அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
நல்ல சினிமாவுக்கு அடிப்படையாக இருப்பது திரைக்கதை. அந்த திரைக்கதைக்கு அடிப்படையாக இருக்கும் சில விஷயங்கள் பற்றியும், திரைக்கதை வடிவம் பற்றியும் இந்தத் தொடரில் பேசலாம் என்று இருக்கிறேன். ஒரு சினிமா ரசிகன் என்ற நிலையிலேயே இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கிறேன். இதுவரை நான் பார்த்த படங்கள் மற்றும் படித்த புத்தகங்களின் மூலம் நான் புரிந்துகொண்டிருப்பதையே இங்கே சொல்லப் போகிறேன்.
தமிழில் ஏற்கனவே நம் ‘வாத்தியார்’ சுஜாதா, திரைக்கதை எழுதுவது எப்படி என்று எழுதியிருக்கிறார். பதிவுலக நண்பர் கருந்தேள் ராஜேஸும் ‘திரைக்கதை எழுதுவது இப்படி’ என்று எழுதிக்கொண்டு வருகிறார். எனவே புதிதாக இன்னொரு தொடருக்கான அவசியம் என்ன என்ற நியாயமான சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஆங்கிலத்தில் திரைக்கதை பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன; இன்னும் எழுதப்பட்டு வருகின்றன.
அதனோடு ஒப்பிடும்போது தமிழில் திரைக்கதை பற்றி வந்த புத்தகங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே நான் மட்டுமல்ல, சினிமா மேல் ஆர்வம் உள்ள அனைவருமே இந்த டாபிக் பற்றி எழுதினாலும் தப்பில்லை என்றே நினைக்கின்றேன். மேலும் அதிகளவு இத்தகைய புத்தகங்கள் வருவது, தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மேம்பெடுத்தும். அது திரைக்கதையின் முக்கியத்துவத்தை சினிமாத்துறையினருக்கு தொடர்ந்து நினைவூட்ட உதவும் என்று நம்புகிறேன்.
'புக் படிச்சா, ஸ்க்ரீன்ப்ளே எழுதிடலாமா?’ என்று ஏளனப்பேச்சுக்கள் வரும் என்றாலும், பெரும்பாலான ரசிகர்களுக்கு திரைக்கதை பற்றிய விழிப்புணர்வு சென்று சேரும்வரை, எம்மைப் போன்ற அரைகுறைகள் இந்த டாபிக்கைப் பற்றி விரிவாகப் பேசித்தான் ஆக வேண்டியுள்ளது.
நான் அமெரிக்காவில் இருந்தபோது, தியேட்டருக்குச் செல்லாமலேயே இருந்தேன். (கஞ்சத்தனம் தான்!) அப்போது என் ஆபீஸ் நண்பர் மைக், என்னை ஹல்க் படத்திற்கு அழைத்துச் சென்றார். அந்தப் படம் எனக்குப் பிடிக்கவில்லை. சூப்பர் மேன் தவிர்த்து பிற சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்கள் எனக்கு பிடிப்பதில்லை.
‘ஒரே மாதிரி இருக்கு’ என்று நான் ஹல்க் பற்றி கம்ப்ளைண்ட் செய்தபோது தான், மைக் ‘இவையெல்லாம் ஒரே ஸ்க்ரீப்ளே டெப்ம்ளேட்டில் வருபவை..ஆக்ட்டு. இன்சைட்டிங் இன்சிடிடெண்ட்.........’ என்று என்னென்னவோ சொன்னார். ‘எனக்கு இதெல்லாம் தெரியாது சாமீ..எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஹாலிவுட் பாலா தான்’ என்று நான் கெஞ்சியபோது ‘அப்போ ப்ளேக் ஸ்னிடர்ல இருந்து ஆரம்பி..அது ஈஸியா இருக்கும்.புரியும்’ என்றார். Blake Snyder-ல் ஆரம்பித்தது, இன்னும் போய்க்கொண்டே இருக்கிறது. அது இப்படி பதிவுலகில் உபயோகப்படும் என்று கனவிலும் நினைக்கவில்லை, நன்றி மைக்.
இயக்குநர் ஸ்ரீதர் |
நான் பல புத்தகங்களை இதுவரை படித்து, குறித்து வைத்திருக்கும் நோட்ஸில் இருந்தே, இந்த தொடரை எழுதப் போகிறேன். கலைஞர், பாலச்சந்தர், ஸ்ரீதர் மற்றும் பாக்கியராஜ் என பல ஜாம்பவான்கள் திரைக்கதையில் தனி முத்திரை பதித்திருக்கிறார்கள். அவர்களின் படங்களில் இருந்து பொருத்தமான உதாரணங்களைத் தர முயல்கிறேன். எனவே இந்த தொடரை ஒரு சினிமா ரசிகனின் பெர்னல் நோட்ஸ் என்றே நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். தொடரில் அவ்வப்போதும், தொடரின் இறுதியிலும் அந்த புத்தகங்களின் பெயர் தரப்படும்.
இந்தத் தொடர் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்படுகின்றது.
- திரைக்கதையின் அடிப்படைக்கூறுகள், ஒரு கதையை திரைக்கதையாக டெவலப் செய்யும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றி முதல் பாகத்தில் பேசுவோம். கதையின் கரு, குறிக்கோள், முரண்பாடுகள் போன்ற விஷயங்களை உதாரணங்களுடன் பார்ப்போம்.
- இரண்டாம் பாகத்தில் பொதுவான திரைக்கதையின் வடிவங்கள் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். பின்னர் Save the Cat புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறை பற்றி விரிவாகப் பார்ப்போம். குறிப்பாக அவரது Beat sheet கான்செப்ட்டை விளக்கும் பக்கங்கள், நேரடியாக இந்த தொடரில் உபயோகப்படுத்தப்படும். அவர்களிடம் இதற்கு அனுமதி வாங்கியிருக்கிறேன் என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
- மூன்று அங்க வடிவம்(3 Act Structure) என்பது ஹாலிவுட் சினிமா தாண்டி, ஐரோப்பிய-ஆசிய சினிமாக்களில் பெரிதாக செல்லுபடியாகவில்லை. அது ஏன், அதை எப்படி தமிழ் சினிமாவிற்கு மேட்ச் பண்ணுவது, தமிழ் சினிமா எந்த வகையான வடிவத்தில் வெற்றியடைகிறது என்று அலசுவோம்.
இயக்குநர் மகேந்திரன் |
குறிப்பாக, தமிழ் சினிமா உதாரணங்களை மட்டுமே வைத்து, இந்தத் தொடரை எழுதுவதாக எண்ணம். ஒவ்வொரு ஞாயிறு இரவும் இந்தத் தொடர் வெளியிடப்படும். இதுவரை எனது எல்லா முயற்சிகளுக்கும் ஆதரவளித்தது போன்றே, இதற்கும் ஆதரவை வாரி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இந்தத் தொடரில் தரமான வணிக சினிமாவுக்கு திரைக்கதை எழுதுவது எப்படி என்று இணைந்தே கற்றுக்கொள்வோம், வாருங்கள்.
முருகனருள் முன்னிற்கட்டும்!
(தொடரும்)
தொடருக்கு வாழ்த்துக்கள் செங்கோவி அண்ணா...
ReplyDeleteஅதிகம் கேப் விடாம எழுதுங்க. வெயிட் பண்ணிட்டிருக்கிறோம் :)
@Mathuran Raveendran நன்றி மதுரன்..பயப்படாதீங்க, உலக சினிமா மாதிரி கேப் விழாது :).
ReplyDeleteநீங்கள் எழுதும் தொடரை முதன்முறையாய் படிக்கப் போகிறேன் என்ற ஆர்வத்தில்.. வாழ்த்துகள்
ReplyDeleteவாத்தியாருடையது படித்துவிட்டேன், கருதேள் உடையது எனது அண்ணன் தொடர்ந்து படித்து வருகிறான், ஏதாவது முக்கியமான பகுதி என்றால் படிக்க சொல்வான்...
ReplyDeleteஇதனை புத்தகமாக்கும் இ-புக் ஆக்கும் முயற்சி எண்ணம் இருந்தால் அந்த பாணியிலேயே எழுதுங்கள்.. பதிவுக்கான டெம்ப்ள்ட் வேண்டாம், பின்னர் புத்தகமாக்கும் போது சிரமாமாயிருக்கும். எந்த வகையில் சொல்கிறேன் என்றால், உதா கொடுக்கும் போது இந்த சுட்டியை கிளிக்குங்கள் என்றால் புத்தகத்தில் எந்த சுட்டியை க்ளிக்க முடியும்...
இந்த பதிவில் குறிபிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டால் தொடருக்கு சம்மந்தமில்லாத பதிவை குறிபிட்டாலும் சிக்கல்..
நீங்கள் ஆசான், உங்களுக்கு எல்லாம் தெரியும் என்றாலும் சும்மா சொன்னேன்..
தொடர் வெற்றியடைய வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
ReplyDeleteவாழ்த்துக்கள் செங்காவி ! (சுஜாதா) வாத்தியார் போலவே சில சினிமா உதாரணங்களையும் போடுங்க....
ReplyDeleteஇந்த தொடருக்கு ஏன்யா ------கடைசி வரியை துணைக்கு கூப்பிடுற ?????//
ReplyDeleteஉம்ம மேல் எங்களுக்கு நம்பிக்கை உலக அளவு இருக்குயா !!!!!
அந்த வரி உமக்கு ஓகே .......அம்புட்டு தன்னம்பிக்கை இல்லாத ஆளா உம்மை நாங்கள் நினைக்கவில்லை
Mmmmmmmmmmmm
ReplyDelete//சீனு said...
ReplyDeleteஇதனை புத்தகமாக்கும் இ-புக் ஆக்கும் முயற்சி எண்ணம் இருந்தால் அந்த பாணியிலேயே எழுதுங்கள்.. பதிவுக்கான டெம்ப்ள்ட் வேண்டாம், பின்னர் புத்தகமாக்கும் போது சிரமாமாயிருக்கும். //
நன்றி சீனு..நீங்கள் சொல்வதை கவனத்தில் கொள்கிறேன்.
// மதுரை அழகு said...
ReplyDeleteதொடர் வெற்றியடைய வாழ்த்துக்கள் நண்பரே!
Blogger Manimaran said...
ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
விமல் ராஜ் said...
வாழ்த்துக்கள் செங்காவி ! (சுஜாதா) வாத்தியார் போலவே சில சினிமா உதாரணங்களையும் போடுங்க....//
நன்றி நண்பர்களே..உதாரணங்கள் மூலம் விளக்குவதாகவே ஐடியா!
@நாய் நக்ஸ் ஹி..ஹி.
ReplyDeleteநன்று,நன்று!ஆரம்பியுங்கள்.நாமும் கொஞ்சம் தெரிந்து கொள்கிறோம்!
ReplyDeleteதொடர் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteதொட்ரங்க முதலில் வாந்தி/ஹீ முதல் பின்னூட்டம் போடாவிட்டாலும் தனிம்ரம் தொடரில் !
ReplyDeleteஅதிகம் கேப் விடாம எழுதுங்க. வெயிட் பண்ணிட்டிருக்கிறோம் :)//ஹீ விஜய் படம் போலவா/ஹீ
ReplyDeleteஅதிகம் கேப் விடாம எழுதுங்க. வெயிட் பண்ணிட்டிருக்கிறோம் :)//ஹீ இவரு பதிவாளரா ஐ விஜய் படம் வந்தால் இவர் வருவார்!ஹீ போடாங்கோ கத்தி/ஹீ
ReplyDeleteஅரைகுறையோ + நிறைகுறையோ - எந்த எண்ணங்களும் இல்லாது, அவசரப்படாமல் பொறுமையாக தொகுத்து, தொடர் வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDelete
ReplyDeleteதிரைக்கதைக்கு தேவையான காட்சிகளை எப்படி உருவாக்குவது?
ஒரு காட்சியை எப்படி தொடங்க வேண்டும் முடியும் போது எப்படி சுவராஸ்யமாக இருக்கவேண்டும் என்பதை உதாரணத்துடன் சொல்லுங்கள்!
இத்தொடர் வெற்றி வாழ்த்துகள் செங்கோவி. 2015 சென்னை புத்தக கண்காட்சியில் புத்தகமாக ரிலீஸ் ஆனால் சிறப்பாக இருக்கும்.
ReplyDelete
ReplyDelete//இத்தொடர் வெற்றி வாழ்த்துகள் செங்கோவி. 2015 சென்னை புத்தக கண்காட்சியில் புத்தகமாக ரிலீஸ் ஆனால் சிறப்பாக இருக்கும்//
அடுத்த லிச்சிக்கு அடிபோட்ட அண்ணன் மெட்ராசை வாழ்த்த வயதிருப்பதால் வாழ்த்துகிறோம் :-)
ஓஹோ இன்னைக்கு முன்னுரை மட்டும்தானா! வாத்தியாரோட புத்தகத்த இன்னுமே வாசிக்கல, கருந்தேள் டெக்னிகல் அதிகமோன்னு தோணுனதால வாசிக்கல!
ReplyDeleteஆக, ரொம்ப சிம்பிளா நமக்கும் புரியற மாதிரி நமக்கு தெரிஞ்ச உதாரணங்களுடன் "திரைகதை சூட்சுமங்களை" பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் உள்ளேன்..
வாழ்த்துகள்... உங்கள் சினிமா விமர்சனம் சூப்பர்...
ReplyDeleteஎந்த சப்ஜெக்டை எடுத்தாலும் அதில் முத்திரை பதிக்கும் இன்டலெக்சுவல் நீ. இதிலும் கலக்க சக நண்பனாக வாழ்த்துக்கள்யா. உம்மைப்போல ஒருவருக்கு நான் நண்பன் என்பதே எனக்கு கர்வம்தான்யா.
ReplyDeleteஉங்களின் முந்தைய தொடர்கள் போல இந்த தொடரும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்! ஆவலுடன் படிக்க காத்திருக்கிறேன்! நன்றி!
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....
ReplyDeleteபின்னூட்டமிட்டு ஆதரவளித்த நண்பர்களின் அன்புக்கு நன்றி. இது என் பொறுப்பைக் கூட்டுகிறது!
ReplyDeleteநன்றி செங்கோவி... என்போன்ற ஆரம்ப கால படைப்பாளிகளுக்கு மிகவும் உதவும்.....
ReplyDeleteநன்றி செங்கோவி... என்போன்ற ஆரம்ப கால படைப்பாளிகளுக்கு மிகவும் உதவும்.....
ReplyDeleteஆவலுடன் எதிர்பார்க்கிறேன் !
ReplyDeleteவாழ்த்துக்கள். உங்கள் தனித்துவமான ஸ்டைலிலேயே எழுதுங்கள். ஸ்டார்ட் ம்யூசிக்... :))
ReplyDeleteமிக்க நன்றி செங்கொவி அண்ணே...
ReplyDeleteவாரத்துக்கு இரண்டு போட்டால் இன்னும் பிரயோசனமாக இருக்கும் என்பது எனது எண்ணம்
இரண்டு பதிவு கொஞ்சம் கஷ்டம் சுதா..அப்படி நான் முயற்சித்த தொடர்கள் எல்லாம் பாதியில் நின்னிடுச்சு!!
ReplyDeleteசெங்கோவி அடுத்த கட்ட நகர்வை நோக்கி பயணிப்பதை பெருமிதத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறேன். திரைப்படங்களை பார்க்கும் எனது கண்ணோட்டத்தில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த போகும் தொடரை ஆர்வத்ததுடன் வாசிக்க காத்திருக்கிறேன்..... !
ReplyDelete@பன்னிக்குட்டி ராம்சாமி நன்றிண்ணே.
ReplyDeleteமன்மதன் லீலைகள் சூப்பர் அண்ணா
ReplyDelete