சமீபத்தில் சென்னை இராணுவக்குடியிருப்பில் பழம் பறிக்கச் சென்ற சிறுவன் தில்சனை யாரோ ஒரு ராணுவ அதிகாரி கொன்றதாகச் செய்திகள் வந்ததையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
பொதுவாகவே ராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் என்றாலே நம் போலீஸாரின் கைகள் கட்டப்படும். ராணுவத்தின் அனுமதியின்றி வழக்கப்பதிய முடியாது என்பதே நடைமுறை. நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோர் மீது தவறான வழக்குகள் எதுவும் சுயநலமிகளால் தொடுக்கப்பட்டு விடக்கூடாது என்பதே அதன் பின்னால் உள்ள நோக்கம். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலையே நிலவுகிறது.
பொதுநல வழக்குகள் என்ற பெயரில் போடப்படும் பல வழக்குகள் தனிப்பட்ட நபர்களைக் குறி வைத்தே போடப்படுகின்றன. இத்தகைய ஜனநாயக நாட்டில் தான் அந்தப் படுகொலை நிகழ்ந்தது. சிறு வயதில் தோப்புக்குள் புகுந்து பழங்கள் திருடுவது என்பது பெரும்பாலும் எல்லாச் சிறுவர்களும் செய்வதே, நான் உட்பட. சிறுவர்களுக்கு சர்வதேச பயங்கரவாதம் பற்றி என்ன தெரியும்? காசு கையில் இருந்தாலும் திருட்டுத்தனமாக பழம் பறிப்பது, ஒரு ஜாலியான, த்ரில்லான விளையாட்டு.
இதை அனைவரும் அறிவர். ஆனால் குடிபோதையில் இருந்த அந்த ராணுவ அயோக்கியனுக்கு போதை கண்ணை மறைக்க, துப்பாக்கி எடுத்து சுட்டுக் கொன்றான். எந்தவொரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் தவறு செய்தாலும், முதலில் அதை அந்த அமைப்பு மறைக்க முற்படுவதே வாடிக்கை. இங்கும் அதுவே நிகழ்ந்தது.
ஒரு ஜனநாயக நாட்டில் நமக்கிருக்கும் வசதி என்னவென்றால், அப்படி அந்தக் குற்றச்செயல் மறைக்கப்பட்டு விடாமல் மீடியாக்கள் மூலமும் போராட்டங்கள் மூலமும் தடுக்க முடியும் என்பதே. இந்தக் கொலையிலும் அதுவே நிகழ்ந்தது.
குற்றம் நடந்தது சென்னை என்பதாலும் ஏறக்குறைய அனைத்து மீடியாக்களும் இந்த விஷயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டின. சீமான், வைகோ, திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகளும் இந்த விஷயத்தில் அறிக்கை விட்டு, பிரச்சினையை மூடி மறைக்க இயலாதபடி செய்தார்கள்.
குற்றம் நடந்தது சென்னை என்பதாலும் ஏறக்குறைய அனைத்து மீடியாக்களும் இந்த விஷயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டின. சீமான், வைகோ, திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகளும் இந்த விஷயத்தில் அறிக்கை விட்டு, பிரச்சினையை மூடி மறைக்க இயலாதபடி செய்தார்கள்.
ஒரு குற்றம் நடந்தவுடன், சில மணி நேரங்களில் குற்றவாளியைக் கைது செய்வது எல்லா நேரமும் சாத்தியம் அல்ல. அதுவும் ராணுவம் போன்ற வல்லமை மிக்க அமைப்பு சம்பந்தப்படும்போது, பல நடைமுறைச் சிக்கல்களையும் தடைகளையும் தாண்டியே குற்றவாளியை நெருங்க முடியும்.
குற்றம் நடந்த ஒரு வாரத்தில் சிறுவன் தில்சனைக் கொன்ற ராணுவ அயோக்கியன் கந்தசுவாமி ராம்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளான். தில்ஷனை சுட பயன்படுத்தப்பட்ட யுஎஸ் ஸ்பிரிங்பீல்டு நீள் துப்பாக்கி கூவம் ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. சுட்டவன் ஓய்வு பெற்ற மதுரையைச் சேர்ந்த லெப்டினண்ட் கர்னல் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
குற்றம் நடந்த ஒரு வாரத்தில் சிறுவன் தில்சனைக் கொன்ற ராணுவ அயோக்கியன் கந்தசுவாமி ராம்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளான். தில்ஷனை சுட பயன்படுத்தப்பட்ட யுஎஸ் ஸ்பிரிங்பீல்டு நீள் துப்பாக்கி கூவம் ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. சுட்டவன் ஓய்வு பெற்ற மதுரையைச் சேர்ந்த லெப்டினண்ட் கர்னல் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது நடந்தது ஒரு ராணுவ அயோக்கியனின் பாதகச் செயலே ஒழிய இந்திய ராணுவம் தொடுத்த தாக்குதல் அல்ல. இது அனைவருக்குமே தெரியும். ஆனால் நாம் கடந்த சில நாட்களாகச் செய்தது என்ன? கிடைத்தது சாக்கு என்று இந்திய ராணுவத்தையும் இந்தியாவையும் வசை பாட ஆரம்பித்தோம்.
அன்னிய நாட்டின் கைக்கூலிகளான சில சக்திகளும் இந்த விஷயத்தில் களமிறங்கி, ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்று சுற்றி வந்தன. இந்த ஜனநாயக அமைப்பிலேயே ஒரு ராணுவ அதிகாரிக்கு இந்தத் துணிச்சல் என்றால், இவர்கள் விரும்பும் சர்வாதிகார ஆட்சி மலர்ந்தால் இதே ராணுவத்தினர் என்னவெல்லாம் செய்வார்கள் என்ற லாஜிக்கலான யோசனையை விட்டு விட்டு, இந்த ஜனநாயக அமைப்பே எல்லாவற்றுக்கும் காரணம் என்று சிலர் தூற்றி வந்தார்கள்.
இப்போது குற்றவாளி கைது செய்யப்பட்டு விட்டார். நமது ராணுவத்தின் பல செயல்பாடுகளில் நமக்கு கடுமையான எதிர்க்க்கருத்துகள் இருந்தாலும், முற்றிலும் ஒதுக்கப்பட வேண்டிய அமைப்பு அல்ல அது. ராணுவத்தில் இருக்கும் எல்லா வீரர்களும் ஈழ, மணிப்பூர்ப் பிரச்சினையில் அரசு ஆதரவுக் கொள்கை உடையவர்கள் அல்ல. எங்கள் உறவினர்களும் ராணுவத்தில் உண்டு. இந்தியாவை ஆளும் கட்சியின் தவறாகவே அவர்களால் வருத்தத்துடன் அந்த விஷயங்கள் பேசப்படுகின்றன.
இந்தப் படுகொலையை மையமா வைத்து நடந்த ஊடக, பதிவுலக செய்திகளைப் பார்க்கையில் ஒன்று புரிந்தது. இந்தியா ஒருங்கிணைந்து இருப்பது பலரின் கண்ணை உறுத்துகின்றது. அதை உடைப்பதற்கான வாய்ப்புகளைத் தேடி பலரும் அலைகின்றனர்.
குற்றம் குறைகள் பல இருந்தாலும், இந்த ஜனநாயக அமைப்புக்குள் இருந்தபடியே நமக்கான தேவைகளை, கால தாமதம் ஆனாலும் ஜனநாயகப் போராட்டங்கள் மூலம் நம்மால் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதே கடந்த ஒரு வார நிகழ்வுகள் நமக்கு உணர்த்தும் உண்மை.
இனிய இரவு வணக்கங்கள் சகோ.
ReplyDeleteகிடைத்தான் அயோக்கியன்
ReplyDeleteமுதலில் என் கருத்துக்களில் தவறேதும் இருந்தால் மன்னிக்கவும்,
ReplyDeleteவிமர்சனங்களை மாத்திரம் முன் வைக்கிறேன், இதன் மூலம் எம்மிடையே கருத்து மோதல்கள் ஏற்படலாமே தவிர, எம் நட்பிற்கு களங்கம் ஏதும் ஏற்படாது என நினைக்கிறேன்,
@நிரூபன் வணக்கம் நிரூ..தாராளமாக எதிர்க்கருத்தை முன் வையுங்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது நடந்தது ஒரு ராணுவ அயோக்கியனின் பாதகச் செயலே ஒழிய இந்திய ராணுவம் தொடுத்த தாக்குதல் அல்ல. இது அனைவருக்குமே தெரியும். ஆனால் நாம் கடந்த சில நாட்களாகச் செய்தது என்ன? கிடைத்தது சாக்கு என்று இந்திய ராணுவத்தையும் இந்தியாவையும் வசை பாட ஆரம்பித்தோம்//
ReplyDeleteஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்று ஆன்றோர் ஒரு வாக்கியம் கூறிவார்கள்.
இங்கே ஒரு ராணுவ வீரன் தான் தவறு செய்திருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.
அது தான் கட்டுரையாளராகிய உங்களது கருத்தும் கூட.
இப்போது என் கேள்வி என்னவென்றால்,
ஒரு இராணுவ வீரனை அடிப்படையாகக் கொண்டு நாம் ஒட்டு மொத்த மிலிட்டரி அமைப்பினைத் தவறாக கூற முடியாது என்றும் கூறுகிறீர்கள்.
அப்படியாயின் இலங்கையில் இடம் பெற்ற இனப்படுகொலைகளையும் குறிப்பிட்ட ஒரு பற்றாலியனைச் சேர்ந்த படையினர் தான் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதோ ஒரு மனநோய் வியாதி இருக்கிறது. அவர்களை அடிப்படையாகக் கொண்டு ஒட்டு மொத்த இலங்கை இராணுவத்தினையும் நான் குற்றம்சாட்ட முடியாது என்று எல்லோரும் கூறலாம் தானே?
பிறகேன் இலங்கை இராணுவம் மீது போர்க் குற்ற விசாரணை?
ஒரு பாடசாலையிலோ அல்லது கல்லூரியிலோ படிக்கும் மாணவர்களில் ஒருவன் தவறானவன் என்பதற்காக நாம் ஒட்டு மொத்த மாணவர் சமூகத்தையும் தவறான பார்வையில் எடை போட முடியாது என்பது யதார்த்தம். ஆனால்
ReplyDeleteஅந்த யதார்த்தம் எப்படி ஆயுதங்களோடு போராடும்- ஆயுதங்களைத் தாங்கிய ஒரு கூட்டத்தினருக்குப் பொருந்தும்?
அவர்களுக்குப் பொருந்தாது தானே, ஆகவே தில்சானைச் சுட்டுக் கொன்ற இராணுவ வீரனின் மறைவிற்கு- அந்தக் கொலையாளியின் பின்னே உள்ள பட்டாலியன் படை வீரர்கள் பதில் சொல்ல வேண்டியது இங்கே கடமையாகிறது தானே?
@நிரூபன் ஈழப் பிரச்சினையில் இலங்கை ராணுவத்தின் செயல்பாட்டை மட்டுமல்ல, இந்திய ராணுவத்தின் செயல்பாட்டையும் கடுமையாக எதிர்ப்பவன் நான் என்பதை நீங்களே அறிவீர்கள்.
ReplyDeleteஆனால் இந்தச் சம்பவத்தில் இந்திய ராணுவ அமைப்பு ஏதாவது சதி/திட்டம் தீட்டியதா? நடந்தது ஒரு குடிகாரன் செய்த கொலை..அதற்கு ஒட்டுமொத்த அமைப்புமே பொறுப்பு என்பது ஏன் என்பதே பதிவு எழுப்பும் கேள்வி.
//ஒரு பாடசாலையிலோ அல்லது கல்லூரியிலோ படிக்கும் மாணவர்களில் ஒருவன் தவறானவன் என்பதற்காக நாம் ஒட்டு மொத்த மாணவர் சமூகத்தையும் தவறான பார்வையில் எடை போட முடியாது என்பது யதார்த்தம். // உண்மை நிரூ..இங்கு குற்றவாளி ஒரு ஓய்வு பெற்ற கர்னல் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ReplyDeleteமணிப்பூர்/ஈழ விஷயங்களில் படைகளின் செயல்பாடு முன்னரே தீர்மானிக்கப்பட்டு, அதிகாரிகளின் ஒப்புதலுடன் நடத்த்ப்பட்டன. அதனாலேயே அந்தக் கொடூரங்களுக்கு நாம் ராணுவத்தைப் பொறுப்பாக்கி எதிர்க்கின்றோம்.
இங்கே அப்படி ஏதாவது ராணுவத்தின் சதி/திட்டம் உண்டா?
ஒரு அமைப்பு குற்றம் செய்கையில் அதை வன்மையாகக் கண்டிக்க வேண்டியது நம் போன்ற மனசாட்சி உள்ளோரின் கடமை.
ReplyDeleteஇந்தச் சம்பவம் அப்படியா?
@செங்கோவி said...
ReplyDeleteமணிப்பூர்/ஈழ விஷயங்களில் படைகளின் செயல்பாடு முன்னரே தீர்மானிக்கப்பட்டு, அதிகாரிகளின் ஒப்புதலுடன் நடத்த்ப்பட்டன. அதனாலேயே அந்தக் கொடூரங்களுக்கு நாம் ராணுவத்தைப் பொறுப்பாக்கி எதிர்க்கின்றோம்.
இங்கே அப்படி ஏதாவது ராணுவத்தின் சதி/திட்டம் உண்டா?//
ஓக்கே, திட்டமிட்ட வகையில் இங்கே கொலை இடம் பெறவில்லை,
ஆனால் குடி போதையில் என்பதும், மனவிரக்தி- மனநோய் காரணமாகவும் இராணுவ அதிகாரிகள் மக்களைச் சுட்டார்கள் என்பது தானே நான் காலதி காலமாக ஒவ்வோர் சம்பவங்களின் பின்னணியிலும் அறியும் விடயம்.
அப்படியிருக்க, இங்கேயும் குடி போதையில் தான் அந்த வீரர் சுட்டிருக்க்கிறார் எனக் கூறுவது அவ் இராணுவ வீரனின் செயலினை மறைமுகமாக நியாயப்படுத்த தானே?
///ராணுவ அயோக்கியன்///
ReplyDeleteithai padikkumbothu enakku ennavo pola irukku....
yaraiyum onnum soldrathukilla..
சகோ.... உங்கள் கேள்வி நியாயம் தான்... உங்கள் சகோதர சகோதரிகள் பல வருடங்களாக துன்பபடுத்தி இரக்கமற்றவர்களால் கொல்லப்பட்டுள்ளார்கள். மேலிட உத்தரவு இல்லாமல் அவர்களால் இத்தகைய கொடுஞ்செயல்கள் புரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இச்சிறுவனின் கொலையில் குற்றவாளி தனித்தே செயல்பட்டிருக்கான். திட்டம் தீட்டி செய்யப்படவில்லை. ஆகவே குற்றம் முழுவதும் அவன் ஒருவனையே சாரும்.
ReplyDeleteமாப்பிளை, நாம இப்படிப் பேசிப் பார்ப்போமா,
ReplyDeleteஇப்போது இராணுவ வீரனைக் குற்றஞ்சாட்டும் விசயத்தை தள்ளி வைப்போம்,
என் கேள்வி. ஒருவனின் கையில் துப்பாக்கியை கொடுக்கிறோம் என்றால்,
அந்த துப்பாக்கியை எப்போது உபயோகிக்க வேண்டும், எந்த சந்தர்ப்பத்தில் யூஸ் பண்ண வேண்டும் என்று தகுந்த அறிவுரை சொல்லி கொடுக்க வேண்டியது யாருடைய பொறுப்பு?
@RK நண்பன்.. /////ராணுவ அயோக்கியன்///
ReplyDeleteithai padikkumbothu enakku ennavo pola irukku....// அவனை அதிகாரி என்று சொல்ல மனம் வரவில்லை நண்பரே..அந்தக் குடும்பத்தின் நிலையை நினைத்துப் பாருங்கள்..டிவியில் பார்க்கும்போது மிகவும் சங்கடமாக இருந்தது.
இராணுவத்தைக் குற்றம் சாட்டுதல் தவறு என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டாலும்,
ReplyDeleteஇந்தக் கொலையின் பின்னணியில் இராணுவ வீரர்களின் செயல் இருக்காது என்பதற்கு என்னாலோ அல்லது உங்களாலோ ஆதாரங்கள் எதனையும் திரட்ட முடியுமா?
பின்னணியில் போடி போக்காக அல்லது டைம் பாஸ்ஸிற்கு இவர்கள் துப்பாக்கி வேலை கொடுக்கவில்லை என்றால்,
சுட்ட பிறகு துப்பாக்கியை ஏன் ஆற்றில் வீச வேண்டும்?
@நிரூபன் //என் கேள்வி. ஒருவனின் கையில் துப்பாக்கியை கொடுக்கிறோம் என்றால்,
ReplyDeleteஅந்த துப்பாக்கியை எப்போது உபயோகிக்க வேண்டும், எந்த சந்தர்ப்பத்தில் யூஸ் பண்ண வேண்டும் என்று தகுந்த அறிவுரை சொல்லி கொடுக்க வேண்டியது யாருடைய பொறுப்பு?//
நிரூ, ட்ரெய்னிங்கின்போது சொல்லித்தரவே செய்வார்கள் இல்லையா..நிச்சயம் குடித்துவிட்டு, சிறுவனைச் சுடு என்று சொல்லி இருக்க மாட்டார்கள்.
ஒரு லாரி டிரைவர், பல நாள்கள் நன்றாக ஓட்டியவன், ஒரு நாள் விபத்தில் யாரையாவது கொன்றால்..ட்ரெய்னிங் கொடுத்தவனையும் ஆர்.டி.ஓவையுமா குறை சொல்வீர்கள்?
மனித மனத்தில் செயல்பாடுகளை அறியாதவரா நீங்கள்? ஒருநேரத்தில் இருப்பது போல், எல்லா நேரமும் நாம் இருப்பதில்லையே!
ராணுவத்தில் பணியாற்றி, ஓய்வும் பெற்றபின் ஒருவன் செய்யும் தவறுக்கு........அந்த அமைப்பும் ட்ரெய்னிங்கும் காரணம் என்றால் என்ன சொல்ல?
ReplyDeleteமாப்ளே, சம்பவம் நடந்த இடம் குடிமனைகள் நிறைந்த இடம். மக்கள் வசிக்கும் இடம். எல்லைப் பாகுகாப்பு பகுதியிலோ அல்லது
ReplyDeleteமோதம்- போர் இடம் பெறும் பகுதிக்கு அண்மையிலோ இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தால். அதனை நாம் வேறுவிதமாக நோக்கலாம்,
ஆனால்,
மக்கள் செறிந்து வாழும் பகுதியில் தோட்டாவுடன் துப்பாக்கியை கொண்டு போய்
கீச்சு மாச்சு தம்பளம் விளையாட விட்டது யார் பொறுப்பு?
முன்னெச்சரிக்கை ஏதுமின்றிப் பொறுப்பற்ற வகையில் இராணுவ வீரரிடம் துப்பாக்கியை கையளித்த மேலதிகாரியில் தவறேதும் இல்லை என்று உங்களால் கூற முடியுமா?
ஏடிஎம் காவலாளி ஒருவர் சமீபத்தில் திடீரென விரக்தியில் சரமாரியாகச் சுட்டுக்கொன்ற சம்பவத்தை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்..அதற்கும் இப்படி யாரும் கேட்காதது ஏன்?
ReplyDeleteமக்கள் நிறைந்த ஏடிஎம்மில் ஏன் துப்பாக்கி கொடுத்தார்கள் என்றும் கேட்பீகளோ?
ReplyDeleteஒருத்தன் திடீர்னு கிறுக்குப்பிடிச்சு ஒரு காரியம் செஞ்சா, அதுக்கு அந்த அமைப்பு என்ன செய்யும்? என்ன லாஜிக் இது?
//பின்னணியில் போடி போக்காக அல்லது டைம் பாஸ்ஸிற்கு இவர்கள் துப்பாக்கி வேலை கொடுக்கவில்லை என்றால்,
ReplyDeleteசுட்ட பிறகு துப்பாக்கியை ஏன் ஆற்றில் வீச வேண்டும்?// ஒரு கொலை செஞ்சவன் ஆதாரத்தை மறைக்காமல், சண்டிவிக்காரனைக் கூப்பிட்டா காட்டுவான்?
பாஸ், உங்கள் விளக்கங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கையில், ராணுவ வீரரின் செயலை காரணம் காட்டி,
ReplyDeleteஒட்டு மொத்த இராணுவ அமைப்பினையே தவறென்று சொல்லுவது நியாயமற்ற செயல்.
ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் அதெப்படி,
எப்பவுமே பொதுமக்களைத் தவறாகச் சுடும் நபர்களுக்கு மட்டும் குடி போதையோ அல்லது மன நோயோ ஏற்பட்டு விடுகிறது?
//பாஸ், உங்கள் விளக்கங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கையில், ராணுவ வீரரின் செயலை காரணம் காட்டி,
ReplyDeleteஒட்டு மொத்த இராணுவ அமைப்பினையே தவறென்று சொல்லுவது நியாயமற்ற செயல்.
ஏற்றுக் கொள்கிறேன். // நன்றி..அப்பாடி, ஒரு பிரச்சினை முடிஞ்சது.
//ஆனால் அதெப்படி,
ReplyDeleteஎப்பவுமே பொதுமக்களைத் தவறாகச் சுடும் நபர்களுக்கு மட்டும் குடி போதையோ அல்லது மன நோயோ ஏற்பட்டு விடுகிறது?// யோவ், நல்லா இருக்குறவன் ஏன்யா சுடப்போறான்? அவனுக்கும் குடும்பம் இருக்கு..வீட்டுக்கு போகணும்னு நினைக்க மாட்டானா?
ஒரு வழியா சுமூகமா முடிஞ்சிருச்சே.... ச்சே...ச்சே...
ReplyDelete@தமிழ்வாசி - Prakash ஏன்யா இப்படி சண்டையை வேடிக்கை பார்க்க அலையறீங்க?
ReplyDelete@செங்கோவி
ReplyDeleteதுப்பாக்கிய வச்சு சண்டை போடறிங்க...
தோட்டா, கீட்டா, ரத்தம், கித்தம்னு வந்துட்டா ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போகணும்ல... அதான்யா வேடிக்கை பாக்கறோம். குறுக்கே வந்தா நம்மளுக்கும் ஆபத்துல...
நல்ல மனசுய்யா உங்களுக்கு..நல்லா இருங்க.
ReplyDeleteநாட்டை காப்பது புனிதமான தொழில் தான், ஆனா இங்கே கொன்றுவிட்டு எல்லோருமா சேர்ந்து மூடி மறைக்க பார்த்திருக்கிறார்கள், சரி ஒருவன் குடி போதையில் சுட்டுவிட்டான் ஆனால் சுடப்பட்டு குற்றுயிராக கிடந்த சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சேர்க்கணும் என்று கூட தோணவில்லையே அங்கே நின்ற ஏனைய வீரர்களுக்கு..
ReplyDelete@நிகழ்வுகள் நடந்தது கொடூரமான செயல் என்பதிலும், அதைச் செய்தவர்களும் துணை போனவர்களும் தண்டிக்கப்படவேண்டும் என்பதிலும் நமக்கு மாற்றுக்கருத்தில்லை கந்தசாமி..இது இந்திய ராணுவத்தின் சதியாக ஊதிப் பெருதாக்கப்பட்டது ஏன் என்பதே நம் கேள்வி.
ReplyDeletethala,
ReplyDeleteWrite about "Sex"ena, "Endhi"run??
//சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சேர்க்கணும் என்று கூட தோணவில்லையே அங்கே நின்ற ஏனைய வீரர்களுக்கு..//
ReplyDeleteஅடங்கொன்னியா இம்புட்டு நல்லவனுங்களா நீங்க? ரோட்டுல விபத்தில் அடிபடும் எல்லோரையும் எத்தனை பொதுமக்கள் பொறுப்பாக ஆஸ்பத்தரிக்கு எடுத்துட்டு போகிறோம்? கேள்வி கேட்க ஒரு தகுதி வேண்டாமா?
இதுல வடஇந்தியா-தென்இந்தியா பிரச்சனைய வேற கிளப்பிவிட்டுட்டாங்க. வடஇந்தியாகாரனுகளுக்கு தமிழன்னா பிடிக்காதாம், அதான் சின்ன பையன்னுகூட பாக்கம சுட்டுபுட்டாங்களாம்!...
ReplyDeleteஅப்புறம் பாத்த சுட்டது ஓரு சுத்த தமிழன்!
பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete@Vadivelan ஹா..ஹா..ஏன்யா இப்படி...நிறையப் பேர் அது பற்றி எழுதிட்டாங்களே...பார்ப்போம்.
ReplyDelete@thenali //இதுல வடஇந்தியா-தென்இந்தியா பிரச்சனைய வேற கிளப்பிவிட்டுட்டாங்க. // எல்லாமும் கிளப்பி விடப்படும் இங்கே.
ReplyDelete@விக்கியுலகம் ஏன் விக்கி...
ReplyDelete@FOODநன்றி சார்.
ReplyDeleteகடமையுணர்வுடன் செயல் பட்டு குற்றவாளியை கண்டு பிடித்த தமிழக காவல் துறைக்கு நன்றி., போதை தலைக்கேறி இம்மாதிரி ராணுவவீரர்கள் தவறிளைப்பது அதன் பயிற்சிகளை சீர் தூக்கி பார்க்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது.
ReplyDeleteமமதை தொப்பியாகிய மாறி அது கண்களை மறைத்து தான் தப்பே செய்யாத டாகல்டி என்று கனவுடன் ஓட்டு மொத்த சேரி மக்களையும் குறும்ப்பு செய்யும் சிறுவர்களை பயங்கர வாதிகள் என்று சித்தரித்து இடுகை இடுபவர்களை என்ன செய்வது? அவர்கள் மன நிலயை எதனுடன் ஒப்பிடுவது??
Thappu seithavargal kandippaaga thandikkap padavendum,,
ReplyDeleteஓக்கே அண்ணே! நீங்க சொல்வது சரிதான்!
ReplyDeleteஒரு ராணுவ அதிகாரி குடிபோதையில் தவறு செய்துவிட்டார்! - இதற்கு ஒட்டுமொத்த ராணுவத்தையும் குறை சொல்வது தவறு!
ஆனால் குற்றம் செய்தவரை சட்டத்தின் முன் நிறுத்தாது, காப்பாற்ற விளைவது அவ்வளவு நல்லாயில்லையே! - இதில் சம்பந்தப்பட்டவர்களை (நிச்சயம் ஒரு கும்பல் இருக்கும்!) என்ன செய்வார்கள்? ராணுவம் என்பது சாதாரண நிறுவனங்கள், அமைப்புகள் போன்றதல்லவே?
சட்டரீதியாக தமது தரப்பு நியாயங்களை முன்வைக்காமல், கூவத்தில் துப்பாக்கியைப் போட்டுவிட்டு ஓடுவது...
அதுவும் தமது சொந்த நாட்டிலேயே இப்பிடீன்னா...
இந்தியா ஒருங்கிணைந்து இருப்பது பலரின் கண்ணை உறுத்துகின்றது. அதை உடைப்பதற்கான வாய்ப்புகளைத் தேடி பலரும் அலைகின்றனர்.
ReplyDeleteபயம் கொள்ள வைக்கிறது.
Tahvaru Seithavargal yaraga irunthalum thandikkappada vendum...
ReplyDeleteநிரூபன்க்கு சரியா சண்டை போடத்தெரிய;ல.. அட போங்கப்பா..
ReplyDeleteஉண்மை என்னான்னு ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.
ReplyDeleteநியுஸ் பேப்பரை படித்தவுடன் லேப்டாப் எடுக்கவேண்டியது பொங்க ஆரம்பிக்கவேண்டியது. பொங்கலோ பொங்கல்.
@!* வேடந்தாங்கல் - கருன் *! //Thappu seithavargal kandippaaga thandikkap padavendum,,// ஆம் கருன்..அதுவே நமது விருப்பமும்.
ReplyDeleteஜீ... said...
ReplyDeleteஓக்கே அண்ணே! நீங்க சொல்வது சரிதான்!
ஒரு ராணுவ அதிகாரி குடிபோதையில் தவறு செய்துவிட்டார்! - இதற்கு ஒட்டுமொத்த ராணுவத்தையும் குறை சொல்வது தவறு!
//ஆனால் குற்றம் செய்தவரை சட்டத்தின் முன் நிறுத்தாது, காப்பாற்ற விளைவது அவ்வளவு நல்லாயில்லையே! - இதில் சம்பந்தப்பட்டவர்களை (நிச்சயம் ஒரு கும்பல் இருக்கும்!) என்ன செய்வார்கள்? //
எந்த ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்களும் முதலில் காப்பாற்றவே முனைவார்கள். அது தவறு என்றாலும் அதுவே யதார்த்தம். அதை வெற்றி கொள்வது எப்படி என்பதையே இந்நிகழ்வு நமக்குக் காட்டுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் அதாவது அந்த ஆளைக் காப்பாற்ற முனைபவர்கள் குற்றவாளிகள் தான். ஆனால் சட்டத்தின் முன் அதை நிரூபிப்பது கடினம்..தங்கள் வீட்டுப் பிள்ளைக்கு நேரும்போதே அதை அவர்கள் உணர்வர்.
//சட்டரீதியாக தமது தரப்பு நியாயங்களை முன்வைக்காமல், கூவத்தில் துப்பாக்கியைப் போட்டுவிட்டு ஓடுவது...// நியாயம்னு ஏதாவது இருந்தாத் தானே தம்பி முன்வைக்க முடியும்? இல்லேன்னா இப்படித்தான் ஓடணும்.
//அதுவும் தமது சொந்த நாட்டிலேயே இப்பிடீன்னா...// உண்மை..உண்மை.
இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete//இந்தியா ஒருங்கிணைந்து இருப்பது பலரின் கண்ணை உறுத்துகின்றது. அதை உடைப்பதற்கான வாய்ப்புகளைத் தேடி பலரும் அலைகின்றனர்.// சரியாகச் சொன்னீர்கள் சகோதரி.
//சே.குமார் said...
ReplyDeleteTahvaru Seithavargal yaraga irunthalum thandikkappada vendum...// நடக்கும் என்று நம்புவோம்.
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteநிரூபன்க்கு சரியா சண்டை போடத்தெரியல.. அட போங்கப்பா..// யோவ், சண்டை வேணும்னா ஜாக்கிசான் படம் பாரும்யா.
// அண்ணாச்சி said...
ReplyDeleteஉண்மை என்னான்னு ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.// நமக்கு இருட்டுதான்னு சொல்றீங்களா..
//நியுஸ் பேப்பரை படித்தவுடன் லேப்டாப் எடுக்கவேண்டியது பொங்க ஆரம்பிக்கவேண்டியது. பொங்கலோ பொங்கல்.// ஜூலை மாசம் பொங்கல் கொண்டாடுறது தப்புத் தாண்ணே.
எதற்கெடுத்தாலும் ஒட்டு மொத்த இந்திய ராணுவத்தை குறை சொல்வது சரியாக இருக்காது
ReplyDeleteசொல்வதற்கு ஒன்றும் இல்லை. இது ஒரு தனி மனிதனின் விவகாரம். ஆனால் எதற்கெடுத்தாலும் இப்படி கிளம்பி விடுவது இப்போது வாடிக்கை. இது குறித்து விவாதம் செய்ய வேண்டியது இல்லை. ஏற்கனவே நீங்களும் நிருபனும் பேசி விட்டீர்கள். இது குறித்து என் கருத்துக்களை பதிவிடலாம் என்று நினைத்திருக்கிறேன்.
ReplyDeleteசுட்டு விட்டுக் குற்றத்தை மறைக்கத் துப்பாக்கியை கூவத்தில் எறிந்து விட்டார்.மனநோய் கொண்டவரோ!
ReplyDelete@இரவு வானம் கருத்துக்கு நன்றி நைட்டு.
ReplyDelete@பாலா //ஏற்கனவே நீங்களும் நிருபனும் பேசி விட்டீர்கள். இது குறித்து என் கருத்துக்களை பதிவிடலாம் என்று நினைத்திருக்கிறேன்.// விட்டதுக்கு நன்றி..சீக்கிரம் பதிவிடுங்கள்.
ReplyDelete@சென்னை பித்தன் //சுட்டு விட்டுக் குற்றத்தை மறைக்கத் துப்பாக்கியை கூவத்தில் எறிந்து விட்டார்.மனநோய் கொண்டவரோ!//ஆளு தெளிவு தான்..காரியம் தான் கிறுக்குத்தனம்.
ReplyDeleteஅந்த கொடியவன் கைது செய்யப்பட்டது சந்தோசம்...ஒருவன் செய்த தவறுக்கு அவன் சார்ந்த அமைப்பையே சாடுவது தவறுதான்......
ReplyDelete@மதுரன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுரன்.
ReplyDeleteகொடும் துயர்! மனிதம் கெட்டுவிட்டது சிறப்பாக குழந்தகளிடம் கருணை மறுக்கப்பட்டது.
ReplyDelete