Tuesday, July 17, 2012

சுன்னத் செய்வது எப்படி? (கண்டிப்பாக 18 ப்ளஸ்)


டிஸ்கி: ரொம்ப நாட்களாகவே எழுத நினைத்திருந்த பதிவு. சமீபத்தில் நண்பரின் குழந்தைக்கு சுன்னத் செய்ய விவரம் தேடி அலைந்த கதையைக் கேட்டபின், உடனே எழுதுவது என்று முடிவு செய்தேன். அதனால சத்தியமா சொல்றேன்...இது ஒரு மருத்துவப் பதிவு!

“மச்சான்..போச்சு மச்சான்..போச்சு” என்று ஊரிலிருந்து மாப்ளை ஒருவன் ஃபோனில் அலறினான். நானும் பதறிப் போய் “என்னாச்சு மாப்ளே?” என்றேன். “மெயின் மேட்டர்ல உச்சா போனா, வலி..டாக்டர்கிட்டக் கேட்டா ரொம்ப வளர்ந்திருக்குன்னு சொல்றாரு” என்றான்

“அட..நல்ல விஷயம் தாம்லே..”என்றேன்.

“யோவ்..முன் தோலு மட்டும் நிறைய வளர்ந்திருக்காம்..என்னமோ பேரு சொல்தாரு அந்த நோய்க்கு..” என்றான். பிறகு டாக்டரிடன் பேசியதில் ’யூரின் போகும்போது முன் தோலை விலக்க முடியாமை, விலக்கினால் வலி...எப்போதும் அங்கே யூரின் இருப்பதால் இன்ஃபெக்சன் வருவது போன்றவையே இதற்கு அறிகுறி..உடனடியாக ஆபரேசன் செய்ய வேண்டும், இல்லையென்றால் தாம்பத்ய உறவின் போது வலி அல்லது கிழிந்து போதல் வரலாம்..இந்த ஆபரேசனுக்குப் பெயர் Circumcision..அதாவது சுன்னத்’ என்றும் சொன்னார்.

சுன்னத் என்றதும் என் ஸ்கூல் ஃப்ரெண்ட் கஸாலி(பெயர் மாற்றப்பட்டுள்ளது!) ஞாபகம் வந்தது. ஜீ.கே டெவலப் ஆகும் வாலிப வயதில் ‘சுன்னத் ஏன் செய்றீங்க பாய்?’ என்று அவனிடம் நண்பர்கள் சிலர் கேட்டோம். கஸாலி கற்பனை வளம் நிரம்பியவன். அவனிடம் போய்க் கேட்கலாமா? அவன் கேஷுவலாக ‘அதுவாலெ...நமக்கு கை, கால் எல்லாம் நீளமுல்லா..அப்புறம், சட்டையை இன் பண்ணா, நல்லா இருக்காதுல்லா?..அதாம்லே பாதியை கட் பண்ணிக்குவோம்’ என்றான். ‘பாதியைவா?’ என்று அரண்டு போனோம். பிறகொரு நாள் ஸ்கூல் (ஓப்பன்!) பாத்ரூமில் ’சின்ன கஸாலி’யைப் பார்த்துவிட்டு ‘பாதியே இப்படியா?’ என்று வயிறெரிந்தது தனிக் கதை.

சுன்னத் என்பது இஸ்லாமியர்கள் மட்டுமே கடைப்பிடிக்கும் வழக்கம் என்று தவறான புரிதல் நம் மக்களிடையே உண்டு. ஆனால் அது யூதர்கள் முதல் இந்துக்களில் ஒரு சமூகத்தினர் (படிக்க: கள்ளிக்காட்டு இதிகாசம்) வரை செய்து வருகின்றனர். அமெரிக்காவில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு சுன்னத் செய்யப்படுவதாக, நான் அங்கு இருந்தபோது என் அமெரிக்க கேர்ல் ஃப்ரெண்ட்(!), ஒருநாள் சொன்னாள். 

ஆனால் இதெல்லாம் படிக்காத என் மாப்ளைக்கு எப்படித் தெரியும்? எனவே அவன் ‘ஒரு முஸ்லிம் டாக்டர்கிட்டத் தான் ஆபரேசன் செஞ்சுக்குவேன். ராம்சாமி/ரமேசை நம்பியெல்லாம் இதைத் தர முடியாது. அது மட்டுமில்லை, இந்த மேட்டர் ஊரில் யாருக்கும் தெரியக்கூடாது. அதனால மெட்ரஸ்க்கு வர்றேன்..நீயே எல்லா ஏற்பாடும் செய்” என்று தெளிவாகச் சொல்லி விட்டான். (அப்போது நான் சென்னையில் இருந்தேன்).

சுன்னத்துக்கான ஏற்பாடு என்றதும் என் காலேஜ் மேட் ஹிசாம் சையது ஞாபகம் வந்தார். ஏனென்றால் காலேஜ் டேஸில் சுன்னத் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம் ‘சுன்னத் பண்ணா..அந்த நேரத்துல ம்..ம்ம்’ என்று எங்களை வெறுப்பேற்றுவது அவரின் வழக்கம். எனவே அவரிடம் மாப்ளையின் பிரச்சினையைச் சொன்னேன். 

அவர் குஷி ஆகிவிட்டார். ‘ஒன்னும் பிரச்சினை இல்லைய்யா..இது சும்மா கைல கீறிக்கிட்டா பேண்டேஜ் போடற மாதிரி தான்..மாப்ளையை வரச் சொல்லும்..கிடா வெட்டிடுவோம்’ என்றார். 

மாப்ளை சென்னை வரவும் ஒரு பொன்மாலைப் பொழுதில் திருவல்லிக்கேணியில் இருக்கும் ஒரு இஸ்லாமிய டாக்டரைப் போய்ப் பார்த்தோம். முதலில் ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் எடுத்தார்கள். ’யூரின் டெஸ்ட்டுன்னா, எவ்வளவு வேகமா அடிக்கோம்னு பார்ப்பாங்களா?’ என்ற மாப்ளையின் கேள்விக்கு விளக்கமாக ஒரு பதில் சொல்லி, எல்லா டெஸ்ட்டுகளும் எடுத்து முடித்தார்கள். ஒருநாள் கழித்து வரும்படியும், அன்று காலையில் ஆபரேசன் வைத்துக்கொள்ளலாம், மாலையில் டிஸ்சார்ஜ்’ என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்பின் குழந்தைகள் என்றால் 15 நாட்களுக்குள்ளும், பெரியோர் என்றால் 30 நாட்களிலும் புண் எல்லாம் ஆறி, நார்மல் ஆகிவிடலாம் என்று டாக்டர் தெம்பு சொல்லி அனுப்பி வைத்தார்.

ஆனால் அந்த முப்பது நாட்களும் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்ய வேண்டும் என்று ஹிசாம் சொன்னதை அடுத்து, ஒரு சிக்கல் எழுந்தது. எங்கள் பேசுலர் ரூமில் என்ன தான் ஆம்பிளைங்க மட்டுமே இருந்தோம் என்றாலும், அது மாப்ளைக்கு சௌகரியமாக இருக்காது என்பதால், திருவல்லிக்கேணியில் ஒரு லாட்ஜில் ரூம் போடுவது என்று முடிவு செய்தோம். அந்த லாட்ஜ் மேனேஜர் ரூமை ஒரு பேச்சிலருக்கு மாததிற்கு வாடகைக்கு விட யோசித்தார். பிறகு நாங்கள் விஷயத்தைச் சொல்லி, ‘இந்த நிலைமையில் ஐஸ்வர்யா ராயே வந்தாலும், ஒன்னும் பிரச்சினை இல்லை’ என்று புரிந்ததும் சந்தோசமாக ஒத்துக்கொண்டார்.

அந்த சுபமுகூர்த்த நாளில் நானும் ஹிசாமும் பலியாடுடன் ஹாஸ்பிடல் போய் இறங்கினோம். மாப்ளையின் பெயர் சிறு குழந்தையின் பெயர் போன்றே இருக்கும். எனவே அன்று காலை ஷிஃப்ட்டில் இருந்த நர்ஸ்கள், யாரோ ஒரு சின்னப்பையனுக்கு ஆபரேசன் என்று நினைத்து ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார்கள். நாங்கள் போய் நிற்கவும், ‘பேஷண்ட் எங்கே?” என்றார்கள். ‘இவன் தான்’ என்று மாப்ளையைக் காட்ட, மொத்த நர்ஸ் கூட்டமும் டரியல் ஆகியது. ஒரு சீனியர் நர்ஸ் ‘நான் மாட்டேன்பா’ என்று சொல்லிவிட்டு டாக்டர் ரூமைப் பார்த்து ஓடினார்.  மற்ற நர்ஸ்களும் அவர் பின்னாலேயே ஓட, ஏற்கனவே பயந்து போயிருந்த மாப்ளை மிரண்டு போனான்.

டாக்டர் (அநேகமாக) இங்கி-பிங்கி-பாங்கி போட்டு ஒரு நர்ஸை செலக்ட் செய்தார். பிறகு மாப்ளைக்கு ஆபரேசன் தியேட்டர் ட்ரெஸான கவுன் கொடுக்கப்பட்டது. அதை மட்டும் அணிந்துகொண்டு வரவேண்டும் என்று அந்த நர்ஸ் சொல்லிவிட்டு, ஆபரேசன் தியேட்டருக்குள் போனார். மாப்ளை திருதிருவென எங்களைப் பார்த்தபடியே, உள்ளே போனான்.

அங்கே மாப்ளை படுக்க வைக்கப்பட்டானாம். கண்ணைச் சுற்றி ஒரு கர்ச்சீப் போடப்பட்டதாம். கவுனில் இதற்கென்றே ஒரு ஓட்டை இருந்திருக்கும் போல.., டாக்டர் ஸ்ட்ரெயிட்டாக அதன்வழியே மேட்டருக்கு வந்தாராம். இரண்டு ஊசிகள் அந்த ஏரியாவில் போடப்பட்டன. (அது மட்டுமே அந்த ஆபரேசனில் கஷ்டமான விஷயம்.) அதன்பின் அந்த ஏரியாவே மரத்துப் போனதாம். அதன்பின் கத்திகளை எடுக்கும் சத்தம் கேட்டது. டாக்டர் மேட்டரில் கை வைக்க, மாப்ளை அலறினானாம் ‘டாக்டர்..உங்க மருந்து வேலை செய்யலை..நீங்க தொடறது இன்னும் தெரியுது..அவசரப்பட்டு அறுத்துடாதீங்க’ என்று.

அதற்கு டாக்டர் சிரித்துக்கொண்டே ‘தம்பி, தொடறது எல்லாம் தெரியும்ப்பா..ஆனால் வலிக்காது’ என்று சொல்லும்போதே அந்த ஏரியா குளிர்ந்து போனது. எவ்வளவு படிச்ச டாக்டர்..இப்படி நம்மளை குளிப்பாட்டுறாரே என்று மாப்ளைக்கு ஃபீலிங்ஸ் ஆகிடுச்சு. ‘நீங்க ஏன் டாக்டர் தண்ணியை ஊத்துறீங்க?” என்று மாப்ளை கேட்டதுக்கு ஆபரேசன் முடியட்டும் சொல்றேன் என்றாராம். கொஞ்ச நேரம் எல்லாப் பொறுப்பையும் டாக்டர்/நர்ஸ்களிடம் ஒப்படைத்து விட்டு, மாப்ளை சும்மா படுத்திருந்தானாம். அடுத்த பத்து நிமிடத்தில் ஆபரேசம் முடிந்தது. ’இன்னும் கால் மணி நெரம் சும்மா படுத்திருங்க. அப்புறம் ஆரம்பத்துல நான் தண்ணியை ஊத்தலை..அது ரத்தம்’ என்று சொல்லிவிட்டு எல்லாரும் வெளியே போக, மாப்ளை ’அவ்வளவும் ரத்தமா..அவ்வ்’ என்று படுத்திருந்தான்.

அறைக்கு வெளியே ‘புருஷன்’ மாதிரி காத்திருந்த என்னிடம் ‘எல்லாம் நல்லபடியா முடிஞ்சது.’ என்று ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார்கள். கால்மணி நேரத்தில் மாப்ளை ரூமுக்கு நடந்தே வந்தான். (சில ஹாஸ்பிடலில் உடனே நடக்க விடுவதில்லை). அதன்பின் மூன்று மணி நேரத்திற்கு அசையாமல் படுத்திருக்க வேண்டும் என்றார்கள். ஹிசாம் குஷியாக ‘சரிய்யா..அறுப்பு முடிஞ்சது..எங்களுதுல சுன்னத் பண்ணா, பிரியாணி போடுவோம்..அதனால நான் போயி பிரியாணி வாங்கிக்கிடு வர்றேன்’ என்று சொல்லி பிரியாணிக்கு ஏற்பாடு செய்தார்.

மாலையில் ’வீட்டிற்குப் போகலாம்..சுற்றிலும் ரவுண்டாக ஒரு பேண்டேஜ் போட்டிருக்கிறோம்..அதில் தினமும் மூன்று வேளை காய்ச்சிய தேங்காய் எண்ணெய் மட்டும் போட்டால் போதும்..பெயின் கில்லர் டெப்ளெட்ஸ் எழுதியிருக்கேன்..அதையும் சாப்பிடுங்க..இனிமேல் அது கையில் பட்ட காயத்திற்கு எண்ணெய் போடுவது போல் தான்.’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். லாட்ஜில் மாப்ளையை இறக்கி விட்டு, டின்னர் முடித்து, வெளியேறினோம்.

அடுத்த பதினைந்து நாட்களிலேயே பேண்ட் போடும் அளவுக்கு எல்லாம் சரியாகியது. இடையில் பெயின் கில்லர் மாத்திரைகளும், தேங்காய் எண்ணெயும் மட்டுமே மருந்து. ’ஆரம்பத்தில் கொஞ்சம் வீக்கம் இருந்துச்சு..இப்போ இல்லை..கையில் கீறிக்கிட்டா, பேண்டேஜ் போடுவோமே..அதே மாதிரி தான்..ஒன்னும் பெரிய விஷயமில்லை’ என்று மாப்ளை பேசுவதை ஆ-வென்று பார்த்துக்கொண்டிருந்தோம்.

அந்த நாட்களில் ஒரே ஒரு சிக்கல்..மனதை அலைபாய விடக்கூடாது..டிவியில்கூட ஐயிட்டம் சாங்ஸ் பார்க்கக்குடாது. அவ்வள்வு ஏன்..இந்த ஸ்டில்லைக் கூட பார்க்கக்கூடாது:
படுத்தால் தூங்கிவிட வேண்டும். கண்டிப்பாக எழுந்திரிக்கக்கூடாது. மீறினால்....வலி பின்னிப் பெடலெடுத்துமாம். எனவே மாப்ளை கவனமாக நியூஸ் சேனல் மட்டுமே பார்த்தான். 

முப்பதாவது நாளில் டாக்டரைப் போய்ப் பார்த்தோம். அவர் பேண்டேஜைப் பிரித்துவிட்டு, கார் கியர் ராடைப் போல பிடித்துக்கொண்டு, டார்ச் லைட் அடித்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ‘ஓகே..இனிமே ஒன்னும் பிரச்சினை இல்லை..நீங்க வழக்கம்போல என்ன வேணா பண்ணலாம்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

ஆனால் மாப்ளை  சர்வ ஜாக்ரதையாக அடுத்த ஒரு மாததிற்கும் விரதம் இருந்ததைப் பெருமையுடன் எனக்கு ஃபோனில் சொன்னான். இந்த லீவில் தான் மாப்ளைக்கு கல்யாணம் ஆனது. நான் ஊருக்குத் திரும்புவதற்கு கொஞ்ச நாள் முன்பு பேசிக்கொண்டிருந்தோம்.

‘அந்த ஆபரேசன் பண்ணது நல்லது தான் மச்சான்..அந்த நேரத்துல ம்..ம்ம்’ என்றான்.

அடப்பாவி..நீயுமாடா வெறுப்பேத்துறே..நல்லா இருங்கடே..நல்லா இருங்க!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

41 comments:

  1. It will give mileage but shock absorber illenna back pain varaadhu?

    ReplyDelete
  2. ரொம்பநாள் கழித்து செங்கோவி ஸ்டைலில் ஒரு பதிவு - செங்கோவி - 2:-)

    ReplyDelete
  3. ஹீ ஹீ... ரொம்ப நாசூக்கா எழுதிருகீங்கண்ணே..

    ReplyDelete
  4. சூப்பர்ணே! பல நாளுக்கப்புறம் பழைய அண்ணனைப் பாக்கேன்! ஆனா எனக்குத்தான் ஒண்ணுமே புரியல! I am < 18

    ReplyDelete
  5. @மொக்கராசு மாமா
    //ஹீ ஹீ... ரொம்ப நாசூக்கா எழுதிருகீங்கண்ணே..//
    நாசூக்கா ஒப்ரேஷன்தானே பண்ணியிருந்தாங்க? :-)

    ReplyDelete
  6. //ராம்சாமி/ரமேசை நம்பியெல்லாம் இதைத் தர முடியாது//
    நம்ம மாம்ஸ், சிப்பு? :-)

    ReplyDelete
  7. //இந்துக்களில் ஒரு சமூகத்தினர் (படிக்க: கள்ளிக்காட்டு இதிகாசம்) வரை செய்து வருகின்றனர்//

    ஆமால்ல...மொக்கராசுக்கு 'மார்க்க கல்யாணம்'னு சொல்லி பண்ணுவாங்க!

    ReplyDelete
  8. ///ஜீ... said... [Reply]

    @மொக்கராசு மாமா
    //ஹீ ஹீ... ரொம்ப நாசூக்கா எழுதிருகீங்கண்ணே..//
    நாசூக்கா ஒப்ரேஷன்தானே பண்ணியிருந்தாங்க? :-)
    ////

    அதேதான் பாஸ், ஆபரேஷன் பண்ணது மாதிரியே ரொம்ப நாசூக்கா எழுதிருக்காரு..

    சாம்பிளுக்கு: //படுத்தால் தூங்கிவிட வேண்டும். கண்டிப்பாக எழுந்திரிக்கக்கூடாது.//

    ReplyDelete
  9. ///ஜீ... said... [Reply]

    //இந்துக்களில் ஒரு சமூகத்தினர் (படிக்க: கள்ளிக்காட்டு இதிகாசம்) வரை செய்து வருகின்றனர்//

    ஆமால்ல...மொக்கராசுக்கு 'மார்க்க கல்யாணம்'னு சொல்லி பண்ணுவாங்க!
    ////

    நீங்க என்ன சொல்லலயே!!

    ReplyDelete
  10. யோவ் செங்கோவி.........!

    என்னால முடியல்ல. சிரிச்சு சிரிச்சு வயிறு நோவுதய்யா. எவ்வளவு சீரியசான விசயத்தை இவ்வளவு சிரிக்க எழுதியிருக்கீங்க.

    சரவெடி!

    செங்கொவி திரும்பவும் சிக்ஸர் அடிக்க ஆரம்பிச்சிட்டாருடோய்!

    ReplyDelete
  11. இது வழக்கமான நேரம் இல்லையே....

    செங்கோவி...."தம்பி" தூங்கிட்டானா-னு பார்க்க
    வந்தது போல தெரியுது...!!!!!!!!!!!!

    (நான் ""மொட்டை"" தம்பியை சொன்னேன்.)

    ReplyDelete
  12. அண்ணா 15 நாள் எல்லாம் இல்லை 6 நாட்கள்தான். எனக்கு 6 நாளில் மாறி விட்டது நான் 5 நாளில் ஜட்டியே போடேன்.
    என்னுடைய மருமகனுக்கு பிறந்து 40 நாட்களில் செய்தது. காலையில் வெட்டினார்கள் அவன் அழவில்லை நான்தான் அழுதேன். அடுத்த நாள் பின்னேரம் பெம்பஸ் போடு பீச் கூடி போனம் எண்டால் பர்துகொல்லுன்களேன்.

    ReplyDelete
  13. சீரியஸான டெரர் விஷயத்த சிரிப்போட நேக்கா சொல்லியிருக்கீங்க. ஆபரேஷன்ல ஊசி போட்டதுக்கு பதிலா உங்க பதிவை காட்டிட்டு ஆபரேஷன் பண்ணியிருக்கலாம். சிரிச்சு வலி தெரியாம இருந்திருக்கும்.

    ReplyDelete
  14. நல்லவேளை, மாப்பிள்ளை நியூஸ் பார்க்கும் போது சன் நியூஸ் ல நித்தி ரஞ்சி பிட்டு சீன் போடல . போட்டிருந்தா ????????

    ReplyDelete
  15. நல்லவேளை, மாப்பிள்ளை நியூஸ் பார்க்கும் போது சன் நியூஸ் ல நித்தி + ரஞ்சி பிட்டு சீன் போடல . போட்டிருந்தா ????????

    ReplyDelete
  16. நல்லவேளை, மாப்பிள்ளை நியூஸ் பார்க்கும் போது சன் நியூஸ் ல நித்தி ரஞ்சி பிட்டு சீன் போடல . போட்டிருந்தா ????????

    ReplyDelete
  17. தலைவா ஏதோ செய்முறை விளக்கம் என்று பார்த்தால் வேறு மாதிரி இருக்கிறது. படிக்கும்போதே என்னவோ பண்ணுகிறதே? எப்படி டைப் செய்தீர்கள்?

    ReplyDelete
  18. மாப்ளையின் பெயர் சிறு குழந்தையின் பெயர் போன்றே இருக்கும்.
    /////////////////////////
    செங்கோவி உங்க மாப்ள பேரு சுரேஷ்தானே......அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  19. யோவ்............கஸாலி என்ற பேரில் ஏதும் உள்குத்து இல்லியே...

    ReplyDelete
    Replies
    1. Epdi irunthalum namaluku tan vettitangale😂😂😂.

      Delete
  20. ஹஹஹாஆஆஆஅ வழக்கம்போல சூப்பரான பதிவு அந்த மாறி நேரத்துல ம்ம்ம்ம்ம்ம் ஆஹஆஹ

    ReplyDelete
  21. மாம்ஸ்.....

    பாவம்யா அவரு...

    அவர வச்சு காமிடி பண்ணி ()குளிர சிரிக்க வச்சுடிங்களே...

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. அதில் தினமும் மூன்று வேளை காய்ச்சிய தேங்காய் எண்ணெய் மட்டும் போட்டால் போதும்.

    ......"காய்ச்சி ஆறவச்சி"

    ReplyDelete
  24. ayyoo sema comedy ya... sirichi sirichi vairu valikuthu

    ReplyDelete
  25. ரொம்ப அருமையா நகைச்சுவை நடையிலே சொல்லியிருக்கிங்க, சிரிச்சு,சிருச்சி வயிறு புன்னாயிடுச்சு.

    ReplyDelete
  26. இன்னிக்கு லுங்கி கட்டிய ஒரு ஒழக்கு பையன் (முஸ்லிமாக தான் இருக்கணும்) பார்த்ததும் , சுன்னத் விளக்கம் படிக்க தோன்றியது . அருமையான நேர் (?) முக வர்ணனை

    ReplyDelete
  27. CBE G M C H
    6/02/17 GOING TO DO MY AGE 21

    ReplyDelete
  28. எனக்கும் இதே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியவுடன் இணையத்தில் தேடிய போது தங்களின் பதிவு கிடைத்தது. படித்ததில் எனக்கு நம்பிக்கை அளித்தது. பயமின்றி முன் தயாரிப்புக்களோடு செய்து கொண்டு தற்போது ஓய்வில் உள்ளேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  29. அண்ணா இந்த ஆப்ரேசன் பண்ணா எவ்வளவு செலவு ஆகும்... சேலம் ல எந்த hospital பரவாலனு சொல்லுங்க அண்ணா pls... வெளியே யாருகிட்டயாவது கேக்க கொஞ்சம் தயக்கமா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. Dr. Karthik Gunasegaran on circumcision in Tamil endru youtube la search panunga thambi. Kunji tolai vettuvathu nallathu.

      Delete
    2. Dr. Karthik gunasekaran sexology specialist, itharku endre awar famous. Try bro

      Delete
  30. Bro ungal machan sonnathu nijame, vettinal sukam inum athikam kidaykum.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.