‘படிப்புக்கு அவ்வளவு தான் மரியாதை, இல்லையாடா?” என்ற டயலாக் என் கல்லூரி நண்பர்களிடையே மிகவும் பிரபலம். காரணம் அதைக் கேட்ட சுரேஷும், கேட்கப்பட்ட கேப்டனும். கேப்டன் என்றால், கல்லூரியில் கிரிக்கெட் டீம் கேப்டனாக இருந்து ‘கேப்டன்’ என்று பெயர் பெற்ற நண்பர்.
என்னைப் போன்றே கேப்டனும் ஏழ்மையான சூழ்நிலையில் ஒரு கிராமத்தில் இருந்து தட்டுத்தடுமாறி படித்து வந்தவர். நாங்கள் பயின்றது அரசுக் கல்லூரிகள் லிஸ்ட்டில் வரும் தன்னாட்சி பெற்ற மதுரை தியாகராசா பொறியியல் கல்லூரி. எனவே மதிப்பெண் அடிப்படையில் வரும் பெரும்பாலான மாணவர்கள் முதல் தலைமுறைப் பட்டதாரிகள், தமிழ்வழியில் பள்ளிக்கல்வியை பயின்றவர்கள். இதை எங்கள் கல்லூரி நிர்வாகமும் புரிந்தே இருந்தது.
எனவே முதல் இரு வருடங்களுக்கு பாடம் நடத்தும்போது தமிழிலும் சொல்வார்கள். அடுத்த ஆண்டில் அது கொஞ்சம் குறைந்து, இறுதி ஆண்டில் முழு ஆங்கிலத்திற்கு அனைத்து லெக்சரர்களும் மாறியிருபபர்கள். அது எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.
கேப்டனும் கல்லூரியிலும் பாஸ் பண்ணுவதற்கே ஆரம்ப வருடங்களில் போராடியவர்.சராசரி மதிப்பெண்களுடன் பி.இ. முடித்தார். அதன்பின் ஆங்கிலமும் வசப்பட்டு விட அடுத்து எம்.இ. முடித்தார்.
கல்லூரிக் காலம் முடிந்து, வேலை தேடும் படலம் தொடங்கியது. கேப்டனுக்கும் நல்ல ஒரு கம்பெனியில் செட்டில் ஆனார். அங்கு நல்ல பெயரும் சில வருடங்களில் கிடைத்தது. அதுவரை எந்தவொரு இடத்திலும் வேலையில் சேராமல்/நிலைக்காமல் சுரேஷ் போராடிக் கொண்டிருந்தார். சுரேஷ், படித்த நல்ல வேலையில் இருக்கும் பெற்றோரின் மகன். எனவே ஆரம்பக் காலம் முதல் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர். அவரும் பின்னர் கேப்டன் வழியில் எம்.இ. முடித்தார், அதிக மதிப்பெண்களுடன்.
துரதிர்ஷ்டவசமாக சுரேஷிற்கு வேலை எதுவும் அதன்பிறகும் கிடைக்கவில்லை. எனவே நண்பர்களின் உதவியை நாடினார். நம் கேப்டனும் தன் கம்பெனியில் பேசி, நண்பனுக்கு வேலை வாங்கிகொடுத்தார். அடுத்துத் தான் பிரச்சினை ஆரம்பம் ஆனது. கம்பெனி எதிர்பாப்பது முதலில் குவாலிட்டியை, அடுத்து குவாண்ட்டிடியை. தரமான முறையில் வேலை செய்வது எல்லோருக்கும் வருவதல்ல. பெரும்பாலானோர் ரஃப் அடி அடித்து வேலையை முடிப்பவர்களே. அவர்களை கம்பெனி அதற்கே இருக்கும் தரம் அதிகம் தேவைப்படாத புராஜக்ட்களில் போட்டு, வேலை வாங்கிக் கொள்ளும். தரம் அதிகம் எதிர்பார்க்கும் க்ளையண்ட்/ புராஜக்ட்களில் ரொம்ப தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்களை வைத்துக் கொள்ளும். சிலர் இரண்டுக்குமே ரெடியாக இருப்பர்.
சுரேஷிடம் இருந்த பிரச்சினை குவாலிட்டி, குவாண்டிடி இரண்டுமே இல்லாதது தான். ஒரு வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதும், அப்படி முடிக்கும் வேலையிலும் ஆயிரத்தெட்டு கம்ப்ளைண்ட்ஸ். தொடர்ந்து அவருக்கு வார்னிங் கொடுக்கப்பட்டுகொண்டே வந்தது.
இன்னொரு பக்கம் நம் கேப்டன் ‘தெளிவாக’ அடித்து விளையாடிக்கொண்டிருந்தார். கம்பெனி நிர்வாகம் சுரேஷ் விஷயத்தில் பொறுமை இழந்து கேப்டனை அழைத்தது. கேப்டனுக்கு நல்ல பெயர் இருந்ததால் சுரேஷுக்கு அறிவுரை சொல்லும்படியும், இல்லையென்றால் வேலையை விட்டு தூக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்தது. கேப்டனும் சுரேஷிடம் ‘பார்த்து இருந்துக்கோ மச்சி. இப்படிச் சொல்றாங்க’ என்ற போது சுரேஷ் சொன்ன பதில் தான் ” படிப்புக்கு அவ்வளவு தான் மரியாதை, இல்லையாடா?”. “நீ எப்படி படிச்சே, என்ன மார்க் எடுத்தே...நான் எப்படிப் படிச்சேன், என்ன மார்க் எடுத்தேன்னு நினைச்சுப்பாருடா. அப்போ நான் படிச்சதுக்கு, என் மார்க்குக்கு ஒரு மரியாதையும் இல்லை. அப்படித் தானே?” என்று சுரேஷ் தொடர்ந்து கேட்க, கேப்டன் நொந்து போனார்.
பெரும்பாலான மாணவர்கள் நினைப்பது நல்ல மார்க் மட்டுமே தன்னைக் கரையேற்றும் என. ஆனால் கம்பெனிகளுக்குத் தேவை ‘எக்ஸிக்யூடிவ்ஸ்’ தான். ஒரு செயலை நிறைவேற்றும்-எக்ஸிகியூட் செய்யும் ஆட்களே கம்பெனிகள் எதிர்பார்ப்பது. டிகிரி சர்ட்டிஃபிகேட்டும் மார்க் ஷீட்டும் இண்டர்வியூ முடிந்ததும் மதிப்பிழந்து விடுகின்றன. அதன்பிறகு கம்பெனி அது பற்றிக் கவலைப் படுவதில்லை. ஏனென்றால் எந்தவொரு க்ளையண்ட்டும் உங்கள் மார்க் ஷீட்டுக்காக ‘பில்’ பண்ணுவதில்லை.
சில பதவிகள் குறிப்பிட்ட படிப்பைக் கோரும். அதற்காக அந்தப் படிப்பு முடித்த சில பேக்குகள் உள்ளே வந்து விடுவதும் உண்டு. அவர்களாலும் சுரேஷ் போல் அதிகநாட்கள் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. ஒரு வேலையைக் கொடுத்தால் எந்த அளவிற்கு உற்சாகத்துடன், குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கின்றீர்கள் என்பதே கம்பெனிகளின் தேவை. சில நேரங்களில் கோல்மால்களைக் கூட கம்பெனிகள் சந்தோசமாக அனுமதிக்கும் என்பது அசமஞ்ச மாணவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய அதிர்ச்சிச் செய்தி.
அப்படியென்றால் படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லையா? அப்புறம் ஏன் கம்பெனிகள் அதிக மார்க் எடுத்தவனை கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்ந்தெடுக்கின்றன என்பது அடுத்து எழும் கேள்வி. நம் மார்க் ஷீட் ஒரு வகையில் நம் கேரக்டரையும் பிரதிபலிக்கவே செய்யும். படிப்பும் கல்லூரிக் காலத்தில் ஒரு வேலையே. அந்த வேலையை எந்த அளவிற்கு அக்கறையுடன் செய்திருக்கின்றோம் என்பதைக் கண்டுபிடிக்க மார்க்ஷீட்டும் ஒரு வழி. ஆனால் அதுவே முழுக்க சரியான முறையும் அல்ல. வேறு மாற்று வழிகள் இல்லாத சூழலில், மார்க் ஷீட்டையே கம்பெனிகள் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது.
எனது நண்பர் ஹிசாம் அலி ஒரு டஜனுக்கும் மேல் அரியர்ஸ் வைத்திருந்தவர். கடைசி 1 1/2 வருடங்களில் அத்தனை அரியர்ஸையும் வெறியோடு படித்து க்ளியர் செய்தார். அது தான் அவர் டார்கெட். அதைக் குறித்த நேரத்தில் முடித்தார். இன்று வரை அவர் அப்படியே! புராஜக்ட் டார்கெட் டேட்டை நெருங்கும்வரி கெக்கேபிக்கே என்று இருப்பதும் கடைசியில் லபோதிபோ என அடித்துக்கொண்டு வேலையை முடிப்பதும் அவர் வழக்கம். சரியான நேரத்தில் வேலையை முடிப்பவர் என்றுகம்பெனியும் அவரைக் கொண்டாடுகிறது. அதைத் தான் சொல்கிறேன், மார்க் ஷீட்டும் உங்கள் கேரக்டரைக் காட்டும்.
டிகிரி சர்ட்டிஃபிகேட் என்பது வெறும் விசிட்டிங் கார்டு. அக்கறையும் செயல்திறனுமே உங்களை செய்யும் இடத்தில் முன்னேற்றும்.
முக்கி வாங்கிய மதிப்பெண்களும் வாராது காண் கடைவழிக்கே!
நன்றி: லீலையில் மயங்கி வேலையைப் பற்றி எழுதாமல் விட்ட என்னை நறுக்கென்று குட்டிச் சொன்ன நண்பர் ‘மெட்ராஸ் பவன்’ சிவக்குமாருக்கு!
வேண்டுகோள் : மேலதிக/விடுபட்ட விபரங்களை அனுபவம் வாய்ந்தோர் பின்னூட்டத்தில் சொல்லி, பதிவைப் படிப்போர்க்கு உதவுங்கள்.
//ஒரு வேலையைக் கொடுத்தால் எந்த அளவிற்கு உற்சாகத்துடன், குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கின்றீர்கள் என்பதே கம்பெனிகளின் தேவை. சில நேரங்களில் கோல்மால்களைக் கூட கம்பெனிகள் சந்தோசமாக அனுமதிக்கும் என்பது அசமஞ்ச மாணவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய அதிர்ச்சிச் செய்தி.\\
ReplyDeleteஉண்மைதாங்க.
@gokul நன்றிங்க.
ReplyDeleteகல்லூரி மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
ReplyDeleteஆவரேஜ் மார்க் வாங்கி இருந்தாலும், நல்ல பள்ளிகளில் படித்தவர்கள் வேலையில் சேர்ந்ததும் கிடுகிடுவென் மேலே போய்விடுகிறார்கள். முக்கிய காரணம், வேலைக்கான திறமைகளை இளம்வயதில் இருந்து வளர்த்துக் கொள்வதே..!
ReplyDelete//கல்லூரி மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!// வாங்கண்ணே..நன்றிண்ணே..
ReplyDelete//முக்கிய காரணம், வேலைக்கான திறமைகளை இளம்வயதில் இருந்து வளர்த்துக் கொள்வதே..!//
ReplyDeleteஉண்மை தான் பாஸ்...வேலைக்காக வளர்க்கிறார்கள் என்பதை விட இயல்பாகவே அது மாறி விடுகிறது.
தமிழ்மணத்துக்கு என்னாச்சு, உங்க புதுப்பதிவ ஒத்துக்கவே மாட்டேங்கிதே?
ReplyDelete//தமிழ்மணத்துக்கு என்னாச்சு, உங்க புதுப்பதிவ ஒத்துக்கவே மாட்டேங்கிதே?//
ReplyDeleteஆமா பாஸ்..நானும் போராடிக்கிட்டு தான் இருக்கேன்..ரெண்டு நாளாவே இப்படித்தான்..கொஞ்சம் லேட்டாத் தான் எடுத்துக்கொள்கிறது.
இப்போ தமிழ்மணம் ஓகே!
ReplyDeleteஇதுக்குத்தான் குஷ்பூவை பகைச்சுக்காதீங்கன்னு அப்பவே சொன்னேன்
ReplyDeleteகுஷ்..பூவுக்கும் தமிழ்’மணத்துக்கும்’ என்ன பாஸ் சம்பந்தம்?
ReplyDelete//// செங்கோவி said...
ReplyDeleteகுஷ்..பூவுக்கும் தமிழ்’மணத்துக்கும்’ என்ன பாஸ் சம்பந்தம்?
////////
என்னண்ணே குஷ்பூவ பத்தி இப்பிடி சொல்லிட்டீங்க?
காப்பாற்றாது
ReplyDeleteVanthen
ReplyDeletePadichutu varen
ReplyDeleteGood Post. Ithila naan yentha maathiri velai seiren endru yosichu kitu irukken thala...
ReplyDeleteஉண்மைதான்.. வெறும் பள்ளிப்படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு எதுவுமே செய்யமுடியாது.
ReplyDelete//டிகிரி சர்ட்டிஃபிகேட் என்பது வெறும் விசிட்டிங் கார்டு. அக்கறையும் செயல்திறனுமே உங்களை செய்யும் இடத்தில் முன்னேற்றும்.
ReplyDelete/
கடைசி பஞ்ச சுப்பர் தல...நாமளும் அதே வேளையில் இருப்பதால் தெரியும் தானே!
மிகவும் பயனுள்ள பதிவு மக்கா வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇப்ப தான் உன் பக்கம் வந்தேன். ஏதோ பொறுப்பா ஒரு பதிவு போடிருக்காப்ல மாதிரி தெரியுது. படிச்சிட்டு வரேன்.
ReplyDeleteரசுக் கல்லூரிகள் லிஸ்ட்டில் வரும் தன்னாட்சி பெற்ற மதுரை தியாகராசா பொறியியல் கல்லூரி.>>>
ReplyDeleteநம்ம மதுரையில இருக்கே... காலேஜை கட் அடிச்சுட்டு மதுரையை சுத்தின அனுபவத்தை ஒரு பதிவு போடுமாறு அண்ணனை கேட்டுக் கொள்கிறேன்.
சுரேஷிடம் இருந்த பிரச்சினை குவாலிட்டி, குவாண்டிடி இரண்டுமே இல்லாதது தான். ஒரு வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதும்,>>>>
ReplyDeleteநம்ம மெக்கானிகல் துறையில குவாலிட்டி எவ்வளவு முக்கியமோ, அதே போல எண்ணிக்கையும் முக்கியம். ரெண்டுலயுமே சரிக்கு சரி திறமையா இருக்கனும்.
குவாலிபிகேசன் வேலையில் சேர உதவும், ஆனால் திறமை வேலையை தக்க வைக்க, அடுத்தடுத்து முன்னேற உதவும். ஆக குவாலிபிகேசன் வேலைக்கான நுழைவு வாயில் மட்டுமே என்பது என் கருத்து.
ReplyDeleteமதிப்பெண் மட்டுமே வாழ்கையை உயர்த்தாது என்று சொல்லிய மாப்பிள்ளைக்கு நன்றி.....சூழ்நிலையே ஒரு மனிதனை(!) புலியாக்கும் அதுவே அவனை எலியாக்கும்!....அதுவும் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும்(நல்ல!) அறிவுத்திறனே அவனை மேலும் உயரச் செய்யும்.....இது என் தாழ்மையான கருத்து!
ReplyDeleteபுதிய நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போது நாம் சம்பளம் பற்றி அதிகமாக கேட்க கூடாது. நாம் கேட்கும் சம்பளம் நமக்கு சரியானதாக இருந்தாலும் அந்த வேலை நல்ல வேலையாக இருந்தால் சம்பளத்தை குறைத்துக் கொள்வதில் ஒன்றும் தப்பில்லை.
ReplyDeleteசூப்பரண்ணே! நல்லாச் சொல்லியிருக்கீங்க!
ReplyDeleteந.ப. ந.செ! :-)
ReplyDeleteஉண்மை....உண்மை
ReplyDeleteஅருமையான பதிவு...இதையும் படிக்கவும்http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_7108.html
ReplyDeleteவணக்கம் சகோ, வித்தியாசமான ஒரு பதிவு,
ReplyDeleteஎன்னுடைய கருத்து, படிப்பறிவோடு, அனுபவ அறிவும் இருந்தால் தான், பட்டப்படிப்பின் மூலம் கிடைக்கும் பீல்ட் வேலையில் திறமையாகச் செயற்பட முடியும்.
நச்சுன்னு ஒரு பதிவு. வேலை தேடும் மாணவர்கள் இதை கட்டயாம் படிக்க வேண்டும்.
ReplyDeleteகல்லூரி மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்! நன்றி
ReplyDelete@மாய உலகம் ஆமா காப்பாற்றாது.
ReplyDelete@மாய உலகம் ஆமா காப்பாற்றாது.
ReplyDelete@டக்கால்டி //Ithila naan yentha maathiri velai seiren endru yosichu kitu irukken thala...//
ReplyDeleteஉங்க பேரைப் பார்த்தாலே தெரியுதே நீங்க எந்த டகால்ட்டி வேலைக்கும் துணிஞ்சவர்னு!
// FOOD said...
ReplyDeleteபாவம் அவரை தலையை பிச்சுக்க வச்சிட்டீங்களே!//
அவரு ஏற்கனவே அப்படித்தாங்க.
// மதுரன் said...
ReplyDeleteஉண்மைதான்.. வெறும் பள்ளிப்படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு எதுவுமே செய்யமுடியாது.// உண்மை.
// மைந்தன் சிவா said...
ReplyDeleteகடைசி பஞ்ச சுப்பர் தல...நாமளும் அதே வேளையில் இருப்பதால் தெரியும் தானே! // ரைட்டு!
// MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு மக்கா வாழ்த்துக்கள்...//
நன்றிண்ணே.
தமிழ்வாசி - Prakash said...
ReplyDelete//காலேஜை கட் அடிச்சுட்டு மதுரையை சுத்தின அனுபவத்தை ஒரு பதிவு போடுமாறு அண்ணனை கேட்டுக் கொள்கிறேன்.// அதுக்குத் தான் தனியா லீலைகளையே எழுதிக்கிட்டு இருக்கிறேனே..போதாதா?
//நம்ம மெக்கானிகல் துறையில குவாலிட்டி எவ்வளவு முக்கியமோ, அதே போல எண்ணிக்கையும் முக்கியம். ரெண்டுலயுமே சரிக்கு சரி திறமையா இருக்கனும்.//
இல்லேன்னா ஜிங்சா அடிக்கத் தெரிஞ்சிருக்கணும், இல்லையா!
//நல்ல வேலையாக இருந்தால் சம்பளத்தை குறைத்துக் கொள்வதில் ஒன்றும் தப்பில்லை.//
வேலையை கத்துக்கிறவரைக்கும் சம்பளம் எதிர்பார்க்க வேண்டாம். அதற்கப்புறம் கண்டிப்பா ஜம்ப் தான்!
// விக்கியுலகம் said...
ReplyDeleteசூழ்நிலையே ஒரு மனிதனை(!) புலியாக்கும் அதுவே அவனை எலியாக்கும்! //
இது தான் பொழைக்க ஒரே வழின்னா ஆட்டோமெடிக்கா நாம புலி ஆயிடுவோம்.
// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteThanks for sharing..//
யோவ் வாத்தியாரே, இதுக்காவது படிச்சுட்டு கமெண்ட் போடலாம்ல..மாணவர்களுக்கு உதவும்ல..
// ஜீ... said...
ReplyDeleteந.ப. ந.செ! :-) //
இப்போ ஏன் திடீர்னு டென்சன் ஆகுறீங்க? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்?
//Vetri said...
ReplyDeleteஉண்மை....உண்மை// உண்மையைத் தவிர ஏதுமில்லையா?
நிரூபன் said...
ReplyDelete//வணக்கம் சகோ, வித்தியாசமான ஒரு பதிவு // திடீர்னு நல்ல பதிவு எழுதுனா அப்படி வித்தியாசமாத் தான் தெரியும்.
//என்னுடைய கருத்து, படிப்பறிவோடு, அனுபவ அறிவும் இருந்தால் தான், பட்டப்படிப்பின் மூலம் கிடைக்கும் பீல்ட் வேலையில் திறமையாகச் செயற்பட முடியும்.// உண்மை தான் நிரூ..’மனப்பாட’ படிப்பறிவை எளிதாகப் பெறும் ஒருவர் ‘அனுபவ’ அறிவைக் கிரகிக்க முடியாமல் தடுமாறுவதே பிரச்சினை.
// நண்பன் said...
ReplyDeleteநச்சுன்னு ஒரு பதிவு. வேலை தேடும் மாணவர்கள் இதை கட்டயாம் படிக்க வேண்டும்.// பாராட்டுக்கு நன்றி நண்பரே!
// SENTHIL said...
ReplyDeleteகல்லூரி மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!//
நன்றி!
//ரா. ராஜ்குமார் said...
ReplyDeleteஅருமையான பதிவு...// ரைட்டு.
வெரிகுட் போஸ்ட் அண்ணே
ReplyDelete// எந்தவொரு க்ளையண்ட்டும் உங்கள் மார்க் ஷீட்டுக்காக ‘பில்’ பண்ணுவதில்லை.//
ReplyDeleteஉண்மைதான். அவசரமாக வேலை முடிய எல்லா உயர் அதிகாரிகளுக்கும் CC போட்டு மெயில் அனுப்பி என்னை சீண்டுவார்கள் வெள்ளையர்கள். கடைசியில் தவறு அவர்கள் பக்கம் இருக்கும் என்பதை நிரூபித்தால், “I apolozise. Thanks for the response. Have a nice day” என்று வழிவார்கள். ஆனால் அந்த மெயிலில் CC போட்ட அதிகாரிகளின் பெயர்களை தூக்கி விடுவார்கள். அப்போதுதான் தவறு அவர்கள் பக்கம் என்பதை மறைக்க முடியும். ஆனால் நான் விடமாட்டேன். மீண்டும் அதற்கு “Thanks” என்று ரிப்ளை செய்கையில் அனைத்து அதிகாரிகளுக்கும் காப்பி செய்வேன். நல்லவனாக இருத்தலோடு வல்லவனாயும் இருந்தால்தான் தொழில் செய்ய முடியும். இல்லாவிட்டால் நமக்கு அல்வாதான்!!
நான் இரவில் வேலை செய்து மதியம் எழுவதால் கமன்ட் போட லேட் ஆகிறது. மன்னிக்க நண்பரே!!
ReplyDelete@! சிவகுமார் ! //நல்லவனாக இருத்தலோடு வல்லவனாயும் இருந்தால்தான் தொழில் செய்ய முடியும். இல்லாவிட்டால் நமக்கு அல்வாதான்!!// கரெக்ட்டாச் சொன்னீங்க சிவா.
ReplyDelete//நான் இரவில் வேலை செய்து மதியம் எழுவதால் கமன்ட் போட லேட் ஆகிறது. மன்னிக்க நண்பரே!!//
அதனால் என்ன நண்பா..எல்லா நாளும் கமெண்ட் போடணும்னு கட்டாயம் இல்லை..இது மாதிரி போஸ்ட்களில் நீங்க மேலும் சில பாயிண்ட்களைக் கொடுக்க முடியும்..அதனால இது மாதிரி போஸ்ட்டை தவற விடாதீங்க.
எதிர்காலத்துடன் எதார்த்தத்தை புகுத்திய விதம் அருமை
ReplyDeleteகுஷ்புவின் கால் முறிந்து போனது, நமீதாவின் இடுப்பு பெரிசா போனது, ஷகீலா ஊதிப் போனதுன்னு விஷயமாவே பதிவு போட்டு திடீர்னு இந்த பதிவைப் போட்டு அசத்திடியே செங்கோவி!! என்னைப் பொறுத்த வரைக்கும் நமது கல்வித் திட்டம் நம்ம திறமையை மழுங்கடித்து, நம்மை மனப்பாடம் செய்யும் மெஷீன்கலாக்கி, குதிரைக்கு கண்ணை மறக்க ஒரு தகரம் போடுவாங்களே அது மாதிரி நம்முடைய சிந்தனையை குறுகலாக்கி நம்மை ஒன்றுக்கும் லாயக்கற்றவர்கலாக்கும் ஒன்றாகும். ஒருத்தன் மார்க்கு கம்மியா வாங்குகிறான் என்றால், அவன் சாதிக்கப் போவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறதென்று அர்த்தம். இந்தக் கல்வித் திட்டத்தில் மாற்றம் வர வேண்டும், அது எப்போது நடக்குமோ தெரியவில்லை.
ReplyDelete@! ❤ பனித்துளி சங்கர் ❤ ! //எதிர்காலத்துடன் எதார்த்தத்தை புகுத்திய விதம் அருமை// நன்றி சங்கர்..கமெண்ட்டையும் கவிதை மாதிரி தான் எழுதுவீங்களா..
ReplyDelete@Jayadev Das //குஷ்புவின் கால் முறிந்து போனது, நமீதாவின் இடுப்பு பெரிசா போனது, ஷகீலா ஊதிப் போனதுன்னு விஷயமாவே பதிவு போட்டு திடீர்னு இந்த பதிவைப் போட்டு அசத்திடியே செங்கோவி!!// அது வாழ்க்கைக் கல்வி சார்!
ReplyDelete@Jayadev Das //குதிரைக்கு கண்ணை மறக்க ஒரு தகரம் போடுவாங்களே அது மாதிரி நம்முடைய சிந்தனையை குறுகலாக்கி நம்மை ஒன்றுக்கும் லாயக்கற்றவர்கலாக்கும் ஒன்றாகும்.//
ReplyDeleteஉண்மை தான்..மாறுபட்ட சிந்தனைகளை நம் கல்வி முறை அனுமதிப்பதில்லை.
@Jayadev Das நான் இது மாதிரி பதிவு போட்டா, நீங்க வழக்கமா ஏதாவது எதிர்விவாதம் பண்ணுவீங்க. இன்னைக்கு பாராட்டறதைப் பார்க்கும்போது, இது உருப்படியான பதிவு-ன்னு கன்ஃபார்ம் ஆகுது சார்.
ReplyDelete\\நான் இது மாதிரி பதிவு போட்டா, நீங்க வழக்கமா ஏதாவது எதிர்விவாதம் பண்ணுவீங்க.\\ வெறும் ஆமாம் சாமி போடற ஆளுங்களை சுத்தி வச்சிருக்கிறது ரொம்ப டேஞ்சர் செங்கோவி. கசப்பாக இருந்தாலும், என்னை மாதிரி இடித்துரைக்கும் ஆளுங்களும் வேணும்!!
ReplyDelete@Jayadev Das கரெக்ட் சார்..எல்லோரும் ஆமாம்னு சொல்லிட்டா போரடிச்சிரும். மேலும், நான் கசப்பா இருக்குன்னு சொல்லலை, சொல்ல மாட்டேன்!
ReplyDeleteBoss,
ReplyDeleteI used to read your blog, but never posted comment so far.
Happy to know that you did your engineering at Thiagaraja.
Which batch you are?
Thanks,
Sathish
@Sathish
ReplyDelete2001.
என்னதான் அதிகமா மார்க் வாங்கி இருந்தாலும் அது ஒரு மதிப்பீடே தவிர நாமளும் கொஞ்சம் முயற்சித்தால் தான் முன்னேற்றமே ...நல்ல பதிவு ....
ReplyDelete//டிகிரி சர்ட்டிஃபிகேட் என்பது வெறும் விசிட்டிங் கார்டு. அக்கறையும் செயல்திறனுமே உங்களை செய்யும் இடத்தில் முன்னேற்றும்.//
ReplyDeleteஇதை விடச் சிறப்பாகச் சொல்ல முடியாது.