் சகல நடிகைகளுக்கும் பொருந்தும் ...
ReplyDeleteஎன்ன இருந்தாலும் என் செல்லப்பெயரை அனுமதி இன்றி படத்தின் தலைப்பாக வைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
ReplyDeleteRefer cablesankar review on this vengai movie...... he has put better stills....
ReplyDeleteவிமர்சனம் அருமை....
ReplyDeleteஆனால் படம் எதிர்பார்த்ததுபோல் அமையவில்லைப்போல் தோன்றுகிறது.
//ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், படவாய்ப்புகள் குறையக் குறைய தமன்னாவின் ட்ரெஸ் அளவும் குறைந்துகொண்டே போவது தான்.//
ReplyDeleteஹி ஹி ஹி அப்போ பட வாய்ப்பே இல்லைன்னா???????????????????/
தனுஷ்க்கு இன்னும் பழைய நடிப்பு ஞாபகம் இருக்கிறது என்று தெரிகிறது. நீண்டநாட்களாக கமர்சியல் ஹிட்டுக்காக காத்துக்கிடந்த தனுஷ்க்கு இந்தப் படம் சரியான வாய்ப்பு//
ReplyDeleteஎதனை எதற்குள் கொண்டு வந்து சொருவுறார் நம்ம மாப்ளே...
ஹி....
வேங்கையினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் மனதினை ஆட்கொள்ளும் வண்ணம், காத்திரமான ஒரு விமர்சனத்தை வழங்கியிருக்கிறீங்க.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி மாப்ஸ்.
Nice..
ReplyDeletegood review..
ReplyDelete//ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், படவாய்ப்புகள் குறையக் குறைய தமன்னாவின் ட்ரெஸ் அளவும் குறைந்துகொண்டே போவது தான்.//
ReplyDelete?????? :-))
//வழக்கமான ஹரியின் க்ளிஷேக்கள் இருந்தாலும், நல்ல பொழுதுபோக்குப் படம் பார்க்க விரும்புவோர்க்கு செம மசாலா விருந்து//
ReplyDeleteOK OK! :-)
Phonetic Translater is missing in my blog again.. :-(
ம்ம்ம் நல்ல விறுவிறுப்பான படம்,என்ன சொல்ல போற பாட்டு எனக்கும் புடிச்சிருந்தது, ஆனா தமண்ணா வேண்டுன்னுதான் நினைக்கீறேன்
ReplyDeleteவிமர்சனம் எத்தன எத்தன படிக்க!முடியலய்யா..
ReplyDeleteஆனாலும் விமர்சனம் நல்லா இருக்கு!
விமரிசனமே படம் பார்த்த திருப்தியைத் தந்து விட்டது!
ReplyDeleteநாளைக்கு போகலாம் என்று இருக்கிறோம்..போலாம்ல?
ReplyDeleteநல்ல விமர்சனம்
ReplyDeleteஎங்கண்ணே தமன்னா 'ஸ்டில்' ஒன்னையும் காணோம் , ஒரு வேலை அண்ணே திருந்திட்டாரா ( அதுக்குலாம் சான்சே இல்லையே )
ReplyDelete// கந்தசாமி. said...
ReplyDeleteசரியாக சொன்னீங்க இது பெரும்பாலும் சகல நடிகைகளுக்கும் பொருந்தும் ...// நல்லா கவனிச்சு வச்சிருக்கீங்களே..
// ! சிவகுமார் ! said...
ReplyDeleteஎன்ன இருந்தாலும் என் செல்லப்பெயரை அனுமதி இன்றி படத்தின் தலைப்பாக வைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.// என்ன இருந்தாலும் இது ஓவரு..
// Vadivelan said...
ReplyDeleteRefer cablesankar review on this vengai movie...... he has put better stills....// ஹா..ஹா..நன்றி நண்பரே.
// மதுரன் said...
ReplyDeleteஹி ஹி ஹி அப்போ பட வாய்ப்பே இல்லைன்னா??// அடப்பாவிகளா.........
// FOOD said...
ReplyDelete@ மதுரன்:
அடக் கருமமே! // ஹா..ஹா..ஆபிசரை ஏன்யா அலற வைக்கீங்க?
// நிரூபன் said...
ReplyDeleteஎதனை எதற்குள் கொண்டு வந்து சொருவுறார் நம்ம மாப்ளே...// என்ன ஒரு கமெண்ட்டு!!
// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteNice.. // நைஸ் கமெண்ட் கருன்.
// ஜீ... said...
ReplyDeletePhonetic Translater is missing in my blog again.. // தம்பி, கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் சைட்ல போய் அடிக்கலாமே..
// இரவு வானம் said...
ReplyDeleteம்ம்ம் நல்ல விறுவிறுப்பான படம்,என்ன சொல்ல போற பாட்டு எனக்கும் புடிச்சிருந்தது, // கரெக்ட் நைட்டு..பார்க்கக்கூடிய படம் தான்...இந்த வருட சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றாக ‘என்ன சொல்லப் போறே’ இருக்கும்..
//ஆனா தமண்ணா வேண்டுன்னுதான் நினைக்கீறேன்// என்னது உங்களுக்கு தமன்னா வேணுமா?..அதுக்கு நான் என்னய்யா செய்யணும்?
// விக்கியுலகம் said...
ReplyDeleteவிமர்சனம் எத்தன எத்தன படிக்க!முடியலய்யா..// எல்லாரும் போட்டி போட்டு சமூகசேவை செஞ்சா, பாராட்டும்யா.
//சென்னை பித்தன் said...
ReplyDeleteவிமரிசனமே படம் பார்த்த திருப்தியைத் தந்து விட்டது!// இபடியே எல்லாரும் நினைச்சுட்டா, தயாரிப்பாளார் போண்டி தான்.........!
// அமுதா கிருஷ்ணா said...
ReplyDeleteநாளைக்கு போகலாம் என்று இருக்கிறோம்..போலாம்ல?// போலாம்......ஹரி படம்ங்கிறதை ஞாபகம் வச்சுக்கிட்டு போகணும்..ஆரண்ய காண்டம் ரேஞ்சுக்கு எதிர்பார்க்கக்கூடாது.
// முரளிகண்ணன் said...
ReplyDeleteநல்ல விமர்சனம் // ஆஹா...பாராட்டுக்கு நன்றி சார்...நீரோடை இந்தப் பக்கம் பாய்ந்ததில் மகிழ்ச்சி.
// நா.மணிவண்ணன் said...
ReplyDeleteஎங்கண்ணே தமன்னா 'ஸ்டில்' ஒன்னையும் காணோம் , ஒரு வேலை அண்ணே திருந்திட்டாரா ( அதுக்குலாம் சான்சே இல்லையே )// தம்பி, இது குடும்பத்தோட பார்க்குற படம்னு சிம்பாலிக்கா தமன்னா ஸ்டில் போடாமச் சொல்லி இருக்கேன்.(எப்படில்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு).
இதே படத்துக்கு நாமளும் விமர்சனம் எழுதுனோம். 10 கமெண்ட்தான் வந்தது,.(அதுல பாதி ரிப்ளை கமெண்ட் ஹி ஹி ) ஆனா அண்ணனுக்கு மட்டும் 42. ம் ம் டேய் சி பி தம்பி. நீ இன்னும் வளரனும்டா.
ReplyDelete@சி.பி.செந்தில்குமார் உங்களுக்கு வந்த கூட்டத்துல பாதிதானே இங்க வந்திருக்கு..அதைப் பாரும்யா.
ReplyDelete\\’அருவா டைரக்டர்’ என்று அடைமொழி எடுத்த ஹரியும் அருவா சைஸில் இருக்கும் தனுஷ்+தமன்னாவும் இணைந்து நடித்திருக்கும் மசாலாப் படம்.\\ முதல் பந்திலேயே சிக்சர் அடிச்சிட்டீங்க. ஹா...ஹா..ஹா...
ReplyDelete@Jayadev Das நன்றி சார்.
ReplyDelete