Sunday, March 10, 2013

எல்போ - வகைகள் (குழாயியல்_6)

முன்னுரை:

இன்றைய பதிவில் எல்போ எனப்படும் இணைப்பானைப் பற்றிப் பார்ப்போம். அதற்கு முன்..


பொறியியலின் மொழி வரைபடம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். குழாயியலில் வரைபடங்கள் இரு விதங்களில் வரையப்படுகின்றன. ஒன்று, 12” மற்றும் அதற்குட்பட்ட அளவு குழாயியலை வரைய ஒற்றைவரி வரைபடங்கள்(Single Line Drawings) பயன்படுகின்றன.(ஆனால் நடைமுறையில் 1 1/2” மற்றும் அதற்குட்பட்ட அளவுகளுக்கு மட்டுமே இவை உபயோகப்படுத்தப்படுகின்றன).12”க்கு (நடைமுறையில் 1 1/2”க்கு) மேற்பட்ட அளவு குழாயியலை வரைய இரட்டைவரி வரைபடங்கள் (Double line drawings) பயன்படுகின்றன:


4.1.1 எல்போக்கள்(Elbows):

ஒரு குழாயானது ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நேர்கோட்டிலேயே செல்வது நடைமுறைச் சாத்தியமானது அல்ல. ஒரு தொழிற்சாலையின் கட்டமைப்பைப் பொறுத்து குழாயானது இடது/வலதாகவோ, மேல்/கீழாகவோ திரும்ப நேரிடும். கீழே உள்ள படத்தில் காட்டியபடி, புதிதாக ஒரு குழாயினை கொண்டு செல்ல வேண்டும் என்று கருதுவோம்:
புதிய குழாயானது, முதலில் கீழ் நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. பிறகு வலது பக்கமாகத் திரும்ப வேண்டும். பின்னர் ஏற்கனவே இருக்கும் ஒரு குழாயினை அடுத்து, மேல்நோக்கிப் போக வேண்டும். இப்படி ஒரு சூழ்நிலை அமையும்போது,குழாயின் போக்கினை கீழ்/மேலாகத் திருப்பவோ அல்லது இடது/வலதாகத் திருப்பவோ உதவுபவையே எல்போக்கள் ஆகும்.

ஆங்கில எழுத்தான " L"வடிவத்தில் குழாயின் போக்கினைத் திருப்பப் பயன்படுவதாலேயே இவை எல்-போ என்று அழைக்கப்படுகின்றன.அதாவது "எல்" வடிவத்தில் 'போ' என்று திரவத்திற்கு கட்டளையிடும் குழாயியல் உறுப்பே எல்போ ஆகும்.

எல்போக்கள் 90 பாகை கோணத்தில் மட்டுமல்லாது 45 பாகை கோணத்திலும் கிடைக்கின்றன.அவற்றை முறையே 90 பாகை எல்போ மற்றும் 45 பாகை எல்போ என்று அழைப்பர்.

45 பாகை எல்போ என்பது குழாயை 45 கோணத்தில் கொண்டு செல்லவும், மேலே உள்ள படத்தில் காட்டியபடி இடப்பற்றாக்குறை உள்ள இடங்களில் 90 பாகைக்கு மாற்றாகவும் பயன்படுகின்றன.


எல்போக்களிலும் நான்கு வகைகள் உள்ளன.

4.1.1.1. நீள் ஆர எல்போக்கள் (Long Radius Elbows):

பெட் ரோகெமிக்கல் மற்றும் பெட் ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது இந்த வகை எல்போக்கள் தான்.



4.1.1.2. குறு ஆர எல்போக்கள் (Short Radius Elbows):

இவை பொதுவான பயன்பாட்டில் இல்லை. இருப்பினும், நியமங்களின் அடிப்படையில் தேவைப்பட்டால், பயன்படுத்தப்படும்.


4.1.1.3. குறுகும் எல்போக்கள் (Reducing Elbows):
சில நேரங்களில் ஒரே இடத்தில் குழாயின் போக்கைத் திருப்ப எல்போவையும், அதன் அளவைக் குறைக்க குறைப்பான்களையும் உபயோகிக்க வேண்டியிருக்கும். அங்கே இந்த இரண்டு இணைப்பான்களை இணைக்க இடமில்லையென்றால், இந்த குறுகும் எல்போக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

4.1.1.4. பொருத்திணைவு எல்போக்கள் (Mitered Elbows):

90 பாகை, 45 பாகை மட்டுமல்லாது சில நேரங்களில் 67 பாகை/33 பாகை என முழு வட்ட எண்களாக இல்லாமல், இடைப்பட்ட பாகையிலும் குழாயினைத் திருப்ப வேண்டி வரலாம். அத்தகைய நேரங்களில் வழக்கமாகக் கிடைக்கும் எல்போக்களை வெட்டி, ஒட்டு வேண்டுமென்கிற கோணத்தில் எல்போக்கள் உருவாக்கப்படும். அவையே பொருத்திணைவு எல்போக்கள் ஆகும்.

முந்தைய பதிவுகளில் சுட்டியபடி,எல்போக்களும் கீழ்க்கண்ட இணைப்பு முறைகளில் கிடைக்கின்றன:

-முட்டுப் பற்றவைப்பு (Butt Welding) இணைப்பான்கள்
-பொருந்து வாய் பற்றவைப்பு (Socket Welding) இணைப்பான்கள்
-மரை இணைப்பு (Threaded Connection) இணைப்பான்கள்

அடுத்த பதிவில் டீ இணைப்பான்களைப் பற்றிப் பார்ப்போம்.

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

  1. புது முயற்சிக்கு வாழ்த்துகள்...!

    ReplyDelete
  2. எதையும் அறிந்து கொள்வதில் தவறில்லை... பகிர்வதில் தான் மேன்மையே... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நல்லாயிருக்குண்ணே!

    வாட்டர் சப்ளை வரைபடத்தில் நாங்கள் எல்லா டயமீற்றருக்கும் சிங்கிள் லைன்தான் பயன்படுத்துகிறோம் (ஜங்க்ஷன் டீட்டெயில்ஸ்)

    எல்போவில ரெடியூசர் இருக்கா? நான் பயன்படுத்திப் பார்த்ததில்லை. தனியா ரெடியூசர் போட்டு, அப்புறம் எல்போ. ஆனா கப்பல்ல இடப்பிரச்சினை இருக்கே. நிச்சயம் தேவைப்படும் இல்ல!

    அடுத்தக பதிவுக்கு வெயிட்டிங்! :-)

    ReplyDelete
  4. வணக்கம்,செங்கோவி!எல்லோருக்கும் புரியும் வகையில்.................நன்று!

    ReplyDelete
  5. தெரிந்து கொள்வதில் பல சுவரசியங்கள்.அடுத்த பதிவை எதிர்பார்த்து.

    ReplyDelete
  6. சரி,கொஞ்சம் ஓய்வெடுங்கள்!ஓய்வில்லாத பணி நிமித்தமே பதிவுகள் வராது என்பது புரிகிறது.கிடைக்கும் நேரத்தை பயன்படுத்துங்கள்,பார்க்கலாம்.

    ReplyDelete
  7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  8. மீண்டும் ஒரு முறை : Visit : http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_21.html

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. எல்போ பற்றி தெளிவான விளக்கங்க.ள்
    உங்கள் வலைப பக்கம் இதுவரை வந்ததில்லை, பழைய பதிவுகளையும் நேரம் கிடக்கும்போது நிச்சயம் படிப்பேன்.

    ReplyDelete
  10. Again...

    Visit : http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_3.html

    ReplyDelete
  11. செங்கோவி ப்ளாக்ல ஒரு காலத்துல கமெண்ட்ஸ் களை கட்டுச்சு, அது அங்க வழக்கமா கமெண்ட்ஸ் போட்டுட்டு இருந்த பதிவர்கள் எல்லாருக்குமே பதிவுலக கல்லூரி நாட்களா இருந்துச்சு. செங்கோவியின் பதிவுகளும் அதுக்கேத்த மாதிரி நல்லா களம் அமைச்சு கொடுத்துச்சு.

    செங்கோவி! நடுநிசி 12 மணி! பதிவர்களின் கனா கானும் காலம்!!

    ReplyDelete

  12. ஒண்டுமே வியங்கள ...மீ மரமண்டை

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.