Saturday, January 12, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
’என் கதை கதை-உன் கதை கதை...உன் கதை என் கதை!’என ஒரு மல்லுக்கட்டிற்குப் பின் வெளியாகும் படம் என்பதாலும், ’இன்று போய் நாளை வா’படத்தின் ரீமேக் என்பதாலும் சந்தானம்-பவர் ஸ்டார் காம்பினேசன் என்பதாலும் என் எதிர்பார்ப்பைக் கிளப்பிய படம். வழக்கம்போல் ஒருநாள் முன்னதாக, படமும் விமர்சனமும் இங்கே ரிலீஸ்!

 ஒரு ஊர்ல.....................:
அந்த ஒரு ஊர்ல ஒரு ஃபிகரும் அவரது குடும்பமும் புதிதாகக் குடியேற, அந்த ஃபிகரை மடக்க மூன்று ஹீரோக்களுக்கு வரும் ஆசையும் அதற்கு அவர்கள் செய்யும் அழிச்சாட்டியமுமே கதை
திரைக்கதை:
ஆரம்பம் முதல் இறுதிவரை காமெடியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இறங்கியிருக்கிறார்கள். ’கல்யாணம் டூ கருமாதி’காண்ட்ராக்டராக சந்தானமும், வயதாகியும் யூத்தாக வெளியில் ஜொள்ளிக்கொண்டு திரியும் பவர் ஸ்டாரும், மூவரில் கொஞ்சம் சின்சியர் லவ்வராக(ஹீரோவாம்!) அறிமுக நடிகர் சேதுவும் ஊரில் ஃபிகர் கிடைக்காமல் நண்பர்களாக அலைந்து கொண்டிருப்பதைச் சொல்லி முடித்ததும் ஹீரோயின் அறிமுகம்.

அந்த ஃபிகரை கிடைக்க வேண்டும் எனும் ஆவலில் மூவரும் ஆளுக்கொரு ரூட்டை பிடிக்கிறார்கள். சேது ஹீரோயின் அம்மாவிற்கு எடுபிடி வேலைகள் செய்ய,சந்தானம் ஹீரோயின் சித்தப்பா (வி-தா-வ-கணேஷ்)விடம் பாடக சிஷ்யனாய்ச் சேர, பவர் ஸ்டார் ஹீரோயின் அப்பாவான மாஸ்டர் சிவசங்கரனிடம் நாட்டியப் பேரொளியாக(!) களமிறங்குகிறார்கள். சந்தானம் மற்றும் பவர் ஸ்டார் குரு-க்களிடம் செய்யும் காமெடி அதகளம்.
ஒவ்வொரு சீனும் சிரிக்கும்படி இருக்க வேண்டும் என்று களமிறங்கியிருக்கிறார்கள். பெரும்பாலான சீன்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

சந்தானம்:
படத்தின் ஹீரோவாக ஒருவர் இருந்தாலும், மெயின் கேரக்டராக சந்தானம் கலக்குகிறார். ‘மார்கழிக் குளிர்ல ரொம்ப நேரம் குனிஞ்சு நிற்காத’ என்பதில் ஆரம்பித்து ‘ நைட் தூக்கம் வர்லையா? ஏன், மத்தியானமே தூங்கிட்டயா?’ என கலாய்க்கும் வசனங்களால் வழக்கம்போல் சூப்பர். ஹீரோயினைக் கரெக்ட் பண்ண, கணேஷிடம் அவர் படும்பாடு சிரிப்பை வரவழைக்கிறது. அதுவும், பானைக்குள் அவர் உட்கார்ந்திருக்கும் சீன், கலக்கல்.

பவர் ஸ்டார் சீனிவாசன்:
அறிமுகக் காட்சியிலேயே பள்ளி மாணவியை லவ்வ, அந்தப் பெண் ‘உங்களை என் அப்பா கல்யாண ஃபோட்டோ பார்த்திருக்கேன்..என் அப்பா ஃப்ரெண்ட் தானே நீங்க?’ என்று கேவலப்படுத்த, ரகளையாக அறிமுகம் ஆகிறார் பவர் ஸ்டார். 
பல இடங்களில் அபாரமான   பாடி லாங்வேஜ்களால் கலக்குகிறார். வாயை வைக்கும் விதம், உடலை அசைக்கும் பாங்கு என பவர் ஸ்டார், ஒரு முழு காமெடியனாக இதில் அவதாரம் எடுத்திருக்கிறார். இனி ஹீரோவாக நடிப்பது போன்ற காமெடிகளைப் பண்ணுவதை விட்டுவிட்டு, காமெடியனாக நடிக்க ஆரம்பிக்கலாம்.பல சீன்களில், இவரது பிரசன்ஸே சிரிப்பை வரவழைக்கிறது.


ஹீரோவும் ஹீரோயினும்:

அறிமுக நடிகர் சேது என்பவர் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். நடிப்பு, காமெடி என எல்லாவற்றியும் நன்றாகவே பண்ணியிருக்கிறார்.நல்ல படம் அமைந்தால், மேலே வரலாம்.

சொம்பு ரொம்ப......................
 ஹீரோயினாக விஷாகா சிங். பக்கத்து வீட்டுப் பெண் போல் இருக்கிறார். (நான் சொன்னது, என் பக்கத்து வீட்டு பெண் போல..அவ்வ்!). ஆனாலும் பவருக்கு ஜோடியாக ஆட, அனுஷ்காவா வருவார்? ஏதோ கிடைத்தவரை ஓகே என இவரைப் போட்டிருப்பார்கள் போல..லாங் ஷாட்டில் குமரியாகவும், க்ளோஷப்பில்...சரி, வேணாம்..பாவம்!

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- ’இன்று போய் நாளை வா’படத்துடன் ஒப்பிடும்போது, அதில் இருந்த உயிர்ப்பு இதில் இல்லை.

- காமெடி..காமெடி என்று போகும்போது, ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டுகிறது.

- தேவையில்லாமல் வரும் பாடல்கள். தமிழ்ப்படம் என்றால், இத்தனை பாட்டுகள் அவசியம் வைத்தே ஆக வேண்டுமா என்ன?

- தனித்தனியாக காட்சிகள் களை கட்டினாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஏதோ ஒரு வெறுமை தெரிகிறது.

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- சந்தானம்

- பவர் ஸ்டார்

- காமெடி..காமெடி..காமெடி

- எல்லா நடிகர்களிடமிருந்தும், நகைச்சுவையான நடிப்பை வாங்கிய இயக்குநர் மணிகண்டனின் திறமை

அப்புறம்...:

திரைக்கதைத் திலகம் பாக்கியராஜ், அந்த காலகட்டது ஆண்களின் உணர்வை துல்லியமாகப் பதிவு செய்த அளவிற்கு இந்தப் படம் செய்யவில்லை. ராதிகாவிடம் இருந்த வெகுளித்தனம், இந்த ஹீரோயினிடம் மிஸ்ஸிங். மொத்தத்தில் ஒரிஜினலுடன் ஒப்பிடாவிட்டால், ரசிக்கலாம்.

பார்க்கலாமா? :
-  காமெடிக்காக ஒரு முறை பார்க்கலாம்.

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

18 comments:

 1. நன்றி.....சென்கோவி...........

  ReplyDelete
 2. Good review anna.. IPNV irukkattum, but KLTA will be the first superhit of 2013.. comedykkaga oru vaatti illa, naanga 10 vaatti paarpom.. thanksnna.. :-)

  ReplyDelete
 3. @Real Santhanam Fanz (General) படம் எப்படி இருந்தாலும், பத்து வாட்டி பார்க்கத்தானய்யா போறீங்க!

  ReplyDelete
 4. //நாய் நக்ஸ் said...

  நன்றி.....சென்கோவி..........//

  இவரு ஏன் நன்றி சொல்றாரு? அண்ணனும் ஒரு புரடியூசரோ?

  ReplyDelete
 5. இனிய (போ)தை பொங்கல் நல் வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 6. /நாய் நக்ஸ் said... [Reply]

  இனிய (போ)தை பொங்கல் நல் வாழ்த்துக்கள்..... //

  சுத்தம்...விளங்கிரும்..வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 7. கண்டிப்பா பார்க்கணும் தல பவர் ஸ்டார் காக

  ReplyDelete
 8. படம் நல்லாருக்குன்னு சொல்ரீங்களா இல்லேன்னு சொல்ரீங்களா?பாக்கலாமா வேனாவா?

  ReplyDelete
 9. //பூந்தளிர் said...
  படம் நல்லாருக்குன்னு சொல்ரீங்களா இல்லேன்னு சொல்ரீங்களா?பாக்கலாமா வேனாவா? //

  ஒரிஜினலுடன் கம்பேர் பண்ணாமல், வெறுமனே காமெடி லூட்டி மட்டும் போதும் என்ற மனப்பான்மையுடன் போனால், ரசிக்கலாம்.

  ReplyDelete
 10. வணக்கம் செங்கோவி!முதலில் உங்களுக்கு,உங்கள் குடும்பத்தினருக்கும் தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்.////எப்போதுமே முதலில் பார்த்து விட்டு விமர்சிக்கும் உங்களுக்கு நன்றி!(நெட்டில வந்திட்டுதாம்,பாத்துடுவோம்!)

  ReplyDelete
 11. //Yoga.S. said...
  வணக்கம் செங்கோவி!முதலில் உங்களுக்கு,உங்கள் குடும்பத்தினருக்கும் தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்.////


  நன்றி ஐயா..

  ReplyDelete
 12. மாம்ஸ்....

  தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்......

  ReplyDelete
 13. பவர்ஸ்டார் நெஜமாவே பவர்ஸ்டார் ஆகிட்டாரு.....

  ReplyDelete
 14. ////செங்கோவி said...
  //நாய் நக்ஸ் said...

  நன்றி.....சென்கோவி..........//

  இவரு ஏன் நன்றி சொல்றாரு? அண்ணனும் ஒரு புரடியூசரோ?//////

  அவரு பவர்ஸ்டார் பாசறைல லைஃப் மெம்பரு... அதான்

  ReplyDelete
 15. ////ஏதோ கிடைத்தவரை ஓகே என இவரைப் போட்டிருப்பார்கள் போல..லாங் ஷாட்டில் குமரியாகவும், க்ளோஷப்பில்...சரி, வேணாம்..பாவம்!/////

  தூள் திவ்யா மறுபடி டல் திவ்யா ஆகிட்டாளா....? பவர்ஸ்டார் பக்கத்துல நின்னா அப்படித்தான் தெரியும்... வேற படத்துல நடிக்கும் போது பாக்கலாம்

  ReplyDelete
 16. பவர் ஸ்டார் அடுத்த டாக்குத்தரோ ?:)))), இனித்தான் படம் பார்க்க வேண்டும்.
  பிந்திய இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்திற்கு செங்கோவி ஐயா.

  ReplyDelete
 17. சூப்பர் படம் பவர் ஸ்டார் உண்மையிலே பவர் ஸ்டார் தான்

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.