Tuesday, June 12, 2012

முருக வேட்டை_13


அப்போது சரவணனின் மொபைல் அடித்தது. எடுத்துப் பார்த்தான். கவிதாவின் நம்பர். 

“ஹலோ” 

“குட் மார்னிங் சரவணன்..” என்றது பாண்டியனின் குரல்.

"பா...பாண்டியன்..நீ என்ன பண்றே, அங்கே?”

“சாரி மேன்..நான் கொடுத்த டயத்தையெல்லாம் வேஸ்ட் ஆக்கிட்டே..!” 

சரவணன் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் “என்ன சொல்றே?’ என்றான்.

“ஹா..ஹா..உன் பொண்டாட்டிக்கு பர்த் டே கிஃப்ட்டுன்னு ஒரு டைம்-பாம் கொடுத்திருக்கேன்.அது சரியா 10:24க்கு வெடிக்கும். முடிஞ்சா காப்பாத்திக்க..பை!” என்று சொன்னதுடன் எதிர்முனை கட் ஆனது.

சரவணன் மணியைப் பார்த்தான். பத்து மணி..இன்னும் 24 நிமிடங்கள்..கிண்டி டூ எம் எம் டிஏ காலனி..ட்ராஃபிக் இல்லையென்றால் போய் விடலாம். எழுந்து லிஃப்ட்டை நோக்கி ஓடினான் சரவணன்.

MARS....

M - முத்துராமன் என்றால் A எப்படி கவிதா வரும்?

அச்சு!

மை காட்..நான் கவிதாவை அச்சு என்று அழைப்பேன் என்று ஆபீசில் அகிலாவிற்கும் பாண்டியனுக்கும் மட்டுமே தெரியும். ச்சே...இதை எப்படிக் கவனிக்காமல் போனோம்? இன்று அச்சுக்குப் பிறந்த நாள் வேறு..அதையும் மறந்து தொலைத்தோம்..

பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தான் சரவணன். பைக் காசி தியேட்டர் தாண்டிப் பறந்தது. அசோக் பில்லர் சிக்னலில் டிராஃபிக் ஜாம் ஆகியிருந்தது.

‘என்ன செய்வது..கவிதா கர்ப்பிணி வேறு..திடீரென்று எதுவும் சொல்லவும் முடியாது’ யோசித்தபடியே மொபைலை எடுத்து கவிதாவுக்கு ஃபோன் செய்தான்.

“அச்சு..?” என்றான்.

“சொல்லுங்க..இப்போத் தான் பாண்டியன் வந்திட்டுப் போறார்..ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம வீட்டுக்கு அண்ணன் வந்திட்டார்” என்றபடி சிரித்தாள் கவிதா.

“எ..எதுக்கு வந்தான்?”

“எதுக்கா? என் பர்த் டே உங்களைத் தவிர எல்லாருக்கும் ஞாபகம் இருக்கு..வந்து ஒரு கிஃப்ட் கொடுத்துட்டுப் போறார்”

“என்ன கிஃப்ட்?”

“இன்னும் பிரிக்கலை” என்றாள்.

“கொஞ்ச நேரம் முன்ன உன் மொபைல்ல இருந்து பேசினான்”

“ஆமா, வந்ததை உங்ககிட்ட சொல்லணும்னார்..அவர் மொபைல்ல பேலன்ஸ் இல்லையாம்..அதான் என் மொபைல்ல இருந்து பேசினார்.”

“அப்போ அவன் பேசும்போது கூட இருந்தியா?”

“இல்லையே..கிச்சன்ல காஃபி போட்டுக்கிட்டிருந்தேன்..ஏன்?”

“இல்லை..சும்மா கேட்டேன்.அச்சு, நான் சொல்றதைக் கேளு..நான் இப்போ அசோக் பில்லர்கிட்ட நிக்குறேன்..இன்னும் அஞ்சே நிமிசத்துல அங்கே வந்திடுவேன்..நாம அர்ஜெண்டா ஒரு இடத்துக்குப் போறோம். அதனால உடனே நீ கீழே இறங்கி வந்திடு..ரமணாஸ் கார்னருக்கு வந்திரு”

“நான் எங்கேயும் வர மாட்டேன்..காலையில ஞாபகம் இல்லியாம்..இப்போ வெளில கூட்டிட்டுப் போறாராம்..ஒழுங்கா திரும்பி ஆபீசுக்குப் போங்க”

”ஏ லூசு..நான் ஒன்னும் உன் பர்த் டேக்கு வெளில கூப்பிடலை”

“அப்புறம் எதுக்காம்?’

சரவணன் முழித்தான். 

‘என்ன சொல்லி இவளை கீழே இறக்குவது?’ 

சட்டென்று அகிலாவின் அப்பா விஸ்வநாதன் ஞாபகம் வந்தார்.

“அகிலா மேம் அப்பா இருக்கிறாரில்லை..அவர் உன்னைப் பார்க்க வர்றேன்னார்..உனக்கு சஸ்பென்சா இருக்கட்டும்னு சொல்ல வேண்டாம்னார்..அகிலா மேம்க்குகூடத் தெரியாது..அவரால ஸ்டெப்ஸ் ஏற முடியாது இல்லியா?..அதனால அவர் கார்ல ரமணாஸ்கிட்ட வெயிட் பண்ணச் சொல்லியிருக்கேன்..நான் வரவும் மூணு பேரும் வெளில போறோம்..ஓகே?”

“ஓ...அப்போச் சரி”

“உடனே கீழ வா..வீட்டுக்கிட்ட நிக்க வேண்டாம்..நேரா ரமணாஸ் வந்திரு”

“சரி..சரி”

நிமதிப் பெருமூச்சுடன் கால்-ஐ கட் செய்தான் சரவணன். 

‘செந்தில் பாண்டியன்...என் கண்ணுல விரலை விட்டு ஆட்டறே, இல்லே? வர்றேன்..திரும்பி வந்து உன்னை கவனிச்சுக்கிறேன்’ 

டிராஃபிக் ஒரு வழியாய் கிளியர் ஆனது. சரவணன் பைக்கை விரட்டினான்.

வல்லவன் ஹோட்டல் வழியே எம்.எம்.டி.ஏ.காலனிக்குள் நுழைந்தான். ரமணாஸ் ஹோட்டலை நெருங்கும்போது கவிதா காத்திருப்பது தெரிந்தது. மணியைப் பார்த்தான். 

10:20

’நல்லவேளை கவிதா வெளியே வந்துவிட்டாள்’ என்று சந்தோசப்பட்டபடியே, பைக்கை ஹோட்டல் அருகே நிறுத்தினான்.

நிறுத்திவிட்டு கவிதாவைப் பார்த்தவன் அதிர்ந்தான் சரவணன்.

கையில் ஒரு கிஃப்ட் பார்சலுடன் நின்றுகொண்டிருந்தாள் கவிதா.

“ஹே..என்ன இது?”

“இதாங்க பாண்டியன் கொடுத்த கிஃப்ட்”

(வேட்டை...தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

  1. இதுக்கப்புறம் உள்ளத்தை அள்ளித்தாவுல வந்த மாதிரி சீன் வர போகுதா?

    ReplyDelete
  2. வணக்கம் செங்கோவி!நல்ல சஸ்பென்ஸ்!ப.ரா.வே மூளையைக் கசக்குறாருன்னா??????????????

    ReplyDelete
  3. வணக்கம் ப.ரா.சார்!!!///பன்னிக்குட்டி ராம்சாமி said... இதுக்கப்புறம் "உள்ளத்தை அள்ளித்தா"வுல வந்த மாதிரி சீன் வர போகுதா?///அதென்னது?

    ReplyDelete
  4. //பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]
    இதுக்கப்புறம் உள்ளத்தை அள்ளித்தாவுல வந்த மாதிரி சீன் வர போகுதா?//
    மாம்ஸ் பழைய ஞாபகத்துக்கு போயிட்டார்! :-)

    ReplyDelete
  5. ஒன்னுமே புரியல! என்னா நடக்குது? ஏண்ணே... ஏன்...எதுக்கு?

    ReplyDelete
  6. 'முருகவேட்டை' எட்டாவது தொடர் வரைக்கும் சரவணனுக்கும், எங்களுக்கும் யோசிக்க நேரம் இருந்தது! ஆனா அதுக்கப்புறம்...

    ReplyDelete
  7. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]
    இதுக்கப்புறம் உள்ளத்தை அள்ளித்தாவுல வந்த மாதிரி சீன் வர போகுதா?///

    அண்ணே, அப்படித்தான் நடக்கப்போகுதுன்னு நெனக்கிறேன்... செங்கோவி சஸ்பென்ஸ் மேல சஸ்பென்ஸ் வைக்கிறார். ஆனா ஒரு சஸ்பென்ஸ்சும் க்ளோஸ் ஆக மாட்டிங்குது.

    ReplyDelete
  8. செங்கோவி மாம்ஸ்,
    விறுவிறு கூட்டிட்டே போறீங்க. பண்ணிக்குட்டி, ஜீ சொன்னது போல உள்ளத்தை அள்ளித்தா காமெடியா மட்டும் ஆக்கிறாதிங்க

    ReplyDelete
  9. அடுத்த குண்டா தொடருங்க பார்ப்போம்!

    ReplyDelete
  10. என்னய்யா அவசரம்? இன்னும் 20 பாகம் போகட்டும்..சொல்றேன்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.