தமிழ்நாட்டில் அறிவுஜீவி என்று பெயர் வாங்க ஏற்கனவே இரண்டு வழிகள் உண்டு. முதலாவது எல்லாராலும் மதிக்கப்படும் யாராவது ஒரு தலைவரின் பலவீனமான ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அவரை மோசமான மனிதர்-மக்களுக்கு எந்தவகையிலும் பயன்படாத தலைவர் என்று பேசுவது. இதன்மூலம் ‘அட முட்டாப்பசங்களா..உங்களுக்குத் தெரியாததை நான் கண்டுபிடிச்சிட்டேன் பார்த்தீங்களா?’ என்று நிறுவுவது.
இதற்குக் கொஞ்சம் மூளையும் வாதத்திறமையும் தேவைப்படும் என்பதால் இருக்கும் இரண்டாவது வழி ‘சாமியெல்லாம் ஒன்னும் கிடையாது..எங்கே இருக்கு காமி’ என்று நாத்திகம் பேசிவிடுவது. இணையத்தின் புண்ணியத்தில் அறிவுஜீவி என்று பெயர் எடுக்க மூன்றாவது வழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது, எந்தப் படத்தைப் பார்த்தாலும் ‘காப்பி...காப்பி’ என்று கத்துவது!
சில படைப்பாளிகள்(?) ஏதாவது ஒரு வேற்றுமொழிப்படத்தை அப்படியே சீன் பை சீன் அல்லது 50%க்கும் அதிகமான காட்சிகளை அப்படியே ரீமேக் செய்துவிடுகிறார்கள். அந்த படங்களை காப்பி என்று சொல்வதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை தான். ஆனால் ரோஜா படத்தை Sun Flower(1970) படத்தின் காப்பி என்று தூற்றும்போதும், ஹே ராம் படத்தை Barabbas (1961)-ன் காப்பி என்று சொல்லும்போதும், நமக்கு சொல்பவர்களின் நோக்கத்தின்மீது சந்தேகம் வருகிறது.
ரோஜா படம் சத்தியவான் சாவித்திரி கேரக்டரை காஷ்மீர் பிரச்சினையின் ப்ளாட்டில் வைத்துப் பின்னப்பட்ட கதை. ஹே ராம் படம், நாமறிந்த இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையையும் காந்தி கொலையையும் மிக்ஸ் செய்து சொல்லப்பட்ட ஒரு வரலாற்றுக் காவியம். சாவித்திரி-காஷ்மீர்-இந்தியா-பாகிஸ்தான் என எல்லாமே நம் மண் சார்ந்த விஷயமாக இருக்கும்போது, எங்கே இருந்து வருகின்றன Sun Flower-ம் Barabbaas-ம்?
அதை அறிவதற்கு முன் நாம் உலக சினிமா வரிசையில் போற்றப்படும் இரு படங்களைப் பற்றிப் பார்ப்போம். முதல் படம், ஃப்ரெஞ்ச் திரைப்பட மேதை Robert Bresson இயக்கத்தில் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான A Man Escaped (1956). இரண்டாம் உலகப்போரின்போது நாஜிக்களால் பிடிக்கப்பட்டு சிறைவைக்கப்படும் ஹீரோ, எப்படி அந்த ஜெயிலில் இருந்து தப்பிக்கிறான் என்பதே கதை. உள்ளே இருப்பவர்கள் மற்றும் வெளியே இருப்பவர்களின் உதவியுடன், சிறுசிறு பொருட்களை பலநாட்களாகச் சேகரிக்கிறான் ஹீரோ. அதன்மூலம் எப்படி தப்பிக்கிறான் என்று படம் விளக்குகிறது.
அடுத்து நாம் பார்க்க வேண்டிய படம் The Shawshank Redemption (1994). மனைவியையும் அவளது கள்ளக்காதலனையும் கொன்ற குற்றத்திற்காக சிறைக்கு வரும் ஹீரோ, எப்படி அந்த ஜெயிலில் இருந்து தப்பிக்கிறான் என்பதே கதை. உள்ளே இருப்பவர்கள் மற்றும் வெளியே இருப்பவர்களின் உதவியுடன், சிறுசிறு பொருட்களை பலநாட்களாகச் சேகரிக்கிறான் ஹீரோ. அதன்மூலம் எப்படி தப்பிக்கிறான் என்று படம் விளக்குகிறது!! இரு படங்களின் அடிப்படைக்கதை ஒன்று தான். கதை சொல்வதில் மட்டும் ஒரு வித்தியாசம் உள்ளது. முதல் படம், சஸ்பென்ஸ் வகையைச் சேர்ந்தது. ஹீரோ தப்பிக்க திட்டமிடுவதும், அதற்கு ஏற்படும் தடைகளும் பார்வையாளனுக்கு தெளிவாக சொல்லப்படுகின்றன.
இரண்டாவது படம், சர்ப்ரைஸ் வகையைச் சார்ந்தது. ஹீரோ தப்பிக்கத்தான் சிறுசிறு பொருட்களாக சேகரிக்கிறான் என்று நமக்கு கடைசிவரை தெரிவதேயில்லை. ஹீரோவின் நண்பரின் பார்வையிலேயே படம் நகர்கிறது. முதல் படம், ஹீரோவின் பார்வையிலேயே நகர்கிறது. ஒரு சஸ்பென்ஸ் படத்தையும், ஒரு சர்ப்ரைஸ் படத்தையும் சுவாரஸ்யமாக்குவது எப்படி என்று அறிய இந்தப் படங்களின் திரைக்கதை உதவும். அதிருக்கட்டும், இப்போ மேட்டருக்கு வருவோம்.
இப்போது ஒரு பேச்சுக்கு இரண்டாவது படத்தை நமது கமலஹாசன் ’தப்பிச்சோம்ல’ என்ற பெயரில் எடுத்திருந்தார் என்று வைத்துக்கொள்வோம். நமது சினிமா அறிவுஜீவிகள் எப்படி கழுவி ஊற்றியிருப்பார்கள் என்று நினைத்துப்பாருங்கள்:
- ஒரிஜினல் படத்தில் (A Man Escaped) இன்னொரு சிறைவாசியின் மனைவி அவனை ஏமாற்றி விட்டதாக வருகிறது. அதையே கமல் தப்பிச்சோம்ல படத்தில் ஹீரோவின் மனைவி ஏமாற்றியதாக வைத்திருக்கிறார்
- ஒரிஜினல் படத்தில் தன்னை விட வயதான பக்கத்து செல் ஆளிடம் ஹீரோ நட்பு கொள்வதாக வருகிறது. அதையே கமல் ’ரெட்’ கேரக்டருடன் நட்பு கொள்வதாக வைத்திருக்கிறார்
- ஒரிஜினல் படம் டீசண்டாக இருக்கிறது. இதில் ஹோமோசெக்ஸ், நடிகையின் போஸ்டர் என கமல் தனது அறிவுஜீவித்தனத்தை காட்டிவிட்டார்.(நல்லவேளை, ஹோமோசெக்ஸ் சீனில் லிப்-கிஸ் இல்லை!)
- கமல் படத்தில் ஜெயிலில் இருந்து வெளிவரும் வயதானவர் தற்கொலை செய்துகொள்ளும் சீன் வருகிறது. அது ஜப்பானியப் படமான ‘சளக் புளக்’கில் இருந்து உருவப்பட்டது!
- ஒரிஜினல் படத்தில் சுரங்கம் தோண்டி தப்பிப்பதாக வரும். அப்படியே காப்பி அடித்தால் கண்டுபிடித்துவிடுவோம் என்பதால், இதில் வான்வழியே தப்பிப்பதாக உல்டா செய்திருக்கிறார்.
உஸ்ஸ்..நான் அறிவுஜீவு இல்லை என்பதால் என்னால் இவ்வளவு தான் முடிகிறது, படம் பார்த்துவிட்டு நீங்கள் தொடரலாம்.
- ஒரிஜினல் படத்தில் சுரங்கம் தோண்டி தப்பிப்பதாக வரும். அப்படியே காப்பி அடித்தால் கண்டுபிடித்துவிடுவோம் என்பதால், இதில் வான்வழியே தப்பிப்பதாக உல்டா செய்திருக்கிறார்.
உஸ்ஸ்..நான் அறிவுஜீவு இல்லை என்பதால் என்னால் இவ்வளவு தான் முடிகிறது, படம் பார்த்துவிட்டு நீங்கள் தொடரலாம்.
The Shawshank Redemption படத்தின் மூலமாக ஒரு நாவல் தான் சுட்டிக்காட்டப்பட்டது. அந்த நாவல் டால்ஸ்டாயின் ஒரு சிறுகதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாக அதை எழுதியதாக Stephen King சொன்னாரே ஒழிய, எங்கேயும் A Man Escaped படம் பற்றி யாரும் பேசவில்லை. அப்படியென்றால் காப்பி அடித்துவிட்டு ஏமாற்றினார்களா? இல்லை, இதைத் தான் நாம் ஒத்த சிந்தனை என்று சொல்கிறோம். சிறையில் இருந்து தப்பித்தல் என்பது ஒரு கான்செப்ட். Grand Illusion, Great Escape போன்ற பல படங்கள் வந்திருக்கின்றன. யாரும் ‘அய்யய்யோ..காப்பி’ என்று கூப்பாடு போட்டு, படைப்பாளியின் கழுத்தை நெறிப்பதில்லை.
ஒரே விஷயத்தை இந்த இயக்குநர்/திரைக்கதை ஆசிரியர் எப்படி கையாள்கிறார் என்று கவனிப்பது தான் உண்மையான புத்திசாலித்தனமே ஒழிய, காப்பி என்று கத்தி அறிவுஜீவி தோற்றத்தை ஏற்படுத்துவது புத்திசாலித்தனம் அல்ல. நமது இயக்குநர்களைப் போலவே அவர்களும் ‘இந்த படத்தை எப்படி எடுத்தோம்னா..’ என்று பேசத்தான் செய்கிறார்கள். காரணம், திரைப்படம் என்பதில் கதை முக்கியம் அல்ல, திரைக்கதையும் இயக்கமுமே முக்கியம். ஆனால் நாம் செய்வது என்ன? ஏதாவது ஒரு சீன், ஏதோ ஒரு கொரிய,ஜப்பானிய,ஆங்கிலேயே அல்லது சோமாலியா படத்தில் இருந்தால்கூடப் போதும், அந்தப் படம் முழுக்கவே காப்பி என்று ஒதுக்கிவிடுகிறோம்.
உலகத்தில் எந்த மொழியிலும் வராத கதையைத் தான் எடுக்க வேண்டும். இதுவரை உலகில் வெளியான எந்தவொரு படத்திலும் வராத சீனைத் தான் ஒருத்தன் எழுத வேண்டும் என்றால், அது நடக்கிற காரியமா? இது படைப்பாளியின் மேல் ஏவப்படும் உச்சபட்ச வன்முறை அல்லவா? ஒரு கவிதையை இதே பாணியில் விமர்சிப்பீர்களா? அப்படி ஆரம்பித்தால், ஒரு கவிஞராவது ஒரு வார்த்தையையாவது எழுதிவிட முடியுமா?
நாயகனையும் God Father என்போம். தேவர் மகனையும் God Father என்போம். நமது ஒரே நோக்கம், குறை சொல்வது தான். இதற்கு இன்னொரு முக்கியக் காரணம், ‘தமிழர்களால் சிந்திக்க முடியாது. வெள்ளைக்காரனே அறிவாளி’ எனும் அடிமை மனோபாவம். மகாநதி படம், Taken படத்திற்குப் பின் வந்திருந்தால் கமலஹாசனை என்ன பாடு படுத்தியிருப்போம்? ஆனால் மகாநதி முந்திக்கொண்டதால், Taken படம் மகாநதியின் காப்பி என்று சொல்ல வாய் வந்ததா? வராது, காரணம் தாழ்வு மனப்பான்மை. அதில் இருந்து என்று மீளப்போகிறோம்?
arumai thalaivare
ReplyDeletewhy sengovi you forget about naana yosichen & technical things? i like that things in your blog
ReplyDeleteசூப்பர் !!!!
ReplyDeleteலிஸ்ட்ல இதையும் சேர்த்துக்குங்க..
வெற்றி விழாவிற்கு பின் bourne identity ..
ஆளவந்தானுக்கு பின் kill bill ..
bourne identity is a novel...released before vetri vizha
Deleteவெற்றி விழாவிற்கு பின் bourne identity சினிமா என்பது சரி.. ஆனால் bourne identity புக் வெற்றி விழாவிற்கு முன்னாடி!
ReplyDeleteஅறிவிஜீவிகள் போர்வையில் ஒளிந்திருக்கும் அரைகுறைகளுக்கு சரியான செருப்படி!!!
Deleteஅண்ணே சத்தியமா சொல்றேன் நீங்க அறிவுஜீவிதாம்னே.. சூப்பர் பதிவு..
ReplyDeleteநல்ல பகிர்வு!///நாம் தாழ்வு மனப்பான்மையில் இருந்து மீள்வதாவது!///அப்புறம் நாங்க எப்புடி திராவிட/தமிழ் மகனாக இருப்பது?
ReplyDeleteரோஜா படம்னு சொல்லிட்டு மதுபாலா படம் போட்ட உங்களை என்னவென்று சொல்வது ?
ReplyDeleteபின் குறிப்பு : அறிவுஜீவி பெயர் வாங்க இது மூணாவது வழி.
"எல்லாராலும் மதிக்கப்படும் யாராவது ஒரு தலைவரின் பலவீனமான ஒரு விஷயத்தை மட்டும எடுத்துக்கொண்டு, அவரை மோசமான மனிதர்-மக்களுக்கு எந்தவகையிலும் பயன்படாத தலைவர் என்று பேசுவது"
ReplyDeleteவைகோ விசயத்தில் நான் சொன்னத தப்பா எடுத்துக்காதிங்க அண்ணே .
எல்லார் மனித வாழ்க்கையிலும் அல்லது நண்பர்கள் வாழ்க்கையிலும் நடப்பதை நான் அனுபவமாக எழுதி வருகிறேன், அதேப்போல எல்லார் வாழ்க்கையிலும் நடப்பதுதான் சற்று மிகையாக சினிமாவில் காட்டப்படுகிறது !
ReplyDeleteஓகே..
நான் ஆங்கிலப்படம் பார்த்தது ரொம்ப குறைவு எனக்கு இஷ்டமில்லை என்றும் சொல்லலாம், ஸோ ஒரு டைரக்டர் வந்து உங்க ஹோட்டல் ஃபீல்ட் பற்றி படம் எடுக்கணும் அதுக்கு உங்கள் அனுபவம் பற்றிய ஒரு கதை சொல்லுங்கள் என்றால்....[[அந்த சினிமா]] என்னைப்போல எத்தனை பேர்கள் ஹோட்டலில் வேலை செய்கிறார்கள், அவர்களுக்கு இது புதிதாக இருக்காது ஆனாலும் ரசிப்பார்கள்.
அப்படிதான் சினிமாவும் காப்பி பேஸ்ட்டும் என்ன சரிதானே மக்கா ?
இதுக்கு எதுக்குய்யா அறிவு ஜீவி மண்ணாங்கட்டின்னு ஊருக்கு காட்டனும், சுஜாதா அடிக்கடி சொல்வது, உன்னை சுற்றி நடப்பதை பார், அதையே எழுது அங்கேயே ஆயிரம் கதைகள் இருக்கு என்பார் !
இன்னைக்கு என் கண் முன்னே நடந்த சம்பவம், ரோட்டுல ஸ்டைலா நடந்துபோன அம்மிணி ஒன்னு அலறலுடன் வயித்தை பிடிச்சு உக்காந்துருச்சு, கத்தவும் முடியாம சொல்லவும் முடியாம தத்தளிக்குது, யாரும் கண்டுக்கல...
நம்ம கண்ணுதான் கழுகு கண்ணாச்சே, ஒருவிதமாக பக்கத்துல தைரியமாக போயி மேடம் எனி ஹெல்ப்'ன்னு கேட்டதுதான் தாமதம், "மை ஹனி அப்பிடின்னு ஒரு நம்பர் இருக்கு அதுல போன் பண்ணி சொல்லிருங்க நான் எங்கே இருக்கேன்னு" என்று சொல்லி போனை என்கிட்டே கொடுத்துச்சு.
நான் போன் பண்ணி சொன்னதும் அவர் எந்த இடம்ன்னு கேட்டுட்டு பத்து நிமிஷத்துல வந்துட்டார், அந்த பத்து நிமிஷத்துல என்ன நடந்துச்சுன்னு ஆயிரம் கதை எழுதலாம், இது எனக்கு மட்டுமில்லை எல்லார் வாழ்க்கையிலும் சம்பவிப்பதுதான், இதுவும் ஒரு காப்பி பேஸ்ட்தான் !
கணவன் வந்து அவளை வண்டியில் ஏற்றிவிட்டு என் கையைப்பிடித்து "ரொம்ப நன்றி ராஜா, எங்களுக்கு குழந்தை இல்லை, இது என் மனைவிக்கு மூன்றாவது அபார்ஷன்" என்றான், நான் திக்கி போயி நின்றேன் !
இதுக்குள்ளே கொஞ்சம் காமெடி, காதல், கல்யாணம் வெட்டு குத்து வச்சா ஒரு சினிமா ரெடி, இது நான் பார்த்தது, செங்கோவி எத்தனை பார்த்துருபீங்க பலவித கதைகள் இல்லையா ? இங்கேயும் அதே காப்பி பேஸ்ட் வருது இல்லையா ?
சரி விடுங்க பார்ப்போம் ரசிப்போம் அம்புட்டுதான், இது என் சொந்த கருத்து தப்பாக நினைக்க வேண்டாம்.
ஆஆஆ....பதிவுக்குள்ளே ஒரு பதிவு தேத்தியாச்சு ஹி ஹி...
ReplyDeleteகதை,கரு புதுசா இருக்க வேணாம். ஆனா சீன் புதுசாத்தானே இருக்கணும்.
ReplyDelete"மகாநதி முந்திக்கொண்டதால், Taken படம் மகாநதியின் காப்பி என்று சொல்ல வாய் வந்ததா? வராது" நெத்தியடி தலைவரே
ReplyDeleteஅதெல்லாம் சரி, நீங்க சொன்ன இந்த இரண்டு படங்களுமே கவுண்ட் ஆப் மாண்டி கிறிஸ்டோ (ட்வைன்) கதையின் சிறை-தாண்டல் பகுதியின் தழுவல்கள் போல் தெரிகின்றனவே!,
ReplyDeleteஎப்படி நம்ம அறிவு சீவித்தனத்தை காட்டிப்புட்டோம்ல.!
ReplyDelete//siva said...
ReplyDeletewhy sengovi you forget about naana yosichen & technical things? i like that things in your blog//
குழாயியல் அடுத்த வாரம் ஆரம்பித்து விடுவேன். நானா யோசிச்சேன் ஒரு பதிவு எழுதுவது 5 பதிவு எழுதுவதற்குச் சமம்..மேட்டர் சிக்கணும்ல?
//விமல் ராஜ் said...
ReplyDeleteசூப்பர் !!!!
லிஸ்ட்ல இதையும் சேர்த்துக்குங்க..
வெற்றி விழாவிற்கு பின் bourne identity ..
Blogger bandhu said...
வெற்றி விழாவிற்கு பின் bourne identity சினிமா என்பது சரி.. ஆனால் bourne identity புக் வெற்றி விழாவிற்கு முன்னாடி!//
வெற்றிவிழா கதாசிரியரே இதை ஒத்துக்கொண்டார்.
//Mukesh Ram said...
ReplyDeletearumai thalaivare//
நன்றி நண்பரே.
//சீனு said...
ReplyDeleteஅண்ணே சத்தியமா சொல்றேன் நீங்க அறிவுஜீவிதாம்னே..//
ஏன்யா இப்படி....?
//Subramaniam Yogarasa said...
ReplyDeleteநல்ல பகிர்வு!///நாம் தாழ்வு மனப்பான்மையில் இருந்து மீள்வதாவது!///அப்புறம் நாங்க எப்புடி திராவிட/தமிழ் மகனாக இருப்பது?//
உண்மை..உண்மை.
வானரம் . said...
ReplyDelete//ரோஜா படம்னு சொல்லிட்டு மதுபாலா படம் போட்ட உங்களை என்னவென்று சொல்வது ?//
சான்ஸே இல்லை!
//வைகோ விசயத்தில் நான் சொன்னத தப்பா எடுத்துக்காதிங்க அண்ணே .//
அது மறைந்த தலைவர்களைப் பற்றிச் சொன்னது.
//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஆஆஆ....பதிவுக்குள்ளே ஒரு பதிவு தேத்தியாச்சு ஹி ஹி...//
சூப்பர்ணே!
//GunaSekaran said...
ReplyDeleteகதை,கரு புதுசா இருக்க வேணாம். ஆனா சீன் புதுசாத்தானே இருக்கணும்.//
கண்டிப்பாக...ஒரு சீனோ, தீமோ ஒத்துப்போவதாலேயே மொத்தப்படத்தையும் காப்பி என்று சொல்லாதீர்கள் என்பது தான் பாயிண்ட்.
// Blackpearl Logics said...
ReplyDelete"மகாநதி முந்திக்கொண்டதால், Taken படம் மகாநதியின் காப்பி என்று சொல்ல வாய் வந்ததா? வராது" நெத்தியடி தலைவரே//
அதுக்கும் இன்னொரு படத்தைக் கண்டுபிடிச்சு வச்சிருக்காங்க!
//மனு - தமிழ்ப் புதிர்கள் said...
ReplyDeleteஅதெல்லாம் சரி, நீங்க சொன்ன இந்த இரண்டு படங்களுமே கவுண்ட் ஆப் மாண்டி கிறிஸ்டோ (ட்வைன்) கதையின் சிறை-தாண்டல் பகுதியின் தழுவல்கள் போல் தெரிகின்றனவே!,
எப்படி நம்ம அறிவு சீவித்தனத்தை காட்டிப்புட்டோம்ல.!//
பிரமாதம்..அதே தான்..அதே ரூட்ல போனா, சிலை வைச்சுடுவாங்க.
//ஹே ராம் படத்தை Barabbas (1961)-ன் காப்பி என்று சொல்லும்போதும், நமக்கு சொல்பவர்களின் நோக்கத்தின்மீது சந்தேகம் வருகிறது.//
ReplyDeleteகண்ணுதெரியாம ஒரு சின்ன பொண்ணு வரும். அக்காட்சியைத் தான் பரபாஸ் காப்பி என்று சொல்கிறார்கள். கமல் மத்த சீன் எல்லாம் எங்க இருந்து உருவினார் என்று கமலுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
செங்கோவி,
ReplyDeleteபாகவதர் பதிவு பார்த்துட்டு வந்தேன், நல்லாத்தான் எழுதியிருக்கீங்க ஆனாலும் செம கட்டு சப்பக்கட்டா கட்டியிருக்கீங்களே அவ்வ்!
//"மகாநதி முந்திக்கொண்டதால், Taken படம் மகாநதியின் காப்பி என்று சொல்ல வாய் வந்ததா? வராது" நெத்தியடி தலைவரே//
அதுக்கும் இன்னொரு படத்தைக் கண்டுபிடிச்சு வச்சிருக்காங்க!//
ஹார்ட் கோர் என்ற ஜெர்மன் படம்னு சொல்லிட்டு போறது அவ்வ்!
# ஹேராம் பாராபாஸ் காப்பி இல்லைனே வச்சிப்போம், ர.சு.நல்லப்பெருமாளின் "கல்லுக்குள் ஈரம்" நாவலினை சுட்டது என சொல்கிறார்கள் ,பாவப்பட்ட எழுத்தாளனுக்கு ஒரு பத்தாயிரம் கொடுத்தால் என்ன கொறைஞ்சா போயிடும்?
ஊருப்பட்ட காப்பி இருக்கு அதில் எதை சொல்ல,விட , ஆனாலும் காப்பி அடிச்சதை விட ,அதை காப்பி அடிச்சிட்டாங்கனு சொன்னால் "கழுவில் ஏற்ற துடிக்கும் சமூகம்'"நம்ம நாட்டுல மட்டும் உண்டு அவ்வ்!
//குட்டிபிசாசு said...
ReplyDeleteகமல் மத்த சீன் எல்லாம் எங்க இருந்து உருவினார் என்று கமலுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.//
உங்க நம்பிக்கை வாழ்க.
//வவ்வால் said...
ReplyDeleteஊருப்பட்ட காப்பி இருக்கு அதில் எதை சொல்ல,விட , ஆனாலும் காப்பி அடிச்சதை விட ,அதை காப்பி அடிச்சிட்டாங்கனு சொன்னால் "கழுவில் ஏற்ற துடிக்கும் சமூகம்'"நம்ம நாட்டுல மட்டும் உண்டு அவ்வ்!//
வவ்வாலின் வருகைக்கு நன்றி. என் பதிவில் இரு ஆங்கிலப்படங்களைச் சொல்லியிருக்கிறேன். அந்த இருபடங்களுமே சிறந்த படங்களாக போற்றப்படுகின்றன, இயக்குநர்களும் போற்றப்படுகிறார்கள்.
தீம் ஒத்துப்போவதாலேயே ஒரு படைப்பாளியை கழுவில் ஏற்றாதீர்கள் என்று தான் சொல்கிறேன். கமலுக்காக மட்டும் பேசவில்லை. எந்தவொரு படம் வந்தாலும், இது ஏதோவொரு படத்தின் காப்பி என சிலர் அடித்து விடுவதைத்தான் கண்டிக்கிறேன்.
மற்றபடி, நம் ஆட்கள் காப்பி அடிப்பதை நான் நியாயப்படுத்தவில்லை. தெய்வத்திருமகள் போன்ற படங்களை நான் ஆதரிக்கவில்லை.
யாரும் உலகத்தில் எழுதாத ஒரு விஷயத்தைத்தான் படமாக எடுக்க வேண்டும் எனும் கட்டுப்பாடு, தமிழ்சினிமாவுக்கு மட்டும் ஏன்? கொஞ்சம் ஹாலிவுட்டையும் பிறமொழிப்படங்களையும் பாருங்கள், எத்தனை படங்கள் ஒரே தீமுடன் வருகின்றன என்று தெரியும்.
வாழ்த்துக்கள்! தொடருங்கள்! கற்றுக்கொள்கிறேன்!
ReplyDeleteஅருமையான சிந்தனைப்பகிர்வு!
ReplyDeleteடைட்டானிக் போலவே இன்னொரு படமும் பார்த்ததாக நினைவு
ReplyDelete@டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று
ReplyDeleteடைட்டானிக் கப்பலை நீக்கிவிட்டுப் பார்த்தால், அது வழக்கமான கதை தான் : http://imgur.com/kasCMYd
அருமையான பதிவு. காப்பி அடிப்பது தவறென்ற போதிலும், கதைக்கரு காப்பி அடிக்கப்பட்டது என்றெல்லாம் சொல்வது மகா கொடுமை. அது ஒருவகையான அதிமேதாவித்தனமும் பொய் நடுநிலையாளன் என்ற போர்வையும் தான். சமீபத்தில் கொரியன் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குனர் kim jee-woon ன் 'I saw the devil' (2010) திரைப்படம் பார்த்தேன், அதன் கரு அப்படியே வேட்டையாடு விளையாடு படத்தின் கதையாகவே தெரிந்தது. ஒரு காட்சியில் ஹீரோவின் மனைவியின் தந்தை (காவல்துறை உயர் அதிகாரி) அவள் இறந்த இடத்திற்க்கு வரும்போது அவரை தடுத்து நிறுத்துவது போன்ற காட்சியில் அப்படியே வே-வி படத்தில் தன் பெண்ணின் சடலத்தைப் பார்க்க வரும் பிரகாஷ்ராஜை தடுத்து நிறுத்துவதை ஒத்திருக்கும். கவனிக்கவேண்டியது வே-வி 2006ல் வந்த படம். இதைப்பற்றி யாரும் பேசியதாகத் தெரியவில்லை.
ReplyDeleteஅறிவிஜீவிகள் போர்வையில் ஒளிந்திருக்கும் அரைகுறைகளுக்கு சரியான செருப்படி!!!
ReplyDelete