Monday, October 21, 2013

டபுள் ஆக்ட்டிங்கும் டமில் சினிமாவும்-1

Facebook-ல் படிக்க: https://www.facebook.com/sengovipage

சினிமா ஊடகத்தின் வெற்றிக்கு முக்கியக்காரணம், திரையரங்க இருளும் ரசிகன் படத்தில் வரும் கேரக்டருடன் அடையாளப்படுத்திக்கொள்ளலும் தான். நிஜ வாழ்க்கையில் அட்டு ஃபிகரை கரெக்ட் பண்ண முடியாதவன்கூட, திரையரங்க இருளில் ஐஸ்வர்யா ராயுடன் பரவசத்தில் ஆழ்ந்து விட முடியும். நிஜத்தில் தன் தொகுதி கவுன்சிலரைக்கூட எதிர்த்துப் பேசாதவன், பதிவர் போல்(!) திரையரங்க இருளில் புரட்சிக்காரனாக வாழ்ந்து விட முடியும். இயல், இசை, நாடகம் என அனைத்தையும் உள்ளடக்கிய சினிமாவில் வந்த இரட்டை வேடங்களைப் பற்றிப் பேசுவோம், வாருங்கள்.

நாடகத்தையே காமிரா வைத்துப் படம்பிடித்து சினிமா என்று நம்பிய ஆரம்ப கட்ட அபத்தங்களைத் தாண்டிய பின், மக்களை வசீகரிக்க புதிய உத்திகள் களமிறங்கின. அவற்றில் ஒன்று தான் இந்த இரட்டை வேட சினிமாக்கள். பொதுவாகவே ஒரு ஹீரோவுடனே, அடையாளப்படுத்தலால் திருப்தியடையும் ரசிகனுக்கு இரட்டை கொண்டாட்டமாக அமைந்தது இந்த இரட்டை வேடப்படங்கள்.


இரட்டை வேடங்கள் கான்செப்ட்டானது மிகவும் சிம்பிளானது. கதாநாயகர்கள் இரு வேறுபட்ட குண நலன் கொண்டவர்கள், நல்லவன் -கெட்டவன், ஏழை-பணக்காரன், வீரன் - கோழை, போலீஸ்-திருடன், மந்திரா-கௌசல்யா என ஏதாவது ஒரு முரண்பாடு இருக்கும். வெவ்வேறு இடங்களில் முற்றிலும் முரண்பட்ட சூழலில் வாழ்வார்கள். 

இருவருக்குமே அல்லது குறைந்த பட்சம் ஒருவருக்கு அங்கே சில பிரச்சினைகள் இருக்கும். அதை அவர்களின் இயல்பின் காரணமாக தீர்க்க இயலாது. உருவ ஒற்றுமை காரணமாக இடம் மாறுவார்கள். பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள். முடிவில் அந்த அதிபயங்கர உண்மையை (ஆம், இருவரும் ட்வின்ஸ்!) அனைவரும் உணர, எல்லாம் சுபம்.

தமிழில் இரட்டை வேடப்படங்களின் காலகட்டம் 1940-ல் ஆரம்பிக்கிறது. பி.யு.சின்னப்பா நடித்த ‘உத்தம புத்திரன்’ தான் அது. எதிர்பார்த்தபடியே மாபெரும் வெற்றி பெற்றது. அதே படம் 18 ஆண்டுகள் கழித்து, நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் அதே பெயரில் (ஹா..யாரடி நீ மோகினி!) ரீ-மேக் செய்யப்பட்டது. முதல் படத்தில் டி.எஸ்.பாலையா செய்த வில்லன் ரோலை நம்பியார் இதில் செய்தார். இன்றளவும் ரசிக்கப்படும் படமாக உத்தம புத்திரன் நிற்கிறது. (சின்னப்பாவின் படமும், இங்கே குறிப்பிடப்படும் பல படங்களும் பிறமொழியிலிருந்து ரீமேக் செய்யப்பட்டவை தான்.)

அதே நம்பியார், ஏறக்குறைய அதே மாமன்+வில்லன் ரோலில், அதே கான்செப்ட்டில் எம்.ஜி.ஆருடன் ஒரு மெகா ஹிட் கொடுத்தார். அது தான் எம்.ஜி.ஆரை அரசியலில் உச்சத்திற்குக் கொண்டு சென்ற ‘எங்க வீட்டுப் பிள்ளை’. இரட்டை வேடப் படங்களின் உச்சம் என்று எங்க வீட்டுப் பிள்ளையைச் சொல்லலாம். தீவிர சிவாஜி ரசிகனான நானே அந்தப் படத்தை 15 தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறேன். இப்போதும் ஏதாவது டிவியில் ஓடினால், தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து விடுவேன். மிக கச்சிதமான திரைக்கதையுடன், எப்போதும் புன்முறுவலை வரவைக்கும் காட்சி+வசன அமைப்புடன் உருவாக்கப்பட்ட படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை’.

தமிழ் சினிமாவில் இரட்டை வேடம் மூலம் அதிக ஹிட் கொடுத்தவராக ஒருவேளை எம்.ஜி.ஆரே இருக்கலாம். ஏனென்றால் நீரும் நெருப்பும், குடியிருந்த கோவில், நினைத்ததை முடிப்பவன், மாட்டுக்கார வேலம் என வெவ்வேறு கேரக்டர்கள் மற்றும் சூழ்நிலையுடன் அதே கான்செப்ட்டில் இந்த படங்கள் வெளிவந்து வெற்றிவாகை சூடின.

அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக இரட்டை வேடம், மூன்று வேடங்களுக்குத் தாவியது. இதில் மூன்றாவது வேடம், அப்பா கேரக்டர் தான். ஆரம்ப கட்சியிலேயே வந்து மண்டையைப் போடுபவராக அல்லது சிக்கலில் மாட்டுபவராகவும், அதற்கு பழி வாங்கும் பிள்ளைகள் கேரக்டராகவும் உருவாக்கப்பட்டன. இத்தகைய படங்களின் உச்சம் சிவாஜியின் திரிசூலம் தான். வெள்ளி விழாக் கண்ட அந்தப் படம். ரஜினி-கமல் என இரண்டு இளம்புயல்களுக்கு ஈடு கொடுத்து, சிவாஜி கொடுத்த மசாலா ஹிட் அது. அதன்பிறகு அந்த மூன்று வேட கான்செப்ட்டும், தமிழ் சினிமாவில் சக்கைபோடு போட்டது. 


ஆனால் ஒரே மாதிரியான இரட்டை வேடங்கள் + இடம் மாறுதல் கான்செப்ட், மக்களுக்கு சலிப்பைக் கொடுத்ததா, அதை தமிழ் சினிமா எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெற்றது?.......நாளைய பதிவில் பேசுவோம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

  1. 'தெய்வ மகன்' திரிசூலத்துக்கு முன்பா,பின்பா?

    ReplyDelete
  2. 'தெய்வ மகன்' திரிசூலத்துக்கு முன்பா,பின்பா?

    ReplyDelete
  3. @Subramaniam Yogarasa

    தெய்வ மகன் முந்தையது தான்..ஆனால் கமர்சியல் ஹிட்டில் திரிசூலம் ஒரு மைல்கல்.

    ReplyDelete
  4. @Subramaniam Yogarasa பலே பாண்டியாவும் இருக்கிறது....!

    ReplyDelete
  5. இரட்டை வேடப் பழைய படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது...!

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. ஓ.............நீங்க அப்புடி வரீங்களா?வசூலில் ட்ரிபிள் சூலம் முன்னுக்குத்தான்!

    ReplyDelete
  8. // திண்டுக்கல் தனபாலன் said...
    இரட்டை வேடப் பழைய படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது...!//

    உண்மை தான் தனபாலன்!

    ReplyDelete
  9. நீங்கள் குறிப்பிட்ட mgr நடித்த அந்தப் படங்களைப் பார்த்தால்,குறிப்பாக எங்கள் வீட்டுப் பிள்ளை படம் பார்க்கவே முடியவில்லை. எப்படித்தான் அந்தப் படமெல்லாம் ஓடுச்சோ. அதைவிடக் கடியான படம் என்றால் நீரும் நெருப்பும். பாக்கவே சகிக்க வில்லை.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. மந்திரா-கௌசல்யா

    ingaeyum irrattai thaan vithiyasamnu ninaikiraen.. but athu enna ??

    ReplyDelete
  12. @Vadivelan Palanichamy அதான் கரெக்ட்டா நினைச்சுட்டீங்களே!

    ReplyDelete
  13. எங்க வீட்டுப் பிள்ளை மாதிரியான்னு தெரியல..ஒருவர் தைரியசாலி, ஒருவர் பயந்தாங்குளி என்ற கான்செப்டில ஒருபடம் நாங்க தூர்தர்ஷனில் அடிக்கடி பார்த்தது 'வாணி ராணி' ன்னு! :-)

    ReplyDelete
  14. @ஜீ... ஆமா ஜீ..வாணிஸ்ரீ-ன்னு நினைக்கேன்...அதுவும் ஹிட் தான்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.