அற்புதம்!
இந்த ஒரு வார்த்தையுடன் விமர்சனத்தை
முடித்துவிடலாம்.
ஷார்ட் ஃபிலிமைப்
பற்றிப் பேசும் முன்பு, சிறுவன் அஜய்யைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
என்னவொரு இயல்பான உடல்மொழி. காற்றில் மிதக்கும்
சிறகு போன்ற ஒரு கேரக்டர். அதை மிக கேஷுவலாக கண்முன் கொண்டுவந்திருக்கிறான்.
இவ்வளவு இயல்பானை பெர்ஃபார்மன்ஸை, நடிப்பு என்று
சொல்ல முடியவில்லை, பெர்ஃபாமன்ஸை வாங்கிய இயக்குநர் ‘உலக சினிமா ரசிகன்’ பாஸ்கரனை எவ்வளவு பாராட்டினாலும்
தகும்.
பட த்தில் மிகக் குறைவான வசனங்கள். அவையும் பெரும்பாலும் கதையை நேரடியாகச் சுட்டுவன அல்ல.
திரைமொழி மூலமாகவே, காட்சிச்சட்டகங்கள்
& படத்தொகுப்பு மூலமே, ஒரு மேஜிக்கை கண் முன்
நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்.
ஆடியன்ஸுடன் இயக்குநர் விளையாடியிருக்கும்
விளையாட்டை நான் ரசித்தேன். சிறுவனின் சீட்டு
விளையாட்டு மீதான மோகமும் திருந்துவதும் யதார்த்தம். ஆனால் அவனைச்
சுற்றிலும் வரும் பள்ளிச்சூழல் முழுக்க கற்பனாவாதம். ஒரு கற்பனையாக
உலகிற்குள் ஒரு யதார்த்தமான கதையைப் புகுத்தியிருக்கிறார்.
இதை சரியாகப் பிரித்துப் பார்க்காதவர்களுக்கு, கொஞ்சம் கிர்ரென்று தான் இருக்கும். பள்ளியில்
தமிழ், வகுப்பில் திருக்குறள், திருவள்ளுவர்
பற்றிய வீட்டுப்பாடம் என்று சர்ரியலிஸ ஸ்கூல். அதில் ஒரு தவறு
செய்யும் மாணவனைத் திருத்தும் நாணுடைமைக் குறள்.
குழந்தைகளுடன் பள்ளி வேன் போகும்
ஷாட்டை அடுத்து வரும் செங்கல் லாரி, பிள்ளைகளை ஸ்கூல் வேனில் ஏற்றிவிட வரும் பெற்றோருக்கு முன்பு வரும் கன்னுக்குட்டியை
ஒரு பெண் ஓட்டிப்போகும் காட்சி, திருக்குறள் பற்றி வேரில் அமர்ந்து
கற்றுக்கொள்ளும் குழந்தைகள் என்று இயக்குநரின் குறியீட்டுக் குறும்புகளுக்கு பஞ்சம்
இல்லை.
எதையும் டிராமடிக் ஆக்காமல், தெளிவான ஆற்றொழுக்கம் போல் காட்சிகள் நகர்கின்றன. அவர் ஆரம்பத்தில் போடும் மூன்று குருமார்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்.
இயக்குநரின் ‘உசிர (உலக சினிமா
ரசிகன்)’ என்ற தனது பெயருக்கும் நியாயம் செய்திருக்கிறார்.
தமிழ் வழிக் கல்வியில் ஏறக்குறைய
இப்படித்தான் நான் படித்தேன். ஒன்பதாம் வகுப்பு
வரை மரத்தடி வகுப்பு தான். படிப்பு என்றும் சுமையாகத் தெரிந்ததில்லை.
படிப்பை கட்டாயமாக பள்ளியிலும் வீட்டிலும் எனக்கு ஊட்டியதில்லை.
அது தானே நிகழ்ந்த து. அந்த வசந்த காலத்தை இந்த
ஷார்ட் ஃபிலிம் மீட்டுக்கொண்டுவந்துவிட்டது.
உசிர நம்
உசிரை எடுத்துவிட்டார்!
இந்த ஷார்ட் ஃபிலிமை பார்க்க விரும்புபவர்கள், ப்ளேபட்டன் ஆப்-ஐ உங்கள் மொபைலில் டவுன்லோடு
செய்தால் பார்க்கலாம். பிடித்திருந்தால், வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.
0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.