தற்போதைய கல்வி சீர்திருத்தத்தில் சமச்சீர் கல்வி அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு பிரச்சினை எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற சட்டம். மேற்பார்வைக்கு இது குழந்தைகளின் மேல் அக்கறை கொண்டு, அவர்களது கல்விச்சுமையைக் குறைக்க வந்த திட்டம் என்று தோன்றினாலும், உண்மையில் அவர்களுக்கு பெரும் கெடுதலையே இந்தச் சட்டம் செய்கிறது.
இந்தச் சட்டப்படி, ஒரு மாணவன் படித்தாலும் படிக்காவிட்டாலும் எட்டாம் வகுப்பு வரை ஃபெயில் ஆக்க முடியாது. படிப்பறிவு பெறாத பெற்றோர் விழிப்புணர்வு பெற்று ’நாங்க தான் படிக்கவில்லை. எங்கள் பிள்ளைகளாவது படிக்கட்டும்’ என்று பள்ளிக்கு அனுப்பும் காலம் இது. நானும் அப்படிப் படித்து வந்தவனே. இந்தச் சட்டத்தைப் பற்றி சிந்திக்கும்போது என் நினைவுக்கு வருவது இரு நபர்கள்..
முதலாவது என்னுடன் படித்த நண்பன் ராமன். அவனது அப்பாவும் அம்மாவும் படிக்காத கூலித் தொழிலாளிகள். ஐந்தாம் வகுப்பு வரை எங்கள் கிராம அரசுப் பள்ளியில் படித்த ராமன் ஆறாவது படிக்க டவுனில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்தாலும் தமிழ் ததிங்கிணத்தோம் தான். இங்கிலீஸ் சுத்தமாகத் தெரியாது. எனவே ஆறாம் வகுப்பில் ஃபெயில் ஆனான். அவன் அப்பாவும் ‘ஒழுங்கா படிக்கலேன்னா, சாந்துச்சட்டி தாம்லே’ என்று தெளிவாகச் சொல்லி விட்டார். அது அவனை மிகவும் யோசிக்க வைத்தது. சாந்துச்சட்டி என்பது கொத்து வேலைக்கு பயன்படுவது. எனவே ராமன் பயந்து போய் படிக்க ஆரம்பித்தான். இன்று அவன் ஒரு ஐ.டி.கம்பெனியில் வேலை செய்கிறான்.
அடுத்தவர் என் அண்ணி. என் அண்ணனின் மகன் எட்டாம் வகுப்பு தேர்ச்சிக் கார்டு தபாலில் வந்தது. அன்று நானும் இருந்தேன். பிரித்துப் பார்த்தால் மகன் ஃபெயில்! அண்ணியார் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். ”நீயாவது உங்கப்பா மாதிரி இல்லாம படிச்சு முன்னேறுவேன்னு பார்த்தா, இப்படி ஃபெயிலாகி நிக்குறியே..நம்ம தலையெழுத்தே அவ்வளவு தானா?” என்று அழுது தீர்த்தார். அது அவனைப் பாதித்தது. அதன் பிறகு அவன் ஒழுங்காகப் படிக்க ஆரம்பித்தான்..
முதல் தலைமுறை மாணவர்கள் நிலை இது தான். படிப்பு என்பது வேப்பங்காயை விடவும் கசப்பான விஷயம். பெரும்பாலான மாணவர்கள் படிப்பது ஆசிரியரின் கண்டிப்புக்குப் பயந்தும், ஃபெயிலாகி விடுவோம் என்ற அவமானத்திற்குப் பயந்தும் தான்.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஒரு மாணவனுக்கு ஆனா ஆவன்னா தெரியாவிட்டாலும், அவன் எட்டாம் வகுப்பு வரை வந்துவிட முடியும். அப்ப்டி வந்த ஒருவன், 14 வயதிற்குப் பின் திடீரென படித்தால் தான் பாஸ் என்றால் அவன் என்ன செய்வான்? டீன் ஏஜில் நுழைந்த பிறகா ஒருவன் படிப்பில் திடீர் அக்கறை கொள்வான்?
சம்பளம் வாங்கி வேலை செய்யும் ஒரு ஆசிரியரின் திறமை மதிப்பிடப் படுவது மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை வைத்துத் தான். எட்டாம் வகுப்பு வ்ரை ஆல் பாஸ் என்றால், அவர்கள் சரியாகத் தான் பாடம் நடத்துகிறார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? எப்படியும் ஆல் பாஸ் எனும்போது எதற்காக அவர்கள் அக்கறையோடு பாடம் நடத்த வேண்டும்? அப்படியென்றால் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பெறப்போகும் சம்பளம் வீண் தானா?
இந்தப் பதிவிற்காக இப்படி எல்லாம் சிந்தித்த வேளையில், ஒரு அரசுப்பள்ளியில் ஆசிரியராக வேலை செய்யும் என் சித்தப்பா ஒருவரைத் தொடர்பு கொண்டேன். மேலே உள்ள கேள்விகளைக் கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னது:”நீ கேக்குறது சரி தான்பா..பாடத்தை ஏண்டா கவனிக்கலேன்னே ’எப்படியும் பாஸ் தானே போடப்போறீங்க சார்..அப்புறம் ஏன் படி படின்னு இம்சை பண்றீங்க’ன்னு கேட்குறானுக. என்னை மாதிரி மனசாட்சிக்குப் பயந்தவங்க தான் சிலபஸ் முடிக்கிறோம்..மத்தவங்க ‘எப்படியும் இவனுக கவனிச்சுப் படிக்கப் போறதில்லை. அப்புறம் ஏன் தொண்டை வத்த நாம கத்தணும்’னு நினைக்கிறாங்க. கிராமத்து மாணவங்க வாழ்க்கையே வீணாப் போகுது”
தனியார் பள்ளிகளாவது 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் காட்ட, இந்தச் சட்டத்தை மதிக்காமல் ஆரம்பத்தில் இருந்தே கண்டிப்புடன் பாடம் நடத்தலாம். ஆனால் அரசுப்பள்ளிகளின் நிலை என்ன ஆகும்? ஒருவேளை இந்தச் சட்டமே ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளை அழிக்க, தனியார்+அரசால் செய்யப்பட்ட சூழ்ச்சியோ?
மாணவர்களின் புத்தகச் சுமையையும் பாடச்சுமையையும் குறைக்க முனையாத அரசு இதில் மட்டும் தீவிரம் காட்டுவது ஏன்? மாணவர்கள் படிக்காவிட்டாலும் பாஸ் என்பதை விட தேர்ச்சி மதிப்பெண்ணான 35ஐ 20-25ஆகக் குறைக்கலாமே?
அனைவரும் தேர்ச்சி என்பது அடி முட்டாள் தனம்! எழுத படிக்க தெரியாதவர்கள் நேராக ஒன்பதாம் கிளாஸ் வருவது தான் நடக்கும்!
ReplyDeletevanthaalum vanthinga mukkiyamaana vishayathai solliyirukkinga
ReplyDelete///சம்பளம் வாங்கி வேலை செய்யும் ஒரு ஆசிரியரின் திறமை மதிப்பிடப் படுவது மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை வைத்துத் தான். எட்டாம் வகுப்பு வ்ரை ஆல் பாஸ் என்றால், அவர்கள் சரியாகத் தான் பாடம் நடத்துகிறார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? எப்படியும் ஆல் பாஸ் எனும்போது எதற்காக அவர்கள் அக்கறையோடு பாடம் நடத்த வேண்டும்? அப்படியென்றால் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பெறப்போகும் சம்பளம் வீண் தானா? ///நியாயமான கேள்வி தான்...
ReplyDelete//முதல் தலைமுறை மாணவர்கள் நிலை இது தான். படிப்பு என்பது வேப்பங்காயை விடவும் கசப்பான விஷயம். பெரும்பாலான மாணவர்கள் படிப்பது ஆசிரியரின் கண்டிப்புக்குப் பயந்தும், ஃபெயிலாகி விடுவோம் என்ற அவமானத்திற்குப் பயந்தும் தான். //
ReplyDeleteபரவாலயே...
பாஸ் தமிழ்,மணம் எங்க??
ReplyDelete@bandhu//அனைவரும் தேர்ச்சி என்பது அடி முட்டாள் தனம்!// உண்மை தான் நண்பரே..நாம் ஏன் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தையே இது மாணவர்களுக்கு உண்டாக்குகிறது.
ReplyDelete@தமிழ்வாசி - Prakash//vanthaalum vanthinga mukkiyamaana vishayathai solliyirukkinga// நன்றி பிரகாஷ்.
ReplyDelete@கந்தசாமி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கந்தரே.
ReplyDelete@FOOD//அர்த்தமுள்ள கேள்விகள்.// பதிவர் சந்திப்புக்கான பிஸியிலும் படிக்கிறீங்களா..
ReplyDelete@மைந்தன் சிவா//பாஸ் தமிழ்,மணம் எங்க??//அதுக்கு மூடு இருந்தா வரும்..இல்லேன்னா விடுங்க பரவாயில்லை.
ReplyDeleteபாஸ்...
ReplyDeleteதமிழ் மணத்தை காணலையே.
எங்கே
அதனைத் தான் மேலே எல்லோரும் கேட்டிருக்காங்க. நானும் கேட்கிறேன்.
ஹி.ஹி..
உங்கள் வாழ்வில் சந்தித்த அனுபவக் கதையூடாக இன்றைய கல்வி மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை அலசியுள்ளீர்கள் சகோ.
ReplyDeleteஅருமையான பதிவு.
சும்மாவே அரசுபள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்த மாட்டாங்க, பசங்களை டீ காப்பி வாங்கிதரவங்களாத்தான் யூஸ் பண்ணிட்டு இருக்காங்க, இந்த லட்சணத்துல ஆல்பாஸ்ங்கறது அடிமுட்டாள்தனம்தான், இப்படி படிக்கற பசங்க எப்படி நாலு விசயத்தை கத்துக்க முடியும்?
ReplyDeleteஇன்றைய சூழலின் தேவையான வாதம்..
ReplyDelete//ஒருவேளை இந்தச் சட்டமே ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளை அழிக்க, தனியார்+அரசால் செய்யப்பட்ட சூழ்ச்சியோ? //
ReplyDeleteஇதற்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்?
நீங்க சொல்றது உண்மை தான் அண்ணா.....
ReplyDeleteஅரசு பள்ளிகள் ஏற்கனவே கேட்பாரற்று கிடக்கிறது.. இதுல 8th வரை ஆல் பாஸ் பண்ண யாருமே படிக்க மாட்டங்க.. ஆரம்ப கல்வியே அங்க அடிபட்டு போகுது அதுக்கு அப்புறம் அவன் என்ன படிக்க முடியும்???
//மாணவர்களின் புத்தகச் சுமையையும் பாடச்சுமையையும் குறைக்க முனையாத அரசு இதில் மட்டும் தீவிரம் காட்டுவது ஏன்? மாணவர்கள் படிக்காவிட்டாலும் பாஸ் என்பதை விட தேர்ச்சி மதிப்பெண்ணான 35ஐ 20-25ஆகக் குறைக்கலாமே?
ReplyDeleteஎல்லாம் அவங்க அவங்க வசதிக்காக செய்யுறது தான்,
எப்பிடியா?
எல்லோரையும் பாஸ் ஆக்குனா தான் படிக்க வர பசங்க எண்ணிக்கை ஜாஸ்தி ஆகும்,
அதாவது அஞ்சாங்கிளாஸ் பெயில் ஆயி படிப்ப நிப்பாட்டுன நிறைய பேரு இருக்காங்க, அவங்கள பூரா எட்டாங்க்ளாஸ் வரை படிக்க வைக்கலாம்ன்னு கவெர்மென்ட் நெனைக்குது.
எங்க நாட்டுல எல்லோரும் படிச்சவங்க அப்பிடின்னு சொல்ல வேண்டாமா?
இப்ப கூட பாஸ் மார்க்கை தான் குறைச்சு இருக்காங்க, பரீட்சை எழுதணும் ஆனா 0 வாங்குனா கூட பாஸ் எப்புடி??
@நிரூபன் //பாஸ்...
ReplyDeleteதமிழ் மணத்தை காணலையே.// இன்னைக்கு உங்க ப்ளாக்லயும் காணோமே..
@இரவு வானம் //சும்மாவே அரசுபள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்த மாட்டாங்க, பசங்களை டீ காப்பி வாங்கிதரவங்களாத்தான் யூஸ் பண்ணிட்டு இருக்காங்க, // அந்த மாதிரி ஆசிரியர்கள் பாடு கொண்டாட்டம் தான் இப்போது.
ReplyDelete@!* வேடந்தாங்கல் - கருன் *! //இன்றைய சூழலின் தேவையான வாதம்..// வாத்யாரே சொன்னா சரியாத்தான் இருக்கும்.
ReplyDelete@Carfire //ஆரம்ப கல்வியே அங்க அடிபட்டு போகுது அதுக்கு அப்புறம் அவன் என்ன படிக்க முடியும்?// கரெக்ட் ஃபயர்..13 வயசுக்குள்ள ஒருத்தன் எழுதப்படிக்கலேன்னா, அப்புறம் எப்படிப் படிப்பான்?
ReplyDelete@ஜ.ரா.ரமேஷ் பாபு//அதாவது அஞ்சாங்கிளாஸ் பெயில் ஆயி படிப்ப நிப்பாட்டுன நிறைய பேரு இருக்காங்க, அவங்கள பூரா எட்டாங்க்ளாஸ் வரை படிக்க வைக்கலாம்ன்னு கவெர்மென்ட் நெனைக்குது. // நல்ல எண்ணம் தான்..அதற்கு பாடச்சுமையைக் குறைப்பதும், தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைப்பதுமே போதுமானது..நீங்க சொன்ன மாதிரி ஜீரோவுக்கே பாஸ்னா எப்படி?
ReplyDeleteதேர்வு நடத்தும் முறைகளை மாற்றி அமைப்பது விட்டு விட்டு, தேர்வுகளையே ரத்து செய்திருப்பது பெரிய காமெடி.
ReplyDeleteமுதல் தலைமுறை மாணவர்கள் நிலை இது தான். படிப்பு என்பது வேப்பங்காயை விடவும் கசப்பான விஷய//
ReplyDeleteசென்ற தலைமுறை சூழ்நிலைகளை அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்..
nalla pathivu.........
ReplyDeletearumai.......
vaalththukkal....
namma pakkamum kaththirukku unkalukkaaka!!!
பதிவர்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் ஒரு விருந்து வைத்துள்ளேன் சென்று அனுபவியுங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்.........
ரைட்டு!
ReplyDeleteசமூக அக்கறையுடன் எழுதப்பட்ட பதிவு.உண்மையில் கிராமப்பள்ளிகளில்"இவனெல்லாம் படித்து என்ன செய்யப் போகிறான்?" என்ற எண்ணம் உள்ள ஆசிரியர்கள் அதிகம்.சாதி வேறு குறுக்கே நிற்கும். குடும்பத் தொழிலும் தெரியாமல்,படிப்பும் வராமல் பல பிள்ளைகளின் வாழ்க்கை பாழாகாகிறது.
ReplyDeleteஉள்ளுரில் இருக்கும் வாத்தியாரின் வீட்டுத் திண்ணயே பள்ளியாக இருந்தபோது கற்றதை விட, இப்போது டவுனில் இருந்து வரும் ஆசிரியைகளின் பள்ளிகளில்
பயிலும் மாணவர்கள் கற்பது மிகக் குறைவே!
ஏதாவது ஒருவகையில் தேர்வு இல்லாத கல்வி முறையால் பெரும் நட்டமே, கால விரயமே ஏற்படும்.
எல்லாமே நல்ல கருத்துக்கள்
ReplyDelete