”கான்ஸ்டிபேசன்..சொல்லு”
"கான்ஸ்டிஃபேசன்"
"அப்படி இல்லைப்பா.கொஞ்சம் ஸ்ட்ரெஸ் பண்ணு"
"கான்ஸ்டிஃபே..சார், வரமடேங்குது சார்.."
"கான்ஸ்டிபேசன்னாலே அப்படித்தான்..வராது..நல்லா ஸ்ட்ரெஸ் பண்ணாத் தான் வரும்..நல்லா..ம்..இப்போ சொல்லு"
"கான்ஸ்டிபேசன்"
”வெரி குட்!”
இன்று ஆஃபீஸ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் ஃபேன் என்று சொல்ல வந்தவர் ஸ்பேன் என்று சொல்லிவிட்டார். ஏதோ மிகக் கேவலமான ஒரு செயலைச் செய்துவிட்டது போல் அவர் கிண்டல் செய்யப்பட்டார். அவரைப் பார்க்கவே பரிதாபமாக ஆகிவிட்டது.
எனக்கு அது கடும் கோபத்தைக் கிளப்பியது. அவர்களில் பெரும்பாலோனோர் தமிழர்கள். “உங்களில் யாருக்கு ல,ழ,ள சரியாக உச்சரிக்கத் தெரியும்?”என்று கேட்டேன்.
எல்லோரும் அமைதியாக இருந்தனர். “அப்போ தாய்மொழியை சரியாக உச்சரிக்க யாருக்கும் தெரியவில்லை இல்லையா? அது பற்றிய வருத்தமோ அவமானமோ நமகு இல்லை. ஆனால் ஆங்கிலத்தில் ஒரு எழுத்தைத் தவறாகப் பேசிவிட்டலும் முட்டாள் ரேஞ்சிற்கு அவரை ட்ரீட் பண்றோம். ஏன் இப்படி? ஸ்ஃபேன் சொல்லும்போது வர்ற இளக்காரம் வாலைப்பலம்னு சொல்லும்போது ஏன் வரலை? தமிழைச் சரியாப்பேசுன்னு சொல்றதும் பேசுறதும் இண்டீஸண்ட்..இங்க்லீஸ் கரெக்டாப் பேசுடான்னு சொன்னா பெருமை, இல்லையா?’ன்னு கேட்டேன்.
ஒரே ஒரு நண்பர் மட்டும் ‘நீங்க சொல்றது சரிதான்..ஆனால் எல்லாருமே அப்படித் தானே?” என்றார்.
உண்மையில் அங்கு இருந்த யாருக்குமே நான் உட்பட, ழகர உச்சரிப்பு சரியாக வராது.பேசும் வேகத்தில் நாம் கவனிப்பதும் இல்லை.
”உண்மைதான், இங்கு தமிழைச் சரியாக உச்சரித்தல் பிரச்சினை அல்ல. அதைச் செய்யும்போது வராத அவமானம் அன்னிய மொழியைப் பேசும்போது வருவது ஏன்?” என்றேன்.
ஆங்கிலத்தை நாம் பேணிப் பாதுகாக்கும் அளவிற்கு ஆங்கிலேயர்களே செய்வதில்லை. அமெரிக்கர்களின் ஆங்கிலேயம் ஏறக்குறைய சென்னைத் தமிழுக்கு ஈடானது தான். ’எஃப் பாம்’ போடாமல் பேசவே மாட்டர்கள். வார்த்தையைக் கொத்துவதிலும் வல்லவர்கள். நான் அவர்களுடன் பேசும்போதெல்லாம் ஒரு அசமஞ்சம் ரேஞ்சுக்கு நம் ஆங்கிலம் தோன்றும். அந்த உரையாடல் இந்த மாதிரி இருக்கும்:
”ஐயா, தாங்கள் கொடுத்த வரைபடத்தை முடித்துவிட்டேன். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களா?”
”ஆத்தா..அந்தாண்ட குவாலிட்டி டிபார்ட்மெண்ட்க்காரன் குந்திக்கினு இருப்பான்..அவங்கைல சொல்லு..”
சிங்கப்பூர்க்காரர்கள் தனியாக ஒரு ஆங்கிலத்தை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். நான் பார்க்கவில்லை என்பதை ‘ஐ நோ சீ” என்பார்கள். அங்கு இருக்கும் நம் ஆட்கள் அவர்களைத் திருத்த முற்படுவது இல்லை. ஆனால் ஒரு எழுத்தை சக தமிழன் சரியாக உச்சரிக்காவிட்டால், கேலி..கிண்டல்.
நாம் இன்னும் ஆங்கிலேய அடிமை மனப்பான்மையில் இருந்து வெளிவரவில்லையோ என்று தான் தோன்றுகிறது.
மும்பைக்கு ரிக்ஷா ஓட்டிப் பிழைக்கச் செல்லும் ஒருவர் ஒரே மாதத்தில் ஹிந்தி பேசுகிறார். அதைக் கற்றுக்கொள்வதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால் கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் இந்தி இறக்குமதி நடிகைகள், பெரும்பாலும் பேசுவது ஆங்கிலம்..அல்லது டமிங்லீஸ். படிக்காத பாமரன் பொழைப்புக்காக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும்போது, இவர்களுக்கு மட்டும் ஏன் தமிழ் வர மறுக்கிறது.
ஒரு மொழியை அறிந்து நடித்தால் இன்னும் நன்றாக உணர்ச்சியை வெளிப்படுத்தலாமே..இவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும் இயக்குநர்கள் தமிழில் பேசினால் தான் வாய்ப்பு என்று சொல்லலாமே? சீமானைத் தவிர வேறு யாரும் அதைச் செய்வதாகத் தெரியவில்லை.
நமக்குத் தெரிந்து குஷ்பூ போன்ற சிலர் மட்டுமே மார்க்கெட் இருக்கும்போதே தமிழ் பேசியது.(கோபமா இருக்கேன் மக்கா..படம் நாளைக்குப் போடுறேன்!) மற்றவர்கள் நாக்கில் அந்த சரஸ்வதிதேவியின் சூலாயுதத்தால் சூடு போட்டுத் தான் தமிழை வரவைக்கவேண்டும் போலும்.
தாய்மொழியிலும் அதற்கு ஆதரவாகவும் பொதுவில் (குறிப்பாக அலுவலம், வங்கிகளில்) பேசவே தயங்க வெண்டிய நிலை தான் உள்ளது. அப்படிப் பேசுபவர்கள் பழம்பஞ்சாங்கம் ரேஞ்சுக்கு பார்க்கப்படுகிறார்கள். ’தாய்மொழியை எப்படி வேண்டுமானாலும் ரேப் பண்ணு, ஆங்கிலத்தை மட்டும் பொத்திப் பேணு’ என்ற மனநிலைக்கு நம் தாழ்வு மனப்பான்மை தான் காரணமோ?
‘தமிழ் சோறு போடுமா? அப்புறம் ஏன் அதைப் இடித்துத் தொங்க வேண்டும்? தூக்கி எறி’என்பது இன்னும் சிலரின் மனப்பான்மை. ‘எது எல்லாம் பணம் கொடுக்குமோ அதை மட்டுமே பேண வேண்டும். வரவு இல்லையென்றால் அதைக் குப்பையில் போடு’ என்பது ஆரோக்கியமான சிந்தனை தானா?
இவர்கள் தன் பெற்றோர் சம்பாதிப்பதை நிறுத்திய பின் என்ன செய்வார்கள்? இனி வரவு இல்லையென்று வெளியில் விரட்டி விடுவார்களா? கவனிக்காது சோற்றுக்கு வழியின்றி அலைய விட்டு விடுவார்களா? தாய்மொழியாகவே இருந்தாலும் லாபம் இருந்தால்தான் கற்றுக்கொள்வோம் என்பவர்கள், அடுத்து எந்தமாதிரித் தலைமுறையை உண்டாக்குவார்கள் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது.
தாய்ப்பாசம் போன்ற பணத்தால் எடை போட முடியாத, எடை போடக்கூடாத விஷயங்கள் இன்னும் இந்த உலகில் இருக்கவே செய்கின்றன.தாய்மொழியும் அவற்றில் ஒன்று. எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவராக இருந்தாலும் அதைப் பேணுங்கள்.
அதில் தான் மறைந்துள்ளது நம் வரலாறும் அடையாளமும்!
திருநெல்வேலி அல்வாடா... மதுரை மணக்கும் மல்லிடா...
ReplyDeleteஎனக்கு அது கடும் கோபத்தைக் கிளப்பியது. அவர்களில் பெரும்பாலோனோர் தமிழர்கள். “உங்களில் யாருக்கு ல,ழ,ள சரியாக உச்சரிக்கத் தெரியும்?”என்று கேட்டேன்.>>>
ReplyDeleteநியாயமான கோபம் தான்...
”உண்மைதான், இங்கு தமிழைச் சரியாக உச்சரித்தல் பிரச்சினை அல்ல. அதைச் செய்யும்போது வராத அவமானம் அன்னிய மொழியைப் பேசும்போது வருவது ஏன்?” >>>>
ReplyDeleteஎல்லாமே ஆங்கில மோகம் தான்...
அண்ணே... உங்க கோபம் நியாயமானது.... உங்கள் ஆதங்கம் உங்களுக்கு... ஆனால் ஆங்கில மோகம் உள்ளவர்களுக்கு? ம்ஹும்...
ReplyDelete@தமிழ்வாசி - Prakash நன்றி பிரகாஷ்..இன்னைக்கு டென்சன் ஆக்கிட்டாங்க..அதான் பட்டையைக் கிளப்பிட்டேன்..ஒருத்தனும் வாயைத் திறக்கலை.
ReplyDeleteVanthen
ReplyDeleteTension aagatheenga anne...Less tension more work...More work less tension
ReplyDelete@டக்கால்டி //Tension aagatheenga anne...Less tension more work...More work less tension // வாங்கண்ணே..அப்படி எடுத்துச் சொல்லி குளிர வைங்கண்ணே..
ReplyDelete//அதில் தான் மறைந்துள்ளது நம் வரலாறும் அடையாளமும்!
ReplyDelete// Excellent ...
@வினையூக்கி வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வினையூக்கி.
ReplyDeleteநல்லா பதிவு பாஸ் இன்று தூய தமிழ் பேசுறவனையே இளக்காரமாக பார்க்கும் நிலை தான் ....(((
ReplyDeleteதமிழின் இன்றைய நிலையினை அனுதாபங்களோடு பதிவாக்கியிருக்கிறீங்க.
ReplyDeleteநாகரிக மோகம் எனும் போர்வையில் தமிழைக் கொலை செய்வோர் இருக்கும் வரை, தமிழின் நிலமை இதுவாகத் தான் இருக்கும்.
முதலில் தமிழை உச்சரிக்கத் தெரியாது கொல்வோரைத் திருத்த வேண்டும், அடுத்ததாக தாய் மொழிக்குரிய அங்கீகாரத்தை நாமெல்லோரும் கொடுக்க வேண்டும், அப்போது தான் தமிழ் தமிழாக இருக்கும்.
மாப்ள நீங்க சொல்ற விஷயங்கள் உண்மைதான்.....
ReplyDeleteஎந்த மொழி பேசுபவனும் அவன் தாய் மொழியை சரியா பேசுபவன் இல்லை...இது தமிழுக்கு மட்டும் உரித்தானது இல்லை...
எங்க போனாலும் நான் மேல இருந்து பொறந்து வந்தவன்னு சொல்ல முடியாது...
தாயிலிருந்து தான் வந்தேன்னு சொல்ல முடியும்....அந்த தாய் தான் தமிழ்...அது யார் என்ன வஞ்சாலும் கவலைப்படதவள்...
ஆங்கிலம் ஒரு அறிவே...அதை அலுவலுக்காக மட்டுமே பயன் படுத்த முடியும்...உணர்சிகளை கொட்ட தமிழ் மாதிரி நுணுக்கமான வார்த்தைகளை கொண்ட மொழி எங்கு இருக்கு...!
@கந்தசாமி. //இன்று தூய தமிழ் பேசுறவனையே இளக்காரமாக பார்க்கும் நிலை தான் // உண்மை..ஆங்கிலம் கல்க்காமல் பேசினால் யாரும் மதிப்பதில்லை.
ReplyDelete@நிரூபன் //முதலில் தமிழை உச்சரிக்கத் தெரியாது கொல்வோரைத் திருத்த வேண்டும், அடுத்ததாக தாய் மொழிக்குரிய அங்கீகாரத்தை நாமெல்லோரும் கொடுக்க வேண்டும், அப்போது தான் தமிழ் தமிழாக இருக்கும்.// கரெக்ட் நிரூ..இப்போதெல்லாம் பள்ளியிலேயே நல்ல உச்சரிப்பு சொல்லித் தரப்படுவதில்லை.
ReplyDelete@விக்கியுலகம் //.உணர்சிகளை கொட்ட தமிழ் மாதிரி நுணுக்கமான வார்த்தைகளை கொண்ட மொழி எங்கு இருக்கு...!// ஆம் விக்கி..நேற்று ஃபேஸ்கில் நான் சொன்னது இது: ஏகாந்தம் - இதற்கு நிகரான சொல்லை வேறு மொழியில் சொன்னாலும் திருப்தி வருமா?
ReplyDeleteஉண்மை! உண்மை! நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்! இது பற்றி எழுதலாம்னு ஒரு ஐடியா இருந்திச்சு...ம்ம்ம்...
ReplyDeleteஎந்துக்கு இத்த கோபமுலு??
ReplyDeleteநக்மா மேல் கூட கோவமா சார்?
தாய்ப்பாசம் போன்ற பணத்தால் எடை போட முடியாத, எடை போடக்கூடாத விஷயங்கள் இன்னும் இந்த உலகில் இருக்கவே செய்கின்றன.தாய்மொழியும் அவற்றில் ஒன்று. எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவராக இருந்தாலும் அதைப் பேணுங்கள். //
ReplyDeleteமிக சரியாக சொன்னீர்கள் மக்கா....!!!
@ஜீ... //இது பற்றி எழுதலாம்னு ஒரு ஐடியா இருந்திச்சு…// எழுதுங்க ஜீ..இதுல இன்னும் சொல்ல வேண்டியது நிறைய இருக்கு..இதை திரும்பத் திரும்ப சொல்றதும் தப்பில்லை.
ReplyDelete@அமுதா கிருஷ்ணா //நக்மா மேல் கூட கோவமா சார்?// ஹி..ஹி..சின்ன ஊடல்..அவ்வளவு தான்க்கா!
ReplyDeleteஅந்நிய மொழியா? அன்னிய மொழியா?
ReplyDeleteஅண்ணனுக்கு என்ன ஆச்சு? திடீர்னு மொழிப்பற்று,கனிமொழிப்பற்றுன்னு ரூட் மாறுது?
ReplyDelete@சி.பி.செந்தில்குமார் ///அந்நிய மொழியா? அன்னிய மொழியா?//
ReplyDeleteஆயிரம் உண்டிங்கு சாதி, எனில் அன்னியர்
வந்து புகலென்ன நீதி!
நீங்க சொல்றது சரி தான் அண்ணா....
ReplyDeleteநானும் பலமுறை ஸ்பேன் என்று சொல்பவர்களை திருத்தி இருக்கிறேன். ஆனால் கேலி செய்தது இல்லை, ஏன்ன நமக்கும் இந்த அவமானம் ஒரு தடவ நடந்துருக்கு அதான்...
ஆங்கிலத்தை ஆங்கிலம் பேசுபவனை விட பெருமையாக பேசுவது நாம் மட்டும் தான்...
நம்மில் சிலருக்கு நிறுத்தல் குறிகள் எந்த இடத்தில் உபயோகப்படுத்துவது என்று கூட சரியாக தெரியாது...
உங்களால் முடிந்தால் வாரம் ஒரு பதிவாவது தூய தமிழில் போடலாமே?
நாங்களும் தமிழிலேயே பின்னூட்டமிடுகிறோம்...
தமிழ் தமிழ் என்று கத்தி கூப்பாடு போடுவதை விட நம்மால் முடிந்த அளவுக்கு அதனை வளர்க்க உதவிடலாம்....
உண்மை...!
ReplyDeleteஉண்மை...!!
உண்மை...!!!
@Carfire //ஆங்கிலத்தை ஆங்கிலம் பேசுபவனை விட பெருமையாக பேசுவது நாம் மட்டும் தான்...// உண்மை..ஆங்கிலேயனுக்கு அது ஒரு மொழி அவ்வளவே..நம் ஆட்களுக்கு ஆங்கிலம் என்பது கௌரவம்!
ReplyDelete@Carfire //உங்களால் முடிந்தால் வாரம் ஒரு பதிவாவது தூய தமிழில் போடலாமே?
ReplyDeleteநாங்களும் தமிழிலேயே பின்னூட்டமிடுகிறோம்...// தம்பி, நகைச்சுவைப் பதிவுகள் தவிர்த்து பிறவற்றை குறிப்பாக அரசியல் பதிவுகளை நான் நல்ல தமிழில் எழுதுவதாகவே நம்புகின்றேன். உங்களது இந்தப் பின்னூட்டமும் ஓரளவு நல்ல தமிழே. இப்போதே நண்பர்கள், நான் இன்னும் எளிமைப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அதிகத் தூய்மையும் அன்னியப்படுத்தும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.
@சே.குமார் //உண்மை...!
ReplyDeleteஉண்மை...!!
உண்மை...!!! //
அடேங்கப்பா..எப்போதும் ‘அருமையான பதிவு’ன்னு பின்னூட்டமிட்டு ஓடும் குமார் 3 தடவை சொன்னா, அது சரியாத் தான் இருக்கும்!!!
முற்றிலும் உண்மை..
ReplyDelete//நாம் இன்னும் ஆங்கிலேய அடிமை மனப்பான்மையில் இருந்து வெளிவரவில்லையோ என்று தான் தோன்றுகிறது.//
ReplyDeleteஉண்மைதான்.ஆனால் இந்த மனப்பான்மை தமிழர்கள் அளவுக்கு இந்தியாவின் மற்ற மாநில மக்களிடம் இல்லை என நினைக்கிறேன்!
@MANO நாஞ்சில் மனோ //மிக சரியாக சொன்னீர்கள் மக்கா....!!!
ReplyDelete// நன்றி மக்கா.
@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி வாத்யாரே.
ReplyDelete@சென்னை பித்தன் //ஆனால் இந்த மனப்பான்மை தமிழர்கள் அளவுக்கு இந்தியாவின் மற்ற மாநில மக்களிடம் இல்லை என நினைக்கிறேன்!// உண்மை தான் சார்..ஹிந்திவாலாக்களுக்கு ஆங்கிலம் என்றாலே வேப்பங்காய் தான்.
ReplyDeleteகாலத்திற்கு தேவையான பதிவு.
ReplyDeleteநியாயமான கோவமும் கூட.
பதிவுக்கு நன்றி.
@malgudi பாராட்டுக்கு நன்றி நண்பரே.
ReplyDeleteநேற்றே போட வேண்டிய பின்னூட்டமிது.
ReplyDeleteமுதலாவது தமிழுக்கு சிபாரிசுக்கு வாழ்த்துக்கள்:)
நீங்களாவது பதிவுல குமுறுறீங்க!காலையெழுந்தா திருக்குறளுக்கு கோனார் நோட்ஸ்க்கு சம்பளம் வாங்கிய சாலமன் பாப்பையா இருக்குறது பத்தாதுன்னு நாம் இந்தி கற்றுக்கொள்ளாதது வரலாற்றுத் தவறுன்னு கருத்து வெளியிடறாரு.நம்மை விட அவரது தலைமுறைக்கு இந்தி எதிர்ப்பு போராட்டம் எதற்காக என்பது நன்றாகவே தெரியும்.
நமக்கு இந்தி எப்படி எதிர்ப்போ அதேமாதிரி வங்காளத்துக்கு ஆங்கிலம் எதிர்ப்பு.(பிரணாப் முகர்ஜியின் ஆங்கில லட்சணம் பார்த்தாலே தெரியுமே....பிரணாப் தலையில கொட்டுறதுக்கு மீண்டும் ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்ச்சது உங்களால்:))ஆனால் இந்தி சம்மதம்.டெல்லி கோட்டையை பெங்காளிகள் ஆளுமை செய்கிறார்களா?
நீங்க பசங்களைக் கரிச்சுக் கொட்டுறதை விட தமிழ் தெரிந்தும் நுனி நாக்குல ஆங்கில பிகு செய்யும் பொண்ணுகளையும் ஒரு பிடி பிடிக்கலாம்.இந்த நோய் சென்னை பொண்ணுகளுக்கு அதிகமாவே இருக்குது:)
ReplyDeleteல்,ள,ழ பிரச்சினை எதனால் உருவாகுறது என்பது பற்றி யாராவது கருத்து கூற முடியுமா?
ReplyDelete’ழ’வுக்கு பதிலா ‘ல’வே அதிகம் புழக்கத்தில்.இதுவும் அதிகம் சென்னைங்ண்ணா:)
@ராஜ நடராஜன் //சாலமன் பாப்பையா இருக்குறது பத்தாதுன்னு நாம் இந்தி கற்றுக்கொள்ளாதது வரலாற்றுத் தவறுன்னு கருத்து வெளியிடறாரு.// ஆமா சார், நானும் பார்த்தேன்..வருத்தமாக இருந்தது..அங்கவை சங்கவையிலேயே அவர் மேல் இருந்த மரியாதை குறைந்தது...இப்போ.........
ReplyDelete//நீங்க பசங்களைக் கரிச்சுக் கொட்டுறதை விட தமிழ் தெரிந்தும் நுனி நாக்குல ஆங்கில பிகு செய்யும் பொண்ணுகளையும் ஒரு பிடி பிடிக்கலாம்.// என்ன செய்ய..என்னைச் சுத்தி பசங்க தானே..!
ReplyDelete//ல்,ள,ழ பிரச்சினை எதனால் உருவாகுறது என்பது பற்றி யாராவது கருத்து கூற முடியுமா?// ஆசிரியர்களும் பெற்றோரும் அது பற்றிக் கவலை கொள்வதில்லை..சொல்லித் தருவதும் இல்லை.
ReplyDeleteநியாயமான கோபம்தான், ஆனால் இப்போதைக்கு இந்த நிலை மாறும் என்று தோன்றவில்லை!
ReplyDeleteணன்ரி. ணள்ள பதிஉ.
ReplyDeleteர, ற வுக்கும், ந, ண,ன வுக்கும் உள்ள நுண்ணிய வேறுபடுகளை இன்று எந்தப் பள்ளியில் கற்றுக் கொடுக்கிறார்கள்?
செம்மொழி மாநாட்டுக்குக் கொட்டி செலவழித்து கொண்டாடியபோதுதான் கோடம்பாக்கம் அருகே [ஸ்டேஷன் ரோடு :-(] "அந்நா" என்று நிமிடத்திற்கு ஆயிரம் பேர் கண்ணில் படும்படியாக ஒரு பெயர்ப் பலகை இருந்தது. இப்பொழுதும் இருக்கிறதா? தெரியவில்லை.
உடம்பை ஒரு போகப் பொருளாகப் பார்க்கும் கூட்டம் பியர், பிட்ஸா என்று வெற்றுக் களியாட்டங்களில் மோகம் கொண்டு வாழ்வின் இனிமையான பக்கங்களை தொடாமலே சென்றூவிடுகிறார்களோ என்று தோன்றுகிறது.
என்னதான்
Rubies are going in one direction while Diamonds are moving in opposite direction - Night time Traffic
நல்ல வரிகளாக இருந்தாலும்
"முட்டை போன பின்னும் அந்த இடத்தையே சுற்றி வரும் அடைக் கோழி போல் வயலைச் சுற்றி வரும் விவசாயி" என்ற வரிகளை உள்வாங்க எவ்வளவு ஆழம் வேண்டும்?
அந்த அளவு மனது பண்படாததால்தான் நீங்கள் குறிப்பிட்டது போன்ற ஏளனப் பேச்சுகள்.
---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - செப் '2011)
தறுதலை said... [Reply]
ReplyDeleteநல்ல வரிகளாக இருந்தாலும்
"முட்டை போன பின்னும் அந்த இடத்தையே சுற்றி வரும் அடைக் கோழி போல் வயலைச் சுற்றி வரும் விவசாயி" என்ற வரிகளை உள்வாங்க எவ்வளவு ஆழம் வேண்டும்?
அந்த அளவு மனது பண்படாததால்தான் நீங்கள் குறிப்பிட்டது போன்ற ஏளனப் பேச்சுகள். //
அட்டகாசமான வரிகள் பாஸ்..ஒரு நிமிசம் திகைச்சுட்டேன்..ஏதேதோ பழைய நினைவுகள்..இது எங்கே வந்தது? நீங்கள் எழுதியதா?
// பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]
ReplyDeleteநியாயமான கோபம்தான், ஆனால் இப்போதைக்கு இந்த நிலை மாறும் என்று தோன்றவில்லை! //
இதை எப்போ இவரு போட்டாரு...சாரிண்ணே, இப்போத் தான் பார்த்தேன்..
நீங்க சொல்வது சரிதான்!