Wednesday, July 13, 2011

கடன் கொடுக்கிறவன்லாம் இளிச்சவாயன்களா?

”அண்ணே, அடுத்த மாசம் எனக்குக் கல்யாணம்ணே”

“அப்படியா..ரொம்ப சந்தோசம்டா. அண்ணன் இங்க தான் இருப்பேன். கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடறேன்” என்றேன்.

“அண்ணே, அப்புறம் கல்யாணச் செலவுக்குக் காசு கொஞ்சம் தேவைப்படுதுண்ணே. அப்பா என்னடான்னா இத்தனை வருசம் வேலை பார்த்து என்னத்தைக் கிழிச்சேன்னு கேவலமாக் கேட்காரு.”

நான் அப்போது தான் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்திருந்தேன். கையில் காசில்லை என்று பொய் சொல்ல முடியாது. சொல்லவும் மனசு வரவில்லை. அவனும் எங்கள் கிராமத்தில் இருந்து படித்து அப்போது சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். கல்யாணச் செலவுக்கு என்று ஒருத்தன் கேட்கும்போது இல்லையென்று சொல்லவும் மனம் வரவில்லை.

“சரிப்பா வாங்கிக்கோ..எப்போ திருப்பித் தருவே?’ என்று கேட்டேன்.

“உங்களுக்கு எப்போண்ணே வேணும்?” என்று கேட்டான். 

எனக்கு அப்போது தான் பெண் பார்க்க ஆரம்பித்திருந்தோம். “அடுத்து ஆறு மாசத்துக்குள்ள என் கல்யாணமும் வந்திரும். அதுக்குள்ள குடுத்துடு” என்று சொல்லி விட்டு பெருமையுடன் பணத்தைக் கொடுத்தேன்.

அப்புறம் தம்பி புது மாப்பிள்ளை ஆகி, மூன்று மாதத்தில் பழைய மாப்பிள்ளையாகவும் ஆகி விட்டான். எங்கே பார்த்தாலும் நல்லாப் பேசுவான். கொடுத்த காசைப்பற்றி மட்டும் பேச்சில்லை. எனக்கும் அடுத்து கல்யாணம் நிச்சயம் ஆனது. சரின்னு தம்பிக்கு ஃபோன் போட்டேன்.

“கல்யாணமா? ரொம்ப சந்தோசம்ணே..கண்டிப்பா குடும்பத்தோட வந்திர்றேன்”

“தம்பி, அந்தக் காசை சீக்கிரம் ஏற்பாடு பண்ணி திருப்பிக் குடுத்திடுப்பா.”

“குடுத்திடுவோம்ணே..எப்போ வேணும்? அடுத்த மாசம் ஒன்னாம் தேதி ஓகேவா?” என்று கேட்டான்.

“சரிப்பா”ன்னு சொல்லிவிட்டு சந்தோசமா ஃபோனை வைச்சேன். அடுத்த ஒன்னாம் தேதியும் வந்தது, பத்தாம் தேதியும் வந்தது. கொடுத்த பணம் தான் வரலை. திடும்ப ஃபோன்.

“என்னப்பா?”ன்னு கேட்டா “குடுப்போம்ணே..குடுக்காம ஓடியா போயிரப் போறேன். அடிக்கடி ஃபோன் பண்ணிக் காசு கேட்காதீங்க. எம்பொண்டாட்டி ஒரு மாதிரியாப் பாக்கா.” என்றான்.

நமக்கோ ஒன்றும் புரியவில்லை. ’கொடுத்த காசைத் தானே கேட்டோம், அதுக்கு ஏன் ஒரு மாதிரியாப் பார்க்காங்க’ன்னு யோசித்துக் கொண்டே “எப்போத் தான்பா தருவே?” என்றேன்.

“அடுத்த மாசம்” என்றான். அடுத்த மாதமும் போய், கல்யாணமும் நடந்துவிட்டது. கடைசி நேரத்தில் நான் 50,000 ரூபாய் கடன் வாங்கித்தான் கல்யாணம் முடித்தேன். தம்பி குடும்பதோட வந்து ஃபோட்டோவுக்கும் போஸ் குடுத்துட்டுப் போனார்.

அப்புறமும் நான் விடவில்லை. மீண்டும் ஃபோன் செய்து கேட்டால் “இப்போல்லாம் தர முடியாதுண்ணே..எப்போ முடியுதோ அப்போத் தான் தர முடியும். சும்மா டிஸ்டர்ப் பண்ணாதீங்க. நான் நினைச்சா காசே வாங்கலைன்னு சொல்ல முடியாதா? நீங்க காசு குடுத்ததுக்கு என்ன ஆதாரம் இருக்கு?” என்று குரலை உயர்த்தினான்.

“அன்னைக்கு என்ன நிலைமைல வந்து கேட்டேன்னு நினைச்சுப்பாரு” என்றேன்.
”என்ன ரொம்ப ஓவராப் பேசுறே? காசெல்லாம் தர முடியாதுய்யா. என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என்று மேலும் பல மரியாதைக் குறைவான வார்த்தைகளை வாரி இறைத்தான். காலேஜில் ஆரம்பித்து வேலை பார்க்கும் இடம் வரை பல இடங்களில் கடன் கொடுத்து பட்ட அனுபவம் நமக்குண்டு. ஆனாலும் ஒரு சின்னப் பையன் ஏமாத்தியது கோபத்தைக் கிளப்பியது.


’இனியும் படிச்சுட்டமேன்னு நாகரீகமாப் பேசுனா கதைக்காகாது’ன்னு புரிந்தது. பிறகு என் திருவாயைத் திறந்தேன். எனது சில ‘நலம் விரும்பிகளும்’ தம்பிக்கு ஃபோன் பண்ணி அன்பாக அறிவுரை சொன்னார்கள். அதன்பிறகே தம்பிக்கு ஞானதோயம் பிறந்தது. பணமும் வந்து சேர்ந்தது.

அது எப்படி பணம் கேட்கும்போது இருக்கின்ற குணம், வாங்கிய பிறகு தலைகீழாக மாறுகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. என்னோட மதிப்பு வெறும் 25,000 தானா? அதுக்காக என் உறவையே துண்டிப்பார்களா என்று வருத்தமாகவும் இருந்தது. அதன்பிறகு இனிமேல் எவனுக்கும் கடன் கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தேன்.

ஆனாலும் வாழ்க்கை விசித்திரமானது. அடுத்த ஒரு சில மாதங்களில் எனக்கு வேலை போய் ஓட்டாண்டி ஆனேன். அடுத்து வேலை கிடைத்து குவைத் வரும்வரை பணம் இல்லாமல் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. (ஃபாரின்ல சம்பாதிச்சதை எங்கயோ விட்டுட்டான்னு பின்னூட்டம் போட்டு குடும்பத்துல குழப்பம் உண்டாக்காதீங்கப்பா..அதுல வீடு ஒன்னு வாங்கிட்டேன். அப்புறம் தான் கையில கேஷ் இல்லாமப் போயிடுச்சு). சென்னையில் தான் நண்பர்கள் உதவியுடன் தங்கி இருந்தேன். தங்குவதற்கு ஒரு நண்பர் (சாத்தப்பன்) இடம் கொடுத்தார்.

மற்ற செலவுகள் முதல் குவைத் வந்த செலவுகள் வரை மொத்தமாக 40,000 மற்றொரு நண்பர் பூபதி ராஜன் கொடுத்தார். அப்போது தான் யோசித்தேன். நம்மை மாதிரியே என் நண்பர்களும் ‘கடன் கொடுப்பதில்லை’ என்ற முடிவுக்கு வந்திருந்தால், என் நிலைமை என்ன ஆகியிருக்கும்?

’இப்போ முடிவா என்ன தான் சொல்ல வர்றேன்’னு கேட்கின்றீர்களா? 

பாத்திரம் அறிந்து கடன் கொடுங்கள். அதாவது (கதா)பாத்திரம் அறிந்து கடன் கொடுங்கள். தேர்ந்தெடுத்த நண்பர்களுடன்/சொந்தங்களுடன் மட்டும் கொடுக்கல்-வாங்கல் வைத்துக் கொள்வது நலம்.

எச்சரிக்கை: பின்னூட்டத்துல கடன் கேட்கறவங்களுக்கு ‘மொய்க்கு மொய்’ கமெண்ட், ஓட்டு கூடக் கிடைக்காது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

63 comments:

 1. இனி உங்க அறிவுரைப்படி நடக்கலாம் என்று இருக்கன் பாஸ்

  ReplyDelete
 2. பாஸ் இது,
  கடன் கொடுக்குறவங்களுக்கு பயன் உள்ள பதிவு..
  பட்
  கடன் வாங்குறவனுக்கு ???????
  மாட்டிவிட்டோம் இல்ல மாட்டிவிட்டோம் இல்ல

  ReplyDelete
 3. ///அது எப்படி பணம் கேட்கும்போது இருக்கின்ற குணம், வாங்கிய பிறகு தலைகீழாக மாறுகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது./// இது பலஇடங்களில் நடப்பது தான் பாஸ். வாங்கும் மட்டும் வீடு தேடி வருவார்கள் பின் திருப்பி வாங்குவதற்கு நாம் அவர்கள் வீடு தேடி அலையவேண்டும்... எனக்கும் சிறிது அனுபவம் உண்டு

  ReplyDelete
 4. @"கற்றது தமிழ்" துஷ்யந்தன் //நான்தான் முதல் ஆளா ??// ஆமாம்..வடை நல்லா இருக்கா?

  ReplyDelete
 5. //"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said... [Reply]
  இனி உங்க அறிவுரைப்படி நடக்கலாம் என்று இருக்கன் பாஸ் //இந்தப் பதிவுல சொன்னதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க துஷ்யந்தன்.

  //கடன் கொடுக்குறவங்களுக்கு பயன் உள்ள பதிவு..
  பட்
  கடன் வாங்குறவனுக்கு ???????
  மாட்டிவிட்டோம் இல்ல மாட்டிவிட்டோம் இல்ல // என்ன ஒரு சந்தோசம்..நான் பெண்ணியவாதிகளைத் தவிர யாருக்கும் பயப்பட மாட்டேன்..ஹி..ஹி.

  ReplyDelete
 6. @கந்தசாமி. //எனக்கும் சிறிது அனுபவம் உண்டு// ’லைட்டா’ன்னு சொல்றீங்களா...கந்தும் நொந்திருப்பாரு போலிருக்கே.

  ReplyDelete
 7. thala,

  without any still, don't write any serious matterrr....

  ReplyDelete
 8. அனுபங்கள் தரும் பாடம், ஆயுளுக்கும் மறக்காது.

  ReplyDelete
 9. எச்சரிக்கை யாருக்கு? சி ன்ன
  பி ள்ளைக்காக ஒரு எச்சரிக்கை போல இருக்கே!

  ReplyDelete
 10. சூப்பர் பாஸ்!!
  அப்புறமா நம்ம வலை பதிவு நண்பர்களுக்காக ஒரு நியூஸ்
  Flash Game Developers அதுவும் சின்ன சின்ன games பண்றவங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு, நீங்க bug இல்லாம game செய்வீங்களா? உங்களுக்கு நிரந்தர வருமானம் வேணுமா? நீங்க உங்க game-ஐ விற்க கூட வேண்டாம். இன்னும் விவரமா தெரிஞ்சுக்க இதை Dollygals Developers கிளிக் பண்ணுங்க.

  ReplyDelete
 11. http://dollygals.com/developers

  ReplyDelete
 12. நல்ல பதிவு..

  ReplyDelete
 13. மாப்ள கடன் மட்டுமே உறவை தொடர உறுதுணையா இருக்கும்...அதாவது ரத்த உறவு!...எனக்கு நெறைய அனுபவம் உண்டு ஹிஹி!....
  நீங்களாவது திரும்ப வாங்கிட்டீங்க....சொந்தக்காரங்க கிட்ட என்னதான் பஞ்சாயத்து பண்ணாலும் துட்டு சீக்கிரத்துல திரும்பாது அதுக்கு ஒரு அருவா எப்பவுமே ரெடியா இருக்கோணும் ஹிஹி!

  ReplyDelete
 14. கடன் வேண்டாம் செங்கோவி...தானமா ஏதாவது தள்ளுங்க...

  ReplyDelete
 15. பின்னூட்டத்துல கடன் கேட்கறவங்களுக்கு ‘மொய்க்கு மொய்’ கமெண்ட், ஓட்டு கூடக் கிடைக்காது.///

  அப்போ எனக்கு இனாமா கொஞ்சம் காசு கொடுங்க.

  ReplyDelete
 16. பொய்யாக இருந்தாலும் மழுப்பலாக சொல்லிவிடலாம். இல்லாவிட்டால் கடன் கேட்டு வருபவரிடம் நாம் கஷ்டங்களை பற்றி புலம்ப ஆரம்பித்து விட்டால் பின் நம்ம பக்கம் தலைவைத்தே படுக்க மாட்டார்கள்.

  ReplyDelete
 17. எனக்கும் இது போல அனுபவம் உண்டு. இதற்கு ஓர் தனி ப்ளாக் ஆரம்பிக்கலாம்
  இரா செல்லையா

  ReplyDelete
 18. நல்ல பதிவு அது ஏன்னு தெரியல எல்லாரும் இப்படி காசு வாங்கிய பின் நாகரிகம் இல்லாமல் நடந்து கொண்டு நம்மை எரிச்சல் படுத்துகினம்.

  ReplyDelete
 19. பாத்திரம் அறிந்து பிச்சை போடும் அனுபவம் இன்னும் வரவில்லை.

  ReplyDelete
 20. ’இப்போ முடிவா என்ன தான் சொல்ல வர்றேன்’னு கேட்கின்றீர்களா?

  பாத்திரம் அறிந்து கடன் கொடுங்கள். அதாவது (கதா)பாத்திரம் அறிந்து கடன் கொடுங்கள். தேர்ந்தெடுத்த நண்பர்களுடன்/சொந்தங்களுடன் மட்டும் கொடுக்கல்-வாங்கல் வைத்துக் கொள்வது நலம்.//

  எனக்கும், பதிவைப் படிக்க எழுந்த கேள்வி இதுதான்.. அதற்கான பதிலும் இறுதியில் வழங்கிவிட்டீர்கள்..

  முற்றிலும் அனுபவம் வாய்ந்தவர் என்பதில் பதிவில் வெளிப்படுகிறது.

  பகிர்வுக்கு மிக்க நன்றி..!

  ReplyDelete
 21. இந்தப் பதிவையும் படித்து தங்களின் கருத்து மற்றும் ஓட்டுக்களைப் பதிவு செய்யுங்கள்..!

  இணைப்பு:

  http://thangampalani.blogspot.com/2011/07/life-style-articlestory-of-peng-shuilin.html

  ReplyDelete
 22. அனுபங்கள் தரும் பாடம்...

  ReplyDelete
 23. நான் கூட ஒரு புத்திசாலிக்கு ஒரு மாதத்தில் திரும்ப கொடுப்பேன் என்று சொன்னதை நம்பி பணமாய் எண்ணி கொடுத்தேன்.இப்ப மாதங்களை விரல் விட்டு எண்ணி எண்ணி என் விரலே தேஞ்சு போச்சு...என்ன செய்றதுன்னு தெரியாமல் முழித்து கொண்டு இருக்கிறேன்.நம்மை போல சிலரும் இருக்கிறார்கள் என்ற திருப்தி இதை படித்தவுடன்!!!

  ReplyDelete
 24. வணக்கம் கூட்டாளி, வணக்கம் சகோ, வணக்கம் பாஸ்,
  தமிழக உறவே, தமிழின் தலையே!
  அறிவின் வேந்தே!
  லீலைகளின் மன்மதனே!
  -

  -
  -
  0

  0
  -
  -
  -
  -
  -
  இப்படியெல்லாம் புகழும் போது தெரிய வேண்ணாம்?

  கைம் மாறா ஒரு 250 குவைத் தினார் இருந்தா அனுப்பி விடுங்க.

  அப்புறமா தாரேன்,

  ReplyDelete
 25. கடன் கொடுக்கிறவன்லாம் இளிச்சவாயன்களா?//

  ஆஹா...கோபத்தின் உச்சத்தில் ஒரு தலைப்பு வைச்சிருக்காரே நம்ம கூட்டாளி,
  இருங்க உள்ளே வந்து பார்க்கிறேன்.

  ReplyDelete
 26. “அண்ணே, அப்புறம் கல்யாணச் செலவுக்குக் காசு கொஞ்சம் தேவைப்படுதுண்ணே. அப்பா என்னடான்னா இத்தனை வருசம் வேலை பார்த்து என்னத்தைக் கிழிச்சேன்னு கேவலமாக் கேட்காரு.”//

  இது கடன் கேட்கிறவங்க போடுற செண்டு மெண்டல் சீன்..

  இதைக் கூடப் புரியா விட்டால், உண்மையிலே நீங்க பச்சைப் புள்ள தான் பாஸ்.

  ReplyDelete
 27. அப்புறம் தம்பி புது மாப்பிள்ளை ஆகி, மூன்று மாதத்தில் பழைய மாப்பிள்ளையாகவும் ஆகி விட்டான். எங்கே பார்த்தாலும் நல்லாப் பேசுவான். கொடுத்த காசைப்பற்றி மட்டும் பேச்சில்லை.//

  ஒரு வேளை, கல்யாணத்திற்கு மொய்யாக நம்ம செங்கோவி அண்ணன் தந்திருப்பார் என்று நினைச்சிருப்பானோ.

  ஹி....ஹி...

  நல்லாப் பிழைக்கத் தெரிந்த ஆளா இருக்கானே. அவனை முதல்லை நான் தேடிக் கண்டு பிடிக்கனும்.

  ReplyDelete
 28. “சரிப்பா”ன்னு சொல்லிவிட்டு சந்தோசமா ஃபோனை வைச்சேன். அடுத்த ஒன்னாம் தேதியும் வந்தது, பத்தாம் தேதியும் வந்தது. கொடுத்த பணம் தான் வரலை. திடும்ப ஃபோன்.//

  ஹா....ஹா...இது தான் பாஸ், டேற் கொடுத்து ஏமாத்துற விளையாட்டு.

  ReplyDelete
 29. “என்னப்பா?”ன்னு கேட்டா “குடுப்போம்ணே..குடுக்காம ஓடியா போயிரப் போறேன். அடிக்கடி ஃபோன் பண்ணிக் காசு கேட்காதீங்க. எம்பொண்டாட்டி ஒரு மாதிரியாப் பாக்கா.” என்றான்.//

  ஆகா...பிழைக்கத் தெரிந்த மனுசன் அவன். கண்டிப்பா இந்த மாதிரி ஒராளை நாம தேடிப் பிடித்துப் பாராட்டியே ஆகனும்.

  காரணம், நம்ம செங்கோவியோடை வயிற்றில் புளியைக் கரைத்தெல்லே ஆட்டையைப் போட்டுட்டான் ஆளு.

  ReplyDelete
 30. நான் நினைச்சா காசே வாங்கலைன்னு சொல்ல முடியாதா? நீங்க காசு குடுத்ததுக்கு என்ன ஆதாரம் இருக்கு?” என்று குரலை உயர்த்தினான்//

  இதான் பாஸ்...இவங்களை நம்பி காசு கொடுக்கவே கூடாது, பாங்க் செக் ஆக கொடுத்தால் தான் ஓரளவிற்கு மீளப் பெற முடியும். இல்லேன்னா பணங்க் கொடுத்தால் திருப்பியே தராங்க ஒரு சிலர்.

  ReplyDelete
 31. கடன் கொடுக்கும் போது, எப்பேர்பட்ட நபருக்கு நாம் பணங் கொடுக்க வேண்டும் என்பதை அனுப விளக்கத்தினூடாக விழிப்புணர்வுப் பதிவாகத் தந்திருக்கிறீங்க.

  உங்களுக்கு நல்ல மனசு பாஸ்!

  ReplyDelete
 32. எச்சரிக்கை: பின்னூட்டத்துல கடன் கேட்கறவங்களுக்கு ‘மொய்க்கு மொய்’ கமெண்ட், ஓட்டு கூடக் கிடைக்காது.//

  அவ்...அவ்...அவ்...அவ்....

  பாஸ், ஓசியில் ஒரு 250 தினார் டெப்போசிட் பண்ணி விடுங்க;-)))

  ReplyDelete
 33. \\நம்மை மாதிரியே என் நண்பர்களும் ‘கடன் கொடுப்பதில்லை’ என்ற முடிவுக்கு வந்திருந்தால், என் நிலைமை என்ன ஆகியிருக்கும்?\\ ஏன் நிலையம் இதேதான். என்னிடம் பணம் வாங்கியவர்களிடமிருந்து திரும்பப் பெறுவதற்கும் போதும் போதும் என்றாகிவிடுகிறது. சில சமயம் அவர்கள் போண்டி ஆகி விட்டார்கள். எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. நாம் கஷ்டப் படும் போது யாருடைய உதவியையாவது நாட வேண்டியிருக்கிறது, அந்தச் சமயத்தில் உங்களைப் போலவே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், ஒன்று நான் யாரிடமாவது பணம் வாங்கிவிட்டால், "கடன் பட்டார் நெஞ்சம் போல" என்று இரவு பகலாக எந்நேரமும் அது உறுத்திக் கொண்டே இருக்கிறது, பணம் கொடுத்தவர்கள் கேள்விகளைப் பார்த்தால் நாக்கைப் பிடிங்கிக் கொள்ளலாமோ என்று தோன்றும், உடனே பணத்தை எப்பாடு பட்டாவது அவர்கள் முகத்தில் வீசிஎரிந்துவிடுவதுண்டு. ஆனால், நம்மிடம் பணம் வாங்குபவர்கள் உங்கள் நண்பரைப் போல அஞ்சா நெஞ்சங்களாகவும், கல்லூளிமங்கன்ளாகவும் அல்லவா இருக்கிறார்கள்!! எந்தக் கவலையும் படுவதில்லை, பணத்தைக் கேட்டால் போய்யா பாத்துக்கலாம், வேறு வேலை இல்லாம வந்திட்டான் என்று எகத்தாளம் அல்லவா பேசுகிறார்கள், பதிலுக்கு அவர்களைக் கேள்வி கேட்டு மனசைக் கஷ்டப் படுத்த முடியவில்லையே! யாருக்கு கடன் கொடுக்கலாம் என்று பாத்திரம் அறிவதுதான் மிகவும் கஷ்டம்.

  ReplyDelete
 34. பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்று சொல்வார்கள்!நீங்கள் பாத்திரம் அறிந்து கடன்கொடு என்று சொல்கிறீர்கள். இதுவும் சரிதான்!

  ReplyDelete
 35. @Vadivelan //thala,

  without any still, don't write any serious matterrr....// என்னய்யா இது..படம் போட்டாலும் பிரச்சினை...போடாட்டியும் பிரச்சினை..ஒரு மனுசன் என்ன தான் செய்ய?

  ReplyDelete
 36. // FOOD said...
  எச்சரிக்கை யாருக்கு? சி ன்ன
  பி ள்ளைக்காக ஒரு எச்சரிக்கை போல இருக்கே! //ஹா..ஹா..அவரு பாவம் சார்..விட்டிடுங்க.

  ReplyDelete
 37. // FOOD said...
  எச்சரிக்கை யாருக்கு? சி ன்ன
  பி ள்ளைக்காக ஒரு எச்சரிக்கை போல இருக்கே! //ஹா..ஹா..அவரு பாவம் சார்..விட்டிடுங்க.

  ReplyDelete
 38. // kugan said...
  சூப்பர் பாஸ்!!
  அப்புறமா நம்ம வலை பதிவு நண்பர்களுக்காக ஒரு நியூஸ்
  Flash Game Developers அதுவும் சின்ன சின்ன games பண்றவங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு, நீங்க bug இல்லாம game செய்வீங்களா? உங்களுக்கு நிரந்தர வருமானம் வேணுமா? நீங்க உங்க game-ஐ விற்க கூட வேண்டாம். இன்னும் விவரமா தெரிஞ்சுக்க இதை Dollygals Developers கிளிக் பண்ணுங்க. //

  என்னமோ சொல்றீங்க..மத்தவங்களுக்காவது புரிஞ்சாச் சரி.

  ReplyDelete
 39. // Rathnavel said...
  நல்ல பதிவு.. // நன்றி சார்.

  ReplyDelete
 40. // கவி அழகன் said...
  நாசமா போக சகோ // நான் ஏன்யா நாசமாப் போகணும்?..கமா ஏதாவது போடுங்கய்யா.

  ReplyDelete
 41. // விக்கியுலகம் said...
  மாப்ள கடன் மட்டுமே உறவை தொடர உறுதுணையா இருக்கும்...அதாவது ரத்த உறவு!...எனக்கு நெறைய அனுபவம் உண்டு..// ஒய் ப்ளட்..சேம் ப்ளட்!

  ReplyDelete
 42. // Reverie said...
  கடன் வேண்டாம் செங்கோவி...தானமா ஏதாவது தள்ளுங்க...// இதுக்கும் ஒரு டிஸ்கி போடணும் போலிருக்கே.

  ReplyDelete
 43. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  அப்போ எனக்கு இனாமா கொஞ்சம் காசு கொடுங்க. // போலீஸ்கார், நீங்க மாமூலே கேட்கலாம்.

  ReplyDelete
 44. // பாலா said...
  பொய்யாக இருந்தாலும் மழுப்பலாக சொல்லிவிடலாம். இல்லாவிட்டால் கடன் கேட்டு வருபவரிடம் நாம் கஷ்டங்களை பற்றி புலம்ப ஆரம்பித்து விட்டால் பின் நம்ம பக்கம் தலைவைத்தே படுக்க மாட்டார்கள்.//

  பாஸ், உங்ககிட்ட நிறையக் கத்துக்கலாம் போலிருக்கே.

  ReplyDelete
 45. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  அனுபங்கள் தரும் பாடம்... // யோவ், கமெண்ட்டையுமா காப்பி பேஸ்ட்? அதுவும் தப்புத்தப்பா?

  ReplyDelete
 46. // CHELLIAH said...
  எனக்கும் இது போல அனுபவம் உண்டு. இதற்கு ஓர் தனி ப்ளாக் ஆரம்பிக்கலாம் // சங்கத்தை ஆரம்பிக்கலாம் போலிருக்கே.

  ReplyDelete
 47. // Nesan said...
  எல்லாரும் இப்படி காசு வாங்கிய பின் நாகரிகம் இல்லாமல் நடந்து கொண்டு நம்மை எரிச்சல் படுத்துகினம்.//

  கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் கலங்கினான்னு சொல்ல வேண்டியது தான்.

  ReplyDelete
 48. // MANO நாஞ்சில் மனோ said...
  நல்ல அனுபவம்.....// மும்பைல இருந்தா இப்படித்தான் கமெண்ட் போடுவாங்களோ?

  ReplyDelete
 49. // தங்கம்பழனி said...
  முற்றிலும் அனுபவம் வாய்ந்தவர் என்பதில் பதிவில் வெளிப்படுகிறது.// முத்துன ஆளுன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா?

  ReplyDelete
 50. // அமுதா கிருஷ்ணா said...
  நான் கூட ஒரு புத்திசாலிக்கு ஒரு மாதத்தில் திரும்ப கொடுப்பேன் என்று சொன்னதை நம்பி பணமாய் எண்ணி கொடுத்தேன்.இப்ப மாதங்களை விரல் விட்டு எண்ணி எண்ணி என் விரலே தேஞ்சு போச்சு...என்ன செய்றதுன்னு தெரியாமல் முழித்து கொண்டு இருக்கிறேன்.நம்மை போல சிலரும் இருக்கிறார்கள் என்ற திருப்தி இதை படித்தவுடன்!!!// என்னே ஒரு திருப்தி..நம்ம வீட்ல கரண்ட் போனா அடுத்த வீட்டை எட்டிப்பார்ப்பமே...அது மாதிரியாக்கா?

  ReplyDelete
 51. // நிரூபன் said...
  இப்படியெல்லாம் புகழும் போது தெரிய வேண்ணாம்?

  கைம் மாறா ஒரு 250 குவைத் தினார் இருந்தா அனுப்பி விடுங்க.// யாருங்க நீங்க? முன்னப்பின்ன உங்களை எனக்குத் தெரியவே தெரியாதே..

  //இதைக் கூடப் புரியா விட்டால், உண்மையிலே நீங்க பச்சைப் புள்ள தான் பாஸ்.// அது இத்தனை நாளா உங்களுக்குத் தெரியாதா நிரூ?

  //ஆகா...பிழைக்கத் தெரிந்த மனுசன் அவன். கண்டிப்பா இந்த மாதிரி ஒராளை நாம தேடிப் பிடித்துப் பாராட்டியே ஆகனும்.// செய்ங்கய்யா..செய்ங்க.

  // பாங்க் செக் ஆக கொடுத்தால் தான் ஓரளவிற்கு மீளப் பெற முடியும்.// அவனுக்கெல்லாம் ஏதுய்யா பேங்க் அக்கவுண்ட்?

  ReplyDelete
 52. // Jayadev Das said...
  ஏன் நிலையம் இதேதான். என்னிடம் பணம் வாங்கியவர்களிடமிருந்து திரும்பப் பெறுவதற்கும் போதும் போதும் என்றாகிவிடுகிறது.// நீங்களே இப்படிச் சொன்னா, எங்க நிலைமை..

  ReplyDelete
 53. //சென்னை பித்தன் said...
  பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்று சொல்வார்கள்!நீங்கள் பாத்திரம் அறிந்து கடன்கொடு என்று சொல்கிறீர்கள். இதுவும் சரிதான்! // நன்றி ஐயா.

  ReplyDelete
 54. நானும் அனுபவப் பட்டிருக்கேன் நண்பரே .
  அதெல்லாம் மனதில் பட்ட காயங்களாய் மறந்துவிட்டேன் ,(கடன் குடுத்த காசையும் சேர்த்துதான் ). மறந்த நிகழ்ச்சியை நினைவு படுத்தி விட்டீர்களே நண்பரே .


  thulithuliyaai.blogspot.com

  ReplyDelete
 55. @M.R //மறந்த நிகழ்ச்சியை நினைவு படுத்தி விட்டீர்களே நண்பரே.// அடடா..சாரி பாஸ்..நீங்க ஏன் என்னோட அடுத்த பதிவைப் படிச்சு மனசைத் தேத்திக்கக்கூடாது.

  ReplyDelete
 56. நானும் இப்படித்தான் ஒருத்தன் கிட்டே மாட்டிகிட்டு இன்னும் முழிக்கிறேன்..கூட படிச்சவன் அப்படிங்கறதால கொடுத்தேன் .போன் பண்ணுவேன் .பயபுள்ள பொறுத்து பொறுத்து பார்த்தான்.அவன் செல் நம்பர மாத்திட்டான்..இப்போ அவன தேடிக்கிட்டு இருக்கேன்....

  ReplyDelete
 57. நானும் நெறைய பேருக்கு இந்த மாதிரி கடன் கொடுத்து ஏமாந்த அனுபவம் உண்டு, ஆனாலும் இன்னும் கடன் கொடுக்கிறேன் சொந்தங்களுக்கு மட்டும்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.