பொதுவாக ஒரு படம் ரிலீஸாகி ஒரு வாரம் ஆகிவிட்டாலே, நான் விமர்சனம் எழுதுவதில்லை. ஆனாலும் இந்தப் படத்தைப் பார்த்தபின் இதை வரவேற்று எழுதுவது ஒரு சினிமா ரசிகனின் கடமை என்று தோன்றியதால்....
என்னென்னவோ பெயரில் சிறு பட்ஜெட் படங்கள் வ்ந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் பத்தோடு பதினொன்றாக வந்த ஆரண்ய காண்டத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நல்ல படம் தான் பார்ப்பேன் என அடம்பிடித்து அவன் இவன் பார்த்து நொந்தேன். சக பதிவர்களால் பாராட்டப்பட்ட படம் என்பதால் ஆரண்ய காண்டம் பார்ப்பது என்று முடிவு செய்து அசுவாரஸ்யமாய் உட்கார்ந்தால், முதல் காட்சியிலேயே இது சாதாரணப் படம் அல்ல என்று உணர்த்தி விடுகிறார்கள்.
ராமாயணத்தில் ஆட்சிப்பொறுப்பை பரதனிடம் விட்டு விட்டு, ராமன் வனவாசம் புகும்போது ஆரம்பிப்பது ஆரண்ய காண்டம், தமிழில் வன அத்தியாயம் எனச் சொல்லலாம். தொடர்ந்து சூர்ப்பனகையால் சீண்டப் படுவதும், ராம-லட்சுமணர்கள் சூர்ப்பனகையின் மூக்கு+மார்பை அறுத்து அவமானப்படுத்துவதும் நிகழ்வது ஆரண்ய காண்டத்தில் தான். அதுவரை சமூகநெறியைக் கட்டிக்காத்துச் செல்லும் கதை, ஆரண்ய காண்டத்தில் மேற்சொன்ன அதிரடி நிகழ்வுகளுடன் சீதை கடத்தப்படுவதில் முடிகிறது.
எல்லா தர்ம நெறிகளும் தூக்கி எறியப்பட்ட தாதாக் கோஷ்டிகளின் காட்டுத்தனமான வாழ்வை, உலகத் தரத்தில் சொல்கிறது இந்த ஆரண்ய காண்டம், திரைப்படம்.
வயதானதால் தொழிலில் பலவீனமான சிங்கப்பெருமாள்(ஜாக்கி செராப்) கோஷ்டியில் பசுபதியும்(சம்பத்) ஒரு அடியாள். வலுவான எதிர்க்கோஷ்டியான கஜேந்திரன்(ராம்போ ராஜ்குமார்) குரூப்பிற்கு போதை மருந்து கடத்தி வரும் ஆள், தானே அதை விற்று செட்டில் ஆக முயற்சிக்கிறான். ஜாக்கியை மீறி சம்பத் அதை வாங்க முற்பட, இரு கோஷ்டிகளின் கோபத்திற்கு ஆளாகின்றான். தொடர்ந்து சம்பத்தின் மனைவியும் ஜாக்கி கோஷ்டியால் கடத்தப்படுகிறார். சம்பத் இரு கோஷ்டிகளிடம் இருந்து தப்பித்தாரா, போதை மருந்து என்ன ஆனது, மனைவியை மீட்டாரா என்பதை விறுவிறுப்பாகச் சொல்லி இருக்கிறார்கள்.
படத்தின் ஸ்பெஷலே, ஒரு காட்சிகூட நாம் ஏற்கனவே எந்த்வொரு தமிழ்படத்திலும் பார்க்காதவை. கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அந்தப் பாத்திரத்திற்கென பிறந்தவர்கள் போன்ற தேர்வு, மிக இயல்பான வசனங்கள் என இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கலக்கி எடுத்துள்ளார்.
தான் சேர்த்து வைத்த பெண்ணிடம் முடியாத, வெளியில் தாதாவாகத் திரியும் பெரியவர் பாத்திரத்தில் ஜாக்கி செராப். மனிதர் கலக்கி இருக்கிறார். கடைசியாக அவரை ரங்கீலாவில் பார்த்தது.(அவரை எங்கே பார்த்தோம்..) ஈ என இளிப்பதும், ஒவ்வொரு மூடுக்கும் ஏற்ற மாதிரி நடையை மாற்றுவதும் பாடி லாங்வேஜும் அட்டகாசம். இந்தியில்கூட இவருக்கு இப்படி ஒரு நல்ல பாத்திரம் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை.
அடுத்து சப்பையாக வரும் ரவிகிருஷ்ணாவும் படத்தின் ஹீரோவாகவே வரும் சம்பத்தும் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தி உள்ளனர். சுப்புவாக நடித்திருக்கும் யாஷ்மின், பல அதிரடிகளை அரங்கேற்றிக் கலக்குகிறார்.
படத்தின் முக்கியமான பாத்திரம் வழ்ந்து கெட்ட ஜமீனாக வரும் சோமசுந்தரம். ஒரு கிராமத்து அப்பாவிக் கதாபாத்திரத்தை கண்முன் நிறுத்துகிறார். நகரத்து தாதாக்கள் எல்லாம் ஒருவித இறுக்கத்திலேயே வலம்வருவதும், அவர் எளிமையான அப்பாவியாக வருவதும் நம் மனதைத் தொடுகிறது. ‘நீயும் அப்படிச் சொல்லாதய்யா’ என மகனிடம் சொல்லும்போது கலங்க வைக்கிறார். ஹூம், அவன் இவனிலும் ஒரு ஜமீன் கேரக்டரைப் பார்த்தோமே என்று நொந்து கொண்டேன்.
படத்திற்கு மிகப்பெரிய பலம் யுவன் சங்கர் ராஜாவின் இசையும், வினோத்தின் ஒளிப்பதிவும் பி.எல்.ஸ்ரீகாந்தின் எடிட்டிங்கும். படம் நெடுக புன்னகைக்க வைக்கும் வசனங்கள், பல நேரங்களில் ப்ளாக் ஹ்யூமர். ‘உனக்கு உன் அப்பாவை ரொம்பப் பிடிக்குமா’ என்ற கேள்விக்கு ஜமீனின் மகன் ;இல்லே, ஆனா அவர் என் அப்பா’ என்பது நல்ல உதாரணம்.
வறுமையும் வாழ்க்கைச்சூழலும் துரத்தும்போது, சிறுவயதிலேயே தர்மநெறிகள் முடிக்குச் சமானமாக தூக்கி எறியப்படும் யதார்த்ததை அந்தச் சிறுவன்(மாஸ்டர் வசந்த்) கேரக்டரில் அற்புதமாகக் காட்டியுள்ளார்கள்.
கெட்ட வார்த்தைகள் படத்தில் சில இருந்தாலும், முகம் சுளிக்க வைக்கவில்லை, ஏனென்றால் அவை தவிர்க்க முடியாத யதார்த்தமாகவும், வலிந்து திணிக்கப்படாததாக இருப்பதால் தான்.
நல்ல தரமான உலகப் படங்களைப் பார்க்கும் சினிமா ஆர்வலர்களுக்கு, நம் ஊரிலேயே உலகத் தரத்தில் ஒரு படம் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கும். இந்த அற்புதமான படத்தைக் கொடுத்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும், தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுக்கும் ஒரு ராயல் சல்யூட்.
தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக நிற்கும் இந்த ஆரண்ய காண்டம்!
ஹே....ஹே... வடை
ReplyDeleteஏம்பா இவ்வளவு லேட்டா பதிவு போடறியே... படத்துல அம்புட்டு இன்வால்வ் ஆகிட்டிங்களா
ReplyDeleteபொதுவாக ஒரு படம் ரிலீஸாகி ஒரு வாரம் ஆகிவிட்டாலே, நான் விமர்சனம் எழுதுவதில்லை.>>>>
ReplyDeleteஅண்ணன் தனக்குன்னு ஒரு கொள்கை வச்சிருக்காராம். இன்னைக்கு மீறிட்டாராம்... என்னாம்மா ரீல் விடுறாரு
@தமிழ்வாசி - Prakash அடப்பாவி மனுசா..எப்பத் தான்யா தூக்குவீங்க?
ReplyDelete//படத்துல அம்புட்டு இன்வால்வ் ஆகிட்டிங்களா// நிஜம்தான் பிரகாஷ்..படத்தோட மேக்கிங் என்னை ரொம்ப இம்ப்ரெஷ் பண்ணிடுச்சு.
ReplyDeleteஎல்லா தர்ம நெறிகளும் தூக்கி எறியப்பட்ட தாதாக் கோஷ்டிகளின் காட்டுத்தனமான வாழ்வை, உலகத் தரத்தில் சொல்கிறது இந்த ஆரண்ய காண்டம், திரைப்படம்.>>>>>
ReplyDeleteதல, சொல்றத சொல்லிருச்சு. படம் பாக்கிறது நம்ம இஷ்டம்
கெட்ட வார்த்தைகள் படத்தில் சில இருந்தாலும், முகம் சுளிக்க வைக்கவில்லை, >>>>
ReplyDeleteஉமக்கு எப்படியா சுளிக்கும்? லீலைகளின் மன்னனாயிற்றே நீ...
நல்ல தரமான உலகப் படங்களைப் பார்க்கும் சினிமா ஆர்வலர்களுக்கு, நம் ஊரிலேயே உலகத் தரத்தில் ஒரு படம் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கும்.>>>>
ReplyDeleteம்ஹும்.... நீரு பார்த்தது வெளிநாட்டில் அல்லவா?
உண்மையிலேயே நல்ல படம்.. இதை ஓடவைக்க வில்லை என்றால் பஞ்ச் டயலாக் பேசி கொள்ளும் படங்கள்தான் நமக்கு இனி!
ReplyDelete@தமிழ்வாசி - Prakash //உமக்கு எப்படியா சுளிக்கும்? லீலைகளின் மன்னனாயிற்றே நீ...// யோவ், நான் யோக்கியன்யா..அவன் இவன் பார்த்தப்போ சுளிச்சோம்ல.
ReplyDelete@bandhu //இதை ஓடவைக்க வில்லை என்றால் பஞ்ச் டயலாக் பேசி கொள்ளும் படங்கள்தான் நமக்கு இனி!// பந்து, சரியான பஞ்ச் !
ReplyDelete@தமிழ்வாசி - Prakash //ம்ஹும்.... நீரு பார்த்தது வெளிநாட்டில் அல்லவா?// அண்ணே, உங்களுக்கு உடம்பெல்லாம் மூளை போல..அடடா, இத்தனை நாளா அதைக் கொழுப்புன்னுல்ல நினைச்சுட்டேன்..!
ReplyDeleteகுவைத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகலையே எங்க பார்த்தீங்க
ReplyDelete@கமெண்ட் மட்டும் போடுறவன் குவைத்தில் தான்!
ReplyDeleteலேட்டான விமர்சனத்தினைத் தந்தாலும், உங்களின் வழமையான அசத்தல் பாணியில் விமர்சனத்தை தந்திருக்கிறீங்க.
ReplyDeleteநான் இன்னமும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை,
ஆனால் உங்களின் விமர்சனம் இப் படத்தினைப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆவலைக் கூட்டுகிறது.
என்ன பாஸ் இன்ட்லில தமிழ்மணத்தில ஒட்டு போட போனா ஈட்கனவே சேர்க்கப்பட்டுள்ளதாம்??அப்புறம் வந்து ட்ரை பண்ணி பார்க்கிறேன்
ReplyDeleteபடம் பார்த்துட்டோம் பதிவு எழுதாம விடக்கூடாதுன்னு எழுதிட்டிங்களா.........ஹிஹி
ReplyDeleteமாப்ள அந்த அளவுக்கு நல்லா இருக்காய்யா....!
ReplyDeleteஉம்மோட அலசலுடன் கூடிய விமர்சனம் super!
>>பொதுவாக ஒரு படம் ரிலீஸாகி ஒரு வாரம் ஆகிவிட்டாலே, நான் விமர்சனம் எழுதுவதில்லை
ReplyDeleteஆமா, அண்ணன் சுடச்சுட முத பந்தில உட்கார்பவர்
கலக்கல் அண்ணே! பதிர்களின் விமர்சனம் பார்த்து ரொம்ப ஆவலாயுள்ளேன்! அதிலும் உங்க விமர்சனத்துக்கு ஒரு ஸ்பெஷல் கவனம் இருக்கு இங்கே!
ReplyDeleteDVD க்கு வெய்டிங்! :-(
உண்மையிலேயே சமீபத்தில் வந்த படங்களில் பார்க்ககூடிய வகையில் இருந்த ஒரே படம், என்ன அதிக நாள் எங்கேயும் ஓடவில்லை, சீக்கிரமே தூக்கிவிட்டார்கள்
ReplyDeleteமூக்கு+மார்பை
ReplyDeleteலட்சுமணன் மார்பை அறுத்தாரா??? என்னங்க புதுக்கதையா இருக்கு??
நண்பரே குவைத்தில் எந்த திரையரங்கில் ஓடுகிறது என்று தகவல் கொடுத்தால் நானும் பார்ப்பேன்.
ReplyDelete@கமெண்ட் மட்டும் போடுறவன் ஐயா, படம் டிவிடி இப்போ தான் ரிலீஸ் ஆகியிருக்கு..அதுல தான் பார்த்தேன். நீங்களும் பாருங்க, நல்ல படம்.
ReplyDelete@நிரூபன் அசத்தல் படம் நிரூ.
ReplyDelete@FOODஐயா இப்போ தான் ஃப்ரீ ஆயிருக்காங்க போலிருக்கே.
ReplyDelete@மைந்தன் சிவா //என்ன பாஸ் இன்ட்லில தமிழ்மணத்தில ஒட்டு போட போனா ஈட்கனவே சேர்க்கப்பட்டுள்ளதாம்??// பரவாயில்லை சிவா..விடுங்க.
ReplyDelete@THOPPITHOPPI //படம் பார்த்துட்டோம் பதிவு எழுதாம விடக்கூடாதுன்னு எழுதிட்டிங்களா....// இல்லை தொப்பி..படம் பத்தி நல்ல டாக்..இங்க ரிலீஸ் ஆகலை..ஆனாலும் டிவிடிக்காக வெயிட் பண்ணிப் பார்த்தேன். அருமையா இருந்துச்சு..எவ்வளவோ குப்பைப் படங்களுக்கு விமர்சனம் எழுதுறோம்..இந்த நல்ல படத்தையும் நாலு பேருக்கு அறிமுகப்படுத்துவோம்னு தான் எழுதுனேன்..ஆண்மை தவறேல், எத்தனும் பார்த்தேன். எழுதலியே..உங்களுக்கு சினிமா பிடிக்காது. ஆனா இந்தப் படம் பிடிக்கும். ஹீரோயிசம் இல்லாம டூயட்/காதல் இல்லாம ஒரு படம்!
ReplyDelete@விக்கியுலகம் நன்றி விக்கி.
ReplyDelete@சி.பி.செந்தில்குமார் //ஆமா, அண்ணன் சுடச்சுட முத பந்தில உட்கார்பவர்// நீங்கள்லாம் நான் நினைக்கிறதை எழுதினப்புறம், திரும்ப நான் ஏன் எழுதணும்னு தான் எழுதறதில்லை.
ReplyDelete@ஜீ... //DVD க்கு வெய்டிங்! :-(// இந்நேரம் ரிலீஸ் ஆகியிருக்கும், இங்க வந்தாச்சு.
ReplyDelete@இரவு வானம் //என்ன அதிக நாள் எங்கேயும் ஓடவில்லை, சீக்கிரமே தூக்கிவிட்டார்கள்// உண்மையில் வருத்தமான விஷயம் தான்.
ReplyDelete@ஆதவா //லட்சுமணன் மார்பை அறுத்தாரா??? என்னங்க புதுக்கதையா இருக்கு??// கம்ப ராமாயணத்தில் அது கிடையாது நண்பரே..
ReplyDeleteநண்பரே இப்படத்தை பார்த்து வியந்து இன்றளவும் அதிலிருந்து வெளியே வரமுடியாமல் தவிக்கிறேன்.
ReplyDeleteஒரு பதிவும் எழுதியிருக்கிறேன்.
நண்பர்களுடன் மீண்டும் இப்படத்தை பார்க்க கோவையில் ஒரு ஸ்பெசல் ஷோ போட ஏற்பாடு செயது வருகிறேன்.
அதற்க்கு இயக்குனரும் வருவதாகச்சொல்லியிருக்கிறார்.
தியேட்டர் கமர்சியல் வியாபாரிகள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள்.
டிவிடி ஒரிஜினல் என்றால் எனக்கு ஒரு காப்பி அனுப்ப முடியுமா?
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.
@உலக சினிமா ரசிகன் //நண்பர்களுடன் மீண்டும் இப்படத்தை பார்க்க கோவையில் ஒரு ஸ்பெசல் ஷோ போட ஏற்பாடு செயது வருகிறேன்.
ReplyDeleteஅதற்க்கு இயக்குனரும் வருவதாகச்சொல்லியிருக்கிறார்.// உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள் நண்பரே..இந்த நல்ல படம் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதே நமது விருப்பம்.
//டிவிடி ஒரிஜினல் என்றால்//..செண்ட்ரல் வீடியோஸ் இங்க ரிலீஸ் பண்ணி இருக்காங்க..அவங்க தான் உரிமம் பெற்றவர்களான்னு தெரியலையே..நாடு விட்டு நாடு அனுப்பும்போது காப்பிரைட் முக்கியம் இல்லையா..மின்னஞ்சல் ஒன்னு எனக்கு அனுப்புங்களேன், தொடர்ந்து பேச.
gud review!!
ReplyDeletei dont know y nobody mentioning this os copied from famous mexican film 'trade'
@Senthil //this os copied from famous mexican film 'trade'// அது பற்றித் தெரியவில்லை நண்பரே..ஏதாவது லின்க் இருந்தால் கொடுங்களேன்.
ReplyDeleteகாட்சிகளை சொல்லிவிடாமல் கதையை சொன்னமைக்கு முதல் நன்றி. நிறையா விமர்சனங்களில் ரவிகிருஷ்ணா சப்பையா நடிச்சிருக்கார்னு போட்டிருந்தாங்க...நாங்கூட அவர் நல்லா நடிக்கல போலனு நெனைச்சேன்..அப்புறம் தான் புரியுது அவர் Character பேரு "சப்பை" யாமே....
ReplyDeleteதொடர்ந்து நிறைய சினிமா பகிர்தல்கள் எதிர்பார்க்கிறோம்!!!!!!!!!!!!!
//நல்ல படம் தான் பார்ப்பேன் என அடம்பிடித்து அவன் இவன் பார்த்து நொந்தேன். சக பதிவர்களால் பாராட்டப்பட்ட படம் என்பதால் ஆரண்ய காண்டம் பார்ப்பது என்று முடிவு செய்து அசுவாரஸ்யமாய் உட்கார்ந்தால், முதல் காட்சியிலேயே இது சாதாரணப் படம் அல்ல என்று உணர்த்தி விடுகிறார்கள்.//
ReplyDelete.............ditto..........
//வாழ்ந்து கெட்ட ஜமீனாக வரும் சோமசுந்தரம். //
இவருக்கு ஒரு தனி ‘சபாஷ்’.
@தருமி மூத்த பதிவரின் வருகைகும் கருத்துக்கும் நன்றி.
ReplyDelete