எனது மனங்கவர்ந்த திரைப்படக் கவிஞர்களின் முக்கியமானவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். அவரது பாடல்களில் உள்ள விசேஷத்தன்மையே எளிமையான வார்த்தைகளும் ஆழ்ந்த பொருளும் தான்.
நேற்றிரவு திடீரென பழைய பாடல்களைக் கேட்கவேண்டுமெனத் தோன்றியது. என்னிடமிருந்த கலெக்சனில் இருந்து பாடல்களை ஓட விட்டேன். அப்போது தான் இரட்டை அர்த்தப் பாடல்கள் எழுதுவதிலும் வல்லவராக கவிஞர் விளங்கிய விஷயம் தெரிந்தது.
உதாரணமாக ’குலமகள் ராதை’யில் வரும் இந்தப் பாடலைப் பாருங்கள்:
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் - அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
இரவிலே அவனைக் காண நானும் நடப்பேன் - அவன்
எல்லோரும் பார்க்கும்படி உயரத்தில் இருப்பான்.
இதில் என்ன இருக்கிறது, நிலாவை உவமையாக வைத்து எழுதப்பட்ட பாடல் தானே என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் படம் பார்த்தவர்களுக்கு இங்கு கவிஞர் செய்திருக்கும் நுணுக்கமான வேலை புரியும்.
அந்தப் படத்தில் சிவாஜியின் பெயர் சந்திரன். அவரும் சரோஜாதேவியும் காதலர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து விடுவார்கள். பலநாட்கள் கழித்து அதே ஊருக்கு சர்க்கஸ் சாகசக்காரராக சிவாஜி திரும்பி வருவார். கூடவே அவரை ஒருதலையாகக் காதலிக்கும் தேவிகாவும்.
விஷயம் அறிந்து சரோஜாதேவி சிவாஜியைப் பார்க்க பகலில் செல்வார். ‘இப்போது பார்க்க முடியாது. இரவு சர்க்கஸ் நடக்கும்போது டிக்கெட் வாங்கி வந்து வேடிக்கை பார்த்து விட்டுப் போ’ என்று சொல்லி விரட்டி விடுவார் தேவிகா. சோகத்தில் சரோஜாதேவி பாடும் பாடல் தான் அது:
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் - அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
இரவிலே அவனைக் காண நானும் நடப்பேன் - அவன்
எல்லோரும் பார்க்கும்படி உயரத்தில் இருப்பான்.
இதே படத்தில் ’சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா? ’ பாடலின் பல்லவியிலும் சரணத்தில் வரும்
’சந்திரன் ஒளியை உண்டு வாழும்
சாதகப் பறவை ஆனேனே நானே’ என்ற வரிகளிலும் கவிஞர் புகுந்து விளையாடி இருப்பார்.
அடுத்து அவரது இரட்டை அர்த்தப் புலமை வெளிப்பட்ட படம் வசந்த மாளிகை. அதில் நடிகர் திலகம் ஜமீன்தார் வீட்டுப் பிள்ளை. ஆனாலும் அவர்மீது அன்பு காட்ட அங்கு யாருக்கும் மனதோ நேரமோ கிடையாது.
அந்த நேரத்தில் அவருக்கு பெர்சனல் செகரட்டரியாக வரும் வாணிஸ்ரீ, அந்தஸ்து காரணமாக அவர் மீது அன்பு காட்டவும் முடியாமல், எனக்கென்ன வென்று தள்ளி நிற்கவும் முடியாமல் தடுமாறுவார்.
அந்த நேரத்தில் அவருக்கு பெர்சனல் செகரட்டரியாக வரும் வாணிஸ்ரீ, அந்தஸ்து காரணமாக அவர் மீது அன்பு காட்டவும் முடியாமல், எனக்கென்ன வென்று தள்ளி நிற்கவும் முடியாமல் தடுமாறுவார்.
அதே வீட்டில் வீணை ஒன்றும் யாராலும் கவனிக்கப் படாமல் கிடக்கும். இது போதாதா கவிஞருக்கு. அந்த வீணையை வாசித்தபடியே வாணிஸ்ரீ (பி.சுசீலா) பாடும் பாடல் இது:
கலைமகள் கைப் பொருளே – உன்னை
கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில் – உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ!
(கலைமகள்)
நான் யார் உன்னை மீட்ட – வரும்
நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட
ஏனோ துடிக்கின்றேன் – ஒரு
நிலையில்லாமல் தவிக்கின்றேன்
விலை இல்லா மாளிகையில் – உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ!
அவர் பாடுவது வீணைக்கும் பொருந்தும், சிவாஜிக்கும் பொருந்தும். அதிலும் ‘ஏனோ துடிக்கின்றேன்’ எனும் இடத்தில் பி.சுசீலாவின் குரலும் கே.வி.மகாதேவனின் இசையும் அட அட!
இப்போது சொல்லுங்கள், கவியரசர் இரட்டை அர்த்தப் பாடல் புனைவதிலும் வல்லவர் தானே?
டிஸ்கி-1: கவியரசர் எழுதிய அந்தப் பாட்டும் எனக்குத் தெரியும். ஆனாலும் கொஞ்ச நாளைக்கு அதைப் பத்திப் பேஷ் மாட்டேன்..பேஷ் மாட்டேன்!
டிஸ்கி-2: வேறு ஏதாவது எதிர்பார்த்து வந்த நல்ல உள்ளங்கள் எனது ‘நானா யோசிச்சேன்’ பகுதிக்குப் போய் கடுப்பைத் தணித்துக் கொள்ளவும்.
vadai. methu vadai or otta vadai. double meaning
ReplyDelete@தமிழ்வாசி - Prakashஆஹா, ஆரம்பிச்சுட்டாங்களே..
ReplyDeleteஅதானே... ரெட்டை அர்த்தம்னா கில்மா மேட்டர் தான் இருக்கனுமா என்ன? எவன்யா அவன் சொன்னது...? எடுடா அந்த அருவாள... இன்னைக்கி பொளந்துர்டேன் ... படுவா,...
ReplyDelete@சரியில்ல....... அதானே, நல்லாக் கேளுங்கய்யா அப்படி..அப்பவாவது உலகம் உருப்படுதான்னு பார்க்கலாம்!
ReplyDeleteகொடி அசைந்ததும் காற்று வந்ததா?
ReplyDeleteகாற்று வந்ததும் கொடி அசைந்ததா?
வா ரே வாவ் என கஜல் பாடல்களை கேட்பவர்கள் சொல்வது போல் அடடா என சொல்ல வைத்த வரிகள்.
குடும்பஸ்தனாகி லோல் பட்டுக்கொண்டிருந்த ஒருவர்(சுருக்கமா சொன்னா பெருசு:))
சிலாகிக்கும் வரிகள்....
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்...என்று தொடங்கி
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்க வைப்பேன்
ஆடடா ஆடு என்று ஆடவிட்டுப் பார்த்திருப்பேன்
படுவான் பாடுவான் பட்டதே போதுமென்பான்
பாவி மகன் பெண்ணினத்தைப் படைக்காமல் விட்டு வைப்பான்.
இது கலை நயத்துக்கு,,,,
அசலா இரட்டை அர்த்தம் தேடி யாராவது வந்திருந்தா....
யா....எலந்த பயம்:) பாடுவார்!
//////கலைமகள் கைப் பொருளே – உன்னை
ReplyDeleteகவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில் – உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ!
/// ரண்டு மூன்று தரம் இந்த படம் பாத்திருக்கிறேன் ஆனால் இப்ப தான் அர்த்தம் எனக்கு புரியுது பாஸ் ....
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...காமராஜருக்காக எழுதிய பாடல். படத்துடன் மேட்ச் ஆகும். கண்ணதாசனை மிஞ்ச எவருமில்லை.
ReplyDeleteஎப்படியெல்லாம் யோசிக்கறீங்க..
ReplyDelete@ராஜ நடராஜன் கவிநயத்தில் கவியரசை மிஞ்ச ஆள் இல்லை தான்..
ReplyDelete@! சிவகுமார் !//அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...// ஆமா சிவா, அந்தப் பாட்டும் அப்படித் தானே!
ReplyDelete@!* வேடந்தாங்கல் - கருன் *!//எப்படியெல்லாம் யோசிக்கறீங்க..// யோசிச்சது கவியரசு!!
ReplyDeleteஇது மட்டுமா இன்னும் நிறைய இருக்கு...
ReplyDeleteஎலந்தப்பழம் பாடல் கவிஞர் எழுதியதா??
இந்தப்பாடலில் வரிக்கு வரி டபுள் மீனிங்தான்...
எதிர்பார்த்து வந்த நல்ல உள்ளங்கள் எனது ‘நானா யோசிச்சேன்’ பகுதிக்குப் போய் கடுப்பைத் தணித்துக் கொள்ளவும்.
ReplyDelete//
கிளுகிளுப்பு பக்கமா
கண்ணதாசன் காரைக்குடிதான் இப்ப இருக்குற யூத்துக்கு தெரியும்
ReplyDeletevasandha maaligai = kvm
ReplyDeleteநான் பயந்தே போயிட்டேன்;’அந்த மாதிரி’ப் பாடலோ என்று?படித்ததும் நிம்மதி!கவியரசரின் கவித்திறம் பற்றிய நல்ல பதிவு!
ReplyDeleteகண்ணதாசன் என்னும் காவிய கவிஞன் அவர்....
ReplyDelete//பேஷ் மாட்டேன்..பேஷ் மாட்டேன்!//
ReplyDeleteஇது கூட டபுள் மீனிங்கா யாரயோ சொல்றமாதிரி இருக்கே :-)))
நலந்தானா பாடல் கவிஞர் தி.மு.க வை விட்டு வெளிவந்த பிறகு அண்ணாதுரை உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரை விசாரிக்கும் தொனியில் எழுதப்பட்டதாம்.
ReplyDeleteஅதானே அண்ணன் டபுள் மீனிங்க்ல பேச மாட்டாரே .. என்ன? டபுள் ஃபிகரை ஒரேடைம்ல .. மேத்தமேட்டிக்ஸ் பண்ணுவாருஅவ்வளவுதான் ஹா ஹா
ReplyDeleteஅண்ணன் பழைய இரட்டை அர்த்தப் பாட்டையும் விரும்பிக் கேட்பீங்கன்னு புரியுது!:-)
ReplyDelete@சங்கவி//எலந்தப்பழம் பாடல் கவிஞர் எழுதியதா??// ஹி..ஹி..டிஸ்கில சொன்னது அந்தப் பாட்டு தான்!
ReplyDelete@ஆர்.கே.சதீஷ்குமார்//கண்ணதாசன் காரைக்குடிதான் இப்ப இருக்குற யூத்துக்கு தெரியும்// எல்லாருமே அப்ப்டி இல்லைண்ணே..உதாரணமா என்னை மாதிரி யூத்களுக்கும் கண்ணதாசனைப் பிடிக்குதே.
ReplyDelete@Ramsun//vasandha maaligai = kvm// அப்படியா..குழப்பத்தோடு தான் போட்டேன்..விக்கி கே.வி.எம் என்றது, பிற தமிழ் லிரிக்ஸ் இணையதளங்கள் எம்.எஸ்.வி. என்றன..யாராவது சொல்லட்டும்னு விட்டுட்டேன்..தகவலுக்கு நன்றி நண்பரே..திருத்தி விடுகிறேன்.
ReplyDelete@சென்னை பித்தன்//நான் பயந்தே போயிட்டேன்;’அந்த மாதிரி’ப் பாடலோ என்று?// ச்சே..நம்மால எவ்வளாவு பேருக்குக் கஷ்டம்.
ReplyDelete@சி.பி.செந்தில்குமார்//அதானே அண்ணன் டபுள் மீனிங்க்ல பேச மாட்டாரே ..// இதோட நிறுத்த வேண்டியது தானே..டீடெய்லு கொடுக்காராம் டீடெய்லு!
ReplyDelete@ஜீ...//அண்ணன் பழைய இரட்டை அர்த்தப் பாட்டையும் விரும்பிக் கேட்பீங்கன்னு புரியுது!:-)// தம்பி, பழைய பாட்டையும்-னு சொன்னாப் போதாதா?
ReplyDelete@FOODஹி..ஹி!
ReplyDeleteநேற்றிரவு திடீரென பழைய பாடல்களைக் கேட்கவேண்டுமெனத் தோன்றியது.//
ReplyDeleteவயசிலை பழையவர் என்றால் என்ன புதிய பாடலா கேட்கத் தோன்றும்;-))
அவ்....
வேறு ஏதாவது எதிர்பார்த்து வந்த நல்ல உள்ளங்கள் எனது ‘நானா யோசிச்சேன்’ பகுதிக்குப் போய் கடுப்பைத் தணித்துக் கொள்ளவும்.//
ReplyDeleteநீங்க இதெல்லாம் பண்ணுவீங்க என்று நமக்கு முன்னாடியே தெரியுமே.
பாடல் விமர்சனம், நீங்களில் இப் பாடலில் முத்துக் குளித்திருக்கிறீர்கள் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
ReplyDelete@நிரூபன்
ReplyDeleteமுதல் ரெண்டு கமெண்ட்டில் காலை வாரினாலும், கடைசிக் கமெண்ட்டிற்கு நன்றி.
அன்னை இல்லம் என்ற படத்தில் இடம் பெற்ற ""மடி மீது தலை வைத்து """
ReplyDeleteஎன்ற பாடலில் வரும் வரிகள் இவை............""".மஞ்சள் குங்குமம் நெஞ்சிலே,மல்லிகை மலர்கள் மண்ணிலே,பொங்கிய மேனி களைப்பிலே,பொழுதும் புலரும் அணைப்பிலே""".இது எத்தனை பேருக்கு புரியும்?பலே பாண்டியா என்ற படத்தில் வரும்""""" அத்திக்காய் காய் காய்.ஆலங்காய் வெண்ணிலவே"",என்ற பாடலும் எத்தனை பேருக்கு புரியும்?இதுவெல்லாம் ஒரு சின்ன உதாரணம்தான்.இவர் ஒரு கவிப் பேரரசர்.கவிச் சக்கரவர்த்தி.கம்பன்,பாரதிக்கு அடுத்த மிகப் பெரிய கவி.இன்றும் பலபேர் எழுதுகிறார்கள்.ஒரு எழவும் புரிவதில்லை.கேட்டால் கவிப் பேரரசு என்கிறார்கள்.கவிஞர் பாஷையிலே சொல்வது என்றால்,எல்லாம் காலம் செய்த கோலம் இது.