இரு பிரபல ஹீரோக்கள் இருந்தும், தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பளிகளுள் ஒருவராகக் கொண்டாடப் படும் 'பாலாவின் படம்' என்ற பெயரைத் தாங்கியே வெளிவந்துள்ள படம் அவன் இவன். அதனாலயே தியேட்டரில் நல்ல கூட்டம். எதிர்பார்ப்பை பாலா பூர்த்தி செய்தாரா?
படத்தின் கதை தான் என்ன?... 'பெண்சாயல் மற்றும் மாறுகண் பார்வை கொண்ட' விஷாலும் ஆர்யாவும் அண்ணன் தம்பிகள். திருடர்கள். ஆனாலும் ஒரே தந்தைக்கும் வெவ்வேறு தாய்க்கும் பிறந்த விளிம்பு நிலை மனிதர்கள். அதே ஊரில் வசிக்கும் வாழ்ந்து கெட்ட ஜமீன்தார் ஜி.எம்.குமார் இருவரையும் தன் சொந்தப் பிள்ளைகளாகவே நடத்துகிறார். ஆர்யாவுக்கும் கல்லூரிப் பெண் மது ஷாலினிக்கும் காதல். இன்னொரு பக்கம் விஷாலுக்கும் பெண் கான்ஸ்டபிள்(!) ஜனனி ஐயருக்கும் காதல்.
மாடுகளை அடிமாடுகளாக விற்கும் வில்லன் ஆர்.கேவை ஜமீந்தார் புளூ கிராஸ் + போலீஸில் காட்டிக் கொடுக்க, பதிலுக்கு ஆர்.கே ஜமீந்தாரை கொடூரமாக(பாலா படம்னு தெரியணும்ல!) கொல்கிறார். பதிலுக்கு விஷாலும் ஆர்யாவும் வில்லனைக் கொல்கிறார்கள். அப்புறம்...அப்புறம் என்னய்யா அப்புறம் கதை அவ்ளோதான்.
இது என்ன கதை என்று நாம் யோசிக்கும்போதே, வேந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தறிகெட்டுப் பாய்கிறது திரைக்கதை. படம் ஆரம்பித்த அரை மணி நேரத்திலேயே ஏறக்குறைய முக்கியப் பாத்திரங்கள் அனைவரின் கேரக்டரும் தெளிவாக நமக்கு விளங்கி விடுகிறது. ஆனாலும் தொடர்ந்து தண்ணியடிப்பது, காதல் செய்வது என்று திரும்பத் திரும்ப ஒரே மாதிரிக் காட்சிகள் எதற்கு என்று தான் புரியவில்லை. நாமும் பாலா படம், ஏதோவொரு காரணத்தோடு தான் இந்தக் காட்சி இருக்கும் என்று உன்னிப்பாகக் கவனிக்கிறோம், கவனிக்கிறோம், கவனித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.
ஒருகோடி ரூபாய் மதிப்புள்ள சந்தனக் கட்டைகளை விஷால் கடத்திவிட, கூடச் சென்ற ஆர்யாவும் ஓவராகப் பேசும் பையனும் மாட்டிக் கொண்டுவிட இண்டெர்வல் விடுகிறார்கள். நாமும் இது தான் கதையோ என்று நினைத்தால், அடுத்து வரும் காட்சியிலேயே ஆர்யா வெளியே வந்து விடுகிறார். ஒருகோடி ரூபாய் சந்தனக்கட்டை என்னாச்சு என்றே தெரியவில்லை.
படத்தின் முக்கியப் பாத்திரம் ஜமீந்தாராக வரும் ஜி.எம்.குமார். நல்ல நடிப்பு. ஆனால் அவரையும் காமெடி என்ற பெயரில் கோமாளியாகக் காட்டி விட்டு திடீரென படத்தை அந்தக் கேரக்டரின் தோளில் தாங்க வைக்கும்போது, மொத்தப் படமே விழுந்து விடுகிறது.
அதன்பிறகு அவர் நிர்வாணமாக(உண்மையிலேயே மக்கா!) ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டு சாகும்போது வலிந்து திணிக்கப்பட்ட வன்முறையாகவே படுகிறது. பாலாவின் படம் என்பதற்கு அத்தாட்சியாக அந்தக் காட்சி நிற்கிறது. ஆடுகளம் வாத்தியார் கேரக்டர் போல் தெளிவாக, பலமாக வரையறை செய்யப்பட்டிருக்க வேண்டிய கேரக்டரை காமெடிப் பீஸ் ஆக்கியது தான் இந்தப் படத்தின் ஆகப்பெரிய குறை.
விளிம்பு நிலை மனிதர்கள் என்பதால் பாலாவிற்கே உரிய எண்ணெய் தேய்க்கப்படாத தலைகள், பீடி, குடி போன்ற சகல அலங்காரங்களுடன் பாத்திரங்கள் உலவுகின்றன. ஆனால் இங்கு மேக்கப்பிலும் லோக்கல் டயலாக்கிலும்(உதாரணம் பீ..!) தெரிகின்ற யதார்த்தம், திரைக்கதையில் இல்லை.
லாஜிக் இல்லாத் திரைக்கதையில் காமெடி என்று எதையோ செய்கிறார்கள். வழக்கமாக விளிம்பிநிலை மனிதர்களின் வலியைச் சொல்லும் பாலா, இதில் அவர்களை வெறும் வேடிக்கைப் பொருளாகவே காட்டுகிறார். பெண் சாயல் கொண்ட ஆண்களின் பிரச்சினைகூட இங்கு அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.
படத்தில் பாராட்ட வேண்டிய விஷயம் விஷாலின் நடிப்பு. அவர் அரவாணி அல்ல. ஆனாலும் அதிக பெண் சாயல் கொண்டவர். படத்தில் அவர் காட்டும் நளினமும் ஆக்ரோசமும் அறிமுகக் காட்சியில் போடும் குத்தாட்டமும் சபாஷ்! மாறுகண் காதாபாத்திரத்தை கஷ்டப்பட்டுச் செய்திருக்கிறார். ஆனால் இந்தக் கதைக்கும் மாறுகண்ணிற்கும் என்ன சம்பந்தம் என்று தான் தெரியவில்லை.
ஆர்யா இதிலும் பெரிதாக நடிக்க வாய்ப்பின்றி காதல்+காமெடி போன்ற ஏதோவொன்றைச் செய்கிறார். சூர்யா கௌரவ வேடத்தில் ஒரு காட்சியில் தோன்றுகிறார். பிதாமகன் சிம்ரன் அளவிர்கு ஏதோ செய்யப்போகிறார் என்று பார்த்தால், விஷாலின் நடிப்பைப் பாராட்டுவதைத் தவிர வேறொன்றும் செய்ய வில்லை. அந்தக் காட்சிக்கு சூர்யா எதற்கு என்றும் புரியவில்லை.
யுவனின் முதல் குத்தும், ராசாத்தி பாடலும் அருமை. பிண்ணனி இசையும் ஆர்தர் வில்சனின் கேமிராவும் பாலாவுக்கு பக்க பலம் தான். ஆனாலும் ஓட்டையான திரக்கதையால் எதுவுமே மனதில் ஒட்ட மறுக்கிறது.
விளிம்பு நிலை மனிதர்களின் கதை என்றாலும், அவர்களது உணர்ச்சியை நமக்குள் ஏற்றி அவர்களோடு நம்மையும் மூன்று மணிநேரம் வாழ வைக்கும் வல்லமை படைத்த பாலா, இதில் சறுக்கி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
ஒருவேளை படத்தில் ஏதேனும் குறியீடுகள் ஒளிந்திருக்கிறதோ என்னவோ? நம்ம மரமண்டைக்குப் புரியவில்லை. அதை யாராவது குறியீடுகள் ஸ்பெஷலிஸ்ட்களோ அல்லது சுவாமி குறியானந்தாவோ தான் சொல்ல வேண்டும்.
அவன் இவன் - அவனும் இருக்கான், இவனும் இருக்கான். கதையை எங்கேய்யா?
வடை உன் மகனுக்கு தருகிறேன்
ReplyDeleteஇன்னொரு வடை எனக்கு மாப்ளே
ReplyDeleteபடத்தின் கதை தான் என்ன?..>>>>
ReplyDeleteசொன்னா தானே தெரியும்
///சூர்யா கௌரவ வேடத்தில் ஒரு காட்சியில் தோன்றுகிறார். //ஓ இடையில் சூர்யாவும் வந்தாரா...
ReplyDeleteநல்ல விமர்சனம் பாஸ் ...
ReplyDeletesame blood...
ReplyDeleteஎல்லாரும் சப்பை விமர்சனம் தானே போடுறாங்க...படம் அவ்வளவு சப்பையா பாஸ்??
ReplyDeleteஅப்போ படம் அவ்வளவுதானா?
ReplyDeleteபாக்கணும்னு யோசிச்சிருந்தேன்!
//அவன் இவன் - அவனும் இருக்கான், இவனும் இருக்கான். கதையை எங்கேய்யா?//
ReplyDeleteகலக்கல் அண்ணே! :-)
நல்ல விமர்சனம் நண்பரே..
ReplyDeleteபாலா சறுக்கிவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை ஆனால் பிற விமர்சனங்களும் இதையே சொல்கிறது.
பாலா சரக்கு தீர்ந்து போச்சா
ReplyDeleteஅப்ப இந்த படமும் ஊத்திக்கிச்சா? சரி விடுங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு திகார் ஜெயில் படமே ஓடட்டும்
ReplyDeleteஅருமையா சொல்லி இருக்க மாப்ள!
ReplyDeleteஅப்பா காசு மிச்சம் ... இனி படத்த பார்க்கத்தேவையில்லை ...
ReplyDelete\\விளிம்பு நிலை மனிதர்கள். \\இந்த வார்த்தையை யாரைய்யா கண்டு புடிச்சது? எல்லா பதிவர்களும் கண்ட மேனிக்கு பயன் படுத்துறீங்க? இதுக்ku அருத்தம் தான் என்னான்னு சொல்லுங்களேன்?
ReplyDelete>>
ReplyDeleteஒருவேளை படத்தில் ஏதேனும் குறியீடுகள் ஒளிந்திருக்கிறதோ என்னவோ? நம்ம மரமண்டைக்குப் புரியவில்லை. அதை யாராவது குறியீடுகள் ஸ்பெஷலிஸ்ட்களோ அல்லது சுவாமி குறியானந்தாவோ தான் சொல்ல வேண்டும்.
haa haa ஹா ஹா ரசித்தேன்
@Jayadev Das விளிம்பு நிலை பத்திச் சொன்னாலும் உங்களுக்குப் புரியாது சார்..ஏன் கஷ்டப்படுறீங்க..விட்ருங்க.
ReplyDeleteகருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி. தனித்தனியே பதில் சொல்ல இயலாமைக்கு சாரி!
ReplyDelete:))
ReplyDelete@சங்கர் நாராயண் @ Cable Sankar கேபிளாரின் வருகைக்கும் சிரிப்புக்கும் நன்றி.
ReplyDeleteயோ, யாரு அது மைனஸ் ஓட்டுப் போட்ட ஆளு?
ReplyDeleteமாப்ளே பட விமர்சனம் தானே எழுதியிருக்காரு,
இவன் பாவிப் பய,
ஏதும் ஏடாகூடாமா எழுதியிருப்பாரோ.
இரு மச்சி, படித்து விட்டு வருகிறேன்.
நகைச்சுவை கலந்து, சுவாரஸ்யம் கூட்டிப் படத்தினைப் பற்றிய அருமையான விமர்சனத்தைச் சுடச் சுடத் தந்திருக்கிறீங்க.
ReplyDeleteநன்றி மாப்ளே.
@நிரூபன் //யாரு அது மைனஸ் ஓட்டுப் போட்ட ஆளு?// மைனஸ் ஓட்டா...நானே இப்போ தான் பார்க்கிறேன்..நடக்கட்டும் நடக்கட்டும்...
ReplyDelete