ஒரு கேரக்டருக்காக தன் உடலையே வருத்தி மாற்றிக்கொள்ளும் பிறவி நடிகன் விக்ரம், மதராசப்பட்டிணம் என்ற வித்தியாசமான படத்தை வழங்கிய இயக்குநர் விஜய் இணைந்து ட்ரெய்லரிலேயே மிரட்டும் படம் என்பதால், நீண்டநாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படம். நாளை காலை படம் ரிலீஸ்..விமர்சனம் உங்களுக்காக இன்றே ரிலீஸ்..ரிலீஸ்..ரிலீஸ்!
ஊட்டி அருகே ஒரு கிராமத்தில் வாழும் மன வளர்ச்சி குன்றிய விக்ரமிற்கு அழகான பெண் குழந்தை பிறக்கிறது, ஆனால் விக்ரமின் காதலி+மனைவி பிரசவத்தில் இறக்கிறார். மகளின் மேல் தந்தைக்கு உயிர். தந்தை மேல் மகளுக்கு உயிர். அழகான அந்தக் குழந்தைகளின் வாழ்வில் விக்ரமின் பணக்கார மாமனார் குடும்பம் குறுக்கிடுகிறது.
விக்ரமின் குழந்தை இறந்து போன தங்கள் மகளின் நினைவாக வேண்டும் என்று விக்ரமை ஏமாற்றி, பேத்தியை தூக்கிச் செல்கின்றனர். சென்னைத் தெருவில் அனாதையாக விடப்படும் விக்ரமிற்கு உதவ முன்வருகிறார் வக்கீல் அனுஷ்கா. மனவளர்ச்சி குன்றியவரிடம் குழந்தையைக் கொடுக்க முடியாதென விஷயம் கோர்ட்டுக்குப் போகிறது. பாசமுள்ள தந்தையும் மகளும் இணைந்தார்களா என்பதே கதை.
விக்ரமின் குழந்தை இறந்து போன தங்கள் மகளின் நினைவாக வேண்டும் என்று விக்ரமை ஏமாற்றி, பேத்தியை தூக்கிச் செல்கின்றனர். சென்னைத் தெருவில் அனாதையாக விடப்படும் விக்ரமிற்கு உதவ முன்வருகிறார் வக்கீல் அனுஷ்கா. மனவளர்ச்சி குன்றியவரிடம் குழந்தையைக் கொடுக்க முடியாதென விஷயம் கோர்ட்டுக்குப் போகிறது. பாசமுள்ள தந்தையும் மகளும் இணைந்தார்களா என்பதே கதை.
விக்ரமின் நடிப்பில் மற்றொரு மைல்கல் இந்தப் படம். மனவளர்ச்சி குன்றியவராக அவர் காட்டும் மேனரிசங்கள் அற்புதம். ஆறு வயது குழந்தையின் மனநிலை கொண்டவராக வாழ்ந்திருக்கிறார் விக்ரம். விரல்களில் ஆரம்பித்து ஒவ்வொரு நகக்கணுவும் நடிக்கின்றது. எந்த வித ஹீரோயிசமும் செய்யாமல் தெய்வத் திருமகனாக வாழ்ந்திருக்கிறார். குழாயில் ஒழுகும் தண்ணீரைக் கண்டுகொள்ளாமல் ‘நார்மல்’ மக்கள் கடப்பதும், விக்ரம் அதை மூடுவதும் ஒரு நிமிடத்தில் நமக்குள் பல சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் காட்சி. மனைவி இறந்த செய்தி கேட்டு, அவர் கொடுக்கும் க்ளோசப் எக்ஸ்பிரசன் நம்மையும் கண்கலங்க வைக்கிறது.
தெய்வத் திருமகள் நிலாவாக வரும் குழந்தையும் நல்ல நடிப்பு. ஆனாலும் ஏதோ ஒன்று அதனிடம் மிஸ்ஸிங் தான்.
அருந்ததிக்கு அப்புறம் அனுஷ்காவிற்கு நடிப்பதற்கு வாய்ப்புள்ளபடம். கதையின் முக்கியப் பாத்திரமாக வருகிறார். ’விழிகளில்’ பாடலில் அனுஷ்கா அழகோ அழகு. இந்த அளவிற்கு அவரைக் குளோசப்பில் வேறு யாரும் காட்டியதும் இல்லை. விக்ரமை குழந்தையுடன் சேர்த்து வைக்க அவர் நடத்தும் போராட்டத்திற்கும் படத்தின் ஓட்டத்திற்கும் உறுதுணையாக சந்தானம். வழக்கம்போல் ஒருவரிக் காமெடியால் கலக்குகின்றார். அமலா பாலிற்கு பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை. காலை-மாலை மட்டுமே யூஸ் ஆகும் ஆவின் பால் ரேஞ்சுக்கே டீல் செய்திருக்கிறார்கள்.
ஊட்டி கதைப்பகுதியில் காமெடிப் பொறுப்பு ஏற்பது எம்.எஸ்.பாஸ்கரும் பாண்டுயும். வழக்கமான பொண்டாட்டி மேல் சந்தேகபப்டும் காமெடி தான் என்றாலும், சீரியசான படத்தில் பெரிய ரிலீஃப் அது தான். வில்லன் வக்கீலாக வரும் நாசர் கம்பீரமாக அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்திப் போகிறார்.
மனவளர்ச்சி குன்றிய ஹீரோ என்பதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், டிராமா போன்ற கதை தான். அதனாலேயே முதல் பாதியில் கொஞ்ச நேரமும் இடைவேளைக்கு அப்புறம் கொஞ்ச நேரம் சீரியல் போன்று நகர்கிறது. பிறகு மீண்டும் கோர்ட்-சவால் என படம் சூடு பிடிக்கின்றது. டீசண்டான அனுஷ்கா கேரக்டருக்கு டூயட் சாங் போட்டதும் மிகப்பெரிய குறை தான். அது இல்லாமலேயே இந்தப் படத்தை ரசிக்க முடிகின்றது. கிளைமாக்ஸும் செண்டிமெண்ட்டாக இருந்தாலும், அவ்வளவு திருப்தியான முடிவு இல்லை.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாப்பா, வெண்ணிலவே பாடல்கள் நன்றாக உள்ளன. கதை சொல்லும் பாடல் கேட்க சுமார் என்றாலும் எடுத்திருக்கும் விதம் குழந்தைகளையும் கவரும். பாட்டி வடி சுட்ட கதையை ராஜா கதியுடன் மிக்ஸ் பண்ணி விக்ரம் சொல்லும் அழகும், கிராஃபிக்ஸ் உதவியுடன் காட்டிய விதமும் அழகு.
கள்ளங்கபடமற்ற அன்பை படம் முழுதும் தெளித்து நம்மைப் பல இடங்களில் கண்கலங்க வைக்கிறார்கள். படத்தின் முக்கிய பலம் வசனங்கள். படம் நெடுகெ மெல்லிய நகைச்சுவை பரவிக்கிடக்கிறது, அதுவே இப்படத்தை ஃபீல் குட் வகையில் சேர்க்கிறது.
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு பற்றிச் சொல்லவும் வேண்டுமா? சென்னையைக் கூட(!) அழகாகக் காட்டுகிறார்.
வழக்கமான கதைகளை எடுத்துக் கொள்ளாமல், தொடர்ந்து வித்தியாசமான களத்தில் முயற்சிக்கும் இயக்குநர் விஜய்யைப் பாராட்டலாம். குத்துப்பாட்டு, பஞ்ச் டயலாக், ஃபைட் இல்லாமல் ஒரு படம் பண்ண மிகவும் தைரியம் வேண்டும். அதற்கு வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் மோகன் நடராஜனையும் பாராட்டலாம்.
குடும்பத்துடன் தான் படம் பார்ப்பேன் என்று அடம்பிடிப்போருக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. விட்டுவிட வேண்டாம்.
தெய்வத் திருமகள் - செண்டிமெண்டல் டிராமா
முதல் விதை முளைத்ததே...
ReplyDeleteஇந்த படத்தில் விக்ரமின் நடிப்பும் அதற்கான உழைப்பும் பாராட்டதக்கது.
ReplyDeleteதெய்வத் திருமகள் நிலாவாக வரும் குழந்தையும் நல்ல நடிப்பு. ஆனாலும் ஏதோ ஒன்று அதனிடம் மிஸ்ஸிங் தான்.>>>>
ReplyDeleteதிரும்ப ஒரு தடவ பார்த்துட்டு என்ன மிஸ்ஸிங்னு சொல்லுங்க...
நண்பா... படம் பார்க்க தூண்டும் விமர்சனம். அருமையா சொல்லியிருக்கிங்க.
ReplyDelete@தமிழ்வாசி - Prakash விக்ரம் தன் சாதனைகளை தானே உடைத்துச் செல்கிறார், அடுத்தடுத்து சவாலான வேடங்களை ஏற்று!
ReplyDelete//
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
திரும்ப ஒரு தடவ பார்த்துட்டு என்ன மிஸ்ஸிங்னு சொல்லுங்க.// இன்னும் ஒரு ஆயிரம் ரூபா செலவழிக்கவா?
மாப்ள எக்ஸ்பிரஸ் வேகத்துல விமர்சனம் வந்தாலும் சும்மா பிரிச்சி மேஞ்சிருக்கீரு...
ReplyDeleteபெரிய வெற்றிக்கு பின்னே விக்ரமிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி ஞாபகம் வருகிறது.....அதற்க்கு அவர் "ஒரு எல்லை தாண்டும் போது பணம் காகிதக்குப்பையாகும் அப்போது மனம் நாம் என்ன சாதித்தோம் என்று ஏங்கும்...அந்த மனத்திற்க்காகவே நான் வித்தியாசத்தை ஏற்கிறேன்" என்று சொன்னதாக ஞாபகம்! ...
...பகிர்வுக்கு நன்றி
விமர்சனம் நன்றாக உள்ளது பாஸ்,,
ReplyDeleteஇந்த மாதம் எதிர்பார்த்த படங்களில்(வேங்கை, அவன் இவன்) எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது இது மட்டும்தான் போலுள்ளது
ReplyDeleteஅருமையாக இருக்கிறது... இதையும் படிக்கவும்
ReplyDeletehttp://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_5577.html
aahaa ஆஹா அண்ணன் முந்திக்கிட்டார்.. கவிதை வீதி சவுந்தர் பாவம்.
ReplyDeleteபடம் பிரிவ்யூ ஷோ பார்த்தவங்க கமர்ஷியல் சக்சஸ் கஷ்டம்னு சொன்னாங்க.. ஆனா நல்ல படங்களை ரசிப்பவர்கள் பார்க்கவேண்டிய படம்தான்..
kalakkal vimarsanam..
ReplyDeleteLooks like "I am SAM". http://en.wikipedia.org/wiki/I_Am_Sam
ReplyDeleteI am Sam is an excellent movie. I love that movie. This movie should be good as well.
ஞ்ச் டயலாக், ஃபைட் இல்லாமல் ஒரு படம் பண்ண மிகவும் தைரியம் வேண்டும்// correct..
ReplyDeleteஅப்படியே டோரென்ட் டவுன்லோட் லிங்க் குடுதிங்கான புண்ணியமா போகும் சாமி
ReplyDeleteவணக்கம் பாஸ், இருங்க படிச்சிட்டு வாரேன்.
ReplyDeleteநாளை காலை படம் ரிலீஸ்..விமர்சனம் உங்களுக்காக இன்றே ரிலீஸ்..ரிலீஸ்..ரிலீஸ்!//
ReplyDeleteஆகா...அதெப்படி மாப்ளே....உங்களாலை தான் இந்த மாதிரி மேட்டர் எல்லாம் முடியுது,
பாஸ் தெய்வத் திருமகனா இல்லே, தெய்வத் திருமக்ளா.
ReplyDeleteவிமர்சனம் அசத்தல், படத்தின் வருகைக்காக காத்திருக்கிறேன்.
ReplyDeleteஅதற்குள் விமரிசனமா?அசத்தல்.படம் பார்க்கும் ஆசையைத் தூண்டுகிறது!
ReplyDeleteசெங்கோவி அவர்களே
ReplyDelete.... இது ஒரு ஆங்கில படத்தின் அப்பட்டமான காப்பி " ஐ ஆம் சாம்..." இது ஹிந்தியில் கூட வந்துள்ளது.....
@விக்கியுலகம் //ஒரு எல்லை தாண்டும் போது பணம் காகிதக்குப்பையாகும் அப்போது மனம் நாம் என்ன சாதித்தோம் என்று ஏங்கும்.// ஆமாம் விக்கி..விக்ரம் தெளிவானவர் தான்.
ReplyDelete@மதுரன் //இந்த மாதம் எதிர்பார்த்த படங்களில்(வேங்கை, அவன் இவன்) எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது இது மட்டும்தான் போலுள்ளது// ஆனாலும் கமர்சியல் ஹிட் சந்தேகம் தான் மதுரன்.
ReplyDelete@FOOD//விக்கியின் இந்த வரிகள், விக்ரமின் உழைப்பின் உயர்வை சொல்லும்.// கரெக்ட் சார்.
ReplyDelete@சி.பி.செந்தில்குமார் //ஆனா நல்ல படங்களை ரசிப்பவர்கள் பார்க்கவேண்டிய படம்தான்..// அப்போ நீங்க பார்க்க மாட்டீங்களாண்ணே?
ReplyDelete@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி கருன்.
ReplyDelete@MSV Muthu //Looks like "I am SAM". // அப்படியா? நான் பார்த்ததில்லை பாஸ்.
ReplyDelete@Carfire //அப்படியே டோரென்ட் டவுன்லோட் லிங்க் குடுதிங்கான புண்ணியமா போகும் சாமி// இங்கயே படம் ரிலீஸ் ஆயிடுச்சு..ஈரோட்டு தியேட்டர்ல ஆகலையா?
ReplyDelete@நிரூபன் //பாஸ் தெய்வத் திருமகனா இல்லே, தெய்வத் திருமக்ளா.// திருமகன்னு வைச்சாங்க. அதற்கு ஒரு ஜாதி அமைப்பு கண்டனம் தெரிவிச்சுச்சு..அதனால திருமகள்னு மாத்தீட்டாங்க. ரெண்டுமே பொருத்தமான தலைப்பு தான்.
ReplyDelete@சென்னை பித்தன் //படம் பார்க்கும் ஆசையைத் தூண்டுகிறது!// நன்றி ஐயா.
ReplyDeleteI Am Sam பார்த்தாச்சே.
ReplyDeleteஆனாலும்,விக்ரம்,அனுஷ்காவிற்காக பார்க்க வேண்டும்.
@arun// இது ஒரு ஆங்கில படத்தின் அப்பட்டமான காப்பி " ஐ ஆம் சாம்..."// அப்படியா..அது உண்மையென்றால் நம் பாராட்டில் பாதியை வாபஸ் வாங்கி விடலாம்.
ReplyDeleteஉங்க விமர்சனம் படிச்சதும் படம் பாக்கணும் இப்பவே என்ற ஆசை வந்துட்டுது பாஸ்
ReplyDeleteகொஞ்சம் விட்டா ஷூட்டிங் நடக்கும்போதே விமர்சனம் போடுவீங்க போல!
ReplyDeleteசெங்கோவி....!
ReplyDelete“ஈசன்“ பட விமர்சனத்தின் மூலம் என்னைக்கு பிடித்தமான பதிவராக நீங்கள் அறிமுகமானீர்கள்.
அவ்வப்போது படித்து வந்திருக்கிறேன்.
தெய்வத்திருமகள் விமர்சனமும் அருமை. பலரும் படத்தைப்பற்றி நல்லதாகக் கூறிவிட்டதால், நாளைக்காவது 500 செலவழித்து படம் பார்த்துவிட வேண்டும்.
படம் இன்னும் பாக்கல.பாத்ததுக்கப்புறம் சொல்றேன்.
ReplyDeleteசரி, அதென்னங்க- சென்னையைக்கூட(!) அழகாக காட்டியிருக்கிறார்?//
ஹா ஹா ஹா....
விமர்சனத்தைப் படித்த பிறகு படம் பார்க்கலாம் என்ற எண்ணம் வருகிறது.. நீண்ட நாளைக்கு பிறகு அந்த எண்ணத்தை வரவழைத்த உங்களுக்கு நன்றி!
ReplyDeleteதெரியல மாம்ஸ்... நான் நாமக்கல்ல இருக்கேன் இங்க 6 மாசமா தியேட்டர் ஸ்டிரைக் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல???
ReplyDelete@அமுதா கிருஷ்ணா //I Am Sam பார்த்தாச்சே.//
ReplyDeleteஅப்படியென்றால் த்விர்க்கலாம்..I am sam - காப்பி பற்றிய சூடான பதிவு இங்கே: http://umajee.blogspot.com/2011/07/i-am-sam.html
@"கற்றது தமிழ்" துஷ்யந்தன் பாருங்க துஷ்யந்த்.
ReplyDeleteவிகரமின் உழைப்பிற்காகவாகிலும் படம் வெற்றியடைய வேண்டும்!
ReplyDelete@! சிவகுமார் ! //கொஞ்சம் விட்டா ஷூட்டிங் நடக்கும்போதே விமர்சனம் போடுவீங்க போல!// ஷூட்டிங்கப்போ உள்ள விட்டா அதையும் செய்வோம் சிவா..அதுசரி, இந்த விமர்சனமாவது பிடிச்சிருக்கா?
ReplyDelete@மருதமூரான். //“ஈசன்“ பட விமர்சனத்தின் மூலம் என்னைக்கு பிடித்தமான பதிவராக நீங்கள் அறிமுகமானீர்கள். //
ReplyDeleteஈசனா..ரணகளமான அனுபவம் ஆச்சே. சிலபேருக்கு அதனாலயே என்னைப் பிடிக்கலை தெரியுமா...
@எஸ்.பி.ஜெ.கேதரன் //படம் இன்னும் பாக்கல.பாத்ததுக்கப்புறம் சொல்றேன்.// ஐ அம் சாம் - பாத்தவங்களுக்கு இது பிடிக்காமல் போகலாம். ஜாக்ரதை.
ReplyDelete@Carfire // நான் நாமக்கல்ல இருக்கேன் இங்க 6 மாசமா தியேட்டர் ஸ்டிரைக் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல??// என்ன, தியேட்டர் இல்லா ஊரில் ஆறு மாசமா குடியிருக்கீங்களா? வெட்கம்..வெட்கம்!
ReplyDeleteமுதல் விமர்சனம் இன் பதிவுலகம் போல ?விமர்சனம் கலக்கல் பாஸ்!!
ReplyDeleteஓ! இப்பதான் பார்க்கிறேன்!
ReplyDelete//விக்ரமின் காதலி+மனைவி பிரசவத்தில் இறக்கிறார்//
ReplyDeleteபார்ரா!
//அழகான அந்தக் குழந்தைகளின் வாழ்வில் விக்ரமின் பணக்கார மாமனார் குடும்பம் குறுக்கிடுகிறது//
மறுபடியும் பார்ரா!
//டீசண்டான அனுஷ்கா கேரக்டருக்கு டூயட் சாங் போட்டதும் மிகப்பெரிய குறை தான்//
ரைட்டு!
அப்ப சரியாண்ணே எல்லாம்? நான் படம் பார்க்கல! நல்ல dvd வந்ததும் பார்ப்பேன்! :-)
ReplyDelete@மைந்தன் சிவா //முதல் விமர்சனம் இன் பதிவுலகம் போல ?விமர்சனம் கலக்கல் பாஸ்!!// சும்மா இருங்க சிவா, ஜீ பின்னாடி செம கடுப்புல பார்த்துக்கிட்டு இருக்கார்.
ReplyDelete@ஜீ... //ஓ! இப்பதான் பார்க்கிறேன்!// நல்லவேளை!
ReplyDelete@ஜீ... //அப்ப சரியாண்ணே எல்லாம்? // ஆமாம் ஜீ, அப்பட்டமான காப்பி தான்.
ReplyDeleteஇந்தப் படம் ஐ அம் சாமின் தழுவல் என டைட்டிலில் சொல்ல முடியாது. அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் பேட்டியில் ‘தன்னுடைய கற்பனை’ என்றி ரீல் சுத்தாமல், இன்ஸ்பிரேசன் என்பதை விஜய் சொல்லலாம்.
படம் காப்பி என்றாலும் விக்ரமின் உழைப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
//ஆனால் பேட்டியில் ‘தன்னுடைய கற்பனை’ என்றி ரீல் சுத்தாமல், இன்ஸ்பிரேசன் என்பதை விஜய் சொல்லலாம்.// :-)
ReplyDelete//படம் காப்பி என்றாலும் விக்ரமின் உழைப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.//
ரைட்டு!
ஆனா அதுக்காக விக்ரம் மன நல காப்பகம் போய் ஸ்டடி பண்ணி நடிச்சுப் பழகினார்னு ரீல் சுத்தக் கூடாது! (ஏற்கனவே சொன்னாங்க போல!) Sean Penn இன் நடிப்பைப் பார்த்தே கற்றுக் கொள்ளலாம்!
ஜீ... said...
ReplyDelete//ஆனா அதுக்காக விக்ரம் மன நல காப்பகம் போய் ஸ்டடி பண்ணி நடிச்சுப் பழகினார்னு ரீல் சுத்தக் கூடாது! (ஏற்கனவே சொன்னாங்க போல!) Sean Penn இன் நடிப்பைப் பார்த்தே கற்றுக் கொள்ளலாம்!//
ஹா..ஹா..நீங்க சொல்றது சரி தான் ஜீ.
@She-nisi வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
ReplyDeleteஒரே விமர்சன மழை... நல்ல திரைப்படங்களை பதிவுலகம் கொண்டாடுவது ஒன்றும் புதிதல்லவே...? வாழ்த்துக்கள் செங்.
ReplyDeleteநல்லவேளை வேங்கை படம் பாக்கலாம் ன்னு இருந்தேன். அதுக்கு பதிலா இதோ கெளம்பியாச்சு சத்யம் சினிமாஸ்...க்கு... வர்ட்டா....
ReplyDeleteஅருமையான விமர்சனம் ....செங்கோவி...
ReplyDeleteபேசாம முழு நேர விமர்சகராயிரலாமில்ல...
பிடிச்சிருக்கு தலைவா!
ReplyDelete@சரியில்ல....... //ஒரே விமர்சன மழை... நல்ல திரைப்படங்களை பதிவுலகம் கொண்டாடுவது ஒன்றும் புதிதல்லவே...? வாழ்த்துக்கள் செங்.// நன்றி ச.இ...படம் எப்படி இருந்துச்சுன்னு ஒரு பதிவு போடுங்க.
ReplyDelete@Reverie //அருமையான விமர்சனம் ....செங்கோவி...
ReplyDeleteபேசாம முழு நேர விமர்சகராயிரலாமில்ல...// ஏன்யா, நான் நல்லா இருக்குறது பிடிக்கலியா?
@! சிவகுமார் ! //பிடிச்சிருக்கு தலைவா!// அப்பாடி..இப்பதான்யா இந்தக் கிராமத்தானுக்கு சந்தோசமா இருக்கு.
ReplyDeleteநல்ல விமர்சனம் தலைவரே....!
ReplyDelete@பன்னிக்குட்டி ராம்சாமி நன்றி தலைவரே.
ReplyDeleteசிறப்பான விமர்சனம். அனுஷ்கா சிக்னலைக் கவனிக்காமல் கடப்பதும் விக்ரம் காத்திருந்து கடப்பதும் சிறப்பான காட்சி. கிளைமாக்ஸ் என்னை மிகவும் கவர்ந்தது. குழந்தையின் நடிப்பும் அருமை. பாஸ்கரின் காட்சிகள் பலவற்றைக் குறைத்து படத்தின் வேகத்தை அதிகரித்திருக்கலாம்.
ReplyDeleteவழக்கறிஞர் ஒத்துக் கொண்டு விட்டதால் மட்டும் நீதிபதி சாதகமான தீர்ப்பை வழங்கி விடுவாரா என்ற கேள்வி எழுகிறது.
@Jagannath இப்போது நம் நாட்டில் நடந்துகொண்டிருப்பது அது தானே? எதிர்தரப்பு அழுத்தமான வாதங்களை வைக்காவிட்டால், நீதிபதியே ஆனாலும் ஒன்றும் செய்யமுடியாது. உதாரணம் தா.கி.கொலை வழக்கு முதல் ஜெயேந்திரன் வழக்கு வரை.
ReplyDelete@MSV Muthu
ReplyDeleteகண்ணு I am Sam, You are Sam. இதையெல்லாம் உட்டுட்டு இந்த படத்தை பார்த்துட்டு அப்புறமா சொல்லு.
ஓகே.....
வேணுகோபால் புண்ணு, நீ முதல்ல I AM SAM பாரு!
ReplyDeleteஇந்த படத்திil ஒரு பaaடலை இங்கிலீஷ் படத்தில் இruinthu காப்பி அட்டிதthல் kaப்பி ரைட் actடில் 100koடிக்கும் மேல் keaட்டு இருகிரரம் இங்கிலீஷ் மியூசிக் டைரக்டர்.
ReplyDelete