என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தும் பேச்சு. ‘பணம் சம்பாதித்தால் நிம்மதி போய் விடும், படுத்தால் தூக்கம் வராது’ என்பதே. இலக்கியங்களிலும் சினிமா போன்ற வெகுஜன ஊடகங்களிலும் இந்தக் கருத்து திரும்பத் திரும்பச் சொல்லப் படுகிறது. ஆனால் அது உண்மை தானா?
முதலில் யார் இந்தக் கருத்தைச் சொல்கிறார்கள் என்று பார்ப்போம். கோடிகளில் புரளும் சினிமா நட்சத்திரங்களும், கோடிகளோடு சேர்த்து நடிகையோடும் புரளுகின்ற கார்ப்போரேட் சாமியார்களுமே அதிகமாக இதைச் சொல்வது.
அட, பணம் வந்ததால் நிம்மதி போய்விட்டதென்றால் எதுக்கு அந்தக் கர்மத்தை வீட்ல வச்சுக்கிட்டு இருக்கீங்க..ஒரே ஒரு அறிக்கை, ‘நாளைக்கு காலைல என் வீட்டுக்கு வர்றவங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கப்படும்’னு சொன்னாப் போதாதா? மறுநாளே பணத்தைக் கொடுத்துட்டு நிம்மதியா இருக்கலாமே?..இல்லே, அடுத்துச் செய்யப்போற வேலைக்கு(நடிப்போ, கவிதையோ) ஒரு ரூபாய் சம்பளம் போதும்னு மம்மி மாதிரி சொல்லிடலாமே!
இந்த மாதிரி நெருக்கிக் கேட்டால் ‘நிம்மதியாக வாழ பணம் மட்டுமெ போதாது. அதைத் தான் சொல்கிறோம்’ என்று சொல்லிச் சமாளிப்பார்கள். ஆனால் ‘பணம் வந்ததால் தான் நிம்மதி போய்விட்டது’ என்பதாகவே அவர்கள் சொல்வது மக்களால் புரிந்து கொள்ளப்படுகிறது.
இந்த மாதிரிப் பிரபலங்களை நம்பும் சாமானியர்களும் அதே டயலாக்கை கிளிப்பிள்ளை மதிரி திரும்பச் சொல்வதைப் பார்த்திருக்கிறேன். மேலுக்கு சட்டை கூட இல்லாமல், வெறும் லுங்கியோடு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு ‘மனுசனுக்கு நிம்மதி தான்பா முக்கியம்..பணம் இன்னைக்கு வரும், நாளைக்குப் போகும்’ என்று பேசுகிற ஆட்களை எனது ஊரில் பார்த்திருக்கிறேன். ஏதோ பணம் இன்னைக்கு நாம் அழைத்தால் வந்துவிடுவது போன்று பேசுவது வேடிக்கை தான் இல்லையா?
‘பணம் சம்பாதித்தால் நிம்மதி போய் விடும் என்பது ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்க பணக்காரர்கள் சொல்லும் பொய்’ என்று எங்கோ படித்திருக்கிறேன். அதுவே உண்மை என்றும் தோன்றுகிறது. நமக்கு ‘தூக்கம் வராது’ என்று அறிவுரை சொல்பவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாகவே இருப்பதும் அதை உறுதிப் படுத்துகிறது.
இந்தியா போன்ற ஆன்மீக பூமியில் பணத்தைப் புகழ்ந்து பேசுவது மரியாதையான காரியம் அல்ல. அதனால் தானோ என்னவோ வீட்டில் கோடி கோடியாக பணம் வைத்திருப்பவர்கள் கூட ’நிம்மதி போய்விடும்’ என்ற பாட்டைத் தவறாமல் பாடுகிறார்கள். இந்தப் பதிவு கூட உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அந்தளவிற்கு நாம் அந்தப் பொய்யை நம்பும் சூழ்நிலையே இங்கு நிலவுகிறது.
பணம் சம்பாதிப்பதற்காக தன் குடும்பத்தையே கவனிக்காமல் விடுவதும், பிறர் வயிற்றில் அடிப்பதும் தான் தவறேயொழிய பணம் சம்பாதிப்பதே தவறல்ல. அம்பானிகளும் டாட்டாக்களும் தூங்குவதே இல்லையா என்ன?
கஷ்டம் என்பது நிழல் போல் நம்முடனே வருவது. படித்தவனுக்கும் இங்கு கஷ்டம் உண்டு, படிக்காதவனுக்கும் கஷ்டம் உண்டு. பணக்காரனுக்கும் கஷ்டம் உண்டு, ஏழைக்கும் கஷ்டம் உண்டு. எப்படியும் கஷ்டப்படப் போகிறோம்..அதை பணக்காரனாக இருந்தே கஷ்டப் படலாமே.
நேர்மையாக எவ்வளவு சம்பாதித்தாலும், அது நம் நிம்மதியைக் கெடுக்காது என்பதே உண்மை. எனவே நன்றாக உழைத்து, நல்ல பொருள் ஈட்டி வாழ்வில் முன்னேறுவோம்!
அனைவருக்கும் இனிய மே தின நல்வாழ்த்துகள்!
அனைவருக்கும் இனிய மே தின நல்வாழ்த்துகள்!
மொத நித்திரை
ReplyDelete>>நேர்மையாக எவ்வளவு சம்பாதித்தாலும், அது நம் நிம்மதியைக் கெடுக்காது என்பதே உண்மை. எனவே நன்றாக உழைத்து, நல்ல பொருள் ஈட்டி வாழ்வில் முன்னேறுவோம்!
ReplyDeleteஅண்ணன் டைரக்டர் பாலா மாதிரி ஃபினிஷிங்க் டச் ல கலக்கிடுவார் இல்ல?
@சி.பி.செந்தில்குமார்//ஃபினிஷிங்க் டச் ல கலக்கிடுவார் இல்ல?// இல்லேண்ணா, நீங்கள்லாம் படிப்பீங்களா?
ReplyDeleteமுட்டை போடும் கோழியின் வலி சும்மா இருக்கும் கோழிக்கு எங்கே புரியும்? அதனால செங்கோவி, முதலில் நீங்க பல கோடிக்கு அதிபதியா ஆவுங்க, அப்புறமா நீங்க இங்க சொல்லியிருக்கிற மாதிரி எல்லோருக்கும் கொடுத்திட்டு நிம்மதியா தூங்க முயற்சி பண்ணுங்க, முடியாதுன்னு பார்ப்போம். முடிஞ்சுதுன்னா மத்த கோடீஸ்வரர்களை நையாண்டி பண்ணுங்க.
ReplyDeleteசும்மா உட்கார்ந்துகிட்டு கோடியில் சம்பாதிக்க சாய் பாபா மாதிரி சிலரால்தான் முடியும். மற்றவர்கள், கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும், சில சமயம் எல்லா தில்லாலங்கடி வேலைகளையும் செய்ய வேண்டி வரும். நீங்க அனில் அம்பானியை கிரிக்கெட் மேட்சின் போது தொலைக் காட்சியில் பார்த்திருப்பீர்கள் போல!! ஆஹா என்ன அமைதியா இருக்கான்டா...ன்னு நினைச்சிட்டீங்க. எந்நேரமும், எங்கே யாரை அடிக்கலாம், எந்த குறுக்கு வழியில் போகலாம், எப்படி ஏய்க்கலாம் என்று சதா அந்த ஆள் மனதில் ஓடுவது வெளியே எங்கே தெரியப் போகிறது? இந்த நினைப்பிலேயே இருப்பவனுக்கு நிம்மதி ஏது, நல்லத் தூக்கம் ஏது? பணம் வந்த பின் இன்னும் ஆசைதான் அதிகரிக்குமே தவிர குடுக்க மனம் வராது. [ஏன்னா அது "கஷ்டப் பட்டு" சம்பாதிச்சதாச்சே!!]
ReplyDelete\\அட, பணம் வந்ததால் நிம்மதி போய்விட்டதென்றால் எதுக்கு அந்தக் கர்மத்தை வீட்ல வச்சுக்கிட்டு இருக்கீங்க..ஒரே ஒரு அறிக்கை, ‘நாளைக்கு காலைல என் வீட்டுக்கு வர்றவங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கப்படும்’னு சொன்னாப் போதாதா? மறுநாளே பணத்தைக் கொடுத்துட்டு நிம்மதியா இருக்கலாமே?\\ கல்யாணம் பண்ணினாக் கூடத்தான் நிம்மதி போய் விடுகிறது, அதுக்காக தங்கமணியை டைவர்ஸ் பண்ணி விட முடியுமா? டைவர்ஸ் பண்ணாம புலம்பிகிட்டு இருந்தா, அவன் பொய் சொல்றான்னு அர்த்தமா?
ReplyDeleteSuperb Post.
ReplyDelete\\முதலில் யார் இந்தக் கருத்தைச் சொல்கிறார்கள் என்று பார்ப்போம். கோடிகளில் புரளும் சினிமா நட்சத்திரங்களும், கோடிகளோடு சேர்த்து நடிகையோடும் புரளுகின்ற கார்ப்போரேட் சாமியார்களுமே அதிகமாக இதைச் சொல்வது.\\ரஜினி கிட்ட ஒரு தடவை, உங்க வாழ் நாளிலேயே சந்தோஷமா இருந்த நாட்கள் எவைன்னு கேட்டாங்க. அவர் கோடி கோடியா சொத்து செர்ந்ததுக்கப்புரம்னு சொல்லவில்லை. பெங்களூருவில், கண்டக்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்த போது டியூட்டி முடிஞ்சதும், ஒரு பாட்டில் சாராயத்தை அடிச்சிட்டு பஸ் ஸ்டாண்டிலேயே லைட் கம்பத்துக்கு கீழேயே விழுந்து நிம்மதியா தொங்கிக் கிடந்த நாட்கள் தான் என் வாழ் நாளிலேயே சந்தோஷமா இருந்த நாட்கள் என்றார். இப்போதும் பெங்களூர் சென்று நண்பர்களைச் சந்திக்கும் போதெல்லாம், என்னை இதில் தள்ளி விட்டுவிட்டு நீங்க எல்லாம் சந்தோஷமா இருக்கீங்களேன்னு புலம்புகிறாராம்.
ReplyDeleteNeenga Panakkararaa?
ReplyDeletePlease transfer 1.76 lakh crores to me..He He
ReplyDeleteவாழத் தேவையான அளவு சம்பாதிக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அதிகமா பணம் சேர்க்க நினைச்சா, அதனால சம்பாதிக்கிரவனுக்கும் கஷ்டம், மத்தவங்களுக்கும் வேதனை. ஒருத்தன் 1.76 லட்சம் கோடி அடிச்சா அவன் ஏன்ன 1.76 லட்சம்இட்லியா ஒரு வேலைக்குத் தின்னப் போறான்? திகார் ஜெயிலில் கலி கூட தின்ன வேண்டி வரும்.
ReplyDelete\\தொங்கிக் கிடந்த நாட்கள் தான் \\தூங்கிக் கிடந்த நாட்கள் தான்
ReplyDelete@Jayadev Dasசார், உங்க பின்னூட்டங்களைப் பார்த்தா, பலகோடி வச்சுக்கிட்டு தூங்க முடியாத எரிச்சல்ல பேசற மாதிரி இருக்கே..
ReplyDelete@Jayadev Das//அப்புறமா நீங்க இங்க சொல்லியிருக்கிற மாதிரி எல்லோருக்கும் கொடுத்திட்டு நிம்மதியா தூங்க முயற்சி பண்ணுங்க, முடியாதுன்னு பார்ப்போம்.// நல்லாப் படிங்க சார், நான் சம்பாதிச்ச எல்லாரையும் அடுத்தவனுக்குக் கொடுங்கன்னு சொல்லலை..ஒரு பக்கம் காசு சேர்த்துக்கிட்டே, அடுத்தவனுக்கு அட்வைஸ் மட்டும் ஏன்னு தான் கேட்கிறேன்..நீங்களே சொல்றீங்க ஆசை விடாதுன்னு...அப்புறம் அடுத்தவனுக்கு மட்டும் யோக்கியமா அட்வைஸ் கொடுக்குறது ஏன்?
ReplyDelete@டக்கால்டி//Neenga Panakkararaa?// இந்தப் பதிவு படிச்சுட்டுக் கோபப்படற எல்லாருமே பணக்காரங்க தான்..உட்காருங்க..பதிவைப் படிச்சிட்டு அள்ளிக் கொடுப்பாங்க!
ReplyDelete@Jayadev Das//வாழத் தேவையான அளவு சம்பாதிக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை// அப்படி சம்பாதித்து முடிக்காதவனை டிஸ்கரேஜ் பண்றது ஏன்னு தான் பதிவுல கேட்டிருக்கேன்!
ReplyDeletehttp://vemarsanam2011.blogspot.com/2011/05/blog-post.html
ReplyDeletePlease read it
@டக்கால்டிஏற்கனவே படிச்சாச்சு..உங்க கருத்து அருமை!
ReplyDeleteஎனக்கு தூக்கம் அதிகமா வருது:)
ReplyDelete@ராஜ நடராஜன்எனக்கும் தான் பாஸ்!..அதுசரி, வந்து வருதா?..இல்லாமல் வருதா?
ReplyDeleteரைட்டு!...........மாப்ள என்னமோ சந்தோஷத்துல இருக்க போல அதான் இப்படி ஹிஹி........நடத்து!
ReplyDelete@விக்கி உலகம்எப்பவும் போல தான்யா இருக்கேன்..
ReplyDeleteநேர்மையாக எவ்வளவு சம்பாதித்தாலும், அது நம் நிம்மதியைக் கெடுக்காது என்பதே உண்மை ----////
ReplyDeleteஇதுதான் உண்மை மாப்ள..
குறுக்கு வழியில், திருட்டு வழியில் உழைப்பவர்களுக்கு,
ReplyDeleteஅந்த பணம் எப்போது, யார் கையில் அகப்பட்டு விடும் எனும் சந்தேகம் இருப்பதால், நிம்மதி தொலைந்து விடும் சகோ.
நல்ல வழியில் சேமிக்கப்படும் பணம், என்றைக்குமே தன் வலிமை இழக்காது என் கருத்தோடு உடன்படுகிறேன்,
அதே போல பணம் பத்தையும் செய்யுமாம்- இது ஆன்றோர் வாக்கு.
அலசல் அருமை, அதுவும் தொழிலாளர் தினத்திற்கேற்ற விழிப்புணர்வாய் வந்திருக்கிறது.
//நேர்மையாக எவ்வளவு சம்பாதித்தாலும், அது நம் நிம்மதியைக் கெடுக்காது என்பதே உண்மை. எனவே நன்றாக உழைத்து, நல்ல பொருள் ஈட்டி வாழ்வில் முன்னேறுவோம்!//
ReplyDeleteஇதை நான் வழி மொழிகிறேன்!
நன்று செங்கோவி! பெள்த்த,சமண மதங்களின் தாக்குதலால் பாரத மக்கள் ஒரு சன்யாச மனோநிலையில் அடிக்கடி நடந்து கொள்வதும்,பேசுவதும் பழக்கமாகிவிட்டது.
ReplyDelete"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்..... "என்று மீண்டும் மக்கள் மனதில் பதிய வைக்க அரும் பாடு பட வேண்டியிருந்தது.ஏன்,காமத்தைக் கூட வேண்டும் என்று சொல்லி தேரிலும் கோபுரத்திலும் வைக்க வேண்டியிருந்தது.
கார்த்திகை மாதம் 1ந்தேதி தமிழகமே சன்னியாசக் கோலம் பூண்டு நிற்பதைப்
பார்க்கிறோமே!
"வாழ்க்கையை முழுதும் வாழ்ந்து முடித்து, ஓய்வு பெற்றவர் சுந்தரகாண்ட பாராயணம் பண்ணிக் கொண்டு,'வாழ்வே மாயம் உலகே மாயம்' என்று வேதாந்த மார்க்கத்தை அப்பியாசிக்கலாம்.தான் உழைத்தால்தான் தன் குடும்பத்தாருக்கு அடுத்த வேளை சோறு என்ற நிலையில் உள்ள வாலிபன் அந்தக் கிழவரின் வழியில் போகலாமா?" என்று கேட்பார் மஹாகவி பாரதியார்.(கட்டுரைகளில்)
வேதத்தில் ருத்ரம் சமகம் என்று உள்ளது.இதில் சமகம் என்பது எதெல்லாம் தனக்கு வேண்டும் என்ற பட்டியல்.மிக நீண்டது.கோதுமையைக் கொடு,
நெல்லைக் கொடு, பசுவைக் கொடு,தங்கத்தை கொடு என்று முடிவுறாத கோரிக்கை!கடைசியாக நான் எதையெல்லாம் கேட்காமல் விட்டேனோ அவையெல்லாவற்றையெல்லாம் கொடு!கொடு!கொடு!
நமது பண்பாட்டில் மட்டும் தான் விண் நிறைந்து மண் நிறைந்து
நிற்பான் இறைவன். அந்த விண் மட்டும் தெய்வ மன்று இந்த
மண்ணும் அஃதே என்பது நாம் மட்டும்தான் சொல்கிறோம். மற்றவர்களுக்கு இந்த மண் பாவ பூமி! நமக்கோ இது புண்ணிய பூமி. மண்ணில் நல்ல(நல்ல என்பதில் அழுத்தம் கொடுக்க வேன்டூம்) வண்ணம் வாழலாம். அதற்கு அளவான செல்வம், பிறரை எத்திப் பிழைக்காமல் சம்பாதிக்க வேண்டும்.
பணத்தை நோக்கி மனிதனின் பயணம் என்றும் முடிவதில்லை. It is a endless journey.
ReplyDelete@!* வேடந்தாங்கல் - கருன் *!நன்றி கருன்!
ReplyDelete@நிரூபன்பொருளல்லாதவரைப் பொருளாகச் செய்யும் பணம்!
ReplyDelete@சென்னை பித்தன்நன்றி ஐயா!
ReplyDelete@kmr.krishnanஐயா, தங்களது அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி. ‘நிற்பதுவெ நடப்பதுவே’ பாடலிலும் பகவத் கீதை முன்னுரையிலும் மாயையைப் பழித்திருப்பான் பாரதி. நீங்கள் சொல்வது போன்று ஞானயோகத்தை மாத்திரமே வலியுறுத்திய சமண, புத்த மதங்களின் தாக்கமே இந்த சன்யாச மோகம். நமக்கு கர்மயோகமும், பக்தி யோகமும் உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். ‘எனக்கு ஆகவேண்டிய காரியம் என்று எதுமில்லை. ஆனாலும் நான் நித்ய கர்மங்களைத் தொடர்கிறேன்’ என்று கண்ணன் சொல்வான். அரைகுறை ஆன்மீக வாதிகளின் பிதற்றலே ‘நிம்மதி போகும்’ என்பது! தொடர்ந்து நாம் இதைப் பலவழிகளில் சொல்வோம்! முன்பு நான் எழுதிய ‘திருவள்ளுவரும் வீணாய்ப்போன பொன்ராசும்’ இடுகையும் இது சம்பந்தப் பட்டதே!
ReplyDelete@! சிவகுமார் !//பயணம் என்றும் முடிவதில்லை. It is a endless journey.// சரி, அதை எதுக்கு மேஜர் சுந்தரராஜன் மாதிரி ரெண்டு தடவை தமிழ்லயும் இங்க்லீஸ்லயும் சொல்றீங்க சிவா?
ReplyDelete//நேர்மையாக எவ்வளவு சம்பாதித்தாலும், அது நம் நிம்மதியைக் கெடுக்காது என்பதே உண்மை. எனவே நன்றாக உழைத்து, நல்ல பொருள் ஈட்டி வாழ்வில் முன்னேறுவோம்!//
ReplyDeleteநச்! பின்னிட்டீங்கண்ணே! :-)
இந்த வலைபூவில் ஒரு விவாததைக் கிளப்பியுள்ளார்கள் . விவரமானவர்கள் வந்து பார்க்கவும்.டும்.. டும்.. டும்.. டும்..டுடும்...டுடும்
ReplyDeletehttp://mukkaalam.blogspot.com
பணம் இல்லாவிட்டாலும் தூக்கம் போய்விடுகிறது....பணம் இருந்தாலும் தூக்கம் போய்விடுகிறது....பணம் தான் பிரச்சினையே...
ReplyDelete@ஜீ...நன்றி ஜீ!
ReplyDelete@mukkaalam//இந்த வலைபூவில் ஒரு விவாததைக் கிளப்பியுள்ளார்கள் . // என்னங்க அங்க ஒன்னையும் காணோம்..சூனியத்தைப் பற்றிய விவாதமோ?
ReplyDelete@ரஹீம் கஸாலிபணம் இருந்தா தூக்கம் போகுதா..ப்ளீஸ், உடனே என் அகக்வுண்ட்டுக்கு அந்த பணத்தை அனுப்பிட்டு தூங்குங்க!
ReplyDeleteஎளிய மனத்தோர் பேறுபெற்றோர் என்ற கருத்தில் எனக்கும் ஒப்பில்லை. பணம் அதிகம் இருந்தால் ஏசி ரூம் போட்டு அழலாம். ஊட்டிக்கு போய் தற்கொலை பண்ணலாம். விஸ்கில விஷத்தை கலக்கலாம். பணம் இல்லாட்டி, தூக்குக்கயிறு, பாலிடால், உள்ளூர் கிணறுன்னு போகவேண்டியதுதான்,
ReplyDeleteசூப்பர்
ReplyDelete