Wednesday, December 7, 2011

பிரசாந்த் கல்யாணமும் சில பிற்போக்குச் சிந்தனைகளும்...


பத்திரிக்கைகளில் எட்டாம் பக்கச் செய்தியாக ’பிரசாந்த் திருமணம் செல்லாது - கோர்ட் அறிவிப்பு’ சென்ற வாரம் வெளியானது. பல வருடப் போராட்டம், அவமானத்திற்குப் பின் ஒருவழியாக பிரசாந்த் நல்ல தீர்ப்பைப் பெற்றிருக்கிறார். 2005ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அனைத்துத் தரப்பினரின் வாழ்த்துகளுடன் நடந்த பிரசாந்த்-கிரகலட்சுமி திருமணம், இப்படி ஒரு கொடுமையான முடிவைச் சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

திருமணம் முடிந்து ஹனிமூன் எங்கு போவது என்பதிலேயே பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. சிங்கப்பூர் தான் போக வேண்டும் என்று அடம்பிடித்த கிரகலட்சுமி, அங்கு சென்ற பின் போனில் யாருடனோ மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்க, பிரசாந்த் அதைக் கண்டித்ததில் ஆரம்பித்தது பிரச்சினை. பிரபல நடிகர்-காதல் இளவரசன் என்ற இமேஜ் அப்போது பிரசாந்திற்கு இருந்ததால், பிரச்சினையை வெளியே வாய் விட்டுச் சொல்ல முடியாத நிலைமை.

தொடர்ந்து அவரது நடவடிக்கைகள் சந்தேகம் அளிப்பதாய் இருக்கவே, பிரசாந்த் அவரைக் கண்டிக்க வேண்டியதாய்ப் போய்விட்டது. அதற்கான பிரதிபலனாய் ‘வரதட்சணைக் கொடுமை’ என பிரசாந்த் மேல் மட்டுமல்லாமல் அவரது தாய், தங்கை, தந்தை ஆகியோர் மேலும் புகார் கொடுத்தார் கிரகலட்சுமி. நிம்மதியாய் நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல், வழக்குக்காக அலைய வேண்டியதானது. அப்போது பத்திரிக்கைகளும் கண்டபடி எழுதித் தள்ளின. அதைப் படித்த பலரும் ‘அப்பவும் நடிகர்-இவரும் நடிகர்..ஆனாலும் பணத்தாசையால் இப்படி வரதட்சணை கேட்டு கொடுமை செய்திருக்கிறார்களே’ என்றே நினைத்தனர்.கொடுமையான ஆணாதிக்கவாதியாக பிரசாந்தும் தியாகராஜனும் சித்தரிக்கப்பட்டனர்.

அதன்பிறகும் பிரசாந்த் தரப்பில் இருந்து சமாதான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் பயன் இல்லை. அதன்பிறகு தீர விசாரித்தபிறகே ‘கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர்’ என்ற அதிர்ச்சிகரமான உண்மை வெளியே வந்தது. ஏற்கனவே பதிவுத் திருமணம் செய்திருப்பதால், பிரசாந்துடன் நடந்த திருமணம் சட்டப்படி செல்லாது. ஆனாலும் கிரகலட்சுமி உயர்நீதி மன்றம் முதல் சுப்ரீம்கோர்ட் வரை இழுத்தடித்ததில் இப்போது தான் கோர்ட்டே மனமிரங்கி பிரசாந்த்தை அந்தப் பெண்ணிடம் இருந்து விடுதலை செய்துள்ளது.

பிரசாந்த்தின் (முன்னாள்) மனைவி(?) யின் துணிச்சல் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு மாநில முதல்வரின் தலைமையில் நடக்கும் திருமணத்தில், தைரியமாக ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தும், அதை மறைத்து மணமேடையில் உட்கார்ந்தார் என்றால்.........உண்மையிலேயே தைரியலட்சுமி தான்.

செய்யாத தவறுக்காக கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக கோர்ட் கேஸ் என்று அலைந்த பிரசாந்த்தை, மேலும் புண்படுத்தும்விதமாக மீடியாக்களும் அவரைக் குற்றவாளி போல் விரட்டி விரட்டி போட்டொ/ வீடியோ எடுத்து அவமானப்படுத்தின. இப்போது அவர் நிரபராதி என்று கோர்ட் சொல்லிவிட்டாலும், இத்தனை நாள் பிரசாந்த்தின் குடும்பம் பட்ட அவமானத்திற்கும், அதனால் அவர்கள் அடைந்த வேதனைக்கும் என்ன பதில்? இத்தனை நாள் பெரும்பாலான மக்களும் அவரை தவறான மனிதராக நினைத்தற்குக் காரணம் தான் என்ன?

ஒரு பெண் அழுதுகொண்டே ஏதாவது கூறினால், அது உண்மையாகத்தான் இருக்கும் என்ற அறியாமை கலந்த அறிவுஜீவித்தனமே அதற்கான காரணம். பிரசாந்த் வழக்கு விசாரணை பற்றிய செய்திகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அதற்குக் காரணம் என் சொந்த வாழ்வில் நான் பார்த்த ஒரு மனிதரின் கதை தான்...

என் சின்னம்மா இரு குழந்தைகளை தவிக்கவிட்டு, திடீரென இறந்தததால், சித்தப்பா பலரின் வற்புறுத்தலுக்குப் பின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள என்று ஒரு பெண்ணை மணந்துகொண்டார். அது பெண் அல்ல பேய் என்று மணந்த கொஞ்சநாளிலேயே தெரிந்து போனது. ‘நான் ஏன் இந்தச் சனியன்களைப் பார்க்க வேண்டும்?’ என்று அவர் குழந்தைகளைக் காட்டிக் கேட்க, அவர் கோபப்பட ரசாபாசம் ஆனது. இரண்டு வருடப் போராட்ட வாழ்க்கைக்குப் பின் அவர் அந்தப் பெண்ணை முறைப்படி கோர்ட்டில் விவாகரத்து செய்தார். அந்தப் பெண்ணும் மனமொத்து விவாகரத்தும், பணமும் வாங்கிக்கொண்டார்.

அதன்பிறகு தான் கொடுமை ஆரம்பித்தது. நினைத்தால் ஏதாவது போலீஸ் ஸ்டேசனுக்குப் போவார் அந்தப் பெண். ‘என் புருசனும் அவன் அம்மா-அக்காக்கள்-அய்யா எல்லாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தறாங்க’ என்று கம்ப்ளைண்ட் செய்வார். போலீஸும் உடபே வந்து மொத்தக்குடும்பத்தையும் ஸ்டேசனுக்குக் கொண்டுபோய் விடும். லேடி போலீஸ் ஸ்டேசன் என்றால் சித்தப்பாவிற்கும், அவர் குடும்பத்திற்கும் அடி உறுதி. 

.’வரதட்சனையா கேட்கிறீங்க..காசு வேணும்னா அக்கா-தங்கச்சிகளை வச்சு **** பண்ணுலே..” என்ற ரேஞ்சில் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பார்கள். பின்னாலேயே நாங்கள் யாராவது விவாகரத்துத் தீர்ப்பை எடுத்துக்கொண்டு ஓடுவோம்.

அதைப் பார்க்கக்கூட போலீசார் விரும்ப மாட்டார்கள். கெஞ்சிக்கூத்தாடி, அவர்களிடம் விவரம் சொன்னபின் ‘அப்படியா..ஏன்மா இப்படிக் கம்ப்ளைண்ட் பண்ணே?” என்றால் ‘கோர்ட் சொன்னாலும் அவர் தான் என் புருசன்’ என்பார் அந்தப் பெண்மணி. ‘அப்போ சேர்ந்து வாழறியா’ என்றால் ‘முடியாது’ என்பார். முடிவில் போலீசார் ‘மறை கழன்ற கேஸ்’ என்று நினைத்து அந்தப் பெண்ணை அனுப்பி வைத்து விடுவார்கள்.

ஒருமுறை இருக்கன்குடிக்கு குடும்பத்தோடு சாமி அவர் சாமி கும்பிடப் போக, பின்னாலேயே இந்தப் பெண்மணி போய் ‘என்னை என் புருசனும், அவர் குடும்பமும் அடித்துவிட்டார்கள்’ என்று கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டார். போலீசாரும் இவர்களைப் பிடித்து, அடித்து உள்ளே உட்கார வைத்துவிட்டார்கள். பிறகு கோவில்பட்டியில் இருந்து தீர்ப்பு நகலைக் கொண்டு சென்ற பிறகே, அவர்களை ரிலீஸ் செய்தார்கள்.

வெவ்வேறு போலீஸ் ஸ்டேசன்களில், வெவ்வேறு காரணம் சொல்லி கம்ப்ளைண்ட் கொடுப்பார். 

இது ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல..17 வருடங்களாக நடந்தது. அவரும் அந்தக் குடும்பமும் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. சித்தப்பா இறந்தபிறகே இந்தத் தொல்லை தீர்ந்தது.

’வரதட்சணைப் புகார்களில் 80% பொய்ப்புகார்கள் தான்’ என்பதை நம் சுப்ரீம் கோர்ட்டே ஒத்துக்கொண்டது. எனவே வரதட்சணைப் புகார் வந்தால், மணமகன் குடும்பத்தாரை கைது செய்யக்கூடாது என்று சமீபத்தில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.

வாசகர்களில் ஆரம்பித்து போலீசார் வரை பெண் என்றால் யோசிக்காமல் ‘இரங்குவதற்கு’ என்ன காரணம் என்று பார்த்தால்....

ஏழைங்க எல்லாம் நல்லவங்க..பணக்காரங்க எல்லாம் கெட்டவங்க.

கிராமத்து மக்கள் எல்லாரும் நல்லவங்க..பட்டணத்து ஆட்கள் எல்லாம் கெட்டவங்க..

- என்பது போன்ற கெட்டிப்பட்ட சிந்தனைகள் தான் காரணம் என்று தோன்றுகிறது. அத்தகைய முன்முடிவுகள் எத்தனை அபத்தமானவை என்று பலமுறை நம் கண் முன்னே நிரூபிக்கப்பட்டாலும், அத்தகைய சிந்தனைகளை நாம் மாற்றிக்கொள்வதே இல்லை.

பிரசாந்த் மேல் தொடுக்கப்பட்ட வழக்கு பொய்யானது என்று அவரது தங்கை பெயரையும் வழக்கில் சேர்த்தபோதே புரிந்துவிட்டது. அப்போது கோவையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.

மேலே எழுதியிருக்கும் எல்லாவற்றையும் உடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிடம் சொன்னபோது, ‘இது பிற்போக்குச் சிந்தனை..பெண்கள் நல்லவர்கள்..ஆண்கள் அயோக்கியர்கள்..ஆ..ஊ’ என்று ஒரு பெண் குதித்தார். கூடவே சில பெண்ணியவாதிகளான ஆண்களும் குதித்தார்கள். புகாரால் பாதிக்கப்படும் மணமகன் வீட்டுப் பெண்கள் பற்றி, கொஞ்சமும் இவர்கள் கவலைப்படுவதே இல்லை..அந்த பெண்ணியவாத ரகசியமும் நமக்குப் புரிவதே இல்லை.

ஆதிக்கம் என்பது இனத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், பணத்தின் பெயரால் மட்டுமல்ல பால்(செக்ஸ்)-ன் பெயராலோ நடத்தப்படும்போதும், அதைத் தயங்காமல் கண்டிக்க வேண்டும் என்பதே நம் கொள்கை. ஏன் கண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கு மேலே சொன்ன உதாரணங்களே போதுமானவை.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

42 comments:

 1. மாலை,(இரவு?)வணக்கம்!பொன் சுவார்!நியாயமான ஆதங்கம்.உண்மையில் இந்தப்பிரச்சினையின் அடி நுனி தெரியாதிருந்தது,தெரிந்து கொள்ள விரும்பியிருக்கவில்லை என்றே சொல்லலாம்!ஏதோ,எல்லா ஆண்களும்/நடிகர்களும் ஒரே மாதிரியல்ல என்று தெரிகிறது!

  ReplyDelete
 2. நிறையவே வாழ்க்கையில் அனுபவங்களை,சிறு வயதிலிருந்தே பெற்றுக் கொண்ட பக்குவம் எல்லா வகையிலும் வெளித் தெரிகிறது,உங்களிடம்!இது வெறும் மேம்போக்குப் பாராட்டல்ல!உளமார சொல்கிறேன்,பெருமையாக இருக்கிறது,வாழ்க!!!!

  ReplyDelete
 3. கல்யாண தகறாரு எல்லாம் சரிதான். பிரஷாந்த் பற்றி நான் வேறு விதமா கேள்விபட்டேன் ஆண் பிரோஸ் என்று

  ReplyDelete
 4. //ஒரு பெண் அழுதுகொண்டே ஏதாவது கூறினால், அது உண்மையாகத்தான் இருக்கும் என்ற அறியாமை கலந்த அறிவுஜீவித்தனமே அதற்கான காரணம்.//

  நிதர்சனமான உண்மை நண்பரே..

  எனது நண்பர் ஒருவரது வாழ்விலும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் இதே போன்றதொரு சம்பவம் நடந்தது.தினம் தினம் அவர் சொல்லும்போதும் நாம் கேட்கும் போதே நமக்கு பெரும் கவலையாய் இருக்கும்.

  நண்பரின் மனைவி ஏற்கனவே ஒருவரை காதலித்து விட்டு,அதை மறைத்து எனது நண்பரை திருமணம் செய்து கொண்டார்.

  திருமணம் முடிந்த பிறகு இந்த விஷயம் அவருக்கு தெரிய வந்தது.நண்பரும் பெருந்தன்மையாய் ஏற்றுக்கொண்டார்.எனினும் நன்பரின் மனைவி காதலை கைவிடமுடியாமல் தொடர்ந்து கொண்டேதான் இருந்தார்.

  இது ஊரில் பரவ ஆரம்பித்தது.ஊராரின் அவமான பேச்சுக்களை தாங்க முடியாமல் கடைசியில் திருமணமான 8 மாதங்களில் நண்பர் தற்கொலைமுடிவையும் தேடிக்கொண்டார்.நல்ல வேளை குழந்தைகள் ஏதுமில்லை.

  எனினும் நண்பரின் பெற்றோர்கள் இன்றளவும் படும் வேதனை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.

  ஆனால் நண்பரின் மனைவியோ மனைவியோ பழைய காதலனுடன் இன்று இல்வாழ்க்கையில்..

  என்ன கொடுமை என்றே தெரியவில்லை.சமூகம் எதனை நோக்கி செல்கிறது என்றும் புரியவில்லை.

  இருந்த ஒரே மகனையும் இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்பதே இன்னும் புரியவில்லை..

  அவர்களூக்கு இன்றளவும் நானும் ஓர் மகனாய் இருப்பதை தவிர..

  ReplyDelete
 5. உண்மையில் பதிவை படித்துவிட்டு கண் கலங்குவதை தவிர்க்கமுடியவில்லை நண்பரே..

  ReplyDelete
 6. //மணமகன் வீட்டுப் பெண்கள் பற்றி, கொஞ்சமும் இவர்கள் கவலைப்படுவதே இல்லை..அந்த பெண்ணியவாத ரகசியமும் நமக்குப் புரிவதே இல்லை.

  மிகவும் உண்மை.

  ReplyDelete
 7. அண்ணே இவர் விடயத்தில் நான் கண்டது ஒன்றைத் தான்...

  அளவுக்கதிகமாக தந்தைமாரின் கட்டுப்பாட்டுக்கெல்லாம் தலையசைத்ததன் விளைவே இது...

  உதாரணத்திற்கு ஒரு நடிகை இவருடன் இரண்டாவது படம் நடிப்பதென்றாலே எவ்வளவு தடைகள விதிக்கப்பட்டது...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)

  நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record

  சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்

  ReplyDelete
 8. ஆணாதிக்கம் நிலவுகிறது.பெண்கள் அடக்கப்படுகிறார்கள் என்பது சொல்லப்பட்டாலும் இது போன்ற நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்கிறது நீங்கள் சொல்லியிருப்பது போல கிராமத்தான் எல்லாம் நல்லவன்,டவுன்ல இருக்கவன் எல்லாம் கெட்டவன் ,போன்ற சிந்தனைகள் இது போன்ற விசயங்களையும் மாற்றுக்கொனத்தில் பார்த்து யார் பக்கம் நியாயம் என்பதையும் குழப்பிவிடுகிறது.

  கார் சைக்கிளில் மோதிவிட்டால் சைக்கிள் ஓட்டியவர் மேல் தவறு இருந்தாலும் கார் ஒட்டியவருக்கு வசவு நிச்சயம்.அதைப்போலத்தான் இருக்கிறது.

  ReplyDelete
 9. இறுதில ஒரு நல்ல நடிகர் மிஸ் ஆனதுதான் மிச்சம்...

  ReplyDelete
 10. முன்ன எல்லாம் பொண்ண பெத்த பெற்றோர் தன் பெண்ணை நல்ல ஒரு பையனுக்கு கட்டி வைக்கனும்ன்னு விரும்புவாங்களாம்... ஆனா இப்போல்லாம் பையன பெத்த பெற்றோர் தன் பையனை நல்ல ஒரு பொண்ணுக்கு கட்டி வைக்கனும்ன்னு விரும்புறாங்களாம்...
  தக்காளி சுட்டே புடுவேன்...

  ReplyDelete
 11. அப்படியே வரிக்கு வரி ஆதரிக்கிறேன்..

  ReplyDelete
 12. பதிவோடு முழுதும் ஒத்துப் போகிறேன்.

  ReplyDelete
 13. சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு விவாத நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது, கடைசிவரை மகளிர் அமைப்பினர் பெண்கள் பொய்ப் புகார் கொடுக்கிறார்கள் என்றோ ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றோ ஒத்துக்கொள்ளவே இல்லை. திரும்பத் திரும்ப பெண் புகார் கொடுத்தால் ஒரு காவல் அதிகாரி வந்து விசாரிப்பார், புகாரில் உண்மை இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறிக் கொண்டே இருந்தனர்.

  கள்ளக்காதலுக்காக பெற்ற பிள்ளையைக்கூட கொல்லும் பெண்கள் பெருகிவிட்ட காலகட்டத்தில் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் இத்தகையோர் பேச்சைக் கேட்டு அரசு சட்டங்கள் இயற்றுவது கேள்விக்குரியது!

  ReplyDelete
 14. மாப்பிள்ளை பார்க்கும் போது பெண்ணைப் பெற்றோர் வைக்கும் கோரிக்கைகளும் மிகவும் கவலையளிக்கக் கூடியதாக உள்ளன.

  ReplyDelete
 15. இவர்கள் பெண்ணியம் சம உரிமை என்றால் ஆணை எதிர்ப்பதே என்று தவறான போக்கில் செல்வதால் விவாகரத்துகள் பெருகி வருகின்றன. பெண்ணியம் பற்றிய தவறான புரிதலால் வாழ்க்கையைத் தொலைத்தோர் பலர்.

  ReplyDelete
 16. பல விடயங்களிலும் பகுத்தறியாமல் முடிவுகளை எடுக்கிறோம் அல்லது அடுத்தவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். திருத்திக்கொள்ளவேண்டிய விடயத்தை பதிவிட்டிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 17. பிரசாந்த் பாவம்.... பெண் சொன்னால் இந்த உலகம் எதையும் நம்ம்பி விடுகிறது நம்பும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

  ReplyDelete
 18. மாம்ஸ், இப்படியும் சில பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். டார்ச்சர் செய்ய இப்படி ஒரு வழியை தேர்ந்தெடுக்கிறார்கள்.... சட்டமும் பெண்களுக்கு சாதகமா இருப்பதால் நல்ல நியாயங்கள் இப்படித்தான் போராடி வெற்றியை பெறும்.


  வாசிக்க:
  சின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் டிப்ஸ் கச்சேரி

  ReplyDelete
 19. நல்ல பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 20. Please read it one more 498a story.http://ipc498a-victim.blogspot.com

  ReplyDelete
 21. வரிக்குவரி போட்டுத் தாக்கிட்டீங்க! முழுவதும் ஒத்துப்போகிறேன்!

  அந்த சித்தப்பாவின் கதை கொடுமை! இப்படியெல்லாம் கூட நடக்குமா?
  என்ன கொடுமை அண்ணே!

  பெண்கள் மட்டுமே நல்லவர்கள் எனக்கூறும் பெண்ணியல் வாதிகளை விடுங்க!

  அவங்களுக்கு கண்மூடி சப்போர்ட் பண்ணிட்டு கூவுவாங்க பாருங்க நம்ம ஆம்புளைங்க அவங்கள பாத்தாத்தான் ரொம்ப காமெடியா இருக்கும்!

  இது எதுக்கு இம்புட்டு கஷ்டப்படுது? எதுக்கு ட்ரை பண்ணுது? அந்தப் பொண்ணுங்களோ இதுங்களை எடுபுடியாத்தான் மதிப்பாயங்க! இவனுக ஏதோ நினப்புல ஓவரா பொங்குவானுக!

  ReplyDelete
 22. வணக்கம் பாஸ்,
  பெண்களைப் பொறுத்த வரை தமது கண்ணீரை ஆயுதமாக்கி நீலிக் கண்ணீர் வடித்து மற்றவர்களை நம்ப வைக்க வேண்டும் எனும் எண்ணம் தான் காணப்படுகின்றது,.
  இந்த நிலமையினைச் சட்ட ரீதியான அணுகு முறைகளின் போது நீதிமன்றங்கள் புரிந்து கொண்டாலே இவ்வாறான இழுபறி நிலைகள் வராது.

  பாவம் பிரசாந்((((;

  உங்கள் சிறிய தந்தையரின் விடயமும் மனதை நெருடச் செய்கிறது.
  பெண்கள் வடிவில் இராட்சசிகள் இருப்பார்கள் என்பதற்கு இவ் இரு சம்பவங்களுமே சிறந்த உதாரண்ம்.

  ReplyDelete
 23. வணக்கம் சார்.. நல்ல பதிவு.... கல்யாண கால கட்டத்தில் அவருடன் நடித்துக் கொண்டு இருந்த நடிகைக்கும் , இவருக்கும் காதல் ஏற்பட்டு , அவசர அவசரமாக இந்த கல்யாணத்தை நடத்தியதாக கேள்வி. அந்த நடிகை, நிச்சயம் இந்த அளவுக்கு கேவலமாக இருந்து இருக்க வாய்ப்பு இல்லை. இப்போதாவது , இவருக்கு ஒரு நல்ல காலம் பொறந்தது என்று நினைக்க வேண்டியதுதான். அந்த சித்தப்பா விஷயம், ரொம்பவே பரிதாபம். பதினேழு வருஷம் எல்லாம் டூ மச். ஆம்பிளையோ / பொம்பளையா - ரொம்ப பொறுமையா இருந்தா இப்படித்தான்... நாலு தடவை பொறுத்தமா ... அஞ்சாவது தடவை , கையை காலை முறிச்சு - ஜென்மத்துக்கும் அவங்க மறக்காம பண்ணிடனும்... தப்பு செஞ்சவங்க ஆணா, பெண்ணா யாரா இருந்தா என்ன? கூட சொந்தம், பந்தம் எல்லாம் எதுக்கு இருக்கோம்.... மிதிச்சு, துவைச்சு இருக்க வேண்டாமா..?

  ReplyDelete
 24. நேற்றே கமெண்டு போட்டிருக்க வேண்டும்! வேலைப்பழுவால் முடியவில்லை! மிக மிக தெளிவானதும், தீர்க்கமானதுமான பதிவு! நாம் பல சமூக விஷயங்களில் மாத்தியோசிக்க வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன்! இன்றைய உங்களின் பதிவும் மிகவும் அவசியமான ஒரு சமூக மாற்றத்தினை வலியுறுத்துகிறது!

  எனக்கு மிகவும் பிடித்த பதிவு!

  ReplyDelete
 25. காலம் கடந்தாவது பிரசாத்திற்கு நியாயம் கிடைத்திருக்கே இனியாவது அவரது வாழ்க்கை பிரகாசமாக இருக்கட்டும்

  ReplyDelete
 26. http://tasmacdreams.blogspot.com/2011/12/blog-post.html

  ReplyDelete
 27. ///ஏழைங்க எல்லாம் நல்லவங்க..பணக்காரங்க எல்லாம் கெட்டவங்க.

  கிராமத்து மக்கள் எல்லாரும் நல்லவங்க..பட்டணத்து ஆட்கள் எல்லாம் கெட்டவங்க..////
  சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் ...இதையும் சேர்த்துங்க ...

  ReplyDelete
 28. பிரசாந்த்தை பிடித்த கிரகம் விட்டதே.எவ்வளவு பணம் இருந்தும் சென்னையிலேயே இருந்த ஒரு பெண்ணிடம் இப்படி ஏமாந்து இருக்கிறார்களே.இதை தான் கிரகம் என்பது.

  ReplyDelete
 29. ஒரு முறை ஒரு வக்கீல் என்னிடம் சொன்னார்”courts are always sympathetic towards women." சமூகமும் கூடத்தான்!நல்ல வேளையாகத் தகுந்த ஆதாரங்களிருந்ததால் பிரசாந்த் தப்பித்தார்.

  ReplyDelete
 30. உண்மைதான் செங்கோவி, ஏனோ பெண்கள் ஒரு பெண்ணுக்காக இரங்குவது போல ஆண் சக ஆணுக்காக இரங்குவதில்லை. நம்மை பெண்ணடிமை சமுதாயமாகவே நாம் பார்த்துப் பார்த்து ஆண்களுக்கு குற்ற உணர்ச்சியும், பரிதாபமும் அதிகமாக இருக்கிறதோ.

  ReplyDelete
 31. வணக்கம் மாப்பிள..!
  இப்படியான பொய் புகாரால் இனி உண்மையாகவே பாதிக்கப்படுவோரின் நிலைதான் கேள்விக்குறி.. 

  பதிவு மற்றுமோர் கோணத்தை அலசி இருக்கின்றது.. 

  ReplyDelete
 32. பிரசாந்த் ஒழுக்கம் மிக்கவர் என்பதை அவருடன் பழகியவர்களுக்கு தெரியும்!முன்பு ஒரு முறை ரசிகை ஒருவர் பிரசாந்தை திருமணம் செய்ய அவர் வீட்டுக்கு முன் அந்த பெண் உண்ணாவிரதம் இருந்தார்,அந்த பெண்னை முன்பின் பிரசாந் பார்த்தது கூட இல்லை!ஆனால் அந்த பெண் மிரட்டினார் கற்பழித்து விட்டதாக புகார் கொடுப்பேன் என்று,அந்த பெண்னை புரியவைத்து சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார்கள் பிரசாந்த் குடும்பத்தினர்,பல பெண்கள் காதல் கடிதங்களை அனுப்பினாலும் ஒழுக்கமாக வாழ்ந்தவர் பிரசாந் இப்படியே விட்டால் பிரச்சனையாகிவிடும் என்று கருதிய அவர்களின் பெற்றோர் அவசரமாக பெண் பார்ததில் 350 ஜாதகத்தில் இந்த கழிசடையின் ஜாதகம் பொருந்திவந்தது,ஆனால் மனவாழ்க்கை பொருந்திவரவில்லை,இதிலிருந்து மீண்டு புத்துணர்வோடு அவர் வாழ்வு சிறக்க வாழ்த்துவோம்

  ReplyDelete
 33. வித்தியாசமான கோணத்தில் ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள்! நல்ல பதிவு!
  உங்க சித்தப்பா ரொம்ப பாவம்..

  ReplyDelete
 34. விரிவான விளக்கமான அலசல்!
  பகிர்விற்கு நன்றி நண்பரே!
  இதையும் படிக்கலாமே :
  "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

  ReplyDelete
 35. I guess, people forgot "Manmathan Leelaigal"! Like Mrs. Mathan, several woman don't go to police. My friend studied MSc at IIT, Ph. D at Wayne state university and post doc at UMASS. He is currently a scientist at a national lab in tamil nadu. He told his wife to be in her parent's place for couple of months, so that he can relax and work in the lab. After she left to her parent's place, he vacated the house and moved to a different house and live with his parents. To reunite, he wants a document, wherein she must state that "she is responsible for her death". Unfortunatly, I can't type everything. Sure, there are few parshanth's, but the number of suffering women eclipse the number of Prashanths. - Krishnamoorthy

  ReplyDelete
 36. இவர் திரைப்படத்துறையில் இருப்பதால் வெளிச்சமாகியுள்ளது இவரது விசயம்.. நம் நாட்டில் பல்ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதுபோல் பொய்வழக்கில்

  சிக்கி சின்னாபின்னமாகின்றது... பொய்வழக்கில் எடுத்துவுடனேயே கைது சிலசமயம் கூலிக்கேத்த மாதிரி மிருகத்தனமாக தாக்குவது, சிறைக்கு அனுப்புவது

  இதுபோல் ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் நம் நாட்டில் நடந்தேறிக்ககொன்றிருக்கின்றது..

  இதில் அதிகமாக நாசமாவது இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் வாழ்கைதான்

  இதுபோல் ஒரு சம்பவம் கிழ்கண்ட வலைபூவில்

  http://ipc498a-victim.blogspot.com

  ReplyDelete
 37. //வரதட்சணைப் புகார்களில் 80% பொய்ப்புகார்கள் தான்’ என்பதை நம் சுப்ரீம் கோர்ட்டே ஒத்துக்கொண்டது. எனவே வரதட்சணைப் புகார் வந்தால், மணமகன் குடும்பத்தாரை கைது செய்யக்கூடாது என்று சமீபத்தில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.//


  சட்டம் இயற்றியது உண்​மை ஆனால் இ​தையாரும் க​டைபிடிப்பது கி​டையாது இதற்குப்பிறகும் ​கைது
  படலம் அரங்​கேறிக்​கொண்டிருக்கின்றது..

  இது​போல் நாச​வே​லைகள் என்று ஒழியு​மொ நம் நாட்டில்!!

  ​வேத​னையுடன்,

  498ஏ என்னும் புற்று​நோய் வந்தவன்

  ReplyDelete
 38. உண்மையை விளக்கும் பதிவு.

  அந்த சித்தப்பாவின் இளம் குழந்தகைளின் நிலையை நினைத்துப் பாருங்கள். 2 வயதில் தாய் போய்விட்டாள். பின் 17 வருடம் சின்னம்மா கொடுமை. பின் தந்தை போய்விட்டார்....

  பெண்களின் பொய் கேஸ்களால் ஆண்கள் மட்டுமல்ல குழந்தைகளும் குடும்பங்களும் பாழாகின்றன

  இந்த ஆண்டில் அப்பன் பெயரே தெரிய வேண்டாம் என்று அரசும் அவசரமாய் சட்டமியற்றியவண்ணம் இருக்கிறது

  மொத்தத்தில் இது சமூகம் ஆண்களுக்கு செய்யும் அனீதி. ஆண்களுக்கு ஆதரவாய் சமூகம் கொதித்தால் போலீஸ் என்ன செய்துவிடுவார்கள் ???

  சமூகம் பெண்களை சரிவர புரிந்துகொள்ளாதவரையில் ஆண்களுக்கு ...ஏன் குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கு வாழ்வில்லை

  பி கு : சொல்லற சும்மா இருந்துவிடாதீர்கள், உங்கள் சொற்கள் பலமானவை !!!

  ReplyDelete
 39. பெண்கள் மட்டுமே நல்லவர்கள் எனக்கூறும் பெண்ணியல் வாதிகளை விடுங்க!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.