‘அடாவடிச் செயல்களில் ஈடுபடும் முன் கடந்த காலங்களில் ஆடியவர்களின் தற்போதைய நிலைமையை விஜயகாந்தின் தேமுதிகவினர்...’-ன்னு சீரியசாத் தான் இதை எழுத நினைச்சேன். அப்புறம் நானா யோசிச்சப்போ தான் அங்க உண்மையில் என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுச்சு..சொல்றேன் கேளுங்க..
அடடா..பழக்கதோசத்துல படம் மாறிடுச்சுப்பா..இப்போப் பாருங்க..
தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதைத் தவிர வேறெதுவுமே சிந்திக்கத் தெரியாத விஜயகாந்துகிட்ட அவர் மகன் போய் நின்னாரு..
‘நைனா, என்னை சினிமால ஹீரோ ஆக்கு நைனா’ங்கவும் நைனாவே பயந்துட்டாரு. ’தம்பி, இப்போ தான் நான் கொஞ்சம் அரசியல்ல தலை எடுக்கேன்..நடிச்சு அதையும் கெடுத்து மூடிடாதப்பா’ன்னு நைனா கெஞ்சவும் மகன் கொஞ்சம் இறங்கி வந்தாரு. ’அப்போ எனக்கு நம்ம இஞ்சினியரிங் காலேஜ்ல சீட்டு குடு’-ன்னு அடுத்த குண்டைப் போட்டாரு மகன்.
‘அய்யய்யோ..அது என்ன அரசியல்ல சம்பாதிச்சுக் கெட்டுனதா..போனாப்போவுதுன்னு உனக்கு சீட் கொடுக்க. பலவருசம் நடிச்சு கஷ்டப்பட்டு கட்டுன காலேஜுப்பா..வேணும்னா இன்னும் ஒரு வருசம் பொறு..நைனா உனக்கு புதுசா ஒரு காலேஜ் கட்டித் தர்றேன்’னு சொன்னதும் மவனுக்குக் கோவம் வந்துடுச்சு. ‘யாரை நம்பி நான் பிறந்தேன்’ன்னு பாடிக்கிட்டே லயோலா காலேஜ்க்குப் போய் சீட்டு கேட்டாரு.
ஒரு புள்ளை படிக்க ஆசைப்படறது ஒரு தப்பாய்யா..அங்க இருந்த அருட்தந்தை போனிபஸ் ஜெயராஜ் அவர்கள், பட்டுக்குஞ்சத்தோட மார்க் சீட்டைப் பார்த்துட்டு “உனக்கு எப்படிப்பா சீட்டு கொடுக்குறது? 1200க்கு 585 தான் எடுத்திருக்கே?’ன்னு ஈவிரக்கமே இல்லாம கேட்டிருக்காரு. அதுக்கு புள்ளையாண்டான் ‘மீதி 615 மார்க்கையும் நானே எடுத்துக்கிட்டா, கூடப்படிச்சவங்கள்லாம் என்ன சார் செய்வாங்க?’ன்னு கேட்டிருக்காரு.
பயபுள்ளை கேட்டதும் நியாயம் தானே..ஃபாதர் தான் டரியல் ஆகிட்டாரு. ‘இந்த மார்க்குக்கு எங்க காலேஜ்ல சீட் தர முடியாது’ன்னு சொன்னதுமே பட்டுக்குஞ்சத்துக்கு கோவம் வந்திருச்சு.
“எனக்கு சீட் கிடையாதுன்னு சொல்ல நீரு யாருய்யா?”ன்னு ஆக்ரோசமாக் கேட்க,
ஃபாதரும் “நாந்தான் தம்பி ஃபாதர்”னு சொல்லி இருக்காரு. உடனே தம்பிக்கு கோவம் இறங்கிடுச்சு.
“அப்படியா..நீங்க தான் ஃபாதரா..அப்போ எங்க வீட்டுல ஒருத்தர் இருக்காரே..அவர் யாருய்யா?”ன்னு கேட்டதுமே ஃபாதர் மனசு சுக்குநூறா உடைஞ்சு போச்சு.
“என்னோட பேக்ரவுண்ட் தெரியாம விளையாடுறீங்க..போகப் போகத் தெரியும்’னு பட்டு சொல்லிட்டு, திரும்பி நடந்தாரு. அப்போ தான் தம்பி பெரிய பேக்ரவுண்ட் உள்ளவர்னு ஃபாதருக்கும் புரிஞ்சது.
வீட்டுக்கு அழுதுக்கிட்டே வர்ற புள்ளையைப் பார்த்த அல்லக்கைகள்லாம் ‘சின்ன கேப்டன், என்ன ஆச்சு?”ன்னு கேட்டிருக்காங்க. தம்பி விஷயத்தைச் சொல்லவும் இரண்டு கார் நிறைய ஆளுங்கள்லாம் லயோலாக்கு வந்தாங்க. ஒரு கார்ல இருந்து தம்பி இறங்குச்சு. இடமில்லாததால இன்னொரு கார்ல இருந்து தொண்டர்கள்லாம் இறங்கியிருக்காங்க.
உள்ளபோய் திரும்பவும் ஃபாதர் மனசைப் புண்ணாக்கி இருக்காங்க. ‘எங்க கேப்டனுக்கு ஃபோன் பண்ணி விளக்கம் சொல்லு’ன்னு மிரட்டி இருக்காங்க. ஃபாதர் ’புள்ளை பேசுனதை நைனாகிட்ட சொன்னா அவரும் நொந்து போவாரே’ன்னு யோசிச்சு, போலீஸ்க்கு ஃபோன் பண்ணிட்டாரு. அப்புறம் என்ன, பதறியடிச்சுக்கிட்டு, அல்லக்கைகளும் தம்பியும் வெளில ஓடி வந்துட்டாங்க.
லயோல கேட்டைத் தாண்டுனதும் தம்பி சோகமா காலேஜைத் திரும்பிப் பார்த்துட்டு, ‘ஏண்ணே, என் தம்பி +2 முடிக்கறதுக்கு முன்னாடியாவது நைனா சி.எம். ஆயிடுவாரா?’ன்னு கேட்டதும் கூட வந்த அல்லகைகள்லாம் ‘ஓ’ன்னு அழுதுட்டாங்க.
வேகமா வந்த வண்டி சோகமா திரும்பிப் போச்சு.
//ஒரு புள்ளை படிக்க ஆசைப்படறது ஒரு தப்பாய்யா..அங்க இருந்த அருட்தந்தை போனிபஸ் ஜெயராஜ் அவர்கள், பட்டுக்குஞ்சத்தோட மார்க் சீட்டைப் பார்த்துட்டு “உனக்கு எப்படிப்பா சீட்டு கொடுக்குறது? 1200க்கு 585 தான் எடுத்திருக்கே?’ன்னு ஈவிரக்கமே இல்லாம கேட்டிருக்காரு. அதுக்கு புள்ளையாண்டான் ‘மீதி 615 மார்க்கையும் நானே எடுத்துக்கிட்டா, கூடப்படிச்சவங்கள்லாம் என்ன சார் செய்வாங்க?’ன்னு கேட்டிருக்காரு.//
ReplyDeleteஹா...ஹா..ஹா...
காலங்காத்தால சிரிக்க வச்சதுக்கு நன்றி...
ஹஹஹா........
ReplyDeleteநக்கலு ஓவரா போச்சு ??
ReplyDeleteவெளில எட்டி பாருங்க தலைவர் அடியாள் வண்டி வந்து நிக்குது போல!
நக்கலு ஓவரா போச்சு ??
ReplyDeleteவெளில எட்டி பாருங்க தலைவர் அடியாள் வண்டி வந்து நிக்குது போல!
ரைட்டு மாப்ள!
ReplyDeleteவருங்கால சி எம் க்கே இந்த கதியா?
ReplyDelete@உலக சினிமா ரசிகன் //காலங்காத்தால சிரிக்க வச்சதுக்கு நன்றி...// சந்தோசம் சார்.
ReplyDelete@THOPPITHOPPI ஹா..ஹா..
ReplyDelete@மைந்தன் சிவா //வெளில எட்டி பாருங்க தலைவர் அடியாள் வண்டி வந்து நிக்குது போல!// சோகமா போன வண்டி, வேகமா திரும்பிடுச்சா?
ReplyDelete@சி.பி.செந்தில்குமார் //வருங்கால சி எம் க்கே இந்த கதியா?// சின்னக் கேப்டனையா சொல்றீங்க?
ReplyDelete:-)
ReplyDeleteகூட இருந்து பாத்தமாதிரியே சொல்றீங்களே! :-)
ReplyDeleteச்சே! ஒரு புள்ள படிக்க ஆசைப்பட்டது தப்பா? என்ன அராஜகம்? கண் கசங்குது!
அய்யய்யோ! நடிக்க வேறையா???
ReplyDeleteபாஸ் (எ) பாஸ்கரன்ல நடிச்ச பயபுள்ளைக்கு செம போட்டியா இருக்கும்ல!
ஹீரோவா நடிச்சா நாடு தாங்குமா? இல்ல ஹீரோயின்தான்....சரி வேணாம் விடுங்க!
இது வேற நடந்திருக்கா??? நல்லவேளை சின்ன கேப்டன் பஞ்ச் டயலாக் பேசலை
ReplyDeleteஅண்ணா கைபுள்ளைக்கு என்ன நிலமைன்னு பார்த்திங்கல்ல.... கேப்டன பத்தி தப்ப பேசுன உங்களுக்கு அதே நிலைமை தான்.. be careful... எதுக்கும் பாதுகாப்பு வேணும்னு ஒரு பெட்டிசன் குடுத்துருங்க.......
ReplyDeleteவிஜயகாந்த் மகனை வைச்சு காமெடி பண்ணியிருக்கிறீங்களே...
ReplyDeleteஹா...ஹா...
உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.
ReplyDeletehot tamil actress gallery
//இடமில்லாததால இன்னொரு கார்ல இருந்து தொண்டர்கள்லாம் இறங்கியிருக்காங்க.//
ReplyDelete!!!!!!!!!!!!!!!
என்ன அநியாயம் இது?சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் மகனுக்கு இடமில்லையா?காப்டனின் கண் சிவக்கவில்லை?
ReplyDeleteகாலங்காத்தால சிரிக்க வச்சதுக்கு நன்றி...
ReplyDelete/////அங்க இருந்த அருட்தந்தை போனிபஸ் ஜெயராஜ் அவர்கள், பட்டுக்குஞ்சத்தோட மார்க் சீட்டைப் பார்த்துட்டு//////
ReplyDeleteசின்னக் கேப்டன்தான் பட்டுக்குஞ்சம்னா, வெளக்கமாறு யாரு?
/////என்னோட பேக்ரவுண்ட் தெரியாம விளையாடுறீங்க..போகப் போகத் தெரியும்’னு பட்டு சொல்லிட்டு, திரும்பி நடந்தாரு.////////
ReplyDelete’திரும்பி’ நடந்துமா ’பேக்ரவுண்ட்’ தெரியாம போச்சு? என்ன கொடும சார் இது?
//////ஒரு கார்ல இருந்து தம்பி இறங்குச்சு. இடமில்லாததால இன்னொரு கார்ல இருந்து தொண்டர்கள்லாம் இறங்கியிருக்காங்க.///////
ReplyDeleteஇப்ப ஒத்துக்கிறேன், தம்பி பெரிய பேக்ரவுண்டுதான்....
/////லயோல கேட்டைத் தாண்டுனதும் தம்பி சோகமா காலேஜைத் திரும்பிப் பார்த்துட்டு, ‘ஏண்ணே, என் தம்பி +2 முடிக்கறதுக்கு முன்னாடியாவது நைனா சி.எம். ஆயிடுவாரா?’ன்னு கேட்டதும் கூட வந்த அல்லகைகள்லாம் ‘ஓ’ன்னு அழுதுட்டாங்க. ////////
ReplyDeleteஇம்புட்டு நல்லவிங்களா இருக்காய்ங்களே?
இன்னைக்கு என்ன தமில்வாசி வடை வாங்கலையா?
ReplyDeleteஇதை படிச்சி இன்னும் சிரிப்பு நிக்கல..
ReplyDeleteunakku nakkal romba ovaru. sari karun, methu vadai enakku.
ReplyDelete@டக்கால்டி
ReplyDeleteவருகைக்கும் சிரிப்புக்கும் நன்றி டகால்ட்டி.
@ஜீ... //ஹீரோவா நடிச்சா நாடு தாங்குமா? இல்ல ஹீரோயின்தான்....!// அய்யா அல்லக்கைகளே, பதிவுக்கு மட்டும் தான் நான் பொறுப்பு..ஜீ கமெண்ட்டுக்கு இல்லே..
ReplyDelete@இரவு வானம் //நல்லவேளை சின்ன கேப்டன் பஞ்ச் டயலாக் பேசலை// தம்பியே படிக்க முடியலியேன்னு ஃபீலிங்ல இருக்கு..பஞ்ச் டயலாக் வேற கேக்குதா உமக்கு?
ReplyDelete@Carfire // கேப்டன பத்தி தப்ப பேசுன உங்களுக்கு அதே நிலைமை தான்.. be careful... // தம்பி இது அட்வைஸா.இல்லே உங்க ஆசையா?
ReplyDelete@நிரூபன் //விஜயகாந்த் மகனை வைச்சு காமெடி பண்ணியிருக்கிறீங்களே...// பின்னே பிரியாணியா பண்ணச் சொல்றீங்க?
ReplyDelete@Benivolent //உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.
ReplyDelete//hot tamil actress gallery// இதுலயா என் பதிவைப் போடச்சொல்றீங்க..ஏன்யா இப்புடி..டெம்ளேட் கமெண்ட்டையாவது கரெக்டாப் போடுங்கப்பா..
@தருமி நன்றி சார்.
ReplyDeleteஉங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.
ReplyDeletehot tamil actress gallery
@சென்னை பித்தன் //சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் மகனுக்கு இடமில்லையா?// ஆமா சார், இவர் ஒருத்தருக்கே க்ளாஸ் ரூம் சரியாப் போச்சாம். பேசாம புது சட்டசபைக் கட்டிடத்துக்கு க்ளாஸ் ரூமை மாத்திட்டா என்ன?
ReplyDelete@சே.குமார் //காலங்காத்தால சிரிக்க வச்சதுக்கு நன்றி...// சந்தோசம் சார்!!!!!!!!!!!
ReplyDelete@பன்னிக்குட்டி ராம்சாமி //சின்னக் கேப்டன்தான் பட்டுக்குஞ்சம்னா, வெளக்கமாறு யாரு?// வேணாம்ணே...தம்பி ஓங்காம அடிச்சாலே ஒன்றை டன் வெயிட்டு!
ReplyDelete@!* வேடந்தாங்கல் - கருன் *! //இன்னைக்கு என்ன தமில்வாசி வடை வாங்கலையா?// ஆளைக் காணோம் கருன்..லேப்டாப் உடைஞ்சிருச்சோ என்னமோ?
ReplyDeleteஹா ஹா இந்த தடவை காமடிக்கு விஜயகாந்த் மகன் தான் பலியா?
ReplyDelete@மதுரன் //இந்த தடவை காமடிக்கு விஜயகாந்த் மகன் தான் பலியா? // நாம சும்மா இருந்தாலும் அவங்க விடமாட்டாங்கிறாங்களே..
ReplyDeleteமீதி 615 மார்க்கையும் நானே எடுத்துக்கிட்டா, கூடப்படிச்சவங்கள்லாம் என்ன சார் செய்வாங்க?’ன்னு கேட்டிருக்காரு.//
ReplyDeleteஹா ஹா ஹா ஹா ஜரி ஜரி விடும்ய்யா விடும்ய்யா ஹா ஹா ஹா ஹா....
சூப்பர்.
ReplyDelete@saro //உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.
ReplyDeletehot tamil actress gallery// அந்த லின்க்கை இப்போ தான் நல்லாப் பார்த்தேன். உபயோகமான லின்க்..அடுத்து பதிவுகள் போட மிகவும் உதவியாக இருக்கும்..ரொம்ப டேங்க்ஸ்.
@MANO நாஞ்சில் மனோ //ஹா ஹா ஹா ஹா ஜரி ஜரி விடும்ய்யா விடும்ய்யா ஹா ஹா ஹா ஹா....// போதும்ணே சிரிச்சது..பூமியே குலுங்குது.
ReplyDelete@எஸ்.பி.ஜெ.கேதரன் சூப்பர் கமெண்ட்டிற்கு நன்றி பாஸ்.
ReplyDelete@தமிழ்வாசி - Prakash வந்தீங்களா..இப்போ தான் உங்க கமெண்ட்டைப் பார்த்தேன்.
ReplyDelete" பட்டுக்குஞ்சத்தோட மார்க் சீட்டைப் பார்த்துட்டு “ எனக்கென்னமோ இது வஞ்ச புகழ்ச்சி அணியோன்னு தோணுது.........ஏன்னா..எங்க ஊரு பக்கம் வெள............க்கு பட்டுக்குஞ்சமான்னு கேப்பாங்க.....அது ஞாபகம் வந்துச்சு....:):)
ReplyDelete@மருதா //எனக்கென்னமோ இது வஞ்ச புகழ்ச்சி அணியோன்னு தோணுது..// வஞ்சப் புகழ்ச்சி அணியா..சும்மா இருங்க சார், அப்படீன்னா என்னன்னே எனக்குத் தெரியாது.
ReplyDelete//ஃபாதரும் “நாந்தான் தம்பி ஃபாதர்”னு சொல்லி இருக்காரு. உடனே தம்பிக்கு கோவம் இறங்கிடுச்சு.
ReplyDelete“அப்படியா..நீங்க தான் ஃபாதரா..அப்போ எங்க வீட்டுல ஒருத்தர் இருக்காரே..அவர் யாருய்யா?”ன்னு கேட்டதுமே ஃபாதர் மனசு சுக்குநூறா உடைஞ்சு போச்சு.
//
i cant control laughing while i read these lines.. .. very funny
@Peru... உங்க சந்தோசமே என் சந்தோசம்.
ReplyDeleteமத்திய அரசு பணம் அச்சடிச்சி மக்களுக்கு கொடுக்க கேப்டன் உத்தரவிட்டாரே சரியா நடக்குதா?......
ReplyDelete@Suresh Kumar இல்லையாம் பாஸ்..அதான் இனியும் இவங்களை நம்பிப் பிரயோஜனம் இல்லைன்னு ஜப்பான்ல இருந்து ஒரு ப்ரிண்டிங் மெசின் இறக்கப்போறாராம்..
ReplyDeleteROFL machi
ReplyDeleteகலக்கிட்ட மாப்பு!! எம்பூட்டு புள்ளைக படிக்க காலேஜு கட்டிபோட்ட இவரு தன்னோட புளிமூட்டைக்கும்..... சாரி மகனுக்கும் ஒரு சீட்டு போட்டுத் தொலைச்சிருக்கலாமே, லயோலா காலேஜு காரன்கிட்ட எதுக்கு போனாரு? [கிருஸ்தவரா இருந்தா 420/1200 மார்க்கு இருந்தாலும் சீட்டு கிடைக்கும்..!!]. \\ஒரு கார்ல இருந்து தம்பி இறங்குச்சு. இடமில்லாததால இன்னொரு கார்ல இருந்து தொண்டர்கள்லாம் இறங்கியிருக்காங்க.\\ சரியா சொல்லுங்க, புள்ளையாண்டான் லாரியிலும் [அவரு உட்கார்ந்துகிட்டு வந்தது டிரைவர் கேபினில் இல்ல பின்னாடி சரக்கு எத்துற இடத்துல!!], மத்தவங்க காரிலும் தானே வந்தாங்க?
ReplyDeleteஅருமை நண்பா...
ReplyDelete