ஜெனர் – சாகசம் (Adventures)
ஒரு அசாதாரண மனிதன், ஒரு அசாதாரண சூழ்நிலையை எதிர்கொண்டு வெல்லும் கதைகளே அட்வென்ச்சர் கதைகள் ஆகும். அதாவது, இங்கே ஹீரோ சாமானியன் இல்லை. போலீஸ், சி.ஐ.டி, ஸ்பெஷல் திறமை வாய்ந்தவன் (சிலநேரங்களில் ஹீரோவின் இமேஜ்!) என ஏதோவொரு தனித்தன்மை ஹீரோவிடம் இருக்கும். ஒரு அட்வென்ச்சர் படத்திற்கு திரைக்கதை எழுதும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்:

ஹீரோ:
ஹீரோவிடம் ஏதோவொரு அதிகாரம் இருக்கும். அது போலீஸ் வேலையாகவும் இருக்கலாம் அல்லது தொல்பொருள் நிபுணனானகவும் இருக்கலாம். அவன் ஒரு சாமானியன் அல்ல என்பது தான் இதில் முக்கியம். ’நீதி, நேர்மையின் சிகரம். சொந்த வாழ்க்கையைவிட கடமையைப் பெரிதாக எண்ணுபவன். குடும்பமா கடமையா எனும் சூழ்நிலை வந்தால், கடமையைத் தேர்ந்தெடுப்பவன், தைரியசாலி’ என்பது தான் ஹீரோவின் டெம்ப்ளேட். தங்கப்பதக்கத்தில் ஆரம்பித்து சிங்கம் வரை பல வருடங்களாகப் பார்த்தாலும், அலுக்காத கேரக்டர் இது.
இதே ஹீரோவை ஜாலியான ஆளாக ஆக்கும்போது, ஜேம்ஸ்பாண்ட் தன்மை வந்துவிடும்.உதாரணம், விக்ரம். சீரியஸான ஆளாக ஆக்கினால், வெற்றிவேல்...வால்டர் வெற்றிவேல் தான்.
வில்லன்:
ஹீரோவைப் போன்றே வில்லனும் அதிகாரம் மிக்கவனாக இருப்பான். தாதாவாக இருக்கலாம் அல்லது போலீஸாகவே இருக்கலாம். ஆனால் ஆக்சன் படங்களைப் போன்றே, இதிலும் ஹீரோவைவிட வலுவான ஆளாக, ஆள்-அம்பு-படைபலத்துடன் இருப்பான். ஏற்கனவே அவனுக்கென்று ஒரு சாம்ராஜ்யம் உருவாகியிருக்கும். அதை எப்படி ஹீரோ அழிக்கிறான் என்பதே சுவாரஸ்யம்.
குறிக்கோள்:
ஹீரோவின் முதல் குறிக்கோள் கடமை தான். வில்லன் செயல்களைச் செய்கிறான். அதைத் தடுத்து நிறுத்துவது ஹீரோவின் கடமை. எனவே அதில் ஹீரோ இறங்குவான். அதனால் வில்லன் கடுப்பாகி, ஹீரோவுக்கு ஏதோவொரு சொந்தப் பிரச்சினையை உண்டுபண்ணுவான். அப்போது ஆக்சன் பட குறிக்கோள்களான தப்பித்தல், காப்பாற்றுதல், பழி வாங்குதல் போன்றவை கூடுதல் குறிக்கோளாகச் சேரும்.
அட்வென்ச்சர் படங்களின் அடிநாதமாக வருவது சமூகப்பிரச்சினைகள் அல்லது குற்றங்கள். பெர்சனல் பிரச்சினை என்பது பி ஸ்டோரியாகவே இருக்கும். கண்டிப்பாக ஒரு பெர்சனல் பிரச்சினை ஹீரோவுக்கு உருவாக்கப்பட வேண்டும். கடமை மட்டும் தான் குறிக்கோள் என்றால், இழப்பு ‘புரமோசன்’ மட்டும் தான். எனவே ஆடியன்ஸை உணர்வுப்பூர்வமாக இன்வால்வ் செய்ய, ஹீரோ ஜெயிக்கவில்லையென்றால் ஏதோவொரு முக்கியமான ஒன்றை(உயிர்/குடும்பம்) இழப்பான் எனும் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.
சமீபத்தில் வந்த நல்ல அட்வென்ச்சர் படமான மீகாமன் தவறியது இதில் தான். ஹீரோவை ரகசிய திட்டத்தில் இருந்து பின்வாங்குமாறு உயரதிகாரி உட்பட அனைவரும் சொல்லும்போதும், ஹீரோ முன்னேறிச் செல்கிறான். கடமையைத் தவிர்த்து, அங்கே வேறு காரணம் இல்லை. ’என்ன தான் கடமையுணர்ச்சி என்றாலும், எதற்காக இப்படிப் போராட வேண்டும்?’எனும் கேள்வி ஆடியன்ஸின் உள்மனதில் எழுந்தது. அதை மட்டும் சரி செய்திருந்தால், அந்தப் படம் தமிழில் வந்த முக்கியமான அட்வென்ச்சர் படங்களில் ஒன்றாக ஆகியிருக்கும்.
திரைக்கதை:
ஆக்சன் படங்களில் இருந்து அட்வென்ச்சரை நாம் தனியே பிரித்ததற்கு முக்கியக் காரணம் உண்டு. ஆக்சன் படங்களில் ஹீரோ சாமானிய வாழ்வில் இருப்பான். ஒரு பிரச்சினை அவன் வாழ்வில் குறுக்கிடும். பின்னர் ஆக்சன் ஆரம்பிக்கும். ஆனால் அட்வென்ச்சர் படங்களில் ஹீரோவே வலிய பிரச்சினையைத் தேடிப்போவான். அது அவன் கடமை என்பதால், உறுத்தாது. ஆக்சன் படங்களில் இப்படி வலிய ஹீரோ வம்புக்குப் போவது போல் வைத்தால், ‘உனக்கு இது தேவை தாண்டி!’ எனும் பதிலே ஆடியன்ஸிடமிருந்து கிடைக்கும். ஆக்சன் படங்களைப் போன்றே, பிரச்சினை அட்வென்ச்சர் ஹீரோவிடம் குறுக்கிடலாம். அது உறுத்தாது. (ஆங்கில உதாரணம், Die Hard)
ஹீரோ ஆரம்பத்தில் இருந்தே ஆக்சனில் இருப்பது இன்னொரு வித்தியாசம். தொட்டால் பற்றிக்கொள்ளும் ஆசாமியாகவே ஹீரோ இருப்பான். எனவே ரியலிஸ்டிக்/யதார்த்தம் என்பது இங்கே குறைவாகவே இருக்கும். ஆரம்பம் முதலே படமானது நம்ப முடியாத, அதாவது சராசரி வாழ்க்கைக்கு மேலானதாகவே இருக்கும்.
மேலும், ஆக்சன் படங்களைப் போன்றே இங்கேயும் திரைக்கதையானது விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஆடியன்ஸுக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸாகக் கொடுத்துக்கொண்டே, ஹீரோவை வில்லன் மேலும் மேலும் சிக்கலில் ஆழ்த்துவதாக கதை நகர வேண்டும். கதை ஹீரோவின் பார்வையிலேயே நகரும். கிராமத்தை விட நகரமே சாகசப் படங்களுக்கு சரியான களமாக இருக்கும்.
சில அட்வென்ச்சர் படங்கள் வில்லனை பி ஸ்டோரிக்குள் கொண்டு வந்து சுவாரஸ்யத்தை எகிற வைக்கும். உதாரணம், வால்டர் வெற்றிவேல். தங்கப்பதக்கத்தின் இன்ஸ்பிரேசன் தான் என்றாலும், தங்கப்பதக்கத்தில் அட்வென்ச்சரை விட செண்டிமெண்ட் தூக்கலாக இருக்கும். அங்கே அட்வென்ச்சர் என்பது பி ஸ்டோரி தான்.
கதாபாத்திரங்கள்:
த்ரில்லர் படங்களின் முக்கிய அம்சம் குறைவான கேரக்டர்கள். ஆனால் அட்வென்ச்சர் படங்களில் ஹீரோவின் பக்கமும் வில்லனின் பக்கமும் ஏகப்பட்ட கேரக்டர்கள் நடமாடுவது வழக்கம். பி ஸ்டோரி கேரக்டர்களும் சேரும்போது, திருவிழாக் கோலம் தான்!
ஹீரோயின் கேரக்டர் பொதுவாக ஹீரோவின் டீமில் இருக்கும் ஆளாகவோ அல்லது பி ஸ்டோரியின் முக்கிய கேரக்டராகவோ இருப்பது வழக்கம். நம் ஆட்கள் இன்னும் புத்திசாலித்தனமாக இரண்டு ஹீரோயின் கேரக்டர்களை அமைத்து விடுவார்கள். ஒரு போட்டி டூயட் கன்ஃபார்ம். (சகாப்தம் பார்த்தீர்களா?..அவ்வ்)
ஒன்லைன் :
அட்வென்ச்சர் படங்களின் ஒன்லைன் என்பது எப்போதும் சிம்பிளானது தான்.
ஹீரோ குற்றமற்ற சமுதாயத்தை தன்னைச் சுற்றி அமைத்துக்கொண்டிருக்கிறான்.
அங்கே வில்லன் குரூப் குற்றத்தில் ஈடுபடுகிறது.
ஹீரோ அவர்களை அழித்து, வெற்றிவாகை சூடுகிறான்.
- இது தான் 90% ஆக்சன் படங்களின் கதை. இதில் கேரக்டர்கள், சூழ்நிலை, குறிக்கோளை மாற்றி இன்னும் எத்தனை ஆக்சன் படங்கள் வேண்டுமென்றாலும் எடுக்க முடியும்.
கலப்பினங்கள்:
அட்வென்ச்சர் எனும் த்ரில்லர், காமெடி எனும் மெலோடிராமாவுடன் சேரும்போது அட்வென்ச்சர் காமெடி என்று ஒரு புது ஜெனர் உண்டாகிறது. இதற்கு ஆங்கிலத்தில் Johny English போன்ற பல படங்கள் இருக்கின்றன. தமிழில் இன்னும் சரியாக உருவாகாத ஜெனர் இது. சமீபத்திய எலி சோதனை, ஒரு உதாரணம்.
தமிழில் அட்வெஞ்சர் என்பது செண்டிமெண்ட்டுடன் தான் அதிகம் கலக்கப்படுகிறது. ’போலீஸ் ஹீரோ-பாதிக்கப்படும் அவன் குடும்பம்-கிளைமாக்ஸில் குடும்பத்தை வில்லன் கடத்திக் கட்டிவைத்திருக்க, ஹீரோ சுவரை உடைத்துக்கொண்டு நுழைவது’ என அடித்துத் துவைக்கப்பட்ட கலப்பினம் இது.

பெரும்பாலும் வெற்று ஹீரோயிசப் படங்களே தமிழில் அட்வென்சர் படங்களாக வரும் சூழலில், காக்க காக்க-துப்பாக்கி போன்ற நல்ல அட்வென்ச்சர் படங்கள், அத்தி பூத்தாற்போன்று வருவதுண்டு. உங்களது டார்கெட்டும் அது போன்றே இருக்க வேண்டும். ஏன், எப்படி அந்த இரு படங்கள் மற்ற அட்வெஞ்சர் படங்களில் இருந்து வேறுபட்டன என்று ஸ்டடி செய்யுங்கள்.
(தொடரும்)
ஃபேஸ்புக்கில் எழுதிய ஒரு குறிப்பு:
திரைக்கதை எழுத ஆரம்பிக்கும்போது, நமக்கு உள்ள சவால், வித்தியாசமான கான்செப்ட் கிடைப்பது தான்.
ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்(மெமண்டோ-கஜினி)
ஏர்வாடி ( சேது)
இருவர் காதலித்தார்கள்..சேர்ந்தார்கள் அல்லது சேரவில்லை என்பது தான் எல்லா
காதல் படங்களின் கதையும். ஆனால் சேதுவில் ஏர்வாடி மேட்டர்
நுழைக்கப்பட்டதும். ஒரு உணர்ச்சிகரமான காவியமாக ஆகிவிட்டது.
பழி
வாங்குதல் கதைகளை நூற்றுக்கணக்கில் பார்த்துவிட்டோம். அதில் ஷார்ட் டெர்ம்
மெமரி லாஸ் சேர்ந்ததும், செம த்ரில்லர் மூவி கிடைத்தது.
எல்லாப்
படங்களிலுமே வித்தியாசமான கான்செப்ட் (என்று படக்குழு நம்பும்) ஒரு விஷயம்
இருந்தே தீரும். இல்லையென்றால், கதை அரதப்பழசாகத் தெரியும்.
எனவே
கான்செப்ட் பிடிப்பது ஒரு சவால். அது சிக்கிவிட்டால், அதைச் சுற்றி
கேரக்டர்களையும் சம்பவங்களையும் அடுக்கிவிட முடியும். ஒரு நல்ல திரைக்கதை
ஆரம்பிக்கும் புள்ளியே இது தான்.
மாசு(!) படத்திற்கும், அதன்
ஒரிஜினல் படங்களாக சொல்லப்பட்ட படத்திற்கும் ஆதிமூலம், சிக்ஸ்த் சென்ஸ்
படம் தான். ’இறந்தவர்கள் கண்ணுக்குத் தெரிந்தால்..ஹீரோவின் உதவியை அவர்கள்
நாடினால்?’ எனும் புதுமையான பேய் கான்செப்ட்டுடன் வந்து, சிக்ஸ்த் சென்ஸ்
பட்டையைக் கிளப்பியது.
ஆனால் இத்தகைய படங்கள் ஓடுவதற்குக் காரணம்,
கான்செப்ட் மட்டுமே அல்ல. அந்த கான்செப்ட்டை வைத்துக்கொண்டு என்ன
செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது மேட்டர். கஜினி ஓடியதற்கும், தாண்டவன்
ஃப்ளாப் ஆனதிற்கும் அது தான் காரணம்.
கான்செப்ட் என்பது நல்ல ஒரு செட்டப்பைக் கொடுக்கும். அதை அடுத்து சுவராஸ்யமாக ஆக்குவது, கதை சொல்லும் விதமும் கதையின் முடிவும்.
--------------------------------------------------------------------------------------
ஒப்பீடுகளுடன் நல்ல விளக்கம்......... நன்று.
ReplyDelete