Tuesday, May 17, 2011

ராணாவில் ரஜினி அவசியம் நடிக்க வேண்டுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் உடல்நிலைக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி என்று செய்திகள் வருகின்றன. ’சிகிச்சைக்காக அமெரிக்கா போகலாம்’ என்றும் சொல்கிறார்கள். அதே நேரத்தில் சில விஷமிகள் மனித நேயமற்ற முறையில் தொடர்ந்து விஷமத்தனமான வதந்தியைப் பரப்புகிறார்கள். 

பொதுவாகவே ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடையே போதிய இடைவெளி விடுவதும், இமயமலைப் பகுதியில் ஓய்வெடுப்பதும் ரஜினியின் வழக்கம். எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் வேரு யாரும் அமர்ந்து விட முடியாது என்பதை பலமுறை நிரூபித்தவர். எதனாலோ இப்போது அவசர அவசரமாக அடுத்த படமான ராணா வேலையில் இறங்கினார்.

’சுல்தான் தி வாரியர்’ படத்திற்கு கோடி கோடியாகக் கொட்டிய பின்னும், படச்சுருளைக் கண்ணில் காண முடியாத தயாரிப்பு நிறுவனங்கள் கொடுத்த பிரஷர் கூடக் காரணமாக இருக்கலாம். ஏற்கனவே காசு விஷயத்தில் சுத்தமானவரான ரஜினியும், கணக்கை செட்டில் செய்ய ராணாவை நடித்துக் கொடுக்க முன் வந்திருக்கலாம். 

ஆனால் ஆரம்பித்தில் இருந்தே இந்தப் படம் நம் மனதைக் கவரவில்லை என்பதே உண்மை. எந்திரனுக்கு இருந்த வரவேற்பும் இதற்கு இல்லை. எதனாலோ ‘பாபா’ ஃபீலிங் வந்து கொண்டே இருந்தது. படப்பிடிப்பு பூஜை போஸ்டரைப் பார்த்த போது, அந்த ஃபீலிங் கன்ஃபார்ம் ஆகியது.

தொடர்ந்த கெட்ட செய்தியாக அவருக்கு மூச்சுத் திணறல் என்று செய்தி வந்து சேர்ந்தது. நாமும் ஆரம்பத்தில் சாதாரண விஷயம் என்றே நினைத்து, அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து வரும் செய்திகளைப் பார்க்கும்போது, ஏதோவொரு கவலை மனதில் குடிகொள்கிறது.

உடல்நலம் தேரும்வரை இந்தப் படத்தைத் தள்ளி வைப்பதும், முடிந்தால் இதைத் தலைமுழுகுவதுமே நல்லது. 

நம்மையெல்லாம் மகிழ்விக்க ஏற்கனவே வேலைக்காரன் - ராஜாதிராஜா-படிக்காதவன் - நெற்றிக்கண் - மூன்றுமுகம் - அண்ணாமலை - பாட்ஷா - சந்திரமுகி-எந்திரன் போன்றவை இருக்கும்போது, இப்படிக் கஷ்டப்பட்டு நடித்து ராணாவை உருவாக்குவது அவசியம் தானா?

உடல்நிலை சரியில்லாமல் போன அமிதாப் திரும்பி வரும்வருவதர்கு பல ஆண்டுகள் ஆனபோதும், அவரது ரசிகர்கள் அவரை மறந்து விடவில்லை. அவருக்கான எதிர்பார்ப்பு குறையவும் இல்லை. அமிதாப்பை விடவும் உணர்ச்சிகரமான ரசிகர்களை வைத்திருக்கும் ரஜினி, பூரண ஓய்வு எடுத்துக் கொண்டு புதுப் பொலிவுடன் வரவேண்டும்.

ஜக்குபாயைச் சுருட்டி விட்டு, சந்திரமுகியுடன் திரும்பி வந்தது போல், இம்முறையும் ரஜினி செய்யலாம். ரஜினியின் நீண்ட நாள் ஆசையான ஐஸ்வர்யா ராயுடன் நடிப்பதே நிறைவேறி விட்டபின், கொஞ்ச நாள் ஓய்வு எடுப்பதில் என்ன தயக்கம்?

ஒரு ரசிகராக நமக்குத் தேவை ரஜினி தானேயொழிய ராணா அல்ல!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

38 comments:

  1. பஜ்ஜி எனக்கே.!!

    ReplyDelete
  2. @தம்பி கூர்மதியன்ஆஹா..தம்பி தட்டிட்டுப் போய்ட்டாரே...

    ReplyDelete
  3. தமிழ்மணம் நேற்றும், இன்றும் நானே மொத ஓட்டு.

    ReplyDelete
  4. இன்ட்லி நானு..

    ReplyDelete
  5. எனக்கு பொதுவாகவே ரஜினி மீதோ, ராணா மீதோ அவ்வளவு ஈடுபாடு இல்லை.. இருந்தாலும் உங்களை போன்றோர் பாசத்திற்காகவாவது அவர் அவரது உடலின் நிலையை கவனிக்க வேண்டும்..

    ReplyDelete
  6. நன்றி தம்பி & பிரகாஷ்..

    ReplyDelete
  7. ரஜினி உடல்நிலை தேறி வர இறைவனை வேண்டிக் கொள்கிறேன். தலைவா எழுந்து வா!!!

    ReplyDelete
  8. @தமிழ்வாசி - Prakashநானும் வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  9. வந்துட்டன் ..)

    ReplyDelete
  10. நடிகன் என்ற ரீதியில் ரஜனியின் ஸ்ரையிலை அடிச்சிக்க எவனும் இல்லை தான்...

    ReplyDelete
  11. @கந்தசாமி.உண்மை தான் கந்து..தலைவரு தலைவரு தான்.

    ReplyDelete
  12. சில விஷமிகள் மனித நேயமற்ற முறையில் தொடர்ந்து விஷமத்தனமான வதந்தியைப் பரப்புகிறார்கள்//

    விஷமிகள் என்றாலே, இது மாதிரி வேலையத் தானே செய்வார்கள்.

    ReplyDelete
  13. ரஜினி வெகு விரைவில் வர வேண்டும் எனும் ரசிகர்களின் கோரிக்கை வீண் போகாது சகோ.

    ReplyDelete
  14. இதற்கு மேலும் ரஜினி நடித்து நிரூபிக்க என்ன இருக்கிறது. அதை எல்லாம் முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், தில்லுமுல்லு போன்ற படங்களிலேயே சாதித்துவிட்டாரே. ஷூட்டிங்கில் உபயோகிக்கும் மின் வெளிச்சம் அவர் உடலை வெகுவாக பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்த பின்னும் ரஜினி நடித்தே தீர வேண்டுமா? ரெஸ்ட் எடுங்க பாஸ்.

    ReplyDelete
  15. மாப்ள நச்! பாப்போம்!

    ReplyDelete
  16. உங்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன் செங்கோவி

    ReplyDelete
  17. @நிரூபன்//விஷமிகள் என்றாலே, இது மாதிரி வேலையத் தானே செய்வார்கள்.// அதற்கு ரஜினியிம் குடும்பத்தினர் பதில் சொல்வது தான் கஷ்டமான விஷயம்.

    ReplyDelete
  18. @! சிவகுமார் !நீங்க சொல்றதும் சரி தான் சிவா.

    ReplyDelete
  19. @ரஹீம் கஸாலி//உங்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன் செங்கோவி// நன்றி கஸாலி.

    ReplyDelete
  20. நமக்குத்தேவை ரஜினிதானே ஒழிய ராணா அல்ல. இதை நான் வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  21. கரெக்ட்! வழிமொழிகிறேன்

    ReplyDelete
  22. @middleclassmadhaviவழிமொழிவுக்கு நன்றி சகோதரி.

    ReplyDelete
  23. >>
    ஒரு ரசிகராக நமக்குத் தேவை ரஜினி தானேயொழிய ராணா அல்ல!

    karektகரெக்ட் அண்னே. ஆனா பய புள்ளைங்க இதுக்கும் மைன்ஸ் குத்தி இருக்குங்களே

    ReplyDelete
  24. கவலை வேண்டாம் இதெல்லாம் படத்திற்கு விளம்பரம்


    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
    சார்லி சாப்ளின் “The Kid”

    http://speedsays.blogspot.com/2011/05/charlie-chaplin-kid.html

    ReplyDelete
  25. தலைவர் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்..

    ReplyDelete
  26. @Speed Master/கவலை வேண்டாம் இதெல்லாம் படத்திற்கு விளம்பரம்// அப்படித் தெரியவில்லையே மாஸ்டர்.

    ReplyDelete
  27. ஏதோ ஒரு புக்குல ரானா படம் தொடக்க விழாவுல ரஜினிக்கு விஷத்தை கலந்து கொடுத்துட்டாங்கன்னு போட்டு இருந்தாங்க, எது உண்மையோ பொய்யோ, அவர் சீக்கிரமே குணமடைஞ்சு வீடு திரும்பனும்

    ReplyDelete
  28. ஒரு ரசிகராக நமக்குத் தேவை ரஜினி தானேயொழிய ராணா அல்ல!

    ReplyDelete
  29. ரஜினிக்கு ஏற்பட்டிருப்பது எதிர்பாராத உடல் நலக் குறைவு, ஓய்வு எடுத்துக் கொள்ளுமளவுக்கு அவருக்கு ஒன்றும் வயதாகி விடவில்லை. [86 வயசுக் கிழவன் ஒரு மாநிலத்தை ஆண்ட கதையெல்லாம் இருக்கு, எங்கே? மேற்கு வங்கத்தில், ஹா..ஹா..ஹா.. அதைப் பார்க்கும் போது 60 ஒன்னும் பெரிய வயதல்ல]. அவர் இப்போதே மூன்று வருஷத்துக்கு ஒரு படம்தான் நடிக்கிறார், இன்னும் குறைக்கச் சொன்னால் எப்படி?

    ReplyDelete
  30. ரஜினி உடல் நிலை நன்றாகத்தின் இருக்கும்..

    திருக்குறள்- அருமை idea..

    http://zenguna.blogspot.com

    ReplyDelete
  31. @இரவு வானம்/ஏதோ ஒரு புக்குல ரானா படம் தொடக்க விழாவுல ரஜினிக்கு விஷத்தை கலந்து கொடுத்துட்டாங்கன்னு போட்டு இருந்தாங்க, / சும்மா அடிச்சு விடுவாங்க நைட்டு..

    ReplyDelete
  32. @Jayadev Das//அவர் இப்போதே மூன்று வருஷத்துக்கு ஒரு படம்தான் நடிக்கிறார், இன்னும் குறைக்கச் சொன்னால் எப்படி?// முடியாதப்போ குறைச்சுக்கலாமே சார்..

    ReplyDelete
  33. @குணசேகரன்...//ரஜினி உடல் நிலை நன்றாகத்தின் இருக்கும்..// கேட்கவே சந்தோசமா இருக்கு குணா.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.