Thursday, July 7, 2011

நண்பேன்டா - தொடர்பதிவு

நண்பர் ரஹீம் கஸாலி சும்மா இருக்காமல் நண்பேன்டா - தொடர்பதிவு எழுத அழைத்துவிட்டார். நமக்கோ எதையும் பாக்கி வைப்பது பிடிக்காது. எனவே அவரது அன்புக்குக் கட்டுப்பட்டு, என் நெருங்கிய நண்பர்கள் பற்றிய சிறு விவரணை இங்கே:

1. ஹிசாம் சையது : 

என் இனிய நண்பர். என்னைப்பற்றிய எல்லா சரி-தவறுகளும் அறிந்தவர். கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர். எந்த சீன் பட சிடி கிடைத்தாலும் என்னை விட்டுவிட்டுப் பார்க்காதவர். பொதுவாக உறவைப் பேணுவதில் நான் எக்ஸ்பெர்ட் அல்ல. ஒரு இடத்தை விட்டு நகர்ந்தால், சோம்பேறித்தனத்தால் அந்த உறவை அப்படியே விட்டுவிடுவேன். ஆனாலும் கடந்த பத்து வருடங்களாக எங்கள் உறவு தொடர்வதற்கு அவர் என் மேல் கொண்டிருக்கும் அன்பே காரணம்.

யாராவது ஏதாவது தவறு செய்தால், உடனே பொங்கி எழுவது அன்னாரது தனிச்சிறப்பு. ஒருநாள் காலேஜ் ஹாஸ்டலில் இருந்து கல்லூரி வரும்வழியில் ஒரு காதல் ஜோடியைக் க்ராஸ் செய்தார். அப்போது துரதிர்ஷ்டவசமாக அவர்கள் பேசியது அவர்காதில் விழுந்தது:

“குமார், அந்த நாயைப்பாரேன்..பாவம்பா..அது சாப்பாட்டுக்கு என்ன செய்யுதோ பாவம்..எப்படி மெலிஞ்சிருக்கு பாரேன்”
“ஆமா லீலா..புவர் அனிமல்”

இதைக் கேட்டுட்டு, கடுப்பின் உச்சத்துக்கே போய்ட்டார்.

“டேய், உனக்கே இன்னும் ஒரு வருசம் தாண்டா உன் வீட்ல கஞ்சி ஊத்தப்போறாங்க..அதுக்குள்ளயாவது அரியர்சைக் க்ளியர் பண்ணப்பாருடா வெண்ணை”-ன்னு அவனை லெஃப்ட் ரைட் வாங்கிட்டார்.

2. சாத்தப்பன்:

எங்க செட்லயே ரொம்ப ரொம்ப நல்ல புள்ளை. எந்தளவுக்கு நல்லபுள்ளைன்னா நான் ப்ளாக் எழுதுறது தெரிஞ்சும், இந்தப் பக்கமே வராதவர். கே.பாக்கியராஜ், எஸ்.ஜே.சூர்யால்லாம் பூமியை அழிக்கன்னே பிறந்த ராட்சசங்கன்னு உறுதியா நம்புறவர். ஆனாலும் ஆச்சரியமா எங்கூட நட்பில் இருப்பவர். நம்ம எழுத்து அவருக்கு ஒத்துவராது. வகுப்பறை தான் அவருக்குச் சரி. எந்த உதவின்னாலும் எப்பவும் கேட்கலாம்ங்கிற அளவுக்கு சாஃப்ட் டைப்+ நல்ல மனசு.

3. பூப்பன்:
என் ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட்லயே செம ஜாலியான ஆளு..எப்பவும் ‘நானா யோசிச்சேன்’ ஸ்டைல்லயே பேசுறவர். டிசிஎஸ்ல இருக்கார். அவருக்கு ஒரே ஒரு வருத்தம் தான். அவர் பேரு பூ...ப..தி..ரா..ஜ..ன். ஆனா நான் அவரை பூப்பன்னு கூப்புடறதுல ரொம்ப வருத்தம். இன்னும் நான் ப்ளாக் எழுதறேன்னு தெரியாது. 

முன்னாடி வேறொரு கம்பெனில வேலை பார்த்தப்போ, ஏதோவொரு புராஜக்ட்ல போட வுமன் படம் வேணும்னு புதுசா ஆஃபீஸ்ல ஜாயின் பண்ண பொண்ணு கேட்டுச்சு. இவரும் ஸ்டைலா “இண்டர்னெட் எக்ஸ்ப்லோரர் ஓப்பன் பண்ணு..கூகுள் இமேஜ் போ..வுமன்ன்னு டைப் பண்ணு..எண்டர்..அவ்வளவு தான் சிம்பிள்’னு சொல்லி முடிக்கவும், வந்துநின்ன படங்களைப் பார்த்துட்டு, அந்தப் பொண்ணு பதறிப்போய் மானிட்டரை ஆஃப் பண்ணிடுச்சு. திரும்பிப் பார்த்தா, நம்மாளு எஸ்கேப்!

4. சேது:
என் மாமா மகன். என் தளபதின்னு சொல்லலாம். அந்தளவுக்கு நான் ஊருக்கு வர்றேன்னாலே எல்லார்கிட்டயும் என் மச்சான் வர்றான், மச்சான் வர்றான்னு பெருமையா சொல்றவன். சில குடும்ப மனஸ்தாபத்தால கொஞ்சநாள் பேசாம இருந்தப்போ தான் ஒருத்தர் இன்னொருத்தர் மேல வச்சிருக்கிற அன்பு தெரிஞ்சது. சொந்த ஊர்ல நட்புன்னு சொல்லிக்க இருக்குற ஒரே ஆள்.

5. ஜவஹர்:

பொதுவாக அலுவலக நட்பு எனக்கு நெடுநாள் நீடிப்பதில்லை. அது உண்மையாகவும் இருப்பதில்லை. ஆனால் ஜவஹர் வித்தியாசமான நண்பர் தான். என் வளர்ச்சி கண்டு சந்தோசப்படும் நண்பர்களுள் ஒருவர். எனது மெக்கானிகல் எஞ்சினியர்களுக்கு-தொடரை முடித்ததும் இவருக்கு அதை அனுப்பி கருத்து கேட்டேன்.

அதன்பிறகே நான் ப்ளாக் எழுதும் விசயம் அவருக்குத் தெரிந்தது. மகிழ்ந்தார். இவரும் மிஸ்டர்.பெர்ஃபெக்ட். நான் பதிவில் போடும் படங்களைப் பார்த்துவிட்டு, நறநறவென பல்லைக் கடிப்பவர். பதிவுக்கு எப்படி கமெண்ட் போடுவது என்று இன்னும் கண்டுபிடிக்க முயற்சிப்பவர்.

6. மன்மதன் : இவர் என் ’முன்னாள்’ நண்பர். ஆமாம், மன்மதன் லீலைகள்ல வர்ற அதே மதன் தான்.

7. பதிவர் வினையூக்கி:
 என் கல்லூரி நண்பர். பல வருடங்களுக்குப் பிறகு பதிவுலகில் கண்டுபிடித்தேன். என்னை ட்விட்டர், ஃபேஸ்புக், பஸ் என கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று, என் ப்ளாக்கைப் பிரபலமாக்க ஆசைப்படுபவர்.

8. மணிகண்டன்:
பள்ளிக்காலத்தில் என் நெருங்கிய நண்பராய் இருந்தவர். கால ஓட்டத்தில் பிரிந்தோம். என் கல்லூரிக் காலத்தில் லெட்டர் என்ற பெயரில் பெரிய பெரிய கட்டுரைகளை இருவரும் எழுதிக்கொள்வோம். அறை நண்பர்களே ஆச்சரியப்படுவார்கள். அப்படி என்ன தான் எழுதுறாங்கன்னு.

அவரது சொந்த ஊர் கோவில்பட்டி பக்கம் விஜயாபுரி. இப்போது அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. கோயம்புத்தூரில் வசிக்கிறார் என்று மட்டும் தெரிகிறது. ‘தங்க ஆசாரி’வேலை பார்ப்பவர். முன்பு இடையர் வீதி என்ற பகுதியில் இருந்தாராம். அதன்பிறகு கோவையில் எந்தப் பகுதிக்குப் போனார் என்று தகவல் இல்லை. என்றாவது சந்திப்போம் என்று நம்புகின்றேன். 


---------------------------------------

நட்பைப் பற்றிப் பேசுவதே சந்தோசமான விசயம் தான். அந்த சந்தோசமான காரியத்தைச் செய்ய அடுத்து நான் அழைப்பது:

வினையூக்கி

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

33 comments:

  1. I am surprised to see my name, Thank you Nanba. Nice to see some of the names whom I have known :P

    ---

    Thank you for inviting me as well

    ReplyDelete
  2. @வினையூக்கி //I am surprised to see my name, // நீங்க இல்லாமலா மூத்த பதிவரே..

    ReplyDelete
  3. ungal nanbarkalai thirumbi paartha pathivu ithu. super nanba

    ReplyDelete
  4. @தமிழ்வாசி - Prakash//today late. so methu vadai// லேட்டா வந்தா ஆமை வடை தான்யா.

    ReplyDelete
  5. thodar pathivu ezhuthanumam. thala koopittu irukkaar. time kidaikkuma? mmm.... paarkkalaam

    ReplyDelete
  6. //ungal nanbarkalai thirumbi paartha pathivu ithu. super nanba// நன்றி பிரகாஷ்..சீக்கிரம் தொடர்பதிவை எழுதுங்கள்.

    ReplyDelete
  7. நண்பேண்டா....

    ReplyDelete
  8. நன்பேண்டா -நல்ல நண்பனை பற்றி

    ReplyDelete
  9. நல்ல பதிவு.
    மலரும் நினைவுகள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. கூட்டத்துல கோயில் புறா...யார இங்க தேடுதய்யா!

    ReplyDelete
  11. சுகமான நினைவுகள் ....

    ReplyDelete
  12. @Mahan.Thamesh //நன்பேண்டா -நல்ல நண்பனை பற்றி// நல்ல நண்பர்கள் கிடைப்பது வரம் தான் இல்லையா..

    ReplyDelete
  13. @FOODசரியாச் சொன்னீங்க சார்.

    ReplyDelete
  14. @Rathnavel வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  15. @விக்கியுலகம் //கூட்டத்துல கோயில் புறா...யார இங்க தேடுதய்யா!// வேற யாரை..நண்பர்களைத்தான்.

    ReplyDelete
  16. @கோவை நேரம் //சுகமான நினைவுகள் ....// உண்மை தான் பாஸ்..

    ReplyDelete
  17. //பொதுவாக உறவைப் பேணுவதில் நான் எக்ஸ்பெர்ட் அல்ல. ஒரு இடத்தை விட்டு நகர்ந்தால், சோம்பேறித்தனத்தால் அந்த உறவை அப்படியே விட்டுவிடுவேன்//
    என்னண்ணே என்ன மாதிரியே இருக்கீங்க!

    ReplyDelete
  18. ஆகா! நாமளுமா? :-)

    ReplyDelete
  19. நண்பர்கள் பற்றி நல்ல பதிவு!

    ReplyDelete
  20. @ஜீ... //என்னண்ணே என்ன மாதிரியே இருக்கீங்க!// தம்பி, எங்கிட்ட இருக்குற எல்லாக் கெட்ட பழக்கமும் உங்ககிட்டயும் இருக்கும்போலிருக்கே.

    ReplyDelete
  21. @ரஹீம் கஸாலி //arumai nanbaa. Kalakkal// அழைப்புக்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  22. @சென்னை பித்தன் //நண்பர்கள் பற்றி நல்ல பதிவு!// நன்றி ஐயா.

    ReplyDelete
  23. மறுபடியும் முதல்ல இருந்தா அவ்வ்வ்வ்வ்வ் ஒக்கெ இன்னும் ரெண்டு மாசம் ஆகும் வெயிட் பண்ணுங்க :-)))

    ReplyDelete
  24. @இரவு வானம் //இன்னும் ரெண்டு மாசம் ஆகும் வெயிட் பண்ணுங்க// ரெண்டு வருசம் ஆனாலும் விட மாட்டேன்.

    ReplyDelete
  25. வணக்கம் மாப்ளே,

    தாமதமான வருகையுடன் வந்திருக்கேன்.

    ReplyDelete
  26. எந்த சீன் பட சிடி கிடைத்தாலும் என்னை விட்டுவிட்டுப் பார்க்காதவர்.//

    உயிர் நட்பிற்கு இது தான் அடையாளம் என்று நினைக்கிறேன்..
    மச்சி, உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,

    எதையுமே ஓப்பினாப் பேசுற பண்பு...
    ஐ லைக் திஸ்.

    ReplyDelete
  27. நண்பேண்டா பதிவின் மூலமாக, கபடமற்ற நண்பர்களைப் பற்றிய சுவாரசியமான நினைவு மீட்டல்களைப் பகிர்ந்திருக்கிறீங்க.

    ரசித்தேன் பாஸ்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.