Tuesday, December 6, 2011

பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_7

செங்கோவி,

//அரசும் அத்தகைய வசதி படித்தோரை விலக்க, வருமானச் சான்றிதழ் பெறும் முறையை ஏற்கனவே வைத்துள்ளது. //

நீங்கள் சொல்வது வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீட்டிலா?  பள்ளியிலோ / கல்லூரியிலோ இது நடைமுறையில் இருப்பது போல் தெரியவில்லை. 

//உங்கள் சமூகத்துப் பெரியவர்கள் / ஜாதிச் சங்கங்கள் மூலம் ‘இனிமேல் நம்மை விட பொருளாதாரத்தில் தாழ்ந்த பிராமணர் வந்தால், நாம் உடனே போட்டியில் இருந்து விலகி அவர்களுக்கு வழி விடுவோம்’ என்று ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடியுமா? அதற்கு பெருவாரியான வசதி + படித்த பிராணக் குடும்பங்கள் என்ன எதிர்வினையாற்றும் என்று சொல்ல முடியுமா?//

இது எல்லா சமூகங்களிலுமே அவசியமாக ஏற்படவேண்டிய மாற்றம். இதெல்லாம் நடக்கும் என்று நம்புவோம்.  இந்த சிந்தனையைப்பரப்ப நம்மால் ஆன முயற்சிகளை செய்யலாம்.

இங்கே நீங்கள் எழுதிய அனைத்துமே மாற்றுக்கருத்து இல்லாமல் ஏற்கவேண்டியதே.  வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை விட்டுத்தள்ளுங்கள்.  அதை நான் எதிர்க்கவில்லை.  படிப்பு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை இல்லையா?  அதிலேயே விரும்பிய படிப்பை படிக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமா?

ஒருவருக்கு விருப்பம் இல்லாததை வலியத் திணிப்பது எந்த விதத்தில் நியாயம்?  ஒரு ஊரில் ஒரே ஒரு அரசு கல்லூரியும் மற்றும் நிறைய தனியார் கல்லூரிகளும் இருப்பது ஏன்?  எல்லாருமே வேலைக்குப்போக வேண்டும் என்ற நோக்கத்தில் படிப்பதில்லை.  

என்கூட படித்த நிறைய தோழிகள் படிப்பு முடிந்ததும் கல்யாணம் செய்துகொண்டு செட்டிலாவது என்பதில் தெளிவாக இருந்தனர்.  வேலைக்குப்போக வேண்டும் என்ற குறிக்கோள் எல்லாரிடமும் இல்லை.  அப்படி இருக்க வேலைவாய்ப்பில் எல்லாருமே போட்டிக்கு வரப்போவதில்லை.  ஆனால் படிப்பு அப்படியா?  ஒவ்வொருவரும் ஒரு டிகிரியாவது முடிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்தானே?  இப்போது அது அவசிய தேவையாகவும் ஆகிவிட்டதுதானே?

மேலும் எனக்கு அடிக்கடி தோன்றும் ஒரு விஷயம் (இதை நான் வாதத்திற்காக எழுதவில்லை, உங்கள் கருத்தை அறியவே எழுதுகிறேன்), இப்படி தமிழ்நாட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட / சாத்தியப்படாத திறமையுள்ள அநேகம் பேர் (இதில் என் சமூகத்தை குறிப்பிடவில்லை, பொதுவாகவே சொல்கிறேன்) வெளி மாநிலங்களுக்கோ / நாடுகளுக்கோ வேலை தேடி ஓடிவிடுகிறார்களே?

இது தமிழ்நாட்டுக்கு இழப்பு இல்லையா?

அன்புடன்
*******
 -----------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பு நண்பருக்கு,

 //நீங்கள் சொல்வது வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீட்டிலா?  பள்ளியிலோ / கல்லூரியிலோ இது நடைமுறையில் இருப்பது போல் தெரியவில்லை.  //

பள்ளி / கல்லூரிக்கும் அது உண்டு. நான் படித்தபோது (நியாயமான) வருமானச் சான்றிதழ் பெற 30 ரூபாய் லஞ்சம் கேட்டார்கள். இப்போது எவ்வளவோ?

//படிப்பு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை இல்லையா?  அதிலேயே விரும்பிய படிப்பை படிக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமா?  ஒருவருக்கு விருப்பம் இல்லாததை வலியத் திணிப்பது எந்த விதத்தில் நியாயம்? //

உங்கள் கேள்வி நியாயமானது தான். முதலிலேயே சொன்னபடி10% மக்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாவது ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாததாக உள்ளது. நாம் மேலே விவாதித்தபடி, படிப்படியாக இடஒதுக்கீட்டு பயனாளர்கள் குறைக்கப்படுவதே இதற்கான தீர்வு.அதை கட்டாயமாக மாற்ற முடியாது. இயல்பாகவே அந்த மாற்றம் நடக்க வேண்டும்.

//இப்படி தமிழ்நாட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட / சாத்தியப்படாத திறமையுள்ள அநேகம் பேர் (இதில் என் சமூகத்தை குறிப்பிடவில்லை, பொதுவாகவே சொல்கிறேன்) வெளி மாநிலங்களுக்கோ நாடுகளுக்கோ வேலை தேடி ஓடிவிடுகிறார்களே?  இது தமிழ்நாட்டுக்கு இழப்பு இல்லையா? //

தமிழ்நாட்டில் பிரபல ஐ.டி.கம்பெனியில் என் நண்பன் ஒரு அமெரிக்க மருத்துவமனையை மேம்படுத்த புராஜக்ட் செய்துகொண்டிருக்கிறான். நான் சிங்கப்பூரில் ஒரு கப்பல் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்தேன். நாங்கள் கட்டிய கப்பல், நம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக, நம் கோதாவரி படுகையில் பெட்ரோல் எடுக்கிறது. இது தான் தாராளமயமாக்கலுக்குப் பின்னான இன்றைய நிலை. ஒருவன் இங்கேயே இருப்பதால், இந்தியாவை முன்னேற்றுகிறான் என்று அர்த்தம் இல்லை. வெளிநாட்டில் இருப்பதால், இந்தியாவிற்கு பயனில்லை என்றும் அர்த்தம் இல்லை. 

மேலும் இந்தியாவிற்கு அந்நிய முதலீட்டை அளிப்பதில் வெளிநாட்டுக்கு ஓடிப்போன மக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

மேலும், எல்லோருக்கும் இங்கேயே வேலை செய்யும் அளவிற்கு இங்கே வேலை வாய்ப்புகளும் இல்லையே..அது திரும்ப நம்மை 1980க்குத் தானே கொண்டு செல்லும்? அப்படிப் பல திறமைசாலிகள் ஓடியபின்னும் ‘இந்தியா - சீனா’ தான் அடுத்த பொருளாதார சக்திகள் என்றுதானே அந்த ஓடிப்போன திறமையாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாடுகளே சொல்கின்றன?

நான் வேலை பார்த்த வெளிநாடுகளில் என்னுடன் சீனாக்காரன், ஃபிலிப்பைன்ஸ்காரன், இங்கிலாந்துக்காரன் என பல்வேறு நாட்டுக்காரனும் ‘ஓடி வந்து’ வேலை செய்தார்கள்/செய்கிறார்கள். 

அதற்கு என்ன காரணம் சொல்வீர்கள்? அவர்களால் சீனா/ஃபிலிப்பைன்ஸ்/இங்கிலாந்து முன்னேற்றம் தடைபட்டுவிட்டது என்றா? அவர்கள் திறமையை வெளிப்படுத்த அங்கே வாய்ப்பில்லை என்றா?

இந்த ‘ஓட்டத்திற்கு’ அடிப்படைக் காரணம் துட்டு தானெயொழிய ‘திறமையை வெளிப்படுத்தும் அவா’ அல்ல. இங்கேயே மாதம் 2 லட்சம் சம்பளம்..ஒரு வேலையும் செய்ய வேண்டாம்..ப்ளாக் படித்தால் போதும் என்றால், ‘அதெல்லாம் முடியாது..நான் திறமையை வெளிப்படுத்தணும்’ என்று யாராவது ஓடுவார்களா என்ன?

அத்தகைய ஓட்டங்கள் எங்கும் நடப்பது, தவிர்க்க முடியாதது..திரைகடல் ஓடியும் திரவியம் தேடுதல் முற்காலத்தில் இருந்தே நடைபெறும் விஷயம்.

எனவே ஓட விரும்புவோர் ஓடட்டும். அதை அனுமதிப்பதும் ஜனநாயகம் தான்.

அன்புடன்
செங்கோவி

----------------------------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம் செங்கோவி!

//வேலை தேடி ஓடிவிடுகிறார்களே?//

இந்த ஓடிவிடுகிறார்கள் என்பதை நான் சாதாரண அர்த்தத்திலேயே சொன்னேன், நீங்கள் எதுவும் தவறாகப்புரிந்துகொள்ளவில்லையே?  நானும் வெளிநாட்டில் தான் வெளியிலேயே இருக்கிறேன்.  நான் சொன்னது எனக்கும் சேர்த்தே.

உண்மையிலேயே நான் இதை ஒரு கருத்துப் பரிமாறுதலாகத்தான் நினைக்கிறேன்.  முதலிலேயே சொன்னதுபோல் இதை இன்னும் ஆழமாகப்புரிந்து கொள்ளும் முயற்சிதான் இது.

//வெளிநாட்டில் இருப்பதால், இந்தியாவிற்கு பயனில்லை என்றும் அர்த்தம் இல்லை. மேலும் இந்தியாவிற்கு அந்நிய முதலீட்டை அளிப்பதில் வெளிநாட்டுக்கு ஓடிப்போன மக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. //

இது எனக்கும் புரிகிறது.  நான் இழப்பு என்றே குறிப்பிட்டிருந்தேன்.  அவர்களால் பயனில்லை என்று சொல்லவில்லையே.  வெறும் பணம் அதாவது அந்நிய முதலீடு மட்டும் வந்தால் போதுமா?  

உதாரணமாக இப்போது நாசாவில் வேலை பார்ப்பவர்களில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள்.  அதனால் அமெரிக்காதானே அதிக பலன் பெறுகிறது?  எந்த ஒரு துறையிலும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டாமா?  ஐ.டி. துறை நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கிறது, உண்மைதான்.  ஆனால் மற்ற துறைகள்? 

கட்டுமானத்துறையில் சிறந்த பலர் வெளிநாட்டில்தானே வேலை செய்கின்றனர்?  அவர்களை வைத்து இந்தியாவை மேம்படுத்த முடியாதா?  இந்தியா குடிசைகளால் நிரம்பியிருக்கக் காரணம் என்ன?  மருத்துவத்துறையை எடுத்துக்கொண்டால் இப்போது சோனியாவுக்கு மருத்துவம் பார்த்தவர் கூட ஒரு இந்தியர் என்று படித்தேன்.  புற்றுநோய் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதாக.  

ஆனால் இந்தியாவில் ஒரு அரசாங்க ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் டாக்டரின் தரம் உங்களுக்குத் தெரிந்ததுதானே?  நிறைய சிறந்த மருத்துவர்களும் இருக்கிறார்கள்.  நான் எல்லோரையும் சொல்லவில்லை.  ஆனால் பெரும்பான்மையானவர்கள்?  

இந்த அரசாங்க ஆஸ்பத்திரியில் போய்விட்டு ஒருமுறை அவதிப்பட்ட அனுபவத்தை வைத்தே இதை சொல்கிறேன். 

இதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன?

அன்புடன்,
********
----------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பு சகோ,

//வெறும் பணம் அதாவது அந்நிய முதலீடு மட்டும் வந்தால் போதுமா?  உதாரணமாக இப்போது நாசாவில் வேலை பார்ப்பவர்களில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள்.  அதனால் அமெரிக்காதானே அதிக பலன் பெறுகிறது?  எந்த ஒரு துறையிலும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டாமா?  //

வேண்டும் தான்..ஆனால் அமெரிக்கா அளவிற்கு விஞ்சானத்திற்கு செலவளிக்க நாம் இன்னும் தயாராகவில்லை. நமது மக்களின் அடிப்படைத் தேவைகளே தீர்க்கப்படாத நிலையில் அதிக நிதியை விஞ்சானத்திற்கு ஒதுக்குவது சாத்தியமும் அல்ல.

அவ்வாறு இருக்கும்போது, குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யுங்கள் என்று கட்டாயப்படுத்தவும் முடியாது. திறமையை வெளிப்படுத்த வாய்ப்பில்லாததால் மட்டுமே ஓடுவதாக உங்கள் கருத்து தொனித்தது. அதனாலேயே பணம் இந்த விஷயத்தில் முக்கிய காரணி என்று சொன்னேன்.

அப்துல் கலாம் போன்றோர் இங்கிருந்தே தன் திறமையை வெளிப்படுத்திய்வர்கள் தானே..

அவர்கள் ஓடுவதற்குக் காரணம் ஜாதி-இட ஒதுக்கீடு போன்றவற்றை விட அதிக சம்பளம் தர முடியாத, ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்க முடியாத நம் அரசின் நிதிநிலைமையே முக்கியக் காரணம். விண்வெளி ஆராய்ச்சியை விடவும் அடிப்படைக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்வது நம் வளர்ச்சிக்கு அவசியம்.

எனவே தான் சொன்னேன்..ஒடுவதும் தவறல்ல..அரசின் நிலையும் அப்படியே.

இருப்பினும், இவ்வாறு இங்கு படித்தோர் வேறு யாருக்கோ வேலை செய்வது அடிப்படையில் நமக்கு இழப்பு தான்.

நான் ஏற்கனவே சொன்னபடி, நாசா போன்ற இடங்களில் எல்லா நாட்டவருமே வேலை செய்கிறார்கள். எனவே இது இட ஒதுக்கீடு மட்டுமே சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. முழுக்க இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டாலும், ஓடுவதற்கு வேறு காரணங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்படும்.

மேலும், என்ன தான் ஒருவர் 50 வருடம் நாசாவில் இருந்தாலும் அவரை இந்தியன் என்று தானே நாமும் சொல்கிறோம், அமெரிக்கர்களும் சொல்கிறார்கள்.

நம்மால் என்ன சம்பளம்/நிதி ஒதுக்க முடியுமோ, அதைக்கொண்டு முன்னேற வழிவகைகளைப் பார்ப்பதே நல்லது. அதில் வரும்/வந்து கொண்டிருக்கும் முன்னேற்றமே போதுமானது. அமெரிக்கா போல் பொருளாதாரப் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாமல் நாம் தப்பிக்க அதுவே உதவும்.

//இந்த அரசாங்க ஆஸ்பத்திரியில் போய்விட்டு ஒருமுறை அவதிப்பட்ட அனுபவத்தை வைத்தே இதை சொல்கிறேன். //

அரசு அலுவலகங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் போன்றவை சீர்திருத்தப்பட வேண்டியது அவசியம். ஆனால் அதற்கும் நம் விவாதப்பொருளான ‘ஜாதி-வர்ணம்-இட ஒதுக்கீட்டிற்கும்’ நேரடிச் சம்பந்தம் இல்லையே...அது எல்லா ஜாதிகளும் உணரும் பிரச்சினை தானே..

அன்புடன்
செங்கோவி


(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

22 comments:

 1. ஆரோக்கியமான விவாதம்! தொடரட்டும்..

  ReplyDelete
 2. நல்ல விவாதம்தான். தொடருங்கள் . தொடர்கிறேன் இந்த விவாதத்தை.

  ReplyDelete
 3. // இந்த ‘ஓட்டத்திற்கு’ அடிப்படைக் காரணம் துட்டு தானெயொழிய ‘திறமையை வெளிப்படுத்தும் அவா’ அல்ல.வெளிநாட்டு இந்தியர்களுக்கு சொந்த ஊரில் கிடைக்கும மரியாதையும் ஒரு காரணம். என் சொந்த அனுபவம் இது!

  ReplyDelete
 4. என்ஜினியரிங், மெடிக்கல்ஸ் இன்னும் மற்ற மேற்படிப்புகளுக்கு திறமை, கஷ்டப்பட்டு உழைத்து படித்து வாங்கிய மார்க்குகளின் அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்யாமல் வர்ணங்களின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதில் எனக்கும் முரண்பாடுண்டு.

  வேலைவாய்ப்பில் எப்படியிருந்துவிட்டு போகட்டும். நாட்டின் எதிர்கலத் தூண்களான குழந்தைகளுக்கு தான் விரும்பிய படிப்பை படிக்கக்கூட ஜாதிகளை ஒழிக்கவேண்டிய அரசாங்கமே அதை ஒழியவிடாதபடி முன்னுரிமை தந்துஒவ்வொருவருக்கும் ஒரே படிப்பைப படிக்க வித்தியாசமான மார்க் வரையறை வைத்திருப்பது கேலிக்கூத்தாகத்தான் இருக்கிறது.

  ReplyDelete
 5. நானும் தொடர்கிறேன் பாஸ்.... :)

  ReplyDelete
 6. நல்ல பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 7. தொடரட்டும் தொடரட்டும்

  ReplyDelete
 8. அண்ணே, இதென்ன புதுசா இருக்கு?

  ReplyDelete
 9. @செகப்பு சட்ட கொழந்த
  உடுய்யா ஒரு ஆரிய திராவிட யுத்தம் நடத்திடுவோம்!மெரீனா பீச்சுக்கு விள்ளம்புடன் வந்துடுங்க!வடக்கு நோக்கி அம்பு உடும் போராட்டம் நடை பெரும்!

  ReplyDelete
 10. சாரி எத்தனை மாமாங்கதுக்கு இட ஒதுக்கீடு?அதை யாருமே சொல்லவில்லையே!இதில் இருந்தே இது வோட்டு அரசியல் எண்பது திண்ணம்!க்ரீமி லீயரை ஒழிந்கடான்னா அரசியல் வியாதிகள் தங்கள் புள்ளை களுக்கு சீட் கிடைக்காதுன்னு எதிர்க்குறாங்க!போங்கடா வெண்ண வெட்டி அரசியல்வியாதிங்களா!எல்லாம் குள்ளா போட்டா டப்பா தலையன் வி.பி சிங் ஆரம்பித்தது!

  ReplyDelete
 11. தொகுதியில் தனி தொகுதின்னு அறிவிச்ச்கா அதுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் அரசியல் வியாதிகள்!ஆனால் இவர்கள் புல்லை படிக்க இடஒதுக்கீடு வேண்டும்!செம காமெடி!

  ReplyDelete
 12. முடிவு கிடைக்காது!இப்பவே சொல்லிபுட்டேன் ஆமா!

  ReplyDelete
 13. காலை வணக்கம்,பொன் ஜூர்!தொடருங்கள்,விவாதம் கலை கட்டுகிறது!

  ReplyDelete
 14. செங்கோவி said... @Yoga.S.FRசெங்கோவி பையன் ஒரு முடிவோட இருக்காப்பில தான் தெரியுது,ஹி!ஹி!ஹி!// ஐயாவுக்கு எவ்ளோ சந்தோசம்....////ஏன் பேரன் புத்திசாலின்னா மெச்சிக்கப்படாதா?

  ReplyDelete
 15. வணக்கம் நண்பா,
  நலமா?
  விவாதம் ஆரோக்கியமானதாகத் தொடரட்டும்!

  ReplyDelete
 16. இதனால், நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவர்கள் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். மாறுமா?

  "இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

  ReplyDelete
 17. வணக்கம் செங்கோவி ஐயா !
  காத்திரமான விடயத்தை தாங்கியும்
  முக்கியமான விடயங்களையும் அலசிய வாறு விவாதம் தொடர்வதை நானும் தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருக்கின்றேன் விரைவில் மீளவும் வருவேன். .

  ReplyDelete
 18. இந்தபதிவில் என் பதில் விவாதம் ஒன்றும் தேவையிருப்பதாகத் தோன்றவில்லை.

  இட ஒதுகீட்டினை மறு பரீசலனை செய்து பரவலாக எல்லா சாதி ஏழைகளுக்கும் பயன்படும்படி மாற்ற வேண்டும் என்று மட்டும் கூறிக்கொள்கிறேன்.

  ReplyDelete
 19. அதெல்லாம் சரி, நாசாவில் இந்தியர்கள் வேலை பார்ப்பதால் இந்தியா ஒன்றும் குறைந்துபோய்விடாது என்பதே என் கருத்து. யாருக்கு முன்னுரிமை கொடுத்தாலும் வெளிநாடு போகிறவன் போகத்தான் செய்வான். இங்கு வாய்ப்புகள் வாய்த்தாலும், அங்கே உள்ள வசதிக்காக, கட்டமைப்பிற்காக என பல காரணங்கள் எழும்.  நாசாவிற்கு அமெரிக்கா செலவளிக்கும் தொகையும், பள்ளிக்கல்விக்கு அது செலவளிக்கும் தொகை, இந்தியாவில் அத்தொகைகளுக்கான ஒதுக்கீடு இவற்றை நோக்கின் எதுவும் பெரிய இழப்பில்லை.

  இருப்பினும் 69 சதவிகிதம் என்பது முப்பதுக்குள் முடிந்துவிட்டால் பெரிய பிரச்சினை இல்லை. வருடத்திற்கு ஒரு சதவிகிதம் என்ற அளவிலாவது குறைக்க வேண்டும். குறைக்காவிடில் இந்த 69 சதவிகிதம் பெறுகிறவர்களைன் அது முன்னேறவில்லை என்பதன் பகிரங்க ஒப்புதலாகவே அது அமையும்.

  ReplyDelete
 20. //இருப்பினும் 69 சதவிகிதம் என்பது முப்பதுக்குள் முடிந்துவிட்டால் பெரிய பிரச்சினை இல்லை. வருடத்திற்கு ஒரு சதவிகிதம் என்ற அளவிலாவது குறைக்க வேண்டும். குறைக்காவிடில் இந்த 69 சதவிகிதம் பெறுகிறவர்களைன் அது முன்னேறவில்லை என்பதன் பகிரங்க ஒப்புதலாகவே அது அமையும்.//

  நல்ல யோசனைதான். ஓட்டுவங்கி அரசியல் கண்டு கொள்ளாது.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.