நன்றி : இதை எழுதிய உடன்பிறப்புக்கு...!
கலைஞர் என்ன கிழித்துவிட்டார்?தெரிந்து கொள்ளுங்கள்.இந்த சாதனையெல்லாம் வேறு ஒரு அரசியல் தலைவரால் நினைத்துப் பார்க்கவேணும் முடியுமா?
விடைபெறுகிறேன் உடன்பிறப்புகளே....
1967-1969
1. மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.
2. சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்.
3. தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு இருமொழி அங்கீகாரம்
4. அரசாங்க ஊழியர்கள் பயன்படுத்தாத விடுமுறைக்கு சம்பளம்.
1969 - 1971
1. போக்குவரத்து துறை தேசியமயமாக்கப்பட்டது.
2. போக்குவரத்து கழகம் துவங்கப்பட்டது.
3. அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வசதி
4. 1500 மக்களுக்கு மேல் வசிக்கும் கிராமங்கள் அனைத்திற்கும் சாலை வசதி கொடுக்கப்பட்டது.
5. குடிசை மாற்று வாரியம் துவக்கம்
6. குடிநீர் விநியோகம் மற்றும் வடிகாலுக்கு தனி வாரியம் அமைக்கப்பட்டது.
7. இலவச கண் மருத்துவ முகாம்.
8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வுத் திட்டம் துவங்கப்பட்டது.
9. கைரிக்ஷாக்களை ஒழித்து அந்த தொழிலாளர்களுக்கு சைக்கிள் ரிக்ஷா வழங்கும் திட்டம்.
10. எஸ்.சி,எஸ்.டி மக்களுக்கு இலவச கான்க்ரீட் வீடு கட்டி கொடுக்கும் திட்டம்.
11. விவசாயிகளுக்கு என்று நியாயமான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.
12. வழங்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளிகளே உரிமை கொள்ளும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
13. இந்தியாவிலேயே முதன்முதலாக போலீஸ் கமிஷன் துவங்கப்பட்டது.
14. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மக்களுக்கு தனி அமைச்சகம் துவங்கப்பட்டது.
15. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாகவும் சிறுபான்மையினருக்கு 16 சதவீதத்திலிருந்து 18 சதவீதம் உயர்த்தப்பட்டது.
16. பியுசி வரை இலவசக் கல்வி
17. உழைப்பாளர் தினமான மே முதல் நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
18. நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
1971 - 1976
1. கோவையில் முதல் வேளாண் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
2. அரசாங்க ஊழியர்களின் குடும்பத்தாருக்கும் பயன்தரும் வகையிலான நிதித் திட்டங்கள் துவங்கப்பட்டது.
3. அரசாங்க ஊழியர்களிடத்தில் செயல்பட்ட ரகசிய அறிக்கை முறை ஒழிக்கப்பட்டது.
4. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம்.
5. கோவில்களில் கொண்டு வந்து விடப்படும் குழந்தைகளுக்காக குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக கருணை இல்லம் துவங்கப்பட்டது.
6. சேலம் எஃகு ஆலை துவங்கப்பட்டது.
7. நில உச்சவரம்பு திட்டத்தின்படி தனிநபர் வைத்திருக்கும் நில உடைமைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
8. நெய்வேலியில் இரண்டாவதாக சுரங்கம் வெட்டும் திட்டம்.
9. தூத்துக்குடியில் பெட்ரோலியம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படும் கெமிக்கல்கள் தயாரிக்கும் திட்டம்.
10. தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகமான சிட்கோ துவங்கப்பட்டது.
11. தமிழ் பேசும் முஸ்லீம்களைப் போலவே உருது பேசும் முஸ்லீம்களும் பின்தங்கியோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
12. வறண்ட நிலங்களுக்கு நிலவரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
13. ஆட்சியர்களிடம் மக்கள் நேரடியாக மனு அளிக்கும் விதமாக மனுநீதி திட்டம் துவங்கப்பட்டது.
14. பூம்புகார் கப்பல் கழகம் துவங்கப்பட்டது.
15. கொங்கு வேளாளர் பின்தங்கிய வகுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
16. பசுமை புரட்சி கொண்டு வரப்பட்டது.
1989 - 1991
1. வன்னியர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.
2. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிலிருந்து வரும் குழந்தைகள் மற்றும் பிற்படுத்தபட்டோர் வகுப்பிலிருந்து வருமான உச்சவரம்புக்கு உட்பட்ட குடும்பத்தின் குழந்தைகளுக்கு டிகிரி வரையில் இலவச கல்வி.
3. சிறுபான்மையினருக்கு இலவசக் கல்வி. பட்டப்படிப்பு வரையில் பெண்களுக்கு வருமான உச்சவரம்பு.
4. நாட்டிலேயே முதன் முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.
5. பெண்களுக்கும் சமமான சொத்துரிமை வழங்கும் திட்டம்.
6. அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு.
7. ஆசியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
8. ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம்.
9. கைம்பெண் மறுமண உதவித்தொகை திட்டம்.
10. சாதி மாறி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உதவித்தொகை திட்டம்.
11. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட்டன.
12. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு வண்டி வாடகைக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்.
13. ரேசன் கடை ஆரம்பிக்கப்பட்டது.
14. கர்பிணி பெண்களுக்கு உதவித்தொகை.
15. தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயர்வு.
16. மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக பத்து லட்சம் பெண்களுக்கு நிதி உதவி.
17. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
18. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
19. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
20. காவேரி தீர்ப்பாயத்திற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன.
1996 - 2001
1. ஆட்சி பொறுப்பேற்ற ஆறுமாதத்திற்கு உள்ளாக தடைப்பட்ட இடங்களுக்கு தேர்தல் நடத்தி முடிவு அறிவிக்க வேண்டும் என்ற முறை கொண்டு வரப்பட்டது.
2. சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு. இவர்களில் இரண்டு பெண் மேயர்கள் சிறுபான்மையினராக இருக்க வேண்டும் என்ற விதியும் கொண்டு வரப்பட்டது.
3. மெட்ராஸ் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது.
4. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு ஒற்றை சாளர முறை கொண்டுவரப்பட்டது.
5. புதிய தொழில்துறை கொள்கைகள் வெளிப்படையாக கொண்டுவரப்பட்டது.
6. புதிய தொழில் துவங்குவதற்கான உரிமங்களை பெற ஒற்றை சாளர முறை கொண்டு வரப்பட்டது.
7. சாலை மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டது.
8. கிராமங்களில் கான்க்ரீட் சாலை அமைக்கப்பட்டது.
9. ஆறுகள்,கால்வாய் போன்றவை தூர்வாரும் திட்டம்.
10. இந்தியாவிலேயே முதன் முதலாக சுகாதார மையம் 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
11. எம்.எல்.ஏ தொகுதியின் மேம்பாட்டு நிதி என்று தனியாக நிதி ஒதுக்கப்பட்டது.
12. அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம்.
13. கிராமங்களில் படித்து வரும் மாணவர்கள் தொழில்முறை படிப்புகளில் சேரும் போது 15 சதவீத இடஓதுக்கீடு வழங்கும் திட்டம்.
14. சமத்துவபுரம் துவங்கப்பட்டது.
15. சாதி பாகுபாட்டினை ஒழிக்க திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.
16. அனைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் வகையில் மினிபஸ் திட்டம் கொண்டுவரப்பட்டது.
17. இந்தியாவிலேயே முதன்முதலாக டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
18. சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
19. உலக தமிழர்களுக்கு உதவும் வகையில் மெய்நிகர் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
20. உருது அகாதெமி ஆரம்பிக்கப்பட்டது.
21. சிறுபான்மையினரின் பொருளாதரத்தை மேம்படுத்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
22. உழவர் சந்தை கொண்டு வரப்பட்டது.
23. ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ உதவி வழங்கும் வருமுன் காப்போம் திட்டம் கொண்டு வரப்பட்டது.
24. கால்நடை பராமரிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது.
25. பள்ளிகளில் வாழ்வெளித் திட்டம் கொண்டு வரப்பட்டது.
26. கன்னியாகுமாரியில் 133 அடி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது.
27. சென்னையில் டைட்டல் பார்க் அமைக்கப்பட்டது.
28. அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு.
29. புறம்போக்கு நிலங்களில் வசித்த இரண்டு லட்சத்திற்கும் அதிகமான குடும்பத்தினருக்கு வீடு வழங்கும் திட்டம்.
30. 1996 ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்.
31 ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையம் மாற்றப்பட்டது.
32. தென்மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு தனித்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
33. பெண்களுக்கான சிறுவணிக கடன் திட்டம்.
34. வேளாண் ஊழியர்களுக்கு தனிநபர் நல வாரியம் அமைக்கப்பட்டது.
35 .ஒழுங்குபடுத்தப்படாத ஊழியர்களுக்கு தனி நல வாரியம் ஏற்படுத்தப்பட்டது.
36. தமிழ் அறிஞர்கள் மற்றும் தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டும் திட்டும்.
37. சத்துணவில் முட்டை வழங்கும் திட்டம்.
38. இருபது அணைகள் வரை கட்டப்பட்டது.
39. ஒன்பது மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது.
40. மதுரையில் உயர்நீதிமன்ற கிளை அமைப்பு.
41. மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கும் திட்டம்.
42. அண்ணா மறுமலர்ச்சி திட்டம் துவங்கப்பட்டது.
43. நமக்கு நாமே திட்டம் துவங்கப்பட்டது.
44. குடும்ப நலத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
45. 104 கோடி ரூபாய் செலவில் சென்னை பொது மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
46. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு திட்டம்.
47. முதன்முதலாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சாலை போடும் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
48. தமிழ் அறிஞர்களின் படைப்புகள் தேசியமயமாக்கப்பட்டது.
49. 500 கோடி செலவில் 350 மின்சார துணை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
50. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பென்சன் வழங்கும் திட்டம்.
51. போக்குவரத்து ஊழியர்களுக்கு பென்சன் வழங்கும் திட்டம்.
52. தூத்துக்குடி,கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி துவங்கப்பட்டது.
2006 - 2011
1. 1 கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கும் திட்டம்.
2. ஐம்பது ரூபாய்க்கு பத்து பொருட்கள் வீதம் ரேசன் கடைகளில் எண்ணெய்,பருப்பு,கோதுமை போன்றவை மாநிய விலையில் வழங்கும் திட்டம்.
3. 22 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 7000 கோடி வரையில் கடனுதவி வழங்கும் திட்டம்.
4. உரிய காலத்தில் வங்கிக் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்ற முறையும் கொண்டு வரப்பட்டது.
5. நெல் மற்றும் அரிசி வகைகளுக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டது.
6. கரும்பு விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்.
7. 189 கோடி செலவில் காவிரி மற்றும் குண்டாறு இணைப்புத் திட்டம்.
8. 369 கோடி செலவில் தாமிரபரணி-கருமேனியாரு-நம்பியாரு இணைக்கும் திட்டம்.
9. ஒழுங்குப்படுத்தப்படாத ஊழியர்களுக்கு என்றே தனி வாரியம் அமைக்கப்பட்டது.
10. ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம்.
11. காமராசர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது.
12. மதிய உணவு திட்டத்தின் கீழ் முட்டை மற்றும் வாழைப்பழம் வாரத்தில் ஒரு நாள் வழங்கும் திட்டம்.
13. பொது நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது.
14. அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டது.
15. செம்மொழி தமிழ் மையம் மைசூரிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது.
16. கும்பாபிஷேகம் மற்றும் கோவில் மாரமத்து பணிகளுக்கு 523 கோடி ஒதுக்கீடு.
17. அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு 277 லட்சம் செலவில் பத்தாயிரம் சைக்கிள்கள் இலவசமாக வழங்கும் திட்டம்.
18. மூவலூர் ரமாமிர்தம் அம்மையார் நிதி உதவித்திட்டத்தின் கீழ் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உதவித் தொகை பத்தாயிரத்திலிருந்து இருபத்தைந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
19. அரசு ஊழியர்களுக்கு புதிய மெடிக்கல் இன்ஸூரன்ஸ் திட்டம்.
20. நலமான தமிழகம் திட்டம் என்ற பெயரில் இதயம், சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் இலவச மருத்துவ முகாம் நடத்து திட்டம்.
21. கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் இலவசமாக மருத்துவ அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் திட்டம்.
22. மத்திய அரசின் ஒத்துழைப்புடன் 108 இலவச ஆம்புலன்ஸ் வசதி.
23. 37 புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்க கையெழுத்து இட்டு 46 ஆயிரம் கோடி முதலீடுகள் பெறப்பட்டது. இதன் மூலமாக இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
24. கல்வி கற்று வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்.
25. கோவை,திருச்சி,மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் டைட்டல் பார்க் ஆரம்பிக்கப்பட்டது.
26. மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை உயர்த்தப்பட்டது.
27. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் படி பத்தாயிரம் கிராமங்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
28. 57 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான சாலையில் பன்னிரெண்டாயிரம் கோடி செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
29. 4,945 கிலோமீட்டர் நீளமான சாலை இருவழிச் சாலையாக மாற்றப்பட்டது.
30. வறண்ட நிலங்கள் மற்றும் சதுப்பு நிலத்திற்கு ஏற்ப நியாயமான வரி நிர்ணயிக்கப்பட்டது.
31. பேருந்துகளுக்கு கட்டணம் உயர்த்தாமல் புதிதாக 300 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன.
32. அருந்ததியர் மக்களுக்கு மூன்று சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
33. அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராகும் திட்டம்.
34. சாதி பாகுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்கும் வகையில் பெரியார் நினைவு சமுத்துவபுரம் கூடுதலாக உருவாக்கப்பட்டது.
35. சென்னை கோட்டூர்புரத்தில் 171 கோடி செலவில் உலகத்தரத்தில் அண்ணா நினைவு நூலகம் கட்டப்பட்டது.
36. ஓமந்தூரார் அரசு எஸ்டேட்டில் புதிய சட்டமன்ற வளாகம் 1200 கோடி செலவில் கட்டப்பட்டது.
37. 100 கோடி செலவில் அடையார் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி பூங்கா கட்டப்பட்டது.
38. சென்னையில் செம்மொழி பூங்கா கட்டப்பட்டது.
39. மிஞ்சூர்,நிமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.
40. ஜப்பான் வங்கி உதவியுடன் 14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம்.
41. ஓகேனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம்.
42. ராமநாதபுரம்-பரமக்குடி கூட்டு குடிநீர் திட்டம் 630 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டது.
43. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் திரும்பி வழங்கப்பட்டன. TESMA மற்றும் ESMA போன்றவை நிறுத்தப்பட்டன.
44. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைபடுத்தப்பட்டன.
45. கலைஞர் வீட்டமைப்பு திட்டத்தின்படி 21 லட்சம் குடிசை வீடுகள் கான்க்ரீட் வீடுகளாக மாற்றப்பட்டன.
46. பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் ஐந்தாயிரமாக உயர்த்தப்பட்டது.
47. கோவையில் முதல் உலக செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது.
48. 119 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டன. 302 கோடி செலவில் நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
49. 13வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி நிலுவையில் இருக்கிற வழக்குகளை விசாரிக்க மாலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் நீதிமன்றம் செயல்பட வைத்தது.
50. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலியில் துவங்கப்பட்டது.
51. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 331 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
52. சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது.
53. அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டணம் நிர்ணயம் செய்ய தனி கமிஷன் அமைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.