Friday, November 16, 2012

துப்பாக்கி - கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்

அதாகப்பட்டது... :
முதலில் ஏன் துப்பாக்கி விமர்சனம் எழுதவில்லை என்று கேட்ட நண்பர்களுக்கு நன்றி. இங்கே வியாழக்கிழமை மட்டுமே படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.(அன்று தான் படங்கள் சென்சார் செய்யப்படுவதாகச் சொல்கிறார்கள்.) எனவே இந்தியாவில் வெள்ளிக்கிழமை ரிலீஸ் என்றால், இங்கே முதல் நாளே (சந்தோசமாக) பார்க்க முடியும். ஆனால் துப்பாக்கி இந்தியாவில் செவ்வாய்க்கிழமை ரிலீஸ் ஆனதால், நமக்கு ஆப்பு ஆகிவிட்டது. சரி, ஒரு வழியாக படம் இன்று பார்த்தாகிவிட்டது.சக பதிவர்களின் பாசிடிவ் விமர்சனத்தை முழுக்க ஆமோதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இங்கே குவைத்தில், தியேட்டரில் இவ்வளவு பலத்த கைதட்டல்களுடன் வேறு படங்களை நான் பார்த்ததில்லை. முருகதாஸிற்கு
வாழ்த்துகள்!

 
ஒரு ஊர்ல.....................:

நாட்டின் எல்லையில் கடும் குளிரிலும் வெயிலிலும் வாடி, நாட்டுக்காகப் போரிடும் ஆர்மிக்கும், நாட்டுக்குள்ளேயே புற்றுநோயாய்ப் புரையோடி நாட்டை அழிக்கும் ஸ்லீப்பர் செல்லுக்கும் இடையிலான போரே ‘துப்பாக்கி’.

திரைக்கதை :

வாவ்..எத்தனை நாளாகிவிட்டது, இப்படி ஒரு பரபர ஆக்சன் படத்தைப் பார்த்து. ஆர்மியிலிருந்து திரும்பும் ஹீரோ-பெண் பார்க்கும் படலம்,ரசிக்க வைக்கும் ஹீரோ-ஹீரோயின் மோதல் என காமெடி+காதலுக்கான பேஸை படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் சொல்லிவிட்டு, ஆக்சன் களத்தில் குதிக்கிறது திரைக்கதை.

மும்பையில் பன்னிரெண்டு இடங்களில் ஸ்லீப்பர் செல்(தீவிரவாதிகள்?) குண்டு வைக்கும் திட்டத்தை விஜய் முறியடிக்கும் சீக்குவன்ஸ் அட்டகாசம். வலிந்து திணிக்கப்பட்ட காட்சி என்று எதுவும் இல்லாமல், பன்ச் டயலாக்ஸ் இல்லாமல், விஜய்யின் ஆக்சன் படமா என்று இன்னும் நம்ப முடியாமல் ஆச்சரியமாக உள்ளது.
ஜெயராமும், சத்யனும் காமெடிக்கு கை கொடுக்க, ஒரு நல்ல கமர்சியல் மூவி என்பதற்கான அத்தனை அம்சங்களுடன் திரைக்கதையை உருவாக்கியுள்ளார் முருகதாஸ். ஏழாம் அறிவில் கோட்டை விட்ட அவர், இதில் விழித்துக்கொண்டு ஃபுல் ஃபார்மில் உருவாக்கியுள்ள படம் இது. ஏற்கனவே ரமணாவும், கஜினியும் திரைக்கதைக்காகவே என் கலெக்சனில் உண்டு. இப்போது துப்பாக்கியும்!


விஜய் :

நண்பனிலேயே ஃப்ரெஷ்ஷாகத் தெரிந்த விஜய், இதில் இன்னும் மெருகுகூடி, கலக்கலாக வருகிறார். பழைய காதலுக்கு மரியாதை கால விஜய்யைப் பார்ப்பது போல் உள்ளது. போக்கிரி, வில்லுவில் விஜய்யின் போலீஸ்/ஆர்மி கெட்டப் நம்மை டரியல் ஆக்கியிருக்க, இதில் எப்படி இருப்பாரோ என்று போனால், கச்சிதமாக அந்த கேரக்டருக்குப் பொருந்துகிறார். விஜய் பஞ்ச் டயலாக்குளை நம்புவதை விட, இது போன்ற நல்ல கதைகளை நம்பலாம்.

காஜல் அல்வா :

யாராவது நல்ல ஃபிகர் வந்தால், முதலில் கண்டுகொள்ளாமல் விரட்டி அடிப்பதும், அதே நடிகை தெலுங்கில் ஹிட் அடித்ததும் பின்னாலேயே ஓடுவதும் நம் தமிழ்சினிமாவுக்கு வழக்கமான ஒன்றாகப் போய்விட்டது. அந்த வகையில் காஜல் அகர்வாலை இப்போது தான் கண் விழித்துப் பார்க்கிறார்கள்.ஆனாலும் பத்தரை மாற்றுத் தங்கம் என்று சொல்ல முடியாது, ஒரு மாற்றுக் குறைவு தான். ஆனாலும் விஜய்யையே அழகாக காட்டிய சந்தோஷ் சிவன், காஜலை மட்டும் விட்டுவிடுவாரா என்ன?

சத்யன் :
நண்பனுக்குப் பிறகு விஜய்யுடன் கூட்டு சேர்ந்துள்ளார் சத்யன். பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் போர். ஜெயராம் பகுதி, சத்யன் காமெடியை விட பெட்டர் தான்.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- ஸ்லீப்பர் செல் என்பது தான் இந்தியாவிற்கு உண்மையான  அச்சுறுத்தல். இஸ்லாமிய தீவிரவாதமானாலும், சீனத்தீவிரவாதமானாலும்,மோடியின் ஹிந்துத்தீவிரமானாலும் அது செயல்படும் முறை ஒன்று தான். முதலில் தன் மதத்துக்கு/கொள்கைக்கு எதிராக இந்திய அதிகார வர்க்கமே செயல்படுவதாகவும், மதப்பிடிப்பு/மதச்சார்பின்மையின் பெயரால் தங்கள் உரிமைகள் நசுக்கப்படுவதாகவும், இந்தியா வாழத்தகுதியற்ற நாடாக ஆகிவிட்டதாகவும், நம் மதத்தை/கொள்கையை காப்பது ஒன்றே நம் முக்கியக் கடமை என்றும் பல்வேறு அறிவுஜீவிகள் உதவியுடன், ஊடகங்கள் வழியாகவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். அதில் மயங்கும் தீவிர எண்ணம் கொண்டோரை ஸ்லீப்பர் செல்லாக உபயோகித்து, மக்கள் கூடும் மருத்துவமனைகளிலும், கடைகளிலும், பிற மதத்தினர் வாழும் பகுதியிலும் அட்டாக் மேற்கொள்ளப்படும். இதனால் பொதுமக்கள், ஸ்லீப்பர் செல்லுக்கும் சாமானியர்களுக்கும் வித்தியாசம் புரியாமல் அட்டாக்கில் ஈடுபட்ட குரூப்பை வெறுத்து ஒதுக்க, அடிப்படைவாதிகளும் ‘பார்த்தீர்களா, நாங்க சொன்னது சரி தானே, உங்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துகிறார்கள் பாருங்கள்’என்பார்கள். ஸ்லீப்பர் செல் எண்ணிக்கை கூடும். மத அடிப்படைவாதிகள் தொடர்ந்து செய்வது இதைத் தான். இந்த படத்தில் உள்ள பிரச்சினை, இது முஸ்லிம்களை மட்டுமே குறிப்பிட்டது போல் ஆகிவிட்டது தான்.ஸ்லீப்பர் செல்லுக்கு உதவுபவராக ஒரு மாற்று மதத்தினரையும் காட்டியிருக்கலாம்.

- ஜெயராம் விஜய்யின் உயர் அதிகாரி என்றாலும், விஜய் தன் ஆபரேசனைப் பற்றி அவரிடம் ஒன்றும் சொல்லாமல் இருப்பதும், ஜெயராமை கேணயனாக மட்டுமே காட்டியிருப்பதும்.

- பாடல்கள் (கூகுள் தவிர்த்து!)

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- தீவிரவாதத்தின் மையப்புள்ளியானா ஸ்லீப்பர் செல்லைத் தொட்டது

- நல்ல கதையுடன், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக எடுத்தது

- சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு

- ஷார்ப்பான வசனங்கள் : ’நீ தப்பான இடத்தில கை வச்சிட்ட’எனும் ஸ்லீப்பர் செல்லின் வசனமும் ‘ஸ்லீப்பர் செல் அத்தனை பேரும் சாதாரண ஆளுங்க..சொன்னா அவங்க குடும்பமும் யாருமே நம்ப மாட்டேங்கிறாங்க’ எனும் யதார்த்ததை பிரதிபலிக்கும் வசனமும், உடல் ஊனமுற்ற ராணுவத்தினர் பற்றிய வசனங்களும்

அப்புறம்...:
நாட்டுக்காக போராடும் நமது ராணுவத்தினர் & அவர்களின் குடும்பத்தினர் செய்யும் தியாகங்களை இந்தப் படம் அளவிற்கு வேறு படங்கள் சொன்னதில்லை. ரமணாவில் ஒரு வசனத்தில் ராணுவ வீரர்களைப் பற்றி ஒரு வரி வரும். அதன் விரிவாக்கமாகவே இந்தப் படம் தெரிகிறது. நாங்கள் எல்லையில் இவ்வளவு தியாகங்கள் செய்யும்போது, உள்ளுக்குள் இருக்கும் உங்களுக்கு நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு இல்லையா என நம் மனசாட்சியைப் பார்த்துக் கேட்பதாகவே உள்ளது இந்தப் படம்.

விஜய்யைப் பிடிக்காதவர்களுக்குக்கூட, இந்தப் படம் பிடிக்கும்.


பார்க்கலாமா? :

கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

  1. உங்க ஊரில சப்‍டைட்டில் போடுவார்களா?

    ReplyDelete
  2. ம்ம்ம் இரண்டாம் தடவை பாஸ்!

    ReplyDelete
  3. நானும் பார்த்திட்டேன் இந்தக் காவியத்தை. அப்பறம் கூகுள் கூகுள் பாட்டில் காஜலின் ஆட்டம் பற்றி குறிப்பிடாததற்கு கடும் கண்டங்கள்

    ReplyDelete
  4. ////யாராவது நல்ல ஃபிகர் வந்தால், முதலில் கண்டுகொள்ளாமல் விரட்டி அடிப்பதும், அதே நடிகை தெலுங்கில் ஹிட் அடித்ததும் பின்னாலேயே ஓடுவதும் நம் தமிழ்சினிமாவுக்கு வழக்கமான ஒன்றாகப் போய்விட்டது.///

    ஃபேக்ட்டு ஃபேக்ட்டு ஃபேக்ட்டு ஃபேக்ட்டு... இததான் என் நண்பன் புட்டிபாலும் சொன்னான்.. எப்புடித்தான் வேவ்லெந்த் ஒத்துபோகுதோ!!

    ReplyDelete
  5. பார்க்கணும்.என் மகன் முதல் நாள் 8 மணி ஷோவிற்கு போயிட்டு வரும் போதே முகம் நிறைய சந்தோஷத்துடன் வந்தான்.

    ReplyDelete
  6. முதலாவது முறை ஆரம்பத்தை சில தியேட்டர் கூத்துக்களில் மிஸ் பண்ணிவிட்டேன். வாழ்க்கையில் முதல் முதலாக இரண்டு முறை பார்த்த விஜய் படம்... நல்லாவே இருந்துச்சு. :)

    ReplyDelete
  7. இத்தனை பேரு நல்லா இருக்குதுன்னு சொல்லிட்டப்புறம் பார்க்கலைன்னா நல்லா இருக்காது! பார்த்துடுவோம்!

    ReplyDelete
  8. இப்போத்தான் கம்பியூட்டர்ல படத்தை பார்க்க ஏற்ப்பாடு பண்ணிக்கிட்டு இருக்கேன், இன்னைக்கு நைட்டு பார்த்திடறேன். [அய்யய்யோ என்னை அப்படி பார்க்காதீங்க, கம்பியூட்டர்ல டிக்கட் புக் பண்ணினேன்............ஹி .........ஹி .........ஹி .........].

    ReplyDelete
  9. நல்ல விமர்சனம்

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.